• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

உன் இதயத்தில் என் கையெழுத்து - 1

Vishakini

Moderator
Staff member


அத்தியாயம் 01
பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த அந்த திருமண மண்டபத்தில், “கெட்டி மேளம் கெட்டி மேளம்” என ஐயர் சொல்ல ஐயர் கொடுத்த மக்கள் நானைப் பெற்று தன்னருகில் பதுமையான அமர்ந்திருக்கும் பெண்ணின் கழுத்தில். மூன்று முடிச்சுட்டு. தன் சரிபாதியாக்கிக் கொண்டான் நவாதீரன். நம் நாயகன். திருமண சடங்குகளும். அனைத்தும் விடைபெற மறுபுறம் விருந்தும் தடல்புடலாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.
தன்னருகில் இருப்பவளை என்னவென்று பாராது கடமையை கண்ணாக அனைத்து சம்பிரதாயங்களையும் சிரமேற்கொண்டு செய்து கொண்டிருந்தான் நவாதீரன். அனைத்தும் சமுதாயங்களும் முடிந்ததும். பெண்ணும் மாப்பிள்ளையும் ஒரு காரிலும் ஏனையவர்கள் மறுகாரிலும். மணமகணின் வீட்டுக்கு புறப்பட்டனர்.
வீட்டுக்கு வந்து தம்பதியினரை ஆரத்தி எடுத்து வரவேற்றார். மணமகனின் தாய். மனோஜா. வீட்டிலும் விளக்கேற்றி மிகுதி சம்பிரதாயங்களும் முடிந்ததும்.
“ஹம்சா இந்த ரூம்ல ரெஸ்ட் எடுத்துக்கோமா” என்றார் மனோஜா. அவர் காட்டிய அறைக்குள் ஹம்சாவும் நுழைந்து கொண்டாள்.
வாசுகி தேவராஜ் தம்பதிக்கு அழகிய இரு பெண் பிள்ளைகள் தேவராஜ் அதே ஊரில் சுப்பர் மார்கெட் ஒன்றை வைத்துள்ளார்.அத்தோடு விவசாயமும் செய்கிறார். மூத்த பெண் ஹம்சானந்தி கல்லூரிப் படிப்பை முடித்த கையோடு அவளுக்கு வரன் பார்த்தனர். ஊரிலேயே நல்ல படித்த பையனை சீர் சிறப்புடன் திருமணம் செய்து வைத்தனர்.அவளது திருமண வாழ்க்கை சந்தோசம் என்பதே இல்லை பல கொடுமைகளை புகுந்த வீட்டில் அனுபவித்தாள்.அவள் தற்கொலை செய்து கொள்ள எண்ணி வீட்டில் தூக்குப் போடவே அயல்வீட்டார் காப்பாற்றி மீண்டும் தனது தாய் தந்தையுடன் இணைந்து விவாகரத்தும் பெற்று விட்டாள்.
இளையவள் மிதிலா தற்போது தான் கல்லூரியில் பயில்கிறாள். வாசுகியின் அண்ணன் பிரகாஷ். மனோஜா என்பவரை திருமணம் செய்து சுவிச்சர்லாந்தில் செட்டலாகிவிட்டார். இவர்களுக்கு இரு புதல்வர்கள் மூத்தவன் நவாதீரன்; இளையவன் ரக்ஷன்.
மூத்தவன் நவாதீரன் தன்னோடு ஒன்றாகப் படித்த அந் நாட்டு பெண்னைக் காதலித்து திரமணமும் செய்து கொண்டான். சந்தோசமாகச் சென்ற அவன் வாழ்க்கையில் புயல் வீசத் தொடங்கியது. அவனது மனைவி அன்ரியாவுக்கு அவள் வேலை செய்யும் அலுவலகத்தில் புதிதாகவொரு காதல் மலர்ந்தது. அவள் வேலை விட்டு நேரஞ் சென்று வீட்டிற்கு வருவது அவளது புதுக் காதலனோடு ஊர் சுற்றுவது அறிந்த நவாதீரன் உடைந்து போனான். தினமும் அன்ரியாவுடன் பிரச்சினை அவளை இழுத்துப்பிடிக்க முயல அவளோ விவாகரத்திற்கு விண்ணப்பித்தாள். தன் காதல் பொய்த்துப் போனதை ஏற்றுக் கொள்ள முடியாதவன் தனக்குள் இருகிப் போனான். அதே வேளை அன்ரியா விரும்பிய விவாகரத்தையும் கொடுத்தான்.
எதிலும் பற்றில்லாது இருந்த மகனை என்ன செய்வதைன்று தெரியாது தவிர்த மனோஜா. பிரகாஷிடம் அவரது தங்கை மகளுக்கு திருமணம் செய்ய் பிரகாஷிடம் கேட்க அவருக்கும் மகனின் நிலை புரிய அவரும் சம்மதித்தார்.
இதற்கிடையில் பல சம்பவங்கள் கடந்து இதோ இன்று இருவரும் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.
அறைக்குள் தூக்கத்தில் இருந்த ஹம்சாவை எழுப்பினார் வாசுகி. “ஹம்சா எழுந்திருடா. இந்தா காஃபிய குடிச்சிட்டு குளி”என்றவர். வெளியேற கொட்டாவியை வெளியிட்டபடி குணிந்தவளுக்கு அப்போது தனக்கு திருமணம் முடிந்தது நினைவில் வந்தது. அக்கா இந்த போட்டசப் பாரு தீரன் மாடா செம ஹேன்சமா இருக்கார் என்றபடி அறையினுள் நுழைந்தாள் மிதிலா.
வெளியே மனோஜாவோடு வீட்டிற்கு வந்த உறவினர்களை கவணித்துக் கொள்ள உதவியாக இருந்தார் வாசுகி. மனோஜாவின் வீடு தான் அது அவர்கள் ஊரிற்கு வரும் போது மாத்திரமே வீட்டை சுத்தமாக்கி பயன்படுத்துவர். மற்றும் படி வீட்டை தேவராஜ் தான் ஆள் வைத்து பார்த்துக் கொள்வார். திருமணம் என்பதால் வீட்டை அதற்கேற்ப அலங்கரித்து வைத்திருந்தார் தேவராஜ். மனோஜாவும் பிரகாசும் திரமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பே வந்து வேலைகளை பார்க்கத் தொடங்கினர். நவாதீரன் திருமணத்திற்கு முதல் நாள் இரவு தான் வந்திறங்கினான்
நவாதீரனும் தனது அறைக்குச் சென்றவன் கட்டிலில் சாய்ந்து கொண்டவனுக்கோ என்ன உணர்வென்றே தெரியவில்லை இரண்டாவது திருமணம் என்பதே அவனுக்கு ஒரு மாதிரி உணர்வைத் தந்தது. ஹம்சா பற்றி எதுவுமே தெரியாது. ஊரிற்கு வரும் போதெல்லாம் சிறு வயதில் அவளோடு ஆடியோடி விளையாடியெல்லாம் இருக்கிறான். ஆனால் ஓரளவு வயது தெரிந்ததும் விலகத் தொடங்கி விட்டான். இன்னும் சொல்லப் போனால் தாய் தந்தை ஊரிற்கு வந்தாலும் பெரும் பாலும் வரமாட்டான் ஆனால் ஒவ்வொரு வருடமுமு; ஊர்த்திருவிழாவிற்கு வருவான். அனைத்தைளும் எண்ணியபடி இருந்தவன் அப்படியே தூங்கிப் போனவன் கண்கிழித்ததென்னவோ வெளியே யாரொ சத்தமாகக் கதைக்கும் சத்தத்தில் தான்.தனது பெட்டியில் இருந்த உடையொன்றை எடுத்தவன் அறையோடு இருந்த குளியலறைக்குள் நுழைந்து கொண்டான். சிறிது நேரத்தின் குளித்து உலராடை அணிந்தவன் அறையை விட்டு வெளியேறினான்.
“ஏங்க ரிட்டன் டிக்கட்ஸ் போட்டுட்டீங்களா? என பிரகாஷிடம் கேட்க “ என்ன மனோ அவசரம் உனக்கு “ இன்டைக்கு தான் கல்யாணம் முடிஞ்சிருக்கு அதுக்குள்ள போகனும் என்ற” அதற்கு மனோஜாவோ இங்க பாருங்க என தனது கை கால்களைக் காட்ட அதுவோ அவருக்கு உடலில் ஆங்காங்கு சிவப்பு நிற கொப்பளங்கள் இருந்தன. மனோஜாவிற்கோ இங்கத்தேய க்கிளைமேட் ஒத்துவரவில்லை. அவரோ “ நவாதீரன் வரட்டும் நாம போவம் என்றார்.அப்போது அவர்களது அறையிக்கு வெளியே இருந்து “ அம்மா” என அழைத்தான் நவாதீரன் “ உள்ள வாடா என அழைக்க உள்ளே வந்த நவாதீரன் “ அப்பா சனிக்கிழமை தான் டிக்கட்ஸ் அபைளபிளா இருக்கு புக் பண்ணிடன் என்றான் தந்தையைப் பார்த்தபடி.
அவரும் பெருமூச்சுடன் ஹம்சாக்கு பாஸ்போர்ட் எல்லாம் எடுக்கனும்டா . “ என்ன அவளையும் அழைச்சிட்டுப் போகனுமா? “ அதற்கு பிரகாஷோ நீ அவளத் தானே கல்யாணம் பண்ணிருக்க” என்றார் அழுத்தமாக. மனோஜாவை முறைத்தவர் வெளியேற “ நான் பேசுறங்க” என்றார் மனோஜா பதறியபடி. ஆம் ஹம்சாவை திருமணம் செய்து வைக்க அவர்பட்டபாடு அவருக்கத் தெரியும் தானே “ மகனிடம் என்ன நவாதீரன் இது “ இல்லமா அவ ஒரு பட்டிக்காடு எப்படிமா” என்றான் தான் சொல்வதை தந்தை பரிந்து கொள்ள மாட்டென் என்கிறாரே எனும் ஆற்றாமையினால். உண்மையில் அவன் போக்கு சமீப காலமாக வித்தியாசமாக இருக்கவே ஹம்சாவை திருமணம் செய்து வைக்க பிரகாஷ் சம்மதித்தார். ஆத்தோடு ஹம்சாவின் வாழ்கை பற்றி தெரிந்ததால் தாய் மாமனால் தாங்கவே முடியவில்லை… “ மனோஜாவோ நவாதீரன் அவ வந்தா நம்ம கூட தானே இருக்கப் போறா வேற எங்க போற அவ அவளால உனக்கு எந்த ஒரு அவமானமுமு; இல்ல அப்படியும் யாரும் கேட்டா வேலைக்கு கூட்டி வந்திருக்கம்னு சொல்லலாம் நீ பிரியா விடு” என்றார்.
குளித்து உடை மாற்றிய ஹம்சாவோ கண்ணாடி முன்நின்று குங்குமத்தை வைத்தவளுக்கோ என்ன உணர்வென்றே தெரியவில்லை தனது நீண்ட கூந்தலை பின்னலிட்டவள் அறையை விட்டு வெறியே வர திருமணத்திற்கு வந்த உறவினர்கள் சிலர் எஞ்சியிருந்தனர். மிதிலாவும் திருமணத்திற்கு வந்த தனது நண்பர்களுடன் ஐக்கியமாகிவிட்டாள்.
“ஹம்சா மாப்பிள்ளைய அழைச்சிட்டு வா சாப்பிடலாம்” என்றார் வாசுகி. ஹாலில் இருந்த தேவராஜையும் பிரகாசையும் உணவுன்ன அழைத்தார். “அண்ணா அண்ணி எங்க” பிராகாசோ “மனோ என குரல் கொடுக்க அந்த நேரத்திலும் கலையாத மேக்கப்புடன் வந்தார் அவர்.
ஹம்சாவும் நவாதீரன்வைத் தேடி வெளியே வர அவனும் வெளி வெராண்டாவில் அமர்ந்து அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தான்.அவளும் அவனருகில் வந்தவளுக்கு அவனை என்ன சொல்லி அழைப்பதென்று தடுமாற்றம் அவளது கால்கொலுசுச் சத்தத்தில் அவள் புறம் பார்வையைத் திருப்ப தலையைக் குனிந்தபடி “சாப்பாடு ரெடியாகிட்டு சாப்பிடலாம்” என்றாள். அவனும் பெருமூச்சுடன் “ரக்ஷா அப்புறம் பேசுரன் என அலைபேசியை துண்டித்தது விட்டு எழுந்தவன் வீட்டினுள் நுழைந்தான். ரக்ஷனுக்கு கல்லூரியில் லீவு கிடைக்காததால்; அவனால் அண்ணனின் திருமணத்திற்கு வரமுடியாத நிலை அவனைத் தொடர்ந்து உள்ளே வந்தவர்கள் சாப்பாட்டு மேசையை நோக்கிச் சென்றனர். இங்கு மனோஜா பிரகாஷ் தேவராஜ் வாசுகி மதிலா மற்றும் சில நெருங்கிய உறவினர்கள் உணவுண்டு கொண்டிருந்தனர்.
“தம்பி உட்காருங்க ஹம்சா தம்பிக்கு சாப்பாடு பரிமாறு” என்றார் வாசுகி. ஹம்சாவும் கைகள் நடுங்க தோசையையும் சட்னியையும் வைத்தாள் மேலும் அவள் தோசை வைக்க அவனோ போதும் ன்றவன் இரண்டு தோசையோடு எழுந்து விட்டவன் கைகழுவச் சென்றான். ஹம்சாவின் உறவினரொருவர் ஹ்சாவிடம் “ மாப்பிளைய அனுசரிச்சி நடந்துக்க ஓஓஓஓ…..முதலிரவொன்னும் உனக்கு புதிசில்லையே, மற்றவளோ ஏண்டி இது ரெண்டாவது இரவுடி” என ஹ்சாவை வைத்தே அவர்கள் நக்கலாய் பேச ஹம்சாவிற்கோ கண்கள் கூட கலங்கிவிட்டுது அவர்கள் நின்றதற்கு மறுபுறம் நின்ற தீரனுக்கோ அவர்கள் பேசியது காதில் விழுந்துது. ஓரு நிமிடம் கைகளை கழுவுவதை நிறுத்தியவன் மீண்டும் கைகளைக் கழுவிக் கொண்டு அறைக்குள் சென்று விட்டான். அம்மா துக்கம் வருது என மிதிலா அவர்களது வீட்டிற்கு போய்விட்டாள் மனோஜாவின் எதிர்வீடு தான் வாசுகியின் வீடு
ஊரில் யாருக்குமே தீரனின் முதல் திருமணம் பற்றித் தெரியாது. ஆதலால் தான் சுவிச்சர்லாந்து மாப்பிள்ளை அவளும் அங்கே சென்று விடுவாள் என அவள் அவள் மீது பொறாமை கொண்டு அவள் மனம் வேதனைப் பட பேசினர். உறவினர்களும் மெல்ல மெல்லக் கலைய அனைவரும் தத்தமது அறைக்கு சென்று விட்டனர். உறவுப் பெண்கள் கதைத்ததில் வேதனை கொண்ட ஹம்சா அப்படியே தாய்க்கு உதவி செய்து கொண்டிருந்தாள். “ஹம்சா தம்பி தனிய நான் பார்த்ததுக்கிறன் நீ போமா என்றார். மனோஜாவும் ஹம்சா நீ போய்த் தூங்குமா நாங்க பார்த்துக்கிறம் என்றார் அவளும் சங்கடமாக அவனறைக்குள் நுழைய தீரனோ ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான். அவன் முகத்தை சில நிமிடம’ பார்த்தவள் அவனருகில் தூங்கி விட்டாள். வாசுகியும் தேவராஜனும் மனநிறைவுடன் அருகில் உள்ள அவர்கள் வீட்டிற்குச் சென்றனர்.
 
Top Bottom