என் மன்னவன் நீ தானோ
அத்தியாயம் 2
சௌமிகாவிற்கு பல்கலைக்கழகத்தில் விரிவுரைகள் ஆரம்பமாகி ஆறு மாதங்களாகி விட்டது. வார நாட்களில் பல்கலைக்கு போவது, வருவது, படிப்பது என அவளது நாட்கள் நகர்ந்தன. வார இறுதி நாட்களில் பெரிய தாயாருக்கு சமையலில் உதவுவாள், தனது ஆடைகளை கழுவி உலர்த்தி வைப்பாள், நண்பர்களுடன் பொழுதை போக்குவாள் இவ்வாறு அவளுடைய நாட்கள் வேகமாக நகர்ந்து கொண்டிருந்தன.
அன்று அதிகாலை நான்கு மணி அளவில் எழுந்து படித்துக் கொண்டிருந்த சௌமி சிறிது நேரத்தில் இடி முழக்கத்துடன் மழை பெய்யும் சத்தம் கேட்டு ஜன்னல் வழியே வெளியே எட்டிப் பார்த்தாள், பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து கொண்டிருந்தது. அவளுக்கு முதலாவது செமஸ்டர் விரிவுரைகள் முடிந்து, பரீட்சைகள் நடந்து கொண்டிருந்தது. அன்றும் பரீட்சை இருந்ததால், அவள் கட்டாயம் பல்கலைக்கு போயாக வேண்டும். ‘பெரியப்பா இங்க இருந்திருந்தால் என்னை பல்கலைக்கு கூட்டிக் கொண்டு போய் விடுவார், அவர் அவருடைய அலுவலகத்தில் வேலை செய்யும் ஒருவரின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று கண்டிக்கு போய்விட்டார். எனவே நான் எப்பிடியும் பஸ்ல தான் போக வேணும். நேரத்தோட கிளம்பினால் தான் போய் சேர முடியும்’ என எண்ணியவாறு ஏற்கனவே அவள் படித்து எடுத்து வைத்திருந்த சிறு குறிப்புகளை விரைவாக பார்த்து விட்டு குளிப்பதற்காக குளியல் அறைக்கு சென்றாள். சிறிது நேரத்தில் வெளிக்கிட்டு தயாராகி “பெரியம்மா சாப்பாடு ரெடியா? நான் சீக்கிரம் போகணும்” என்றவாறு அறையில் இருந்து அவள் வெளியே வந்தாள்.
“புட்டும் அவிச்சு முட்டையும் பொரிச்சு வைச்சிருக்கிறன், சாப்பிடு” என்றவாறு அவளுக்கு சாப்பாட்டைப் பரிமாறினார்.
“கொஞ்சமாகப் போடுங்க...” என்றவாறு, சாப்பாட்டு மேசையில் அமர்ந்தவள் அவசர அவசரமாகச் சாப்பிட்டாள்.
சமையலறை ஜன்னல் வழியாக வெளியே பார்த்த சகுந்தலா “மழை இன்னும் விடேல்ல… காத்தும் வீசுது… எப்பிடி போகப் போகிறாய்” என சௌமியிடம் கூறியவாறு யோசித்தார்.
“குடை இருக்கு பெரியம்மா, பஸ்ஸில ஏறினால் சரி” என்றவாறு சாப்பிட்டு முடித்து கைகளை கழுவினாள் அவள்.
“இந்தக் காத்துக்கு குடை காணாது, பஸ்ல ஏற முதலே உடுப்பு நனைஞ்சிடும், ஈர உடுப்போடு கன நேரம் இருந்தால் காய்ச்சல் வரும், பிறகு நாளைக்கு பரீட்சைக்கு போக ஏலாமல் போயிடும்” என்றார் கவலையுடன்.
“கீழ ஏதாவது ஆட்டோ வந்தால் அதில ஏறிப் போறன்” என்றவாறு பாக்கையும் குடையையும் எடுத்தாள்.
“கொஞ்சம் பொறு, அகிலனும் கம்பஸுக்குத்தானே போவான், அவன் எத்தனை மணிக்கு போவான் என்று பத்மாவிடம் கேட்கிறன்” என்றவாறு தொலைபேசியை எடுத்தார்.
அவளுக்கு அவனைத் தெரியவும் மாட்டுது, அத்துடன் அவனுக்கு ஏன் சிரமத்தை கொடுக்க வேணும் என எண்ணிய அவள் “வேண்டாம் பெரியம்மா, நான் போவன். அவரை தொந்தரவு செய்ய வேண்டாம்” என்றாள் அவசரமாக.
“அவனுக்கு இதில என்ன தொந்தரவு இருக்கப் போகுது, அவனும் அங்க தானே போறான். இரண்டு நிமிசம் நில்லு, பத்மாவிடம் கேட்கிறன்” என்றவாறு டெலிபோனை எடுத்து அழுத்தினார்.
“பத்மா…, அகிலன் கம்பஸுக்கு போக வெளிக்கிட்டானா?” என விசாரித்தார்.
“இல்லையே... ஏன் கேட்கிறாய்?” எனக் கேட்டார் பத்மா.
“இண்டைக்கு சௌமிக்கு பரீட்சை இருக்கு, இந்த மழையில பஸ்ல போறது சிரமம், அதுதான் அகில் போகும் போது சௌமியையும் கூட்டிக் கொண்டு போக வேணும்.” என்றார்.
“ஓம், அதுக்கு என்ன…, அவன் எத்தனை மணிக்கு கிளம்புவான் என்று கேட்டிட்டு உனக்கு சொல்லுறன்” என்றவர் மகனிடம் “அங்கிள் கண்டிக்கு போயிட்டார், நீ கம்பஸ்க்கு போகும் போது சௌமியையும் கூட்டிக் கொண்டு போக வேணும். அவளுக்கு இண்டைக்கு டெஸ்ட் இருக்காம், நீ இன்னும் எவ்வளவு நேரத்தில வெளிக்கிடுவாய்?” எனக் கேட்டார்.
“நான் பத்து நிமிசத்தில வெளிக்கிட்டிடுவனம்மா” என்றான் அகிலன்.
பத்மா உடனே சகுந்தலாவுக்கு போன் பண்ணி பத்து நிமிடத்துக்குள் தயாராகும் படி கூறினார்.
“அவன் இன்னும் பத்து நிமிசத்தில கிளம்புவானாம் சௌமி, நீ எல்லாத்தையும் எடுத்துக் கொண்டு கீழ போய் நில்லு, அவன் வருவான்” என்றார் சகுந்தலா.
சௌமிகாவிற்கு, அவனை தெரியாது என்பதாலும், அங்கே தனியா போய் நிற்க தயங்கியதாலும் “எனக்கு அவரைத் தெரியாதே பெரியம்மா” என்றாள் அவள்.
“உனக்கு அகிலனைத் தெரியாதா?” என ஆச்சரியத்துடன் கேட்டார் அவர்.
‘இல்லை’ என்பது போல அவள் தலையாட்டினாள், இந்த ஆறு மாதங்களில் அவள் ஒரு நாளும் அவனைக் கண்டதில்லை.
“சரி வா…, நான் கூட்டிக் கொண்டு போறேன்” என்றபடி அவளையும் அழைத்துக் கொண்டு லிப்ட் வழியாக கீழே இறங்கி வந்து அவனது காருக்கு அருகில் நின்றார் அவர்.
சௌமிகா பாடசாலை விடுமுறை நாட்களில் பெரியம்மா வீட்டுக்கு வரும் சந்தர்ப்பங்களில், அகிலன் வீட்டுக்கு சென்றிருக்கிறாள் தான் என்றாலும் அங்கு அவனைப் பார்த்தது இல்லை. அவனும் ரியூசன், விளையாட்டு, நண்பர்களைச் சந்திக்க என்று வெளியே சென்று விடுவான், பல்கலைக்கழக படிப்பு முடிந்து அவன் வேலை பார்க்கத் தொடங்கிய பின்னர் அவன் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று விடுவான். இலண்டனில் இரண்டு வருடங்கள் தங்கிப் படித்திருக்கிறான். எனவே அவளுக்கு அகிலனைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்ததில்லை. அவனது வீட்டுச் சுவரில் மாட்டப்பட்டிருக்கும் சிறு வயதுப் புகைப்படங்களில் அவனைப் பார்த்தது தான் அவளுக்கு ஞாபகத்தில் உள்ளது.
அவன் எப்பிடி இருப்பான் என எண்ணியவாறு லிப்ட் திறந்து மூடுவதையே பார்த்துக் கொண்டிருந்தவள், அப்போது லிப்ட் திறக்கவும் சிலர் வந்தனர், அவர்களில் ஒருத்தன் ஆறடி உயரத்துடனும் கவரச்சிகரமான முக தோற்றத்துடனும் வெளிர் நீல நிறத்தில் கோடுகளுடன் கூடிய முழுக்கை சேட்டும் கருப்பு காற்சட்டையும் அணிந்து வெளியே வந்தான். சௌமிகா தன்னை மறந்து ஒரு கணம் அவனையே பார்த்தாள். அவர்களை நோக்கி கம்பீரமான நடையுடன் வந்தவன் வசீகரமான சிறு புன்னகையுடன் “ஆண்டி நீண்ட நேரமாக நிக்கிறீங்களா?” எனக் கேட்டான் சகுந்தலாவிடம்.
“இல்லை தம்பி…, இப்ப கொஞ்சம் முதல் தான் வந்தனாங்கள்” என்றவர் “சௌமிய சயன்ஸ் ஃப்கல்டியில விடப்பன்”என்றார்.
“ சரி ஆண்டி…” என்றவாறு ஒரு கணம் அவளைத் தொட்டது அவன் பார்வை.
சௌமி மனதில் இனிமையான தென்றல் வீச, அவனையே பார்த்துக் கொண்டு நின்றாள் அவள். அவன் தனது பையை பின்னால் உள்ள இருக்கையில் வைத்துவிட்டு “சரி ஆண்டி நேரமாயிட்டுது…, நான் வாறன்” என்றவாறு காரில் ஏறி அதை இயக்கி விட்டு, சௌமிகா ஏறுவதற்காக முன்பக்க கதவை திறந்து விட்ட அகிலன் அவளை நிமிர்ந்து பார்த்தான். அவனது மனதில் அவள் சிறுமியாக இருந்த போது ஓரிரு தடவை கண்டது ஞாபகத்தில் வர, அதற்குள் இப்பிடி அழகாக வளர்ந்திட்டாளே என்ற வியப்பு தோன்றியது. அவன், அவளை அதிகம் சந்தித்தது இல்லை என்றாலும், அவனின் தாயார் அவளின் பெயரை உச்சரிப்பதை கேட்டிருக்கிறான். அதிலும் அவள் இங்கே படிக்க வந்ததன் பின்னர் அவர் அதிகம் அவளைப் பற்றி கதைத்து இருக்கிறார். ஆனால் இன்று தான் அவளை நேரில் பார்க்கிறான்.
சௌமிக்கு, அவளிடம் ஒரு மரியாதை நிமிர்த்தமாக கூட ஓர் வார்த்தை பேசாதவன் முன்பக்க கதவை திறந்து விடவும், அவளுக்கு அதில் ஏற மனம் வரவில்லை, பின்பக்க கதவை திறப்பதற்கும் தயங்கிக் கொண்டு, என்ன செய்வது என்று தெரியாமல் சகுந்தலாவைப் பார்த்தாள்.
அவள் காரில் ஏறாமல் நிற்பதைக் கண்ட சகுந்தலா “சௌமி காரில ஏறு” என்றார்.
அவள், அவனைத் திரும்பிப் பார்த்தாள். அவன் தனது கைக் கடிகாரத்தைப் பார்ப்பதைக் கண்ட அவள் ஒரு கணமும் தாமதிக்காது “போயிட்டு வாறன் பெரியம்மா” என அவருக்கு கூறி விட்டு காரில் ஏறி கதவோரமாக உட்கார்ந்து, கதவைச் சாத்தி விட்டு அவனைப் பார்த்தாள். அவன் சகுந்தலாவைப் பார்த்து கை அசைத்து விட்டு காரைக் கிளப்பியவன், தனக்கருகில் ஒருத்தி இருக்கிறாள் என்ற சிந்தனை எதுவும் இல்லாமல், தெருவைப் பார்த்தபடி காரைச் செலுத்தினான்.
காரை ஓட்டத் தொடங்கியதில் இருந்து தன் பக்கம் திரும்பாமல் தன்னுடன் எதுவும் கதைக்காமல் இருந்த அவனைப் பார்த்த சௌமிக்கு சிறு எரிச்சல் எட்டிப் பார்த்தது. அவள் கலகலப்பானவள், ஒரு நிமிடமும் சும்மா இருக்க மாட்டாள், எந்நேரமும் எதையாவது செய்து கொண்டு, யாருடனாவது எதையாவது வளவள என கதைத்துக் கொண்டு தான் இருப்பாள். அதற்காக யாருடைய மனதையும் நோகடித்து கதைக்க மாட்டாள்.
மழையையும், தெருவில் செல்லும் வாகனங்களையும், குடையையும் பிடித்துக் கொண்டு மழையில் நனைந்தவாறு நடந்து செல்பவர்களையும், வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அவளுக்கு சிறிது நேரத்தில் அலுப்பு தட்டத் தொடங்கியது. எனவே அவன் எதையாவது கதைத்தால் தானும் கதைக்கலாம் என எதிர் பார்த்தாள். காலை நேர வாகன நெரிசலாலும் மழையாலும் வாகனங்கள் மிக மிக மெதுவாகவே சென்று கொண்டிருந்தன. பல்கலைக்குப் போய்ச்சேர எப்படியும் அரை மணித்தியாலங்களுக்கு மேலாக செல்லும் அதுவரை எதுவும் பேசாமலா இருப்பது என எண்ணியவள், அவன் கதைக்காட்டி என்ன, நானாவது எதையாவது கதைப்பம் என நினைத்து “நீங்கள் எவ்வளவு காலமா கம்பஸில லெக்சரராக இருக்கிறீங்கள்?” என சிறு தயக்கத்துடன் அவனைப் பார்த்து கேட்டு விட்டாள்.
அதற்கு அவன் என்ன கூறப் போகின்றான் என ஓர் விதமான எதிர் பார்ப்புடன் அவள் காத்துக் கொண்டிருக்க, அவன் அவளைப் பாராமலே “படிச்சு முடிச்சதில் இருந்து” எனப் பட்டும் படாமலும் சொன்னான். அவன் பதில் கூறிய விதத்தில் இருந்தே அவனுக்கு தன்னிடம் கதைக்க விருப்பம் இல்லை போல, நான் தான் தேவையில்லாமல் வாயை விட்டு விட்டேன் என நினைத்தவளுக்கு அவமானமாக இருந்தது.
ஒரு விரிவுரையாளராக இருப்பவருக்கு கூடப் பயணம் செய்யும் ஒருத்தியுடன் கதைக்கத் தெரியேல்ல…, கேட்ட கேள்விக்கும் முறையான பதில் சொல்லத் தெரியேல்ல… இவரெல்லாம் ஒரு விரிவுரையாளராம், எப்படித் தான் படிப்பிக்கிறாரோ தெரியேல்ல… என மனதில் அகிலனைத் திட்டி தீர்த்தவள், அதன் பின்னர் காரில் ஒலித்துக் கொண்டிருந்த இசைஞானியின் பாடலில் கவனத்தைச் செலுத்த தொடங்கினாள்.
அவன் விஞ்ஞான பீடத்தின் வழியாக பல்கலையினுள் சென்று காரை நிறுத்திவிட்டு அவளைப் பார்த்தான். அவள் “தாங்ஸ்” என முணுமுணுத்து விட்டு கார் கதவைத் திறந்து காரில் இருந்தவாறே குடையை விரித்துக் கொண்டு தனது மடியில் இருந்த புத்தகப் பையையும் எடுத்துக் கொண்டு அவசர அவசரமாக இறங்கி பரீட்சை மண்டபத்துக்குள் சென்றாள்.