• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஒரு பார்வையிலே என்னை வீழத்திவிட்டாய் - 11

நிதனிபிரபு

Administrator
Staff member
பார்வை 11

மதுமதியோ,
“அய்யோ… கார்லயா? அவ்வளவு தூரம் எப்படி?” என்றாள்.

வசீகரன் அவளை துளைத்தெடுக்கும் பார்வையால் பார்த்தான்.

அவனது பார்வையில் ,இல்ல பஸ்னா பரவாயில்லை ,கார்ல வேண்டாமே என்றவளின் பதிலில்

“சரி அப்ப, எதுல வர? அந்த பஸ்ல பசங்க கூட கும்மாளம் போட்டுட்டு வரப்போறியா?” என்றான்.

சட்டென அவளை மட்டம் தட்டி பேசியது போல உணர்ந்தாள் அவள். அதிர்ந்து அவனைப் பார்த்தாள்.

“என்ன சொல்கிறான் அவன்?”
பசங்க கூட ஆசைப்பட்டு வருவது போல பேசியது அவளது கண்களில் லேசான கண்ணீரை வரவழைத்தது. மற்றவர்களுக்கும் அவன் சொன்னது சங்கடமாக இருந்தது.

“ஆங்கிரி பேட்… ஆங்கிரி பேட்…” என்று மனதுக்குள் திட்டியவள்.

அண்ணா நான் என்ன சொல்ல வரேன்னே கேக்க அவர் தயார் இல்ல என்றவளை

நீ கொஞ்சம் இரு மது என்றவன் “டேய், ஏன்டா?” என்றான் வசீகரனை பார்த்து.

“பின்ன என்னடா, நம்ம கூட வரலைன்னா பசங்க கூடவா வருவா?” — அவன் கோபம் இன்னும் குறையவில்லை.

“அண்ணா நான் வரல,” என்றாள் மது உடனே. “அவன் தான் சொல்வதை கேட்காத கோவத்தில்” .

“அட நீ ஏன்மா?” என்றான் மித்ரன்.

“வசீ, முதல்ல இவ்வளவு கோபப்படாத,” என்று அவனிடம் சொல்லி,
“மது, அவன் சொன்னத மனசில எடுத்துக்காத,” என்று அவளிடமும் சொன்னான்.

“வரதானே?” என்றவனிடம்,
ஆம் என்பதாக தலையை மட்டும் அசைத்தாள்.

வசீகரனை அவள் திரும்பியும் பார்க்கவில்லை.

அதை அவனும் உணர்ந்தான்

எதுக்காக இப்படி பேசினேன்? அவளுக்கு கஷ்டமா இருந்திருக்கும்…”
என்ற எண்ணம் அவனைத் தின்றுகொண்டிருந்தது.

வசீகரன் தலை கோதி மனதை சமன் செய்தான். அவனுக்கும் புரிந்தது தான் — சற்று அதிகமாகப் பேசிவிட்டோம் என்று. இருந்தாலும் அவனால் தடுக்க முடியவில்லை. அவள் தன்னுடன் வர மறுக்கிறாள் என்றே அவன் எண்ணினான்.

“சரி மித்ரா, நீ பேசிட்டு என்னன்னு சொல்லு. அப்பா ஆபீஸுக்கு வர சொன்னார். நான் புறப்படுறேன்,” என்றவன், அனைவருக்கும் பொதுவாகத் தலையசைத்து விட்டு சென்றான். அவனது நல்ல மனநிலை கெட்டது போல் இருந்தது.

அவளை நேரில் பார்க்கா எவ்வளவு ஆசையுடன் வந்தான், ஆனால் அவளோ,,,,,,,,,,அவனை பார்க்கவும் இல்லை, அவனால் அவளிடம் பேசமுடியவில்லை . அவளை ஆசையாக பார்க்க வந்தவனுக்கு, அவளது பாராமுகம் கோபத்தை வரவழைத்தது. வாசுந்தராவுடன் பேசிக்கொண்டிருந்தாலும், அவன் கண்கள் மதுமதியைத்தான் சுற்றி சுற்றி தேடியது. அவளை கண்ட நொடி, அவன் பார்த்தது — அவனை பார்க்காதது போல் வேறு பக்கம் திரும்பிய மதுமதியை.

ஆனால் அவன் அறியவில்லை; அவள் மனதில் அவன் நுழைந்து வெகுநாள் ஆகிவிட்டது என்று. அவன் வேறு பெண்ணுடன் பேசினால் அவளுக்கு வலிக்கிறது என்று. இது தெரிந்திருந்தால், அவனுக்கும் அவ்வளவு கோபம் வந்திருக்காதோ என்னவோ.

அவளது பாராமுகத்தில் ஏற்கனவே அவனுக்கு கோபம் கனன்று கொண்டிருக்க, அவள் காரில் வர மறுப்பு சொன்னதும் அவனது கோவத்தை வீசிறிவிட்டது போலானது

அவனுடன் வர மறுத்து, அவள் சொன்னதாகவே அவன் நினைத்தான்..

அப்படி அவளை எல்லோரின் முன்னிலையிலும் அவன் என்ன செய்து விடுவானாம் என்று இந்த பயம் , அவனுடன் வர மறுக்கிறாள். அவனை பார்த்தால் அவளுக்கு எப்படி தெரிக்கிறதாம் . அவன் காதலைச் சொல்லியும் அவளிடம் எந்த எதிர்வினையும் இல்லை என்று அறிந்தும் அவளுக்கான அவகாசத்தை கொடுத்து, அவனும் பொறுமையாக காத்திருக்கிறான். ஆனால் அவள்…

அவனை நேர்கொண்டு கூட பார்க்கவில்லை.மனது வெதும்பியது.

அவன் கிளம்பிய பிறகுதான் மதுமதிக்கு ஒன்று உரைத்தது. “அவனுடன் வர மறுப்பதாக எண்ணிவிட்டானோ? அதுதான் கோபமோ?” என்று நினைத்தவள், ச்ச… இதை யோசிக்காமலே போய்விட்டோமே என்று வருந்தினாள். ஆனால்,அவன் பேசியது .. சற்றும் மனம் ஆறவில்லை .

அன்று வீட்டுக்கு வந்தவன், மனமெங்கும் அவளது நினைவுகளோடு சோர்ந்து கட்டிலில் விழுந்தான். கண்களுக்குள் அவளது கலங்கிய விழிகள் அவனை இம்சித்தன.

“உன் கோபத்தை கொஞ்சம் கட்டுப்படுத்து, வசீ…”
அவள் ஏன் அப்படி சொன்னாள் என்பதை அறியுமுன்னே அவனது வாய் தேவையற்ற வார்த்தைகளை பேசிவிட்டது. தன்னை அவள் என்ன நினைத்திருப்பாளோ என்ற எண்ணம் அவன் மனதை கனத்தது. இனி இப்படிச் செய்யக்கூடாது என்று தீர்மானித்தான். ஆனால், வருங்காலத்தில் அவன் வாய் அவனது கட்டுபாடுகளை மீறி அவளை பேசி காயப்படுத்தப் போவதை அவன் அக்கணம் அறியவில்லை.




கீதாவோ மதுமதியிடம்,
“ஏன் கார்ல வர்றதுல என்ன பிரச்சனை உனக்கு?” என்றாள்.

“இல்ல… எனக்கு கார் ஏசி ஒத்துக்காது. கொஞ்ச தூரம்னாலே கஷ்டம். அவ்வளவு தூரம் எல்லாம் சத்தியமா முடியாது. வாமிட் எடுத்து ஒரு வழி ஆகப் போறேன்,” என்றாள் மது.

“அப்படின்னா அத சொல்ல வேண்டியதுதானே?” என்று கீதா கடிந்துகொள்ள,
“இல்லடி வசீ… அவர்கூட வரக்கூடாதுன்னு ஏதோ காரணம் சொல்கிறேன்னு அவர் தப்பா எடுத்துக்குவார்னு தான். ,” என்றாள்.

“அதுவும் சரிதான். அந்த அண்ணாக்கு எதுக்கு அவ்வளவு கோபம் வந்துச்சோ… ஆனா இப்ப என்ன பண்ணப் போற?” என்று கேட்டாள் கீதா.
“எப்படியாவது சமாளிக்கணும்,” என்றாள் மது.

“சரி, எலுமிச்சை, புளிப்பு மிட்டாய் எல்லாம் வாங்கி வைச்சுக்க,” என்ற பிரியா,
“சரி, கிளம்பலாமா?” என்று சொல்லிக்கொண்டே வீடுக்கு செல்ல பஸ் நிறுத்தம் நோக்கி விரைந்தனர்.


வெள்ளியன்று, மித்ரன் வரச் சொன்ன நேரத்துக்கும் இடத்துக்கும் அனைவரும் ஒருங்கிணைந்தனர். தேவையானவற்றை வாங்கிவிட்டு இவர்கள் திரும்பியபோது, வசீகரனின் டொயோட்டா ஃபார்டியூனர் கார் அவர்கள் அருகில் வந்து நின்றது.

முன்னிருக்கையில் வசீகரனும் மித்ரனும் அமர்ந்திருந்தனர். பின்னிருக்கையில் சந்தியாவும் கீதாவும், நடு இருக்கையில் பிரியாவும் மதுமதியும் அமர்ந்தனர். மதுமதியைப் பார்க்காமல் மற்றவர்களை பார்த்தவன் ,
“எல்லாரும் சாப்பிட்டாச்சா?” என்று விசாரித்தான் வசீகரன்.

“ஆமாம் அண்ணா, வீட்டிலேயே முடிச்சுட்டு வந்துட்டோம். கொஞ்சம் ஸ்நாக்ஸ் வாங்கி வைச்சிருக்கோம். சோ… நம்ம கிளம்பலாம்,” என்றாள் பிரியா.

மித்ரனை பார்த்து,
“ஏன் அத்தான், நம்ம காலையிலேயே போய் சேர்ந்துருவோமா?” என்று கேட்டாள்.
“ஆமாம்,” என்று அவனும் தலையசைத்தான்.




வசீகரன் காரைக் கிளப்ப, உள்ளே சலசலப்புடன் பயணம் தொடங்கியது. மதி மற்றவர்களுடன் பேசுவதும், ஓரக்கண்ணில் வசீகரனை பார்ப்பதுமாகவே இருந்தாள். வந்ததிலிருந்து அவன் அவளை சட்டை செய்ததாகவே தெரியவில்லை;

அவனால் இதயம் காயப்பட்டாலும் அவன் மீதான அன்பில் எவ்வித மாற்றமும் இல்லை. அவனது பாராமுகம் அவளை மிகவும் வருந்தியது.


கோயம்புத்தூர் நகரத்தைத் தாண்டியதும் கார் வேகம் எடுத்தது. வசீகரன் தானியங்கி பட்டன்களால் கார் கண்ணாடிகளை மூட, மதுமதி திணற ஆரம்பித்தாள். மெதுவாக பிரியாவின் கையைச் சுரண்டி, கண்ணாடியைத் திறக்கச் சொல்லி கிசுகிசுத்தாள்.

பிரியாவும் அவளின் பிரச்சனையை அறிந்திருந்ததால்,
“அண்ணா, நாங்க தூங்குற வரைக்கும் கார் கிளாஸ் ஓபன்லேயே இருக்கட்டுமே. மதுவுக்கு வாமிட்டிங் சென்சேஷன் இருக்கு,” என்றாள்.

மித்ரன் கிண்டலாக,
“நீ தான் மதுவோட வாயா?” என்று கேட்டான்.

“ஹா?” என்று அவள் விழித்து,
“என்ன அத்தான் உளறுற?” என்றாள்.

“பின்ன அத அவ சொல்ல மாட்டாளா? நீ அவளுக்கு வாயா பேசுறதுக்கு?” என்றான்.

இதையெல்லாம் கேட்டுக் கொண்டே, வசீகரன் கார் கண்ணாடிகளை மீண்டும் இறக்கினான். மது அவனை சங்கடமாக பார்த்தாள். அவனும் அவளை ரியர் மிரர் வழியாக பார்த்துக்கொண்டே வந்தான்.
“ஓ… இதுதான் பிரச்சனையா? இதைக் கூட இவ வாய்திறந்து சொல்ல மாட்டாளா?” என்று மனதுக்குள் நினைத்தான்.

கார் பொள்ளாச்சி, உடுமலை தாண்டி பழனியை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது மதுமதிக்கு வாந்தி வருவது போல உணர, அவள் மெதுவாக பிரியாவின் கையைச் சுரண்டினாள்.

“எப்ப பார்த்தாலும் கைய சுரண்டுற… வாயத் திறந்து சொல்ல மாட்டியா?” என்ற பிரியா, அவள் வாந்தி வருவது போல் சைகை செய்ததும் பதறியவள் .

உடனே,
“அண்ணா, கொஞ்சம் வண்டியை ஓரமா நிறுத்துங்க. மதுவுக்கு வாந்தி வர மாதிரி இருக்கு,” என்றாள்.

கார் ஓரமாக நிறுத்தப்பட்டதும், மதுமதி கதவை வேகமாகத் திறந்து தண்ணீர் பாட்டிலுடன் வெளியேறினாள். இரவு சாப்பிட்ட அனைத்தையும் வெளியேற்றினாள். பிரியா அவள் தலையைப் பிடித்துக் கொள்ள, மதுவால் நின்றுகூட இருக்க முடியவில்லை.

வசீகரனுக்கு மனம் கனிந்தது.
“என்னாலதானோ? இதைதான் அவள் சொல்ல வந்தாளோ … நான் தான் தவறாக புரிந்து கொண்டேனா ” என்று எண்ணினான்.

உடனே வசீகரன், மித்ரனிடம்,
“நீ பின்னால போய் பிரியாவோட உட்காரு,” என்று சொல்லிவிட்டு, மதுமதியை தன் அருகிலேயே அமரச் செய்தான். அவளிடம் நேரடியாக எதுவும் பேசவில்லை; மித்ரன் மூலமாகவே எல்லாம் செய்தான்.

முதலில் மதுமதி சம்மதிக்கவில்லை. ஆனால் வசீகரன் அழுத்தமாக பார்ப்பதைப் பார்த்ததும், “சரி” என்று விட்டாள்.

மீண்டும் கார் புறப்பட்டது. ஒரே முறை எடுத்த வாந்தியிலேயே மிகவும் சோர்ந்த அவள், சிறிது நேரத்திலேயே தூங்க ஆரம்பித்தாள். அவளை கடைக்கண்ணால் பார்த்துக்கொண்டே கார் ஓட்டிய வசீகரன், அவள் வசதியாக தூங்கும் வகையில் சீட்டையும் சரிசெய்தான்.




கார் விருதுநகரை அடையும் நேரம்,
“டீ சாப்பிடலாமா?” என்று தோன்ற, ஒரு பேக்கரியின் ஓரமாக வண்டியை நிறுத்தினான். அப்போது மதுமதிக்கும் விழிப்பு வந்தது. அவளிடமும் கேட்டான்; அவளும் சம்மதித்தாள்.

மற்றவர்கள் தூங்கிக் கொண்டிருக்க, இருவரும் டீக்கடை நோக்கிச் சென்றனர். அவளுக்கு லெமன் டீயும், அவனுக்கு பால் டீயும் வாங்கிக் குடித்தனர். எதுவும் பேசாமல், வெளியே வேடிக்கை பார்த்தவாறு டீயை பருகினர்.

முடித்ததும்,
“போலாமா?” என்றான்.
“சரி,” என்றாள்.

காரருகில் வந்ததும், அவன் சட்டென திரும்பி,
“சாரி,” என்றான்.

“எதுக்கு?” என்று அவள் பார்க்க,
“என்னால்தானே உனக்கு இந்த கஷ்டம். நீ என் கூட வர மாட்டேன்னு சொல்லறதா , நான் அன்னைக்கு தவறா நினைச்சுக்கிட்டேன். அதான் அன்று அவ்வளவு கோபம்… சாரி. உனக்கு கார் ஒத்துக்காதா?” என்றான்.

அவள் பாவமாக தலையசைத்தாள். அவன் புன்னகைத்தான்.


மற்றவர்கள் தூக்கம் கலையாத வண்ணம், பேசிக்கொண்டே தென்காசியை வந்தடைந்தனர். மழைக்காலம் என்பதால், அந்தப் பகுதியின் காலநிலை மிகவும் இனிமையாக இருந்தது.

பிரியாவின் ஊர் தென்காசி அருகே உள்ள செங்கோட்டை எனும் அழகிய பசுமையான கிராமம். வயல் வெளிகளும், சுற்றி சூழ்ந்த மலைகளும் கண்ணுக்கு குளிர்ச்சியளித்தன. குற்றாலம் அருகில் இருப்பதால் சுற்றுலாப் பயணிகளின் வரவும் அதிகம்.

“செம கிளைமேட்,” என்றாள் கீதா.
“ஆமாம்,” என்று சந்தியாவும் ஆமோதித்தாள்.

பிரியாவின் வீட்டினருகே அவர்களது கார் வந்து நின்றது.
அவர்களுள் நால்வரையும் இறக்கிவிட்டு, வசீகரனின் கார் மித்ரனின் வீடு நோக்கி சீறியது.
அவனது விழிகள் அவளையே தேடிப் பார்த்துக் கொண்டிருக்க,
அவனது மனம் மட்டும் இங்கே—
தன் காதலிடம் மண்டியிட்டு நின்றது..
 
Top Bottom