பேபி…?
மீரா…?
மீரா பேபி??
விதம் விதமாக அவளை அழைத்துப்பார்த்தான் ரொஷான்.அவள் அவனுக்குள் இன்னும் புகுந்துகொண்டாள்.அவன் ஹாஸ்பிடல் சென்று நெற்றிக்கு தையல் போட்டு பிறகு கண்டியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வந்துமாயிற்று.மீரா அவனைவிட்டு அசையவேயில்லை.
வாகறை தொப்பிக்கலை போன்ற இடங்கள் ராணுவக் கட்டுப்பாட்டிற்குள் வந்த பிறகு ரொஷான் அங்கிருந்து கந்தளாய் வந்துவிட்டான்.தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருக்கும் அவனுக்கு ஏனோ ஓய்வு தேவைப்பட்டது.
தனக்குப்பிடித்த மீராவோடு வாழ அவனது உடல் உயிர் அத்தனையும் ஏங்கியது.ஆனால் மீராவிடமிருந்து அதனை வலுக்கட்டாயமாக வாங்க முடியவில்லை.அவள் அவனிடமிருந்து விலகும் போதெல்லாம் அவ்வளவு கவலைப்படுவான்.
தன்னை நெருங்கமாட்டாளா என தவித்தவனுக்கு மீராவின் இந்த அணைப்பு பாலைவனத்தில் பெய்த அடைமழையாக இருந்தது.ஆனாலும் நள்ளிரவு பன்னிரென்டு மணி,உடைமாற்றியே ஆக வேண்டுமென்ற நிலை எல்லாத்திற்கும் மேலாக பசிவேறு இப்படியிருக்க மீராவின் இந்த அணைப்பு இப்போதைக்கு ஒத்திவைக்கப்பட வேண்டியதே.
பேபி “நான் ஃப்ரெஷ்ஷாகிட்டு வாரனே” என்றான்.
அவள் விலகியபாடில்லை.இனியும் சரிவராது என்று தோன்ற வலுக்கட்டாயமாக அவனிடமிருந்து பிரித்தான்.ஒரு பக்கமே சாய்ந்து கொண்டு வந்ததால் அவள் ஒரு கன்னம் சிவந்திருந்தது.அவள் தோள் பிடித்து கட்டிலில் உட்காரவைத்தவன் குளிக்கச் சென்றுவிட்டான்.திரும்பி வரும்போது மீரா நல்ல உறக்கம்.அவளை அங்கிருந்த போர்வையால் போர்த்திவிட்டவன் தலையணையை முதுகிற்கு வைத்து தலையை சுவற்றில் சாய்த்தவாறு கண் மூடினான்.
மீண்டும் ஒரு பஸ் பயணம்.மீராவின் அருகில் அமர்ந்துகொண்டான் ரொஷான்.பஸ் கிளம்பி பத்து நிமிடமும் ஆகியிருக்கவில்லை.முகம் முழுக்க கரியை பூசிக்கொண்டது போல் ஒருத்தன் வந்து ரொஷானின் குரல் வளையை நசிக்க இன்னொருத்தன் துப்பாக்கியுடன் வந்தான்.அவர விடுங்க…என்று அவனின் கையை இழுக்க முயற்சித்தாள்.அசைக்க முடியாதவாறு அவன் இன்னமும் கழுத்தை இறுக்கினான்.வந்தவன் ரொஷானின் நெற்றியில் துப்பாக்கியை வைத்தான்.கண்களை இறுக மூடிக்கொண்டு அலறியவள் மீண்டும் திறந்த போது ஒரே இருளாக இருந்தது.நெஞ்செல்லாம் படபடத்தது.மெல்ல மெல்ல நிதானத்திற்கு வந்த போதுதான் அவள் இருக்குமிடம் உணர்ந்தாள்.
மெல்லிய விளக்கொளியில் அருகில் ரொஷான் சாய்ந்தபடி உறங்குவதை உற்றுப் பார்த்தாள்.பார்த்தவுடன் அவளையறியாமல் ஏதோ ஒரு நிம்மதி படர்ந்தது.ஆனாலும் அந்த கனவிலிருந்து அவளால் மீள முடியவில்லை.அவனுக்கு ஏதும் ஆபத்து வந்துவிடுமா? அவன் இல்லாமல் போனால் தன்னிலை என்னாகும்?அவனை விட்டால் எனக்கு யாருமே இல்லையே.
கற்பனையில் கூட அவன் இல்லாமையை நினைத்து பார்க்க முடியாதளவு வெறுமை அவளுக்குள் தோன்றியது.இதெல்லாம் எப்படி சாத்தியம்? இந்த அளவுக்கா இவனை சார்ந்து இருக்கிறேன்? இது அவள் குணமே இல்லையே.எப்படி தனக்குள் வந்தான்.எப்படி மாற்றினான்.விது அவனோடு பேசுவதை பிடிக்காததற்கு காரணம் பொஸசிவ்னஸ்ஸா? யோசிக்க யோசிக்க உடல் சூடாகித் தணிவது போல் உணர்ந்தாள்.இதற்கு முதல் அவள் இப்படியெல்லாம் உணர்ந்ததும் இல்லை.
சிந்தித்ததுமில்லை.
இனி, அவளைத்தவிர எந்த பெண்ணும் அவன் வாழ்க்கையில் தேவை இல்லை. “நான் மட்டும் போதும்” என்று உடனே தீர்ப்பெழுதினாள் மீரா.
இதுவரைக்கும் எந்த ஆணோடும் வராத நம்பிக்கை,உரிமை,இருபத்தி நான்கு வயதில் முதன்முதலாக தோன்றியிருக்கிறது.நினைக்கும் போதே மனதில் இதுவரை அனுபவித்திராத ஒரு புதிய உணர்வு.வைரமுத்து சொன்னது போல “வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டையும் உருளுதடி”.இதான் காதலா?? மீராவிற்கு சிரிப்பு வந்தது.நன்றாக அவன் புறம் திரும்பினாள்.
காதலை உணரும்போது தனக்குப்பிடித்த ஆண்மகனே பக்கத்தில் இருக்கிறான்.பாட்டி அடிக்கடி சொல்வது போல நான் அதிஷ்டக்காரிதான் போல.
அவனோடு பேசவேண்டும் போலிருக்க தோன்றிய வேகத்திலேயே அவன் தோளை மெதுவாகத் தட்ட உடனே கண்விழித்தவன் அவள் புறம் திரும்பிப் பார்த்தான்.மீராவிற்கு திக்கென்றது. “ஹய்யோ….இப்போ என்னத்துக்கு எழுப்பினன்.என்ன சொல்றது?”
“த…தண்ணி வேணும்” என்று சமாளித்தாள்.இறங்கி இரண்டு எட்டு வைத்தாலே அவள் தண்ணி குடிக்கலாம் என்பதை ரொஷான் போய் எடுத்தபோதே பார்த்தாள்.அவள் குடித்து முடிக்கும்வரை பொறுமையாக நின்றான்.மீராவுக்கு சங்கடமாகிவிட்டது.
“பாவம் தூங்கினவன எழுப்பிவிட்டனே.இதுவே நானா இருந்தா.எவ்வளவு கோபம் வந்திருக்கும்.”
பேபி…என்றான்.
கண்களை உருட்டியபடி, நின்றிருந்தவனை அண்ணாந்து பார்த்தாள்.அந்தப்பார்வையில் என்ன இருந்ததென்று அவனுக்குத் தெரியாது.ஆனாலும் அவளை தூங்க வைத்தான்.புருவம் நெற்றி என மென்மையாகத் தடவினான்.மீராவுக்கும் அது அவ்வளவு தேவையாக இருந்தது.அவன் கைகளின் சொரசொரப்பு அவளுக்கு இதமாக இருக்க அப்படியே கண்மூடினாள்.
**************
கந்தளாய் வந்து ஒரு கிழமைக்கு மேலாகிவிட்டது.
இருவருக்குமிடையில் பெரிதாக பேச்சுவார்த்தையில்லை.மீராவின் மனமாற்றத்தை அவன் உணர்ந்து கொள்ளுமளவிற்கு மீரா எதையும் வெளிப்படுத்தவுமில்லை.
காலையில் ஒன்பது மணிவாக்கில் போனால் ஏழு அல்லது எட்டு மணி அளவில்தான் வீடு வருவான்.பிறகு அவள் கட்டிலில் தூங்க அவனோ சாய்ந்த கதிரையில் அமர்ந்தவாறு தூங்குவான்.வழமைபோல சாப்பாடும் வீடு சுத்தம் செய்வதும் நடக்கும்.
மீராவிற்கு அவனைப் பார்த்தாலே கோபம் வந்தது.பெரிய நல்லவன் மாதிரி விலகியிருக்கான்.
சந்தித்த புதிதில் அவனது சின்னச் சின்னச் சில்மிஷங்களை அடிக்கடி நினைத்துப் பார்ப்பாள்.இப்போ அவனுக்கு உரிமையா பக்கத்துல இருந்தும் ஏன் இப்படி பட்டும்படாம நடக்குறான்.நான் வலிந்து போகனுமா?.இல்லவேயில்ல.இந்த மீரா அதை செய்யமாட்டா.அவன் அப்படியே இருக்கட்டும்.அவ்வளவு திமிரா?
இவர் கோபத்தைப் பார்த்து நான் பயந்துட்டன்னு நினைச்சிட்டார் போல.ஆரம்பத்துல இருந்து அவரு நினைச்சமாதிரித்தானே எல்லாம் நடக்குது.இனி அது நடக்காது. என அவளாகவே ஏதோ ஒன்றை நினைத்து உம்மென்று இருப்பாள்.அவன் ஃபோனை காதில் வைத்துக்கொண்டு வெளியே சென்று கதைத்தால் விதுகூட பேசுறான் போல என அவனை முறைப்பாள்.கட்டிலில் அவனது உடைகள் கிடந்தால் கீழே வீசிவிடுவாள்.மொத்ததில் மீரா தன்வசம் இழந்து கொண்டிருந்தாள்.
இது அத்தனைக்கும் காரணம் காதல் என்று அவளுக்கு, சொல்லத் தெரியவில்லை.ரொஷானுக்கும் அது புரியும் அளவிற்கு மூளையில்லை.
வழமையாக டீசர்ட் பொட்டம் என செல்பவன் இன்று யூனிஃபோமில் தயாரானான்.அன்று சித்திரை புத்தாண்டு என்பதால் கந்தளாயில் உள்ள பொதுவெளியில் கார்னிவெல் ஒன்று நடைபெற இருந்தது.பொதுமக்கள் அதிகமானோர் கூடும் இடமென்பதால் பாதுகாப்பும் அதிகமாக்கப்பட்டிருந்தது.
தொப்பிக்கலையிலிருந்து கந்தளாய்க்கு வர ரொஷானுக்கு அவ்வளவு எளிதாக இருக்கவில்லை.
முதலில் வடக்கிற்கு செல்லவே அவனுக்கு கடிதம் வந்தது.ஆனால் ரொஷான் தான் சில மாதம் கந்தளாய்க்கு மாற்றல் கேட்டு வந்தான்.இப்போதைக்கு சில மாதமளவில் இங்கு நடைபெறும் தலைமைத்துவ பயிற்சி ஒன்றை வழிநடத்துவதே இவனது பணி.காடு மேடு குளிர் வெயில் என சுற்றித் திரிந்தவனுக்கு ஓரிடத்தில் வேலை செய்வது அவ்வளவு ஆறுதலாக இருந்தது.அதிலும் அவனுக்குப் பிடித்த மீராவுடன் ஒரு வாழ்க்கை என்பது அவனை இன்னும் திருப்தியாக்கியது.வீடு, மனைவி,வேலை இதெல்லாம் ஒருகாலத்தில் அவன் கற்பனைக்கே அப்பாற்பட்ட விடயம்.ஆனால் இப்போது? மாறாத புன்னகை முகத்துடன் வலம் வரும் ரொஷான் அவனைப்பற்றி தெரிந்தவர்களுக்கு முற்றிலும் புதியவன்.
இது எல்லாத்துக்கும் மீரா என்ற ஒருத்திதான் காரணம்.ஆனால் அவள்தான் இன்னமும் அதைப்புரியவில்லை.
“மீரா….நான் பின்னேரம் வரமாட்டன் மா. ப்ளாஸ்குள்ள டீ ஊத்திருக்கன்.
குடிச்சிரு” என்ற காமுப்பாட்டியை யோசனையாகப் பார்த்தாள்.
அவளுக்குத்தெரியும்.
ஊரே இன்று கார்னிவல் பார்க்கபோகுதென்று.வந்து இத்தனைநாளில் ஒருதடவை கூட என்னை வெளிய கூட்டிட்டு போகலியே அந்த ரொஷான்.விது இருந்தா ஊர் சுத்திருப்பான் போல அவள் சிந்தனைக்கு ஏற்ப முகம் மாறியது.
“என்ன மீராம்மா இப்டி யோசிக்கிற?”
“இல்ல பாட்டி.உங்களோட என்னையும் போக சொன்னாரு.
அதான் யோசிக்கன்” என்று பொய்யாக சொன்னாள்.
“என்னோடயா? தம்பி அப்டி சொன்னயா?” அவரது கேள்வியில் அப்படி ஒரு சந்தேகம்.
“ஓம் பாட்டி.அவரும் அங்கதான் போற போல.என்னை உங்களோட வரசொன்னாரு.வெளிக்கிட்டு வாரன் இருங்க” என பதிலுக்கு காத்திராமல் தயாரானாள் மீரா.
வீதி முழுக்க இருபக்கமும் அடர்ந்த மரங்கள் செறிந்திருக்க அந்தப்பாதையில் நடப்பது அவ்வளவு ரம்மியமாக இருந்தது.
பிரதான வீதியல்லாமல் குறுக்கு வீதியால் காமாட்சி அழைத்துச்சென்றார்.
பின்னேரம் நான்கு மணியிருக்கும்.
ஆனால் சற்று இருட்டாக இருந்தது.
“மழை வர சாத்தியம் இருக்குப்போல. சனம் பாவம்.வருஷத்துல எப்பயாவது ஒரு நாளைக்கித்தான் இப்படி நடக்குற.மழை வந்தா எல்லாம் குழறுபடியாகிடும்.”
புலம்பியபடி வந்தார் காமு.
“மழை வந்தா என்ன பாட்டி அதுவும் நல்லாத்தான் இருக்கும்.” என்று கண்ணடித்துச் சொன்னாள் மீரா.
“ம்ம்ம் நல்லா இருக்கும்.உங்கட வயசுல நானும் இப்படித்தான் நினைப்பன்.என்ட ஊட்டுக்காரரும் நானும் ஒரு தடவை நடந்து வரக்குள்ள கடும் மழை.எங்கயும் ஒதுங்கேலா.பூரா நனைஞ்சிட்டுதான் வீடு வந்தம்.நல்ல சந்தோசமான காலம்.”
“ஆஆஆவ்…பாட்டி சூப்பர் ஜோடி நீங்க.இப்போ தாத்தாவ மிஸ் பண்றீங்களா.அவரும் உங்கள மாதிரி குணம் போல.”
“ஓமோம்..ஆனா ஆரம்பத்துல அப்படியில்ல.பிறகுதான் எனக்காக மாறிட்டார்.எல்லா புருஷனும் முதல்ல கொஞ்சம் முரடுதான்.போகப்போக நமக்கேத்தமாரி மாறிடுவாங்க.ஒரு வயசுக்குப்பொறகு அக்கா தங்கச்சி ஏன் பெத்த அம்மா கூட மனைவிக்கி பிறகுதான் உரிமை என்ட எண்ணம் வந்திடும்.அது சில ஆக்களுக்கு அறுபதுல வரும்.சில ஆக்களுக்கு முப்பதுல வரும்.நாம நடந்துக்குற விதத்தப்பொறுத்து தான் அது இருக்கு.பொறுமையா இருந்தா புருஷன் நம்மட பக்கமே வந்திடுவாரு.”காமாட்சி பேசப் பேச ரொஷானைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு வந்தாள் மீரா.
“மனுஷன் பாவம்.நடக்கேலாம இருக்காரு.எனக்கு வர விருப்பமே இல்ல.அவர்தான் ஊட்டுக்குள்ளேயே இருக்காம போயிட்டு வா என்டு அனுப்பிவச்சாரு.ஒரு புள்ளைய பெத்து எந்த பிரோசனமும் இல்ல.எனக்கு அவரு.அவருக்கு நானும் தான்.” கண்களை புடைவைத்தலைப்பால் ஒற்றிக்கொண்டார் காமு.
“பாட்டி…..கவலைப்படக் கூடா.நீங்க தைரியமான ஆள்தானே.நீங்க கடும் லக்கி.இந்த வயசிலயும் அன்பான கணவனா இருக்காரே. அதுமாரித்தான் தாத்தாவும். நிறையப்பேரு இந்த டைம்லதான் சண்ட போட்டு யாரோ மாதிரி வாழ்றாங்க.நீங்க சூப்பர்.எனக்கே பொறாமையா இருக்கு தெரியுமா?”
“ஏன் பொறாமை.நீங்களும் அதிஷ்டக்காரிதான்.ரொஷான் தம்பியோட நீங்களும் அப்படி வாழலாம்.அது அருமையான புள்ள.கோபப்படாத தங்கமான பொடியன்.உதவிக்கி பார்த்துக்கு இருக்காது.இங்க குழப்பம் நடந்த நேரம் நாங்க வெளியே போக ஏலாத நிலமை.ஊரடங்கு வேற.அப்ப தாத்தாக்கு மூச்சு மருந்து வேற வாங்கனும்.எனக்கு யாரு இருக்கா.இவர் கஷ்டத்த பார்க்க பொறுக்காம நானே வீட்டை விட்டு வெளியே நடந்துட்டன். பாமசி(pharmacy) எல்லாமே அன்டைக்கி பூட்டி.அதால வந்த ஜீப் ஒன்டுல இருந்து ஒருவன் இறங்கிவந்து சிங்களத்தால ஏசினான்.என்ட கதை ஒன்டையும் அவன் கேக்கல்ல.அந்த ராணுவம் பெரிய கடியன்.அப்பதான் ரொஷான் தம்பி இறங்கி வந்திச்சி. என்ட பிரச்சினைய கேட்டுட்டு அவரே ஜீப்ல கூட்டிட்டு போய் அவர்ர காசுல மருந்து வாங்கி வீட்டையும் என்னை இறக்கி விட்டிச்சிமா.”
“அன்டைக்கித்தான் எனைக்கி தெரியும்.ராணுவத்துல இப்டியும் ஆக்கள் இருக்காகன்டு.இங்கால தங்க வீடு இருக்கான்டு தம்பி எனக்கிட்ட விசாரிச்சப்பதான் நான் இந்த வீட சொன்னன்.ஒரு மூணு மாசம் அப்டி தங்கியிந்துட்டு போயிட்டாரு.அவரு எல்லாருக்கும் நல்ல பழக்கம்.அப்ப தம்பிட கையில பெரிய கட்டு இருந்திச்சி.குண்டு அடிபட்டயாம்.அதாலதான் இங்க தற்காலிகமா வந்தண்டு சொன்னிச்சி.ஆனா ஒத்த கையால அவ்வளவு வேல செய்யிற. வீடெல்லாம் ஒட்டடை அடிப்பாரு.நீங்க கூட அப்படியில்ல மீராம்மா.”
“நான்தான் சமச்சி கொடுக்குற. அடிக்கடி என்ட வீட்ட வந்து தாத்தாவோடயும் பேசுவாரு.அவர புடிச்சி நடக்க வைப்பாரு.இதெல்லாம் நடந்து ,போன வருஷம் அப்டி இருக்கும்.தம்பி மூணு மாசத்துல இங்கருந்து போயிட்டு.பிறகு நீங்க தங்கனும் என்டு இந்த வீட்ட திருப்ப விசாரிச்சாரு.”
“ப்பா…..பெரிய சின்ன கவுன்டர் விஜயகாந்த் ரேன்ச்சிக்கி புகழ்றாங்கப்பா” என்று நினைத்துக்கொண்டாள்.
“தாய் தந்தை இல்லாத புள்ள.நீங்கதான் நல்லா இரக்கமா பார்க்கனும்.நீங்க முதல் தம்பிக்கி அடிக்கடி கோல் எடுப்பீங்க தானே.ஆனா அவருதான் எடுத்து பேசமாட்டாரு.பேசினாலும் அவசரமா வைச்சிடுவாரு.நான்தான் கலியாணம் கட்டப்போற பொண்ணான்டு கேட்டிருக்கன். பரவால்ல தம்பி உங்களேயே கல்யாணம் பண்ணிடிச்சி.மதம் மண்ணாங்கட்டியெல்லாம் பாசத்துக்கும் நல்ல குணத்துக்கும் பொறகுதான்.தேடினாலும் கிடைக்காது.நான் பார்த்து வளர்த்த புள்ளக்கிட்ட கூட இந்த குணம் இல்ல.”
மீராவுக்கு பற்றிக்கொண்டு வந்தது.அப்போ போன வருஷம் பூரா அந்த விதுவோட தொடர்புல இருந்திருக்கார்.கட்டிக்கிற பொண்ணுண்டு ஏத்துக்கிட்டும் இருந்திருக்கான்.இவ்ளோ லவ்வா இருந்தவரு என்ன மண்ணுக்கு என்னை கல்யாணம் செய்த.அந்தக்கேள்விக்கு அவள் மனசாட்சியே விடை சொன்னது.மீரா அவன்தான் நல்லவனாமே.உன்ன ராணுவம் ஜெயில் விசாரணை இதுல இருந்து காப்பத்த தான் கட்டியிருக்கான்.வேற நீ காதல்ண்டு நினைச்சி ஏமாறாத.எப்பவாவது நான் உன்னை விரும்புறன் என்டு சொல்லியிருக்காரா..இல்ல விதுவ தவிர்த்திருக்கானா.லவ்வர் என்டுதானே சொல்லியிருக்கான். இயல்பான அவர்ட நல்ல குணத்தால வேற வழியில்லாம உன்னை அவர் மனைவியா வச்சிருக்கான்.அவள் மனச்சாட்சியே அவளுக்கெதிராய் பேசுகிறது என்பதை அறியாதவளாய் அப்படியே நின்றுவிட்டாள் மீரா.
“மீராம்மா வாங்க..இந்தா பக்கம் வந்துட்டு.கொஞ்ச தூரம் நடந்தா சரி.” மீராவுக்கு எதுவும் காதில் விழவில்லை.அவள் தான் மனச்சாட்சியோடு பேசிக்கொண்டிருக்கிறாளே.
“மீரா…என்னம்மா உடம்புக்கு ஏதும் செய்தா.? முகம் சோர்வா இருக்கே.நல்லாதானே பேசின.என்ன செய்தும்மா? காமு பதறிவிட்டார்.இத்தனை நாளில் மீராவை இப்படியொரு சோர்வாக அவர் பார்த்ததில்லையே.
“ஹான்….இல்ல பாட்டி ஒன்டுமில்லை.கால்ல ஏதோ குத்தினமாரி இருந்திச்சி அதான்.சரி வாங்க போகலாம்.” மனம் முழுவதும் குழப்பத்துடன் நடந்தாள் மீரா.

Last edited by a moderator:
Author: நிதனிபிரபு
Article Title: இது காதல் காவியம் - 24
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.