ஊரடங்கு எப்போ முடியுதோ??
“அது இந்த நாள்ல முடியாது போல..இப்படி மாறி மாறி அட்டெக் நடந்தா மக்கள் உயிருக்கு ஆபத்து தானே.அதான் கவர்மென்ட் ஊரடங்க நீடிச்சிருக்கு.”
“ம்ம்….நான் நினைக்கிறன் இந்த இடத்த ராணுவம் தன்ட கட்டுப்பாட்டுக்கு கீழ கொண்டார வரைக்கும் இந்த நிலை தான்.”
“ஐய்யோ….என்ட புள்ள குட்டியெல்லாம் வெளியூர்ல தான் வேலை செய்துங்க.ஒவ்வொரு முறையும் அவங்க பஸ் ஏறினா, ஊட்ட வந்து சேர்ந்து அவங்க முகத்தை பார்க்குற வரைக்கும் தண்ணி கூட எங்களுக்கு இறங்கிறல்ல.எங்க எந்த குண்டு வெடிக்கும்,அட்டெக் நடக்கும் என்டு நடுங்குது” என்றார் ஒருத்தர்
அதுமட்டுமாய்யா….நம்ம தமிழ் பேசுறவங்க.விசாரணை அது இதுண்டு யார் தலையில பழி விழும் என்ட பயத்தால வெளியிறங்கவே அச்சமா இருக்கு.இந்த ராணுவத்துட விசாரணை எப்படி என்டு நமக்குத்தான் தெரியுமே..என அங்கலாய்த்தார் இன்னொருத்தர்.
கவலை படாதியுங்கோ, இங்க க்ளியர் ஆகிடும் போல. புதுசா போட்டிருக்குற தளபதி நல்ல வேகமா இருக்கார்.அதுவுமில்லாம இந்த பக்கம் தலைமை தாங்கியிருக்குற மேஜர் கொஞ்சம் நிதானமானவர் போல.எந்த இனமா இருந்தாலும் உயிர்ச்சேதம் வர அனுமதிக்கமாட்டன்னு பேட்டி குடுத்திருக்கிறார்.பார்ப்பமே.
நல்லது நடக்கும்.
“இங்க மட்டுமில்ல..எல்லாருக்கும் பயமில்லாத ஒரு சூழல் கிடைக்கனுமென்டு பிரார்த்தியுங்கோ” என்று முடித்தார் ஒரு வயதானவர்.
இவர்களின் சம்பாஷனைகளைக் கேட்டுக்கொண்டிருந்த மீராவுக்கு வெறுத்துப்போனது.நிலமையப் பார்த்தா நம்ம வீடு போய்ச்சேர நாளாகும் போல.தலையில் வலி நன்றாகக் குறைந்து ஒரளவு நடக்கலாம் போல உணர்ந்தாள்.
சுவர்களைப் பிடித்தபடி நடக்க ஆரம்பித்திருந்தாள்.ஹாஸ்பிடல் வந்த மூன்று நாளில் வாழ்க்கை கசந்து போயிருந்தது.முதல் நாள் மட்டுமே கவனிப்பு நன்றாக இருந்தது.அடுத்து வந்த இரண்டு நாளும் மோசமாக அமைந்தது.சாப்பாடும் சரி,ட்ரீட்மென்டும் சரி.காரணங்கள் கேட்க முடியாதளவு புறக்கணிக்கப்பட்டாள் மீரா.பெயரளவில் மட்டும் தான் ஜனனாயகம் தவிர அது நடைமுறைகளில் சாத்தியமற்றது தான் போல.
மூன்று நாட்கள் தொடர்ந்து ஒரே உடை,குளிக்கல்ல பல்லு கூட விளக்கல்ல,அப்பாவோடு தொடர்பு கொள்ள முடியாத நிர்க்கதியான நிலை வேறு.அவளுக்கு சத்தமாக அழலாம் போலிருந்தது.
அப்போது,அம்பியூலன்ஸ்ஸின் ஒலி கதறலாக கேட்டது.அது ஹாஸ்பிடல் வாசலை நெருங்கும் போது மீராவின் இதயம் வேகமாகத் துடிக்க, கொரிடோரில் யோசித்தவாறே காற்று வாங்கிக் கொண்டிருந்தவள் தூண் ஒன்றைப் பற்றியபடி அதையே கொண்டிருந்தாள்.
உள்ளிருந்து ஸ்ட்ரெச்சரை தள்ளியபடி சிலர் ஓடி வந்து கொண்டிருந்தனர். வண்டியின் பின் கதவை திறந்து கொண்டு இரண்டு ஆண் தாதியர்கள் இறங்கி ட்ரிப்ஸ் போத்தலை உயர்த்திப் பிடிக்க இருவர் உள்ளே ஏறி இரத்தத்தினால் புரட்டி எடுக்கப்பட்டது போலான இரண்டு உடல்களை ஸ்ட்ரெச்சரில் ஏற்றி தள்ளிக் கொண்டு ஓடினர்.அதைத் தொடர்ந்து இன்னொரு அம்பியூலன்ஸ் பின்னர் ஜீப் என பின்னே வந்தது. அதிலிருந்த ஒவ்வொருவருக்கும் பலத்த காயம்..ஒருத்தரின் கை பாதி தொங்கும் நிலையிலும்,இன்னொருத்தரின் கண்கள் பிதுங்கியவாறும் என பாதி உயிரோடு உருக்குலைந்த உடல்களாய் இருந்தனர்.
தன் மொத்த சக்தியும் வடிந்தவளாக கை கால் நடுங்கிப் போயிருந்தாள் மீரா. அப்பா…. அப்பா… என மனது கிடந்து கதற கண்ணீருடன் சிமென்ட் பெஞ்சில் தொப்பென்று அமர்ந்து கொண்டாள்.
“கடவுளே…… இதெல்லாம் நான் பார்க்கனும்டு ஏன் எழுதின??
நீ ஏன் அமைதியா இருக்குறாய்?.நீ படைச்ச உயிர் உடல் எல்லாமே இப்படி அழியுதே.
தப்பே செய்யாதவங்களுக்குக் கூட தண்டனையா? எனக்கு பயமா இருக்குப்பா.என்ன அப்பாகிட்ட பாட்டிக்கிட்ட கொண்டு போய் சேர்த்துடு.ப்ளீஸ்….ப்ளீஸ்.”என, சத்தமில்லாமல் விம்மலுடன் அழுதாள்.அவளது மனம் சமநிலைக்கு வரமுடியாதளவு தவித்துக் கொண்டிருந்தது.
எவ்வளவு நேரமாக அங்கிருப்பது?? என்ற யோசனை வர,இருட்டாக இருந்த வார்ட்டின் உள்ளே போகப் பயந்தவளாய் அதே இடத்தில் அமர்ந்திருந்தாள்.சிகரெட் நெடி நாசி பரவ தன்னருகில் யாரோ இருப்பதை உணர்ந்தவள் நிமிர்ந்து பார்த்தாள்.வெள்ளை சீருடை அணிந்திருந்த ஒருவன் அவளை வெறித்துப் பார்த்தான்.மிச்ச நேரமா நிக்கிறானா? அவனது பார்வை அருவெறுப்பாக இருந்தது.முகம் சுழிக்க எழப்போனவளால் முடியவில்லை.நீண்ட நேரம் ஒரே இடத்தில் இருந்ததால் கால்களும் மரத்துப் போயிருந்தன.
சுற்றிலும் பார்வையை ஓடவிட்டவளுக்கு கிலி பரவியது.
எப்படியும் பத்து மணியைத் தாண்டியிருக்குமா? ஹாஸ்பிடலில் சத்தமும் பரபரப்பும் அறவே இருக்கவில்லை. ஆள்நடமாட்டம் முற்றாக இல்லாமலிருந்தது.நிறைய மின்விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தன. அவசரத்திற்குத் தன்னால் எழ முடியாதிருந்தாலும் வலியைப் பொறுத்துக் கொண்டு எழுந்தாள். அவன் பார்வை அத்துமீறுவதை உணராமலில்லை.அவளுக்கு உடல் கூசியது.
சிங்களத்தில் ஏதோ சொன்னபடி அவளை நோக்கி கை நீட்டினான். ஹெல்ப் என்ற ஆங்கில சொல் மட்டுமே அவளுக்குப் புரிந்தது.அவள் இடையை தொட வந்தவனின் கையை தட்டிவிட்டாள். அவன் வலுக்கட்டாயமாய் அவளைப் பற்றினான். அருவருப்பு மேலிட “விடு...நான் போயிக்குவன்.” என விலகினாள்.அவனும் விடுவதாய் இல்லை.அவள் வார்ட் ரொம்ப தூரம். “யாரையும் கணவில்லியே.. அவள் மனது கிடந்து பதறியது.
“தொடாத”….என்றாள்.கடவுளே காப்பாத்து...என இறைஞ்சினாள்.அவனோ ஒவ்வொரு பாகமாக தொட்டபடி வந்தான்.இவளும் கூனிக் குறுகி தட்டிவிட்டபடி தடுமாறியபடி நடந்தாள்.
தூரத்தில் மெல்லிய வெளிச்சம் தெரிந்தது.ஏதோ வாகனம் உள்ளே வரப் போகுது போல என நினைத்தாள்.ஆனால் அது காணாமல் போனது.
வேறுபக்கமாய் அவளை இழுத்தான். பற்கள் தெரிய சிரித்தபடி,
தமிழ் பெட்டை?? நானும் நல்லா தமிழ் பேசுவன். வா...நான் அந்த வழியால உன் வார்ட்டுக்கு கூட்டிப் போறன்.” என்றான்.அவளோ அவனிடமிருந்து விடுபட முடிந்தவரை போராடினாள்.
அப்போது திடீரென்று கேட்ட ஏய்ய்ய்…..என்ற சத்தத்தில் அவன் அவசரமாய் அவள் கையை விட அதே வேகத்தில் மீரா, கீழே விழுந்தாள்.காலின் வலியை விட யாரோ உதவிக்கு வந்து விட்டார்கள் என்ற நிம்மதி உணர்வு மேலாகப்பட்டது.
சிங்களத்தில் அந்தப் பெண் ஏதோ கேட்டாள்.மீரா புரியாமல் அவளைப் பார்க்க, எதிரே நின்றவளின் முகம் கடினப்பட்டது.அதைப் பார்த்ததும் அழுகையை தவிர எதுவுமே அவளுக்கு வரவில்லை.மெதுவாய் எழ முயற்சித்தாள்.
இருக்குறது சிங்கள நாடு.ஆனா சிங்களம் தெரியாது.இந்த நேரம் இவனோட என்ன செய்றாய்.?? என்றபடி இன்னொரு குரல் கேட்டது.அந்தப் பேச்சு எரிச்சலை அதிகப்படுத்த யாரென்று பார்த்தாள். இவளா…?? கட்டில் இல்லாமப் பண்ணினது இவள் தானே?
“மேடம், இவ வார்ட்டுக்கு உள்ள போகாம இங்கயே இருக்க போறவாம்.கால் காயம்.பாவமா இருக்கவும் தான் நான் கூட்டிப் போறதா கை பிடிச்சி ஹெல்ப் செய்தன்.அந்தடைம் தான் நீங்க வந்த.ஆனா, இவள பார்த்தா சந்தேகம் வருது.ஒரு தரம் விசாரிங்க மேடம்”என்றான்.
நக்கலாய் சிரித்தாள் அந்த திமிர்பிடித்த ராணுவப் பெண். மீராவுக்கு அவள் சிரிப்பிலேயே புரிந்துவிட்டது.இவள் தன்னை காப்பாற்றப் போவதில்லையென்று.
சுவரைப் பிடித்தபடி சிரமப்பட்டு எழுந்தாள். இந்த இரவுடன் தன் வாழ்க்கை முடியப்போகுதா? ஏன் இந்த சோதனை? அவனோ தன்னை நோக்கி பற்களை காட்டிக்கொண்டு நின்றான்.
“மேடம்….நானே போவன்.இவர் தேவையில்லை.” மீராவுக்கு குரலே வரவில்லை.
“ஏய்...என்ன ஹாஸ்பிடல விட்டு தப்பி போக ப்ளேன் போடுறியோ?? நீ தமிழ் தானே.உங்க எல்லாரையும் சந்தேகத்துல அர்ரெஸ்ட் பண்ணி அடிச்சி விசாரிக்கனும்.
மீராவுக்கு கோபம் வர..சத்தமாய்ப் பேசினாள். “ஏன் தமிழ்னா என்ன? தப்பு பண்ணினவர்களா?? அப்படி என்ன நல்லவங்க நீங்க? உங்களமாதிரி சில அதிகாரிகளால நல்லவங்களுக்கும் கெட்ட பெயர்.”
ஐந்து விரல்களும் கன்னத்தில் பதிய அடித்திருந்தாள் அந்தப் பெண்.மீராவுக்கு ஒரு நிமிடம் பூச்சி பறந்தது.பிறந்ததிலிருந்து அடியே வாங்கியிருக்க மாட்டாள்.கிட்டத்தட்ட ஆணின் முரட்டு அடிக்கு சமனாக இருந்ததோ? தன்னையறியாமல் கண்கள் கலங்கியது.பக்கத்தில் நின்றவனும் பேயறைந்ததைப் போல பயந்து நின்றான்.
கெட்ட வார்த்தையாக இருக்க வேண்டும்.அவள் சிங்களத்தில் ஏதேதோ பேசினாள்.அவளைப் பார்க்கவே மீராவுக்கு பயமாக இருந்தது.ஆனாலும் உண்மையைப் பேசிவிட்டோம் என்ற நிமிர்வும் இல்லாமலில்லை.
உன்ட பேரென்ன??
சரங்க மேடம் என்றான்
சிங்களத்தில் அவனிடம் ஏதோ சொன்னாள். “மேடம்..” என தயங்கியவன் பிறகு அவள் சொன்னதை செய்வதற்காய் மீராவை இழுத்துச் சென்றான்.
விடு….விட்றா… அவன் கையை கடித்தாள். அவன் அவள் முடியை கொத்தாகப் பற்றினான். “யன்ன…பிஸ்ஸு” என என்னவெல்லாமோ சொன்னான்.
இழுத்துச் சென்ற அந்த இடம் இருட்டாக இருந்தது.அங்கே மங்கிய வெளிச்சத்தில் ஏதோ கெட்ட நெடி மூக்கைத் துளைத்தது. அவள் முடியை பற்றியவாறே அங்கிருந்த அறையைத் திறந்து அவளை உள்ளே தள்ளி பூட்டிச் சென்றான்.
ஒரு நிமிடம் என்னவென்று நிதானிக்க முடியாதவள் வலித்த தலையை தடவியபடி அங்கிருந்த கட்டிலின் இரும்புக் கம்பியை பிடித்தபடி பார்வையை ஓட்டினாள்.பார்வையில் தெரிந்த காட்சியில் ரத்தம் உறைய நின்றவள் கண்கள் சொருக மயங்கி விழுந்தாள்.
********
(உரையாடல் சிங்கத்தில்)
சார்…… இங்க முதல் அட்மிட் பண்ண சிலர் காயமெல்லாம் ஆறிடிச்சாம்.டாக்டர்ஸ் சொன்னாங்க.அவங்கள டிஸ்சார்ச் பண்னின பிறகு எங்க அனுப்புறது??
சார்... இன்றைக்கு அட்மிட் பண்ணாக்கள்ட உடம்பு கவலைக்கிடம் தான்.நீங்க சொன்ன மாதிரி சரியான ஸ்கெட்ச்ல நம்ம ஆப்ரேசன் இருந்ததால தான் கொஞ்ச பேருக்கு மட்டும் காயம்.இல்லன்னா அந்த கார்மென்ட்ஸ் பஸ்ல வந்த எல்லாரும் இறந்திருப்பாங்க..
இப்படி மாற்றி மாற்றி அவனிடம் பேசிக்கொண்டு வந்தாலும் ,அவன் கவனம் முழுதும் அந்த வார்ட்டை சுற்றி வந்தது.அவன் தேடலை புரிந்தவன் போல் என்ன சார் பண்ணனும்?? என்ற கேள்வியோடு வந்தான் ஒரு ராணுவ வீரன்.
இரவு பகல் பாராது நாட்டுக்காக தன்னையே எழுதிக் கொடுத்தவர்கள் தானே படைவீரர்கள்.ஆனால்…??? என்ற கேள்வியில் தான் பல குழப்பங்கள் இருக்கின்றதோ?
என்ன நடக்கிறது என்ற உண்மை உயர் மட்டங்களைச் சார்ந்திருக்க நல்லதோ கெட்டதோ அரசாங்கம் உத்தரவிடுவதைச் செய்வோம் என்ற மனநிலை தான் அநேகமானோரின் நிலைப்பாடு.ஆனால் இதில் ரொஷான் சற்று மாறுபட்டவன்.
பணத்திற்காகவும் பிறரின் ஏவல்களுக்காகவும் மட்டும் அவன் கடமை இருக்காது.
சிறு வயதிலிருந்தே புத்தரின் கொள்கைகளில் இருந்து தன் மனதை ஒரு நிலைப்படுத்த கற்றுக்கொண்டவன்.அவன் வாழ்வின் நிறையத் தருணங்கள் தனிமையில் கழித்திருக்கிறான்.
அப்போதெல்லாம் அலைக்கழியும் மனதிற்குள் புத்தரைப் பத்திரப்படுத்திக் கொண்டான்.
விகாரை,பூஜை என்று அவன் போனதில்லை.ஆனால் அவற்றையெல்லாம் பொதுவில் மட்டும் கடைப்பிடித்து விட்டு நல்லதை செய்ய மறுப்பவர்களைக் காட்டிலும் சிறந்தவனே.அவனுக்கு எப்போதும் புத்தர் தான் குரு.
நிறையவே மனித நேயம்,சமத்துவம் என்பதெல்லாம் அவனுக்கேயான குணங்கள்.அதனால் ரொஷானுக்கு எதிரிகளும் நண்பர்களும் அதிகம்.
நெற்றியைச் சுருக்கியவன் “இந்த பெட்ல முதல் இருந்த பேஷன்ட் தெரியுமா??
“நர்ஸ் கிட்ட கேட்டுப் பார்க்கலாம்” என்றவனை தடுத்தான் ரொஷான்.எத்தனையோ நோயாளிகளை பார்த்துவிட்டு அயர்ச்சியில் தனையறியாமல் உட்கார்ந்தபடி தூங்கிக் கொண்டிருந்தனர்.அவர்களுக்கும் உறங்கிக்கொண்டிருக்கும் நோயாளிகளுக்கும் தொந்தரவாய் தன் வரவு இருக்கக் கூடாது என்பதற்காகத் தான் அவன் ஆர்ப்பாட்டமில்லாமல் இரண்டு பேருடன் மட்டும் வந்தான்.அவன் வரவு யாருக்கும் தெரியாது.
“அந்த பேஷன்ட்டை உங்களுக்கு தெரியாதா??”
“இல்ல சார்...நான் மூணு தடவை அப்படித்தான் இங்க விசிட் பண்ணியிருக்கன்.அதுவும் பேஷன்ட்ஸ்ட டீடெயில்ஸ் வாங்கிட்டு உடனே போயிட்டன்.இதுக்கு நயோமி மேடம் தான் இன்சார்ச்.அவகிட்டு கேட்கலாம்.”
ம்ம்ம்….என இழுத்தவன் “ சரி கூப்பிடுங்க” என்றபடி வெளியே போடப்பட்டிருந்த நீளமான மரக்கதிரையில் அமர்ந்தான்.அந்த நேரம் அவன் முகம் அன்றைய நாளுக்கு எதிர்மாறாய் மென்மையான உணர்வுகளை தத்தெடுத்திருந்தது.
“ரொஷான் திடீர்னு வந்திருக்க?? ஒரு ஃபோன் பண்ணிருக்கலாமே. உன்னோட பாதுகாப்புல அக்கறை இருக்குற ஒரே ஜீவன்கிட்ட இருந்த நான் தப்பிக்கிறது பெரும்பாடு. அந்த சூழலுக்கு சம்பந்தமே இல்லாமல் பேசி அவளாகவே சிரித்துக் கொண்டிருந்தாள்.
அவனோ அதற்கு எந்த விதமான உணர்வையும் வெளிக்காட்டவில்லை.
“நயோமி….அந்த பெட்ல முதல்ல இருந்தாளே ஒரு பெண்.அவ எங்க??”
யாரை கேட்குற?? எரிச்சலாய்க் கேட்டாள். அவள் ஒருவாறு யூகித்தது தான் அவளை விசாரிப்பானென்று.
“நான் யாரையும் இங்க இருந்து போக உன்கிட்ட சொல்லலன்னு ஞாபகம்.”
ப்ச்ச்ச்...என வேண்டுமென்றே சலித்தவளை பார்த்துக்கொண்டே இருந்தான்.
அவளுக்கு கொஞ்சம் பதட்டமாக இருந்தாலும் காட்டிக் கொள்ளாமல் நேராக விஷயத்திற்கு வந்தாள்.
அவளுக்குத் தெரியும் அவன் கோபப்பட்டால் அதன் விளைவு எப்படி இருக்குமென்று?? மற்றவர்களுக்கு முன்னால் அவமானப்பட அவள் விரும்பவில்லை.
ஓஹ்ஹ்ஹ்….அவளா?? பேரு மீ..மீரான்னு ஒருத்தி தானே.சரியான ராங்கிக்காரி அவள்.தமிழ….
“எங்கன்னு கேட்டன்? . அவள் முடிக்கும் முன்னே கேட்டான்.
எதுவும் பேசாமல் இயலாமைக் கோபத்துடன் முன்னே நடந்தாள்.அவனும் தொடர்ந்தான்.
“அவளுக்கு இப்பதான் ஒரு தண்டனை கொடுத்திருக்கன்.அவ என்ன பேசினாள்னு தெரியுமா?? அவ மேல சந்தேகமா இருக்கு.என்கிட்ட விடு நான் விசாரிக்கன்.எத்தனை பேரை பணிய வச்சிருக்கன். இவல்லாம் என்ன சுண்டெலி.”
பேசிக்கொண்டே பிணவறை என எழுதப்பட்டிருக்கும் அந்த அறையின் முன்னால் நின்றாள்.ரொஷானின் முகத்தில் உணர்ச்சி சுத்தமாய் இல்லை.
கதிரையில் இருந்த படி தூங்கி விழுந்து கொணடிருந்தவனிடம்
ஏய்ய்.. என்க, அந்தக் குரலில் பதறியடித்துக் கொண்டு எழுந்தான்.பக்கத்தில் நின்ற ரொஷானின் தோற்றத்தில் பயந்தவன் தன் போதையை மறைக்க முயன்றபடி சார்..!
“மேடம்..நீங்களா? அவ சத்தமே இல்ல.அவளும் செத்துட்டா போல.நீங்க அடிச்ச அடி ரொம்ப பலம் தான்.நானே ஆடிப்போயிட்டன்.”என உளறியபடி சல்யூட் அடித்தான்.
எல்லாத்தையும் சொல்லிட்டானே என அவனை முறைத்தவள் “கதவை திற” என எரிச்சலாய் சொன்னாள்..
அவன் திறந்ததும் தான் தாமதம் அவனைத் தள்ளிவிட்டு உள்ளே சென்றான் ரொஷான்.அங்கே மயங்கிக் கிடந்தாள் மீரா. அங்கிருந்து வந்த மோசமான வாடை அத்தனை பேரின் முகத்தையும் சுழிக்க வைத்தது.அவசரமாய் குனிந்து அவளைத் தூக்கிக் கொண்டு வெளியே வந்தான்.
அவன் முகத்தில் அவ்வளவு கோபம் தெரிந்தது.யாரும் அருகே போகப்பயந்தபடி அவனைத் தொடர்ந்தனர்.
“நயோமி மேடம்..இந்தப் பெண் சாருக்கு சொந்தமோ??” என மெல்லக்கேட்டான்.
“ச்சே...யாருமில்ல குமார்”.என்றாள்
“குமார்….டாக்டர் ஒருத்தரை கூப்பிடுங்க.” என்ற அவன் குரலில் மேலதிகக் கேள்வி எதையும் கேட்காமல் கிட்டத்தட்ட ஓடிப்போனான் குமார்.
நயோமிக்கு எதுவும் சரியாகப்படவில்லை.அதனால் எதுவும் பேச முடியாமல் வேடிக்கை
பார்த்தாள்.காரணமே இல்லாமல் மீராவின் மேல் வன்மம் பெருகியது.என்ன இவ மேல இப்படி ஒரு அக்கறை...செல்லை அமுக்கி காதில் வைத்தபடி வெளியேறினாள்.
ஹலோ… விது??