• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இது காதல் காவியம் - 6

நிதனிபிரபு

Administrator
Staff member
கோபால் முகத்தில் துளியும் மகிழ்ச்சியில்லை.தான் நினைத்தது ஒன்று நடந்தது வேறு என்ற கவலையுடன் திரிந்தார்.

“கவலைப்படாத மச்சான். எல்லாம் நல்லதுக்குத்தான். மீராவுக்கு யார்ன்னு கடவுள் முடிவு பண்ணியிருக்காரோ?? யாருக்குத் தெரியும்.நேரம் வரும்போது எல்லாம் நல்லாவே நடக்கும்.இந்திராவும் உம் மக தானே விடு.” என்றார் ராசு.

“இல்லடா ராசு.இதுவரைக்கும் எம்மவ ஒன்னுமே கேட்டதில்லடா.முதல் முறையா ஊர்ல ஒருத்தரா பாருங்கன்னு சொன்னா.எனக்குத் தெரிந்து அவளுக்கு பொருத்தமா அந்த பையன் தெரிந்ததால தான் மனசுக்குள்ளயே முடிவு பண்ணிட்டன். இந்திராவும் என் பெண் தான் ஆனா நான் மாப்பி
ள்ளைன்னு தேடினது மீராவுக்குத் தான் டா. அதான் ஒருமாதிரி கஷ்டமா இருக்கு”என்றார் கோபால்..

“இங்கப் பாரு.. நம்ம மீரா இதெல்லாம் நினைச்சி கவலப்படுற அளவு பலவீனமானவ கிடையாது.போயி வேலையப் பாரு”.

“அப்பா… நீங்க வரும்வரைக்கும் வெயிட் பண்ண பொறுமையில்ல.அதான் ஓடி வந்திட்டன்”.

“என்னம்மா மூச்சிரைக்க வந்திருக்கிறாய்?

“விஷயத்தை சொன்னா சந்தோசப்படுவீங்க. சொல்லட்டா.?..என்னய லெக்சர் இன்டர்வியூக்கு கூப்பிட்டு இருக்காங்க. நான் இவ்வளவு நாள் இதுக்குத் தான் காத்திருந்தன்.”

சந்தோசத்தில் பன்மடங்கு அழகாக இருந்தாள் மீரா.அவள் கனவே லெக்சராக வேண்டுமென்பது தானே.அதற்கான ஆரம்பமே இந்த வாய்ப்பு.

“அப்டியா...அப்போ இனி லெக்சரா??பெரிய்ய போஸ்ட்டு தான் என்று ஆச்சரியப்பட்டார் ராசு.

“ஹாஹா… கிட்டத்தட்ட. அதுல இருந்தே இன்னும் மேல போயிடலாம் நம்பிக்கை இருக்கு ராசு அண்ணா.ஆனா எல்லாத்துக்கும் முதல் இதுல செலக்டாகி கிடைக்கனும்”.

“உனக்கு கிடைக்காமையா???மச்சான் பார்த்தியா மீராவ.இப்போ சொல்லு நீ பார்த்த பையன் பொருந்துவானா?? “எனக்கேட்ட ராசுவை பார்வையால் அடக்கினார் கோபால்.

மீரா, கோபாலின் கையை பற்றிக் கொண்டாள். “அப்பா நீங்க அமுதா சொன்ன பையன எனக்கு முடிவு பண்ணீங்கன்னு எனக்குத் தெரியும்.அமுதா என் ப்ரெண்ட் ப்பா. சொல்லாம விடுவாளா.அதெல்லாம் ஒரு விஷயமே இல்ல. சொல்லப் போனா அத நினைச்சி பயந்த நான் இப்போ தான் அப்பாடான்னு ஹேப்பியா இருக்கன். தேவையில்லாத கவலைய விட்டுட்டு இந்திரா கல்யாண தேதிய சீக்கிரமா முடிவு பண்ணுங்க.”

“அப்போ உனக்கு விசாலம் பேசினது, இந்திராவுக்கு முதல்ல கல்யாணம் நடப்பது இதெல்லாம் கவலை இல்லியே..”

“சத்தியமா இல்ல. நான் சொன்னேனே படிப்பு முடியனும்னு. நான் சொன்ன பிறகு வரன் பாருங்க.இப்போ என் மைன்ட் புல்லா பேராதெனியவில் தான் இருக்கு”.

“அப்போ அங்கயே ஒருத்தனப் பார்த்திடும்மா” என்றார் ராசு.

“அப்பா விடமாட்டாரேண்ணா. இல்லன்டா நான் ரெடி தான்”. என ராசுவுக்கு ஏற்றாற் போல குறும்புடன் பதில் சொன்னாள்.

பார்த்தியா என் பொண்ண..என்ற கர்வம் நிறைந்த பார்வையுடன் மனதிலிருந்த கவலையை விலக்கினார் கோபால்.

அப்பா கொஞ்சம் போட்டோ காப்பி எடுக்கனும் பைல்ஸ் எல்லாம் அரேன்ஜ் பண்ணனும்

சரி நீ போம்மா..நான் வர்ரேன்.
********
தன் வாழ்க்கையினை அடியோடு மாற்ற இருக்கும் பயணம் என்பதை அறியாதவளாக ஜன்னலோரக் காற்றை அனுபவித்தபடி கண்கள் நிறையக் கனவுகளுடன் பயணித்தாள் மீரா.

எத்தனையோ முறை வீட்டைப் பிரிந்து இருக்கிறேன். அப்பாகிட்டயும் பாட்டிக்கிட்டயும் சொல்லிட்டு வந்தது போதாதது போல் மனதில் சின்னதாய் பிரிவின் வலியை உணர்கிறேனா?? ஏன் இப்டி?

அப்பா,... சித்தி என்னய திட்டும் போதெல்லாம் எனக்காக நீங்க படும் மனக்கஷ்டம் என்னய விட அதிகம். குற்ற உணர்வு பொங்க என் முன்னால நீங்க தலை குனியும் போது சின்னப் புள்ளயா தெரிவீங்க. ஐ லவ் யூ ப்பா.

பாட்டிம்மா....என் ஸ்வீட்டிம்மா… தாயில்லாத எனக்கு வயதின் இயலாமை தாண்டி ஒரு தாயா எப்போதுமே ஆதரவா இருக்கும்.உங்கள நினைச்சாலே பூஸ்ட்டு தானாக ஏறிடும் பாட்டிம்மா.

கையில் பையுடன் விடைபெற்ற போது, “அப்பா பாட்டி எனக்காக வேண்டிக்கோங்க..இன்டர்வியூ நல்லா பண்ணணும்னு.”

நீ நல்லாவே பண்ணுவாய்.எங்க ஆசிர்வாதம் எப்பவுமே இருக்கும் என்றார் பாட்டி.

நானும் கூட வரட்டாம்மா.நாடு இருக்குற நிலைமைய நினைச்சா பயம்மா இருக்கு

இல்லப்பா.. நான் போயிடுவேன்.நாலு வருஷமா பழகின ரூட் தானே.நீங்க பயப்பிடாதீங்க. அங்க ஒன்னும் பிரச்சினையில்ல.

இல்லம்மா...என மீண்டும் ஆரம்பித்தவரை

அப்பா…..கல்யாண வேலையப் பாருங்க.நான் ஒரு வீக் பிறகு ஓடி வந்திடுவன். பாட்டிம்மா அப்பாகிட்ட சொல்லேன்.சும்மா இருக்கியே. ஹேய் அழுறியா பாட்டிம்மா. ஏன்?? நீதானே என்னோட எனர்ஜி டானிக்.நீயே அழுதா நான் என்னப் பண்ணுவன். இரு நானும் சேர்ந்து அழுறன்.

என் தங்கமே…..நீ என்னக்கிம் அழக்கூடாது. சந்தோசமா சிரிச்சிட்டே இருக்கனும்.நல்லபடியா போய்ட்டு வா கண்ணு.

நினைக்கும் போதே மீராவின் கண்களில் நீர் திரண்டது.அப்போது,சர்ர்ர்ர்…… என்ற சத்தத்துடன் பஸ் நின்றதால் அனைவரும் முன் சீட்டில் தலை முட்டி பின்னால் வேகமாக வந்தனர்.என்ன ஆயிற்று என்ற கேள்வியும் பதட்டமும் ஒவ்வொருவர் முகத்திலும் இருந்தது.

ஆயுதம் தாங்கிய படைவீரர்கள் சிலர் பஸ்ஸின் முன்னால் நிற்க இன்னும் சிலர் உள்ளே வந்தனர்.பஸ்ஸிலிருந்த அனைவரும் வேகமாக தங்களது அடையாள அட்டையை வெளியே எடுத்துக் கொண்டிருந்தனர்.

மீராவும் கையில் எடுத்துக்கொண்டாள்.
ஏன் இந்த இடத்துல செக்கிங் பண்றாங்க.புதுசா இருக்கே என நினைக்கும் போதே ஒருத்தன் பிடுங்காத குறையாக அட்டையை வாங்கிப் பார்த்தான். அவளது ஸ்டூடன்ட் அட்டை என்பதால் உடனே தந்துவிட்டான்.இன்னும் ஒருத்தன் அனைவரது பை உட்பட அனைத்தையும் மிக நுணுக்கமாய் சோதித்துக் கொண்டிருந்தான்.

அப்போது, வார்க்கி டாக்கியின் அழைப்பை ஏற்றவன் முகத்தில் மரியாதை தெரிந்தது.அந்த உரையாடல் முழுவதும் சுத்தமான சிங்களம் என்பதால் ஒரு மண்ணும் மீராவுக்குப் புரியவில்லை. அடிக்கடி உச்சரிக்கப்பட்ட ரொஷான் சார் தவிர.வெளியே இருந்த ஒருவன் பஸ்ஸைப் பார்த்து சத்தமாக ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான்.
அதைக் கேட்ட மொழி விளங்கிய சிலர் முகம் பயத்தில் வெளிறியது.

என்னவாம்? என எதிர் சீட்டில் இருந்தவரைக் கேட்டாள் மீரா.

இன்னும் சில தூரம் போனா பஸ்ஸ கடத்தி சுடப்போறதா, இல்லாட்டி கைக்குண்டு தாக்குதல் நடத்தப்போறதா தகவல் கிடைச்சிருக்காம்.அதனால மேல போகமுடியாதாம்.அதுவுமில்லாம தொப்பிக்கலயில தாக்குதல் உச்சமா நடந்திட்டு இருக்காம்.நிலமை சீராகும் வரைக்கும் ஒத்துழைப்பு தரட்டாம்.

அப்போ நம்ம திரும்பி வீட்டுக்கே போகலாமே??

இல்ல. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் அரசாங்கம் ஊரடங்கு அறிவித்திருக்கு.

அப்போ என்ன பண்றது??

இந்தக் கேள்விக்கு பதில் அந்த சூழ்நிலையில் யாருக்குமே தெரியவில்லை. படையினரிடம் கேட்க தைரியமும் இல்லை.அவர்கள் எடுப்பதுதான் முடிவு.பஸ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் உச்சி வெயில் கொளுத்தியது.
வியர்வையும் சூடும் அதிகமானதால் என்னவோ அங்கிருந்த சில குழந்தைகள் அழ ஆரம்பித்திருந்தனர்.அழுகையினை அடக்கப் பெரும்பாடுபட்டுக் கொண்டிருந்த அம்மாக்களைப் பார்க்கும் போது மீராவுக்கே கவலையாகிப் போனது.

காலையில் அவித்த கடலை மட்டுமே சாப்பிட்டாள். வழியில் ஏதாவது வாங்கிக்கலாம் என்ற நினைப்புடன்.சே… இப்படி ஆகிட்டே…கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கடந்த பின்னர் பஸ் நகர்ந்தது.அதுவும் வீட்டுக்கல்ல.
ராணுவத்தின் ட்ரெக் வாகனத்தை பின் தொடர்ந்தபடி.

பின்னர் , மரங்கள் அடர்ந்த பகுதி ஒன்றிற்குள் நிறுத்தப்பட்டது.அங்கே,பக்க சுவர்கள் இல்லாத நீளமான மண்டபம் தெரிந்தது.அங்கு பத்துப்பதினைந்து பேர் இருந்தனர். இரண்டு பெண்கள் தங்கள் குழந்தைகளை காலில் போட்டு தூங்க வைத்துக் கொண்டிருந்தனர்.வயதான பாட்டிகள் இளவயது ஆண்கள் என அனைவரும் தங்களது சொந்த வீட்டைப் போல் அந்த இடத்தைப் பாவித்துக் கொண்டிருந்தனர்.

என்ன இடம் இது? எத்தனையோ தடவை பிரயாணம் பண்ணியிருக்கன்.இப்படி நடப்பது இதுதான் முதல் தடவை.அப்பாவ கூட்டி வந்திருக்கலாம்.நான் தான் கேட்கல.அவசரமாக போனை எடுத்துப் பார்த்தாள்.மருந்துக்கும் கவரேஜ் இல்லை.

எல்லாம் இறங்கு…என்றான் ஒரு படைவீரன்.

அனைவரும் தங்களது பைகளை எடுத்துக் கொண்டு இறங்கினர்.மீண்டும் சோதனை நடத்தப்பட்டது.

பிரச்சினை நாலு நாள்ல க்ளியர் பண்ணிடுவம்.கவலை வேணாம்.உங்களுக்கு தேவயான உணவு கிடைக்கும்.ப்ரீயா இருங்க.நாங்க பாதுகாக்க இருக்கம். என சிங்களத் தமிழில் சொன்னான்.

மீராவுக்கு தலை சுற்றிக் கொண்டு வந்தது.ஐய்யோ...என்னப் பண்ணுவன். இந்த திறந்த இடத்துல எப்படி?? பாதுகாப்புன்னு சொல்றானுங்க.இவனுங்க முகத்தைப் பார்த்தாலே பகீர்னு இருக்கு. அதுவும் இப்போ பேசினவன்..என்ன உயரம். தேக்கு மர உடம்பு. முகம் புல்லா கரிய பூசி இருக்கானா?? இல்ல அவன் கலரே அதானா?? அவன் பார்வை ஒரே ஒரு தடவை தான் சந்திச்சிது.அதுக்கே பயம்மா இருந்திச்சி.ஆழமான பார்வைனு சொல்லுவாங்களே இதான் போல. இருந்தாலும் அங்க இருக்குற எல்லார்குள்ளயும் அவன் மட்டும் தான் நல்லா இருக்கான்.இக்கட்டான சூழலிலும் அவள் ரசிக்கத் தவறவில்லை.

கேட்கல்லியா….? என்ற சத்தத்தில் நிதானத்துக்கு வந்தாள். அவன் தான். என்ன கேட்டான்?? இதயம் துடிக்கும் சத்தம் அதிமானது.

எ..என்ன??

உங்க பேக்???

ஹா… அவனைப் பார்த்துக் கொண்டே ஒரு விரலை பஸ் பக்கம் காட்டியபடி” அங்க இருக்கு” என்றாள்.

கண்களால் எடுத்து வரும்படி சொன்னானா??

ஹய்யோ..நம்மளே சந்தேகத்துக்குரிய நபர்னு சொல்லிக் கொடுத்திடுவமோ?? தன் அதிகப்படியான பதட்டம் அவளுக்கே புதிதாய் இருந்தது.ஆர்மிகாரனுகள்ல அட்டூழியம் பத்தி எவ்வளவோ கேள்விப்பட்டிருக்கிறோம்.

தன் கூட வந்த அனைவரும் சென்று விட்டனர்.பையை எடுக்க அவள் மட்டும் தான் உள்ளே ஏறினாள்.அவள் பின்னாலே வந்து பஸ்ஸின் கதவருகில் சத்தமாக தூரத்தில் நின்ற ராணுவம் ஒருத்தனிடம் பேசிக் கொண்டிருந்தான்.

பேக்கை எடுத்துக் கொண்டு இறங்கியவளின் துப்பட்டா எங்கோ சிக்கிக் கொள்ள திடீரென கேட்ட அவன் சத்தத்தில் கால் இடறி முன்னால் விழப்போனாள் மீரா.எதிரே நின்றவனின் ஒரு கரம் அவளை விழாதவாறு நிதானப்படுத்தியது. பக்கவாட்டில் இருந்த கம்பியை பிடித்தபடி சமனிலைக்கு வந்தவள் முகம் சுழித்தபடி கீழிறங்கினாள்.

கேம்பஸில் அவளை கண்ணகி என்றுதான் அழைப்பர்.ஆண்கள் கைகுலுக்குவதற்கு வரும் போது கைகளைக் குவித்து பதில் சொல்வாள். இதெல்லாம் ஓவராயில்ல என்று கலாய்ப்பது பற்றி அவள் கண்டுப்பதில்லை. ஆனால் இவன் வயிற்றில் கைவைத்து தன்னை நிறுத்தியது ஒருமாதிரியாக இருந்தது.வயிற்றில் மட்டுமா?? விரல்கள் அதற்கு மேலேயும் சென்று அழுத்தியதே.

பையினை கீழே வைத்து விட்டு அவன் தொட்ட இடத்தை அவளையறியாமல் தேய்த்து விட்டாள். அவனுக்கு இந்த செய்கை புதிதாக இருந்ததோ. பற்கள் தெரியாமல் சிரித்தானா??
அவனைத் திரும்பிப் பார்த்தவாறே சென்றவள் எல்லோருடனும் போய் நின்று கொண்டாள்.

நத்தையாக நேரம் நகர்வது போலிருந்தது.பசியால் வயிறு கதறுவது போல் உணர்வு. தண்ணியைக் குடித்து சமாளித்து எவ்வளவு நேரம் தான் இருப்பது?? மாலை ஒரு ஐந்து மணிதாண்டி பிஸ்கட் பக்கெட்டும் டீ யும் தந்தார்கள். யானைப் பசிக்கு சோளப் பொரியா?? என நினைத்தவள் ஒரே மூச்சில் சாப்பிட்டு முடித்தாள்.

எந்த ஊரும்மா நீ??

மட்டக்களப்பு.

ஆஹ்...அங்க எந்த இடம்?

மஞ்சம்தொடுவாய்.

என் ஒன்னுவிட்ட சித்தி மக உங்க ஊர் தான்.சீதா ன்னு பேர்.நல்லா உடுப்பெல்லாம் தைப்பாவே. தெரியுமா??

இல்லங்க. தெரியாது

அவ புருஷன் சொந்தமா கடை வச்சிருக்காரே.வேலன்

தெரியாதே.

அவ.. என ஆரம்பித்தவர் பேசிக்கொண்டே இருந்தார். மீராவுக்கு தாங்க முடியாத அறுவையாக இருந்தது. இன்னிக்கி யாரு முகத்துல முழிச்சேனோ?? இறைவா.அவன் கைபட்ட இடம் வேறு குறுகுறுத்தது.மீண்டும் தேய்த்துக் கொண்டாள்.

இரவு சாப்பாட்டுக்கு பாணும் ஒரு வாழைப்பழமும் கிடைத்தது.தூங்க வேண்டியது தான் போல.யாருன்னே தெரிந்திடாத ஆண்களுக்கு மத்தியில் தூங்குவதா?? ஹ்ம்ம்ம் அனைவரும் சிறிது நேரத்திலேயே உறங்கியிருந்தனர்.அதற்கும் காரணம் இருக்கிறது. காலையிலிருந்து அலைச்சல் வெயில் வியர்வை பசி என உடம்பு அவளுக்கும் தான் களைத்திருந்தது.ஆனால் இலகுவாகத் தூக்கம் மட்டும் வரவில்லை. சற்று தூரத்தில் தான் ஆர்மி கேம்ப் இருந்தது.

மீராவுக்கு பாத்ரூம் போனால் நல்லாயிருக்கும் எனத் தோன்றியது.எவ்வளவு நேரம் தான் அடக்கிக் கொண்டிருப்பது?? முதல்ல போயிருக்கலாம் தான்.நிறைய ஆண்கள் கூட்டமாக நின்றதால் பிறகு என்று தள்ளிப்போட்டாள்.
ஆனால் இனியும் முடியாதது போல உணர்வு. இந்த இருட்டில் எப்படிப் போவது??

குளிராக இருக்க கைகளைத் தேய்த்து முகத்தில் வைத்தாள்.அவள் நடக்கும் போது சருகுகளின் சத்தம் இரவில் அதிகமாகக் கேட்டது.அதனால் மிக மெதுவாக கேம்ப் அருகிலிருக்கும் பாத்ரூமை நோக்கிச் நடந்தாள்.

வெற்று மார்புடன் சோம்பல் முறித்தவாறு வெளியே வந்தவனை கொஞ்சமும் எதிர்பார்க்காதவள் “ஹ்ஹ்ஹ்ஹ்ம்” என ப்ரேக் போட்டது போல் நின்று விட்டாள்.அவன் மார்பில் இவள் மூக்கின் நுனி உரசி மீண்டது.

கண்களை அகல விரித்து அண்ணாந்து அவனைப் பார்த்தாள். அப்போது,

“ரொஷான் சார் ரொஷான் சார்...எமர்ஜன்சி” என ஒருவன் அழைத்துக் கொண்டிருக்க அவளை மென்மையாக ஒரு பார்வை பார்த்தபடி அங்கிருந்து வேகமாக நகர்ந்தான்.

என்னவோ?? என இவளும் உள்ளே எட்டிப் பார்த்தாள்.அவர்கள் பேசுவது புரியவில்லை.ஏதோ முக்கியமான விஷயம் என்பதைத் தவிர.எதற்கும் என தான் வந்த வேலையை முடித்துவிட்டு அவசரமாய் வெளியே வந்தாள். அப்போது யூனிபோர்ம் மாட்டியபடி அவன் ஜீப்பில் ஏறுவது தெரிந்தது. ஒரு கையில் போனைக் காதில் வைத்துக் கொண்டு இன்னொரு கையால் ஜீப் கதவை மூடினான்.அவன் தன்னைப் பார்ப்பது தெரியவும் இருப்பிடத்தை நோக்கி கிட்டத்தட்ட ஓடிப்போனாள் மீரா.
 
Top Bottom