• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இது காதல் காவியம் - 33 Final Epi

நிதனிபிரபு

Administrator
Staff member
மீராவுக்கு மனதே சரியில்லை.ஹாஸ்பிடலில் இருந்து வீடு வந்து இரண்டு மாதம் கடந்திருந்தது.ரொஷான் வீட்டில் இருப்பதே இல்லை.அவன் வீட்டிற்கு வரும் கொஞ்ச நேரத்தில் கூட குழந்தையை தான் வைத்துக் கொண்டிருப்பான்.குழந்தை எப்படி வைத்திருப்பது,தூங்கவைப்பது என அத்தனையையும் காமு பாட்டியிடமும் மீராவிடமும் கேட்டுத் தெரிந்து கொண்டான். மற்றப்படி அவளிடம் பேசுவது குறைந்திருந்தது.அதற்கு முக்கியமாக இரண்டு காரணங்கள் இருந்தன.

ஒன்று அவனுக்கு சும்மாவே தமிழ் அவ்வளவு வராது.அதுவுமில்லாமல்
இப்போதுதான் அவன் பேச்சும் ஓரளவு திரும்பியிருக்கிறது.இந்த நிலையில் ஆசுவாசமாய் பேச அவனுக்கு அறவே நேரமில்லை.
இரண்டாவது மீரா அவனுடன் பேச்சை அறவே தவிர்த்தது.
ஏனென்று சொல்லத் தெரியாத ஒரு இடைவெளியை ஏற்படுத்தியிருந்தாள்.
ஆனாலும் அவன் பேபி என்று முத்தமிட்டு செல்வதற்கு ஒருபோதும் மறப்பதுமில்லை.

வீட்டிற்கு வந்ததிலிருந்து காமுப்பாட்டி அவளோடு ஒரு பெண்ணை தங்க ஏற்பாடு செய்துவிட்டார்.அவள் எவ்வளவோ மறுத்தும் அவர் கேட்கவில்லை.
“நானே வந்து உன்னை பார்த்துக்குவன்.நானில்லாட்டி பாவம்…அவரால ஒண்டுமே செய்ய முடியாது.” என்றார்.

“ஐயோ…. நான் பார்த்துக்குவன்.எனக்கு யாரும் தேவல்ல பாட்டி.”

“நல்லா பேசுறியே…என்னதான் சுகப் பிரசவம் என்டாலும்.நாப்பது நாளைக்கி பத்தியம் காக்கனும்.உனக்கு தெரியாது.நான் பார்த்துக்குறன்.சும்மா இரு.”என்றுவிட்டார்.

பிறகு,மீராவும் அப்படியே விட்டுவிட்டாள்.சாப்பிடுவதும், பிள்ளைக்கு பால் கொடுப்பது மட்டுமே அவள் வேலையென்றாகியது.
மற்ற எல்லாமே சில சமயம் ரொஷானும், காமுப்பாட்டியும், வேலைக்கிருக்கும் அந்தப்பெண்ணும் தான்.நாட்கள் எப்படிப்போனதென்றே தெரியாதளவிற்கு இதோ இரண்டு மாதங்கள் ஓடிவிட்டது.

அன்றும் அப்படித்தான்.மதியம் மூன்று மணியிருக்கும்.அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை பார்த்துக் கொண்டிருந்தாள் மீரா.ரொஷான் வெளியே சென்றிருந்தான்.யுத்தம் முடிந்துவிட்டதாக அரசாங்கம் அறிவித்த அதே அன்றுதான் அவளுக்கும் பிரசவம் நடந்தது.அந்த அறிவிப்பை நினைத்து சந்தோசப்பட முடியாதளவு அன்று நடந்த பெருந்துயரொன்று அவள் மனதை அழுத்திக் கொண்டிருந்தது.சில முடிவுகள் எழுதப்பட்டவையாக இருக்க அதை தடுக்க யாரால்தான் முடியும்.

“மீராம்மா…..நான் போயிட்டு இருட்டுற முதல் வாரன்.”என்றார்.அது அவளுக்காக வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த பெண்.

சிந்தனை கலைய “அக்கா அவசரமேயில்ல பொறுமையா வாங்க.நான் பார்த்துக்குறன்.” என்றாள் மீரா.

அவர் சென்ற பிறகு கதவைப் பூட்டினாள். “பாவம் இந்தக்கா.அவளை ஒரு வேலை கூட தனியாக செய்ய விடாமல் எப்படி நன்றாக பார்த்துக் கொண்டார்.பெரும்பாலும் அவள் பேச்சுத்துணை கூட அந்த அக்காதான்.வீட்டிற்கு வந்ததிலிருந்து ரொஷானோடு அவள் பேசுவதே இல்லை.பேசுவதற்கு அவனுக்குமே நேரமில்லை.முல்லைதீவு, முல்லிவாய்க்கால் ,கொழும்பு,தொப்பிக்கல,கந்தளாய் என்று ஊர்ஊராக சுற்றித்திவதிலேயே அவன் நாட்கள் சென்றது.அதையும் மீறி வீட்டிலிருந்தால், குழந்தையை தூக்கிக் கொஞ்சிக் கொண்டிருப்பான்.அவனுக்காக குழந்தை வயிற்றுடன் எத்தனை இடங்களுக்கு அலைந்திருப்பாள். இன்று நினைத்துப் பார்த்தால் அவளுக்கே ஆச்சர்யமாக இருந்தது.அது அவள்தானா என்று.

ஆனால் அவனுக்கு தன்னைப்பற்றி துளியும் அக்கறை,பாசம் எதுவுமே இல்ல.ஏன் இப்டி இருக்கிற என்டு ஒரு வார்த்தை கேட்கல்லியே.
நினைக்கவே மீராவுக்கு அழுகை எட்டிப்பார்த்தது.

அன்று,பல மாதங்களுக்குப் பிறகு எவ்வளவு ஆசையாக அவனைக்காணச் சென்றால், அவனும் அந்த விதுவும் ஒரே அறையில் அல்லவா இருந்தார்கள்..இன்று நினைத்தால் கூட மீராவால் கொஞ்சமும் அதை ஏற்கமுடியவில்லை.அவன் தன்னைவிட்டு தூரமாகிட்டதைப்போல் உடைந்து போனாள்.

பழய நினைவிலிருந்து மீண்டவள் நீண்ட நாள் பிறகு சித்திக்கு அழைத்தாள்.பாட்டியோடு பேசினாள்.குழந்தைப் பார்க்கப் பதறிய பாட்டியை சமாளித்து “நானே உன் கொள்ளுப் பேத்திய தூக்கிட்டு வாறன் .உன்னால முடியாதுன்னு சித்தி சொல்லிட்டாங்க.அவங்க பேச்சக்கேட்டு ஒழுங்கா எந்த வேலையும் செய்யாம ரெஸ்ட் எடு.அவர் ஃப்ரீ ஆகட்டும்.கொஞ்ச நாள்ல வந்துடுவன்.என்று சொல்லி ஃபோனை வைத்தவளுக்கு தன் சித்தியின் மனமாற்றத்தை எண்ணி அவ்வளவு ஆறுதலாக இருந்தது.

குழந்தை அழ,பசியாற்றி விட்டு கொஞ்ச நேரம் கொஞ்சி விளையாடினாள்.குழந்தைக்கு அவளைப் போலவே கன்னக்குழி இருந்தது.ஆனாலும் நிறம் மட்டுமே வித்தியாசம்.மற்றபடி கண் நாடி எல்லாமே ரொஷானைப் போலவே இருந்தாள் மீராவின் குட்டி இளவரசி.

என்ன? திருப்பவும் தூக்கமா? அம்மா கூட கொஞ்ச நேரம் முழிச்சிட்டு இருங்க மாட்டிங்களா? என நெற்றி முட்டிக் கேட்க,அழுகை அதிகமானது.

ஓஓஓஹ்ஹ்ஹ்….சரிடா சரிடா நீங்க தூங்குங்க.நான் மட்டும் தனியா இருக்கன்.என பொய்க் கோபம் கொண்டவள் ஒரு வழியாக தூங்க வைத்துவிட்டாள்.பிறகு, எழுந்து சாப்பிட்டு ஒரு குட்டித்தூக்கம் போட்டு எழுந்தாள்.

அப்போது கதவு தட்டப்படும் சத்தம் கேட்க காமுப் பாட்டி என்று நினைத்து திறந்தாள்.அங்கே ,ரொஷான் நின்றிருந்தான்.எப்போதும் போல பேசாமல் வழிவிட்டாள்.அவனோ, அவள் தலையை தடவியவாறு உள்ளே வந்தான்.இதைத்தாண்டி அவர்களுக்குள் எதுவுமே இல்லை.இந்தத் தொடுகை மீராவுக்கு பழகிவிட்ட ஒன்று.வெறுமையான மனதுடன் உள்ளே வந்தாள்.

“இரவு நேரத்தில் வந்திருக்காரே.இங்கதான் தங்கப்போறார் போல.வழமையா காலைல வந்து பின்னேரமே போய்விடுவார்.இன்டக்கி என்ன அதிசயம்.ப்ச்ச் என்ன செய்தா எனக்கென்ன?”என்ற எண்ணம் வர, அவன் மேல் உள்ள கோபத்தை படாரென்று கதவை அடைப்பதில் காட்டினாள்.

ஏழு மணி தாண்டிட்டு இன்னும் அக்காவை காணமே…என்று நினைத்தவாறே குளித்து உடைமாற்றிக் கொண்டு வந்தவளுக்கோ தூக்கம் கண்ணை சுழற்றிக்கொண்டு வந்தது.

மீரா…..என்றபடி,காமுப்பாட்டிதான் வந்தார்.

வாங்க பாட்டி..

நீ,தம்பி ரெண்டு பேரும் உண்டாச்சாம்மா? எல்லாம் போதுமா? அந்தப்பெட்டை இன்டு வரமாட்டா.
நான்தான் தேவல்லன்டு சொன்னன்.
தம்பி இருக்கு தானே.மிச்ச நாளுக்கு பிறகு இன்டக்கி தான் தங்குது.இல்லாட்டி கால்ல சக்கரம் பூட்டினமாதிரி பாத்துட்டு ஓடிடும்.பாவம் என பரிதாபப்பட்ட காமு பாட்டியை மனதுக்குள் திட்டினாள். “அவர் மட்டும்தான் பாவம்.அவரபத்தி எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேச வந்துடுவாங்க”

என்னம்மா யோசனை?

ஒன்டுமில்ல பாட்டி.

பிறகு சிறிது நேரம் பேசிவிட்டு சென்றுவிட்டார்.மீராவுக்கு அடுத்து என்ன செய்வதென்ற குழப்பம்.பேசாமல் வெளியே அமர்ந்து கொண்டாள்.
அப்போது,அவனும் அவளும் சேர்ந்திருந்த நாட்கள் நினைவுக்கு வந்தது.அவனோடு உரிமையாக பழகிய நாட்களெல்லாம் அவளை ஒருவழி பண்ணிக் கொண்டிருந்தது.

இப்போது அவர்களுக்கென்று குழந்தை வேறு.அது மட்டும்தான் ஆறுதல்.நினைக்கவே, அவளையறியாமல் மனதில் சந்தோசமும் பரவியது.தனக்கென்று இப்படியொரு குடும்பம் வேண்டும் என்பதற்காகத்தானே என்றோ ஒருநாள் ஆசைப்பட்டாள்.ஆனால்,எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாதது போல் உணர்வது ஏன்?.இப்படியே யோசித்துக் கொண்டிருந்தாள் சரிவராது என நினைத்தவள், கதவைப் பூட்டிவிட்டு அறைக்குள் வந்தாள்.

அங்கே, அயர்ந்து உறங்கும் அவனை எழுப்ப மனதே வரவில்லை.மூன்று பேர் உறங்கும் அந்தப் பெரிய கட்டிலில் கை,காலை விரித்துக்கொண்டு இருவர் தூங்கும் அழகை ரசித்துக் கொண்டிருந்தாள்..ஆம் அவனுக்கு அருகில் குட்டியாய் ஒரு உருவம்.பார்க்கவே அழகான காட்சியாய் இருந்தது.தன்னை மறந்து அவள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கண்விழித்தவன்,சோம்பலுடன் எழுந்து சாய்ந்தமர்ந்தான்.

பேபி…., என்று அவளைக்கை நீட்டி அழைக்க அவனை முறைத்துப் பார்த்தாள் மீரா.அவளை வலுக்கட்டாயமாக இழுத்து மடியில் அமரவைத்தவன் முகமெங்கும் முத்தமிட்டு அவளை இறுக அணைத்துக்கொண்டான்.விலக முடியாத அவன் பிடியில் அவள் மூச்சுமுட்டிப் போனாள்.ஒருகட்டத்தில் அவன் மீசை பிடித்து இழுக்க ஸ்ஸ்ஸ்..பேபி என்று பிடியை சற்றுத் தளர்த்தினான்.ஆனாலும் அவளால் அவனிடமிருந்து விடுபடமுடியவில்லை..

“உங்க விதுகிட்ட போகலாமே.நான் எதுக்கு? என்றாள்.அது,இவ்வளவு காலமாய் மனதைக் குத்திக் கொண்டிருந்த முள்.அவளது குரல் கோபத்தைக்காட்ட முயன்று தோற்றதைப் போல் ஒலித்தது.

பேசாமல் அவள் முகத்தைப் பார்த்தவனது முகத்தில் அப்படியொரு கவலை.
பேபி…ஏன் இப்டி பேசனும்?

“உங்களோட ஹாஸ்பிடல் ஃபுல்லா அவதானே இருந்தா.அதான் பேசுறன்.” அவளது குரலில் கோபம் கொஞ்சமும் குறையவில்லை.

“அந்த டைம் எனக்கு பேச கஷ்டம். விது தான் நிறைய ஹெல்ப் செய்த.எஸ் அ குட் ப்ரெண்ட்டா..விதுதான் உங்கள எனக்கிட்ட கூட்டிட்டு வர ஹெல்ப் செய்தா.அவளுக்கு வெட்டிங் இருக்கு.அதத்தான் அவ நிறைய பேசுற.வேற நத்திங்.”

அவன் பேச்சு இப்போதுதான் வழமைக்கு திரும்பியிருந்தது.
அவளைக் கண்ட பிறகுதான் அவன் பேச ஆரம்பித்ததாக திலக் சொன்னதை நினைத்துப் பார்த்தாள்
அடர்ந்த தாடியும்,உறக்கமில்லாத விழிகளும் அவனது உடல் அயர்ச்சியைக் காட்டியது.
முன்னயதிலும் பார்க்க சற்று மெலிந்திருந்தான்..அவனது தமிழ் எப்போதும் ஒரு கோர்வையாக இருக்காது.உடைத்து உடைத்து நிதானமாகத் தான் பேசுவான்.அவன் அப்படி பேசுவது மீராவுக்கு மிகப்பிடிக்கும்.எல்லா உணர்ச்சிகளுக்கும் ஒரே மாதிரி ஓசையில் பேசுபவனைப் பார்க்க கொஞ்சம் சிரிப்பாகவே இருக்கும்.என்னதான் இருந்தாலும் அவன் தாய்மொழி வேறுதானே.

மீரா அமைதியாக அவனை முறைத்துப் பார்த்தாள்..அவள் மூக்கைப்பிடித்து ஆட்டினான்.

பேபி, நீங்க ப்ரெக்னென்ட்டா இருந்தத விதுதான் சொன்னா.நீங்க என்னை தேடினது எல்லாம் சொன்னா.அந்த டைம்…உங்க கூட இருந்து கவனிக்க முடியாம போயிட்டு.சாரி பேபி.என் பத்தின இன்ஃபோமேஷன் தர முடியாத நிலமை.சமாவேன்ன பேபி.

பொய் என்றாள் மீரா.சிறுபிள்ளை போன்ற அந்தக்கோபத்தை எப்படி சமாளிப்தென்று தெரியாமல் அவளையே பார்த்தான்.

விது என் ஃப்ரெண்ட்.என்றான் மீண்டும்.அவளுக்கு என்னை பிடிக்கும் தான்.ஆனா உங்களப் பத்தி சொன்ன பிறகு அவளுக்கு அந்த திங்கிங் இல்ல என்றவன்,தொடர்ந்து அவள் தனக்காக லெப்டினனிடம் பர்மிஷன் வாங்கியது தொடக்கக் மீராவை பார்க்க உதவி செய்தது வரை சொன்னான்.

மீராவுக்கு அவள் பெயரையே பிடிக்கவில்லை.அவள் என்னதான் நல்லவளாக மாறினாலும் மீராவின் பார்வையில் ரொஷானின் முன்னாள் காதலியல்லவா. எந்தப்பெண்ணாலும் ஏற்றுக்கொள்ள முடியாதே.
பேசாமல் அவனையே பார்த்தாள். அவனோ கண்களால் கெஞ்சினான்.

முடிஞ்சவரைக்கும் அந்த பேர நீங்க சொல்லக்கூடாது.எனக்கு அவளை புடிக்கல்ல.அவ செய்த நல்லதையெல்லாம் பாராட்ர அளவு நான் நல்லவளில்ல.இனி என்னை டென்சன் செய்யாம இருக்கிறது உங்கட கடமை.சரியா?? ஏறத்தாள அந்த ஆறடியை மிஞ்சிய கெப்டன் ரொஷானை மிரட்டினாள் மீரா.

சரி பேபி..இனி என்னோட கோபம் தேவல்ல.நல்லா பேசுங்க. உங்களோட இருக்காம,நான் நிறைய மிஸ் பண்ணிட்டன்.” மேலே என்ன பேசுவதென்று தெரியாமல் நிறுத்தினான்.அவன் கண்கள் கலங்கியிருந்ததோ?

“நீங்கதான் என்னோட பேசல்ல.எனக்கு எவளவு தனிமையா இருந்திச்சி தெரியுமா? நான் உங்களோட பேசமாட்டன்” என்றாள்.

அவளை இறுக அணைத்தான்.
உன்னை இழந்தது போதும்.இனி ஒரு போதும் பிரிவேயில்லை.
உன்னை விடவேமாட்டேன்.என்பது போல் அந்த அணைப்பிருந்தது..

ஏனோ, அவனை இப்படிப்பார்க்க அவளுக்கு ஒருமாதிரியாக இருந்தது.மீராவிற்கும் தான் அவனிடம் என்னென்னவெல்லாம் பேசவேண்டியிருந்தது.எதை முதலில் பேசுவதென்று தெரியவில்லை.
அவனை தள்ளிவிட்டவள்,

“ஏன் என்கிட்ட சொல்லாம வடக்கு போனீங்க?.எங்க இருந்தீங்க? நான் எப்படி தேடின தெரியுமா? தனியா, யாருமில்லாம……” என்றவள் கண்ணீர் வழிய இரு கைகளாலும் அவன் முகம் கை நெஞ்சு தோள் என்று மாறி மாறி மாறி அடித்து தன் கோபத்தை தீர்த்துக்கொண்டாள்.

அவள் கைகளைப் பிடித்து முத்தமிட்டவன் உடைந்த தமிழில் அத்தனை கேள்விகளுக்கும் பதில் சொன்னான்.அவனுக்கு வந்த மொட்டைக்கடிதம்,அதில் எழுதியிருந்தது,பாதுகாப்பிற்காவே கேம்பஸில் தங்கவைத்தது,வடக்கில் நடந்த யுத்தம், சத்யா என அத்தனையையும் சொன்னான்.

அவன் சொன்ன எல்லாவற்றிலும் சத்யா என்ற பெயர் மட்டும் அவள் கருத்தில் தங்கியிருந்தது.

என்னை தேடி கஷ்டப்பட்டதா? ஏன்? என்னை பிடிக்குமா?? எனக் கேட்டான்.

அவளது அன்பு பற்றி அவனுக்குத் தெரியும் தான்.ஆனாலும் அவளது வாயால் கேட்க ஆசையாக இருந்ததால் கேட்டான்.அவன் கண்களில் தெரிந்த ஆர்வத்தை மனதிற்குள் ரசித்தாள்.இந்த ரொஷானைத் தானே அவள் தேடியது.

இல்லை .என தலையாட்டினாள் மீரா.நான் தேடினதுக்கு ரெண்டு காரணம் என இரு விரல்களை அவன்முன் விரித்துக்காட்டினாள்.
சுருங்கிவிட்ட முகத்துடன் என்ன என்பது போல் குழப்பமாக அவளைப் பார்த்தான்.

காரணம் ஒன்று,எனக்கு பேச ஆள் கிடைக்கல்ல.நான் பேசுற எல்லாத்தையும் உங்களத் தவிர ஒன்னு விடாம யாரு கேட்பா.அதுக்கு தேடினன்.

காரணம் ரெண்டு எனக்கு சண்டை பிடிக்கவும் ஆள் இல்ல.அலுப்பா இருக்குற டைம் எல்லாம் அடிச்சி கொடுமை படுத்தவும் ஆள் இல்ல என்றபடி அவன் மீசையை பிடித்து இழுத்தாள்..இது ரெண்டுக்கும் எனக்கு கிடைச்ச அடிமை நீங்கதான்.அதுக்குத்தான் நான் அலைஞ்சி தேடின என்றாள்.

வெகு சீரியசாய் கேட்டிருந்த ரொஷானுக்கு அவளது பேச்சை விளங்க சில நொடிகள் எடுத்தது.பிறகுதான் சிரித்தான்.

சத்யா ?? என திடீரென கேள்வி எழுப்பினாள்.

“ம்ம்ம்…சத்யா குட் கேர்ள்.கடைசி வரைக்கும் முகம் பார்க்கல்ல.மறக்க முடியாத கேரெக்டர்” என்றான்.அவன் விழிகளில் மரியாதை தெரிந்தது.

“நம்மட மகளுக்கு சத்யா என்ட பெயர் வைப்பமா? என சட்டென்று கேட்டாள். “உங்களுக்கு வேற தெரிவு இருந்தாலும் சொல்லுங்க” என்றாள்.

சற்று நேரம் அவளை பார்தவன். “இதையே வைப்போம்” என்றான். முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியைப் பார்த்தவள் அவன் தோள் சாய்ந்தபடி உறங்கிக் கொண்டிருந்த மகளையும் பார்த்தாள்.

பேபி….

ம்ம்ம்

“நாம நுவரேலிய போயிட்டு செட்டில் ஆகலாம்.டீ எஸ்டேட் மெயின்டெய்ன்ஸ் பண்ணிட்டு அங்கயே இருப்போம்.நான் இத ரிசைன் பண்றதா டிசைட் பண்ணிட்டன்.நிறைய ப்ரஸ் மீட் இருக்கு. முக்கியமான ரிப்போட்ஸ் கொடுக்கனும்.இது எல்லாம் பிறகு என்ட சொந்த ஊர் நுவரேலியால நமக்கு ஒரு லைஃப் வாழனும் பேபி.”

அவனை நிமிர்ந்து பார்த்தாள்.அவன் கண்களில் அவ்வளவு ஏக்கம் இருந்தது.ஏதோ ஒன்றை அவளிடம் இறைஞ்சுவது போன்ற அந்தப்பார்வை.அன்றும் ஒரு தடவை இதே பார்வையைத் தானே பார்த்தான்.அப்போது அதற்கான அர்த்தம் புரியவில்லை.இப்போது புரிந்தது.அவளுக்காகவே பிறந்தவன்.அவனுக்காக எது வேண்டுமானாலும் செய்யலாமென்று தோன்றியது.தன் காதலை வெறும் வார்த்தையால் சொல்ல முடியாதென்பதால் விழிநீர் பெருகப் அவனைப் பார்த்தவள்,
அவள் உயிரிலும் மேலான அவனை தன் மார்போடு அணைத்துக் கொண்டாள் மீரா.
*********************
 
Top Bottom