சுற்றிலும் காடு என்பதால் சில்லூறுகளின் சத்தங்கள் அதிகமாக இருந்தது.சின்ன அறைதான் என்றாலும் கச்சிதமாக பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது.நீர் நிரப்பப்ட்ட மண் முட்டியில் மல்லிகைப் பூங்கொத்தொன்று வைக்கப்பட்டிருந்ததால் மெல்லிய வாசமொன்று அறைமுழுவதும் பரவிக்கொண்டிருந்தது.
ஒருத்தரைப் பற்றி பழகிப்பார்த்த பின்புதான் விமர்சிக்க வேண்டுமென்பது எவ்வளவு உண்மை.வேற்றுமதமாக இருந்தாலும் எவ்வளவு அன்பாக கவனிக்கிறார்கள்.அந்த ரொஷான் சார் கூட அப்படித்தான்.எவ்வளவு கரடுமுரடான தோற்றம்.ஆனா அவன் நடந்துக்கும் விதம் எதிர்மாறாக இருக்கே.சோமாவதி அவனை அப்படி சொல்லி அழைத்ததாக அவளுக்கு நினைவு.ரொஷான் என மெல்லிதாக சொல்லிப் பார்த்தாள்.ஏனோ அந்தப் பெயர் அவளுக்குப் பிடித்திருந்தது.
குளிர் சற்று அதிகமாக இருக்க,துப்பட்டாவால் தோளைச் சுற்றி மூடிப்பார்த்தாள்.ஃபேனை குறைத்தால் நல்லதாக இருக்கும் எனத்தோன்றியது.ஸ்விட்ச் அவளுக்கு எதிர்ப்புறச் சுவரில் இருந்ததால் மெல்ல எழுந்து,காயம் இருந்த காலை உயர்த்தி மற்றக்காலை நிலத்தில் ஊன்றிக் கொண்டு சுவற்றைப் பிடிமானமாகப் பற்றினாள்.நொண்டியாட்டம் ஆகிட்டோமே என நினைத்தபடியே முன்னேறியவளின் காதுகளில் நாய் ஊளையிடும் சத்தம் பக்கத்தில் கேட்டது.அப்படியே அசைவற்று நின்றுவிட்டாள்.இன்னும் இன்னும் அருகில் கேட்பது போல் பிரம்மை.எப்போதோ படித்த திகில் நாவல்கள் எல்லாம் நினைவுக்கு வந்தது.நாய் குரைக்கும் சத்தம் எப்போதுமே அவளுக்கு பயத்தை தரும்.
அப்போது, கதவு தட்டும் ஓசை கேட்க, சோமாவதி தான் என்று நினைத்தவள் “வாங்க” என்றாள்.
“க்ளிக்”என்ற ஓசையுடன் கதவு திறந்து மூடும் ஒலி கேட்க அறையின் வாயிலைப் பார்த்தாள்.அங்கே ரொஷான் உள்ளே வந்து கொண்டிருந்தான்.
ஏற்கனவே பயந்து போயிருந்தவள் இவனின் சற்றும் எதிர்பாராத திடீர் வருகையால் அணிச்சையாக நிலத்தில் ஊன்றபோனவளின் காலை ரொஷான் சட்டென்று குனிந்து பற்றிக்கொண்டான்.
சமநிலைக்காய் அவன் தோளைப் அனிச்சையாய் பிடித்துக் கொண்டாள் மீரா.அவனும் நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.அவன் சுவாசம் தன் வயிற்றில் முட்டிமுட்டிப் போவதை சிலிர்ப்புடன் உணர்ந்தாள்.
அப்போதுதான் கவனித்தாள்.அவன் கையில்லாத காக்கி கலர் பெனியனும்,முழங்கால் வரை தொட்டு நிற்கும் முக்கால் ட்ரவுசரும் அணிந்திருந்தான்.தோளில் இருந்து மார்பு வரை பெரிய கட்டுப் போடப்பட்டிருந்தது.காய்ந்த ரத்தக்கறை ஓரிடத்தில் அதிகமாக இருந்தது. ஐய்யோ….அவன் காயத்திலா கை வச்சிருக்கன்.
அவசரமாக எடுத்தாள். ஊகித்தவனாய், அவள் தடுமாறும் முன் எழுந்து அவளைத் தூக்கி கட்டிலில் உட்காரவைத்தான்.
அதே நொடி அவன் காயம்பட்ட தோளைப்பிடித்து தள்ளிவிட்டாள்.
என்ன இவன் எல்லாத்துக்கும் தூக்குறான்.பயமும் இயலாமையும் சேர்ந்து கோபத்தைத் தர யோசிக்காமல் செய்துவிட்டாள் மீரா.
எதிர்பாராமல் அவள் தள்ளி விட்டதில் இரண்டெட்டு பின்னே சென்று விழாதபடி சமாளித்தான்.ஸ்ஸ்ஸ்.. என்ற சத்தத்துடன்.
கலவரமான விழிகளுடன் அவனைப் பார்த்தாள் மீரா.அடிக்கப் போறானா?? இவன் அடிச்சா சாவு தான்.ஏன் அப்படிப் பண்ணின்.நல்லது தானே செய்தான். இந்தக் காயத்தோட தானே என்னத் தூக்கி ஓடி விழுந்து கஷ்டப்பட்டு காப்பாத்தினான்.
அதுக்குப் பிறகு எத்தனை தடவை தூக்கியிருக்கான். பாவம்.நம்ம காயத்துல பட்டா ஊரு ரெண்டாக்கியிருப்போம்.குற்ற உணர்வாய் இருந்தது.
சாரி...என்றாள்.நிச்சயமாக சத்தம் வரவில்லை என்பது அவளுக்கே தெரியும்.
“ஏன் எழும்பின??”
“நான் என்ன சொல்லுறன்.இவன் வேற கேட்குறானே.”ஆனாலும், ஃபேன் கு…..குறைச்சிக்க” என்றாள்.
“திரும்பிப்போய் குறைத்தவன்.” சரியா..? என்று கேட்டான்.
ம்ம்ம்…என்றாள்.மிம மிக மெதுவாய்.
பயமா?? தனியா தூங்க?
ஆம் என சொன்னா பக்கத்துல வந்து தூங்கிடுவானோ..அந்த நேரத்தில் கற்பனை கூட வந்தது.உடனே அவசரமாக “இல்லை” என்றாள்.
“நான் வெளியே தூக்கம்.சொல்ல வந்தன்”. என்றுவிட்டு வெளியேறினான்.
“சே….தப்பா நினைச்சிட்டேனே” அவன் போன திசையை பார்த்துக்கொண்டே இருந்தாள்.ஒரு கட்டத்தில் உடல் அயர்ந்து போயிருப்பதை உணர்ந்தவள் மெல்லமாய் கட்டிலில் சாய்ந்தாள்.
இருந்தும் அவ்வளவு இலகுவாய் தூக்கம் வரவில்லை.அடிக்கடி வாயிலைப்பார்த்தாள்.மனதில் இருந்த பயம் காணாமல் போயிருந்தது.அவன் காயம், அந்தப் பார்வை, இதழ் தாண்டாத சிரிப்பு என அவன் மட்டுமே நினைவானான்.தான் எந்த சூழலில் இருக்கிறோமென்ற சிந்தனை கூட அவளுக்குத் தோன்றவில்லை.
எப்போது தூங்கினாள் என்று அவளுக்கே தெரியாது.
*************
நெத்தலிக் கருவாட்டை வெங்காயம் அதிகமாகப் போட்டு ரோஸ் மாதிரி செய்து, கூடவே முட்டை சொதியும் இடியாப்பமும் இருந்தது. பார்க்கவே மீராவுக்குப் பசித்தது.
“அக்கா நீங்க சொல்லவே வேண்டாம்.நான் எல்லாத்தையும் சாப்பிடப் போறேன்”.என்றவள் அளவுக்கு அதிகமாக உண்டாள். அவ்வளவு பசி.
“அக்கா உங்க சமையல் ரொம்ப டேஸ்ட்.” என்றாள் மீரா.
காலையில் பாத்ரூம் போய் தன்னை சுத்தப்படுத்திக் கொள்ள தனியாக முடியாதென்றபடியால் சோமாவதி தான் உதவி செய்தார்.புதிதாக வாங்கி வைத்திருந்த முக்கால் கை சட்டையும் நீளமான பாவாடையும் கூட பிடிவாதமாகத் தந்து அணியச் சொன்னார். அவர் தங்கைக்கு வாங்கியதாம். அவளுக்கு அளவாக இருந்தது.
அவள் அங்குமிங்கும் பார்ப்பதை உணர்ந்த சோமாவதி “ரரொஷான் சார் காலை ஐந்துக்கே போயாச்சு”
மீராவுக்கோ புரையேறியது.என்னது போய்ட்டானா?.என்னை தனியா இங்க விட்டுட்டா? சற்று முன் சுவையாகத் தெரிந்த உணவு பிடிக்காமல் போக பாதியில் முடித்துக் கொண்டாள்.
“நங்கி….சாப்பிட்ட போதாதே. நீங்க இன்னும் குண்டாகனும்.அப்போ இத விட அழகா இருப்பீங்க.சாப்பிடுங்க”
அவரின் வெள்ளந்தியான அன்பில் நெகிழ்ந்தாலும் தொண்டைக்குள் சாப்பாடு இறங்க மறுத்தது.
“இல்ல அக்கா..நான் நல்லா சாப்பிட்டாச்சு.போதும்.நீங்க சாப்பிடுங்க.”
“சரி…”என்று விட்டு சாப்பிடத் தயாரானார் சோமாவதி.
இவங்ககிட்ட கேட்கலாமா எங்க போனான்னு.என்கிட்ட சொல்லாம ஏன் போகனும்.இனி என்னை யாரு தூக்….கிகிகிகி, ஹா… எனக்கு பைத்தியம் பிடிச்சிட்டா.யாரோ அந்நியன்.வந்தான்.காப்பாத்தினான்.போயிட்டான்.இதுக்கு நடுவுல பீலிங்ஸ் எதுக்கு.இவனைப் பத்தி யோசிக்கிற சூழல்லயா நான் இருக்கன்.அவளுக்கே அநியாயமாகப் பட்டது.
நான் ஊருக்கு போகனும்.ஆனா எப்படி?? அப்பா.ஐயோ…. இவ்வளவு நேரமா அப்பா பத்தி நினைவே இல்லாம, ஒரு தகவலும் சொல்லாம எப்படி என்னால இருக்க முடிந்தது.இவ்வளவு நேரமாக ஆஃப் மோட் செய்யப்பட்டிருந்த தன் மூளையை செயல்படுத்தினாள் மீரா
“அக்கா….ஒரு கோல் பண்ணணும்”.
பக்கத்தில் இருந்த சிறிய நோக்கியா போனை நீட்டினாள் சோமாவதி.
“நன்றிக்கா..அப்பாக்குத் தான்” என்றவாறு நம்பரை அழுத்தி டயல் செய்தாள். மீண்டும் டயல் செய்தாள்.மீண்டும்…
“நங்கி கோல் போகல்லியா…”
“ம்ம்ம்...இல்லக்கா ஸ்விட்ச் ஆஃப்னு வருது.”
வேற நம்பர் கூப்பிடுங்க.
அப்பா எப்போமே ஃபோனை சார்ஜ் பண்ணாம விட்டதேயில்லியே என யோசித்தவாறே,சித்தி போனிற்கு டயல் செய்தாள்.
“ரிங் போகுது க்கா…”
“ஹலோ சித்தி…. நான் மீரா.அப்பாட ஃபோன் வேலை செய்தில்ல.அதான் உங்களுக்கு கூப்பிட்டன்.அப்பாகிட்ட கொடுங்க.
“…………….”
“ஓஹ்…. வெளியே போயிருக்காரா.
சித்தி, இங்க சின்னப் பிரச்சினை.
தனியா மாட்டிக்கிட்டன்.விபரம் எல்லாம் வந்து சொல்லுறன்.
ரொஷான் அப்படின்னு சிங்களவர் ஒருத்தர் தான் உதவி செய்றார்.
ஆனா பயப்படத் தேவையில்ல.நான் பாதுகாப்பாதான் இருக்கன். இப்போ ஊரடங்காமே.க்ளியர் ஆனதும் சொல்லுற இடத்துக்கு வந்து அப்பாவ கூட்டிட்டு போக சொல்லுங்க.என் ஃபோன் மிஸ் ஆகிட்டு. இந்த நம்பர்க்கு…
ஹலோ…?? ஹலோ..?
“அதுவும் கட் ஆகிட்டே”என்றபடி கவலையுடன் நிறைய தடவை இரண்டு நம்பர்க்கும் அழைத்தாள்.அதன் பிறகு யாரையும் தொடர்பு கொள்ளவே முடியல்லை.அப்போது தன் சித்தியின் குணத்தை மறந்துவிட்டாள் மீரா.
“நங்கி...இங்க கவரேஜ் கொஞ்சம் பிரச்சினை தான்” என்றாள் சோமாவதி.
நான் பேசினது விளங்கியிருக்காதா?? இப்போ நான் என்ன பண்றது? இங்கயிருந்து யார் கூட்டிப்போவா? இந்த ரொஷான் தனியா விட்டு போயிருக்க தேவையில்ல.நான் தான் ஹாஸ்பிடல் போயிக்கனும் போல.இதுக்கு மேலயும் இங்கயிருப்பது சரியில்லியே..அவள் முகத்தில் யோசனை படர்ந்தது.கூடவே பயமும்.
“கவலப்படாதியுங்கோ நங்கி...எல்லாம் சரிவரும்.” என அவர் சொல்லி முடிக்கும் போதே வாசலில் ஹாரன் சத்தம் கேட்க எழுந்து போனாள் சோமாவதி.
“நங்கி நீங்க ஹாஸ்பிடல் போக ஜீப் வந்திருக்கு”என்றவர், “உள்ள வாங்கோ” என திரும்பி யாரையோ அழைத்தார்.காக்கி நிற பேண்டும் வெள்ளை நிற சட்டையும் அணிந்த ஒருவன் சக்கர நாற்காலி ஒன்றை தள்ளிக் கொண்டு வந்தான்.அவள் அருகில் கொண்டு வந்ததும் சோமாவதி துணையுடன் அதில் உட்கார்ந்தாள் மீரா.மீண்டும் ஜீப்பில் அமர அவரே உதவியும் செய்தார்.
மீராவின் பயந்த முகத்தைப்பார்த்த சோமாவதி,“நங்கி ஒன்னும் பயமில்லை சார் பார்த்துப்பார்.அவர்தான் அஇதை அனுப்பியிருக்குற.அவர் நல்லம்.பயப்படாம போங்கோ.” என்றார்.
“உங்க உதவி எல்லாத்துக்கும் நன்றி அக்கா.இந்த ட்ரெஸ்க்கும் தான்.” கையைப் பற்றியபடி கண்கலங்க விடைபெற்றாள் மீரா.
ஹாஸ்பிடல் நிரம்பி வழிந்தது.அந்த ஊரின் பிரதான வைத்தியசாலை என்பதால் வழமையாக வரும் நோயாளிகளோடு தாக்குதல்களில் காயமடைந்தோர் உட்பட அவர்களைப் பார்க்க வந்த உறவினர்களும் சேர்ந்து கூட்டம் அலைமோதியது.படுக்கக் கட்டில் இல்லாமல் நிறைய பேர் கீழே வைக்கப்பட்டிருந்தனர்.மீராவை வீலில் தள்ளிக்கொண்டு கட்டிலில் அமரவைத்ததும் ஒரு பெண் சண்டைக்கு வந்தாள்.மொழி புரியவில்லை என்றாலும் அவள் எதற்கு திட்டுகிறாள் என மீராவுக்குப் புரிந்தது. கால் இரண்டும் உடைந்த என் கணவர் கீழே போட்டுவிட்டு இந்தப்பெண்ணுக்கு கட்டிலா?? என்பதுதான் காரணம். மீராவுக்குகே உள்ளுக்குள் “அதானே இதென்ன நியாயம்..?” எனத் தோன்றினாலும் பேசாமல் நின்றாள்.
அந்தப் பெண் மட்டுமல்ல நிறைய பேர் தன்னையே முறைத்து நின்றனர்.சிகிச்சை அளிக்கும் போது மிகுந்த வேதனையை உணர்ந்தாள்.கையைப் பிடித்துக் கொள்ள அப்பா பாட்டி இல்லியே என்ற ஏக்கம் நெஞ்சுக்குள் அழுத்தியது.காலில் எலும்பு பிசகியிருந்தது மட்டுமல்லாமல் ஆங்காங்கே கற்கள் கிழித்த காயங்களும் இருந்தது. தலையில் இரண்டு தையல்கள் போடப்பட்டன.தாளமுடியாத வலியில் கண்களில் நீர் வந்து கொண்டிருந்தது.ராணுவ உடையில் யாரைப் பார்த்தாலும் அவனையே மனம் தேடியது.மீண்டும் அப்பாக்கு கோல் பண்ணலாம் என நினைத்தால் யாரிடம் ஃபோன் வாங்குவது?
யாரோ ஒருத்தன் வேளைக்கு சாப்பாட்டுப் பார்சல் கொண்டு வந்தான்.நிச்சயமாக இதெல்லாம் ரொஷானின் ஏற்பாடு தான்.அவன் தன்னை மறக்கவில்லை என்பது ஆறுதலாய் இருந்தாலும் ஏதோ ஒரு ஏமாற்றத்தை உணர்ந்தாள்.
இப்படியே இரண்டாவது நாள் விடிந்தது.காலையில் ரவுண்ட்ஸ் வந்த டொக்டர்ஸ் தன்னையும் கீழே வைக்கப்பட்டிருந்த நோயாளர்களையும் காட்டி பேசுவது புரிந்தது.பிறகு நர்ஸ் ஏதோ சொல்ல ஒன்றும் பேசாமல் போய்விட்டனர்.
மீராவுக்கு சங்கடமாக இருந்தது.பேசாமல் யார் கண்ணையும் சந்திக்காமல் விழிகளை மூடிக்கொண்டாள்.சற்று நேரம் கழித்து திடீர் அமைதியை உணர கண்களைத் திறந்தாள் மீரா.பொலீஸ் ,ராணுவம் என ஒரு பட்டாளம் வந்தது.கூடவே ரிப்போடர்ஸ் வேறு.சாய்ந்து அமர்ந்தாள்.சிலர் மீடியாவிற்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தனர்.
ராணுவச் சீருடை அணிந்த ஒரு பெண்ணும், நான்கு ஆண்களுமாய் அந்த வார்டில் உள்ள நோயாளர்கள் ஒவ்வொருத்தராய் பார்த்துக் கொண்டு வந்தனர்.
அப்போது,மீராவைக் கடந்து சென்ற அந்த ராணுவப்பெண் திரும்பி அவள் பக்கம் வந்தாள். டாக்டர் கேட்ட அதே கேள்வியை இவளும் நர்ஸிடம் கேட்டாள். நர்ஸ் சொன்ன பதிலில் முகம் கடுகடுக்க மீராவைப் பார்த்த அந்தப் பெண் வெகு அலட்சியமாய் நர்ஸிடம் ஏதோ ஒன்றை சொல்ல அவளும் “சரி” என்றாள்.
மீராவுக்கு புரிந்தது.அந்தப் பெண்ணுக்கு தன்னைப் பிடிக்கவில்லையென்று.வெயிலில் கறுத்திருக்க வேண்டும்.மற்றபடி நல்ல வெள்ளை நிறமும் உயரமுமாக இருந்தாள் அவள்.நிச்சயமாக அவள் தோளுக்கும் மூணு, நாலு இன்ச் குறைவாகத் தான் இருப்பேன் போல என மதிற்குள் நினைத்தாள் மீரா.
“கட்டில் வேணும்.நீங்க வேற வார்ட் போங்க” என்ற நர்ஸிடம் என்ன வாதாடுவது?
“வேற எங்கயிருக்கு வார்ட்??”
பதில் சொல்ல நேரமில்லாதது போல் வேறு புதிய நோயாளி ஒருவர் உடனே அவளிருந்த கட்டிலுக்கு மாற்றப்பட , அவசரமாக இறங்கிய மீரா கால்களை நிலத்தில் ஊன்ற முடியாதவளாய் தரையில் அமர்ந்து கொண்டாள்.நிலம் அவ்வளவு மோசமாக இருந்தது. காய்ந்து போன இரத்தத் துளிகள், வீசப்பட்ட சில பஞ்சுகள் என முகத்தைச் சுழிக்கச் செய்தது.
“நர்ஸ் என்கிட்ட கீழ விரிக்க பெட்சீட் எதுவுமே இல்ல.ப்ளீஸ் தரமுடியுமா??”
“சொந்தக்காரங்க வீடுன்னு நினைச்சியா?.அதெல்லாம் இல்ல.உன் வீட்லயிருந்து யாரையும் கொண்டு வர சொல்லு”.என்றாள்.அந்த பதிலால் முற்றிலில் உடைந்து போனாள் மீரா.
“அவங்க வேற ஊர்ல இருக்காங்க.நான் நான்...யாருமே இல்லாம…” தொண்டை அடைக்கப் பேசி இடையில் நிப்பாட்டினாள் மீரா.
“பேச்செல்லாம் கேட்க எனக்கு நேரமில்ல...மேடம் கட்டில்ல தான் இருப்பீங்க போல. உன்ன கீழதான் இருக்க சொல்லி ஓடர். நேத்தெல்லாம் பொய் செட்டப் பண்ணி கட்டில்ல சொகுசா இருந்திருக்க. உன்ன விட காயம் இருக்குற பேசன்ட் எல்லாம் இடமில்லாம கீழ தானே படுத்திருக்காங்க.”
நான் என்ன செட்டப் பண்ணினன்?? அந்தப் பெண் அதிகாரி ஏதோ பொய் சொல்லிட்டு போயிருக்கா போல.அங்கிருந்தவர்கள் அனைவரும் தன்னையே பார்க்க அவமானமாக உணர்ந்தாள்.
சுவற்றில் சாய்ந்தபடி வெற்றுத் தரையில் அமர்ந்தவளுக்கு அழுகையாக வந்தது.எவ்வளவு சுத்தம் பார்ப்பவள்.என் தலையில் கடவுள் இப்படியெல்லாம் எழுதி வைத்துவிட்டாரே..? யாரை நோவது எனத்தெரியாமல் நொந்து கொண்டிருந்தாள் மீரா.