கடிதம் கிடைத்த மறுநாளே வாய்,கை கோண படுக்கையில் விழுந்துவிட்டார் கோபால்.தன் மகளைப் பற்றி பிறர் தூற்றுவதை அவரால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.ஆங்கில மருத்துவம் நாட்டு மருத்துவம் என எத்தனையோ விதமான வைத்தியம் பார்த்த போதிலும் எந்த மாற்றமும் அவர் உடல்நிலையில் இருக்கவில்லை.
அப்படியே இருந்தபடி ஒரு நாள் அவர் உயிர் பிரிந்தது.இது எல்லாமே ஒரு கிழமைக்குள் நடந்து முடிந்த சம்பவம்.
“பாட்டி….அப்பா என்னை நம்பாமலே இறந்திருப்பாரா? நான் தப்பே பண்ணல்ல பாட்டி.” அழுகையை அடக்கியபடி அவள் பேசுவதைப் பார்க்கப் பார்க்க கமலத்திற்கு வயிறு எரிந்தது.
“ஒப்பாரியெல்லாம் போதும்.அழுக வேண்டியது நான்.கல்யாணம் ஆனதுல இருந்து உரிமை இல்லாத வாழ்க்கை நடத்தினன்.என் பொண்ணுக்கு அப்பா இருந்தும் இல்ல.எல்லாத்துக்கும் நீதான் காரணம்.போன நீ அப்டியே போயிருக்க வேண்டியது தானே?” என பழி தீர்க்கத் தயாரானாள் விசாலம்.
“சித்தி.. அந்த லெட்டருக்கு காரணம் நீங்களா? “
திடீரென மீரா கேட்கவும் விசாலத்தின் முகத்தில் ஒரே பதற்றம்.
அதற்குப்பிறகு மீராவிற்கு ஏதும் பேச பிடிக்கவில்லை.நடந்து முடிந்த விடயத்தை திரும்பவும் ஆரம்பிக்க அதுவும் விசாலத்திடம் கதைபேச அவளுக்கு சற்றும் விருப்பமில்லை.அவர் முகமே செய்த தப்பை காட்டிக்கொடுத்து விட்டதே.அற்பப் பொருளைக் கண்டு விலகுவது போல் முகத்தை திருப்பினாள் மீரா.
விசாலம் உள்ளே செல்வதைக் கண்ட கமலம், “மீராக் கண்ணு நீ பாதுகாப்பான இடத்தில் தான் இருந்தியா?” பாட்டியின் முகத்தில் தெரிந்த கவலையை கண்ட மீரா,நடந்ததை விரிவாகச் சொன்னாள்.
“அப்போ எதுக்குமா இங்கே வந்தாய்?இந்தப் பாவிங்க எல்லாம் சேர்ந்து உனக்கு கிழவனை கல்யாணம் பண்ணி தரப் போறாங்களாம்.எல்லாம் உன் பேரில் இருக்கிற சொத்தை வாங்கத்தான்.இதெல்லாம் தடுக்கிற அளவுக்கு என் உடம்புல தெம்பு இல்ல.எனக்கு பயமாயிருக்கு மீரா.உங்க அப்பன் இறந்த பிறகு எல்லாமே முடிஞ்சு போச்சு.நீ இங்கிருந்து போயிரு.அந்தப் பாதகியும் அவ மருமகனும் சொத்துக்காக எதுவும் பண்ணுவாங்க”.
மீராவுக்கோ தன் தைரியமான பாட்டியா இது? என்றிருந்தது.
அதைப்படித்தவளாக விரக்தியாய் சிரித்தார் கமலம்.
“பாட்டி என்ன நம்புறியா? கண்கள் கலங்கக் கேட்டவளை சுருக்கங்கள் நிரம்பிய கைகளால் வருடிக்கொடுத்தவர், “நீ தங்கமடி” என உணர்ச்சி பொங்கக் கூறினார் கமலம்.அப்போது அவர் குரல் நடுங்கியது. “என் தங்கத்தை பாதுகாத்த அந்தத் பையன் இப்போ எங்கம்மா?”
அப்போதுதான் மீராவுக்கு அவன் நினைவு வந்தது.வேகமாக எழுந்து வெளியே சென்றாள்.வீதியின் இருபக்கமும் பார்த்தாள்.ஜீப்பைக் காணவில்லை.
“எங்கம்மா?”என்ற பாட்டியின் அழைப்பில் திரும்பியவள்
“காணல்ல பாட்டி.போயிட்டாரு போல.வேலைக்கு போகனுமே.
நேரமாகிட்டுன்னு போயிருப்பாரு.”
அவளது முகத்தில் தெரிந்த ஏமாற்றத்தை கவலையாகப் பார்த்தார் கமலம்.
“ஏம்மா வீட்டுக்கு யாரையும் கூட்டி வந்தா இப்படித்தான் விருந்தோம்பல் பண்றதா? வந்து மூணு மணி நேரத்துக்குப் பிறகு தேடினா எப்படி? யாராவது அப்படி காத்து நிப்பாங்களா?”
“விடு பாட்டி போனா போகட்டும்” என சலித்தவளை "சட்டப்படி உன்னை ஏத்துக்கிட்டாரா? அப்போ அந்த தம்பி உனக்கு யாரு?”
“பாட்டி. அது சின்ன விபத்து மாதிரி.இக்கட்டான சூழல் ஒன்னுல நடந்த விசயம்.அதுவுமில்லாம அவர் சிங்களம் வேற.” அதான் சொன்னனே.
“மீரா…. கல்யாணம் வாழ்க்கையில ஒரு தடவை நடக்குற விஷயம்.அது எப்படி விபத்தாகும்.அதுவும் நாட்டு சட்டப்படி உன்னை மனைவியா ஏத்துட்டு இருக்காரு.”
“ஐயோ….பாட்டி… என்னை குழப்பாத நீ.இருக்குற பிரச்சினையில இன்னும் ஒன்னா? கோபப்பட்டு திட்டுவாய்னு நினைச்சன்.நீ என்னடான்னா….போ பாட்டி” என யோசனையாய் சலித்துக்கொண்டாள்.
மீண்டும் ஏதோ கூறப்போன கமலத்தை அவசரமாய் இடைமறித்தவள் பாட்டி,
அவரு சிங்களம்.. உனக்கு விளங்கல்லியா?? அந்தக் கேள்விக்கு விடையை எதிர்பார்த்தவளாய் கேட்டாள்.
“அப்படில்ல மீரா...நீ மூணு மாசத்துக்கு மேலா கூட இருந்திருக்காய்.அந்த தம்பி தப்பா ஒன்னுமே நடக்கல்ல.ஒன்ன எல்லா எடமும் பாதுகாத்து இருக்காரு.நல்ல உத்தியோகம் வேற.அவட்ட வேறு ஏதும் கெட்ட பழக்கம் பார்த்திருக்கியா??
அவசரமாய், “இல்லை” என தலையாட்டினாள்.
“இந்தக் காலத்துல இப்டி ஒருத்தன பாக்குற ஆச்சரியம்.அதான் சொன்னன் மீரா.உனக்கு பிடிக்கல்லன்டா விடு.”என்றார் பாட்டி.
அவனின் நியாபகம் அவளை மெல்ல மெல்ல படரத்தொடங்கியது.
அவன் காத்திருக்காமல் போனது இப்போது அவளை மிகவும் பாதித்தது.ஏன் சொல்லாம போனான்.பாட்டி சொல்வது சரிதான்.கேம்பஸ் வாழ்க்கையில் அவள் பார்த்த ஆண்கள் ப்ளே போய்ஸ் என்ற வட்டத்துக்குள் தான் இருந்தார்கள்.இருபத்தி மூன்று வருட வாழ்க்கையில் தன் அப்பாவுக்கு அடுத்து அவளை பாதுகாத்த முதலாவது ஆண்.அவளது கோபங்களைக்கூட சகித்துக்கொண்டவன்.
அப்பாவிற்குப் பிறகு எந்த ஆண் மீதும் வராத நம்பிக்கை அவனோடுதானே உணர்ந்தாள்.
“ஆனா...பாட்டி கடவுள் நம்பிக்கை இல்ல போல.பன்சலை,கடவுள் பக்தின்னு ஒன்னுமே கண்டுல்ல.”
“நல்ல மனிசனா வாழ வழியக்காட்டித் தாரதுதான் மதத்தோட கடமை.அது ஒருத்தன்கிட்ட நிறைவா இருந்தா போதும்.”
“பாட்டி...உன்ன நினைச்சா பெருமையா இருக்கு.ரொம்ப எதார்த்தமா யோசிக்கிறாய்..ஆனா அப்பா???” என கவலையாய் இழுத்தாள்.
“உன் அப்பா இருந்தாலும் இதத்தான் சொல்லிருப்பான்” என உறுதியாய் சொன்னார் கமலம்.
“இந்தக் கதைய எங்க போயி சொல்ல..த்தூதூதூ...ஒரு சிங்களவன் கூடயா இவ்வளவு நாளும் உல்லாசமா இருந்த? நீயெல்லம் பெரிய மனுசியா?? அவள தலமுழுகி ஒதுக்கி வைக்காம இப்படி கூட்டி கொடுக்றியே…” பாம்பாய் வார்த்தைகளைக் கொட்டினாள் விசாலம்.
அப்பன் செத்த சேதி கேட்டு அழுத நடிப்பெல்லாம் சொத்த சுருட்டி அவங்கூட ஓடத்தானே.
பாதகி.ஒன்னயே என்ன செய்றன் பாரு என்றவள், விரைவாக வெளியே சென்றாள்.
மீராவுக்கு அவளது வார்த்தை ஒவ்வொன்றும் பதறவைத்தது.
கமலத்தின் கையை பற்றி இயலாமையாய் பார்த்தாள்.
“பாட்டி….என்ற அழைப்பில் அவளது அத்தனை சோகமும் ஏக்கமும் இருந்தது.
“ஏதோ பிரச்சினையோட தான் வரப் போறாள்.மீரா…நீ இங்கிருந்து போம்மா.அவள் லேசுபட்ட கட்டையில்ல.உன்னை இன்னும் இன்னும் அசிங்கப்படுத்துவாள்.அவ மருமகனும் அவள விட கெட்டவன்.”
பாட்டி பயப்படாத.தப்பு இல்லன்னா என்ன பயம்.நா இருக்கன்.பேசினா பேசட்டும்.பழய மீராவாய் தேற்றினாள்.ஆனால் கமலத்தின் பயமே வேறு.எப்படிச் சொல்வாள்.நொந்து போயிருக்கும் பெண்ணை இன்னமும் சொல்லி நோக வைப்பதா? கடவுளே….தனக்குள் வேண்டிக்கொண்டார் கமலம்.
மாலை மங்கிக்கொண்டிருந்தது.
அப்பாவுடனான பழய நினைவுகளில் கண்கள் கலங்கியபடி வீட்டின் பின்பக்கம் சென்று அவளுக்குப் பிடித்த மரத்தடியில் அமர்ந்திருந்தாள் மீரா.அமைதியாய் இருந்த தன் வாழ்க்கையில் எத்தனை திருப்புமுனைகள்?எதையுமே உண்மையென்று நம்ப முடியாதளவு இருந்தது.தன் கண்முன்னே பதட்டமாய் நடமாடும் பாட்டி உட்பட.எவ்வளவு தைரியமா இருக்கும் பாட்டிக்கு என்னாச்சு?
வெளியே யாராரோ கதைக்கும் சத்தம் கேட்டது.ஆண்களின் சத்தம்தான்.தன் அப்பாவைத்தவிர பிற ஆண்களின் பேச்சு இந்த வீட்டில் கேட்பது அரிது.அப்படியிருக்க சிரிப்பும் கும்மாளமுமாய் பேச்சுக்கேட்டது.யாராயிருக்கும் என யோசனையிருந்தாலும் எழுந்து பார்க்க மனதுக்கு சோர்வாகயிருந்தது.
"மீராக்கா…..என்ற இந்திராவின் குரல் அவள் பின் பக்கமாகக்கேட்க திரும்பிப்பாராமல் அப்படியே இருந்தாள் மீரா.ஓடிவந்து அவளைக்கட்டிக்கொண்டு விசும்பி அழுதாள் இந்திரா.
“என்ன மன்னிச்சிருக்கா.நா பிழை செய்திட்டன்.எல்லாமே என்னாலதான்.ஐய்யோ…”
தலையிலடித்துக் கதறினாள் இந்திரா.
இதற்குமேலும் மீராவால் அமைதியாய் இருக்க முடியவில்லை.
“இந்து...அழாத.விடு. அதெல்லாம் முடிஞ்ச கதை.
பேசி பிரயோசனமில்லை.
நீயாவது சந்தோசமா இருந்தா சரி.அப்பாக்கும் அதானே வேணும்.”
“இல்லக்கா..எங்கம்மா செய்த பாவம் என்ன சந்தோஷமா இருக்க விடுமா?” தேம்பித் தேம்பி அழுதாள் இந்திரா.
“இந்து என்ன ஆயிற்று உனக்கு?ஏன் இப்படி கிழவி மாதிரி பேசுறாய்?சில விஷயம் இப்படித்தான் நடக்கணும் என்பது விதி.அதை யார் நினைத்தாலும் மாற்ற முடியுமா?கடந்து போக முயற்சிக்கனும்.”
“அக்கா.பேச நேரமில்லை.எங்க அம்மாவுக்கும் என் புருஷனுக்கும் சொத்தாசை பிடிச்சிட்டு.அப்பா உன் பேருல எல்லா நிலத்தையும் எழுதிட்டாராம்.அதனால அதை உன்கிட்ட இருந்து வாங்க கிழவன கல்யாணம் பண்ணி வைக்கப்போறாங்க.உங்கிட்டருந்து அவன் பேருக்கு எல்லாத்தையும் எழுதிவாங்கி இவங்களுக்கு கொடுப்பானாம்.”
மீராவுக்கு ஆச்சரியமாயிருந்தது.
பழைய படங்களில் தான் இப்படியான சம்பவங்களை கேட்டிருக்கிறாள்.இன்னும் என்னென்ன தன் வாழ்வில் நடக்கப் போகின்றதோ?
“அக்கா...ஒரு நாள் உன்னை வேண்ணுமென்றே ஒருத்தன் இடிச்சுட்டான்னு திருவிழா ஒன்றுல அடிச்சியே நினைவிருக்கா? அவனதான் நா கல்யாணம் பண்ணின.அப்போ எனக்கும் உன் மேல கோபமாத்தான் இருந்தது.ஆனா இப்போதான் தெரிஞ்சிது.அவன் முதல்ல உன்னத்தான் பார்த்தானாம்.நீ ஊருக்கு முன்னால அடிச்சி அவமானப்படுத்தின பிறகு உன்னை எதாவது பண்ணணும்னு வெறியா வந்துச்சாம்.அதுக்கு துரும்பாத்தான் என்ன கல்யாணம் பண்ணினதா சொல்லுறான்கா.
நானும் நம்பி...ஐய்யோ.”.தலையில் அடித்து அழுதாள் இந்திரா.
“இதெல்லாம் சொன்னா அம்மாவுக்கு விளங்குதில்லை.உன்ல உள்ள கோபத்த தீர்த்துக்க நல்ல மருமகன் கிடைச்ச சந்தோசத்துல இருக்கா.எனக்கு வாழத் தெரியாதாம்.”
மீராவுக்கு தலை சுற்றிக்கொண்டு வந்தது.பிறரிடம் காட்ட முடியாத இடத்தில் எல்லாம் இந்திராவின் உடலில் தீக்காயங்கள் இருந்ததை அவள் காட்டியபோது மீராவுக்கு ஆத்திரமாக வந்தது.
“இதெல்லாம் நீ பொறுத்துக்கிட்டு அவனோடு எப்டி வாழ்ற இந்து.சே...இந்தச் சித்திக்கு பைத்தியம் பிடிச்சிட்டா?நிலத்தை உனக்கு கேட்டா எழுதிக் கொடுக்க போறேன்.இதுக்கு ஏன் இந்த கீழ்த்தரமான வேலையெல்லாம்?.”
“அக்கா…. என ஆவேசப்பட்ட இந்திரா,என் மேல ஆணையா நீ அந்த வேலையை செய்திடாதே.
இந்தப் பாவிகளுக்கு நம்ம அப்பா சொத்து சேர்க்கல்ல.அது உன்னோடது.சின்ன வயதில் இருந்து நீ நிறையவே மனதால கஷ்டப்பட்டுட்ட.இப்போ உனக்குத் துணையா அப்பாவும் இல்லை.
பாட்டியாலா ஒண்ணுமே பண்ணேலாது.நீ இங்கிருந்து போய்டுக்கா.”
இந்திராவின் பக்குவப்பட்ட பேச்சில் அவள் வாழ்க்கையின் வலிகள் தெரிந்தது.
“ஏய்...இந்திரா இங்க என்ன செய்றாய்?? என்ன மீரா? சுகமா? உங்களுக்கு என்ன நல்லாத் தெரியும் தானே.நான் தான் உங்க தங்கச்சி புருஷன்.உங்க சித்தி தடபுடலா கல்யாண ஏற்பாடெல்லாம் செய்றாங்க.இப்படி ஒரு சித்தி கிடைக்க அதிஷ்டம் வேணும்.மாப்பிளை எல்லாம் தெரிஞ்சவரு அனுபவம் உள்ளவரு.” என்றான் பாபு.
முகத்தை திருப்பிக் கொண்டாள் மீரா.அவனைப் பார்க்கவே அருவருப்பாக இருந்தது.அவனை ஒரு பொருட்டாகக் கூட மதிக்காமல் வீட்டுக்குள்ளே சென்றாள்.தன் பாட்டியோடு வாய் பேசிக் கொண்டிருக்கும் விசாலத்தை பார்த்ததும் அவளுக்கு நன்றாக அறையலாம் போலிருந்தது.
அங்கிருந்த கண்ணாடி கிளாஸை தரையில் போட்டு உடைத்தாள் மீரா.
சித்தி….என்ற அவள் கத்தலில் அனைவரும் திகைத்துப் போயினர்.மீரா இவ்வளவு கோவப்பட்டு ஒரு நாளும் யாரும் பார்த்ததே இல்லையே.
நீ எல்லாம் ஒரு பொம்பளையா?.நீ சுமந்து பெத்த புள்ளையில இருக்கிற பாசத்தை விட என் மேல உள்ள வன்மம் உனக்கு அதிகம்.அதான் அவளோடு கஷ்டம் ஒண்ணுமே உனக்கு புரியல்ல.என்னோட ரத்தம் கொஞ்சம் தாரேன் குடிக்கிறியா.
அப்பவாவது கொஞ்சம் நிதானிக்கிறியான்னு பார்ப்போம்.இந்து என் தங்கச்சி.அவளுக்கு என்ன கொடுக்கணுமோ அத நான் கொடுப்பேன்.நடுவுல நீ யாரு? அந்த நாய் யாரு?கட்டின புருஷனையும் இழந்தாச்சு.கொஞ்ச நாளுல உன் பொண்ணு இந்திராவும் போய் சேர்ந்திடுவா.உனக்கு யாருமே இருக்க மாட்டாங்க.அதானே உனக்கு வேணும்.
ஏய்….யார்டி நாய்? என பாய்ந்து வந்ந பாபு, மீராவின் கழுத்தை பிடித்து நசிக்க வந்தான்.அதற்கிடையில் அவனை இழுத்து தள்ளிவிட்டாள் இந்திரா.
“எங்க அக்கா மேல கைவைக்க நீ யாரடா? “ என காளியாய் நின்றாள்.
இதை சற்றும் எதிர்பார்க்காதவன் தன் அத்தனை வெறியையும் இந்திரா மீது கொட்டினான்.அவள் கன்னதில் அறைந்து தள்ளியவன் காலால் எட்டி உதைத்தான். ஐய்யோ படுபாவி என் பொண்ணா விர்ரா.என பக்கத்தில் வந்த விசாலத்தை தள்ளிவிட்டவன் இந்திராவைத் துவைத்தெடுத்தான்.
“மீரா...எம் பொண்ணக் காப்பாத்தும்மா.என்ன மன்னிச்சிடு.
நான் பாவி.எல்லாத்தையும் அழிச்சிட்டன்.நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறினாள் விசாலம்.அவள் நெற்றியில் இரத்தம் கசிந்தது.விசாலத்திற்கு பாபுவின் இன்னொரு முகம் இப்போதுதான் தெரிந்தது.
“இவ காப்பாத்துவாளா? முதல்ல இவளை யார் காப்பாற்றுவார்ன்டு பார்ப்போம்.கோபத்திலும் என்ன வடிவா இருக்காய்.இந்திரா நாய் கூட எல்லாம் படுத்து பார்த்து புடிக்காம அலுத்துட்டன்..உன்னப் போய் கிழவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கப் போறாவாம் உன் சித்தி.அதுக்கு பதிலா நான் வாழ்க்கை தாரன்.வா….வாடி” என மீராவை நெருங்கினான்.
அவள் வந்து முழுதாக ஒரு நாள் கூட ஆகவில்லை.அதற்குள் அதிர்ச்சியும்,ஆச்சர்யமுமாக எத்தனை சம்பவங்கள்.
பாட்டி ….. அவன் பக்கத்துல போகாதே.உன்னை ஏதாச்சும் பண்ணிடுவான்.என தடுக்க வந்த பாட்டியைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டுக் கேட்டாள் மீரா.
இந்திராவோ பாதி மயக்க நிலையில் "என் அக்காவ விட்டுடு" என கெஞ்சிக் கொண்டிருந்தாள்.
அவன் பக்கத்தில் வர வர பின்னால் போய்க் கொண்டிருந்தாள் மீரா.அவன் சுண்டுவிரல் தன் மேல் படுவததை நினைத்தால் கூட வாந்தி வருவது போல் உணர்ந்தாள்.பெண் என்பவள் எவ்வளவு தைரியமாக பேசினாலும் காலம் காலமாக அவள் பலவீனப்படுவது கற்பு ஒன்றுக்குத்தானே.அவன் பார்வை அசிங்கமாக தன் மேல் ஊர்வது போலிருக்க அதை பார்க்க முடியாமல் கண்களை இறுக மூடிக் கொண்டவள் படக்கென்று கண்ணைத்திறந்தாள்.அந்த ஹாரன் ஒலி.ஜீப் சத்தம்.
அந்த இரவு நேரத்த்து மின்குமிழுக்குப் போட்டியாக,ஹை வால்ட்டேஜில் அவள் முகம் ஒளிர்ந்தது.முகமெல்லாம் மலராய் பூத்தது.அவள் வீட்டு கேட் முன்னே ஜீப் கதவு மூடப்படும் சத்தம் கேட்டதும் தான் தாமதம் வில்லின் அம்பாய் சென்றவள்,எதிரே வந்துகொண்டிருந்த ரொஷானை ஓடிப்போய்க் கட்டிக்கொண்டாள்.
அவள் மேனியோ காற்றின் சருகாய் நடுங்கிக்கொண்டிருந்தது.
அவனுக்குள் இன்னும் இன்னும் புதைந்து விடாலாமா என்பது போல் அவனோடு ஒன்றிக் கொண்டிருந்தாள் மீரா.
அவன் இதை துளியும் எதிர்பார்க்கவில்லை.ஜீப் கீயை எடுத்துக்கொண்டு அப்போதுதான் திரும்பியவன் மீராவின் வேகமான அணைப்பினால் ஒர் எட்டு பின்னால்போய் விழாமல் சமாளிக்க பெரும்பாடு பட்டுப்போனான்.
பேபி….என்ன பேபி.,?அவளோ, இன்னும் அவனுக்குள் புகுந்துகொண்டாள்.சத்தமில்லாத அவளின் விசும்பல்களைக் குறைக்க ஒரு கையால் அவளை அணைத்தபடி, மறுகையால் அவள் தலையை தடவிக்கொடுத்தான் ரொஷான்.