“நந்தா… நான் சொல்ற இடத்துக்கு வா.ஆர்ட்டயும் சொல்லாத.
தனியாவே வா.”அவள் குரலில் அப்படி ஒரு பதட்டம்.
“உனக்கு ஒன்டுமில்லியேடி? கல்யாணி செத்ததாமே.மற்…”
“நிப்பாட்டுடா.ஃபோன் ஓஃப் ஆகப்போகுது.வரக்குள்ள நான் சொல்றதெல்லாம் கொண்டு வா.என சிலதைப் பட்டியலிட்டாள்.நந்தன் இந்த இடத்துக்கு வருவது அவ்வளவு லேசுபட்ட காரியமில்லை தான்.ஆனாலும் தனியாக அவளால் எதுவுமே செய்ய முடியாதே.அவனை எழுப்பவேண்டுமென்றால் அவன் மேல் வீழுந்திருக்கும் சுவற்றை நகர்த்த வேண்டும்.சத்யா தன்னால் முடியுமட்டும் நகர்த்திப்பார்த்தாள்.
முகம் குப்புறக்கிடப்பவனைச் சுற்றி நொறுங்கிக் கிடக்கும் கற்களை பொறுக்குவதைத் தவிர எதுவுமே அவளால் செய்ய முடியவில்லை.
இரவாகுறத்துக்கு முதல் நந்தன் வந்துடனும் என வேண்டிக்கொண்டே
இருந்தாள்.நான்கு மணி நேரம் கடந்த நிலையில் நந்தன் வந்து சேர்ந்தான்.
“நந்தா….நான் சொல்றதை மட்டும் செய்.தயவு செய்த கேள்வி ஒன்டும் கேக்காத.நான் ஏதும் செய்தா காரணம் இருக்குமென்டு உனக்குத்தெரியும் தானே..?”
அவனுக்கோ அவள் சொல்வது ஒன்றும் விளங்கவில்லை என்றாலும் தலையாட்டி வைத்தான்.
“சத்தம் போடாம இத தூக்கு நான் இவர இழுக்குறன்”
அப்போதுதான் கீழே விழுந்து கிடப்பவனைப் பார்த்தான்.யார் இ..
“நந்தா நான் சொன்னனே.பேசாத. இந்த சுவற்றை மட்டும் தூக்கு” என்றாள்.
அவனும் தனது முழு சக்தியையும் திரட்டி தூக்க அதற்குள் சத்யா நொறுங்கிக் கிடந்த சுவற்றின் சில துண்டுகளை எடுத்து வந்து அதன் இரண்டு பக்கமும் வைத்தாள். “இப்போ மெதுவா அப்டியே வச்சிட்டு முன்னால வந்து இவர வெளியே இழு” என்றாள்.
அவனின் உடம்பில் எந்தக் காயமும் இல்லை.ஆனால் நிச்சயமாக ஏதோ ஒன்று நடந்திருப்பதாய் தெரிந்தது.முகத்தின் தாடையில் குத்தி நின்ற கம்பி சற்று ஆழமாக இருந்தது.மெதுவாக அதை இழுத்துவிட இரத்தம் குபுக்கென்றது.
“நந்தா நான் சொன்னதை எடுத்து வந்தனியா??.
நந்தனின் முகத்தைக்கூட அவள் பார்க்கவில்லை.முதலுதவியை அவசரமாக செய்து முடித்தாள்.
நந்தா இவரத்தூக்கிட்டு வா.
எங்க..?
“என்ட இடத்துக்குத்தான்.அங்க போய்ட்டு எல்லாம் பேசலாம்.இங்கருந்து போறது கஷ்டம் தான்.ஆனாலும் போகனும்.ப்ளீஸ்..?”
அவள் சொன்ன இடத்துக்குப் போக அடுத்தநாள் காலை ஐந்தைத் தாண்டிவிட்டது.அவனது பாரத்தை தனியாக சுமந்து வருவது நந்தனுக்கு சில நேரம் முடியாமல் போகும் ?போதெல்லாம் ஓய்வெடுத்தான்.சத்யாவோ அவனுக்குத் தேவையான சிலமுதலுதவிகளை செய்துகொண்டிருந்தாள்.அவனது கால் எழும்பு முறிந்திருப்பதுடன் முழங்கையிலும் முறிவு இருப்பதாய் தோன்றியது.அவன் சுயநினைவை முற்றாகத் தொலைத்திருந்தான்.
சத்யா தனக்கென்று ஒரு பதுங்குகுழி அமைத்திருந்தாள்.அது மட்டும் தான் அவளுக்கான சொத்து.அந்த இடம் நந்தனைத் தவிர யாருக்குமே தெரியாது.அதிகமாக இங்கு அவள் வருவதில்லை.அவள் பிறந்தநாள்,தாய் தந்தையின் திருமண நாள் என வந்துவிட்டால் அவளின் மனது அப்படிக்கனத்துப் போகும்.அப்படியான சில தருணங்களில் மட்டும் இங்கே வந்துவிடுவாள்.நந்தனும் சில நேரங்களில் தங்குவதுண்டு.
“சத்யா…நீ செய்தது சரியா? அவர் உனக்கு செய்தது பெரிய உதவிதான்.அதுக்கு நீ அவர கொல்லாம உயிரோட விட்டு வந்திருந்தாலே அது நன்றிக்கடன் தான்..இங்க ஏன் கூட்டி வந்த?என்ன செய்யப் போறாய்?
நந்தனின் கேள்விக்கு அவளால் பதில் சொல்ல முடியவில்லை.
“நந்தா உனக்கு விளங்காது..இவர சரியாக்கி அனுப்புறது தான் எனக்கு தர்மம் என்டு மனசு சொல்லுது.அந்த நேரம் ஒரு பெண்ணா என்ட மனசு பட்ட பாடு உனக்கு சொல்லி விளங்காது நந்தா.எனக்கு இவரு உதவினது தெரிஞ்சாலே, அவங்கட ஆக்களால இவருக்கு ஆபத்துவரும்.அதெல்லாம் யோசிக்காம என்ட நிலையறிஞ்சி உதவினாரு.எப்படி என்னால அங்கயே விட்டு வரேலும்.சில நேரம் நம்மடவங்க பார்த்தா இவர என்ன செய்வாங்க? உனக்கே தெரியும் தானே.?
அவளின் முடிவை மாற்ற முடியாதென்பதால் நந்தன் எதுவும் பேசவில்லை.
“நந்தா….அதுக்காக என்ட மனசு மாறல்ல.அதே கோபம், வெறி எல்லாம் அப்டியே தான் இருக்கு.என்டப்பா இறந்த அன்டைக்கே செத்திருக்க வேண்டியவள் இன்னும் இருக்குறதுக்கு காரணம் ஏனென்டு உனக்கு சொல்லித் தெரியவைக்கத் தேவையில்ல..”
நந்தனுக்கும் அவளைப் பற்றி நன்கு தெரியுமென்பதால் அதிகம் பேசவில்லை.ஆனால் இப்படி ஒருவனை சத்யா கவனிக்கிறாளென்று தெரிந்தாலே அவள் உயிருக்கே ஆபத்தாகிவிடுமென்று பயந்தான்.
அதை சொன்னாலும் அவள் அலட்டப்போவதில்லை என்பதால் யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க சத்யாவிற்கு உதவினான்.
இரண்டு மாதத்திற்கு மேலாக அவனைக் கருத்தாகக் கவனித்தாள் சத்யா.உடைந்த அவன் எழும்புகளை சிலாகை கொண்டு கட்டி,பற்றுப்போட்டு நாட்டு வைத்தியம் செய்தாள்.அவன் கம்பி குத்திய அவன் தாடைக்குத் தையல் போட்டாள்.தனக்கென்று சொல்லிவைத்து ஒரு பெண்ணிடம் சமைக்கச் சொல்லி அவனுக்கு ஏற்றவகையில் உணவு கொடுப்பாள்.
ஆனால்,ஒரு நாளைக்கு ஒரு தரம் மட்டுமே அவளால் அவனைப்பார்க்க முடிந்தது.நாள் போகப்போக யுத்தப்பயிற்சி ,தாக்குதல் என கூடிக்கொண்டே போனதால் இரண்டு நாளைக்கு ஒரு தரம் வருவது கூட அவளுக்கு சிரமமே.இருந்தும் அவளுக்கான ஓய்வு நேரத்தில் சென்று அவனைப் பார்த்துக்கொண்டாள்.நந்தன் இல்லாமல் தனியாக அவளால் கவனித்திருக்கவே முடியாது.அவனுக்கான சில வேலைகளைக்கூட முகம் சுழிக்காமல் செய்தான்.எல்லாம் அவன் உயிர்த் தங்கைக்காகவே.
இதோ,எல்லாத்திற்கும் முடிவுநாள் வந்துவிட்டது.இந்த இரண்டு மாதங்களில் அவன் பேசவில்லை.அவன் தாடையில் இருக்கும் ஆறாத காயம் தான் காரணம்.சாப்பிடும் போது அடிக்கடி அசையும் பகுதி என்பதால் பேசுவது சற்று சிரமம் தான்.
அவன் கண்களை எப்போதும் கட்டியே வைத்திருந்தாள்.
அந்தப் புதியவன் தன்னையோ,நந்தனையோ பார்த்துவிடக்கூடாது என்பதில் அவ்வளவு உறுதி.இரு கை உயர்த்தி அவனால் அதை கழட்ட முடியாது.வலது தோள்பட்டை,இடது முழங்கையில் இன்னமும் பூரணமாக சரியாகவில்லை. உடைந்த கால் மட்டும் நன்றாகத் தேறியிருந்தது.
தன்னை முதன் முதலாக அக்கறையோடு தொட்ட ஆண்.அதுவும் அவளிருந்த நிலை??அவன் நினைத்திருந்தால் எதுவும் செய்திருக்கலாம்.அவனின் பலத்திற்கு அவளால் ஈடுகொடுக்கத்தான் இயலுமா? அப்போது அவன் கண்களில் துளி சலனமும் இருக்கவில்லை.அது, இந்தக்காலத்தில் யாரிடமும் இல்லை என அவள் நினைத்திருந்த அரிதான பார்வை.அன்றுதான் கண்டாள். இனி காண்பதற்கு வாய்ப்பே இல்லை.
இதுதான் காரணமா எனத் தெரியாத வகையில் அவனோடு ஒரு ஈர்ப்பு வந்திருந்தது.நீண்ட காலத்திற்குப் பிறகு சத்யா புன்னகைத்தாள்.
தன்னை முதன் முதலாக பெண்ணாக உணரவைத்தவன்.
நல்ல நிலையில் இவனை எனக்கு காலம் அறிமுகப்படுத்தவில்லையே.
அவள் ராசி அப்படி.அவள் மனது முழுக்க ஒரு வெறுமை சூழ்ந்தது.வாழ்வே சலித்துவிட்டதாய் உணர்ந்தாள்.
சத்யாவிற்கு தன்மேல் கழிவிரக்கம் பிறக்க அழவேண்டும் போலிருந்தது.இறுகிய மண்தரை மேல் மழைத்துளிகளாய் அவன் நினைவுகள் அவள் நெஞ்சை நெகிழச்செய்தது.
நந்தன் சொன்னது நினைவுக்கு வந்தது.இவ்வவளவு நாள் பட்ட துன்பங்களுக்கெல்லாம் கடவுள் ஒரு முடிவைக் கொடுக்கப் போகிறார் போல.அது போரின் மோசமான இறுதி நாட்களாக இருந்தது.அது அவளாக எடுத்த பொறுப்பு.
பின்வாங்க முடியாது.கண்களை மூடி தன் தாய் தந்தையின் இறுதி நொடிகளை நினைத்துப்பார்த்தாள்.
அவளது மனதை கடினமாக்க முயற்சித்தாள்.
அவனருகில் வந்தவள் “நீங்க செய்த உதவிக்கு என்னால முடிஞ்சத நான் செய்தன்.உங்கட கால் சரியாகிட்டு.மற்ற காயமெல்லாம் ஆஸ்பத்திரில காட்டுங்க.உங்கட பேர்,ஊர், மதம் எதுவும் எனக்குத் தெரியா.இரண்டு மாசமா உங்கள கவனிச்சன்.உங்களுக்கும் என்னையும் தெரியாது.வித்தியாசமா இருக்கு தானே.இந்த சத்யாவோட வாழ்க்கைல எல்லாமே அப்டித்தான்”என்றாள்.
அவனை சற்று நீண்ட தூரம் கூட்டிச்சென்றவள் ஒரு மர நிழலின் கீழ் உட்காரவைத்தாள்.அவன் கண்களைக் கட்டிவைத்த துணியை அவிழ்க்கு முன் அவள் கண்கள் லேசாகக் கலங்கியது.ஒரே முறை அவன் கண்களை சந்திக்கலாமா என நினைத்தபடி அவிழ்த்தவள் அவன் விழி திறக்கும் முன்னமே அந்த முல்லைத்தீவுக் காட்டினுள் காணாமல் போனாள்.