மிஸ்..… வதுர என்றான்.
வாங்கியவள், தன் கையிலிருந்த தண்ணி பாட்டிலை பார்த்துக் கொண்டிருந்தாள் மீரா.நேரம் எத்தனை என்றுகூடத் தெரியாத இரவு வேளை.
அவளுடன் வந்தவனைத் தேடினாள்.கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் அவனைக் காணவில்லை.
பயம் ஒரு பக்கம்,குளிர் ஒரு பக்கம்,பசி ஒரு பக்கம்,மனதின் சுமையொரு பக்கம் என அவளுக்கு கோபம் தலைக்கேறியிருந்தது.
இரண்டு பக்கமும் காடு தவிர வீடு கடையென்று எதுவுமேயில்லை.
கைகுழந்தையுடன் தாய்மார்களும்,கேம்பஸ் போகும் சிலபேர்களும் வயதானவர்களும் என நிறுத்திவைக்கப்பட்டுள்ள பஸ்ஸிலிருந்தவர்கள் அனைவரும் தீவிர சோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர்.
மீராவுக்கு அதைப்பார்க்கும் போது பழய நினைவு வந்தது.ரொஷான் என்ற ஒருத்தன் தன் வாழ்க்கையில் வரவேண்டும் என்பதற்காகத்தான் கடவுள் இத்தனை ஏற்பாடுகள் செய்தாரா? பல நாள் சந்தேகம் இன்று தெளிவானது.
யோசித்துப் பார்த்தாள்.நேற்று இதே இரவு அவனை அணைத்துக்கொண்டதும் உண்டாகிய பாதுகாப்புணர்வு எப்படிவந்தது? அவளை கொஞ்சமும் விலக்காமல் கூடவே வந்தவனின் தோற்றம்,பாபுவை பின்வாங்கவைத்தது.
அவனைக் கண்டதும் மீரா இன்னும் ரொஷானை ஒட்டி நின்றாள்.கமலம் மீராவை நெருங்கி "நீ சொன்னது இந்த தம்பியா?என்று கேட்க.சட்டென விலகியவள் “ம்ம்ம்”என்றாள்.
“தம்பி என்பேத்திய உன்னோட கூட்டிட்டு போ..அவ இங்க இருந்தா சாகடிப்பாங்க.மீரா எல்லாமே சொன்னா.எல்லாம் கடவுள்ட ஏற்பாடு தான்.எங்க இருந்தாலும் இவள் நல்லா இருப்பாள்.அம்மா அப்பா இல்லாத இந்த புள்ளக்கி என்ன விட்டா யாருமே துணை இல்ல.எம்பேத்திய காப்பாத்து தம்பி” என கைகூப்பி வணங்கி அழுதார்.
பின்னர், அவசரமாக உள்ளே சென்றவர் கையில் மஞ்சள் தாலியுடன் வந்தார். “இது மீரா அம்மாடது.இத அவ கழுத்துல கட்டு தம்பி.”
“நீங்க யாரன்டு எனக்கு தெரியாது ஆனால் எங்க பாட்டி சொல்றத பார்த்தா நீங்க நல்லவங்களாதான் இருக்கனும்.என் அக்காவ உங்களோட கூட்டிட்டு போங்க.தயவுசெய்து அத அவ கழுத்துல கட்டி உங்க மனைவியாக்கிடுங்க.அவளுக்கு இங்க பாதுகாப்பே இல்ல” என்று இந்திரா அழுதாள்.
அவள் உதட்டில் இருந்தூ ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. “அக்கா சரியென்டு சொல்லு.அவரோட போக்கா.நான் பாட்டிய பார்த்துக்குறன்.நீ நினைக்கிற மாரி இவன் லேசானவன் இல்லக்கா.இவன் உன்னை….”என மேலே பேச முடியாமல் நிறுத்தினாள்.
இந்திராவின் பேச்சில் ரொஷான் மீராவைப் பார்த்தான்.
“மீரா , உங்களுக்கு ஏதும் உதவி செய்யனுமா? இவனால பிரச்சினையா? என்ன செய்ய?” என்று ரொஷான் கேட்டான்.
அவளறியாமலே பாட்டியின் கையிலிருக்கும் தாலியைப் பார்த்தாள்.
திடீரென்று பாபு அதைப்பறித்து மீராவை அவன் பக்கமிழுத்த மறுநொடியே தரையில் கிடந்து சுருண்டான்.அவன் கை உடைக்கப்பட்டிருந்தது.
கமலம் சொன்னது போலவே மீராவின் கழுத்தில் தாலியை வாங்கி கட்டிவிட்டான்.இந்திரா கையில் குங்குமத்தோடு வந்து மீராவின் நெற்றியில் வைக்க ரொஷானுக்கு சொல்லிக்கொடுத்தாள்.அவனும் அப்படியே செய்தான்.கமலம் மீராவை அணைத்துக்கொண்டு அழுதார்.
“போ மீராம்மா….நீ எங்க இருந்தாலும் நல்லாத்தான் இருப்பாய்” என அவளை அனுப்பி வைத்தார்.ரொஷானுக்கும் இது அதிர்ச்சிதான்.இப்படியொரு சம்பவத்தை அவன் எதிர்பார்க்கவில்லையே.
என்ன நம்பிக்கையில் அவனோடு பாட்டி அனுப்பிவைத்தார்?.அவள் சொன்னதை வைத்தே ரொஷானை கேள்விப்பட்டவர்.அப்படியிருக்க இவனை நம்பி திருமணம் செய்து அனுப்பிவைத்திருக்கிறார் என்றால் காரணம் அவள் தானே.அவனைப் பற்றி அவள் சொன்ன விதம்தான் அந்த நம்பிக்கைக்கு காரணம்.மீரா தன் அப்பாவை தவிர எந்த ஆணைப்பற்றியும் இதுவரை பேசியதில்லை.ரொஷானை அவ்வளவு உயர்வாக கமலத்திடம் ஒப்புவித்திருந்தாள்."நான் இங்கயே இருக்கன் பாட்டி என எவ்வளவோ சொல்லியும் மீராவை ரொஷானோடு அனுப்பி வைத்தார் கமலம்.
காலையில் தான் ஊருக்கு வந்தன்.ஒரே ஒரு இரவுதான் தங்கினன்.இப்போ அடுத்த நாள் திரும்பவும் இவனோடவே வந்துட்டன்.இனிமேல் நம் வாழ்க்கை பூரா இவனோடா தானா?இனிமேல் அப்பா இல்ல.பாட்டி இல்ல.அவளது வாழ்வின் ஆதாரங்களே அவர்கள் தான்.எனக்கென்டு யாருமே இல்லியா நினைக்கும் போதே அவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.
அவளைச்சுற்றி நிறையப்பேர் இருந்ததால் அழக்கூட வழியிருக்கவில்லை.இங்க இருக்குற எல்லாருக்குமே யாரோ ஒருத்தர் இருப்பாங்க.எனக்கு?? அனாதையாக உணர்ந்தாள்.மனது வெறுத்துப்போனது.
“அந்த இடத்துக்கு போங்க மிஸ்…” என ஒரு ராணுவம் சொல்ல மீராவும் நடந்தாள்.பஸ்ஸிலிருந்து இறங்கிய அனைவரும் அவன் சொன்ன இடத்துக்கே வரிசையாக சென்று கொண்டிருந்தனர்.அந்த இடம் அவ்வளவு நேர்த்தியாகவும் விசாலமாகவும் இருந்தது.அது அந்த ஊரின் மிகப்பெரிய சோதனைச் சாவடி.அங்கிருந்த ஆர்மி கேம்பிற்கு பக்கத்தில் பெரிய ஆலமரம் ஒன்றிருந்தது.அந்த இரவு நேரத்தில் அதிலிருந்து வந்த காற்று அவ்வளவு குளிர்மையாக இருந்தது.
மீரா கைகளை குறுக்கே கட்டிக் கொண்டாள்.எப்படியும் அந்த இடத்திலிருந்து போக சில மணி நேரமாவது ஆகும் என்று வந்த அனைவரும் புரிந்துகொண்டார்கள்.
அதற்கு ஏற்றவாறு சிலர் போர்வைகளை எடுத்து போர்த்திக் கொண்டும் சில பேர் தரையில் அமர்ந்து பேசிக் கொண்டும் இருந்தார்கள்.பசியில் அழுது கொண்டிருந்த குழந்தைகளுக்கு ராணுவத்தைக் காட்டி உணவு ஊட்டும் படலமும் நடந்துகொண்டிருந்தது.
மீரா எல்லோரையும் விட்டு தனித்து நின்றாள்.
“அந்த உயரமா நிக்கிறாரே அவரப் பாரு..கடும் மேன்லியா இருக்கார்டி..” என ஒரு பெண் ரகசியம் பேசினாள்.
“உனக்கு போதுமே..இந்த டென்சன்ல என்ன ஒரு சைட்டு.ஆனாலும் நீ சொல்ற சரிதான்.கறுப்பா இருந்தாலும் அவர் போட்டிருக்கிற கறுப்பு டீசர்ட்ல அழகாருக்கார் தான்..”
“ஹேய்…. நான் அவரோட எப்படி பேசுறன்டு யோசிக்கன்.”
இப்படி ஆளுக்கு ஒரு கமெண்ட்ஸ் சொல்லிக் கொண்டிருந்தனர்.
அவர்கள் அனைவரும் கேம்பஸ் மாணவர்களாக இருக்க வேண்டும்.அந்த வயதிற்கு ஏற்ப பேசிக் கொண்டிருந்தார்கள்.
“அடிப்பாவிங்களா நாளைக்கு எக்ஸாம் இருக்கு.நம்மள வேற இப்படி நிப்பாட்டி வைத்திருக்கிறானுகள்.அதை பத்தின கவலையே இல்லாம இது தேவயாடி உங்களுக்கு??”
“போடி இவளே.இவரை மாதிரி ஆளுகள் எல்லாம் இனி எங்க பாக்க போறோம்?காணுறப்போ சைட் அடிச்சிட்டு,முடிஞ்சா கரெக்ட் பண்ணிட்டு போக வேண்டியதுதான்” என்றாள் ஒரு அதிகப்பிரசங்கி.
இவர்கள் யாரைப்பற்றி பேசுகிறார்களென்று அவளும் பார்த்தாள்.அங்கே ரொஷான் மிகத்தீவிரமாக மெப் மாதிரி ஒரு படத்தை விரித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.
அவளுக்கோ எரிச்சலாக இருந்தது.நாமெல்லாம் கேம்பஸ் காலத்துல எப்படி ஒழுக்கமா இருந்தம்.இதுகள் என்னடான்னா இப்படி பேசுதுகள்.அதுவும் இந்த நெருக்கடியான நேரத்துல இது தேவையா? அவள் தனக்குள்ளே பேசிக்கொண்டிருக்கும் போது அவர்களில் இருந்த பெண்ணொருத்தி ரொஷானிடம் சென்று எதையோ கேட்டுக்கொண்டிருந்தாள்.அவனும் சிரத்தையாக பதில் சொன்னான்.
பத்து நிமிஷத்திற்கும் மேலாக அவர்கள் பேசியதைப் பார்த்த மீராவுக்குப் பற்றிக்கொண்டு வந்தது.என்னப்பத்தி அவனுக்கு அக்கறையே இல்லியா? நான் கூட வந்ததையே மறந்துட்டான் போல.
அந்தப் பெண்ணின் முகத்தில் அவ்வளவு சந்தோசம்.” “பார்த்தியா பேசிட்டே வந்துட்டன்” என்றபடி வந்தாள்.
“என்னடி சொன்னார்?”
ம்ம்ம்ம் வேறென்ன? “எப்படியும் காலை எட்டு மணிக்குள்ள கேம்பஸ் போயிடலாம்னு சொன்னார்.போறவரைக்கும் இங்கயே படிக்கட்டாம்.நான் கேட்ட கேள்விக்கு வேறென்னத்த பேசுவார்.கொஞ்சம் பயமா இருந்திச்சி.ஆனாலும் அவர் நல்லாவே பேசினார்டி” என்றாள்.
மற்றவர்கள் “சூப்பர்” என கோரஸ் பாடினார்கள்.பையிலிருந்த பிஸ்கட் பக்கெட்டுகள் பழங்கள் இதர உணவுகள் என அனைவரும் தங்கள் பையிலிருந்ததை கொறித்துக் கொண்டிருந்தார்கள்.
மீரா…
ரொஷான் தான் அழைத்தான்.
என்னவென்று பார்த்தாள்.அவள் கண்களில் அவ்வளவு சோர்வு இருந்தது.”வாங்க” என அவளை அழைத்துச்சென்றான்.அவனைப் பின்தொடர்ந்து ஜீப்பில் ஏறியவள் அந்தப்பெண்களைப் பார்த்தாள்.
அவர்கள் முகத்தில் இருந்த அதிர்ச்சியைப் பார்த்தவளுக்கு தன்னையறியாமல் சிரிப்பு வந்தது.
ஜீப் வேகமாகச் சென்றது.
என்ன வேணும்? என்றான்.அவள் உம்மென்ற முகத்துடன் இடம்வலமாகத் தலையாட்டினாள்.
அரைமணி நேரம் பயணித்த பிறகு கடையின் முன்னாள் நிறுத்தினான்.
அவள் அசையாமல் உம்மென்று இருந்ததைதைப் பார்த்தவன் இறங்கிச்சென்று ஒரு பார்சலுடன் வந்தான்.
“சாப்பிடுங்க” என்று அவள் கையில் வைக்க அவளோ அதை வாங்கி சீட்டில் வைத்தாள்.தன் வாழ்க்கையில் நடந்த மொத்தப் பிரச்சினைக்கும் அவன் தான் காரணம் போல அவனை முறைத்தாள்.அழுகையில் உதடு பிதுங்க கண்ணீர் வடிந்தது.
குழந்தையைப் போல தேம்பித்தேம்பி அழுதாள் மீரா.
“பேபி…ப்ளீஸ். அழ வேணாமே.அது தேவையில்ல. நான் இருக்கன் பேபி.”அவள் தலையைத்தடவி நெற்றியில் முத்தமிட்டான்.
அவளுக்கு கோபம் இன்னும் அதிகமாக என்ன செய்வதென்று தெரியாமல் அவன் தோள்களில் மாறி மாறி அடித்தாள்.ஒரு கட்டத்தில் அவளுக்கு கை வலிக்கவும் தான் நிப்பாட்டினாள்.அவளுக்கோ மூச்சுவாங்கியது.மென்மையான பார்வையுடன் அவளைப் பார்த்தவன் அவள் இரு கைகளைப் பற்றி முத்தமிட்டான்.
“சாப்பிடுங்க பேபி” என்றவனது குரலில் கெஞ்சல் இருந்தது. அவனைத் தள்ளி விட்டவள் மூடியிருந்த ஜீப் கண்ணாடியில் தலை சாய்த்து கண்களை மூடினாள்.
பல் விளக்கவில்லை முகம் கழுவவில்லை உடம்பெல்லாம் வியர்வையில் கசகசத்தது.அவள் கண்முழித்த போது நன்றாக விடிந்திருந்தது.அந்த இடத்தில் நிறைய ராணுவங்கள் குவிந்திருந்தனர்.இது என்ன இடமென்று அவள் யோசிக்கும் முன்னரே நேர்த்தியான ராணுவ உடையில் தலையில் அணிந்திருந்த தொப்பியை சரி செய்தபடி ரொஷான் வந்து கொண்டிருந்தான்.
அந்தப் பெண்கள் சொன்னது போல அவன் பார்க்க ஹேண்ட்சம்மாகவே தெரிந்தான்.அவனைக் கண்டதும் நின்று கொண்டிருந்த அனைவரும் மரியாதை நிமித்தம் சல்யூட் செய்தனர்.அவனைப் பின் தொடர்ந்து வந்த இருவரிடம் சிறிது நேரம் பேசியவன் ஜீப்பை நோக்கி வருவதைக்கண்ட மீரா அவசரமாகக் குனிந்து கண்ணாடியில் அவள் முகம் பார்த்தாள்.கொஞ்சமாவது கலரா இருந்தன்.இப்போ மொத்தமா கறுத்துப் போயிட்டனே.
துப்பட்டாவால் முகத்தை அழுந்தத் துடைத்தாள்.எண்ணெய் பிசுபிசுப்பு குறைந்தது போலிருந்தது.இரவு பூராக கண்ணாடியில் தலை சாய்த்துத் துங்கியதால் என்னவோ ஒரு பக்கம் நெற்றி வலித்தது.
“மீரா…… எனக்கும் பசியா இருக்கு.சாப்பிடுவோமே” என்றான்.ஜீப் கதவைத்திறந்ததும் அவன் வந்த உடனே இதைக்கேட்டதும் அவளுக்கு ஒரு மாதிரியாகிவிட்டது.இவனும் இன்னும் சாப்பிடல போல.நேற்றை விட இன்று கொஞ்சம் மனது நன்றாக இருப்பதைப் போல உணர்ந்தாள்.
எனக்கு….அது.. வேறு வழியே இல்லை கேட்டுத்தான் ஆகவேண்டும்.எப்படிக் கேட்பதென்று தெரியாமல் தடுமாறியவளை வெகு சீரியஸாக அவன் பார்த்துக் கொண்டிருந்தான்.அவள் பேச்சு வழக்கு தமிழை விளங்கியெடுக்க அவனுக்கு எப்போதும் கொஞ்ச நேரம் தேவைப்படும்.அதனால் தான் மீரா பேசும் போதெல்லாம் மேலதிகாரியின் பேச்சைக் கேட்பது போல அவ்வளவு கூர்மையாக கேட்டுக் கொண்டிருப்பான்.சில நேரம் மீராவுக்கே இதைப்பார்த்தால் சிரிப்பு வரும்.
எனக்கு டிரஸ் வேணும்,பேஸ்ட் பிரஷ் வேணும் குடிக்க தண்ணி வேணும் நிறுத்தியவள் தயக்கமாக அவன் முகம் பார்த்தாள்.அவன் எதுவும் பேசாமல் அவளுக்கு வேண்டியதை வாங்க பொருத்தமான கடைகளில் நிப்பாட்டினான்.கிரெடிட் கார்ட்,அதன் பாஸ்வேர்ட் உட்பட பர்ஸ்ஸையும் அவளிடம் கொடுத்துவிட்டு அவள் வரும் வரைக்கும் பொறுமையாக காத்திருந்தான்.பின்னர் அறை வசதி உடைய ஒரு ஹோட்டலை புக் செய்ய மீரா அங்கேயே ப்ரஷ்ஷாகினாள்.
அங்கேயே சாப்பிட்டு வெளியே வரும் போது மணி பதினொன்றைத் தாண்டியிருந்தது.
நாம எங்க போறோம்? அவளது கேள்வி அவளுக்கே அதிசயமாக இருந்தது.அவனையும் அவளோடு சேர்த்துவ போறோம் என்று கேட்டுவிட்டாளே.ஆனால் அவனுக்கு அதற்குரிய பொருள் விளங்கியிருக்க வாய்ப்பில்லை.
ஜீப்பை ஒரு மரத்தடியில் நிறுத்தியவன் அவளைப்பார்த்து பேச ஆரம்பித்தான்.
மீரா….. நான் இப்படி நடக்குமென்று எதிர்பார்க்கவே இல்லை.உங்களை வீட்டுக்கு விட்ட எல்லாம் முடிஞ்சிது என்டுதான் நான் நினைச்சது.
ஆனா…?உங்களுக்கு பிரச்சினை தந்தது யாரு? என்ன சம்பவம் எதுவுமே தெரியாது.உங்க சம்பிரதாயப்படி அது கட்டினாதானே உண்மையான திருமணம் என்டு எனக்குத் தெரியும்.உங்க ஆச்சி சொன்னதும் எனக்கும் அதிர்ச்சிய விட கடும் சந்தோசம்.உங்களுக்கு என்ன அறவே பிடிக்காதுண்டு எனக்குத்தெரியும்.ஆனா எனக்கு உங்கள நிறயவே பிடிக்கும்.உங்கட தங்கச்சி சொன்ன மாதிரி நான் கடைசிவரைக்கும் உங்கள பாதுகாப்பன்.எப்பவும் என்னோடதான் நீங்க இருப்பீங்க.நான் இல்லாட்டியும் நீங்க தனியா வாழுற மாதிரி உங்க வாழ்க்கை சூழலை மாத்தித் தருவன்.நான் புத்தரை கடவுளா பார்க்கறதை விட என்னோட குருவா பார்க்குறன்.அவர் சொன்ன அறிவுரைகள் தான் என் வாழ்க்கை.அதுக்கு மாற்றமா எப்பவும் நான் நடக்கப்போறதில்லை. இது சத்தியம் என்றான்.
மீரா அவனை இமைக்க மறந்து பார்த்துக்கொண்டிருந்தாள்.அவள் கைகளைப் பற்றியவன் மீரா… நான் தொப்பிக்கலக்கி மாற்றலாகி வந்தன்.நேற்றே முறைப்படி பொறுப்பெடுத்து இருக்கனும்.ஆனா அதைவிட உயர்ந்த பொறுப்பு என் வாழ்க்கையில வந்தது.
அவளைத்தான் சொல்கிறான் என்பதைத் தாமதித்து உணந்த மீரா பார்வையைத் தாழ்த்தினாள்.
“இன்டக்கி தான் தொப்பிக்கலயில் என் கடமைய ஏத்துகிட்டன்.இனிமேல் இங்க தான் நான் இருந்தாகனும்.
என்னோட நீங்க இங்க இருக்கிறது பாதுகாப்பில்ல.நிலமை மோசம்.அதனால தான் உங்கள கந்தளாய்க்கு கூட்டிப்போறன்.அந்த ஊருல பிரச்சினை இல்ல.நல்ல சூழல் இருக்கும்.வீடெல்லாம் செட் பண்ணிட்டன்.ஒரு அம்மா உங்கள பார்த்துப்பாங்க.பயமேயில்ல.நான் நேரம்கிடைச்சா வருவன். சரியா?? எனக்கேட்டான்.
மந்திரத்திற்கு கட்டுப்பட்டது போல் அவனைப் பார்துக்கொண்டே தலையாட்டி வைத்தாள்.குழந்தைப் புள்ளக்கி சொல்வது போல அவன் சொன்ன விதமும் அவன் பார்வையில் தெரிந்த மென்மையும் அவளை என்னென்னமோ செய்தது.பயணம் முழுக்க ஓரக்கண்ணால் அடிக்கடி அவளைப் பார்த்துக்கொண்டே வந்தாள்.
என்ன பேபி? என்றான்.
“நீங்க வீட்ல விட்டுட்டு போய்ட்டீங்கன்டு நினைச்சன்.திரும்ப எப்படி வந்த?”
“உங்கள இறக்கி விடும்போது சண்டை மாதிரி பேச்சு கேட்டது.நீங்க உள்ள போய்ட்டு திரும்பி என்னை கூப்பிடவும் வரல்ல.எனக்கும் போக மனதில்ல.அந்த சூழல் நல்லதாயில்ல என்டு தெரிஞ்சிட்டு.அதுதான் போகாம உங்க ஊர்லயே சுத்திட்டு இருந்தன்.உங்களப் பார்த்துட்டு போகலாம் என்டுதான் அந்த நேரம் வந்தன்.” என்றான்.
அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது.இதைத்தான் கடவுளின் ஏற்பாடு என்பதா? எல்லாத்தையும் தனக்காகவே யோசித்து செய்கிறானே.அவள் மனதிலிருந்த எல்லா இருள்களையும் ரொஷானின் நினைவுகள் மெல்ல மெல்லமாய் ஒளியேற்றிக் கொண்டிருந்தது.
அந்தப் பயணத்தைப் போலவே
அவள் வாழ்க்கை இன்னொமொரு புதிய அத்தியாயம் ஒன்றைப்படைக்கப் போகிறது என்பது அவளுக்குத் தெரியாது.