என் மன்னவன் நீ தானோ
அத்தியாயம் 5
அடுத்த நாள் காலையில் அவர்களை கோணேஸ்வரர் ஆலயத்தில் இறக்கி விட்டு, அகிலன் கருத்தரங்கிற்கு சென்றுவிட்டான்.
இராவணன் வழிபட்டதாக கருதப்படும் பல வரலாறுகளைக் கொண்ட கோணேஸ்வரர், மூன்று பக்கமும் கடல் சூழ்ந்திருக்க மலையின் உச்சியில் இருந்து அடியவர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். கடல் காற்றை அனுபவித்துக் கொண்டு இருவரும் மெதுமெதுவாக மேலே ஏறிச் செல்லும் போது, ஆலயத்தின் வெளியே உள்ள கோபுரமும், சிலைகளும் கண்ணுக்கு விருந்தாக இருந்தது. இராவணின் சிலை கோயிலை வணங்கியபடி நிற்பது மிகவும் அழகாக இருந்தது. அங்கே இருந்த இராவணன் வெட்டைப் (சிவபெருமானால் இராவணனுக்கு கொடுக்கப்பட்ட சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ய விடாமல் தேவர்கள் தடுத்தனர். அந்த போபத்தில், இராவணன் தனது வாளினால் கோணமலையை வெட்டினான் அதுவே இராவணன் வெட்டு என வரலாறு கூறுகிறது) பார்த்து அதன் வரலாற்றை பத்மாவிடம் கேட்டுத் தெரிந்து கொண்டாள் சௌமி. மான்கள் அங்கும் இங்கும் துள்ளித் திரிந்தன. இவற்றை எல்லாம் பார்த்து பிரமித்தவாறு பத்மாவுடன் கோயிலின் உள்ளே சென்றாள் சௌமி.
மெய் சிலிர்க்க கோனேஸ்வரரை வணங்கிய அவளுக்கு மனம் நிறைந்து இருந்தது. அங்கே உள்ள ஒவ்வொரு கடவுளையும் பக்தியுடன் வணங்கினாள். ஆலயச் சுவர்களில் உள்ள தேவாரங்கள், திருப்புகழ்களைப் படித்தவாறு சுவாமியை கும்பிட்டாள். பல அற்புதங்கள் நிகழ்ந்த திருத்தலத்தில் தனது காலும் பட்டதை எண்ணிய மாத்திரத்தில் அவளின் உடலும் உள்ளமும் புல்லரித்தது.
அவர்கள் மிக ஆறுதலாக, பக்தியுடன் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்து அமர்ந்த சற்று நேரத்தில் “பசிக்குதா?” எனக் கேட்டவாறு அகிலன் வந்து விட்டான். ஓர் உயர் தர ஹோட்டலில் மதிய உணவை முடித்துக் கொண்டு, இயற்கைத் துறைமுகத்தை பார்ப்பதற்காகச் சென்றார்கள்.
உலகின் மிக முக்கியமான, எழில் நிறைந்த, பெரிய இயற்கைத் துறைமுகம் இது. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த துறைமுகத்தில் கப்பல்கள் தரித்து நின்றன. அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட இடம் வரை சென்று அவர்கள் பார்வையிட்டார்கள். அதன் பின்னர் மாலைப் பொழுதில் நிலாவெளி கடற்கரைக்கு அழைத்துச் சென்றான். இது உல்லாச பயணிகளை மிகவும் கவர்ந்த ஓர் கடற்கரையாகும்.
அடுத்த நாள் காலையில் அவர்கள் கன்னியா வெந்நீரூற்றுக்கு சென்றார்கள். திருகோணமலை கன்னியாவில் உள்ள ஏழு வெந்நீரூற்றுகளிலும் ஏழு வித்தியாசமான வெப்ப நிலைகளில் தண்ணீர் இருக்கும். (இராவணன் தனது தாயார் இறந்த போது, ஈமைக் கிரியைகள் செய்யும்படி அந்தணரின் வேடத்தில் இருந்த மகாவிஷ்ணுவை கேட்டபோது, அவர் இராவணனையும் அழைத்துக் கொண்டு கன்னியா எனும் இடத்திற்கு சென்று தன்னிடம் இருந்த தடியினால் ஏழு இடத்தில் ஊன்றினார். அந்த ஏழு இடத்திலும் வெந்நீரூற்றுகள் தோன்றின என வரலாறு கூறுகிறது.) காரை நிறுத்திவிட்டு மூவருமாக இறங்கி நடந்து சென்றார்கள். அங்கே சிலர் குளித்துக் கொண்டு நின்றார்கள் (இவற்றில் குளித்தால் நல்லது என்பது ஓர் நம்பிக்கை). இவர்கள் மூவரும் ஒவ்வொரு ஊற்றிலும் இருந்த நீரை எடுத்து அதை கையில் ஊற்றி அதன் வெப்பத்தை உணர்ந்து பார்த்தார்கள். சௌமி ஏற்கனவே இவற்றைப் பற்றி சிறு வயதில் படித்திருந்தாலும் ஒரே இடத்தில் அருகருகே உள்ள நீரூற்றுகளில் நீரின் வெப்பநிலை வேறுபட்டுக் காணப்படுவதை உணர்ந்து அவள் வியந்து போனாள்.
வேறு நாட்டவர்களும் இந்த அதிசயத்தை உணர்வதற்காக வந்திருந்தார்கள்.
கருத்தரங்கை ஏற்பாடு செய்தவர்கள் கருத்தரங்கில் கலந்து கொண்ட சட்டத்தரணிகளுக்கு உயர்தர ஹோட்டல் ஒன்றில் மதிய உணவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதில் கலந்து கொள்ள அவன் தனது தாயையும் சௌமியையும் அழைத்துக் கொண்டு அங்கு சென்றான். அங்கே ஏற்பாட்டாளர்களும் கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்திருந்த ஏனைய சட்டத்தரணிகளும் வந்திருந்தனர். ஒரு சிலர் குடும்பத்துடன் வந்திருந்தனர், சிலர் தனியே வந்திருந்தனர். அவர்கள், இவர்களை கண்டதும் உற்சாகத்துடன் வரவேற்றனர். அகிலன் தனது தாயையும் சௌமியையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்தினான். சௌமியை அறிமுகப்படுத்தும் போது குடும்ப நண்பி என சொன்னான். ஓர் பெரிய மேசையை சுற்றி இருபது பேர் உட்காரக்கூடியதாக ஆசனங்கள் போடப்பட்டிருந்தது. அவர்கள் எல்லோரும் ஏற்கனவே வந்து அமர்ந்து விட்டார்கள். அங்கே மூன்று கதிரைகள் அருகருகே இவர்களுக்காக இருந்தது. அதில் ஒன்றில் பத்மாவதி அமர்ந்தார், அவருக்கருகில் உள்ள கதிரையில் சௌமியை அமரச் சொன்ன அகிலன் அவளுக்குப் பக்கத்தில் உள்ள ஆசனத்தில் அமர்ந்தான்.
மிகவும் நெருக்கமாக கதிரைகள் போடப்பட்டிருந்ததால், அவளுக்கு மிக நெருக்கமாக அவன் அமரவும் இருவருடைய தோள்களிற்கு இடையில் நூலளவு இடைவெளி மாத்திரமே இருந்தது. அதில் அவளுடைய உடல் சிலிர்த்து அடங்கியது. அவள் அணிந்திருந்த சல்வார் துப்பட்டாவின் ஒரு பக்க நுனி அவனது கதிரையின் மீது இருந்தது, அவள் அதைக் கவனிக்கவில்லை, அவனும் அதை கவனிக்காமல் அமரவும் துப்பட்டாவையும் சல்வாரையும் சேர்த்து ஊசி குத்தி இருந்தால், அது ஒரு பக்கமாக இழுத்துக் கொண்டது. அவள், அவன் புறம் திரும்பி அவளின் துப்பட்டாவைப் பார்த்தவாறு “என்ர துப்பட்டா...” என மெதுவாக முணு முணுக்கவும் அவன் அதை குனிந்து பார்த்துவிட்டு மெதுவாக எழும்பவும் அதை இழுத்துக் கொண்டவளுக்கு மூச்சடைக்கும் போல் இருந்தது.
அவன் தனது கைகள் இரண்டையும் மேசையின் மீது வைத்து, நிமிர்ந்து இருந்தவாறு வெகு சாதாரணமாக ஏனையவர்களுடன் கதைத்துக் கொண்டிருந்தான். முதன் முதலாக ஓர் ஆடவனின் அருகாமை....! அதுவும் அவளின் மனதை கவர்ந்தவனின் நெருக்கம்....! அவளின் இதயம் வேகமாகத் துடித்தது, உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்தது போல ஏதேதோ செய்து கொண்டிருந்தது, பத்மாவின் பக்கமாகச் சரிந்து அமர்ந்து, தலை குனிந்து கைகளை மடியில் வைத்து அமர்ந்திருந்தவள் மூச்சை இழுத்து விட்டு மனதை கட்டுப்படுத்திக் கொள்ள முயன்றாள்.
அருகில் அமர்ந்திருந்தவர்கள் அவளை ஏதோ கேட்க, அவளின் வாயும் பதிலளித்துக் கொண்டிருந்தது. ஆனால் அவளின் மனம் அவளின் வசம் இருக்கவில்லை, அவளின் காதில் அவனுடைய கம்பீரமான குரல் கேட்டுக் கொண்டிருந்தது, அவன் பயன்படுத்திய வாசனை திரவியத்தின் மணம் நாசி முழுக்க நிறைந்திருந்தது. அவள் கதைக்கும் போது, அருகில் இருந்தவாறு அவன் வைத்த கண் வாங்காமல் தன்னையே பார்ப்பதை உணர்ந்தவளுக்கு நெஞ்சு படபடத்து, அந்த குளிரூட்டிய அறையிலும் வியர்த்தது.
அவளுக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த பழச்சாற்றை அவள் அருந்தாமல் வைத்திருப்பதை பார்த்துவிட்டு, “ஜூசைக் குடியும்” என்றவாறு அதை அவள் புறம் நகர்த்தினான் அவன்.
“ம்...” என்றவாறு அதை எடுத்து மெதுமெதுவாக அருந்தினாள் அவள்.
சற்று நேரத்தில் விதம் விதமான உணவுகள் வரவும் எல்லோரும் தங்களுக்குத் தேவையானவற்றை எடுத்துப் போட்டு சாப்பிட்டனர். அவள் மிக குறைவான உணவுகளையே எடுத்து இருந்தாள். அதைப் பார்த்த அவன் “என்ன கொஞ்சமா எடுத்திருக்கிறீர்… இன்னும் எடுத்துப் போட்டுச் சாப்பிடும், பிறகு பசிக்கும்” என்றான் அவன் அக்கறையாக.
அவன் தன்னை கவனித்துக் கொண்டிருக்கிறான் என தெரிந்ததும் அவள் மனம் பரவசமடைந்தாலும், உடலில் ஒருவித நடுக்கம்! பதில் சொல்ல வாய் வரவில்லை, சரி என்பதாக தலையை மட்டும் அசைத்தாள். அவன் அதைப் பார்த்துவிட்டு சாப்பிடத் தொடங்கினான். அவள் இரண்டு வாய் சாப்பிட்டு முடிப்பதற்குள், அவன் அருகில் இருந்தவர்களுடன் கதைத்தவாறு முதலில் எடுத்தவற்றை சாப்பிட்டு முடித்து விட்டான். அவளினுடைய சாப்பாடு அப்பிடியே இருப்பதைப் பார்த்ததும், “சாப்பாடு நல்லா இருக்குத் தானே… ஏன் சாப்பிடேல்லை? உமக்குப் பிடிக்கேல்லையா?” என வினாவினான்.
அவன் தன்னை அவதானித்துக் கொண்டிருக்கிறான் என்பதால் தான் அவளால் சாப்பிட முடியவில்லை! அதை சொல்லவா முடியும்…! இப்போது அவனது முகம், அவளின் முகத்துக்கு அருகில் இருந்து, அவளையே உற்றுப் பார்த்து கேட்டதில், அவளின் முகம் சிவந்து, உணவு தொண்டைக்குள் இறங்க மறுத்தது. அவன் தனது பதிலை எதிர்பார்த்து அவளையே பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதில் “நல்லா இருக்கு....” என்றாள் மிக மிக மெதுவாக.
அவளின் சிவந்த முகத்தைப் பார்த்தவாறு “டயட்டா…? சாப்பிட்டால் உடம்பு வைத்திடும் என்று யோசிக்கிறீரோ...” என இழுத்தவன் “ஒவ்வொரு நாளுமா இப்பிடி சாப்பிடுறம் .... ஏதோ ஒரு நாளைக்குத் தானே யோசிக்காமல் சாப்பிடும்...” என்றான் சிறு புன்னகையுடன். “இறால் சாப்பிடுவீர் தானே… பொரியல் நல்லா இருக்கு” என்றவாறு அதை அவள் புறம் நகர்த்தி “போட்டுச் சாப்பிடும்” என்றான். இவ்வாறு அவளை நன்கு கவனித்து சாப்பிட வைத்தான். புது மனிதர்களுக்கு மத்தியில் அவள் கூச்சப்படுகிறாள் என நினைத்து, அதை தவிர்த்து அவளை இயல்பாக்குவதற்கு அவன் உதவி செய்தான்.
அவன் தாயையும் கவனிக்கத் தவற இல்லை. அவன் தாயின் புறம் திரும்பி கதைக்கும் போது அவனின் மூச்சுக் காற்று அவளை உரசிச் சென்றது, அவனின் விழிகள் ஒரு கணம் அவளை தழுவிச் சென்றது. அப்போதெல்லாம் அவள் உடல் நடுங்க, பெரிதும் அவஸ்தைப்பட்டாள்.
அவன் இப்படி எல்லாம் தெரிந்து செய்கிறானா அல்லது தெரியாமல் செய்கிறானா என்பது அவளுக்குப் புரியவில்லை. ஆனால் இவற்றால் அவள் என்னவென்று சொல்ல முடியாத புது வகையான இனிமையான உணர்வை அனுபவித்தாள்..... ஆகாயத்தில் பறப்பது போல் உணர்ந்தாள்..... அவனின் இந்த அக்கறையான கவனிப்பு அவளை மகாராணி போல உணரவைத்தது.... அவன் மீதுள்ள பிரியம் பல மடங்கு பெருக, அவனின் அருகாமையை அனுபவித்தவாறு உணவிலும் கவனத்தை செலுத்தினாள். சாப்பிட்டு முடிய, அவளுக்குப் பிடித்த ஐஸ்கிரீம் வகையை அவளிடம் கேட்டு அதை அவளுக்கு தருவித்துக் கொடுத்தான்.
உணவை முடித்த அவர்கள் எல்லோரும் கை குலுக்கி விடை பெற்றுக் கொண்டார்கள். “சரி நாங்கள் கிளம்பப் போறம்...” என்று அவர்களிடம் கூறிய அகிலன் தாயையும் சௌமியையும் அழைத்துக் கொண்டு கார் தரிப்பிடத்தை நோக்கி நடந்தான்.
அவர்கள் இருவரும் காரில் ஏறியதும் கொழும்பை நோக்கி காரைச் செலுத்திய அவன் அருகில் அமர்ந்திருந்த தாயிடம் “ அம்மா, ட்ரிப் எப்பிடி இருந்தது? நல்லா என்ஜாய் பண்ணினீங்களா?” எனக் கேட்டான்.
“ம்… நல்லா இருந்ததுடா… அப்பா இருக்கேக்க அவரோட வந்தது அதுக்குப் பிறகு இப்பத்தானே வந்திருக்கிறேன். இருபது வருடத்திற்கு பிறகு வந்திருக்கிறன், கோணேஸ்வர்ரிட்ட போனது மனதுக்கு நிறைவாக இருக்குதடா....” என்றார் அவர் மகிழ்ச்சியுடன்.
“நான் இதுக்கு முதல் எத்தனை தடவை கூப்பிட்டிருக்கிறன்… நீங்கள் வரேல்ல எண்டீங்கள்..?” என்றான் அவன் ஆதங்கத்தோடு.
“உன்னோட வந்தால் நீ என்னை தனியா விட்டுட்டு, உன்ர அலுவல்களை பார்க்கப் போயிடுவாய். அதுதான் நான் உன்னோட வர விரும்புவதில்லை. இந்த முறை சௌமியும் வந்ததால எனக்கு அந்தப் பிரச்சினை இருக்க இல்லை” என்றார்.
“ம்...” என்றவாறு அவனுக்கு நேரே பின்னால் அமர்ந்திருந்த சௌமியை முன்னுக்கு உள்ள கண்ணாடி வழியாகப் பார்த்தான்.
அவனையே பார்த்துக் கொண்டிருந்த அவள் பார்வையைத் திருப்பிக் கொள்ளவும், அதைக் கவனித்தவன் “உமக்கு ட்ரிப் எப்பிடி இருந்தது?” என அவளை மீண்டும் பார்த்தான்.
“நல்லா இருந்தது...” என மெதுவாக கூறியவளால் இன்னும் இயல்பாக முடியவில்லை.
“களைப்பாக இருக்காம்மா?” எனத் தொடர்ந்து தாயிடம் கதைத்துக் கொண்டு வந்தான்.
நன்றாக சாய்ந்து அமர்ந்தவாறு ஜன்னல் வழியாக வெளிப்புறத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த சௌமியின் மனம் முழுவதும் அகிலனே நிறைந்து இருந்தான். புதிய ஓர் இடத்துக்கு வந்து பல வரலாறுகளைக் கொண்ட பல இடங்ளைப் பார்த்த உற்சாகத்தை விட அவனுடன் கழித்த அந்த நாட்கள் அவளுக்கு மிக மிக இனிமையான புது அனுபவத்தை கொடுத்தது. அதிலும் இன்று ஹோட்டலில் அவளுக்கருகில் இருந்து அவளைக் கவனித்த விதத்தை நினைக்கையில் அவளின் இதயம் இன்பமாய் அதிர்ந்தது. உடல் எல்லாம் ஒரு விதமான பரவசமாக இருந்தது. இதுவரை அனுபவித்திராத ஓர் புது விதமான உணர்வு அவளைத் தாக்கியது. இடையிடையே முன்பக்கமாக உள்ள கண்ணாடி வழியாக அவனைப் பார்த்தாள், அவன் காரைச் செலுத்துவதில் கவனமாக இருந்தான். அவன் தெருவில் பார்வையைப் பதித்து அளவான வேகத்துடன் நிதானமாக காரைச் செலுத்திக் கொண்டிருந்தான். அவன் கார் செலுத்தும் பாங்கு அவளை வெகுவாக கவர்ந்தது…, அவன் இடையிடையே ஒற்றைக் கையால் ஸ்டீயரிங் வீலில் தாளமிடுவது, இடக்கையால் தலையை கோதுதல், இவ்வாறு ஒவ்வொரு சிறு அசைவும் அவளுக்கு மிகவும் ரசிக்கும் படியாக இருந்து. அவளுடைய மனதில், எதனாலும் பிரித்து எடுக்க முடியாதவாறு அவன் மிகவும் ஆழமாக பதிந்து விட்டான்.
அவர்கள் கொழும்புக்குள் நுழைந்து விட்டார்கள், அவளுடைய வாழ்க்கையில் என்றைக்குமே மறக்க முடியாத அந்த இனிமையான பயணம் முடியும் தருவாயில் இருந்தது. அதுவரை நேரமும் அவள் அனுபவித்த இனிமையான தருணம் முடிவதில் அவள் மனம் சுணங்கியது. அவனுடைய அடுக்குமாடி குடியிருப்பின் வாகனத் தரிப்பிடத்தில் காரைக் கொண்டு வந்து நிறுத்தினான்.
அகிலன் காரில் இருந்து இறங்கி பிரயாணப் பைகளை வெளியே எடுத்து கீழே வைத்து கதவை சாத்தினான். சௌமி அவளுடைய பையைத் தூக்கினாள், அவன் அவர்களுடைய பைகளைத் தூக்கிக்கொண்டு லிஃப்டினுள் சென்றார்கள். பத்மாவின் வீடு மூன்றாவது தளத்தில் இருப்பதால், மூன்றாம் மாடி வந்ததும் “போட்டு வாறம் சௌமி” என்றவாறு பத்மா லிஃப்டில் இருந்து வெளியேற, அகிலனும் ‘போட்டு வாறம்’ என்பது போல அவளைப் பார்த்து தலை அசைத்தவாறு தாயைப் பின் தொடர்ந்தான்.
அவளும் “ஓம்...” எனக் கூறவும் லிஃப்டின் கதவு மூடிக் கொண்டது. அவள் தனது வீட்டுக்கு வந்து, குளித்து, உடை மாற்றி சாப்பிட்ட பின்னர், பெரியம்மாவிடம் அங்கு தான் போய் பார்த்த இடங்களைப் பற்றி கூறி, எடுத்த புகைப்படங்களையும் காட்டினாள்.