• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

என்னைக் களவாட வந்தவளே - 10

Vishakini

Moderator
Staff member



அத்தியாயம் 10 :



இளஞ்செழியனுக்கு திருமண வயது வந்ததும், அவனுக்கு ஜெயராணியை திருமணம் முடித்து வைக்க பெரியவர்கள் எண்ணினர்.


கதிரேசனும் தனலட்சுமியும் இளஞ்செழியனிடம் இதைப் பற்றி கேட்க, அருகில் உணவு மேசையில் அமர்ந்து கொண்டிருந்த பொற்செழியனின் கை உணவை உண்ணாமல் அப்படியே நின்று விட்டது.


அவனை ஓரக்கண்ணால் பார்த்த இளஞ்செழியன் தன் தந்தையின் பக்கம் திரும்பி அமர்ந்து, "ஜெயராணிய பூங்கொடி மாதிரிதான் பார்க்கிறேன், அவள ஒரு நாள் கூட அப்படி நான் நினைத்துக் கூட பார்த்ததில்லை. எனக்கு கல்யாணமே வேண்டாம்!"



"இதோ, பக்கத்துல அப்பாவி மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு உட்கார்ந்து இருக்கானே, இவனுக்கு ஜெயராணியை கல்யாணம் பண்ணி வைங்கப்பா, ரொம்ப நல்லா பார்த்துப்பான்" என்று இளஞ்செழியன் கூறினான்.


இதைக் கேட்ட பொற்செழியனுக்கு வானத்தில் பறப்பது போல் இருந்தது. அவனுக்கு வெட்கம் வேறு வந்து தொலைத்தது. தலையை நிமிர்த்தவே இல்லை.


தனலட்சுமியும் கதிரேசனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.


கதிரேசன், "ஏன்டா உன்னை விட்டுட்டு சின்னவனுக்கு எப்படி கல்யாணம் பண்றது? மூத்தவனுக்கு கல்யாணம் பண்ணி பேரன் பேத்தி எல்லாம் பார்த்தாச்சு.


அதே மாதிரி உங்க இரண்டு பேருக்கும் கல்யாணத்தை முடித்து பேரன் பேத்தியைப் பார்த்துவிட்டால் தான் நாங்க நிம்மதியா கண்ண மூடுவோம்" என்றார்.


"அப்பா உங்க ரெண்டு பேருக்கும் ஒன்னும் ஆகாது.இப்போ என்ன இரண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணனும் அவ்வளவுதானே?", சரி நானும் கல்யாணம் பண்ணிக்கிறேன்.


முதல்ல போய் ஜெயராணியை தம்பிக்கு பேசி முடிவு பண்ணிட்டு வாங்க" எனக் கூறிவிட்டு இளஞ்செழியன் எழுந்து சென்றான்.


தனலட்சுமி பொற்செழியனைப் பார்த்து, "ஏன்டா அவன் போறான், நீ ஒன்னுமே சொல்லாமல் உட்கார்ந்து இருக்கியே" என கடிந்தார்.


அவன் அவர்கள் இருவரையும் தீர்க்கமாகப் பார்த்து, "எனக்கு கல்யாணம்னு ஒன்னு நடந்தால் இந்த ஜென்மத்துல ஜெயாவை மட்டும்தான் கட்டுவேன். அவ மட்டும்தான் என் மனசுல இருக்கா" எனக் கூறிவிட்டு எழுந்து சென்றுவிட்டான்.


இதைக் கேட்ட இருவருக்கும் ஆச்சரியம்! "இவன் மனசுல இப்படி ஒரு நினைப்பு இருக்குன்னு தெரியாம இருந்துட்டோமே தனா" என கூறி கதிரேசன் வருந்தினார்.


"சரி விடுங்க, இப்போவாச்சும் மனசுல உள்ளதை சொன்னான்ல, அதுவே போதும். நம்ம அண்ணி அண்ணா கிட்ட போய் பேசுவோம்" என கூறி அவரைத் தேற்றினார் தனலட்சுமி.



"குயிலு கருங்கயிலு
மாமன் மனக்குயிலு
கோலம் போடும் பாட்டாலே....

மயிலு இளமயிலு
மாமன் கவி குயிலு
ராகம் பாடும் கேட்டாலே.....
சேதி சொல்லும் பாட்டாலே...


ஒன்ன எண்ணி நானே
உள்ளம் வாடிப் போனேன்.... கண்ணிப் பொண்ணு தானே
என் மாமனே என் மாமனே....

ஒத்தையில அத்த மக
ஒன்ன நெனச்சி ரசிச்ச மக....

கண்ணு ரெண்டும் மூடலையே
கால நேரம் கூடலையே ....!"


செல்போனில் பாட்டு மெல்ல கசிந்து கொண்டிருந்தது.

கட்டிலில் படுத்திருந்த ஜெயராணி, அந்த பாடலை கண்களை மூடி ரசித்து கொண்டிருந்தாள். அந்த மாமன் யாருன்னு நமக்கு தெரியாதா?...


அன்று ஞாயிற்றுக்கிழமை அனைவரும் வீட்டில் தான் இருந்தனர். இளமாறன் அவனது அறையில் அமர்ந்து தென்னந்தோப்பு, மாந்தோப்பு என அந்த வார வரவு செலவுகளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அப்பொழுது வாசலில் சத்தம் கேட்க எழுந்து வந்தான். அவனின் அத்தையின் மொத்த குடும்பமும் வந்து கொண்டிருந்தது. ஒரு நொடி வியப்பில் கண்கள் விரிய நின்றவன், பின்பு சுதாரித்து அனைவரையும் வரவேற்று அமர வைத்தான்.


அவனைப் பார்த்த தூரிகாவும், மிதுனும் மாமாவிடம் தாவினர். இருவரையும் பாசத்துடன் அணைத்து முத்தமிட்டான்.

ஜெயராணியும் சத்தம் கேட்டு அறையை விட்டு வெளியே வந்தாள்.

சுப்பிரமணியும் முருகவள்ளியும் கூட வந்து அமர்ந்தனர்.
கதிரேசனே முதலில் பேச்சைத் தொடங்கினார்.

"மச்சான் நம்ம இளஞ்செழியனுக்கும், பொற்செழியனுக்கும் சேர்த்தே ஒண்ணா கல்யாணத்தை வைச்சிடலாம்னு இருக்கேன். நீங்க என்ன சொல்றீங்க?" என சுப்பிரமணியிடம் கேட்டார்.


"தாராளமா மச்சான், இரண்டு பேருக்கும் நல்லபடியா கல்யாணத்தை பண்ணி வைப்போம்" என முகம் மலர கூறினார் சுப்பிரமணி.


"அதுக்குத்தான்மா, நம்ம பொற்செழியனுக்கு ஜெயராணியைக் கேட்டு வந்துருக்கோம்" என கதிரேசன் கூற முருகவள்ளியின் முகத்தில் குழப்ப ரேகைகள் ஓடின.


அதைப் புரிந்த தனலட்சுமி, "இளஞ்செழியனுக்குச் சொந்தத்தில் பெண் தேடுவோம். இந்தச் சின்னவன் ஜெயாவைத் தவிர வேற யாரையும் கட்ட மாட்டானாம், அவன் மனசுல அவ மட்டும் தான் இருக்காளாம்" என்று அவன் வீட்டில் சொன்னதை கூறிச் சிரித்தார்.


ஜெயாவின் தலை உடனே நிமிர்ந்து பொற்செழியனைப் பார்த்தது. அவனும் இவளைப் பார்த்து கண்ணடித்து விட்டுத் தலையைக் கோதினான்.



ஜெயராணி வெட்கம் தாளாமல் அறைக்குள் ஓடிவிட்டாள். அதைப் பார்த்த பூங்கொடியும் சிரித்துவிட்டு அவளுடன் அறைக்குள் சென்றாள்.


இளமாறனிடம் ஏக்க பெருமூச்சு கிளம்பியது. நம்மள விட சின்னவனுக்கு கல்யாணம், நம்மள இந்த வீட்ல கண்டுக்கவே மாட்டாங்க என மனதில் பொருமினான்.


இளமாறன் ஒரு நிமிடம் தயங்கினாலும், தன் நண்பனாக இருப்பவனுக்கே தன் தங்கை மணமாகி போவது அவனுக்கு மகிழ்ச்சியைத் தந்தது.


"சரி மாமா, கல்யாணத்தை சிறப்பா முடிச்சிடுவோம்" என்றான்.

சுப்பிரமணியும் முருகவள்ளியும் மகிழ்ச்சியாக திருமண விஷயம் பற்றி பேச ஆரம்பித்தனர்.


அப்பொழுது இளஞ்செழியனின் அலைபேசிக்கு அழைப்பு வந்தது. அதைப் பார்த்து கண்களை விரித்தான்.


"இதோ வரேன்" என எழுந்து வெளியில் சென்றான். அவன் கல்லூரியில் படிக்கும் போது தீபிகா என்ற பெண்ணை மூன்று வருடமாகக் காதலித்தான்.


இப்போது அவர்கள் காதலிக்க ஆரம்பித்து பத்து ஆண்டுகள் நிறைவடையப் போகிறது.

அவளின் வீட்டில் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சில மன வருத்தங்களால் இருவரும் சில வருடங்களாகப் பேசிக் கொள்ளவில்லை.


இப்பொழுது அவள் தான் அழைத்து கொண்டிருந்தாள். அவளின் பெயரைப் பார்த்ததும் இவனுக்கு விழிகள் லேசாகப் பனித்தன. உடனே அழைப்பை ஏற்று காதில் வைத்தான்.


அவள் அந்தப் பக்கம் "செழியன்" என அழைத்த ஒற்றை அழைப்பில் இவனுக்கு மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறந்தன.


வார்த்தைகள் வர மறுத்தன. ம்ம்... என தொண்டையை செருமினான்.


"என்ன செழியன் என்ன நியாபகம் இருக்கா? "என அழுகையுடன் தீபிகாவின் குரல் கேட்டது.

அவளின் அழுகையில் மனம் கரைந்தவன்.

"உன்ன எப்போடி மறந்தேன், நியாபகம் இருக்கான்னு கேக்குற. என் உலகமே நீதானடி, உனக்கே அது தெரியாதா" என குரல் கமர கேட்டான்.


நீ அழுதா எனக்குப் பிடிக்காதுன்னு உனக்குத் தெரியாதா?" என அதட்டினான்.


அதில் தீபிகா கண்களை வேகமாக துடைத்து கொண்டாள்.

"செழியன், இங்க வீட்டில் நம்ம திருமணத்திற்குச் சம்மதம் சொல்லிட்டாங்க. நீங்க உங்க வீட்டில் பேசிட்டு எல்லாரையும் அழைச்சிட்டு வாங்க" என கண்கள் மின்னக் கூறினாள்.

"செழியன் பத்து வருஷமா இதுக்கு தான் காத்திட்டு இருந்தோம் . இப்போ அது நடக்க போகுது".

உங்கள எனக்கு பாக்கனும் போல இருக்கு என கூறினாள் தீபிகா.


"விளையாடாதே தீபி, உண்மையா சொல்லு, எனக்கு நம்பவே முடியலை" என்றவன், உடனே காணொளி அழைப்பில் அவளைப் அழைத்திருந்தான்.

இருவருக்கும் கண்கள் கலங்கியது. வார்த்தைகளே தேவைப்படவில்லை. அவர்களின் ஆனந்தத்தைப் பூரிப்பை விளக்க வார்த்தைகள் இல்லாமலே பார்த்துக் கொண்டிருந்தனர்.



இளஞ்செழியனுக்கு இப்பொழுதே அவளை நேரில் சென்று இருக்கமாக கட்டி அணைத்து முகம் முழுதும் முத்தமிட கைகள் பரபரத்தன. அதனை அவளிடமும் கூறினான்.

அதைக் கேட்டவளுக்கு முகத்தை எங்கே கொண்டு வைப்பது என தெரியாமல் கைகளால் முகத்தை முடினாள்.

அந்த பக்கம் அவனின் சிரிப்பு சத்தம் காதில் வந்து விழுந்தன. 'போங்க செழியன்!' என வெட்கத்துடன் கூறிவிட்டு அழைப்பை துண்டித்தாள்.


இருவரும் காதலித்தாலும் கண்ணியமாக பேசி கொள்வர்கள். அவன் அவளின் கைகளை கூட தொடமாட்டான்.

அப்படி இருப்பவன், இப்போது இப்படி எல்லாம் பேசினாள் அவனும் என்னதான் செய்வாள்.

இளஞ்செழியன் மகிழ்ச்சியுடன் வீட்டிற்குள் நுழைந்தான்...
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom