STN 22
New member
தனது இரு கரங்களாலும் தலையைப் பிடித்துக் கொண்டு துடிதுடித்துக் கொண்டிருந்தாள் வசுமதி.
அவளால் தன் தலையை யாரோ சுத்தியலை வைத்து அடிப்பதைப் போன்ற வலியைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை!
“என்னை விட்டுப் போ!”என்று ஈனஸ்வரத்தில் முனங்கத் தொடங்கி விட்டிருந்தாள்!
அவளது அந்த வேதனையை அறியாமல், தனது காலை உணவை உண்டு முடித்து விட்டுத் தன் மதிய உணவு அடங்கிய பாத்திரத்தை எடுத்துக் கொண்டு,
“வசுவைக் கொஞ்ச நேரத்துக்குத் தொந்தரவு செய்யாதேம்மா. அவளே சரியாகி கீழே வரட்டும். அதுக்கான டைம் கொடுப்போம்!”என்று மனைவியிடம் அறிவுறுத்தினார் விஜயன்.
“சரிங்க. அவ மாப்பிள்ளை கிட்டே என்னச் சொல்லனுமோ சொல்லிக்கட்டும். இனிமேல் இது அவளோட வாழ்க்கை! அதை அவ காப்பாத்திக்க என்னச் செய்யனும்னு நினைக்கிறாளோ, செய்யட்டும்”என்றுரைத்து விட்டுக் கணவனை வழியனுப்பி வைத்தார் கண்மணி.
ஆனால் இங்கே தங்கள் வீட்டு மாடியில் நின்று கொண்டுத் தன்னுடைய தலையிலிருந்த கைகளை எடுக்காமல் அப்படியே நின்றிருந்த வசுமதியோ,
“என்னை விட்டுப் போ அப்படின்னுச் சொல்றேன்ல? அது உனக்குக் கேட்கலையா? எதுக்கு என்னை இப்படி சித்ரவதைப் பண்ற? என்னால் உன்னைக் கன்ட்ரோல் செய்ய முடியலை! என் தலையைப் போட்டுக் குடையிறதை நிப்பாட்டு!”என்றவளோ,
அந்த தலைவலியைக் கண்ணுக்குத் தெரியாத ஒரு அரக்கனைப் போல் உருவகப்படுத்திக் கொண்டு அவன் தன்னைச் சித்திரவதை செய்வதைப் போன்றதொரு மாயையை உருவாக்கிக் கொண்டுக் கொஞ்சம், கொஞ்சமாகத் தன்னிலையை இழந்தாள்.
“விடு என்னை! எனக்கு ரொம்ப வலிக்குது! என்னை அப்படி அடிக்காதே!”என்று தனது உடலின் சக்தி மொத்தத்தையும் இழந்து விட்டதைப் போல் உணர்ந்தாள் வசுமதி.
ஆனாலும் அவள் தனக்கு ஏற்பட்ட வலியால் புலம்புவதை மட்டும் நிறுத்தி விடவில்லை.
ஒரு கட்டத்திற்கு மேல்,”அப்போ, நீ என்னை விட மாட்டே! அப்படித் தானே? நான் உன்னை ஜெயிக்க விட மாட்டேன்! நான் இருக்கிறதால் தானே நீ என்னைப் போட்டுப் பாடாய்ப் படுத்தி எடுக்கிற? நான் இல்லைன்னா என்னை விட்ருவ தானே? ம்ஹ்ம். நீ கண்டிப்பாக என்னை விட்ருவ!”என்று அந்த உருவம் இல்லாத தலைவலியுடன் பேசி, சவால் விட்டவளோ,
தனது தலையிலிருந்து தன் கைகளை அகற்றிக் கொண்டு இதழ்களில் புன்னகையைத் தருவித்துக் கொண்டு, அந்த மாடியின் கைப்பிடிச் சுவற்றின் அருகில் சென்று மேலிருந்து கீழே எட்டிப் பார்த்து,
“ம்ஹ்ம். நீ என்னை விட்டுப் போக மாட்டே! ஆனால் நான் உன்னை விட்டுப் போகப் போறேன்”என்று சூளுரைத்து விட்டு அந்த விபரீதமான முடிவை எடுத்து விட்டிருந்தாள் வசுமதி!
ஆம்! அவள் அந்த மாடியின் கைப்பிடி விளிம்பில் நின்று கொண்டுக் கண் இமைக்கும் நேரத்தில் கீழே குதித்திருந்தாள்!
அவள் அவ்வளவு உயரத்தில் இருந்து விழுந்த சத்தம் தனது கணவனை வழியனுப்பி விட்டு வந்த கண்மணிக்குக் கேட்டு விடவும் என்னவென்று தன் வீட்டு வாசலின் பக்கவாட்டு இடத்தில் பார்வையைப் பதித்தார்.
அங்கே தங்களது அருமைப் புத்திரியோ குப்புற விழுந்து அவளது உடலிலிருந்து செந்நிறத் திரவம் வெளி வந்து விட்டதைக் கண்டுப் பதறிப் போய் அவளிடம் ஓடி,
“வசும்மா! நீ எப்படி கீழே விழுந்த? இவ்வளவு ரத்தம் வந்துருக்கு! வசும்மா!”என்று அவளைப் பிடித்து உலுக்கி எடுத்தவரின் கரங்களும் இரத்தத்தில் நனைந்து விட்டிருந்தது.
அவரது கதறலைக் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு வந்து சேர்ந்து விட,
அவர்களோ வசுமதியின் நிலையைக் கண்டுத் திகைத்துப் போயினர்.
உடனே,”கண்மணிம்மா! வசுவுக்கு என்னாச்சு? மாடியிலிருந்து தவறி விழுந்துட்டாளா?”என்று அவரிடம் கேட்க,
கண்மணிக்குத் தன் மகளைத் தவிர்த்து எதுவும் நினைவில் இல்லை.
அதனால் யாருக்கும் பதில் சொல்லும் நிலையில் இல்லை!
“என் பொண்ணு!”எனத் தன் மகளின் உடலை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டு இருந்தார் கண்மணி.
அவரிடம் விசாரிப்பது வீண் என்பதைப் புரிந்து கொண்டு விஜயனுக்கு அழைத்து உடனே வீட்டிற்கு வருமாறு தெரிவித்தார்கள்.
அவரோ தங்களது மகள் மீண்டும் அன்னையிடம் ஏதாவது சண்டை போட்டுக் கூச்சலிட்டு விட்டாள் போலும் அதனால் தான் தங்களது பக்கத்து வீட்டிலிருந்து அழைப்பு வந்துள்ளது என்று தனது வேலையிடத்தில் சொல்லிக் கொண்டு வீட்டிற்கு விரைந்து வந்திருந்தார்.
அங்கே தங்களது மகள் வசுமதியின் ரத்தம் தோய்ந்த உடலும், மனைவியின் பிரம்மைப் பிடித்த முகமும் தான் அவருக்குக் காணக் கிடைத்தது!
உடனே பெருங்குரல் எடுத்து,”வசும்மா!”என்று கத்தி அவளது அருகில் செல்ல முயன்ற போது ஆம்புலன்ஸ் அங்கே வந்திருக்கவும்,
“விஜயன் சார்! ஆம்புலன்ஸ் வந்தாச்சு. உங்கப் பொண்ணை ஹாஸ்பிடலுக்குக் கூட்டிட்டுப் போவோம். இல்லைன்னா இதிலேயே ஃபர்ஸ்ட் எய்ட் செஞ்சி உயிரைக் காப்பாத்தவும் வாய்ப்பு இருக்கு”என்றார் அவர்களது அண்டை வீட்டு ஆள்.
அதேபோல் அவர்களிடமிருந்து வசுமதியின் உடலை ஆம்புலன்ஸில் ஏற்றினர் அரசு மருத்துவமனையில் இருந்து வந்திருந்தவர்கள்.
ஆனால்,”ஏங்க! நம்மப் பொண்ணுப் பிழைச்சிப்பாள் தானே? அவளுக்கு அதிகமாக ரத்தம் வெளியேறி இருக்கு! உடனே ரத்தம் ஏத்தனும்னும், ட்ரீட்மென்ட் பார்க்கனும்னும் சொல்லுவாங்க! அதுக்குப் பணம் வச்சிருக்கீங்க தானே?”என்று கணவனிடம் நடுக்கத்துடன் வினவினார் கண்மணி.
“இருக்கும்மா”என்று தழுதழுத்தக் குரலில் கூறினார் விஜயன்.
“நீங்களும் வாங்க”என அவர்கள் இருவரையும் ஆம்புலன்ஸில் ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர்.
வசுமதியின் முகத்தைப் பார்த்துக் கண்ணீர் சிந்திக் கொண்டிருந்த அவளது பெற்றோருக்கு அழுகை நின்றபாடில்லை!
மருத்துமனைக்குள் நுழைந்ததும் துரிதமாகச் செயல்பட்டு ஆம்புலன்ஸில் இருந்த வசுமதியின் உடல் ஸ்ட்ரெக்ச்சருக்கு மாற்றி மருத்துவருக்குத் தகவல் தெரிவித்தார்கள் கம்பவுண்டர்ஸ்!
உடனே அங்கே வந்த பெண் மருத்துவரோ, வசுமதியைப் பரிசோதித்துப் பார்த்து விட்டு,
“சாரி! இவங்க ஆம்புலன்ஸில் வரும் போதே இவங்களோட உயிர் போயிடுச்சு! மற்ற ஃபார்மாலிட்டீஸைப் பாருங்க”என்று வருத்தத்துடன் கூறி விட்டுச் சென்று விட்டார்.
அதைக் கேட்ட விஜயனும், கண்மணியும் அழுது, அரற்றத் தொடங்கி விட்டார்கள்.
“இந்தப் பொண்ணோட அப்பா, அம்மா மட்டும் வந்திருக்காங்க. இந்தப் பொண்ணுக் கழுத்தில் தாலி இருக்கு. புருஷன் வரலையா? இந்தப் பொண்ணுத் தன்னோட புகுந்த வீட்டு ஆளுங்களோட கொடுமைத் தாங்காமல் எதுவும் தற்கொலை பண்ணிக்கிச்சோ”என்றெல்லாம் அந்த மருத்துவமனையில் இருந்த மற்ற நோயாளிகள் பத்து நிமிடத்தில் பார்த்த வசுமதியைப் பற்றிய தங்களது சந்தேகத்தை வெளிப்படுத்தினர்.
அதைக் கேட்ட விஜயனும், கண்மணியும் தங்களது அழுகையின் அளவைக் கூட்டி விட்டிருந்தார்கள்.
அவர்களால் தங்களது மகளைப் பற்றிய மற்றவர்களின் கற்பனைகளைக் கேட்டுச் சகித்துக் கொள்ள முடியவில்லை!
அதனாலேயே,”ஏங்க! நம்ம சம்பந்தி வீட்டுக்குக் கால் செஞ்சி, வசு மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து இறந்துட்டாள்ன்னுச் சொல்லிடுங்க!”என்று கணவனிடம் தீர்க்கமாக உரைத்திருந்தார் கண்மணி.
அதைக் கேட்டதும் மனைவியைத் திடுக்கிட்டுப் பார்த்து,”என்னம்மா சொல்ற? அவ தவறி தான் கீழே விழுந்தாளா?”என விசாரணை செய்தார் விஜயன்.
“அது எனக்குச் சரியாகத் தெரியாதுங்க. ஆனால் இங்கே அவளைத் தெரியாதவங்களே எப்படி, எப்படியோ பேசுறாங்க! ஒருவேளை அவ தவறி விழுகாமல் இவங்க சொன்னா மாதிரித் தற்கொலை செய்திருந்தால் நம்ம சம்பந்தி வீட்டாளுங்க நம்மப் பொண்ணை என்ன நினைப்பாங்கன்னு யோசிச்சுப் பாருங்க! இதெல்லாம் எதனால்? நாமப் பொய்ச் சொல்லி இவளைக் கட்டிக் கொடுத்ததால் தானே? அது அவங்களுக்குத் தெரிஞ்சா என்னாகும்னு யோசிச்சுப் பார்த்தேன்!”என்றவரிடம்,
“அவங்க அப்படிப் பேசுற ஆளுங்க இல்லம்மா”என்று புரிய வைக்க நினைத்தார் கணவர்.
“அவங்க அப்படிப் பேசுற ஆளுங்க இல்லை தான்! ஆனால் நம்மளைச் சுத்தி இருக்கிற ஆளுங்க அவங்க மனசைக் குழப்பி நம்ம கிட்டே விஷயத்தை வாங்க வைக்கச் சொல்லித் தூண்டலாம்! நம்மப் பொண்ணோட ஆன்மா அந்தப் பேச்சை எல்லாம் கேட்டுச் செத்தும் நிம்மதி இல்லாமல் அலையுறதில் எனக்கு விருப்பம் இல்லை! அவ தவறி விழுந்து செத்ததாகவே இருக்கட்டும்!”என்று உறுதியாக உரைத்து விட்டார் கண்மணி.
அந்த நிலைமையில் அவர் கூறுவதும் சரியென்று தான் விஜயனுக்குமே தோன்றிற்று.
உடனே அதைச் செயல்படுத்தி விட அவர் கூறியதைக் கேட்டு அடித்துப், பிடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்திருந்தனர் சம்யுக்தனும், அவனது வீட்டாரும்.
“சம்பந்தி! வசுவுக்கு என்னாச்சு? ஏன் இப்படி? மடியில் தவறி விழுகிற அளவுக்கு ஏன் அப்படி இருந்தாள்?”என அடுக்கடுக்காக கேள்விகளைத் தொடுத்தனர் ஜெயராம் மற்றும் கலாவதி.
ஆனால், தான் எதுவும் பேசாமல் இறுகிப் போய்க் விழிகளில் நீர்ப்படலங்களுடன்,”நான் மதியைப் பார்க்கனும்”என்றிருந்தான் சம்யுக்தன்.
உடனே,”அவங்களோட டெட்பாடிக்குச் செய்ய வேண்டியதை எல்லாம் செஞ்சிட்டு இருக்காங்க. வெயிட் பண்ணுங்க சார்”என்று கம்பவுண்ட்டர் சொல்லி விடவும்,
விஜயன் மற்றும் கண்மணியிடம்,”நான் தான் உங்ககிட்ட மதியைப் பேசிப் படுத்தாதீங்கன்னுச் சொல்லி இருந்தேன் தானே? அவங்களோட இந்த நிலைமைக்கு நீங்க தான் காரணம்!”என்றவனை ஆங்காரமாகப் பார்த்து,
“ஓஹோ! எங்க மகள் இறந்ததுக்கு நாங்க தான் காரணமா? அவ கூட ஒன்னு, மண்ணாக வாழாமல் அவளைத் தள்ளி வச்ச உங்களுக்கு இதில் எந்தச் சம்பந்தமும் இல்லை? அப்படித் தானே?”எனப் பொரிந்தார் கண்மணி.
அதைக் கேட்டதும் அவனது தாயும், தந்தையும் இடிந்து போய் விட்டார்கள்.
அவர்களது அந்த அருவருக்கத்தக்கப் பேச்சால் வெகுண்டு எழுந்து,“நீங்க என்னப் பேசுறீங்கன்னுத் தெரியுதா?”எனக் குரலை உயர்த்திக் கேட்டான் பிரதீபன்.
“எங்களைப் பேச நீ யாருடா? உங்கண்ணன் பண்ணத் தப்பைக் கேட்க உங்கப்பா, அம்மாவுக்குத் துப்பில்லை! வந்துட்டான் சுண்டைக்காய் பையன்!”என்று அவனுக்குச் சமதையாக கர்ஜித்தார் விஜயன்.
தங்கள் வீட்டு நிலைமை இப்படி பொதுவெளியில் காட்சிப் பொருளாக இருப்பதை விரும்பாத ஜெயராமோ,”ஷ்ஷ்! பிரதீபா! நீ அமைதியாக இரு!”எனச் சின்னவனை அடக்கி விட்டு,
“வசுவோட உடலை வாங்கிட்டு வீட்டுக்குப் போய்ச் அவளை நல்லபடியாக வழியனுப்பி வச்சிட்டு மத்ததைப் பேசிக்கலாம் சம்பந்தி”என்று கூறி வசுமதியின் பெற்றோரை அமைதிப்படுத்தினார்.
அதேபோல் தன் மேல் கண்மணி வைத்தக் குற்றச்சாட்டைக் கேட்டதற்குப் பிறகில் இருந்து தன் வாயைத் திறந்து ஒரு வார்த்தைக் கூடப் பேசவில்லை சம்யுக்தன்.
உடனே தாங்களும் அமைதியாகி விட்டு வெள்ளைத் துணியால் சுற்றித் தந்திருந்த தங்களது மகளின் உடலை எடுத்துக் கொண்டு வீட்டை அடைந்தனர்.
அவளது உடலைக் கவனயாக கையாண்டுக் கூடத்தில் கிடத்தி இருந்தார்கள்.
வசுமதியின் விவரத்தைக் கேட்டு ஒவ்வொருவராக விசாரிக்க வந்து விட்டிருக்க அங்கேயிருந்த அனைவரும் அழுகையில் கரையத் தொடங்கி விடத் தனக்குள் மொத்தமாக உருக்குலைந்து போயிருந்தான் சம்யுக்தன்.
- தொடரும்