• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

என்னைக் களவாட வந்தவளே - 25

Vishakini

Moderator
Staff member




அத்தியாயம் 25:




பூங்கொடி தன் அறைக்குள் சென்று கதவைத் தாளிட்டுக் கொண்டாள். அவளது இதழ்களில் இன்னும் இளமாறன் கொடுத்த முத்தத்தின் ஈரம் காயவில்லை.


நெஞ்சுக்குள் மின்னல் வெட்டுவது போன்ற ஒரு சிலிர்ப்பு. உடனே ஜெயராணிக்கு போன் செய்தாள்.


"ஹலோ... ஜெயா!" என பூங்கொடி சொல்லும்போதே அவளது குரலில் இருந்த சந்தோஷம் ஜெயராணிக்கு ஏதோ விசேஷம் என்று புரியவைத்தது.


"என்னடி பூவு? குரலே ஒரு மாதிரி இருக்கு? அண்ணன் கிட்ட நல்லா திட்டு வாங்கினியா, இல்ல அவன் உன்னைத் திட்டினானா?" என ஜெயராணி கிண்டலாகக் கேட்டாள்.



"அதெல்லாம் இல்ல... இன்னைக்கு பெரிய ரகளையே நடந்துடுச்சு. ஆனா கடைசியில... அத்தான் எல்லார் முன்னாடியும் என் கையைப் பிடிச்சு, 'இவ தான் என் பொண்டாட்டி'னு சொல்லிட்டாரு ஜெயா!


அதுமட்டும் இல்ல, பெரியவங்களும் நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே மேடையில கல்யாணம் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டாங்க!" என மூச்சு விடாமல் சொல்லி முடித்தாள்.



மறுமுனையில் ஜெயராணிக்கு மகிழ்ச்சியில் கண்கள் கலங்கின.


"நிஜமாவா டி? மாமா ஒத்துக்கிட்டாரா? எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு பூவு.


இளமாறன் அண்ணன் எதையும் தயங்காம செய்வான்னு எனக்குத் தெரியும். ஆனா அந்த பவித்ரா குடும்பம் தான் எனக்கு பயமா இருக்கு," என்றாள் ஜெயராணி.




மறுபுறம், கோயம்புத்தூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த கலையரசனின் கார் சீற்றத்தோடு பறந்தது. பவித்ரா அழுதுகொண்டே வர, கலையரசன் தன் கைபேசியை எடுத்து ஒரு எண்ணுக்கு அழைத்தார்.



"ஹலோ... ரத்தினம்! நம்ம ஆளுங்களை தயார் பண்ணு. ராமநாதபுரத்துல அந்த இளமாறன் குடும்பம் என்னை ரொம்ப அசிங்கப்படுத்திட்டாங்க.



என் பொண்ணு கண்ணுல தண்ணி வர வச்ச அந்த பூங்கொடியையும், அவங்க குடும்பத்தையும் சும்மா விடக்கூடாது.


அந்த குடும்பம் இப்போ ரொம்பத் துள்ளுறாங்க... அவங்க துள்ளலை அடக்கணும்!" என ஆக்ரோஷமாகக் கத்தினார்.



பவித்ரா மெல்லத் தலையைத் தூக்கி, "அப்பா... இளமாறன் அந்தப் பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணிப்பாரோ?" எனக் கேட்டாள்.



"அவன் யாரை வேணா கட்டிக்கட்டும், ஆனா அந்தப் பொண்ணு உயிரோட இருந்தா தானே? நீ கவலைப்படாத பவித்ரா... உனக்குக் கிடைக்காதவன், யாருக்கும் கிடைக்கக் கூடாது!" என கலையரசன் வஞ்சகமாகச் சிரித்தார்.



அன்றிரவு இளமாறன் மொட்டை மாடியில் அமர்ந்து நிலவைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஜெயராணியை காண வந்த பூங்கொடி இளமாறனை காணாமல் மேலே வந்தாள்.


அவன் பின்னால் மெல்ல வந்த பூங்கொடி, "என்ன அத்தான்... இன்னும் தூக்கம் வரலையா?" எனக் கேட்டாள்.


இளமாறன் சட்டென்று அவளை இழுத்து தன் அருகில் அமர வைத்தான். "இல்லைடி... இன்னைக்குப் பூரா உன் முகம் தான் கண்ணுக்குள்ள நிக்குது. அந்தப் பழைய கிணத்தடியில நீ அழுதுட்டு இருந்தியே... அப்போ உன்னைத் தூக்கிட்டுப் போய் எங்கேயாவது ஓடிடலாமானு தோணுச்சு," என்றான் குறும்பாக.


"அப்போ இப்போ என்ன தோணுது?" என பூங்கொடி அவன் கண்ணைப் பார்த்து கேட்க,
"இப்போ...சீக்கிரம் நம்ம கல்யாணம் நடக்காதானு தோணுது!" எனச் சொல்லி அவள் கையைப் பிடித்துக் கொண்டான்.


ஆனால், அவர்களுக்குத் தெரியாது... இருளின் மறைவில் கலையரசனின் ஆட்கள் அந்த வீட்டைக் கண்காணித்துக் கொண்டிருப்பது.


கோயம்புத்தூரின் ஒதுக்குப்புறமான ஒரு வீட்டில் கலையரசன் மதுக்கோப்பையுடன் அமர்ந்திருந்தார்.


அவர் எதிரே முகத்தில் தழும்புடன், கண்களில் குரூரம் மின்ன அமர்ந்திருந்தான் கருணாகரன்.


கருணாகரன் - ஒரு காலத்தில் பூங்கொடியின் குடும்பத்தை மிரட்டி, அவளை அடையத் துடித்தவன். இளமாறனிடம் அடி வாங்கி ஊரை விட்டே ஓடியவன், இப்போது மீண்டும் முளைத்திருக்கிறான்.



"என்ன கலையரசன்... உங்களுக்கும் அந்த இளமாறன் குடும்பத்துக்கும் ஆகாதாமே? விஷயம் என் காதுக்கு வந்துச்சு," என கருணாகரன் புகையை ஊதித் தள்ளினான்.


கலையரசன் ஆவேசமாக, "ஆமாம் கருணா! என் பொண்ணை வேண்டான்னு சொல்லிட்டு, அந்தப் பூங்கொடி பின்னாடி அலையுறான். அந்தத் திமிரை நான் அடக்கணும். அந்தப் பொண்ணு இருந்தா தானே அவன் கல்யாணம் பண்ணுவான்?" என்றார்.



கருணாகரன் நக்கலாகச் சிரித்தான். "அவளைக் கொல்லாதீங்க கலையரசன். அவளை எனக்கே கொடுத்துடுங்க. அவளைத் தேடி அந்த இளமாறன் பித்து பிடிச்சு அலையணும்.


என்ன அவளை பாக்க கூடாதுன்னு சொல்லிட்டு இப்போ பெரிய பருப்பு மாதிரி முறைப்பெண்ணைக் கட்டிக்கப் போறேன்னு சொல்றானா? நான் அவளைக் கடத்துறேன்!" எனத் திட்டம் தீட்டினான்.



இருவரும் சேர்ந்து ஒரு பயங்கரமான முடிவுக்கு வந்தனர். ராமநாதபுரத்தில் நிச்சயதார்த்த வேலைகள் மும்முரமாக நடக்கும் வேளையில், பூங்கொடியைத் தூக்க வேண்டும் என்பதே அந்தத் திட்டம்.


சில நாட்கள் கழித்து...

அதிகாலை நேரம் நிச்சயதார்த்தத்திற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்தன. இளமாறன் பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாக வலம் வந்தான்.


பூங்கொடி மயில் வண்ண பட்டு புடவையில், மல்லிகைப்பூ சூடி, கை நிறைய கண்ணாடி வளையல்கள் போட்டு தேவதை போல மின்னினாள்.


யாருக்கும் தெரியாமல் அவளை காண வந்தான் இளமாறன்.
அவள் அறைக்குள் நுழைந்தவன் ஒரு நிமிடம் மூச்சு விட மறந்தான்.


"ஏய் அத்த மகளே! இன்னைக்கு ரொம்பத் தான் அழகா இருக்க... ஆனா திருஷ்டி பட்டுறப் போகுது," என இளமாறன் அவள் காதோரம் ரகசியம் பேசினான்.


"போங்க அத்தான்... எப்பவும் என்னைக் கிண்டல் பண்றதே உங்களுக்கு வேலையாப் போச்சு. மொதல்ல வெளிய போங்க," என வெட்கத்துடன் அவனைத் துரத்தினாள்.


அவனும் சிறிது நேரம் பேசிவிட்டு அவளின் நெற்றியில் தன் முத்தத்தை பதித்து விட்டு கிளம்பினான்.



கொஞ்ச நேரம் கழித்து பூங்கொடியின் போன் அடித்தது. அறிமுகம் இல்லாத ஒரு எண். அவள் எடுத்துப் பேசினாள்.


"ஹலோ, யாரு?"


"பூங்கொடி... உன் அண்ணன் பொற்செழியனுக்கு அடிபட்டு ரோட்டுல கிடந்தான். சீக்கிரம் உங்க வீட்டுக்கு பின்னாடி இருக்க தோட்டத்துக்கு வா!. அவனை கூட்டிட்டு வந்து இருக்கேன்." என ஒரு குரல் பதட்டமாகச் சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்தது.



பூங்கொடி பதறிப்போனாள். யாரிடமும் சொல்லாமல், பின்வாசல் வழியாகத் தோட்டத்தை நோக்கி ஓடினாள்.



தூரத்தில் ஒரு கார் நின்று கொண்டிருந்தது. அண்ணனுக்கு என்ன ஆச்சோ என்ற பயத்தில் அவள் காரின் அருகில் சென்றபோது, உள்ளிருந்து இறங்கிய உருவத்தைப் பார்த்து உறைந்து போனாள்.



"கருணாகரன்...!" என அவள் அலற முற்பட்டாள்.
ஆனால் அதற்குள் ஒருவன் அவள் வாயைப் பொத்தி, காருக்குள் இழுத்துப் போட்டான்.



கார் மின்னல் வேகத்தில் அங்கிருந்து பறந்தது.
பூங்கொடியை தேடி வந்த அல்லிராணி அவளை காணாமல் பயந்து போனாள்.


அனைவரும் அவளை தேட இளமாறனும் வந்து விட்டான்.
தோட்டத்தில் கிடந்த பூங்கொடியின் வளையல் துண்டுகளைப் பார்த்த இளமாறனின் இதயம் ஒரு நிமிடம் நின்று துடித்தது. அவன் கண்கள் சிவந்தன.


"பூங்கொடி...!" என அவன் கத்திய சத்தம் அந்தத் தோட்டத்தையே அதிர வைத்தது.


இளமாறனுக்குப் புரிந்தது... இது வெறும் சண்டை அல்ல, ஏதோ ஒரு பெரிய சதி என்று!


இளமாறனும் அவனின் மச்சான்கள் செந்தூரன், இளஞ்செழியன், பொற்செழியன் மூவரும் பூங்கொடியை தேட சென்றனர்...
 
Top Bottom