மயக்கம் தெளிந்து தன் இருப்பை உணர்ந்த போதும் அந்தப் பிணவறைக் காட்சிகள் மீராவை இன்னும் பதறவைத்தது.ரொஷான் தான் அவளை அங்கிருந்து தூக்கி வந்ததாக நர்ஸ் சொல்லியதிலிருந்து மீராவின் மனதிற்குள் சின்னதாய் ஒரு தைரியம் தான்.இங்கிருந்து அப்பாகிட்ட போற வரைக்கும் கொஞ்சம் பாதுகாப்பாக இருக்கலாம் என.
ஆனாலும் இந்த ஹாஸ்பிடலை விட்டு வெளியேறினால் மட்டும் போதுமென்றானது.அம்பியூலன்ஸ் சத்தம் ,மருந்து வாடை இதிலிருந்து தப்பிக்க வேண்டும் போல் உணர்ந்தாள்.எப்போதும் தன்னைக்காப்பாற்ற அவன் வருவானென்று சொல்ல முடியுமா? மயக்கம் தெளியிற வரைக்கும் நிக்காமப் போயிட்டானே என்று கவலைப்பட்டாள் மீரா.
அப்போது தான் அவள் மனதிற்குள் ஒரு யோசனை தோன்றியது.இங்கிருந்து நான் வெளியே போனால் என்ன?? ஒரு கோல் பண்ணக்கூட அனுமதி தர்ராங்கல்ல.நான் ஏதோ குற்றவாளி மாதிரி… அதுலயும் அந்த நயோமி குரங்கு நம்மளப் பார்த்தாலே ஆகுதில்ல.ரொஷான் பெரிய போஸ்ட் போல.அதான் அடிக்கடி காணவும் முடியில்ல.அவன் செய்த உதவிகள் பழகிய முறை எல்லாம் நன்றிக் கடனாய் தனக்குள் சேமித்துக் கொண்டவள் யாருக்கும் தெரியாதபடி ஹாஸ்பிடலை விட்டு வெளியேறினாள்.
சுள்ளென்ற அடிக்கும் வெயிலில் நீண்ட தூரம் நடக்க அவளால் முடியவில்லை.ஓரளவு குணமாகியிருந்த கால் வலிக்க ஆரம்பித்தது.பசி வேறு உடலைப் பலவீனப்படுத்த பஸ் நிறுத்தம் ஒன்றில் போடப்பட்டிருந்த சிமென்ட் பென்ச்சில் அமர்ந்தாள்.அது,பெரிய மரத்தை ஒட்டியபடி அடிக்கும் வெயிலுக்கு இதமாக அமைக்கப்பட்டிருந்தது.எங்கோ தூரத்தில் சில ஹாரன் ஒலி கேட்டது.கண்களைத் திறக்க நினைத்தாள் தான் ஆனால் சோர்வாக இருக்க அப்படியே இருந்தாள்.
டப்.. டப்.. டப் என்று காதுக்கு அருகில் வெடிப்புச் சத்தம் கேட்டது.முதலில் ஒன்றுமே புரியவில்லை.புழுதி மயமாக இருக்க புழுதிப் படலத்திற்குள் ஜீப் ஒன்று பாதையிலிருந்து விலகிப் புரள்வது தெரிந்தது.இன்னும் சில வெடிப்புச் சத்தம் கேட்ட அதே நொடி அந்த வண்டி தீப்பற்றி எரிவதைப் பார்த்தாள்.பின்னால் வந்த கனரக இயந்திரமும் பாரிய சத்ததுடன் வெடித்துச் சிதறியது.அதைத் தொடர்ந்து வந்த வாகனங்களிலிருந்து மின்னலென இறங்கிய ராணுவப் படைகள் இரண்டாகப் பிரிந்து அந்த இடத்தை வளைத்தனர்.இன்னும் சிலர் தீயணைத்து அதிலிருந்தவர்களைக் காப்பாற்ற முனைந்தனர்.அவள் இருந்த இடத்திலிருந்து ஒரு நூறு மீற்றர் அளவில் தான் இந்த சம்பவம் நடந்திருக்கும்.
இத்தனையும் சடுதியில் நடந்து முடிந்திருக்க பிரம்மை பிடித்தவள் போல் நின்றிருந்தாள் மீரா.அங்கிருந்து ஓடுவதா..?இல்லை அங்கேயே நிற்பதா? என்று அவளுக்கே புரியவில்லை.காதை மூடியபடி கீழே குனிந்தாள்.அங்கேயும் இங்கேயும் துப்பாக்கி ரவைகள் காற்றைக் கிழித்தபடி பாய்ந்து கொண்டிருந்தது.கிட்டத்தட்ட அரைமணி நேரம் கடந்த நிலையில் நிலமை ஓரளவு சீரானது போலிருந்தாலும் சிங்களத்தில் நிறைய பேர் கதைப்பது கேட்டது.அந்தப் பேச்சில் கொலைவெறி இருந்ததா? மெல்ல நிமிர்ந்து பார்த்தாள்.அங்கே ஒருத்தனை வெற்று மேனியுடன் ஒருவனை இழுத்து வந்து மண்ணில் தள்ள இன்னொருத்தனோ அவன் கால்களை மிதித்துக் கொண்டு இரு கன்னத்திலும் மாறி மாறி அடித்தான்.அது……?? ரொஷானா?
அங்கு விழுந்த ஒவ்வொரு அடியிலும் மீராவின் உடல் அதிர்ந்தது.அவன் முகத்தை பார்க்கவே முடியாதளவு பயங்கரமாக இருந்தது.அவனிடம் ஏதோ கேட்டுக் கொண்டிருந்தான் போலும்.அவர்கள் பேசுவது ஒன்றும் அவளுக்கு புரியவில்லை.
அப்போது,அடி வாங்கியவன் அவசரமாய் வாயில் ஏதோ மென்று கொண்டிருந்தான்.தடுப்பதற்காய் முயற்சிகள் செய்தும் பலனின்றிப் போக,சிறிது நேரத்திலேயே வாயிலிருந்து நுரை தள்ளி இறந்துவிட்டான்.
பார்த்த மீராவுக்கோ நெஞ்சு பதறியது.அவன் விசம் மாதிரி ஒன்றை தின்றிருக்கிறான் என்பது மட்டும் அவளுக்குப் புரிந்தது.
சம்பவம் நடந்த இடத்தை பார்த்தாள்.தீயில் கருகிவிட்டிருந்த உடல்கள் வீதியில் கிடத்தப்பட்டிருக்க, பாதி எரி காயத்தோடும் சில ராணுவ வீரர்கள் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்தனர். சார்…..என பெரும் குரலெடுத்துக் கத்தினான் ஒருவன்.”அவசரமா ஹாஸ்பிடல் போகனும்”
அருகே வந்து,”நான் வந்த வண்டில ஏத்துங்க.வேகமா போங்க” என்றவன் தன்னோடு இருந்த மற்றவர்களிடம் உத்தரவு பிறப்பித்தான்.முதலில் அவர்கள் தயங்கினாலும் அடுத்த நொடியே அவன் ஏவலுக்குப் பணிந்தார்கள்.காயமடைந்த வீரர்களையும் இறந்த சடலங்களையும் சொல்லொண்ணா உணர்ச்சிகளோடு ஜீப்பில் ஏற்றினான் ரொஷான். ஒரு ஜீப் இரண்டு ,பைக் புறப்படத் தயாரானது.
சார்...?? நாங்க இருக்கம்.நீங்க ஜீப்ல போங்க சார் என எவ்வளவோ சொல்லியும் மறுத்தவன், நான் வந்திடுவன்.பயமில்ல நீங்க போங்க என அனுப்பி வைத்தான். பஸ் ஸ்டோப் வீதிக்குப் பக்கத்தில் இருந்தபடியால் மீராவுக்கு எல்லாம் புரிந்தது.மொழி புரியாவிட்டாலும் அவன் செல்ல மறுப்பதை விளங்கிக் கொண்டாள்.
முதலில் இவன் கண்ணிலிருந்து எப்படியாவது தப்ப வேண்டும் என நினைத்தவள் மரத்தின் பின்னால் மறைய எண்ணி வெளியில் வந்தாள்.அவன் தன்னை பார்க்கவில்லை என்றே நினைத்தவளுக்கு அவனது கூர்ப்பார்வை தன்னையே துளைப்பது அப்போதுதான் விளங்கியது.அதற்கு மேல் அசைய அவளுக்குத் தெம்பு இருக்கவில்லை.தலையைக் கீழே குனிந்தவள் பார்வையை மட்டும் உயர்த்திப் பார்த்தவாறே முழித்தாள்.”அடிச்சி இழுத்திட்டு போகப்போறானா??” இதற்கு முதல் நடந்த அனைத்து அதிர்ச்சி சம்பவங்களையும் அவன் பார்வை இழுத்துக்கொள்ள அப்படியே நின்றாள்.
வேகமாய் வந்தவன் “நீங்க ஏன் இங்க வந்த??
என்னென்னவோ நினைத்தவளுக்கு அவனது மரியாதையான பேச்சு சற்று ஆசுவாசம் கொள்ள வைத்ததால் என்னவோ “நா...நான் வீட்டுக்கு போகனும்.பயமா இருக்கு.நான் குற்றவாளி இல்ல
அப்படி இல்ல.வேற யாரும் உங்களப் பார்த்திருந்தா பிரச்சினையாகும்.ராணுவக் கட்டுப்பாட்டில இருந்து வாரது சட்ட விரோதம் என்றான்.
அந்த பெண் நயோமி மோர்ச்சரில வைத்து என்ன பூட்டினாங்க.நான் தமிழாம்.சிறுபிள்ளைத் தனமாக புகார் சொன்னாள்.
நான் வோர்ன் பண்ணிட்டன்.இப்போ எங்க போறீங்க?
அவளுக்கே பதில் தெரியாத கேள்வியைக் கேட்டால் என்ன சொல்வாள்.
ஊரு என்ன?
மட்டக்களப்பு என்றாள்.
இங்கிருந்து பஸ்ல போனாக் கூட அரை நாளுக்கு மேல் எடுக்குமே.நடந்து எப்டி போற?வழியில ஆர்மி தான் நிக்கும்.கேள்வி இல்லாம விசாரனைக் கைதியா தூக்கிடுவாங்க என்றான்.
பயத்திற்கு மேல் பயம் படர்ந்தது.காலையிலிருந்து நிறைய தூரம் நடந்து விட்டாள்.இதற்கு மேல் நடக்க அவளால் கொஞ்சமும் முடியாது.மணி எப்படியும் ஐந்தை நெருங்கியிருக்கும்.
உங்களப் பார்த்ததால தான் நிக்கிறன்.வேற யாரும் பார்த்திருந்தா நிறைய விசாரிச்சிருப்பாங்க என மேலும் தொடர்ந்தான்.
அவசரப்பட்டு வந்திட்டமோ என நினைத்தவள் என்ன செய்ய என்ற பார்வையோடு அவனை நோக்கினாள்.
அவனது செல் சிணுங்கியது.ஹலோ….என்றவாறு சற்று நகர்ந்து பேசினான்.அவனது முகபாவனையில் விஷயம் ஏதோ பெரியது என விளங்க முடிந்தது.மீராவுக்கோ இங்கிருந்து இப்படியே ஓடிப்போயிடலாமா எனத் தோன்றியதும் தனது காலை சோகமாகக் குனிந்து பார்த்தாள்.அவனோ,அடுத்தடுத்து நிறையப் பேருடன் பேசினான்.வானம் அது பாட்டிற்கு இருளைப் பூசியது.அவன் இங்கிருந்து போனா இருட்டுல நான் எங்க போறது?ஒரு தைரியத்துல வந்திட்டன்.ஹாஸ்பிடலில் இருந்திருக்கலாம்.ஆனா?நயோமி அவள் சும்மா விடுவாளா? இவன் காப்பாத்தின கோபத்துல ஏதும் பண்ணிடுவாளே.மனதிற்குள் பேசிக்கொண்டுவளுக்கு அவனது அழைப்பு விளங்கவில்லை.
இங்கிருந்து ரிடர்ன் போக முடியாது.சொல்லுற விளங்குதா??
ஹான்….மலங்க மலங்க விழித்தாள்.
அவனது முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.காதில் செல்லை மீண்டும் வைத்தான்.”தம்மிக்க…வேகமா வர சொல்லுங்க.டைம் இல்ல.முதல்ல ஹாஸ்பிடல்ல இருக்குற எல்லாரையும் பாதுகாப்பா நகர்த்துங்க.யாருக்கும் நம்மால எந்தக் காயமும் வரக்கூடா.அதான் முக்கியம்.சும்மா மீடியா ரிப்போட்டுக்காக பொதுமக்கள் உயிரோட விளையாட வேணாம்.கண்கள் சிவந்து ,தாடை இறுக நெருப்பாய் இருந்தான் ரொஷான். சிங்களத்தில் நடந்த அந்த உரையாடல் ஒன்றுமே மீராவுக்கு விளங்கவில்லை.
மீராவை பார்த்தபடி மீண்டும் யாருக்கோ அழைத்தான்.பிறகு, அவளை பார்த்தவன் “நான் போகனும்.இப்போ ஒரு அம்மா ஆட்டோல வருவாங்க.பேரு மாலா.கூட போங்க.”என பேசி முடிக்கும் போதே சீறிக்கொண்டு ஒரு பைக் வந்து நின்றது.தள்ளி நின்றாலும் பின்னால் நகர்ந்தாள் மீரா.
பைக்கில் ஏறியவன் “5 நிமிஷம்ல வருவாங்க.தனியா போகாம இங்கேயே நில்லுங்க”.இவள் தலையை ஆட்டும் முன்பே பைக் பறந்தது.வீதியின் இருபக்கமும் பார்த்தாள்.யாருமே இன்றி வெறிச்சோடிக் கிடந்தது.பின்னால் கிடந்த பிணம் வேறு பயத்தைக் கிளப்ப தனக்கு வந்த சோதனைகளுக்கான காரணத்தை தேடிக்கொண்டிருந்தாள்.சித்தி பெரிய சாபமா விட்டிருப்பாங்க போல.அதான் இப்டியெல்லாம் நடக்குதா? கடவுளே உனக்கு என்மேல இவ்வளவு கோபமா? நான் என்ன தப்பு செய்தேன்னு என்ன அலைய வைக்கிறாய்.அநாதை மாதிரி ஒரு வாரத்துக்கும் மேலா சுத்துறேனே.அப்பா, பாட்டி இவங்கெல்லாம் மீரா மீரான்னு தேடுவாங்களே. பேசக் கூட சந்தர்ப்பம் தரமாட்டியா?
ஆட்டோவின் சத்தம் சிந்தனையைக் கலைத்தது.சின்னதாய் ஒரு கைப்பையுடன் முழங்கால் வரை பாவாடையும்,கையில்லாத சட்டையும் அணிந்த ஐம்பதைத் தாண்டிய வயதுடைய பெண் ஒருவர் மீராவை நோக்கி வந்தார்.ரொஷான்…..என இழுத்தார்.ஆஆஆ...நான் தான் மீரா.நீங்க மாலா வா?
நான் தான் மா.வாங்க என கையைப் பற்றியவர்.ஆட்டோவில் அவளை ஏற சொல்லி.பிறகு அவர் ஏறினார்.அவளுக்கென்று எந்தத் தெரிவும் இருக்கவில்லையே.விதியே என்று ஏறினாள்.
ஹாஸ்பிடல் முழுக்க பதட்டமான சூழல் நிலவியது.அது வாகரை எனும் ஊரின் பிரதான வைத்தியசாலை என்பதால் காயமடைந்த அநேகமான படைப்பிரிவினர்கள் அங்குதான் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.கடந்த ஒரு மாதகாலமாகத் தான் அது ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.ஆனால் பொதுமக்களுக்கான பாதுகாப்பு என்பது கேள்விக்குறி என்ற மனநிலை இன்னும் ஓய்ந்தபாடில்லை.
இறந்த சடலங்களை பார்த்தபடி நின்றான் ரொஷான்.உணர்ச்சிகள் துடைக்கப்பட்ட அவன் முகத்திலிருந்து எதுவும் படிக்க முடியவில்லை.கணக்கில்லாத அழைப்புக்கள் வந்தவண்ணமே இருந்தது.அவன் எதற்குமே அசையவில்லை.மீடியாவுக்கு தேவை ப்ரேக்கிங் நியூஸ் என்ற பெயரில் சொல்லப்படும் சாவுகளின் எண்ணிக்கை.அதன் பின்னனிகள் விளைவுகள் பற்றி யாருக்கு என்ன கவலை.மூக்கில் ஈ மொய்த்துக் கொண்டிருந்த சோமனின் பிணத்தின் அருகே வந்தான்.நான்கு தங்கைகள்,மனநலம் சரியில்லாத தந்தை,அவன் அனுப்பும் காசில் தான் அந்தக் குடும்பம் உயிர் வாழ்கிறது.அதற்கு மேல் அவனால் நினைக்க முடியவில்லை.
எல்லா உடம்பிலும் சிவப்பு ரத்தம் தான் ஓடுகிறது.இன மத மொழிக்கேற்ப மாற்றங்களில்லையே.பின் ஏனிந்த வெறுப்பு குரோதம்? அவன் இந்தத் தொழிலுக்கு வந்து பல வருடங்கள் இருக்கலாம்.ஆனால் எந்த இறப்பையும் சாதாரணமாக கடக்கவுமில்லை.மற்றவர்களின் இறப்பில் இதுவரை வெற்றிக் களிப்புக் கொண்டாடியதுமில்லை.அவaனது தலைமையில் பல முக்கியமானஇடங்கள் கைப்பற்றப்பட்டிருக்கிறது.இந்தச் சின்ன வயதில் இவ்வளவு திறமையா என பாராட்டுக்களும் மெடல்களும் குவிந்திருக்கிறது.ஆனால் அதையெல்லாம் தாண்டி அவனுக்குக் கேட்பது அழுகைக் குரல்கள் தான்.
எத்தனையோ தடவை சிந்தித்திருக்கிறான்.இந்தத் தொழில் நமக்குப் பொருத்தம் தானா என்று?? சில கசப்பான நினைவுகளை மறப்பதென்றால் இந்த வாழ்வு தேவைதானே.
எனக்கு புல் ரிப்போட் வேணும்.மீடியா எதையும் அனுமதிக்காதீங்க.மினிஸ்டர் கால் பண்ணாக் கூட என்கிட்ட கேட்காம எந்தத் தகவலும் சொல்ல வேண்டாம்.
சார் நம்ம படையில பார்த்தா அங்க நடந்த ஃபையர்ல நாலு பேரும்,இங்க மூணு பேரும் இறந்திருக்காங்க.அடுத்து நம்ம ஜனத்துல இரண்டு பேர்,தமிழ்ல….. ரொஷானின் முறைப்பில் பேசியவன் இடையில் நிறுத்தினான்.
சாரி சார்...பொது மக்கள் மொத்தமா எட்டு பேர் இறந்திட்டாங்க.டாக்டர்ஸ் நர்ஸ்னு யாருக்கும் பெரிசா பாதிப்பில்ல.நம்ம முதல் தடவை கூட்டிட்டு வந்தவங்க எல்லாம் பாதுகாப்பா முகாம்ல இருக்காங்க.இப்போ இறந்தவங்க யாருன்னா முந்தநாள் அட்மிட்டானவங்க சில பேரும்,க்ளினிக் வந்தவங்களும் தான்.
ஒகே...முதல்ல இங்க இருக்குற மற்ற நோயாளிகளுக்கு வேகமா கவுன்சிலிங்க் ஏற்பாடு பண்ணுங்க.வர்ரவங்க தாக்குறவங்க யாருக்குமே பொதுமக்கள் இலக்கு இல்லன்னு விளங்க வைங்க.ப்ரெஸ் மீடிங் நாளைக்கி செய்யலாம்.நான் பார்த்துக்கிறன்.யாரும் கேட்டா என் நம்பர் கொடுங்க.அந்த முகாம சுற்றி பாதுகாப்பு இறுக்கமா வைங்க.நாம இந்த ஊரவிட்டு போற வரைக்கும் இதுவே கடைசி மரணங்களா இருக்கட்டும்.அத மனசுல வைங்க.
தாக்க வந்த யாரையாவது உயிரோட பிடிச்சீங்களா?? ஆம் என்றான் ஒருவன்.அப்படீன்னா அவங்கள உடனே உரிய இடத்துல ஒப்படைங்க.அவங்க விசாரிச்சிப்பாங்க.மள மளவென்று இன்னும் சில உத்தரவுகளை இட்டான்.மணி இரவு எட்டைத் தாண்டியிருந்தது.
எல்லாரும் சாப்பிடுங்க. மற்ற சடங்குகளை பிறகு பார்த்துக்கலாம்.சிஃப்ட் மாறி இரண்டு மூன்று மணி நேரமாவது குழுவா தூங்கி எழும்புங்க.ஹெல்த் முக்கியம்.
இதான் ரொஷான்.அவனுக்கு கீழே வேலை செய்வது பார்ப்பவர்களுக்கு வேண்டுமென்றால் கடினமாக இருக்கலாம்.ஆனால் அவர்கள் மீது கொண்டுள்ள அக்கறை தான் அவனைத் தனித்துக் காட்டும்.அவனுக்கென்று பிரத்தியோக சலுகையோ,உரிமையோ இதுவரை எடுத்துக் கொண்டதில்லை.ஆனால் இனி….??
மீரா மிஸ்ஸிங். எனக்கு அவமேல சந்தேகம் தான்.நீ தான் காப்பாத்தின. அவளுக்கும் இந்தத் தாக்குதலுக்கும் சம்பந்தம் இருக்கும் போல.இல்லாட்டி ஏன் காணாம போனா?? திடீரென்று வந்து பேசிய நயோமியின் பேச்சில் தான் அவனுக்கு மீராவின் நினைவு வந்தது.
மாலாம்மா ஒன்பது மணியோட போயிருப்பாங்க.இவ தனியா இருக்காளா?என்ன பண்ணுவா? தம்மிக்க….நான் கொஞ்சம் குவாட்டஸ் வரைக்கும் போயிட்டு வாரன் என்ற ரொஷானின் பேச்சில் ஆச்சரியமாய்ப் பார்த்தான் தம்மிக்க.இப்படியான சந்தர்ப்பங்களில் ரொஷான் அங்கு இங்கு நகரவே மாட்டான்.சார்….கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க என சொன்னாலும் அசையாதவன்.இன்று போகிறானென்றால்??
ஹ்ம்ம்….அவரும் மனுசன் தானே பாவம் என நினைத்தான்.
நயோமியும் அதே ஆச்சரியத்தோடு தான் பார்த்தாள்.கூடவே சந்தேகத்தோடும்.