தேசம் 14 :
“அதையெல்லாம் நான் சமாளிச்சுக்குவேன்” என்றவளிடம்,
“ம்ஹூம்! வேண்டாம்ங்க. இது சரிப்பட்டு வராது. நீங்க கொஞ்ச நாள் அங்கே போகாமல் இருக்கிறது தான் நல்லது. இல்லைன்னா வேலைக்குக் கூடப் போங்க”என்றதும் முகம் சுருங்கிப் போய் விட்டது வசுமதிக்கு.
அதைக் கவனித்து,”என்னாச்சுங்க?”என்ற சம்யுக்தனிடம்,
“உங்களுக்கு என் அப்பா, அம்மா மேலே ஏன் இவ்வளவு கோபம்?”எனக் கேட்க,
“எனக்கு அவங்க மேலே கோபம் இல்லைங்க. வருத்தம் தான். ஏன்னா, நாம ரெண்டு பேரும் ஒருத்தரையொருத்தர் புரிஞ்சிக்கிட்டதுக்கு அப்பறமாக வாழ்க்கையைத் தொடங்கலாம்னு முடிவு செய்திருந்தோம். ஆனால் உங்கப்பா, அம்மா உங்களுக்கு அறிவுரை சொல்றோம்ன்றப் பேர்ல உங்களுக்கு ரொம்ப அழுத்தம் கொடுக்கிற மாதிரி எனக்குத் தோணுது அதான்! அதையும் மீறி நீங்க அவங்களைப் பார்க்கனும்னு விருப்பப்பட்டால் நானே உங்களை அங்கே கூட்டிட்டுப் போறேன்”என்று விளக்கம் அளித்து விட்டு அவளது பதிலிற்காக காத்திருக்க,
அவனது விரிவான விளக்கத்தைக் கேட்டுப் பெண்ணவளுக்குப் புல்லரித்துப் போனது.
ஆனாலும் தனது பெற்றோரிடம் அறிவுரை கேட்கும் முடிவை மாற்றிக் கொண்டு அவர்களிடம் தனது கணவனின் அருமை, பெருமைகளை அள்ளி வீச வேண்டும் என்ற ஆசை எழுந்ததால்,
“எனக்கு அவங்களைப் பார்க்கனும்னு ஏக்கமாக இருக்குங்க! ஆனால் நான் அவங்களோட அட்வைஸ் எல்லாத்தையும் அப்படியே காதில் போட்டுக்க மாட்டேன். எனக்குத் தேவையானதை மட்டும் தான் எடுத்துக்குவேன். அதனால் நீங்களே என்னைக் கூட்டிட்டுப் போய் அங்கே விட்டுட்டு அடுத்த நாள் வந்து அழைச்சிட்டுப் போறீங்களா?”என்றவளிடம்,
“கண்டிப்பாக”என்று கூறி வாக்களித்தான் சம்யுக்தன்.
“அப்போ சனிக்கிழமை சாயந்தரம் என்னை அங்கே கொண்டு வந்து விட்டுட்டு, அடுத்த நாள் சாயந்தரம் வந்து கூட்டிட்டுப் போங்க”என்றதற்கு ஒப்புக் கொண்டு, அதை தனது பெற்றோரிடமும் உரைக்க,
அதைக் கேட்டு,”தாராளமாகப் போயிட்டு வாங்க. எவ்வளவு நாள் வேணும்னாலும் தங்கிட்டு வாங்க”என்று அவர்களிடம் தெரிவித்தார்கள் ஜெயராம் மற்றும் கலாவதி.
அதை தனது பெற்றோரிடம் மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டாள் வசுமதி.
“ஹப்பாடா! மாப்பிள்ளை இப்போதாவது மனசு இறங்கி வந்தாரே! நல்லா காரசாரமாக சமைச்சு வைக்கிறேன்! நீங்க ரெண்டு பேருமே இங்கே தங்கிட்டு ஞாயிற்றுக்கிழமை கிளம்புங்க”என்ற கண்மணியிடம்,
“அவர் தங்குறது கஷ்டம்மா. நானே அவர்கிட்ட ஆசையாக கேட்டுக்கிட்டதால் தான் என்னை அங்க அனுப்பி வைக்கவே ஒத்துக்கிட்டார்”எனக் கூறினாள் வசுமதி.
“சரிடி.ரொம்ப பண்ணாதே. நீ மட்டும் தங்கிட்டுப் போ”என்று கூறி விட,
அந்த வார சனிக்கிழமைக் காலையில்,“மதி!”என்றவனின் அழைப்பில் சிலிர்த்து அவன் புறம் திரும்பி,
“என்னங்க?”என்றாள் மனைவி.
“இன்னைக்குச் சாயந்தரம் ரெடி ஆக இருங்க. நான் வந்ததும் உங்களை அத்தை, மாமாவைப் பார்க்கக் கூட்டிட்டுப் போறேன்”என்று கூறி விட்டு வேலைக்குச் சென்றான் சம்யுக்தன்.
கணவன் தனக்காக மாறி இருப்பதைக் எண்ணிய வசுமதிக்குள் நம்பிக்கையின் ஒளி பிறந்தது.
அவனிடம் உண்மையைக் கூறி மன்னிப்புக் கேட்டு விட்டு அவனுடனான புது வாழ்க்கையைத் தொடங்கலாம் என்றும், அதற்குத் தன்னுடைய பெற்றோரிடம் ஆசி வாங்குவதற்காக அவர்களைப் பார்க்கச் செல்லலாம் என்றும் முடிவு செய்திருந்தாள்.
மாலையில் வேலை முடிந்து வந்ததும் தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு,
“நாம கிளம்பலாமா மதி?”என்றவனிடம்,
“சரிங்க”எனப் பதிலளிக்க,
அதே சமயம், கல்லூரியிலிருந்து வீட்டிற்கு வந்திருந்த பிரதீபனோ,“எங்கே கிளம்புறீங்க?”என்று அவர்களிடம் வினவ,
“எங்கப்பா, அம்மாவைப் பார்க்கப் போறோம்ப்பா”என்றுரைத்தாள் வசுமதி.
“ஓஹோ! பார்றா! நீங்க என் கூட எல்லாம் பேசுவீங்களா?”என அவனைக் கேலி செய்தான் பிரதீபன்.
உடனே,”டேய்! உங்க அண்ணியைக் கிண்டல் செய்ற வேலை வச்சுக்காதே!”என்று அவனுக்கு எச்சரிக்கை விடுத்து விட்டு,
“சரி. நாங்க கிளம்புறோம்”என்ற மகனிடம்,“காபி மட்டும் குடிச்சிட்டுப் போங்க. எப்படியும் சம்பந்தி உன்னைச் சாப்பிடாமல் அனுப்ப மாட்டாங்க”என்றுரைத்து அவர்கள் இருவருக்கும் கொட்டை வடிநீர் தயாரித்துக் கொடுத்துக் குடிக்க வைத்தார் கலாவதி.
“எதில் போறீங்க?”என்று மகனிடம் விசாரித்தார் ஜெயராம்.
சம்யுக்தன்,“என் பைக்கில் தான் போறோம்ப்பா”
“இந்த டைமில் பைக்கில் போக வேண்டாமேடா! நான் நம்மக் காரை எடுத்து வரச் சொல்லவா?”
கணவன் பதில் செல்வதற்குள்,”இல்லை மாமா. எனக்குப் பைக்கில் போகனும்னு ஆசையாக இருக்கு”என்று தன் முகம் மலரக் கூறினாள் வசுமதி.
“சரிம்மா. ஆனால் ஜாக்கிரதையாகப் போயிட்டு வாங்க”என்றுரைத்து அவர்களை வழியனுப்பி விட்டு,
“நம்ம சம்யுவைப் பாருங்களேன். பொண்டாட்டிக்காகப் பரிஞ்சுப் பேச ஆரம்பிச்சிட்டானே!”என்ற தாயிடம்,
“ஆமாம்மா. எனக்கும் அதே ஆச்சரியம் தான்! அண்ணனோட குணம் கொஞ்சம், கொஞ்சமாக மாறிட்டு வருது”என்றான் பிரதீபன்.
“ம்ஹ்ம். அதுவும் நல்ல விஷயம் தானேடா? ஆனால் இதை வசு எப்படி எடுத்துக்கப் போறாள்ன்னுத் தெரியலை. ஏன்னா, அவங்க ரெண்டு பேரும் ஒரே கேரக்டர்ன்றதால் தான் இந்தக் கல்யாணமே நடந்துச்சு. இவன் இப்படி மாறிட்டா அவளுக்குப் பிடிக்குமோ, என்னவோ!”எனத் தவிப்புடன் கூறினார் கலாவதி.
“அதெல்லாம் மருமகளும் மாறிடுவாம்மா! எல்லாம் நல்லதாகவே நடக்கும்”என்று அவருக்குத் தைரியம் சொன்னார் ஜெயராம்.
அதே சமயம், தனது கணவனின் தோளில் உரிமையாக கை வைத்துப் பயணிக்க வசுமதிக்குக் கொள்ளை ஆசையாகத் தான் இருந்தது.
ஆனாலும் அவளால் அதைச் செய்ய முடியவில்லை. ஏனெனில் அவனிடம் தன் உணர்வுகளையும், ஆசைகளையும் வெளிப்படுத்த இன்னும் தயக்கமாக இருந்தது.
அதனால் தான், அவன் மீது இருக்கும் காதலையும் சொல்லாமல், அவனுடன் உயிரும், உடலுமாக கலக்காமல் திரிசங்கு சொர்க்கத்தில் மாட்டிக் கொண்டு அவஸ்தைப்படுகிறாள் வசுமதி.
அந்த ஒரு மணி நேரப் பயணத்தை தற்காலிகமாக அனுபவித்துக் கொண்டிருந்தவளது வீட்டை அடைந்ததும்,
“உங்க வீட்டுக்கு வந்தாச்சுங்க”என மனைவியிடம் தெரிவித்தான் சம்யுக்தன்.
“ஓஹ்”என்றவளோ வண்டியிலிருந்து இறங்க,
அவர்கள் வாகனத்தின் ஒலியைக் கேட்டதுமே வீட்டிலிருந்து வெளிப்பட்டனர் வசுமதியின் பெற்றோர்.
“வாங்க மாப்பிள்ளை! வா வசு”என்றவர்களின் முகத்தில் சந்தோஷச் சாரல்கள்!
தங்கள் மகள் மற்றும் மருமகனை வீட்டினுள் அனுமதித்து, தண்ணீர் கொடுத்து உபசரித்து விட்டு, சம்யுக்தனின் வீட்டாரின் நலத்தைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டனர் விஜயன் மற்றும் கண்மணி.
அவர்களிடம் புன்னகை முகமாகச் சிறிது நேரம் பேசி விட்டு,”நான் கிளம்புறேன் மாமா, அத்தை”என்றவனை மறுத்துப் பேச வாயெடுத்த தனது தந்தையைக் கண்களாலேயே,’வேண்டாம்'என்று சைகை செய்து அமைதி அடையச் செய்து விட்டாள் வசுமதி.
உடனே,”சரி மாப்பிள்ளை”எனக் கூறி அவனை அனுப்பி வைத்து விட்டு,
கண்மணி,“எப்படி இருக்கே வசு? உன்னைப் பார்த்து ரொம்ப நாளாச்சு. மாப்பிள்ளை இருந்ததால் உன் கூட அதிகம் பேச முடியலை! உன்னை அவர் நல்லா பார்த்துக்கிறார் தானே?”என்று மகளிடம் பேச்சுக் கொடுக்க,
“அவர் எங்கிட்ட ரொம்ப நல்லா பார்த்துக்கிறார்ம்மா”என்றவளோ,
தனது கணவனின் மாற்றத்தை தன் பெற்றோரிடம் மிகவும் மகிழ்ச்சியாகப் பகிர்ந்து கொண்டாள் வசுமதி.
அதைக் கேட்ட விஜயன் மற்றும் கண்மணிக்கு நிம்மதியாக இருந்தது.
ஏனெனில், தங்கள் மருமகன் எப்போதும் இப்படியே இருந்து விடுவானோ என்ற கலக்கமும், இதனால் மகளின் வாழ்க்கைப் பாதிக்குமோ என்ற பயமும் அவர்களுக்கு இப்போது வரை இருந்து கொண்டே தான் இருந்தது.
மகளின் இந்த வார்த்தைகள் தான் அவற்றைப் போக்கி விட்டிருக்க,”இதைக் கேட்கும் போது தான் எங்க மனசில் இருந்த சஞ்சலமே காணாமல் போச்சு”என்றுரைத்து விட்டு,
“ஏங்க! காலையில் சீக்கிரமே போய்க் கறி எடுத்துட்டு வாங்க. இவளுக்குச் சமைச்சுப் போட்டுச் சாப்பிட வச்சு அழகுப் பார்க்கனும்”என்று மகிழ்ச்சித் துள்ளலுடன் கணவனிடம் தெரிவித்தார் கண்மணி.
“சரிம்மா”என்றவரோ,
“உங்கிட்ட கேட்கனும்னு நினைச்சேன். நீங்க ரெண்டு பேரும் உங்க மாமனாரோட காரில் வந்திருக்க வேண்டியது தானே? ஏன் பைக்கில் வந்தீங்க?”என மகளிடம் விசாரிக்கவும்,
“அதுவா ப்பா? மாமாவும் அதையே தான் சொன்னாரு. நாங்க தான் வேண்டாம்னு சொல்லிட்டோம்”எனப் பதிலளித்தாள் வசுமதி.
“ஏன் இப்படி செஞ்ச? அவங்களே தங்களோட சொத்தை எல்லாம் வெளியே கொண்டு வந்தாலும் நீ விட மாட்டியே! நீ வசதியாக, சௌகரியமாக வாழனும்னு தானே உன்னை அவங்க வீட்டுக்கு மருமகளாக ஆக்கினோம்! நீ என்னடான்னா ஏன் புருஷன் உனக்கு ரெண்டு வார்த்தை ஏத்துக்கிட்டுப் பேசிட்டா எல்லாத்தையும் மறந்துட்டு புருஷனே உலகம்ன்னு இருந்துடுவியா என்ன? பொழைக்க கத்துக்கோ வசு!”என அவளுக்கு அறிவுறுத்தினார் விஜயன்.
அதில் கோபம் வர,”அப்பா! நான் என்னச் செய்யனும், செய்யக் கூடாதுன்னு எனக்குத் தெரியும்! நீங்களும், அம்மாவும் எதுவும் சொல்லத் தேவையில்லை. உங்க ரெண்டு பேர் கூடவும் சந்தோஷமாகப் பேசி, அம்மா கையால் சாப்பிட்டுப் போறதுக்காகத் தான் நான் இங்கே வந்ததே! இதுக்குத் தான் என் புருஷன் உங்க வீட்டுக்குப் போனால் உங்கப்பா, அம்மா உங்களுக்கு ஏதாவது அட்வைஸ் செய்றேன்னுக் குழப்பி விடுவாங்க! அதனால் போகாதீங்கன்னு அப்போவே சொல்லித் தடுத்தார். அவர் பேச்சைக் கேட்காமல் வந்தது என் தப்புன்னு இப்போ புரியது!”என்றதுமே,
அவர்கள் இருவரும் அதிர்ந்து போய் மகளைப் பார்த்தனர்.
“ஆமாம். ஆனால் எனக்கு உங்களைப் பார்க்க ஆசையாக இருந்ததால் தான் இங்கே வந்திருக்கேன். அதனால் தான், சொல்றேன். எனக்கு நீங்க அதுவும் சொல்லிக் கொடுக்காமல் ருசியாக சமைச்சுப் போட்டுக் கவனிக்கிற வேலையைப் பாருங்க”என்றுரைத்து விட்டுச் சென்றாள் வசுமதி.
“என்னங்க இவ இப்படி சொல்லிட்டுப் போறாள்!”என்று தன் கணவரிடம் வருத்தத்துடன் கூறினார் கண்மணி.
“அவ புருஷன் அவகிட்ட நல்லா நடந்துக்கிறான்ற சந்தோஷத்தில் தலை, கால் புரியாமல் பேசிட்டுப் போறாள்ம்மா. இதெல்லாம் கொஞ்ச நாளைக்குத் தான் குழந்தை உண்டானதுக்கு அப்பறம் நம்மகிட்டே தானே வரனும். அப்போ நாம சொல்றதைக் கேட்டுத் தான் அவ நடந்தாகனும். அப்போ பார்த்துக்கலாம்”என்று அவரைச் சமாதானம் செய்தார் விஜயன்.
இதே சமயம் தனது மனைவியை அவளது பிறந்தகத்தில் விட்டு, விட்டுத் தன் வீட்டை அடைந்த சம்யுக்தனோ, அங்கு நடந்ததை தன் பெற்றோரிடம் கூறி விட்டுத் தனது அறைக்குப் போய் நிம்மதியாக உறங்கி விட்டிருந்தான் சம்யுக்தன்.
அதேபோல் அவனது அக்கறை மழையில் நனைந்து தனது உள்ளம் குளிர்ந்து போய் நெடு நாட்களுக்குப் பிறகு நிறைவானத் தூக்கத்தை மேற்கொண்டாள் வசுமதி.

- தொடரும்