STN 22
New member
“அப்பறம் ஏன் இப்படி அழுகுற?”என்று அவளிடம் அக்கறையுடன் வினவினான் சம்யுக்தன்.
அவனுக்குத் தனது மனைவி எதற்காக இப்படி அழுது கரைந்து கொண்டிருக்கிறாள் என்பது விளங்கவில்லை.
சில மணித்துளிகள் கழித்து, தன்னைச் சமன்படுத்திக் கொண்டு,”இப்போ என்னால் உங்ககிட்ட எதுவும் சொல்ல முடியாது! உங்களுக்கு என் மேல் நம்பிக்கை இருக்கு தானே?”என்று அவனிடம் எதிர்பார்ப்புடன் கேட்டாள் பிரார்த்தனா.
“எனக்கு உன் மேல் முழு நம்பிக்கை இருக்கு!”என்றதும்,
“அப்போ ஏன், எதுக்குன்னுக் கேட்காமல் நாளைக்குக் காலேஜூக்கு லீவ் போட்டுட்டு என் கூட ஒரு இடத்துக்கு வரனும்! வருவீங்க தானே?”என்றாள் ஆவலுடன்.
அதில் தன் புருவத்தைச் சுருக்கி அவளைப் பார்த்து,”உனக்காக வர்றேன்”என்றுரைத்து விட்டான் சம்யுக்தன்.
உடனே அவனது நெற்றியில் மென்மையாகத் தனது இதழ்களை ஒற்றி எடுத்தவளை அதிர்ந்து போய்ப் பார்க்க,
“என்ன ஷாக் ஆகிப் பார்க்கிறீங்க? இனிமேல் இதையெல்லாம் பழகிக்கோங்க!”என்று அவனுக்குக் கட்டளையிடும் விதமாக அறிவுறுத்தினாள் பிரார்த்தனா.
அதில் தனது இதழ்களில் புன்னகையை உற்பத்தி செய்து,”ஓகே”என அதற்குச் சம்மதிக்க,
“சரி வாங்க. நாம போய்க் காஃபி குடிக்கலாம்”என்று அவனைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு வரவேற்பறைக்குச் செல்ல,
அவர்களது முகங்கள் தெளிவாக இருப்பதைக் கண்டதும், சம்யுக்தனின் பெற்றோருக்கு மனம் இலேசாகி விடவும், தங்கள் நால்வருக்கும் காபி தயாரித்துக் கொண்டு வந்தார் கலாவதி.
“நாளைக்கு நம்மக் கூட அத்தையும், மாமாவும் வருவாங்க. அதேபோல், தன்னோட ஃப்ரண்ட்டோட சிஸ்டர் மேரேஜ் முடிஞ்சதும் பிரதீபனும் நாம போகப் போற இடத்துக்கு வந்து சேர்ந்திடுவான்”என்றவளைக் கண்கள் இடுங்க நோக்கி,
“அப்போ விஷயம் ரொம்ப சீரியஸ் போலவே?”எனக் கேட்டான் சம்யுக்தன்.
“ஆமாம். எதுவாக இருந்தாலும் நீங்க அதை எதிர்நோக்கித் தான் ஆகனும்! உங்களுக்குப் பக்கபலமாக நான் இருக்கேன்! என்னை நம்பி வாங்க!”என்று அவனிடம் தீர்க்கமாக கூறி விட்டாள் பிரார்த்தனா.
இதைக் கேட்டு விட்டுத், தங்கள் மகன் அவனுடைய மனைவியின் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறானே என்றெண்ணி வியப்படைந்தனர் ஜெயராம் மற்றும் கலாவதி.
அதற்குப் பிறகு இரவிலும் தங்களது படுக்கை அறையில் தன்னைக் கனிவுடன் பார்த்துக் கொண்டிருந்த மனைவியைக் கண்டுக் கலக்கமுற்று,
“நீ இப்படியே என்னைப் பார்த்துட்டுத் தூங்காமல் இருந்தால் நான் நாளைக்கு உன் கூட வர மாட்டேன் பிரனா!”என்று அவளிடம் கண்டிப்புடன் கூற,
அதில் முகத்தைச் சுருக்கிக் கொண்டு,”குட் நைட்”என்றுரைத்து விட்டுக் இண்களை மூடிக் கொண்டவளைப் பார்த்துப் புன்னகைத்து விட்டுத் தானும் உறங்கிப் போனான் சம்யுக்தன்.
அதற்குப் பிறகுக் காலையில் எழுந்து தானும் கிளம்பி, தனது கணவன் மற்றும் மாமனார், மாமியாரையும் கிளம்புமாறு அறிவுறுத்தினாள் பிரார்த்தனா.
அப்போது,”நாம எந்த இடத்துக்குப் போறோம்ன்றதை அவ உங்ககிட்டேயாவது சொன்னாளா?”எனத் அவளுக்குத் தெரியாமல் தன் பெற்றோரிடம் கேட்க,
“அவ எங்க கிட்டேயும் எதுவும் சொல்லலை”எனப் பொய் சொல்லி விட்டனர் இருவரும்.
அவர்களுக்கும் எதுவும் தெரியாது என்பதை அறிந்ததும் மனைவியின் வாயிலாகவே தெரிந்து கொள்ள முடிவெடுத்தான் சம்யுக்தன்.
அதே சமயம், தனது பெற்றோருக்கு அழைத்து,”நான் சொல்ற அட்ரஸூக்கு ரெண்டு பேரும் உடனே கிளம்பி வாங்க”என்றவளை,
“ஹேய்! எதுக்கு எங்களை இப்படி உடனே கிளம்பி வரச் சொல்ற? அது எந்த இடம்?”என்று கேள்விகளால் துளைத்து எடுத்தனர் சக்திவேல் மற்றும் கோமளா.
“எனக்குப் பிடிச்ச வாழ்க்கையை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நான் வாழனும்னு நீங்க தானே அடிக்கடி சொல்வீங்க? அதுக்கான கடைசி வாய்ப்பு எனக்குக் கிடைச்சு இருக்கு! அதில் உங்கப் பங்கும் இருக்கனும்னு ஆசைப்பட்றேன்! அதான்! நீங்க அந்த இடத்துக்கு வந்தாலே உங்களுக்கு எல்லாமே தெரிஞ்சிடும்!”என்று அவர்களுக்கு அறிவுறுத்தி உடனே கிளம்பி வரச் சொல்லி விட்டு அழைப்பை வைத்தாள் பிரார்த்தனா.
அதற்குப் பிறகுத், தனது கணவன் மற்றும் மாமனார், மாமியாரை வாடகைக் காரில் ஏற்றிக் கொண்டு வசுமதியின் இல்லத்தை நோக்கிப் பயணிக்கத் தொடங்கி விடத்,
தனது மகளின் வேண்டுகோளுக்கு இணங்கித் தாங்களும் ஒரு வாடகைக் காரைப் பிடித்துக் கொண்டு அவள் கூறிய விலாசத்திற்கு விரைந்தனர் சக்திவேல் மற்றும் கோமளா.
அதேபோல், தனது நண்பனின் தமக்கைக் கல்யாணத்தில் கலந்து கொண்டு அங்கேயே உணவுண்டு முடித்து விட்டு அங்கேயிருந்து தானும் வசுமதியின் வீட்டிற்கு நண்பனின் வண்டியில் பயணமானான் பிரதீபன்.
சில மணி நேரப் பயணத்திலேயே தங்களது இலக்கை அடைந்து விட்டிருந்தனர் பிரார்த்தனாவும், அவளது கணவன் மற்றும் புகுந்த வீட்டார்.
அவர்கள் காரை விட்டு இறங்கிய போது, தாங்களும் அங்கு வந்து சேர்ந்ததும்,
அவர்களைப் பார்த்து வணக்கம் வைத்து விட்டு,”எதுக்குடி இங்கே வரச் சொன்ன? இது யாரோட வீடு?”என மகளிடம் விசாரித்தார் கோமளா.
ஆனால் அவர்கள் அனைவரும் தங்களுக்குள் தர்மசங்கடத்துடன் பேசிக் கொண்டிருந்த போது,”இது என்னோட முதல் மனைவியோட வீடு”என்று அழுத்தம், திருத்தமாக மொழிந்து விட்டுப் பிரார்த்தனாவை வெறித்துப் பார்த்தான் சம்யுக்தன்.
அதைக் கேட்டதுமே,”என்னது? வசுமதி தானே அந்தப் பொண்ணோட பேரு? அவளோட வீடா இது?”என அதிர்வுடன் கேட்டார் சக்திவேல்.
ஆனால் தனது கணவனின் பார்வையைத் தைரியமாக எதிர்கொண்டு,”ஆமாம்ப்பா”என்று தந்தைக்குப் பதிலளித்தாள் பிரார்த்தனா.
அதேநேரம் அங்கே வந்து சேர்ந்ததும் தனது தமையனின் முகத்தில் தெரிந்த இறுக்கத்தைக் கண்டு கொண்டு அவனது அருகில் சென்று அவனுக்குத் துணையாக நின்று கொண்டான் பிரதீபன்.
“நீயும் எங்கிட்ட இதை மறைச்சிட்டேல்ல?”என அவனிடம் கண்களில் வலியுடன் கேட்டான் சம்யுக்தன்.
அவன் பதில் கூறுவதற்கு முன்பு,“நான் தான் உங்ககிட்ட எதுவும் சொல்லக் கூடாதுன்னு இவங்க கிட்ட கேட்டுக்கிட்டேன்!”என்ற மனைவியிடம்,
“சரி. நான் இப்பவும் உன்னை நம்புறேன். உள்ளே போகலாமா?”என்றிருக்க,
“ம்ஹ்ம். வாங்க போகலாம்”என்று அந்த வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினாள் பிரார்த்தனா.
உடனே கதவைத் திறந்த கண்மணியோ, அவளைப் பார்த்ததும்,”வா, ம்மா”என்று முகம் மலர வரவேற்று, கொஞ்சம் தள்ளி இருந்த மற்றவர்களைக் கண்டதுமே சிறு சங்கடத்துடன் அவர்களை ஏறிட்டு,
“எல்லாரும் உள்ளே வாங்க!”என்று அனைவரையும் உள்ளே அனுமதித்தார்.
அங்கேயிருந்த விஜயனும் கூட அவர்களை நன்முறையில் வரவேற்க, அதைச் சம்யுக்தனும், அவனது பெற்றோருடன் சேர்ந்து பிரார்த்தனாவின் பெற்றோரும் ஆச்சரியமாகப் பார்த்தனர்.
தரையில் போர்வையை விரித்து அவர்களை உட்காரச் செய்தார்கள் வசுமதியின் பெற்றோர்.
அவர்களுக்குக் குடிக்கப் பழச்சாறு கொடுக்க, மற்றவர்கள் அனைவரும் ஒரு மரியாதைக்காகவேனும் அதைப் பருக அந்த தம்ளரைக் கூடத் தொடாமல் இறுக்கமாக இருந்தான் சம்யுக்தன்.
அதனால்,”நாங்க ரொம்ப நேரம் எடுத்துக்க விரும்பல. நேத்து இங்கே வந்த பிரார்த்தனா கிட்டே நாங்க மறைச்ச எல்லாத்தையும் சொல்லிட்டோம். இப்போ அதையெல்லாம் உங்க கிட்ட சொல்லப் போறோம்”என்றதுமே,
அப்படியென்றால் நேற்று தன் மனைவித் தனது தோழி வீட்டுக்குச் செல்வதாக கூறிவிட்டு இங்கு தான் வந்திருக்கிறாள் என்பதை தெரிந்து கொண்டு, நேற்று நடந்தவற்றைத் தன் மனதில் ஓட்டிப் பார்த்து விட்டு, வசுமதியின் பொற்றோரைக் கூர்மையுடன் பார்க்கலானான் சம்யுக்தன்.
உடனே தாங்கள் இவ்வளவு மாதங்களாகத் தங்களுக்குள் மறைத்து வைத்திருந்த விஷயங்களை அவர்களிடம் ஒப்புவித்து முடித்திருந்தார்கள் விஜயன், கண்மணி.
அதைக் கேட்க, கேட்க அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டிருந்தான் சம்யுக்தன்.
அவனது குடும்பமும், பிரார்த்தனாவின் பெற்றோரும் கூடத் தங்களது விழியை விரித்து அதிர்ச்சியை வெளிப்படுத்த,
“ஆனால் இன்னும் ஒன்னு இருக்கு! அதை நாங்கப் பிரார்த்தனா கிட்டே கூடச் சொல்லலை!”என்றக் கண்மணியோ,
தங்களது மகள் இறந்து ஒரு மாதம் ஆகிய நிலையில் தங்களை அதிலிருந்து மீட்டெடுத்துக் கொண்டிருந்த போது,”மணியக்கா! வசு இறந்த அன்னைக்கு என் பொண்ணு நிறை மாசமாக இருந்தால் அப்போ, வசு மாடியில் ரொம்ப நேரமாகத் தன்னோட தலையைப் பிடிச்சுக்கிட்டு இருக்கவும், அதை இங்கேயிருந்து பார்த்த என் பொண்ணு எங்கிட்ட வந்து விஷயத்தைச் சொன்னாள். உடனே நாங்க அதை உங்க கிட்டே சொல்ல வரும் போது அவளுக்குப் பனிக்குடம் உடைஞ்சிருச்சு! அதனால் அவளை உடனே ஹாஸ்பிடலுக்குக் கூட்டிட்டுப் போக காரில் ஏத்திட்டு இருக்கும் போது மாடியிலிருந்து வசு குதிக்கிறதைப் பார்த்துப் பதறிப் போயிட்டோம்! ஆனால் எங்கப் பொண்ணு பேறு வலியில் துடிச்சிட்டு இருந்ததால் அவளை அழைச்சிட்டு ஹாஸ்பிடலுக்குப் போயிட்டோம். அவளுக்கு ஆண் குழந்தைப் பிறந்து இப்போ தான் நாங்க ஃப்ரீ ஆனோம். அதான் மனசுக் கேட்காமல் உங்க கிட்ட வந்து சொல்லிட்டேன்! ஏன்க்கா! வசுக்கு ரொம்ப நாளாகவே தலைவலி இருந்துச்சா?”என்றத் தங்கள் பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் எதுவும் கூறாமல் வீட்டிற்குள் நுழைந்து கொண்டுக் கதறி அழத் தொடங்கி விட்டார் கண்மணி.
அது மட்டுமின்றி தன் கணவரை வீட்டிற்கு வரவழைத்து அவரிடமும் விஷயத்தை தெரிவிக்க,
தங்களது மகளின் இறப்பு எதிர்பாராமல் நிகழவில்லை! அவள் தற்கொலை செய்து கொண்டாள் என்பதை அறிந்ததும் அவர்களுக்கு உயிரை உருக்கும் வலி எடுத்தது!
இதைக் கேட்டதும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல்,”நாம உடனே வீட்டுக்குப் போகலாம்!”எனத் தன் மனைவியிடம் குழந்தையைப் போல் அடம் பிடித்தான் சம்யுக்தன்.
அவனது நிலையைக் கண்டுத் துடித்துப் போய்,”போகலாம்ங்க!”என்று அவனை ஆறுதலாக அணைத்துக் கொண்டுச் சமாதானப்படுத்த,
“எங்களை மன்னிச்சிருங்க மாப்பிள்ளை”என்ற விஜயன் மற்றும் கண்மணியின் குரலைக் கேட்டதும் தன்னுடைய காதுகளைப் பொத்திக் கொண்டு வீட்டிலிருந்து வெளியேறிக் காரில் உட்கார்ந்து கொண்ட கணவனின் நிலையைக் கண்டுப் பதறி,
“நாங்க எல்லாரும் கிளம்புறோம்”என்று தனது குடும்பத்தைப் புறப்படுமாறு கூறி விட்டுக் கணவனைத் தேடிச் சென்று அவனுக்கு அருகில் அமர்ந்து அவனது தலையைத் தன் மடியில் ஏந்திக் கொண்டாள் பிரார்த்தனா.
“சம்பந்தி!”என்று சம்யுக்தனின் பெற்றோரிடம் மன்னிப்புக் கேட்க முனைந்தனர் வசுமதியின் பெற்றோர்.
அவர்களோ,“இதை இப்படியே விட்டுடுவோம்ங்க! உங்கப் பொண்ணோட சாவுக்கு நீங்க மட்டுமே காரணமில்லை. அதில் நாம எல்லாருமே சம்பந்தப்பட்டுத் தான் இருக்கோம். அதனால் இனிமேலும் குற்ற உணர்வோட இருக்காதீங்க! உங்களைப் பார்த்துக்கோங்க”என அவர்களிடம் அறிவுறுத்தி விட்டுத் தங்களது இளைய மகன் மற்றும் சம்பந்தி வீட்டாருடன் வெளியேறிக் காரில் ஏறிக் கொள்ள, அவர்கள் அனைவரும் கனத்த மனதுடன் சம்யுக்தனின் வீட்டிற்குப் பயணித்தனர்.
- தொடரும்