• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

என் தேசமிங்கே பூந்தோட்டமாக - 5

நிதனிபிரபு

Administrator
Staff member
மாலை நான்கு மணியளவில் தான் உறக்கம் கலைந்து எழுந்தான் சம்யுக்தன்.

அதைக் கண்ணுற்றதும்,”எழுந்தாச்சா?”என்று எதுவும் நடவாததைப் போல் அவனிடம்
விசாரித்தாள் பிரார்த்தனா.

அவளுக்குப் பதில் அளிக்காமல் தூவாலை மற்றும் மாற்றுடையை எடுத்துக் கொண்டுக்
குளியலறைக்குள் புகுந்து கொள்ள,

உடனே வரவேற்பறைக்குச் சென்று,”அவர் தூங்கி எழுந்துட்டாருத்தை. எல்லாருக்கும்
காபி போட்றேன். பிரதீபன் எழுந்தாச்சா?”என்று அவரிடம் கேட்டாள் பிரார்த்தனா.

கலாவதி,“இன்னும் இல்லை”என்றதும், தங்கள் நால்வருக்கும் மட்டும் கொட்டை
வடிநீரைத் தயாரிக்க,

தன் அறையிலிருந்து வெளிப்பட்ட சம்யுக்தனிடம்,”தலைவலின்னு மருமக சொன்னாள்.
இப்போ பரவாயில்லையா ப்பா?”என்று வினவினார் ஜெயராம்.

“ம்ஹ்ம். பரவாயில்லைப்பா”என்று உரைத்தவனின் கரத்தில் காப்பிக் கோப்பையைத்
திணித்து விட்டு,

“காலேஜில் செமஸ்டர் எக்ஸாம்க்கு எல்லாரும் ரிவிஷன் கொடுத்துட்டு இருக்காங்களாம்.
நாம சீக்கிரம் போனால் தான் நம்ம சப்ஜெக்ட்ஸ்ஸையும் ஸ்டூடண்ட்ஸைப் படிக்க வைக்க
முடியும்”என அவனிடம் கூறினாள் பிரார்த்தனா.

அதைக் கேட்டவனும் அதைப் பற்றிய யோசனையில் இறக்கி விட, இவர்களது பேச்சுக்
குரல் கேட்டு அங்கே வந்தான் பிரதீபன்.

அவனுக்கும் கொட்டை வடிநீரைத் தயாரித்துக் கொடுத்தார் கலாவதி.

“அப்பா! நான் காலேஜூக்குப் போயே ஆகனும்! செமஸ்டர் டைம் எப்படி இருக்கும்னு
உங்களுக்கே நல்லா தெரியும்!”என்று அவரிடம் வாதிட்டான் சம்யுக்தன்.

“ஆமாம். எனக்கும் செமஸ்டர் எக்ஸாம் வருது. நான் வேற ஒன்னுமே படிக்காமல்
இருக்கேன்!”என்று பதட்டத்துடன் கூறினான் பிரதீபன்.

அவனைத் தீயாக முறைத்து,”அதுக்குத் தான் உன்னைக் காலேஜூக்குப் போகச்
சொன்னேன்!”என்று கடிந்து கொள்ள,

“உங்க கல்யாணத்துக்காகத் தான் அவன் லீவ் போட்டான். அதை மறந்துடாதே”என்று
பெரிய மகனுக்கு அறிவுறுத்தினார் கலாவதி.

“இதை ஒன்னை சொல்லிடுங்க. நாளையில் இருந்து நாங்க வேலைக்குப் போறோம்.
கல்யாணத்துக்கான மத்தச் சடங்கை எல்லாம் அந்தந்த டைமுக்குச் செஞ்சிடுவோம்”என்று
தனக்கும் சேர்த்து தனது குடும்பத்திடம் பேசியவனைக் கண்டுப் புன்னகைத்தாள்
பிரார்த்தனா.

“நாங்க சொல்ற எதையும் கேட்கக் கூடாதுன்னு முடிவு செய்துட்டீங்க! என்னமோ
பண்ணுங்க”என்று ஜெயராமும், கலாவதியும் கூறி விட்டனர்.

‘அப்படின்னா நானும் நாளைக்குக் காலேஜ் போகனுமா?'என்று நொந்தவாறே தனது
காபியைக் குடித்து முடித்தான் பிரதீபன்.

அவனது முக பாவனையைக் கண்டு வாய் விட்டுச் சிரித்து விட்டாள் பிரார்த்தனா.

அதில்,”இப்போ எதுக்கு அண்ணி சிரிக்கிறீங்க?”என்ற கொழுந்தனிடம்,

“நான் உன் மைண்ட் வாய்ஸைக் கேட்ச் பண்ணிட்டேன். அதான்”எனக் கிண்டல்
செய்தவளை முறைத்தான் பிரதீபன்.

அவ்விருவரையும் வெற்றுப் பார்வைப் பார்த்து விட்டு,”நான் நாளைக்குக் காலையில்
எப்போதும் போல டைமுக்கு எழுந்துருவேன்ம்மா”எனத் தாயிடம் அறிவித்தான்
சம்யுக்தன்.

“இதை எங்கிட்ட எதுக்குச் சொல்ற? அதான், உனக்குப் பொண்டாட்டி வந்தாச்சு! அதுவும்
அவளும் உன் கூடத் தான் வேலை பார்க்கிறாள். இனிமேல் நீங்க ரெண்டு பேரும் தான்
உங்க வேலைகளைத் திட்டமிட்டுப், பகிர்ந்து செய்துக்கனும்!”என அவனிடம்
அறிவுறுத்தினார் கலாவதி.

“என்னது?”என அதிர்ந்தவனிடம்,

“ஆமாம். இனிமேல் நீயும், பிரனாவும் தான் உங்க விஷயத்தைப் பார்த்துக்கனும்.
இனிமேல் நாங்கப் பிரதீபனைப் பார்க்கனும்”என்று தடாலடியாக கூறினார் ஜெயராம்.

அதில், முகம் சுருங்கிப் போய்,”சரிப்பா”என்றுரைத்து விட்டு அவ்விடத்தை விட்டு
நகர்ந்தான் சம்யுக்தன்.

அவன் சென்றதும்,”நான் இப்படி சொல்லிட்டேன்னு வருத்தப்படாத பிரனா!
உங்களுக்காகத் தான் இப்படி பேசினோம்”என்று மருமகளுக்குச் சமாதானம் உரைத்தார்
கலாவதி.

“எனக்குப் புரியுது அத்தை. ஆனால் இனிமேல் நீங்க இப்படி பண்ண வேண்டாம்.
அவருக்கு என் மேல் தானாகவே காதலும், புரிதிலும், பிடிப்பும் வரனும்னு
ஆசைப்பட்றேன்! ஒருத்தர் அவரைக் கட்டாயப்படுத்தி எங்கிட்ட பழகுறது எனக்குத் தான்

அசிங்கமாக இருக்கும்!”என்று தெளிவாக கூறியவளைச் சங்கடத்துடன் ஏறிட்டார்கள்
சம்யுக்தனின் பெற்றோர்.

“சரிம்மா”என்றவர்களிடம்,

“நான் உங்க மனசைப் புண்படுத்தனும்னுப் பேசலை. ஆனால் எனக்கும் ஒரு எதிர்பார்ப்பு
இருக்கும்ல? அதனால் தான் உங்க கிட்ட வெளிப்படையாகச் சொல்லிட்டேன். உங்களை
ஹர்ட் செய்திருந்தா என்னை மன்னிச்சிருங்க”என்றுக் கேட்டுக் கொண்டுத்,

அடுத்த நாளிலிருந்து தாங்கள் இருவரும் வேலைக்குச் செல்லப் போவதாக தனது
பெற்றோருக்குக் குறுந்தகவல் அனுப்பி வைத்து விட்டாள் பிரார்த்தனா.

அதைக் கண்டதும்,”இங்கே பாருங்க”என்று கணவரிடம் காண்பித்தார் கோமளா.

“அவளுக்குப் பிடிச்ச வாழ்க்கையை அவ வாழட்டும்மா”எனக் கூறி அவருக்குத் தைரியம்
அளித்தார் சக்திவேல்.

அதே சமயம், அறைக்கு வந்த மனைவியிடம்,”நான் நாளைக்குக் காலையில் அஞ்சு
மணிக்கு எழுந்து கிளம்ப ஆரம்பிச்சிடுவேன். உனக்கு எந்த டைம் சௌகரியமா
இருக்கும்?”எனக் கேட்டான் சம்யுக்தன்.

“நான் ஆறு மணியில் இருந்து கிளம்புறேன்”

“சரி”என்றவனிடம்,

“உங்கப் பைக்கிலேயே என்னையும் காலேஜூக்குக் கூட்டிட்டுப் போங்க”எனக் கூறினாள்
பிரார்த்தனா.

உடனே,”ஏன் உங்கிட்ட ஸ்கூட்டி இருக்கு தானே? அதில், வா”என்றுரைத்தான்
சம்யுக்தன்.

“அது எங்க வீட்டில் இருக்கு. அதை அப்பா யூஸ் செய்துட்டு இருப்பார்”என்று பதிலளிக்க,

அதில் எரிச்சல் அடைந்து,“ப்ச்! சரி”என்று கூறி விட, அன்றைய இரவு உணவை முடித்துக்
கொண்டு,

“நீயும் நாளைக்குக் காலேஜூக்குப் போகனும் தானே?”என்று பிரதீபனிடம் கேட்டார்
கலாவதி.

அவனோ,“போய்த் தானே ஆகனும். நான் போய்ச் சீக்கிரம் தூங்குறேன்”எனச் சலிப்புடன்
முணுமுணுத்து விட்டுச் சென்று விடத் தாங்களும் உறங்கப் போனார்கள்.

இங்கே தங்கள் அறையில் இருந்த இணைகள் இருவரும் தூங்காமல் விழித்துக் கிடந்தனர்.

“உங்க கிட்ட ஒன்னுக் கேட்கலாமா?”என்று பேச்சை ஆரம்பித்தாள் பிரார்த்தனா.

“ம்ம்”என்ற சலிப்பான பதில் வரவும்,

“வேண்டாம்னா கேட்கலை”என்றவளிடம்,

“நான் வேண்டாம்னு சொல்லலையே”என்றுரைத்தான் சம்யுக்தன்.

“ஓகே. நமக்குக் கல்யாணம் நடந்த விஷயம் காலேஜில் இருக்கிற எல்லாருக்குமே தெரியும்.
சோ, நாம அதை மறைக்க முடியாது! நீங்க என்னை உங்களோட வொய்ஃப்ன்னுக்
காட்டிப்பீங்களா? இல்லை, அங்கே என்னை யாருன்னே தெரியாத மாதிரி
நடந்துக்குவீங்களா?”எனத் தன் சந்தேகத்தைக் கேட்டாள் பிரார்த்தனா.

அதில் அவளை அழுத்தத்துடன் ஏறிட்டு,”நமக்குக் கல்யாணம் ஆனது தான் காலேஜில்
எல்லாருக்கும் தெரியும்ன்னு நீயே சொல்லிட்டியே? அப்பறம் என்ன? ஆனால் அங்கே
ஆஃபீஷியலாகத் தான் உன் கூடப் பேச முடியும்! ஏன்னா, ஸ்டூடண்ட்ஸ் முன்னாடி நாம
பர்சனல் எதுவும் பேச முடியாதுன்னு உனக்கே தெரியும்! குட் நைட்”என்று அவளுக்குப்
பதில் கூறி விட்டு நித்திரை கொள்ள, தானும் உறக்கத்தைத் தழுவினாள்.

மறுநாள் காலையில் தான் சொன்ன நேரத்திற்கு எழுந்து தயாராகத் தொடங்கிய
கணவனைப் பின்பற்றித் தன்னையும் தயார்படுத்திக் கொள்ள ஆரம்பித்தாள் பிரார்த்தனா.

“ஏங்க! நீங்க முதல்ல சாப்பிட்டு முடிச்சிடுங்க. தோசை, சாம்பார், இதோட பொடியும்
இருக்கு. இந்தாங்க!”என்ற மனைவியிடம்,

“சரிம்மா”எனச் சாப்பிடத் தொடங்கினார் ஜெயராம்.

“ம்மா! எனக்கு நெய் தோசை தான் வேணும்!”என்று கூறிக் கொண்டே டைனிங் டேபிளில்
வந்தமர்ந்தான் பிரதீபன்.

“சரிடா. உங்கண்ணனும், அண்ணியும் வந்தாச்சா?”என அடுக்களையில் இருந்து
சத்தமிட்டார் கலாவதி.

உடனே அங்கே வந்த சம்யுக்தன் மற்றும் பிரார்த்தனாவைக் கண்டு“இப்போ தான்
வர்றாங்க”என்றுரைக்க,

அவர்களுக்கும் சேர்த்து தோசை சுடப் போனவரிடம்,

“எங்க ரெண்டு பேருக்கும் நான் ஊத்துறேன்த்தை. அப்படியே நீங்களும் உட்கார்ந்து
சாப்பிடுங்க. ஆமாம். சாம்பார், பொடி மட்டும் தான் இருக்கு. ஏதாவது ஒரு சட்னியும்
அரைக்கிறேன்”என்றவளிடம்,

“வேலைக்குப் போற நேரத்தில் உனக்கு எதுக்குச் சிரமம்?”என்றார் கலாவதி.

“அதெல்லாம் எனக்கு ஒரு சிரமமும் இல்லத்தை. ஏன்னா, எனக்கு, என்னோட
குடும்பத்துக்கு வேலை செய்வது ரொம்ப பிடிக்கும்! எவ்வளவு வேலையாக இருந்தாலும்
நானே செய்யனும்!”என்றவளை வியப்புடன் பார்த்தார்கள் மற்ற நால்வரும்.

“அதில் உங்களுக்கு என்ன அவ்வளவு விருப்பம் அண்ணி?”என்று ஆர்வத்துடன்
வினவினான் பிரதீபன்.

“நான் ஆசிரமத்தில் வளர்ந்தப்போ அங்கே இருக்கிற எல்லாருக்கும் வேலை பார்த்தேன்!
அதே மாதிரி எங்கப்பா, அம்மா என்னை அங்கேயிருந்து கூட்டிட்டுப் போனதுக்கு
அப்பறம் அவங்க ரெண்டு பேருக்குமான எல்லா வேலையையும் நான் தான் பார்த்தேன்!
ஆனால் எனக்கு வீடு ஃபுல்லா நிறைய ஆளுங்க இருந்தா ரொம்ப பிடிக்கும்! அதான்,
இங்கே வந்ததும் உங்களுக்கு எல்லாத்தையும் நான் பார்த்துப், பார்த்து செய்யனும்னு
ஆசைப்பட்றேன்”என்று அவனுக்கு விளக்கம் அளித்து விட்டுச் சமையல் அறைக்குப்
போய் விட்டாள் பிரார்த்தனா.

ஆனால் அவள் கூறியதைக் கேட்ட அனைவருக்கும் தூக்கி வாரிப் போட்டது.

என்ன தான், சம்யுக்தனைப் பிடித்து இருக்கிறது என்று பிடிவாதம் செய்து அவனைத்
திருமணம் செய்து கொண்டிருந்தாலும் கூட அதற்குப் பின் வேலைக்குச் செல்ல வேண்டும்
என்று நிபந்தனை விதித்திருந்தாள் பிரார்த்தனா.

அது அவள் மீது இவர்களுக்கு நல்ல அபிப்பிராயத்தை உண்டு பண்ணியது.

அதனாலேயே அவளைத் தங்களது வீட்டு வேலை மொத்தத்தையும் பார்க்க வைக்கக்
கூடாது என்று நினைத்து இருந்தார் கலாவதி.

அவளைத் தனக்குச் சமையலுக்கு மட்டும் உதவி செய்ய சொல்ல எண்ணியிருந்த போது
அவள் தன் வீட்டாருக்குத் தானே அனைத்தையும் செய்வதில் தான் தனக்குச் சந்தோஷம்
என்று கூறுகிறாளே! எனப் பிரம்மித்துப் போயிருந்தார்.

அதையே தான் ஜெயராம், பிரதீபன் மற்றும் சம்யுக்தனும் எண்ணினர்.

இவள் தினமும் ஒவ்வொரு பரிணாமத்தை வெளிப்படுத்துகிறாளே என்று தனக்கு
உணவைப் பரிமாறிய மனைவியைப் புருவம் உயர்த்திப் பார்த்தான் சம்யுக்தன்.

“என்னையே பார்த்துட்டு இருந்தால் எப்படி? சாப்பிடுங்க”என்று தனக்கும் பரிமாறிக்
கொண்டாள் பிரார்த்தனா.

அந்த நேரத்தில் அவளது செல்பேசி ஒலித்தது.

அதை ஏற்றுக் காதில் வைத்து,”ஹலோ! சொல்லுங்கம்மா”என்றதும், அவளது அன்னை
கோமளா தான் அழைத்துள்ளார் என்பது மற்றவர்களுக்குப் புரிந்தது.

மறுமுனையில்,”பிரனா! நீ நேத்து என்னென்னவோ பேசின! உங்கப்பா என்னமோ நீ
நல்லா இருந்தால் போதும்னு விடச் சொல்றாரு. ஆனால் எனக்குத் தான் மனசே
கேட்கலை! என்னடி பண்ற? வேலைக்குக் கிளம்பிட்டியா?”என்று பரபரத்தவரிடம்,

“சாப்பிட்டுட்டு இருக்கேன்ம்மா. கொஞ்ச நேரத்தில் கிளம்பிடுவேன். நீங்க அப்பா
சொன்னதையே ஃபாலோ பண்ணுங்க. அவர் சரியாகத் தான் சொல்லி இருக்கார்!”என்று
அறிவுரை வழங்கினாள் பிரார்த்தனா.

“ம்ம். மாப்பிள்ளைக் கூடத் தானே காலேஜூக்குப் போற?”எனக் கேட்டார் கலாவதி.

“ஆமாம்மா”

“சரி டி. இந்த வாரக் கடைசியில் மறு வீட்டு விருந்துக்கு அழைக்க வர்றோம்னு சம்பந்தி
கிட்ட சொல்லிரு”என்றுரைத்து விட்டு வைத்து விட,

அவர் கூறியதை தன் கணவன் வீட்டாரிடம் தெரிவிக்க,

“சரி. நான் அப்பறமாக அவங்களுக்கு போன் போட்டுப் பேசிக்கிறேன்”என்றவரிடமும்,
மற்றவர்களிடமும் விடைபெற்றுக் கொண்டுத், தாங்கள் வேலை செய்யும் கல்லூரிக்குக்
கிளம்பினர் சம்யுக்தன் மற்றும் பிரார்த்தனா.

- தொடரும்
 
Top Bottom