STN 22
New member
அதைக் கேட்டதும் சில கணங்கள் அதிர்ச்சியில் உறைந்து விட்டிருந்தார் கலாவதி.
ஏனென்றால் தனது மகனுக்கு வசுமதியுடனான திருமணத்தைப் பற்றிய விஷயங்கள் எதையும் பிரார்த்தனாவிடமும், அவளது பெற்றோரிடமும் கூறாமல் தான் சம்யுக்தனுக்கு அவளைத் திருமணம் செய்து வைத்து இருந்தார்கள்.
அதேபோல், தங்களது மகள் சம்யுக்தனை விரும்புவதாகத் தெரிந்த பிறகு தான் அவனது முதல் திருமணத்தைப் பற்றி எதுவும் கேட்டுக் கொள்ளாமல் தான் பிரார்த்தனாவின் பெற்றோரும் அவளைச் சம்யுக்தனுக்குத் திருமண செய்து வைத்திருந்தனர்.
ஆனால் அப்படி இருக்கும் போது இப்போது திடீரென்று தன்னிடம் வந்து வசுமதியின் பேச்சை எடுத்த மருமகளைக் கிலியுடன் பார்த்திருந்தார் கலாவதி.
அதைப் புரிந்து கொண்டு,”நான் அவங்களைப் பத்தி தெரிஞ்சிக்கனும்னு தான் ஆசைப்பட்றேன்த்தை. இதனால் எங்க ரெண்டு பேரோட வாழ்க்கையில் எந்தப் பிரச்சினையும் வராது! நானும் அவரை விட்டுப் பிரியப் போவதில்லை. அதனால் நீங்க தயங்காமல் எங்கிட்ட எதையும் மறைக்காமல் சொல்லுங்கத்தை. ப்ளீஸ்!”என்று அவரிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டாள் பிரார்த்தனா.
அதில் அவரது முகம் தெளிவடைந்து விடவும், வசுமதியைப் பற்றித் தனக்குத் தெரிந்தவற்றை அவளிடம் கூறத் தொடங்கினார் அவளது மாமியார்.
“நாங்க வசுமதியோட வீட்டுக்குப் பொண்ணுக் கேட்டுப் போற விஷயத்தை சம்யுவுக்குச் சொல்லலை. எல்லாம் கூடி வந்தால் அப்போ சொல்லிக்கலாம்னு நினைச்சோம். அங்கே போய்ப் பேசினப்போ அவ வேலைக்குப் போயிருந்ததால் எங்களால் அவளைப் பார்க்க முடியலை. அதனால் அவங்க அப்பா, அம்மா கிட்டே மட்டும் பேசிட்டு வந்தோம். அதே மாதிரி அவங்களும் எங்க கூடச் சம்பந்தம் வச்சுக்க சம்மதிச்சு எங்களை வழியனுப்பி வச்சாங்க! நாங்க வீட்டுக்கு வந்ததுக்கு அப்பறம் கல்யாணத்தில் சம்யு போட்ட கண்டிஷனை அவங்களுக்குக் கால் செஞ்சி சொன்னேன்! அதைக் கேட்டதுக்கு அப்பறமும் அவங்க பொண்ணும் அதே மாதிரியான குணாதிசயம் இருக்கிறவ தான். அதனால் இந்தக் கல்யாணத்தில் எங்களுக்குப் பரிபூரண சம்மதம்ன்னுச் சொன்னாங்க. அதுக்கப்புறம் தான் நாங்க இதைச் சம்யுகிட்டே சொன்னோம். அவனும் சரின்னுச் சொல்லிப் பொண்ணுப் பார்க்க வந்தான்! நிச்சயம், கல்யாணம்ன்னு எல்லாமே கூடி வந்து வசுமதி எங்க வீட்டுக்கு மருமகளாக வந்தாள்!”என்றவரோ,
“சாப்பாடு ஆறிப் போயிடும். முதல்ல சாப்பிட்டுட்டு மிச்சத்தைப் பேசலாம்”என்று அவளுக்கு அறிவுறுத்த,
உடனே இருவரும் தங்களது உணவை உண்டு முடித்து தட்டுக்களைக் கழுவி வைத்த பின்னர் அதே இடத்திலேயே அமர்ந்து கொண்டுத் தங்களது உரையாடலைத் தொடர்ந்தார்கள்.
“கல்யாணத்துக்கு அப்பறம் அவங்க உங்க கூட எப்படி நடந்துக்கிட்டாங்கத்தை?”என அவரிடம் கேட்டாள் பிரார்த்தனா.
“அவ ரொம்ப அமைதியாக இருந்தாள். யார் கூடவும் அதிகமாகப் பேசலை. சம்யுவைத் தவிர நாங்க மூனு பேருமே ஜாலி டைப் தான். பிரதீபன் கூடக் கூடப் பேச மாட்டாள்! அவனும் அவ கிட்ட பேச டிரை பண்ணி அது முடியாமல் அவளைச் சங்கடப்படுத்தக் கூடாதுன்னு விட்டுட்டான்! ஆனால் அவ கொஞ்ச நாள் போகப் போகப் பேசுறதையே நிறுத்திட்டு எல்லா வேலையையும் இழுத்துப் போட்டுச் செய்வாள். நானும் வீட்டில் இருக்கிறதால் அவளுக்கு நேரம் போக மாட்டேங்குதுன்னு இப்படி நடந்துக்கிறாள்ன்னு நினைச்சு விட்டுட்டேன். அதுக்கப்புறம் அவளோட அப்பா, அம்மா வந்து பார்க்கும் போதெல்லாம் அவளுக்குத் தலைவலி வருதுன்னு சொல்லிட்டு இருந்தாள். ரொம்ப சோர்வாக இருந்தாள். அதனாலேயே அவங்களை வரக் கூடாதுன்னு வசுகிட்டே சொல்லி அவங்க கிட்ட சொல்லச் சொல்லிட்டான். அதனால் அவங்களும் இங்கே வந்து, போறதை நிறுத்திட்டாங்க! அதுக்கப்புறமும் அவளுக்குத் தலைவலி நிற்கவே இல்லை போல! அதனால் அவளை ஹாஸ்பிடலுக்கு அழைச்சிட்டுப் போனான் சம்யு! ட்ரீட்மென்ட் பார்த்து, டேப்லெட் எல்லாம் வாங்கிட்டு வந்தாங்க! ஆனாலும் அவளோட களைப்பான முகம் மாறலை! நான் கூட அவ ப்ரெக்னென்ட் ஆக இருக்கா போலன்னு நினைச்சேன். ஆனால் அதுவும் இல்லன்னுத் தெரிஞ்சது. அதே மாதிரி ஒருநாள் அவளோட அப்பா, அம்மாவை சம்யு ஏதோ பேசிட்டான்னு அவன் மேல் கோபப்பட்டுக் கத்தினாள். அப்போ தான் அவளுக்கு இவ்வளவு கோபம் வரும், அவளால் சத்தமாகப் பேச முடியும்னு எங்களுக்குத் தெரிஞ்சது. அதுக்கப்புறம் அவளோட போரன்ட்ஸைப் பத்திச் சம்யு எதுவும் குறை பேச மாட்டான்! அவனே முன் வந்து அவளை அவ பிறந்த வீட்டுக்குக் கூட்டிட்டுப் போனான். அப்பவும் அவளுக்குத் தலைவலி வந்துச்சு! ஆனால் கடைசியாக அவ வீட்டிக்குப் போன அன்னைக்குத் தான் அவ எல்லாரையும் விட்டுட்டு ஒரேயடியாகப் போயிட்டாள்! ஒரு மாமியாராக நான் அவளை நல்லா தான் பார்த்துக்கிட்டேன்! ஆனால் அவ என்னை ஒரு எல்லைக்குள் நிறுத்தி வச்சிருந்தாள். நான் என்ன, ஏதுன்னுக் கேட்டால் கூட ரொம்ப எல்லாம் சொல்ல மாட்டாள்! அவளோட இறப்பை நினைச்சு இப்பவும் எனக்கு ரொம்ப குற்ற உணர்ச்சியாக இருக்கு! ஏன்னா, நான் தானே அவளைப் பத்தி இவங்க எல்லார் கிட்டேயும் சொல்லி அவளைப் பொண்ணுக் கேட்டு என் பையனுக்குக் கட்டி வச்சேன்! அதான்!”என்று தன் கண்களின் ஓரத்தில் கசிந்த கண்ணீர்த் துளியைப் புடவை முந்தானையால் துடைத்தெறிந்தார் கலாவதி.
அவர் கூறியதைக் கேட்டதும் தனக்குள் எழுந்த சந்தேகம் இன்னும் வலுத்து விட்டிருந்ததை உணர்ந்தாள் பிரார்த்தனா.
அதேபோல் தனது நடைப்பயிற்சியை முடித்து விட்டு வந்த போது, தனது மனைவியும், மருமகளும் உரையாடுவதைக் கண்டு அவர்களைத் தொந்தரவு செய்ய விரும்பாமல் மதியத் தூக்கம் போடத் தன் அறைக்குச் சென்று விட்டு,
மாலையில் உறக்கத்தில் இருந்து விழித்து எழுந்து வரவேற்பறைக்கு வந்தார் ஜெயராம்.
உடனே,”அந்தப் பொண்ணு எங்கிட்ட அவ்வளவாகப் பேசாது பிரனா. நானாகத் தான் அப்பப்போ சாப்பிட்டியாம்மா? அப்படின்னு விசாரிப்பேன். அவ்வளவு தான்!”என்றுரைத்து விட்டார் ஜெயராம்.
அதே வினாவை மாலையில் கல்லூரி முடிந்து வந்திருந்த பிரதீபனிடம் எழுப்பி இருந்தாள் பிரார்த்தனா.
அதற்கு அவனோ,”அவங்க என் முகத்தைக் கூடப் பார்க்க மாட்டாங்க அண்ணி. அவங்க கூட ரெண்டு, மூனு தடவைப் பேச முயற்சிப் பண்ணேன். ஆனால் அவங்க ரொம்ப தயங்கினாங்க. அதனால் நானுமே அவங்க கிட்ட ஒரு சில வார்த்தைகளுக்கு மேலே பேசலை!”என்று பதிலளித்து விடவும்,
உடனே தனது அறைக்குச் சென்று, தன்னிடம் சம்யுக்தன் விவரித்த விஷயங்களையும், இவர்கள் மூவரும் கூறிய பதிலையும் வைத்துப் பார்க்கையில் இவர்களிடம் வசுமதியும், அவளது பெற்றோரும் ஏதோ ஒரு விஷயத்தை மறைத்து இருக்கிறார்கள். அதனால் தான் அவளால் சம்யுக்தனுடனும், அவனது குடும்பத்தாருடனும் இயல்பாகப் பழக முடியவில்லை என்பது பிரார்த்தனாவிற்குத் தற்போது தெள்ளத் தெளிவாகப் புரிந்து விட்டிருந்தது.
அதனால் தனது அடுத்தடுத்த நடவடிக்கைகளைச் சம்யுக்தனுக்குத் தெரியப்படுத்தாமல் பார்த்துக் கொள்ள முடிவெடுத்து விட்டாள் பிரார்த்தனா.
சில நிமிடங்கள் கழித்து,”நீ வீட்டுக்கு வந்து ரொம்ப நேரமாச்சு. இன்னும் காபி குடிக்கலை தானே? நான் நம்ம எல்லாருக்கும் போட்டு எடுத்துட்டு வர்றேன். நாம பேசிக்கிட்டே குடிக்கலாம்”எனப் பிரதீபனிடம் கூறி விட்டுச் சமையலறைக்குச் சென்று தங்கள் நால்வருக்கும் காபி போட்டு எடுத்து வந்து,
தன் புகுந்த வீட்டாருடன் ஒன்றாக அமர்ந்து காப்பிக் குடித்துக் கொண்டே அளவளாவத் தொடங்கி விட்டாள் பிரார்த்தனா.
அவளது செய்கைத் தங்களுக்கு வித்தியாசமாகப்படவில்லை என்பதாலேயே அவளுடன் இயல்பாகப் பேசிச், சிரிக்கலானார்கள் ஜெயராம், கலாவதி மற்றும் பிரதீபன்.
அப்போது வீடு வந்து சேர்ந்து இருந்த சம்யுக்தனோ அவர்களைப் புருவம் உயர்த்திப் பார்க்கவும்,
“நீங்க என்ன இப்படி முழிச்சிட்டு நிற்கிறீங்க? இப்படி வந்து உட்காருங்க! உங்களுக்குக் காப்பிப் போட்டுக் கொண்டு வர்றேன். எங்க கூடச் சேர்ந்து பேசிட்டே குடிங்க! அப்போ தான் மனசுக்கு ரிலாக்ஸ் ஆக இருக்கும்!”என்றவளோ அவனது பதிலை எதிர்பார்க்காமல் அவனுக்குக் காப்பிக் கலக்கிக் கொண்டு வந்து கொடுத்து விட்டுப் பழையபடியே தனது பானத்தைப் பருகினாள் பிரார்த்தனா.
அவள் கொடுத்த காபியைக் கையில் வைத்துக் கொண்டு,”நான் இன்னும் முகம், கை, கால் கழுவலை!”என்றுரைத்தான் சம்யுக்தன்.
“அச்சோ! நான் பேச்சு மும்முரத்தில் அதை மறந்தே போயிட்டேன்ங்க. இந்த ஒரு தடவை அட்ஜஸ்ட் செஞ்சி இதைக் குடிச்சிட்டுப் போய் மத்த வேலைகளைப் பாருங்களேன்!”என அவனிடம் கெஞ்சலாக கூற,
மனைவியிடம் எதிர்வாதம் செய்யாமல் அவள் சொன்னதைச் செய்தான்.
ஆனாலும் மற்றவர்களுடன் அவனால் பேசிச், சிரிக்க முடியவில்லை.
அதனால் அவர்களது உரையாடலைக் கவனித்துக் கொண்டே காபியைப் பருகி முடித்து விட்டு அறைக்குச் சென்று விட்டிருந்தான் சம்யுக்தன்.
அன்றிரவு உணவை முடித்துக் கொண்டுக் கணவன் நன்றாக உறங்கி விட்டதை அறிந்ததும்,
தனது மாமியாரிடம் போய்,”எனக்கு அந்த வசுமதியோட வீட்டு அட்ரஸ் வேணும்த்தை”எனத் தீர்க்கமாக கேட்டாள் பிரார்த்தனா.
“அது உனக்கு எதுக்குப் பிரனா? நீ எங்கிட்ட கேட்டதுக்காக நான் அவளைப் பத்தி எனக்குத் தெரிஞ்ச எல்லாத்தையும் உங்கிட்ட சொல்லிட்டேன்ல? அப்பறம் என்ன? இதை இப்படியே விட்ரு! அது தான் உன் கல்யாண வாழ்க்கைக்கு நல்லது!”என்று அவளைக் கடுமையாக எச்சரிக்கை செய்தார் கலாவதி.
ஆனால்,”என் கல்யாண வாழ்க்கை உங்கப் பிள்ளையோட கடைசி வரைக்கும் நல்லா இருக்கனும்னா நீங்க வசுமதியோட வீட்டு அட்ரஸை எனக்குக் கண்டிப்பாகத் தந்து தான் ஆகனும்த்தை! அது என்னை விட உங்கப் பையனுக்குத் தான் நல்லதாக முடியும்! அதனால் தான் நான் இதில் இவ்வளவு தீவிரமாக இருக்கேன்! அதனால், எனக்கு நான் கேட்டதைக் கொடுங்க! ப்ளீஸ்!”என்று அவரிடம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்ளவும்,
அதில் அவளது உறுதியான நிலைப்பாடு வெளிப்படவே சம்யுக்தனின் நலனிற்காகத் இதையெல்லாம் செய்வதாக கூறிய மருமகளிடம் அதற்கு மேல் அவரால் மறுத்துப் பேச முடியவில்லை.
அதனாலேயே அவள் கேட்ட வசுமதியின் விலாசத்தை அவளிடம் கொடுத்து விட்டிருந்தார் கலாவதி.
அதே நேரத்தில்,“இதனால் இவங்க ரெண்டு பேரோட வாழ்க்கையில் ஏதாவது பிரச்சினை வருமோன்னு எனக்குப் பயமாக இருக்குங்க”என்று தன் மனக்குறையைக் கணவரிடம் வெளிப்படுத்தவும்,
தனக்கும் அந்தப் பயம் இருந்தாலும் கூடத் தங்கள் மருமகளின் மீதிருந்த நம்பிக்கையால்,”அவ இதில் காட்டுறத் தீவிரத்தைப் பார்த்தால் கண்டிப்பாக இதுக்கான தீர்வைக் கண்டுபிடிச்சுடுவாள்னு எனக்கு நம்பிக்கை இருக்கும்மா. அதனால் நீ அவளை இதிலிருந்து பின் வாங்குன்னுச் சொல்லாமல் அவளுக்குத் தேவையான உதவிகளைச் செய்! இதனால் வசுமதியோட சாவுக்கு நியாயம் கிடைக்கக் கூட வாய்ப்பு இருக்கு தானே? அதான் சொல்றேன்”என்று மனைவிக்கு அறிவுறுத்தினார் ஜெயராம்.
“சரிங்க”என அதற்குச் சம்மதம் தெரிவித்தார் கலாவதி.
- தொடரும்