என் மன்னவன் நீ தானோ
அத்தியாயம் 19
மீண்டும் மாலை ஆறு மணி அளவில் சகுந்தலா, தன் கணவரையும் அழைத்துக் கொண்டு வந்து சௌமியின் தந்தையோடு கதைத்தார்.
சிவநாதனுக்கு இந்த கல்யாணத்தில் அறவே விருப்பம் இல்லை, எனவே அவர் தனது விருப்பமின்மையை கூறி மறுத்தார்.
தனது தமக்கை மீண்டும் வந்து இந்தப் பேச்சை ஆரம்பித்த உடனேயே தனது மகளின் விருப்பத்தை கமலா அறிந்து கொண்டார். அவருக்கு மகளின் விருப்பம் முக்கியமாகப் பட்டதாலும் அகிலனை மறுக்க எந்தக் காரணமும் இல்லாததாலும் அமைதியாகவே இருந்தார்.
சகுந்தலாவும் கணவரும் தங்களின் விருப்பத்தையும் அகிலனை பற்றியும் அவனை சௌமிக்கு திருமணம் செய்வதால் ஏற்படும் சாதகங்களை பற்றியும் மீண்டும் மீண்டும் எடுத்துக் கூறினார்கள். அவர்களின் விருப்பத்தை அறிந்த சிவநாதன் “நான் உங்கட விருப்பத்தை மதிக்கிறன், எனக்கு இரண்டு நாட்கள் டைம் தாங்க… நான் யோசிக்கணும்” என்றார்.
அவர் இந்தளவுக்கு இறங்கி வந்ததே பெரிய விஷயம் என நினைத்த சகுந்தலா “நல்ல பதிலாக சொல்லுங்க…” எனக் கூறி அந்த பேச்சை தற்காலிகமாக முடித்தார்.
அவர்கள் கதைத்ததை தனது அறையில் இருந்தவாறே செவிமடுத்துக் கொண்டிருந்த சௌமி, ‘தனது தந்தையும் சம்மதம் தெரிவித்து எல்லாம் நன்றாக நடக்க வேண்டும்’ என கடவுளை பிரார்த்தித்தாள்.
சிவநாதனும் கமலாவும் இரவு பகலாக இதைப் பற்றி சிந்தித்து கலந்து பேசிக் கொண்டிருந்தனர். சிவநாதனால் எந்த முடிவையும் எட்ட முடியவில்லை. கமலா தனது கணவரிடம் “சௌமியின்ர விருப்பத்தையும் கேட்டு முடிவெடுப்பம்” என்றார்.
உடனே அவர் “அவள் சின்ன பிள்ளை அவளுக்கு என்ன தெரியும்…?” எனக் கேட்டார்.
“சௌமிக்கு இதைப்பற்றி எந்தவிதமான அபிப்பிராயமும் இல்லாட்டி நாங்கள் தான் யோசிச்சு முடிவெடுக்க வேணும், அவளுக்கு அந்த தம்பியை பிடிச்சு இருந்தால் அவளின்ர விருப்பத்தையும் பார்க்க வேணும் தானே…” என்றார் அவர் மனைவி.
“ம்…” என்ற நீண்ட நேர சிந்தனையின் பின்னர் “ சரி, சௌமிய கூப்பிடு அவளோட கதைப்பம்” என்றார் சிவநாதன்.
சௌமிகாவை தன்னருகில் அமர்த்திய சிவநாதன், அவளின் பெரியதாயார் அகிலனுடனான அவளின் திருமணத்தைப் பற்றி கதைத்ததையும் இந்த சம்மந்தத்தில் அவருக்கு உள்ள விருப்பத்தையும், தங்களின் விருப்பின்மையையும் அதற்கான காரணங்களையும் அவளுடன் பகர்ந்து கொண்டார்.
அவளும் அவற்றை எல்லாம் அமைதியாக கேட்டாள். அவளின் தந்தை அவளின் முக மாற்றங்களை கவனித்தவாறே “எங்கட விருப்பம் ,விருப்பமின்மை எல்லாத்தையும் விட உன்ர விருப்பம் தான் எங்களுக்கு முக்கியம். அது தான் நான் எல்லாத்தையும் உன்னட்ட சொன்னனான்… நீயும் நல்லா நேரம் எடுத்து ஆறுதலாக யோசிச்சு உன்ர அபிப்பிராயத்தை சொல்லு.. நீ யாருக்காகவும் யோசிக்கத் தேவை இல்லை” என்றார்.
சௌமிகா சற்றும் யோசிக்காமலும், தாமதிக்காமலும் “அப்பா… அகிலனை கல்யாணம் செய்யுறதில எனக்கு சம்மதம் தான்…” என்று தனது விருப்பத்தை கூறினாள்.
அதைக்கேட்ட சிவநாதன் ‘இவள் என்ன உடனே பதில் சொல்லுறாள்’ என்ற பெரிய அதிர்ச்சியுடனும், தனக்குத் தெரியாமல் ஏதோ நடக்கின்றது என்ற கோபத்துடன் மனைவியை பார்த்து முறைத்தார்.
கமலா, தான் ஏதாவது கதைக்கப்போய் கணவனுக்கு மேலும் சினத்தை ஏற்படுத்தும் என்ற எண்ணத்தில், எதுவும் பேசாமல் கணவரையும் மகளையும் மாறி மாறிப் பார்த்தார்.
இதுவரை காலமும் தன் மனதை அழுத்திக் கொண்டிருந்த பாரம் விலகிய உணர்வுடன் இருந்த சௌமிகா, தனது விருப்பத்தை தனது பெற்றவர்களிடம் தெரிவித்ததில் ஏற்பட்ட மன நிம்மதியுடனும் அவர்கள் ஏதாவது கேட்டால் அதற்கு பதிலளிக்க தயாரான மனநிலையுடனும் தனது தந்தை என்ன எதிர்வினையாற்ற போகிறார் என்ற தவிப்புடனும் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
மகளுக்கு இந்த சம்பந்தத்தில் பெரிதாக உடன்பாடு இருக்காது என்ற எண்ணத்தில் இருந்த சிவநாதன் மகள் கூறிய பதிலை கிரகித்து அந்த அதிர்விலிருந்து மீள முடியாமல் அமைதியாக இருக்க, கணவரின் கோபத்தை தான் எவ்வாறு கையாள்வது என்ற நினைப்பில் இருந்த கமலாவுக்கு மகள் மனநிறைவுடனும் சந்தோஷத்துடனும் அவளுக்குப் பிடித்த வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற எண்ணம் தான் மேலோங்கி இருந்தது.
தனது பதிலால் தன்னைப் பெற்றவர்கள் பேரதிர்ச்சி உடன் இறுகிப் போய் இருப்பதைக் கண்டவளுக்கு அவளாலும் ஏதும் செய்ய முடியாத நிலை தான். தன்னால் தான் அவர்களுக்கு இந்த நிலை என எண்ணிய அவளுக்கு உள்ளம் கலங்கித் துடித்தது.
நீண்ட நேர அமைதியின் பின்னர், இந்த விஷயம் தனது மகளின் வாழ்க்கை சம்மந்தப்பட்டது. மிக மிக அவதானமாக தான் அணுக வேண்டும் என உணர்ந்த சிவநாதன், குரலை செருமிக் கொண்டு. “சௌமியம்மா நீ இப்ப உடனே பதில் சொல்லணும் என்ற அவசரம் இல்லை… நீ இரண்டு நாட்கள் நல்லா யோசிச்சுட்டு ஆறுதலாக சொல்லம்மா…” என்றார் பொறுமையை இழந்து பிடித்துக்கொண்டு.
இதில யோசிப்பதற்கு என்ன இருக்கு என எண்ணியவள் துணிவை வரவழைத்து கொண்டு, தனது தந்தையை பார்த்த சௌமி “இதுல யோசிக்கிறதுக்கு என்ன இருக்கப்பா…? எனக்கு அவரை கல்யாணம் செய்யுறதுல இஷ்டம் தான்…” என்றாள் மெதுவாக.
“ஏன் நான் இதை விரும்பேல்ல எண்டு சொன்னனான் தானே..” என ஆற்றாமையோடு கேட்டார்.
“ம்…, எனக்கு அதெல்லாம் ஒரு பெரிய விஷயமாக தெரியலயப்பா…” என்றவளின் குரலில் தெளிவு இருந்தது.
“ம்…?” கேள்வியுடன் தனது செல்ல மகளை ஏறிட்டுப் பார்த்தார்.
“தெரியாத ஒரு ஆளை கல்யாணம் செய்யுறதை விட நல்லா தெரிஞ்ச ஒருத்தரை செய்யுறது நல்லம் தானேப்பா…” என்றவளுக்கு தந்தையின் வருத்தம் புரியாமல் இல்லை.
“ம்..” மகளிற்கு அகிலன் மீதான விருப்பத்தையும் அவள் தன்னை சமாதானப்படுத்துவதையும் விளங்கிக் கொண்டவருக்கு, இதயத்தில் பெரும் வலி தான். தனக்கு அருகில் வைத்திருக்காமல் கொழும்புக்கு அனுப்பி படிக்க விட்டது தான் செய்த பெரும் பிழை என உணர்ந்து கொண்டார். தனது செல்ல மகளின் விருப்பத்துக்கு எதிராக நிற்க அவரால் முடியவில்லை. அவர் காதலுக்கு எதிரி அல்ல. தனது மகளுக்கு தனது விருப்பத்துக்கு இணங்க மிகச் சிறந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கவே விரும்பினார். ஆனால் மகளின் விருப்பத்தை அறிந்தவருக்கு தனக்கு பிடித்தம் இல்லாவிட்டாலும் மகளின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என எண்ணினார், எனவே “சரி… உன்ர விருப்பம்…” என்றுவிட்டு எழுந்து வெளியே சென்று விட்டார்.
பெற்றோர்களின் மனதை வேதனைப்படுத்தியது புரிந்ததும் அவளின் விழிகளில் நீர் பெருகியது. தாயைப் பார்த்து “என்னில கோபமாம்மா…?” எனக்கேட்டாள்.
மகளின் விழிநீரை கண்ட கமலாவிற்கு தாளவில்லை. அவளை அணைத்து, நீரைத் துடைத்து விட்டவர் “அழாதே சௌமி…” என்றார்.
“அம்மா…” என்றவளுக்கு கண்களில் இருந்து நீர் வழிந்து கொண்டே இருந்தது. அவருக்கு மகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியாமல் இல்லை. ஆனால் அவரால் என்ன செய்துவிட முடியும்…? அவருக்குமே இதில் பெரிதாக உடன்பாடு இல்லாவிட்டாலும் மகளின் விருப்பத்தை தான் முக்கியமாக கருதினார். அதே போல் கணவரையும் அவர் அறிந்தவராயிற்றே…! கணவரும் மகளுக்காக மறுப்பை தெரிவிக்காது விட்டாலும். கட்டாயம் மனவேதனைக்கு ஆளாவர் என்று தெரியும்.
தாய் தகப்பனுக்கு மிகுந்த வருத்தத்தை கொடுத்து விட்டதை உணர்ந்தவள் “நிஜமாக சொறியம்மா…” என்றாள்.
“உங்களை கஸ்ரப்படுத்திறன் என்னம்மா…” என்பவளுக்கும் மனதில் சந்தோஷம் இல்லை. “அப்பா வேதனைப்படுவார் என்னம்மா…?” என்றாள். கமலாவாலும் அவளுக்கு பதில் சொல்ல முடியவில்லை.
“என்னம்மா..? ஒண்டும் சொல்றீங்களில்லை…?” கவலையுடன் கேட்டாள்.
“இது நாங்கள் கொஞ்சமும் எதிர்பார்க்காத விசயம் தானே சௌமி…, எங்களுக்கும் ஜீரணிக்க டைம் எடுக்கும் தானே…” என்றவர் “அக்கா கேட்டதும் நாங்கள் அதை அவ்வளவு சீரியஸாக எடுக்கேல்ல, எங்களுக்கு விருப்பம் இல்லாட்டி விருப்பம் இல்லை எண்டு சொல்லலாம் எண்டது தான் என்ர எண்ணம்…, ஆனால் நீயும் நாங்கள் கொஞ்சமும் எதிர்பார்க்காத ஒன்றை சொன்னதும் தான் உடனே எங்களால ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கு…,அக்கா நேற்றுக் காலையில உன்னோட கதைச்சிட்டு, திரும்பவும் வந்து அந்தப் பேச்சை எடுக்கவும் எனக்கு உன்ர விருப்பத்தை விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருந்தது.அப்பா தான் வேற பல ஆசைகளை வளர்த்து வச்சிருந்ந்தவர். அவரால இதை ஏற்றுக் கொள்ள கொஞ்ச நாள் எடுக்கும்” என்றார்.
“ம்…” என்றவளுக்கு அவர்களை எண்ணி வருத்தம் தான். அவளாலும் எதுவும் செய்ய முடியாத நிலை தான்.
“பத்மா ஆண்டியும் , அவவின்ர மகனும் சரியான நல்லவர்களம்மா…” என்றாள் தாயை சமாதானப்படுத்தும் நோக்கமாக.
“ம்…” என்ற கமலாவுக்கு அவர்களிலும் வருத்தம் இருக்கத்தான் செய்தது. எனவே இப்போது அவர் மேற்கொண்டு எதுவும் கதைக்க விரும்பவில்லை.
“சரி.., நான் அப்பாவை பார்த்துட்டு வாறன்” என்று விட்டு எழுந்து வெளியே வந்தார். அங்கே மாமரத்துக்கு கீழே உள்ள கதிரையில் அமர்ந்திருந்த கணவனின் முகத்தில் படிந்திருந்த கடும் யோசனையையும், வருத்தத்தையும், கோபத்தையும் கண்டவருக்கு, பயமும் கலக்கமும் ஏற்பட்டது. வெகுவாகத் தயங்கியவாறு வந்த மனைவியை ஏறிட்டுப் பார்த்தார் சிவநாதன்.
“டீ தரவா…?” எனக் கேட்டார் கமலா.
‘வேண்டாம்’ என்பது போல் தலையசைத்தார் அவர்.
மேலே என்ன கதைப்பது எனத் தெரியாமல் நின்ற மனைவியைப் பார்த்து அவர்”இது உனக்கு முதலே தெரியுமா..?” எனக் கேட்டார் அவர்.
‘இல்லை’ என்பதைப் போல் தலையசைத்தவர் “நேற்று காலையில அக்கா வந்து கதைச்ச போது சின்னதா ஒரு டவுட் வந்தது…” என்றவாறு நேற்று தான் ஊகித்த விஷயத்தை கூறினார். அவரைப் பார்த்து சிவநாதன் கோபத்துடன் முறைத்தார்.
“நீ இப்படி எல்லாம் செய்யக்கூடாது எண்டு அட்வைஸ் ஒண்டும் பண்றே இல்லையா…? எந்த நேரமும் என்ன கதைக்கிறனீங்கள்…? நீ எல்லாத்தையும் பார்ப்பாய் எண்டு தானே நான் என்ர வேலையை பார்த்துக் கொண்டிருந்தனான்…” என கோபத்துடன் கேட்டார் மனைவியிடம்.
“நான் எத்தனையோ தடவை சொல்லி இருக்கிறேன்…” என்றார் அவர் ஆற்றாமையோடு.
“இப்ப என்ன செய்யுறது…?” பெற்ற உள்ளம் தவிக்க கேட்டார்.
“அவள் அந்த தம்பியை விரும்பீட்டாளே…, அவளின்ர விருப்பத்தை தானே பார்க்கோணும்” என்ற மனைவியை சினத்துடன் பார்த்தார் சிவநாதன்.
“இந்த முடிவு சரியா இருக்கும் எண்டு நினைக்கிறீயா…?” என யோசனையுடன் கேட்டார் அவர்.
கமலாவால் பதில் சொல்ல முடியவில்லை.
“எனக்கு இது கொஞ்சம் கூட விருப்பம் இல்ல கமலா…, பதினொரு வயசு வித்தியாம்…” என மனைவியிடம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியவரால் இந்த விஷயத்தை இலகுவில் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
“உன்ர அக்காவும் இதுக்கு சப்போர்டோ…?” என குத்தலாக கேட்டார்.
தனது கணவர் தமக்கையை தவறாக எண்ணி விடக்கூடாது என்பதில் “இல்ல… இல்லை…” என அவசரமாக மறுத்தார் கமலா. “பத்மா அக்கா போன் பண்ணி கதைச்ச போது தான் அக்காவுக்கும் தெரியும். உடனேயே அக்கா இஞ்ச வந்து என்னோட கதைச்சிட்டு சௌமியோடையும் கதைச்சவா…, அப்பத்தான் அவாவுக்கும் சௌமி சொல்லியிருக்கணும்” என்றார்.
இருவருக்குமே விவரம் சரிவர தெரியாததால் அகிலனும் சௌமியை விரும்புவதாகத் தான் நினைத்தார்கள். சிவநாதனுக்கு, அகிலன் சிறு பிள்ளையின் மனதில் காதலை ஏற்படுத்தி விட்டான் என்று அவன் மீதும் கோபம் ஏற்பட்டது.