மீராவுக்கு நடப்பது கனவா நனவா என்று தெரியவில்லை.அவள் மனமோ ஆனந்தத்தின் எல்லையில் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தது.
தன் வாழ்வில் இப்படிக்கூட நல்ல விடயங்கள் நடக்குமா??
கிளிநொச்சி போய் வந்ததிலிருந்து மீரா மிகச்சோர்வாக உணர்ந்தாள்.
அவளை மீறிய அந்த உடல்ச்சோர்வுக்கு என்ன காரணம் என்றே தெரியவில்லை.காமு பாட்டி அவளுக்காக பார்த்துப் பார்த்து சமைத்துப் போடுகிறார்.தனக்காக இல்லாவிட்டாலும் குழந்தைக்காக மறுக்காமல் மீரா அதை உண்பாள்.
ஆனாலும் ஏன் இப்படி இருக்கு? மேடிட்டிருக்கும் வயிற்றைத் தொட்டுப் பார்த்தாள்.குழந்தை அசைந்தது.
மீராவுக்கு குற்ற உணர்வாக இருந்தது. “மன்னிச்சிக்க தங்கம்.எனக்கிருந்த கவலையில உன்ன சரியா கவனிக்கல்ல.
உன்னோட பேசல்ல.
உன்ட அப்பா பத்தி யோசிச்சி யோசிச்சே உன்ன எட்டு மாசம் சுமந்திட்டன்.நீ இந்த பூமிக்கு வரும்போது உன் அப்பாவும் இருக்கனும்.அவரு தான் உன்ன வாங்கனும்.நமக்கு யாருமே இல்லாத மாதிரி இருக்கு செல்லம்.நீ கடவுள்கிட்ட ப்ரே பண்றியா?? என் அப்பாவ கொடுத்திடு கடவுளேன்டு”
இவ்வளவு நாளும் மனதிலிருந்த ரொஷானைப் பற்றிய சுமை பாதியளவு குறைந்திருந்து.அவன் ஆபத்தில்லாத பாதுகாப்பான இடத்தில் இருப்பதே அவளுக்குப் போதுமென்றானது.இந்த நிம்மதியில் தான் தனது முழுக்கவனத்தையும் குழந்தையின் பக்கம் செலுத்தினாள்.ஆனால் அது வேறு விதமான கவலைக்குள் தள்ளியது.இன்னும் ஓரிரு மாதங்களில் அவள் குழந்தை பிறக்க இருக்கிறது.அவளை யார் பார்ப்பது? வலி வந்தால் யாரிடம் சொல்வது? குழந்தையை யார் பார்ப்பது? அடுக்கடுக்காய் நிறையக் கேள்விகள் தோன்றியது.இந்த வாழ்க்கையில் கடவுள் நமக்காக என்ன வைத்திருக்கிறார்.முடியாமல் நீண்டு போகும் அவள் சோதனைக்கு முடிவே இல்லியா?
கதவு தட்டப்படும் சத்தம் கேட்க, இயலாமல் எழுந்தாள் மீரா.அவளால் சுத்தமாக முடியவில்லை.
யாரு??
செல்வி…நினைவில்லியா?
செல்விம்மா…நீங்களா? வட்டமாக விரிந்த அவள் விழிகளில் அவ்வளவு ஆனந்தம்.வாங்கம்மா…என கதவைத் திறந்தபடி பேசினாள்.
நான் வரல்ல..உன்னை கூட்டிட்டு போகத்தான் வந்தன்.முதல்ல இந்தப் பார்சலை பிடி. பழம்,நட்ஸ் எல்லாம் இருக்கு.கொண்டு வெச்சிட்டு வெளிக்கிட்டு வா…எந்தக் கேள்வியும் வேண்டாம்.ஃபாஸ்ட் என்றார்.
அவளும் சரி என்றே தயாராகி வந்தாள்.அதே வேகத்தில் மீராவை காரில் ஏற்றியவர் ஒரு ப்ரைவட் ஹாஸ்பிடலில் காரை நிறுத்தி அவளை கைப்பிடித்துக் கொண்டு உள்ளே அழைத்துச் சென்றார்.
அம்மா…இங்க ஏன்?? மீராவுக்கு குழப்பமாக இருந்தது.
உன் பிள்ளையப் பார்க்க ஆசை இல்லியா?
மீராவுக்கு உடல் சிலிர்த்துப்போனது.
இப்படியொரு சம்பவம் தன் வாழ்க்கையில் சாத்தியம் இல்லை என்றல்லவா நினைத்திருந்தாள்.
அவளுக்குப் பேச்சே வரவில்லை.
ஆர்வமாக செல்வியைப் பின்தொடர்ந்தாள்.
திரையில் அவள் பிள்ளை தெரிந்தது.இதைப் பார்க்க ரொஷான் இல்லியே என ஏங்கினாள்.அவளுக்கு பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல இருந்தது.செல்வி தன்னை பரிசோதித்த டாக்டரோடு பேசுவதெல்லாம் அவளுக்குக் கேட்கவே இல்லை.
மீரா…மெதுவா எழும்புங்க
“இன்னம் கொஞ்சம் பார்க்கனே..” சின்னப் பிள்ளையாய் கண்களை சுருக்கிக் கெஞ்சியவளைக் கண்டு இருவரும் சிரித்தனர்.
“கூட நேரம் ஸ்கேன் பண்ணக் கூடாது.ஒரு மாசமும் சில நாட்களும் தானே இருக்கு.அதுக்குள்ள என்ன அவசரம்?” செல்வி நக்கலடித்தாள்.
மீராவுக்கு சிரிப்பாக இருந்தது.நீண்ட நாட்களுக்குப் பிறகு மனது விட்டல்லவா சிரித்திருக்கிறாள்.
மனமும் உடலும் புத்துணர்வாக இருந்தது.
மீரா…அவங்க சொன்ன எதுவும் உன்ட காதுல விழுந்திருக்காது.நான் சொல்றன் கேளு..நோர்மல் டெலிவரிக்கி வாய்ப்பிருக்காம்.நீ கடும் வீக்கா இருக்கியாம்.இருக்கிற நாளுக்கு நல்லா சாப்பிட்டாத் தான் குழந்தைக்கும் உனக்கும் சத்து கிடைக்குமாம்.சில டெப்லட்ஸ் எழுதித் தந்திருக்காங்க.. ஸோ நீ அதை எல்லாமே ஃபலோ பண்ணனும்.என்றவர் பார்மசியில் அதை வாங்கியும் கொடுத்ததுடன் அவளுக்காக சில ஷொப்பிங் செய்தார்.
மீரா எமோர்ஷனல் ஆவதைக் கண்டவர்..மீரா ஸ்டோப்.என்ன இது அழு மூஞ்சியா இருக்கிறாய்? ஒழுங்கா சாப்பிட்டு குண்டா ஆரோக்கியமா ஒரு பிள்ளைய பெத்துக்க.இல்லாட்டி ரொஷான் உன்ன அடிக்க வாய்ப்பிருக்கு.
ஹேய்…மீரா உனக்கு இன்னொரு பெரிய சப்ரைஸ் இருக்கு.டுடே யுவர் டே…
என்ன…? அவள் வாழ்க்கையில் யாருமே எதையும் எதிர்வுகூறமுடியாதே.க்ரைம் ஸ்டோரி மாதிரி எல்லாமே புதிர் தானே.
சும்மா..எதுவும் சொல்லு.என்னவா இருக்கும்?
அவரப்பத்தி எதுவும் நியூஸா?? பழய எதிர்பார்ப்பே அவளுக்கு இல்லாமல் கேட்டாள்.அவனைப் பார்க்கப் போகிறோம் என்று நிறையத் தடவை ஏமாந்திருக்கிறாளே.இனி அதற்கு அவளுக்குத் தெம்பில்லை.அவன் உயிரோடு இருக்கிறதே போதும்.
ம்ம்ம்ம்…. உன்ன வரட்டாம்.அப்போதான் வருவாராம்.போவமா???
மீரா அப்படியே உறைந்துபோனாள்.செல்வியின் பதிலால் அவளுக்குள் நடந்த இரசாயன மாற்றத்தை சொல்ல வார்த்தையின்றி திணறிப்போனாள்.
உண்மையா??
செல்வி நகைச்சுவையாய் பேசும் ரகம் என்றாலும் பொய் சொல்லமாட்டார் என்றபடியால்,மீராவும் உடனேயே “போவமே… வாங்கம்மா..என செல்வியின் கைகளைப் பற்றினாள்.
அது சரி…மேடம் ,உங்கட ஹீரோ கொழும்பு ஆர்மி ஹாஸ்பிடல்ல இருக்காராம்.நாளைக்கி போவமா?? ப்ளீஸ்….இன்டக்கி எனக்கு தவிர்க்க முடியாத மீடிங் இருக்கு.நாளைக்கி காலையில நேரத்தோட போவம் சரியா?? அழகா வெளிக்கிட்டு இரு.முக்கியமா சிரிச்சிட்டு இருக்கனும்.ஒகே
அவளை வீட்டில் இறக்கிவிட்டு செல்வி சென்றதும் மீராவுக்கு கால் தரையில் படவில்லை.செல்வி கடவுள் தனக்காக அனுப்பிய ஒரு தேவதையாகத் தோன்றினாள்.
எத்தனையோ மாதங்களைத் தனியாக கழித்தவளுக்கு இன்று என்ற ஒரு நாளை கடப்பது அவ்வளவு கொடுமையாக இருந்தது.
ரொஷான்…நாளைக்கி உங்களப் பார்க்கப் போறனா?? இதுக்குத்தானே இவ்ளோ நாள் காத்திட்டு இருந்தன்.என்னப் பார்த்தா என்ன ரியக்ட் பண்ணுவீங்க?? கற்பனையோடு முழித்திருந்தவள்,எப்போது தூங்கினாள் என்றே தெரியவில்லை.ஆனால் செல்வி சொன்ன நேரத்திற்கு ஒரு மணி முன்னரே தயாராகி விட்டாள்.ஏன் இவ்ளோ நேரம்? மறந்துட்டாங்களா?? இப்படியே அவள் தனியாகப் புலம்பிக் கொண்டிருக்க செல்வியும் வந்து சேர்ந்தார்.
கந்தளாயிலிருந்து கொழும்பு செல்வது மீராவுக்கு இரண்டாம் முறை.முதல் பயணம் தன் வாழ்க்கையை எப்படியெல்லாம் மாற்றியது.இந்தப் பயணத்தில் திரும்பி வரும் போது,அவனோட தானே வரப்போறன்.நினைக்கும் போதே மீராவுக்கு பட்டாம் பூச்சி பறந்தது.
“மீரா உனக்கு கஷ்டமா இருந்தா சொல்லனும்.சின்ன வலி என்டாலும் சொல்லனும்.கடைசி மாசத்துல இப்டி போறது ரிஸ்க்.இருந்தாலும் இப்டி ஒரு சூழல் அமைஞ்சிட்டு.”
உன்ட ரிப்போர்ட் ,டெலிவரிக்கான பேஸிக் திங்க்ஸ் எல்லாம் எடுத்ததானே??
“ஓஹ் எடுத்திட்டன்” என்றாள்.
நேற்றே கடையில் அத்தனையும் செல்வி வாங்கி கொடுத்திருந்தார்.
மீரா இருக்கும் மனநிலையில் ஒரு வேளை மறந்திருக்க வாய்ப்பதிகம் என்பதாலேயே கேட்டார்
செல்வியின் தொழில் ரீதியான அடையாள அட்டை தேவையில்லாத சோதனைக்கு உதவியாக இருந்ததால் நினைத்ததை விட வேகமாகவே சென்றனர்.
செல்வியின் கார் ஓட்டும் அழகை மீரா ரசிக்கத் தவறவில்லை..ஒரு தாயைப் போல் அவளைப் பார்த்துக்கொண்டவரைப் பற்றி ரொஷானுக்கு அவள் சொல்ல வேண்டும் என நினைத்தாள்.
வழமையான நெருக்கடியுடன் பரபரப்பாக கொழும்பு நகரம் இயங்கிக் கொண்டிருந்தது.வானம் இருளத் தயாராகியிருந்தது.செல்வி காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார்.
மீரா, நாம ஃப்ரஷ்ஷாகிட்டு மற்றத போசுவம்.மெதுவா வா ..என அவளைப் பிடித்து இறக்கினார்.
விழிகளை உருட்டியவாறே மீரா செல்வியைப் பார்த்தாள்.
“அந்த பார்வையில் அவர் எங்கே இருக்கிறார் என்ற கேள்வி இருந்தது”.ஆனாலும் அவள் கேட்கவில்லை.
சுடச்சுட இடியாப்பமும், முட்டை சொதியும் மேசையில் இருந்தது.மீராவுக்கு அவ்வளவு பசி.ஆனாலும் முன்னையது போல் சாப்பிட முடியவில்லை.இரண்டு வாய் உண்டாலே வயிறு நிரம்பியது போல் உணர்வு.அவள் அசெளகரிகப்படுவதைப் பார்த்த செல்வி கொஞ்சம் கொஞ்சமாய் சாப்பிட அறிவுறுத்தினார்.
ஒரு வழியாக சாப்பிட்டவள் வீட்டுக்கு வெளியே வந்தாள். இரவாகிவிட்டதால் எப்படியும் இன்று போகமுடியாது போல.இவ்வளவு தூரம் தனக்காக மெனக்கட்டு கூட்டிவந்தவரை கேள்விகேட்டு சங்கடப்படுத்துவது தவறெனத் தோன்றியது.கொஞ்சம் நடந்து திரிந்தாள்.
இது செல்வியின் சொந்த வீடு.பங்களா என்று சொல்லும் அளவுக்கு பெரிதாக இருந்தது.
தினமும் தவறாது பராமரிக்கப்படுகிறது என்பது பார்த்தவுடன் புரிந்தது.எந்த இடத்திலும் சின்ன புழுதிகூட இருக்கவில்லை.
என்ன மீரா? ஆர் யூ ஓகே??
ஒன்டுமில்லம்மா..சும்மா பார்த்தன்.வீடு அழகா இருக்கு.உங்களால மட்டும் எல்லாத்தையும் எப்படி ஒன்டு போல பார்க்க முடியிது? நீங்க கூட இருந்தாலே ஒரு பொசிட்டிவ் மைன்ட் கிடைக்கிது. என்றாள் மீரா
புன்னகைத்தார். “மீரா….நான் யார்க்கிட்டயும் அதிகம் என் உணர்வுகளை வெளிக்காட்டமாட்டன்.
அனுராதகிட்டயும் அப்படித்தான்.எல்லார்க்கும் செல்வி என்ட உடனே நினைவுக்கு வாரது சிரிச்ச முகம் தானாம்.நிறையப் பேர் அப்படித்தான் சொல்வாங்க.ஆனா எனக்குள்ள அழுதுட்டே இருக்குற செல்வி இருக்கா.அவ மலடி.அவளுக்கு குழந்தையே பிறக்காது.இது அவ கணவன் தவிர யாருக்குமே தெரியாது.இன்னமும் ஒரு பேரப்புள்ள பிறக்குமென்டு நம்பிட்டு இருக்குறவங்கள சிரிச்சிட்டே ஏமாத்திட்டு இருக்குற வலிய அவள் மட்டும்தான் அனுபவிக்கிறா.
அவர் சொன்னதும் மீராவுக்கு கவலையாக இருந்தது.செல்வியின் கையைப்ப் பிடித்தவள், “அம்மா.. இந்த சொல்லை வெறும் வார்த்தையா மட்டும் நான் சொல்லல.உணர்ந்து தான் உங்களை கூப்பிட்றது.எனக்கு அம்மா என்ட உறவு இல்லை.இருந்திருந்தா உங்களை மாதிரியே எனக்காக யோசிச்சிருப்பாங்க என்டு நினைச்சிருக்கன்.அம்மா என்ற சென்டிமென்ட்டை முதல் முதலா உணர வைத்தது நீங்கதான்”.சொல்லும் போதே மீராவுக்கு கண்கலங்கியது.
“தேங்க்ஸ்டா மீரா…சும்மா சொல்லனும் என்டு தோனிச்சிது” என தோளைக் குலுக்கியவாறே கண்களைச் சிமிட்டி நீரைத் தட்டிவிட்ட செல்வி, “ரொஷானை பார்த்த பின்னால என்னை மறந்துட மாட்டியே?? என்றுவிட்டு
அவள் தலையை தடவியவர்,
“மீரா…நீ ரொஷான் மேல வைத்திருக்குற அன்பு தான் உன்பக்கம் என்ன திரும்ப வச்சிது.இந்த நிலையில தனியா ஒரு ஆணுக்காக ஒரு பெண் போராடுறான்டா நிச்சயமா அவன் நல்லவனா தான் இருக்க முடியும்.சரி உனக்காக சின்னதா ஒரு உதவி செய்யலாம் என்டு பார்த்தா கடவுள் வேற ட்விஸ்ட் எல்லாம் வைத்து இங்க வரை கூட்டிட்டு வந்துட்டாரு பாரு.
மீரா புன்னகைத்தாலும், அவள் யோசிப்பதை புரிந்து கொண்ட செல்வி,” என்ன…? கேளு.என்றார்
அது……அவரு இங்க இருக்கிறது எப்படி தெரியும்?
லெப்டினன் சார்பா ,உன்னோட தகவல் கேட்டு கந்தளாய் பொலீஸ் ஸ்டேசனுக்கு கோல் வந்திருக்கு.இதை அனுராத தான் என்கிட்ட சொன்னார்.விசாரிச்சதுல ரொஷானுடைய ஹெல்த்துக்காக நீ வந்தா நல்லம் என்டு சொல்லிருக்காங்க.நம்ம நாடு இருக்குற டைம் தப்பா இருக்கிறத்தால எதையும் உடனே நம்பி உன்னை தனியா அனுப்ப முடியாதே.அனுராதயும் அத விளங்கிட்டாரு.
நான் என்னோட நண்பர் ஒருத்தர் மூலமா ஹாஸ்பிடல்ல கேட்டன்.கூடவே கிளிநொச்சில என்னோட பேசின அந்த ஆர்மிகிட்டயும் விசாரிச்சன்.அது உண்மைதான்.ஸோ,நானே உன்னை அழைச்சிட்டு வாரதா சொல்லி கூட்டிட்டும் வந்தாச்சு.நாளைக்கி டிஃபன்ஸ் ஆஃபிஸ் போய், ஃபோமாலிட்டி எல்லாம் முடிச்சிட்டு நீதான் அந்த மீரா என்று உறுதிப்படுத்தின பிறகு அவங்க வாகனத்துலேயே கூட்டிட்டும் போவாங்களாம்.
ஆங் இன்னொன்று சொல்ல மறந்திட்டன்…..லெப்டினன் மகள்தான் அவர கவனிக்கிறாவாம். அவங்க ரெண்டு பேரும் முதல்ல இருந்தே ஃப்ரெண்ட்ஸ்ஸா?
மிகுந்த சுவாரஷ்யமாய் கேட்டுக்கொண்டிருந்த மீராவின்முகம் கடைசியாய் செல்வி சொன்னாதைக் கேட்டதும் கரன்ட் போன பல்ப்பாய் சட்டென்று மாறியது.
**********
வெள்ளை நிறத்தில் முழுநீளக்கை உடைய சல்வார்,அதே நிறத்தில் ஜீன்ஸ்.சிவப்பு நிறத் துப்பட்டாவை தோளில் போட்டு தன் பெரிய வயிற்றை மறைப்பதற்காய் அதன் ஒரு பக்கத்தை கையால் பிடித்துக் கொண்டாள்.தலைமுடியை கொஞ்சம் தளர்வாகப்பின்னி விரித்துவிட்டிருந்தாள்.நெற்றியில் சின்னதாய் ஒரு பொட்டு, மேல் வகிட்டில் கண்ணை உறுத்தாத குங்குமம்,தீர்க்கமான அவள் விழிகளுக்கு ஏற்றதைப் போல கண்மை. செல்வி தான் அவளை தயார்படுத்தி விட்டது.மீரா மறுக்க மறுக்க அவள் இடது கையில் தங்கக் கைச்செயின் ஒன்றை அணிவித்து அனுப்பி இருந்தார்.
செல்வியை அனுமதிக்க முடியாது என்றதால் அவள் மட்டும்தான் வந்திருந்தாள்.வழிகாட்ட கூடவே ஒரு ஆர்மி.அவனும் அறையைக் காட்டிவிட்டு போய்விட்டான்.
இத்தனை காலமாக ரொஷானை காணமாட்டோமா என ஏங்கி அலைந்து கொண்டிருந்த மீராவுக்கு இதோ, சில எட்டுக்கள் நடந்தால் ரொஷான் இருக்கும் அறை இருக்கிறது என்றதும் கால்கள் ஏனோ சட்டென்று நின்றுவிட்டது.இதயம் தாளம் தப்பித்துடித்தது. நாணமும்,படபடப்புமாய் கதவைத் தட்டினாள் மீரா.