இமை -2
வித்யாசாகருக்கு வேலை பளு நெட்டித்தள்ளியது. அவனது வீட்டிலும் திருமணம் பற்றிய பேச்சுக்கள்தாம் சமீப காலமாக ஓடிக்கொண்டிருக்கிறது. "திருமண உறவில் எனக்கு நம்பிக்கை விட்டு போனது " என்று ஆயிரம் முறை தினமும் சொல்லிக்கொண்டு இருக்கிறார். தனியே அபார்ட்மெண்டில் அவருக்கென்று பிளாட் உண்டு.அங்கே தான் தங்கி கொண்டு இருந்தார். ஆனால், பெண்ணவள் ,அவள்தான்
"சாகம்பரி" அவளுடன் இருந்த காதல் தருணங்கள் அவரை அங்கே இருக்கவிடாமல் தகிக்க செய்கிறது. அதனாலேயே அந்த பிளாட்டிலிருந்து தங்களது பங்களாவுக்கு வந்து விட்டான்.
இங்கே என்றால் பெற்றவர்கள், சித்தப்பா சித்தி, உடன்பிறப்புக்கள் என்று அனைவருமே விதவிதமாக தங்களுக்கு தெரிந்த விஷயங்களை கொண்டு நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம் திருமணம் பற்றிய பேச்சுக்கள் தாம். அலுத்துப்போய்விட்டது வித்யா சாகருக்குள். எங்காவது சென்று விடலாம் போல ஒரு எண்ணம். எங்கே செல்ல முடியும்?இத்தனை பெரிய தொழில் சாம்ராஜ்யத்தை அவ்வளவு எளிதாக விட முடியாது.
அந்தஸ்த்து,பணம்,பதவி,அங்கீகாரம்,வசதியான வாழ்க்கைமுறை,தேவைக்கு மேலே கூட வேண்டுவது எளிதாக கிடைப்பது என்று இவர்களது சுகம் ஒரு புறம் இருந்தாலும், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இவர்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றன. இந்தக் குடும்பத்தை பொறுத்தவரை, குடும்ப நபர்கள் ஒவ்வொருவரிடமும் நிர்வாகத்தின் ஏதாவது ஒரு பொறுப்பு கொடுக்கப் பட்டிருக்கும். தொழிலில் ஏதாவது ஒன்றை தெரிவு செய்து அதில் பயிற்சி அளிப்பார்கள்.
நினைக்கும்பொழுதே பெருமூச்சு வந்து போனது. தம்பி ராஜீவ் பேசிக்கொண்டிருந்தான்," ஒருமுறை கல்யாண வாழ்க்கை தவறினா இன்னொரு முறையும் தவறிடும்னு சொல்ல முடியாதுண்ணா. பெண்களை பாரேன். பிடிச்சா சொல்லு. பிறகு பேசிக்கலாம். "
அவனிடம் பதில் சொல்ல வார்த்தைகளைத் தேடி களைத்தவனாக வித்யாசாகர் வெறும் தலையசைப்புடன் அவ்விடம் விட்டு நகர்ந்து சென்றான். தனது அறைக்குள் நுழைந்து கொண்டவனுக்கு மூச்சு முட்டியது. கடந்த நான்கு ஆண்டுகளாக தனிமையில் அவன் படும் அவஸ்தை. உடலும் மனமும் அவள்தான் வேண்டும் என்று அலை பாய்கிறது. எந்த பெண்ணை கண்டாலும் சாகம்பரியைதான் தேடுகிறான். இதெல்லாம் பையித்தியக்காரத்தனம் என்று அவனுக்கு நன்றாக தெரியும். இருவரும் எவ்வளவு மனம் ஒப்பி வாழ்த்ந்தார்களோ,பிரியும் பொழுதும் அதே புரிதல்தான்.
அவள் "உங்களை விட்டு போகலாம்னு யோசிச்சேன். அம்மா, அப்பா தம்பின்னு எல்லோரையும் ரொம்பவே மிஸ் பண்றேன். வேலைக்குன்னு இங்கே வந்து மூணு வருஷம் ஆகிடுச்சு. உங்களோட லிவ் இன்ல வாழ ஆரம்பிச்சு எட்டு மாசம் ஆகுது. தப்பு பண்றோமேன்னு கில்டி பீல் இல்ல. பட் , போதுமே! இப்போவெல்லாம் உங்களை மனஸு ரொம்பவே தேடுது.எமோஷனலா உங்களோட அட்டாச் ஆகிடுவேன்னு பயமா இருக்கு. இட்ஸ் நாட் குட் போர் அஸ். உங்க எதிர்பார்ப்பை, விருப்பத்தை உடைச்சிடுவேன்னு பயமா இருக்கு."
கண்களில் உயிரை தேக்கி அவள் பேசியது இப்போதும் பசுமையாய் இருக்கிறது.அதற்குப் பிறகு அவள் வித்யாசாகரை பிரிந்து,அந்த வீட்டை விட்டு சென்று விட்டாள். அவள் வேலை செய்யும் ஹோட்டலுக்கு அவன் அதிகமாக செல்வதில்லை.ஆரம்பத்தில் பங்குதாரர் ஆனா புதிதில் அடிக்கடி செண்டு கொண்டிருந்தான். செல்ல வேண்டி இருந்தது. பிறகு அங்கே முதற்கட்ட வேலைகள் முடிந்தபிறகு நேரம் கிடைக்கும் சமயங்களில் செல்வது தான். அங்கேயும் சரி,எங்கேயும் சரி,வீட்டில் உட்பட அவனும் சாகம்பரியும் ஒன்றாக வாழ்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. ரகசியமாக வைக்கவில்லை.ஆனால்,கண்டுபிடிக்கும் அளவிலும் இல்லை.
நோடீஸ் பீரியட், சாகம்பரிக்கு சென்னையில் வேலை கிடைப்பது என்று அவள் பங்களூருவிலிருந்து கிளம்ப ஐந்து மாதங்கள் ஆனது. அவளை ஹோட்டலுக்கு சென்ற பொழுது தூரத்திலிருந்து பார்த்தது. லேசாக வயிறு மேடிட்டு இருப்பது போல இருக்கவே அருகில் வந்து பார்க்க வேக நடையிட்டு வந்தான் வித்யாசாகர். அதற்குள் அவள் லிப்ட்டில் ஏறிவிட்டாள். அன்று தான் வித்யாசாகர் அவளை கடைசியாக பார்த்தது.
ஆரம்பத்திலேயே அவளது நண்பனும் ஹோட்டல் முதலாளியின் மகனுமான சுந்தர் ,"போனது போகட்டும் சகா. இந்த ஊருல லிவ் இன் ஒன்னும் பெரிய விஷயமெல்லாம் இல்ல. பட், குழந்தை வேணுமா? உன்னோட எதிர்காலம் என்னாகும்?உங்க வீட்டுல ஓர்தடோக்ஸ்னு வேறே சொல்லியிருக்கே. எப்படி ஒத்துப்பாங்க.உனக்கு நாளைக்கே கல்யாணம் செய்யணும்னு சொன்னா குழந்தை பற்றி என்ன சொல்லுவே? குழந்தையை வளர்க்க முடியாது.உன்னோட பேரன்ட்ஸ்கிட்ட குடுத்துட்டு தான் வரணும்னு சொன்னா அப்போ என்ன செய்ய முடியும்? "என்று ஒரு ஆணாக கேள்விக்கணைகளை தொடுத்திருந்தான் சுந்தர்.
அவள் மனமோ, அவரை விட்டு இன்னொருவரை என்னை தொட்டுவிட அனுமதிப்பேனா?"என்றது.நடைமுறை சிக்கல்களை யோசித்து அமைதியாக இருந்துவிட்டாள்.
சுந்தரின் கேள்விகளுக்கு சாகம்பரியிடம் எந்த பதிலும் இல்லை. அவன் கேட்பது அத்தனையும் எதிர்காலத்தில் அவள் எதிர்நோக்கவேண்டிய கேள்விகள் .
அங்கிருந்து வேண்டுமென்றுதான் அவள் ஆறாம் மாதம் கிளம்பியது.எந்த காரணத்தைக் கொண்டும் யாரும் கருவை கலைக்க நிர்பந்திக்க கூடாது என்பதில் வெகு தீவிரமாக இருக்கிறாள். இது அவளது பொக்கிஷம்.
ஸ்வாதி நக்ஷத்திரத்தன்று பெய்யும் மழையின் எந்த துளி சிப்பிக்குள் நுழைகிறதோ அந்த துளி முத்தாகுமாம். அது எவ்வளவு உயர்ந்ததோ சாகம்பரிக்கு தெரியாது. விலைமதிப்பில்லா ஒன்று உண்டு என்றால் அது அவளது கர்ப்பம் தான். குழந்தையை கூட இங்கேயே பெங்களூருவில் பெற்றுக்கொண்டுவிடத்தான் அவளுக்கு விருப்பமே.
ஆனால் வித்யா சாகருக்குத் தெரிந்துவிடும் அபாயம் உண்டு.நண்பன் என்று உடனிருக்கும் சுந்தர் கட்டாயம் அவரிடம் சொல்லிவிடுவான்.ஏற்கனவே,'அவரிடம் சென்று சொல்லப்போகிறேன்.உன் வாழ்க்கை என்னாவது,குழந்தை செய்த பிழை என்ன,இனிஷியல் இல்லாமல் வளரவேண்டிய அவசியம் இல்லை' என்றெல்லாம் சொல்லிக்கொண்டே இருக்கிறான்.கொஞ்சமும் அலுக்காமல்.நண்பனை நினைக்கும்பொழுதே உதட்டில் ஒரு புன்னகை தானாக வந்து அமர்ந்து கொண்டது.
மாதம் தவறாமல் செக் அப் சென்றுவிடுவாள். சென்றது பெரிய மருத்துவமனை.கணவர் பற்றி யாரும் துருவவில்லை.அதுவே அவளுக்கு பெரிய நிம்மதி. அவரை விட்டு வந்த பிறகு தனது எண்ணை மாற்றிவிட்டாள். குழந்தையை காட்டி அவரை வளைத்துப் பிடிப்பதில் அவளுக்கு விருப்பமே இல்லை.காதலில் கசிந்துருகி, நீயில்லாமல் எனக்கு ஒரு நொடியும் நரகம் என்று தானாக வரவேண்டும்.அதுவும் எனக்கே எனக்காக வரவேண்டும்.அதில் எந்த இடைத்தரகரும் கூடாது.இருவருக்குமான பிறக்கப்போகும் குழந்தை கூட இவர்கள் இருவருக்கிடையில் மூன்றாம் நபர்தான் என்று தீர்மானமாக நினைத்தாள்.
சென்னையில் வேலையும் கிடைக்க ,இங்கே நோட்டிஸ் நேரமெல்லாம் முடிந்து,தன்னை நன்றாகவே சுதாரித்துக்கொண்டு தான் பெண் அங்கிருந்து கிளம்பியது.
சுந்தர் அவளை விமானத்தில் சென்று விட சொல்ல , சாகம்பரி தீர்மானமாக மறுத்துவிட்டாள்."இல்ல சுந்தர்,எனக்கு ட்ரெயின்ல வேடிக்கை பார்த்துட்டே போறது ரொம்பவும் பிடிக்கும். பிளைட் ரொம்ப போரடிக்கும். இங்கேந்து ட்ராபிக்ல தேவனஹள்ளி வரைக்கும் போயிட்டு,அங்கே உள்ள செக் இன் முடிச்சு ,வைட்டிங் ஹால்ல வெயிட் செஞ்சு விமானம் ஏறி திரும்ப சென்னை விமானநிலையத்தில் இறங்கி ,வெளியே வந்து ஏதாவது கேப் பிடிச்சு நா வீட்டுக்கு போறதுக்குள்ள,எனக்கு டெலிவரி ஆகிடும் டா.ஜஸ்ட் சில்.நா ட்ரைன்ல தான் கிளம்பறேன் என்றவளை ஒன்றும் செய்ய இயலாமல் பார்த்தவன் தனக்கும் சேர்த்து வந்தே பாரத்தில் டிக்கெட் எடுத்தான்.அவளை சென்னையில் விட்டுவிட்டு ,மீண்டும் வந்தே பாரத்தில் திரும்பி வருவதாக ஏற்பாடு.
"ராட்சசி,உனக்கு நண்பனா இருக்குற கொடுமைக்கு ரொம்பவே வச்சி செய்யுற டி "என்று கோவித்துக்கொண்டான். திரும்பவும் ஒருமுறை "நீ இங்கேயே இருந்திடேன், பார்த்துக்கலாம்" என்ற நண்பனை வாஞ்சையாய் பார்த்து வைத்தாள். கண்கள் குளம் கட்டியது. நீரை கீழே இறங்கவிடாமல் உள்ளிழுத்தவள் ,"என்னோட வாழ்க்கை எபப்டி போகுதுன்னு உனக்கே தெரியும் சுந்தர். அவருக்கு எந்த காரணம் கொண்டும் என்னோட குழந்தை பற்றி தெரியவே கூடாதுன்னு நா நினைக்கிறேன்,இங்கேயே இருந்தா அது பொசிபெல் இல்ல. என்னால முடிஞ்சா வெளிநாட்டுக்குக்கூட போயிருவேன்.அது இப்போதைக்கு முடியாது. அட்லீஸ்ட் என்னோட குடும்பத்துகிட்டேயாவது போறேனே!என்றுவிட்டாள்.
மன பார்த்துடன் சுந்தரும் கூடவே குழந்தையை வயிற்றில் சுமந்துகொண்டு சாகம்பரியும் சென்னை மண்ணை மிதித்தார்கள்.போர்ட்டர் வைத்து அவளை அனுப்பி வாய்த்த பிறகு மீண்டும் அதே ரயிலில் பெங்களூரு வந்து விட்டான் சுந்தர்.
அதற்குப்பிறகு முன்பெல்லாம் தினமும் பேசிக்கொண்டிருந்தவன் அவனது திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது. திருமணத்திற்கு பிறகு மாதத்தில் ஒருநாள் நிச்சயம் அழைத்து விடுகிறான்.அவனது திருமண விழாவுக்கு கூட சாகம்பரி செல்லவில்லை. அங்கே நிச்சயம் அவளது அவர் வந்திருப்பார் என்று தெரியும்.
அதுவும் சரிதான். சுந்தரின் திருமண வரவேற்பில் சாகம்பரி நிச்சயம் கலந்து கொள்வாள். அவளை பார்த்து விடலாம் எண்டு ஆசையாய் வந்த வித்யாசாகரின் கண்கள் அவளை தேடி களைத்துப் போனதை சுந்தர்தான் பார்த்துக்கொண்டே இருந்தானே! மணமகன் என்று அவனிடம் எதையும் சாகர் கேட்டுக்கொள்ளவில்லை.
இவள் வீட்டில் மறந்தும் இந்த குழந்தைக்கு அப்பா 'சுந்தரா' என்று கேட்காதது பெரிய ஆறுதல்.அவர்களுக்குத் தெரியும். கூட பிறந்தவனுக்கு சமமாக சுந்தருடன் பழகுகிறாள் என்று.
எனக்கு நல்ல குஷியாக இருக்கிறது. ஒரு அழகிய கண்ணாமூச்சி ஆட்டத்தை பார்க்கிறேன். இவர்கள் இருவரும் சந்திப்பது என்றோ!
இன்றைய நடப்பில் அவள் சாகம்பரி வெகுவாக மாறிபோனதன் முதல் காரணம் , மற்றவர்களின் கேள்விகள்.அதற்க்கு பதில் சொல்ல முடியவில்லை. தன்னை இறுக்கமாக வைத்துகொண்டாலாவது தன்னிடமிருந்து நகர்ந்து செல்வார்களா என்ற ஆசை. ஆனால்,ஸ்ரீதயா வளரும் பொழுதில் சாகம்பரி பற்றிய பேச்சுக்களும் அடங்காமல் வளர்ந்து கொண்டிருக்கிறது.
மற்றவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் சாகம்பரியின் அப்பா அவர்கள் இத்தனை வருஷங்களாக இருந்த கோயம்பேடு வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு , கிரோம்பேட்டையில் அவரது பெற்றவர்கள் கொடுத்த வீட்டுக்கு குடிபெயர்ந்து விட்டார்கள்.
புது இடம் ,புது சூழ்நிலை .அப்பாவுக்கும் மகளுக்கும் வேலைக்கு செல்வதும் சுலபம் ஆயிற்று.கொஞ்சநாட்கள இவளை பற்றிய விசாரணைகள் இல்லை.பிறகு இன்னமும் திருமணம் ஆகவில்லை. குழந்தை இருக்கிறது என்றவுடன் கேலிப்பேச்சுக்கள்.இவள் இருக்கும் சமயங்களில்," இந்த காலத்து பொண்ணுங்களே இப்படித்தான். என்னோட பெண் இப்படி செஞ்சிருந்தா நடக்கிறது வேறே " என்னும் படியான பேச்சுக்கள்.
இதெல்லாம் போதாது என்று அந்த தெருவில் இருக்கும் சில பெண்கள்,"தப்பா எடுக்காதீங்க.பொண்ணுக்கு உங்களுக்கு பிறகு பாதுகாப்பு வேணும். உண்மையை சொல்லியோ ,இல்ல மறைச்சோ ஒரு நல்ல பையனா பார்த்து கல்யாணம் செஞ்சு வைச்சிடுங்க. அடுத்து ஒரு பையன் வேறே இருக்கனே.அவனுக்கு நல்ல குடும்பத்துலேந்து பொண்ணு எடுக்க வேணாவா " என்று இலவசமாக கொடுத்த அறிவுரையில் இப்போது சிக்கி தவிப்பது என்னவோ நம் சாகம்பரிதான்.
சாகம்பரி பற்றி என்ன நினைக்கிறீங்க ,சொல்லிட்டு போங்க .
Author: ரோசி கஜன்
Article Title: இமைக்க மறந்தேன் உயிரே - 2
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: இமைக்க மறந்தேன் உயிரே - 2
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.