• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

என்னைக் களவாட வந்தவளே - 12

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம் 12:



வெள்ளிக்கிழமை, இளஞ்செழியனுக்கு பெண் பார்க்க அனைவரும் கிளம்பினர்.

ஜெயராணியும், பூங்கொடியும் இப்பொழுது வர வேண்டாம் என வேலைக்கு அனுப்பி வைத்தனர்.


மற்ற இரண்டு குடும்பங்களும் இரு கார்களில் கோயம்புத்தூரை நோக்கி பெண் வீட்டிற்குச் சென்றனர்.


பெண்ணின் வீடு, இவர்களின் வீட்டை விட பெரியதாகவும், பெண் வீட்டினர் இவர்களை விட வசதி படைத்தவர்களாகவும் இருந்தனர்.

இவர்கள் வந்ததும் இன்முகமாக வந்து வரவேற்றனர் தீபிகாவின் பெற்றோரான இளங்கோவன் - கோமதி தம்பதியினர்.


தீபிகா அவளின் அறையில் பரபரப்பாக கிளம்பிக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே அறைக்குள் நுழைந்தாள், அவளின் அத்தை மகள் பவித்ரா.


"அடியேய தீபி! ரொம்ப பரபரப்பா கிளம்பாதடி. இன்னைக்கு உன்ன பொண்ணு பார்க்க தான் வரேன்னு சொன்னாங்க.

எனக்கு தெரியாம உனக்கு இன்னைக்கு கல்யாணமே பண்ண போறாங்களா?" என அவள் கன்னத்தில் இடித்தாள்.


"ஏண்டி பவி, நீ வேற. எனக்கே பயத்துல என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சிட்டு
இருக்கேன்" என புலம்பினாள், தீபிகா.


"பார்த்தா அப்படி தெரியலையே" என அவளை மார்க்கமாக ஒரு பார்வை பார்த்து விட்டு, "சரி பயப்படாத.

உனக்கும் அண்ணாவுக்கும் கூடிய சீக்கிரம் எந்த பிரச்சனையும் இல்லாம கல்யாணம் நடக்கும்" என அவளை அணைத்து அவளின் பதட்டத்தைக் குறைத்தாள்.


வீட்டிற்குள் நுழைந்ததும் பாதி ஊரே உள்ளே இருப்பது போல் கதிரேசன், சுப்ரமணி குடும்பத்தினர் திகைத்தனர். அத்தனை பேரும் பெண் வீட்டு சொந்தங்கள்.

"இங்கே பெண் வீட்டினரோ நான்கு ஆண்கள் ஒரே போல் முக ஜாடையில் வரவும், யார் மாப்பிள்ளை என்று தெரியாமல் குழம்பினர்.


இளமாறன் வாங்கி வந்திருந்த பூங்கொத்தை இளஞ்செழியன் கையில் திணித்தான். "இவன் தான் மாப்பிள்ளை" என கூறும் விதமாக...


இரு வீட்டினரும் தங்களை அறிமுகம் செய்து கொண்டனர். பெண்ணின் தந்தை இளங்கோவன், தன் தங்கை மாலா, அவரின் கணவர் கலையரசன் என அனைவரையும் அறிமுகம் செய்து வைத்தார்.



இளஞ்செழியனுக்கு பொறுமை பறந்து கொண்டிருந்தது. "எப்போ தான்பா என் ஆள கண்ணுல காட்டுவீங்க?" என்ற பாவனையில் கடுப்புடன் அமர்ந்திருந்தான்.


அவனைப் பார்த்து இளமாறனும் பொற்செழியனும் நமட்டுச் சிரிப்பு சிரித்தனர்.


"பொண்ண கொஞ்சம் வரச் சொல்லுங்களேன்" என அவன் வயிற்றில் பாலை வார்த்தார், அவனின் அத்தை முருகவள்ளி. தீபிகாவின் அத்தை மாலா, அவளை அழைத்து வந்து அனைவருக்கும் தேநீர் கொடுக்க சொன்னார்.


குனிந்த தலை நிமிராமல் அனைவருக்கும் தேநீர் கொடுத்தாள். இளஞ்செழியன் டம்ளரை எடுக்கும் போது இருவரும் காதலிக்கும் போது அவள் அணிவித்து விட்ட கைசெயின் அவளைப் பார்த்து டாலடித்தது.

உடனே நிமிர்ந்து பார்த்தாள் தீபிகா. அவனும் அவளைத் தான் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவளுக்கு சந்தோஷத்தில் கண்கள் கலங்கின. அவனுக்கும் விழியோரம் ஈரம் கசிந்தது.


அவர்கள் இருவரையும் பார்த்த அனைவருக்கும் ஒரு நிறைவான புன்னகை அரும்பியது. இளஞ்செழியன் அருகில் இருந்த மிதுன், "சித்தப்பா சித்திய பாத்தது போதும் டம்ளர எடு" என சத்தமாக கூறினான்.

அதில் அங்கே சிரிப்பலை கிளம்பியது. மிதுன் கத்தியதில் இளஞ்செழியன் வேகமாக தேநீரை எடுத்துப் பருகினான். தீபிகாவும் சிரித்துக் கொண்டே நகர்ந்தாள்.


பின்பு ஒரு நல்ல நாளில் அடுத்த மாதம் நிச்சயதார்த்தம் வைத்து கொள்ளலாம் என பேசி முடித்து விட்டு, மாப்பிள்ளை வீட்டினர் கிளம்ப ஆயத்தமாகினர்.


அதற்கு மேல் பொறுமை இழந்த இளஞ்செழியன், தன் அண்ணி அல்லிராணியின் காதில் மெல்ல முணுமுணுத்தான்.

அல்லிராணி அவனை முறைத்து விட்டு, "பொண்ணும் மாப்பிள்ளையும் கொஞ்சம் தனியா பேசட்டுமே?" என பெண் வீட்டினரைப் பார்த்துப் பாவமாக கேட்டாள்.


இளங்கோவன், கோமதியை பார்க்க, அவரின் தலை சம்மதமாக ஆடியது.

"சரிம்மா! பின்னாடி பக்கம் தோட்டத்துல போய் பேசிட்டு வரட்டும்" என கூறிவிட்டு, பவித்ராவிடம் கூடவே தீபிகாவை அழைத்து போக சொன்னார்.


தீபிகாவும் இளஞ்செழியனும் பேசாமல் பார்த்துக் கொண்டே இருந்தனர்.

பின்புறம் தொண்டையைச் செருமும் சத்தம் கேட்டு செழியன் திரும்பிப் பார்க்க, "கொழுந்தனாரே! காலுல விழுகாத குறையா பேச பர்மிஷன் வாங்கிக் கொடுத்தா, இப்படி பாத்துட்டே இருந்தா எப்படி? இன்னும் 10 நிமிஷம் தான் உங்களுக்கு டைம் இருக்கு" என அவனை வம்பித்தாள், அல்லிராணி.


"சரிங்க அண்ணியாரே! கொஞ்சம் ஓரமா போய் நில்லுங்க. அப்படியே போகும் போது இந்த தங்கச்சியையும் கூட்டிட்டு போங்க" என பவித்ராவையும் அழைத்துப் போக சொன்னான்.

அவனைப் பார்த்து சிரித்த அல்லி, பவித்ராவை அழைத்துக் கொண்டு சென்று விட்டாள்.


அவர்கள் சென்று மறைந்ததும், இளஞ்செழியன் அவசரமாகத் தீபிகாவின் கையைப் பற்றித் தன்பக்கம் இழுத்தான்.

எதிர்பாராத இந்த இழுப்பில் நிலைதடுமாறியவள், நேராக அவனது அகன்ற மார்பில் வந்து மோதி நின்றாள்.


"அய்யோ செழியன்... என்ன பண்றீங்க? யாராச்சும் வரப்போறாங்க!" எனப் பதறியபடி அவனிடமிருந்து விலக முயன்றாள்.


அவன் அவளை விடுவதாயில்லை. அவளது மெல்லிய இடையைச் சுற்றி வளைத்துத் தன்னோடு இன்னும் நெருக்கமாக அணைத்துக்கொண்டான்.


அவளது சுவாசக் காற்று அவனது கழுத்தில் பட்டுத் தெறிக்க, செழியனின் இதயம் தாளம் தப்பியது.


"விலகிப் போகாத தீபி... இந்த நிமிஷத்துக்காக நான் எத்தனை ராத்திரி தூக்கமில்லாம தவிச்சிருக்கேன்னு எனக்குத்தான் தெரியும்.

நம்ம ரெண்டு பேரும் ஒண்ணா சேருவோமாங்கிற பயத்துல ஒவ்வொரு நாளும் செத்து செத்து பிழைச்சேன்.

ஆனா இன்னைக்கு நீ என் முன்னாடி, என் கைகளுக்குள்ள... இதெல்லாம் கனவு இல்லையே?" என அவள் கண்களை ஊடுருவிப் பார்த்துக் கேட்டான்.


அவனது குரலில் இருந்த தவிப்பும் காதலும் தீபிகாவை மெருகேற்றியது. அவளது எதிர்ப்புகள் எல்லாம் கரைந்து போக, நாணத்தில் தலை குனிந்தாள்.

அவளது கன்னங்கள் செவ்வரளிப் பூவாய் சிவந்திருப்பதைப் பார்த்த செழியன், மெல்ல குனிந்து அவள் காதோரம் ரகசியமாய் மொழிந்தான், "உன் மௌனம் கூட இவ்வளவு அழகா இருக்கும்னு இப்பதான் தெரியுது தீபி."


அவள் மெல்லத் தலைநிமிர்ந்து அவனைப் பார்க்க, அவளது கண்களில் தெரிந்த காதலைக் கண்டவன், இனி ஒரு நிமிடம் கூடத் தாமதிக்க விரும்பவில்லை.

அவளது மென்மையான கன்னத்தில் தன் காதலின் முதல் அட்சரத்தை ஆழமான முத்தத்தால் பதித்தான்.

அந்த முத்தத்தில் பல காலத் தவிப்பும், சொல்லத் துடித்த காதலும் ஒருசேர அடங்கியிருந்தது.



"கூறப்பட்டு சேலைதான் வாங்க சொல்லி கேட்குறேன்..
குடு விட்டு குடு பாயும் காதலால சுத்துறேன்...

கடவுள்கிட்ட கருவறை கேட்டு உண்ண சுமக்கவா..
உதிரம் முழுக்க உனக்கே தான்னு எழுதி குடுக்கவா...

ஒ மையிட்ட கண்ணே...!
உண்ண மறந்தா
இறந்தே போவேன்...

உருகுதே மருகுதே
ஒரே பார்வையாலே...
உலகமே சொலலுதே
உண்ண பாத்ததாலே...

தங்கம் உருகுதே...
அங்கம் கரையுதே...
வெட்க்கம் உடையுதே...
முத்தம் தொடருதே...
சொக்கி தானே போகிறேன்
நானும் கொஞ்ச நாளா...!"
 
Last edited:
Top Bottom