என் மன்னவன் நீ தானோ
அத்தியாயம் 11
அவனுடைய புத்தக வெளியீட்டு விழாவும் வந்தது. அதற்கு சௌமி அழகான சுடிதார் அணிந்து, சிறிதளவில் ஒப்பனை செய்து தயாராகி தனது பெரியம்மா, பெரியப்பா சகிதம் அங்கு சென்றாள்.
வரவேற்பிற்காக வாசலில் நின்ற இரண்டு அழகான சிறு பெண்கள் அவர்களை வரவேற்று, உள்ளே அழைத்துச் சென்றனர். அங்கே அகிலனுடைய நண்பர்கள், நீதிபதிகள், சட்டத்தரணிகள், மாணவர்கள், நெருங்கிய சில உறவினர்கள் என மண்டபம் நிறைந்து இருந்தது. அவர்கள் மூவரும் காலியாக இருந்த ஆசனங்களில் அமர்ந்தனர். அவர்களைக் கண்டதும், முன்வரிசையில் அமர்ந்திருந்த பத்மா வந்து சிறிது நேரம் கதைத்து விட்டு செல்ல, அகிலனும் வந்து அவர்களை வரவேற்றான்.
அவன் வெள்ளை நிறத்தில் முழுக்கை சேர்ட்டும் கோர்டும், கழுத்துப் பட்டியும், கறுப்பு நிற பாண்டும் அணிந்து மிகவும் கம்பீரமாக நின்றான். சௌமிக்கு அவனிடமிருந்து தனது கண்களை விலக்கவே முடியவில்லை.
அவளைப் பார்த்த அவனும் புன்னகைத்தவாறு “அதுல வந்து, பலகாரம் எடுத்து வைக்குறதுக்கு அவையளுக்கு ஹெல்ப் பண்ணும்.. வாரும்” என அவளை அழைத்துச் சென்று, அங்கே அவனுக்கு உறுதுணையாக இருந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு அவளை அறிமுகப் படுத்தி விட்டான்.
அவளும் உற்சாகத்துடன் அவர்களுடன் கதைத்தவாறு அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்தாள். சகல ஏற்பாடுகளும் தகுந்த முன்னேற்பாடுடன் நேர்த்தியாகச் செய்யப் பட்டிருந்தது. மிகவும் அழகாக அலங்கரிக்கப் பட்ட மேடையின் அருகே நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதற்காக ஓர் இளம் பெண் மிக அழகாக தயாராகி நின்றாள்.
அகிலன், அந்தப் பெண்ணுக்கு நிகழ்ச்சி நிரல் சம்பந்தமான அறிவுறுத்தல்களை வழங்கிய போது, அந்தப் பெண் அதை கிரகித்தாலும் அவளின் கண்கள் அவனில் தான் ஆவலுடன் படிந்தது.
இதை அவதானித்த சௌமியுடன் நின்ற பெண்களில் ஒருத்தி “அங்க பாருங்க அந்த அன்கர் எங்கட சேரை சைட் அடிக்கிறதை” என்றாள்.
மற்றப் பெண் “ நானும் வந்ததில இருந்து அந்த அன்கரைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறன், எந்த நேரமும் சேரோட ஏதோ கதைச்சு சிரித்தபடி தான் ...” என்றாள். “இரண்டு பேரும் நல்ல பொருத்தமான ஜோடி தான்… பார்க்க நல்லா இருக்கு... ” என்றாள் இன்னொருத்தி.
“இந்த அன்கர் …. டிவி சேனலில தான வேலை செய்யுறாள்” என ஒருத்தி தனது சந்தேகத்தை தெளிவுபடுத்திக் கொண்டாள். அவ்வளவு நேரமும் புன்னகையுடன் நின்று கொண்டிருந்த சௌமிக்கு அவர்கள் கதைப்பதை கேட்டதும் கடுப்பு ஏற்பட “வேற என்ன செய்ய வேணும்?” என அவர்களைக் கேட்டவளின் கண்களும் அகிலன் மீது தான் இருந்தது. அவள் அகிலனால் அறிமுகப் படுத்தப்பட்டதால், சிறு மரியாதையுடனேயே “சேர் சொன்ன இந்த வேலை முடிஞ்சுது, இனி சேரிட்டை தான் கேக்க வேணும்” என்றார்கள் அவர்கள்.
“சரி, அப்ப நான் அவர்கிட்ட கேக்கிறன்” என்றவள் விறு விறு என நடந்து சென்று அகிலன் அருகில் நின்று கொண்டாள். நிகழ்ச்சித் தொகுப்பாளரிடம் பேசிக் கொண்டிருந்த அகிலன் அவளை பார்த்துவிட்டு அந்தப் பெண்ணுக்கு மேலும் ஓரிரு விஷயங்கள் கூறிவிட்டு, “என்ன…?” எனக் கேட்டான் சௌமியிடம்.
“இந்த அவுட் ஃபிட்டில நீங்கள் சூப்பரா இருக்கிறீங்க...” என்றாள் அவள், அவனை ரசித்தவாறு. அவன், அதற்கு “ம்...” என்றவாறு அமைதியாக நிற்க “என்னவாம் அந்த அன்கர்..?” என விசாரித்தாள் அவள். சிறு சலிப்புடன் தனது விழிகளை மூடித் திறந்த அகிலன் “அஜெண்டாவில விளக்கம் கேட்டவா...” என்றான்.
“இவ்வளவு நேரமா விளக்கமா கொடுத்தனீங்கள்....” என விழி விரித்தாள் அவள். “ம்....” என்றவனை “ஜட்ஜ் வந்திட்டார்… வா.... ” என அவனது நண்பன் அழைக்க “ஜட்ஜை வரவேற்க வேணும்…, வாறன்... ” என அவளிடம் கூறி விட்டுச் செல்ல, அவள் கடுப்புடன் வந்து தனது ஆசனத்தில் அமர்ந்தாள்.
சற்று நேரத்தில் பிரதம விருந்தினரான உயர்நீதிமன்ற நீதியரசரும், அவரைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களும் மங்கள விளக்கை ஏற்றி விழாவை ஆரம்பித்து வைத்தனர். வரவேற்புரை , வரவேற்பு நடனம் என்பவற்றை தொடர்ந்து, விருந்தினர்கள் அனைவரும் அகிலனின் திறமையைப் பற்றியும் அவனது சேவைகளைப் பற்றியும் பிரதானமாக அவன் எழுதிய புத்தகத்தைப் பற்றியும் மிகவும் பாராட்டி பேசினார்கள்.
அகிலனையே பார்த்தவாறு, அவனைப் பற்றிய பாராட்டுரையை கேட்டவளின் உள்ளம் பெருமையில் பூரித்துப் போனது. தான் அவனைக் காதலிக்கிறேன் என்பதால் அவள் மனம் கர்வம் கொண்டது. எதற்காகவும் அவனை யாருக்கும் விட்டுக் கொடுப்பதில்லை என உறுதி கொண்டாள்.
அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு மேடைக்கு அருகில் நின்று கொண்டிருந்த நிகழ்ச்சி தொகுப்பாளருக்கு ஓரிரு தடவை அகிலன் நிகழ்ச்சி நிரல் தொடர்பில் கண்களால் ஜாடை காட்டியதை கவனித்த அவளுக்கு சலிப்பு ஏற்படாமல் இல்லை.
புத்தக வெளியீட்டு உரை, ஆய்வுரை என்பன முடிய, அகிலன் உரையாற்றினான். அவனது கணீர் குரலாலும், தெளிவான கருத்துக்களாலும், உரையாற்றும் பாணியிலும் வெகுவாக கவரப்பட்டு கண் இமைக்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் சௌமி.
உரைகளுக்கு இடையே அனைவருக்கும் சிற்றுண்டியும் குளிர்பானமும் வழங்கப்பட்டது.
சற்று நேரத்தில் விழா முடிவடைந்து விட அவர்கள், எல்லோரிடமும் விடை பெற்றுக் கொண்டு கிளம்பி விட்டார்கள். வரும் வழி எல்லாம் அவளின் பெரிய தாயும் பெரிய தந்தையும் அவனையே புகழ்ந்து கொண்டு வந்தார்கள்.
வீட்டுக்கு வந்து உடை மாற்றி, சாப்பிட்டு விட்டு, பெரிய தாயிடம் படிக்கப் போகிறேன் எனக் கூறிவிட்டு தனது அறைக்கு வந்து, புத்தகத்தை திறந்த சௌமிக்கு, அகிலனே மனம் முழுவதும் நிறைந்து நின்றான். அவளால் படிக்க முடியவில்லை. புத்தகத்தை மூடிவிட்டு கட்டிலில் சென்று படுத்திருந்து விழாவில் தனது கைப்பேசியில் எடுத்த புகைப்படங்களை மீண்டும் மீண்டும் பார்த்து, அகிலனின் கம்பீரத்தையும் மிடுக்கையும் மிகவும் ரசித்தாள். அவளுக்கு அவனுடன் கதைக்க வேண்டும் போலவும், விழாவைப் பற்றி விமர்சிக்க வேண்டும் போலவும் தோன்றியது. அங்கே மண்டபத்தில் கடும் பரபரப்புடன் இருக்கிறவனுக்கு போன் பண்ணவும் தயக்கமாக இருந்தது. ஆனால் நேரம் செல்ல செல்ல அவனுடன் கதைத்தே ஆக வேண்டும் என மனம் வெகுவாக அடம் பிடித்தது. எனவே எதையும் யோசிக்காமல் அவனுக்கு அழைப்பை ஏற்படுத்தினாள். அவன் எடுக்கவில்லை. மீண்டும் மீண்டும் முயற்சி செய்து பார்த்தாள். அவன் எடுக்கவில்லை. அவன் தனது அழைப்பை ஏற்கவில்லை என்றதும் அவன் தன்னை உதாசீனப் படுத்துவதாக நினைத்தவளுக்கு கடும் சினம் ஏற்பட்டது.
அவள், அவனை மிக மிக ஆழமாக நேசித்தாள், அவனுக்காக மட்டும் தான் அவள் உயிர் வாழ்வதாக நினைத்தாள், அவனுக்காக எந்த எல்லைக்கும் செல்ல அவள் தயாராக இருந்தாள். அதே போல அவனும் தன்னை நேசிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தாள், அவன் எல்லாவற்றையும் விட தனக்கு மட்டும் தான் முன்னுரிமை தர வேண்டும் என எண்ணினாள், அவள் மனம் முழுவதும் அகிலன் மட்டுமே வியாபித்து நின்றான். அவள், அவன் மீது பைத்தியமாக இருக்கும் போது அவன் அவளது அழைப்பை ஏற்கவில்லை எனும் போது தன் மீது அவனுக்கு உள்ள அலட்சியத்தை எண்ணிவளுக்கு ஏற்பட்ட சுயவிரக்கத்தினால் கண்களில் நீர் வடிந்தது. ‘எனக்கு போன் பண்ணவும்’ என அவனுக்கு தகவல் அனுப்பிவிட்டு காத்திருந்தவள் உறங்கி விட்டாள்.
அடுத்த நாள் காலையில் எழுந்தவள் முதல் வேலையாக கைப்பேசியைப் பார்க்கும் போது அவனிடமிருந்து அழைப்பு ஏதும் வரவில்லை என்பதை பார்த்து மிகுந்த ஏமாற்றமடைந்தவள், அவன் தான் அனுப்பிய தகவலைப் பார்த்து விட்டும் பதில் தரவில்லை என்பதால் கடும் துக்கமடைந்தாள். காலைக் கடன்களை முடித்துவிட்டு வெளியே வந்தவளைப் பார்த்த அவளின் பெரிய தாயார் “என்ன சௌமி… கண் எல்லாம் வீங்கி இருக்கு… தூங்க இல்லையா…?” என அக்கறையுடன் கேட்டார்.
“எனக்குத் தலை வலிக்குது பெரியம்மா...” என்றவளின் குரலும் நன்றாக இல்லை. சகுந்தலா அவருக்கு தேநீர் குடிக்க கொடுத்து, தலைக்கும் தைலம் தேச்சு விட்டவர் “இப்ப கொஞ்சம் பரவாயில்லையா?” என அக்கறையுடன் கேட்டார்.
“ம்… சற்று நேரம் படுக்க போறேன் பெரியம்மா...” என்றவள் தனது அறைக்குள் வந்து தனது தொலைபேசியை எடுத்து அதையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
விழாவுக்கு வந்தவர்களை இன் முகத்துடன் வழியனுப்பி, நெருங்கிய நண்பர்களுடன் அன்றைய விழாவைப் பற்றி கதைத்து, துணையாக நின்றவர்களுக்கு நன்றி கூறி, மண்டபத்தை ஒதுக்கி வீட்டுக்கு வர நள்ளிரவாகிவிட்டது. வீட்டுக்கு வந்து குளித்து உடை மாற்றிவிட்டு கைபேசியை பார்த்தவனுக்கு பல அழைப்புகளும், பல குறுந்தகவல்களும் இருந்தன. அவனின் கைப்பேசிக்கு அடிக்கடி அழைப்புகள் வந்து கொண்டிருந்ததால் அதன் ஓசையை அணைத்து விட்டதால் அவற்றை அவனால் கவனிக்க முடியவில்லை.
பல அழைப்புகள் சௌமியிடமிருந்து வந்திருப்பதை அவதானித்தவன் ‘இப்ப அவள் படுத்திருப்பாள், காலையில் கதைப்பம்’ என எண்ணியவன் தூங்கச் சென்றான்.
காலையில், வழமையைவிட சற்றுத் தாமதமாக எழுந்ததும் முதல் வேலையாக சௌமிக்கு அழைப்பை ஏற்படுத்தினான். அவள் எடுக்கவில்லை.
அவனது அழைப்பைப் பார்த்தவளுக்கு இவ்வளவு நேரத்துக்குப் பிறகு தான் எடுக்கிறார் என்ற கோபமும், நான் அவருக்கு முக்கியம் இல்லை என்ற எண்ணத்தில் கண்ணீரும் ஏற்பட, அவளால் அவனுடன் கதைக்க முடியாது எனத் தோன்ற, சௌமி, அவனின் அழைப்பை ஏற்கவில்லை.
‘நான் அலுவலாக இருந்ததால் உமது அழைப்பை கவனிக்க இல்லை, மன்னிக்கவும்’ என அவளுக்குத் தகவல் அனுப்பிவிட்டு அவன் தனது வேலைகளை கவனிக்க சென்றுவிட்டான்.
அதைப் பார்த்தவளுக்கு ‘நான் எத்தனை தரம் போன் பண்ணி இருப்பன்… அவன் ஒருக்கா போன் பண்ணிட்டு மெஸேஜை போட்டுட்டு போயிட்டான் …, திரும்ப ஒருக்கா போன் பண்ணினால் என்ன’ என எண்ணி கடும் சினமும், துயரமும் ஏற்பட்டது.
அவளுக்கு பரீட்சைக்குப் படிக்க வேண்டியிருந்தது, ஆனால் இந்த மனக் குழப்பத்தால் அவளால் படிப்பதில் கவனம் செலுத்த முடியவில்லை. வெளியே சென்று வந்தால் மனம் சற்று சமாதானம் அடையும் என எண்ணியவள் தயாராகி வெளியே வந்து “பெரியம்மா… நான் சாந்தி வீட்டுக்கு போயிட்டு வாறன்” என சகுந்தலாவிடம் கூறிவிட்டு வெளியே வந்தவள் மின் தூக்கியில் ஏறினாள்.
சாந்தி வீட்டுக்குச் சென்ற போது அங்கே அவள் இல்லை. அவளுடன் சிறிது நேரம் கதைத்தால் மனம் ஆறுதலடையும் என எண்ணியவளுக்கு அது ஏமாற்றமாக இருந்தது.
கீழே பூங்காவுக்கு செல்லலாம் என எண்ணி மீண்டும் மின் தூக்கியினுள் செல்ல அங்கே அகிலன் நின்று கொண்டிருந்தான். அவனைக் கண்ட உடனேயே அவளுக்கு கண்கள் கலங்கின, “நேற்றிரவு கால் பண்ணியிருந்தீர்… போன் சைலன்ட்ல இருந்ததில கவனிக்கேல்ல… மோர்னிங் எடுத்தனான்...நீர் ஆன்ஸர் பண்ணல்ல… ஏன் போன் பண்ணினனீர்…? ” என்றான் சாதாரணமாக.
அவள் எதுவும் கூறாமல் தலையை குனிந்து கொண்டிருக்க, மின் தூக்கி திறந்தது, அவர்கள் வெளியே வந்தனர்.
அவளைப் பார்த்துக் கொண்டிருந்தவன், அவளின் முகம் வீங்கி, கண்கள் கலங்கி இருப்பதை அவதானித்தான். “சௌமி ஏன் ஒரு மாதிரி இருக்கிறீர்…? சுகமில்லையா…?” அக்கறையுடன் விசாரித்தான் அவன்.
அந்த அவனின் அக்கறையில் வெளியே வந்த கண்ணீரை அவனுக்குத் தெரியாமல் முகத்தை திருப்பி துடைத்து விட்டு ‘ஒன்றும் இல்லை’ என்பது போல தலையை ஆட்டி விட்டு நடக்க ஆரம்பித்தாள்.
அவளுடன் கூட நடந்தவன் “எங்க போறீர்…? வாரும் நான் கொண்டு போய் விடுறன்” என்றான்.
அவளுக்கு அவனுடன் கதைக்க வேண்டிய தேவை இருந்ததால் கடகட என்று அவனது கார் அருகே சென்று நின்றாள். அவன் கதவைத் திறந்ததும் உள்ளே ஏறி அமர்ந்தாள்.
அவனும் காரை கிளப்பியவாறு “எங்க போகணும்…?” என அவளை பார்த்தவாறு கேட்டான்.
“பீச் பக்கமாக விடுங்க” என்றாள்.
அவன் கடற்கரைப் பக்கம் காரை செலுத்தினான். சற்றுத் தூரம் சென்றதும் சனநடமாட்டம் குறைந்த ஒரு இடத்தைக் காட்டி “இதில நிப்பாட்டுங்க” என்றாள் சௌமி. அவள் காட்டிய இடத்தில் அவன் காரை நிறுத்தியதும் “உங்களோட கதைக்கணும்...” என்றாள் தலைகுனிந்தவாறு.
“சொல்லும்… ஏதும் பிரச்சினையா...? ஏன் ஒரு மாதிரி அன்ஈஸியா இருக்கிறீர்…?” என அவளைப் பார்த்து அக்கறையுடன் கேட்டான் அவன்.
“ம்...” என்றாள் அவள் தலை.
“என்னெண்டு சொல்லுமன்...” அவசரப்படுத்தினான் அவன்.
“நேற்றிரவு பல தடவை நான் உங்களுக்கு போன் பண்ணினனான்…, நீங்கள் எடுக்கேல்ல” என அவள் சொல்லும் போதே அவளின் கண்கள் கலங்கின, குரல் அடைத்தது.
அவளின் முகத்தை பார்த்தவாறே “அது தான், நான் என்ர போன் சைலண்டில இருந்ததால கவனிக்கேல்லே எண்டு சொன்னேனே…” என்றவன் தொடர்ந்து “ அதுக்கு ஏன் அழுகிறீர்…? ” எனக் கேட்டான்.
“என்னை நீங்கள் இக்னோர் பண்ணினதை என்னால தாங்க முடியாதிருக்கிறது...” என்றாள் குரல் கம்ம.
“நான் ஏன் உம்மை இக்னோர் பண்ணுறன்…? நான் அப்படி செய்ய மாட்டன்…, தேவையில்லாம எதையும் யோசிக்காதையும் ” என்றான் அவசரமாக.
மனச் சஞ்சலத்தில் இருந்தவள் “நீங்கள் யாரும் கேர்ல்ஸோட கதைச்சால் எனக்கு அது பிடிக்கேல்ல… ” என்றாள்.
“ஏன்…?” என்றான் அவன் சிறு அலுப்புடன்.
“எனக்குப் பிடிக்கேல்ல என்கிறன், நீங்கள் இனிக் கதைக்க மாட்டேன் எண்டு சொல்லாமல் ஏன் எண்டு கேக்குறீங்க” என்றாள் கோபத்துடன்.
“உமக்குப் பிடிக்கல்ல எண்டதால என்ர ஸுடன்ஸோடையும் ஃப்ரன்ஸோடையும் என்னால கதைக்காமல் இருக்க முடியாது” என்றான் அவன் சிறு கண்டிப்புடன்.
“அப்ப என்னை விட அவையள் தான் உங்களுக்கு முக்கியமாகப் போட்டுது...” என்றாள் அவள் வருத்தத்துடன்.
“இதில முக்கியம்… முக்கியமில்லை… எண்டு எதுவும் இல்லை… நான் உம்மோட ஒரு ஃப்ரண்டா கதைக்கிறது போல… அவையளோடையும் எனக்கு ஒரு ரிலேஷன்ஷிப் இருக்கு… அதால நான் அவையளோடையும் கதைக்க தான் வேணும்” என்றவனின் குரலில் கடுமை இருந்தது.
“அப்ப… எனக்கு இவ்வளவு தான் ரெஸ்பெக்ட்...” என்றவளின் முகம் கோபத்தில் சிவந்தது.
அவள் என்ன கதைக்கிறாள், ஏன் இப்பிடி கதைக்கிறாள் எதுவும் அவனுக்கு புரியவில்லை “நீர் என்ன சொல்லுறீர் எண்டு எனக்கு எதுவும் விளங்கேல்ல...” என அதட்டினான்.
“நான் என்ன சொன்னாலும் உங்களுக்கு விளங்காதே…” என்றாள் சினத்துடன்.
“இல்லை… விளங்கேல்ல… அது தான் கேக்கிறன்…, புரியும் படி சொல்லும் ” என்றான் அவன்.
அவளுக்கு அவன் மீதுள்ள காதலை தானே அவனிடம் தெரிவிப்பதில் தயக்கமாகவும் கூச்சமாகவும் இருந்ததுடன், அதை அவனே உணர்ந்து கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் மேலோங்கி இருந்ததால் அவள் மௌனமாக இருந்தாள்.

Last edited by a moderator: