அதைக் கேட்டு அதிர்ந்து விழித்து,”என்னது! அவன் ஒரு ரோபோ மாதிரியான ஆளா?
என்னம்மா சொல்றீங்க? அவனை நான் எப்படி கல்யாணம் செஞ்சிக்கிட்டு சந்தோஷமாக
வாழ முடியும்? நமக்கு இந்த சம்பந்தம் வேண்டாம்”என்று தன் தாய், தந்தையிடம்
பொரிந்து தள்ளினாள் வசுமதி.
உடனே,”நீ சும்மா இருடி! அந்தப் பையனைப் போய் ரோபோ அது, இதுன்னுப்
பேசிக்கிட்டு இருக்கிற! அவனுக்கு எந்தக் குறையும் இல்லை! அதே மாதிரி, எந்தக்
கெட்டப் பழக்கமும் இல்லாத சுத்தமான தங்கம் அந்த சம்யுக்தன்! அப்படி இருக்கும் போது
இந்தக் உப்புச், சப்பில்லாத காரணத்துக்காகவா அவனை வேண்டாம்னு சொல்ற? அறிவு
கெட்டவளே!”என அவளைத் திட்டினார் அன்னை.
அதில் விழிகளை நீர்ப் படலங்கள் ஆக்கிரமித்து விட்டது வசுமதிக்கு.
“அப்பா! நீங்களே சொல்லுங்க! நீங்க ரெண்டு பேரும் இன்னைக்கு வரைக்கும்
அவங்களோட வீட்டுக்குப் போகவே மாட்டீங்களே? அப்பறம் எப்படி அவங்களோட
பையனுக்கு என்னைக் கட்டி வைக்க ஒத்துக்கிட்டீங்க?”என்று தந்தையிடம் நியாயம்
கேட்க,
“அதுக்குக் காரணம் இருக்கு வசு”என்றார் விஜயன்.
“அது என்னப் பொல்லாத காரணம்ப்பா?”என்று வினவினாள் மகள்.
“அதை நான் சொல்றேன். நாம அவங்களை விடப் பொருளாதாரத் தரத்தில் கம்மி தான்.
ஆனால் அவங்க வீட்டில் எந்த ஃபங்க்ஷன் வச்சிருந்தாலும் நம்மளைக் கூப்பிடுவாங்க.
ஆனால் எங்களுக்குத் தான் அவங்க வீட்டுக்குப் போய் எங்க மத்த சொந்தக்காரங்க
முகத்தில் முழிக்கப் பிடிக்கலை! ஏன்னா, நாங்க அதுக்கு முன்னாடி எல்லாம் நீ சின்னப்
பொண்ணாக இருக்கும் போது அங்கே போயிட்டு, வந்துட்டுத் தான் இருந்தோம். அப்போ
அவங்களோட பசங்க கூட நீ நல்லா சேர்ந்து விளையாடுவ! அப்போ எல்லாம் அங்கே
வந்திருக்கிற மத்தவங்க எல்லாம் நாங்க ஏதோ உன்னை அவங்க பசங்கள்ல ஒருத்தருக்குக்
கல்யாணம் பண்ணி வைக்க இப்போ இருந்தே பிளான் பண்றோம்னுப் பேச
ஆரம்பிச்சுட்டாங்க! அதனால் தான் நாங்க அங்கே போறதை நிறுத்திட்டோம்!
போதுமா?”என்று அவளுக்கு விளக்கம் அளித்தார் கண்மணி.
“ஓஹ்! அப்போ கல்யாணத்துக்கு மட்டும் எப்படி சம்மதம் சொன்னீங்க? எங்க
கல்யாணத்துக்கு வர்ற உங்க சொந்தக்காரங்க எல்லாரும் இப்பவும் நம்மளை எதுவும்
குத்திப் பேச மாட்டாங்களாம்மா?”என்று அவரிடம் வாதிட்டாள் வசுமதி.
“நாங்களா போய் ஒன்னும் அவங்க கிட்ட உங்கப் பையனை எங்கப் பொண்ணுக்குக்
கல்யாணம் செஞ்சி வைப்பீங்களான்னு கேட்கலையே? அவங்களாகத் தானே, நம்ம
வீட்டுக்கு வந்து பொண்ணுக் கேட்டுட்டுப் போறாங்க? இதில் நம்ம எதுவும்
பண்ணலையே? அப்போ அந்த உறவுக்காரங்களோட வாயை அடக்க வேண்டியது
அவங்க பொறுப்பு ஆகிடும். அப்படியே நம்ம கிட்டே ஏதாவது கேட்டால் சம்யுக்தனோட
அப்பா, அம்மா தான் எங்க வீடு தேடி வந்து சம்பந்தம் பேசினாங்க! நாங்க ஒன்னும்
அவங்க கிட்ட போய் நிக்கலைன்னு சொல்லிடுவோம்ல! அதனால் தான் சொல்றேன். நீ
அவனைக் கல்யாணம் பண்ணி சந்தோஷமாக வாழனும்!”என்று தீர்க்கமாக உரைத்தார்
அவளது அன்னை.
“ம்ஹூம்! மாட்டேன்ம்மா”என்று பிடிவாதம் பிடித்த மகளிடம்,
“வசு! நான் சொல்றதைக் கேளு. அவங்க உனக்கு எந்த நகையும் போடத்
தேவையில்லைன்னு சொன்னாங்க. ஆனால் நாங்க உனக்காக சேர்த்து வச்சிருக்கிற
நகையைக் கண்டிப்பாகப் போடுவோம். அதே மாதிரி, கல்யாணத்துக்கு அப்பறம் நீ
இப்படி கஷ்டப்பட்டு, உடலை வருத்திக்கிட்டு வேலைக்குப் போறதுக்கு அவசியமே
இல்லை. அதையும் உன் விருப்பம்ன்னு அவங்க சொல்லிட்டாங்க! இதையெல்லாம்
யோசிச்சுப் பார்த்தால் நாங்க ஏன் உன்னை இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்க
சொல்றோம்னு உனக்குப் புரியும்!”என்று கூறி நன்றாக சிந்தித்துப் பார்த்து முடிவைக்
கூறுமாறு சொல்லி அனுப்பி வைத்தார்கள் விஜயன் மற்றும் கண்மணி.
அதே சமயம், தானும், கண்மணியும் பேசிய விஷயத்தை தன் கணவரிடமும், சற்று முன்னர்
வீட்டிற்கு வந்து சேர்ந்த இளைய மகன் பிரதீபனிடம் விவரித்து முடித்திருந்தார் கலாவதி.
அதைக் கேட்டதும்,”அப்போ இனிமேல் நாம எந்தக் கவலையும் படாமல் சம்யுக்தனோட
கல்யாண வேலைகளைப் பார்க்கலாம்”என்றவர்களும் கூடத் தங்களது குடும்பத்தில்
நடக்கப் போகும் முதல் கல்யாணம் எந்தப் பிரச்சினையும் இன்றி நல்லபடியாக
நடந்தேறும் என்று மிகவும் நிம்மதியாக உணர்ந்தனர்.
தனது வேலை முடிந்து வீடு திரும்பிய சம்யுக்தனிடம்,”இன்னைக்கு நாங்க போயிட்டு வந்த
கல்யாணத்தில் நம்மளோட தூரத்து உறவுக்காரர் அதாவது என்னோட அண்ணன்
முறையில் ஒருத்தரைப் பார்த்தேன். அவர் பேர் விஜயன். அவர் தன்னோட
மனைவியையும் அங்கே கூட்டிட்டு வந்து இருந்தார். அவங்களுக்கும் கல்யாண வயசில்
ஒரு பொண்ணு இருக்காளாம். அவ பேர் வசுமதி. அவளுக்கும் மாப்பிள்ளைப் பார்த்துட்டு
இருக்கோம்னுப் பேச்சு வாக்கில் சொன்னாங்க. அதைக் கேட்டதும் உன்னைப் பத்திச்
சொல்லி அவங்கப் பொண்ணை உனக்குக் கட்டி வைக்கக் கேட்டோம். அவங்களும்
அதுக்கு ஒத்துக்கிட்டாங்கப்பா”என்று அவனிடம் பூரிப்புடன் தெரிவித்தார் கலாவதி.
அதைக் கேட்டதும்,”அப்படியா ம்மா? அவங்களுக்கு நான் சொன்ன கண்டிஷன்ஸ்
எல்லாத்தையும் சொல்லிட்டீங்களா? நிஜமாகவே அந்தப் பொண்ணுக்கு என்னைக்
கல்யாணம் பண்ணிக்க ஓகேவா?”என்று அவரிடம் தன் கண்கள் இடுங்க சந்தேகமாக
வினவ,
“ஆமாடா. அவங்க கிட்ட உங்கம்மா எல்லாத்தையும் சொன்னாங்க. அவங்களோட
பொண்ணும் உன்னை மாதிரியே குணம் இருக்கிறவளாம். அதனால் தான் அவங்க
சுலபமாக இந்தக் கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டாங்க. நாங்க அவங்க கிட்ட எதையும்
மறைக்கல. போதுமா?”என்று அவனுக்கு உறுதி அளித்தார் ஜெயராம்.
அதற்குப் பின்னர் தான், அவர்களிடம் கேள்வி கேட்காமல் இருந்தான் சம்யுக்தன்.
அதேபோல், தன்னுடைய பெற்றோரின் சொற்கள் தந்த நம்பிக்கை மற்றும் இந்த
திருமணத்தைச் செய்து கொண்டால் தனக்குக் கிடைக்கப் போகும் நன்மைகளைப் பற்றி
நன்றாக யோசித்துப் பார்த்து விட்டுச் சம்யுக்தனைத் திருமணம் செய்து கொள்ள
சம்மதித்து விட்டிருந்தாள் வசுமதி.
அதில் இருவரது பெற்றோரும் மகிழ்ச்சி அடைந்து பெண் பார்ப்பதற்கான நாளை
விரைவாகவே குறித்து விட்டனர்.
“நாளைக்குக் காலேஜூக்கு லீவ் சொல்லிட்ட தானே சம்யு?”என்று மகனிடம் வினவினார்
கலாவதி.
அவனோ,“ம்ஹ்ம். சொல்லிட்டேன்ம்மா”எனப் பதிலளித்தான்.
காலையில் தனது பெண் பார்க்கும் படலத்திற்காக மிதமான அலங்காரம் செய்து
கொண்டாள் வசுமதி.
அவளுக்கும் கல்லூரிக் காலங்களில் தன்னுடைய கல்யாணத்தைப் பற்றிய கனவுகள்
நிறையவே இருந்தது தான்.
ஆனால் தனது கல்லூரிப் படிப்பை முடித்தப் பின், வேலைக்குப் போகும் கட்டாயம் வந்து
விடவே அதையெல்லாம் மனதில் ஒரு மூலையில் போட்டுப் புதைத்து விட்டிருந்தாள்
வசுமதி.
அவளது தந்தை விஜயன் ஒரு பேரங்காடியில் கணக்கு, வழக்குகளைப் பார்க்கும் வேலை
செய்து கொண்டிருக்கிறார்.
ஆனால் அதில் அவருக்குச் சொற்ப சம்பளம் தான் கிடைக்கிறது.
ஏனென்றால் விஜயனுக்குப் படிப்பறிவு குறைவு. ஆனாலும் அவரது விசுவாசத்தின்
பேரிலும், அவர் வாலிப வயதில் இருந்து இப்போது வரைக்கும் அங்கே வேலை
செய்வதால் அவரை வேலையை விட்டு அனுப்பாமல் இருக்கிறார் அவரது முதலாளி.
அதனாலேயே தங்கள் மகள் முதுகலைக் கணிதப் பட்டப் படிப்பை முடித்தவுடனேயே
வேலைக்கு அனுப்பி அவளது சம்பளத்தையும் வைத்து தான் தங்களது குடும்பச்
செலவுகளைச் சமாளித்துக் கொண்டிருக்கிறார்கள் அவளது பெற்றோர்.
தனது கல்யாணத்தைப் பற்றிய சிண்ட்ரெல்லா கனவுகளை எல்லாம் தாண்டி,
நிதர்சனத்தைப் புரிந்து கொண்டு, என்ன தான், கல்லூரிப் பேராசிரியராக இருந்து ஓய்வுப்
பெற்றிருந்த போதிலும் தங்களது தந்தையிடம் இருந்து பரம்பரையாக வந்தப் பெரும்பங்கு
பணத்தைச் சத்தமில்லாமல் வங்கியில் சேமித்து வைத்திருக்கும் ஜெயராமின் மகனைத்
திருமணம் செய்து கொள்வதற்குத் தன் மனதை தயார்படுத்திக் கொண்டாள் வசுமதி.
“பக்கத்து வீட்டுக்காரங்க யாரையாவது உனக்குத் துணைக்கு இருக்க வரச்
சொல்லவா?”எனக் கேட்டார் கண்மணி.
“அதெல்லாம் வேண்டாம்மா”என்றுரைத்து விட, சம்யுக்தனின் வீட்டாரின் வருகைக்காக
காத்திருந்தனர் மூவரும்.
அவர்களை வெகு நேரம் காத்திருக்க வைக்காமல் வந்து சேர்ந்தார்கள் சம்யுக்தனும்,
அவனது வீட்டாரும்.
விஜயனுக்கும், கண்மணிக்கும் பார்த்த முதல் பார்வையிலேயே சம்யுக்தனின் வெளித்
தோற்றம் பிடித்திருந்தாலும்,
அவனது இறுக்கமான பார்வை அவர்களுக்கு அவ்வளவு உவப்பாக இல்லை தான்.
ஆனாலும் அவனை மறுக்க முடியாத இடத்தில் இருந்தார்கள்.
நால்வருக்கும் குடிக்க, கொறிக்கக் கொடுத்து உபசரித்ததும்,
“நல்ல நேரம் முடியிறதுக்குள்ளே பொண்ணை வரச் சொல்லுங்க”என்ற ஜெயராமின்
அறிவுறுத்தலின்படி, தங்களது மகள் வசுமதியைக் கூடத்திற்குக் கூட்டி வந்தார் கண்மணி.
அவளது அலங்காரம் சாதாரணமாக இருந்தாலும் கூடப் பார்க்க லட்சணமாக இருந்தாள்.
அதிலேயே சம்யுக்தனின் குடும்பத்திற்கு அவளைப் பிடித்து விட்டது.
அதேபோல், தன் தீட்சை நிறைந்த பார்வையால் தன்னை அளந்து கொண்டிருந்தவனைப்
பார்த்த வசுமதிக்கும் அவனது புறத்தோற்றம் பிடித்திருந்தது.
“சம்யு! உனக்குப் பொண்ணைப் பிடிச்சிருக்கா? இல்லைன்னா, அவகிட்ட இரண்டு, மூனு
வார்த்தைப் பேசிட்டு உன் முடிவைச் சொல்றியா?”என்று மகனிடம் வினவினார் கலாவதி.
“இதுவும் நல்ல யோசனை தான். அண்ணா! நீ எதுக்கும் அவங்க கிட்ட பேசிட்டுச்
சொல்லு”என்ற பிரதீபனிடம்,
“அவங்களுக்கு என்னைப் பிடிச்சிருக்கான்னு முதல்ல கேளுங்க”என்றதும்,
தங்கள் மகளிடம்,“நீ என்னம்மா சொல்ற?”என்று கேட்டார் விஜயன்.
முதலில் தன்னுடைய விருப்பத்தைக் கேட்கச் சொன்னவனைத் தயக்கம் மறைய நன்றாகப்
பார்த்து,“எனக்கு அவரை ரொம்ப பிடிச்சிருக்கு”என்று கூறிப் புன்னகைத்தாள் வசுமதி.
அதைக் கேட்டதும் அவளை அழுத்தமாகப் பார்த்து விட்டு,”எனக்கும் இவங்களைப்
பிடிச்சிருக்கு”என்றுரைத்தான் சம்யுக்தன்.
அதில் அனைவரின் முகங்களும் மகிழ்ச்சியில் மலர்ந்து விகசித்தது.
அதற்குப் பிறகு, அவர்கள் வீட்டிலிருந்து கிளம்பும் போது,”சீக்கிரம் நிச்சயத்தை
வைப்போம்”என்று அவர்களிடம் உரைத்து விட்டுச் சென்றனர் சம்யுக்தனும், அவனது
குடும்பத்தாரும்.
“நான் அந்தச் சம்யுக்தன் ஒரு ரோபோ, ரொம்ப முசுடு போலன்னு நினைச்சேன்! ஆனால்
என்னோட விருப்பத்தை முதல்ல கேட்டார் பாருங்க! அப்போவே எனக்கு அவரைப்
பிடிச்சுப் போச்சு. இனிமேல் அவரை எனக்கேத்த மாதிரி மாத்திடுவேன்!”என்று தனது
கண்கள் இரண்டும் ஆசையில் பளபளக்கப் பெற்றோரிடம் கூறிச் சிரித்தாள் வசுமதி.
அதே சமயம்,”அந்தப் பொண்ணை உண்மையிலேயே உனக்குப் பிடிச்சு இருக்கு
தானே?”என்று மகனிடம் கேட்டார் கலாவதி.
“ஆமாம்மா”எனப் பதிலளிக்க,
அதற்குப் பின் தான், சம்யுக்தன் மற்றும் வசுமதியின் நிச்சயத்தார்த்தம் நன்முறையில்
நிகழ்ந்து முடிந்தது.
- தொடரும்