பார்வை 19
இதயம் கேட்கும்
காதலுக்கு வேறெதையும்
கேட்டிட தெரியாது அன்பை
கேட்கும் காதலுக்கு சந்தேகம்
தாங்கிட முடியாது
மேடும் பள்ளம்
இல்லாமல் ஒரு பாதை
இங்கு கிடையாது பிரிவும்
துயரம் இல்லாமல் ஒரு
காதலின் ஆழம் புரியாதே
கிரீன் பார்க் ரெஸ்டாரன்டில், அங்கே ஒரு குடில் போன்ற அமைப்பின் கீழே இருவரும் எதிரெதிரே அமர்ந்திருந்தனர்.
இருவரும் ஒன்றும் பேசவில்லை. அவளுக்கு ஒரு ஃபிரெஷ் ஜூஸ், அவனுக்கு ஒரு கோல்டு காப்பி ஆர்டர் செய்தார்கள். அமைதியாகவே நேரத்தை கடத்தினர்.
"ஹம்… சொல்லு," என்று வசீகரன் தான் தொடங்கினான்.
அவள் அவனை பரிதாபமாகப் பார்த்தாள்.
"நேத்து ஏதோ சொல்ல வந்த… அத சொல்லு இல்ல. இன்னும் ஏதாவது பொய் யோசிக்கணும்னா நேரம் எடுத்துக்கோ," என்றவனை விழிகளில் நீர் நிறைய பார்த்தாள்.
"வசீ, நான் அப்படிச் செய்தது தப்புதான். ஆன உங்க மேலுள்ள பயத்துல தான் அப்படிச் சொன்னேன். சாரி," என்றாள் அவள்.
அவன் ஏதும் பேசவில்லை, அவளையே கூர்ந்து பார்த்தான். வரும் போதே நிதானமாக கையாள வேண்டும் என்று எண்ணி தான் வந்தான். ஆனால் அவனுக்கும் பொறுமைக்கும் தான் வெகுதூரமே.
அவள் அவனிடம் அனாவசியமாக பொய் சொன்னதை அவனால் ஏற்க முடியவில்லை. இப்போது அதற்காகவும் அவனையே காரணி ஆக்குவது அவனுக்கு எரிச்சலாக இருந்தது.
மீண்டும் அவனை பார்த்தவள், "இந்த சாதாரண விஷயத்திற்கு எதுக்கு இவ்வளவு கோபம்?" மனதில் தோன்றியதை அவனிடம் கேட்கவும் செய்தாள்.
அவள் சொன்ன வினாடி அவன் கோவம் கரையை கடந்தது.
"எது சாதாரணம்? நீ பொய் சொன்னது சாதாரண விஷயம் இல்லையா? இருக்கலாம், நீ சித்க்கு இம்பார்டன்ஸ் குடுக்கிறது எனக்கு பிடிக்கவில்லை தான். எல்லாரையும் விட, உனக்கு நான் முக்கியமானவனா இருக்கணும்னு நினைக்கிறேன். அது தப்பா? ஏன் நீ என்னை அப்படி நினைக்க மாட்டாயா?
சரி, அதை கூட விடு… அவன் உன் சைல்ட்ஹூட் ஃப்ரெண்ட் இம்பார்டன்ஸ் குடுக்கிற சரி . அதுக்காக இந்த பொய் – இது தப்பு, என்னால் ஏற்க முடியாது. நான் திட்டுவேன்னு, பொய் சொல்லுவியா? எனக்கு அநாவசியமா பொய் சொல்லறவங்களை பிடிக்கவே பிடிக்காது.
இப்ப இந்த சின்ன விஷயத்துக்காக சொன்னவ, நாளைக்கு வேறென்ன செய்ய தயங்க மாட்டா," அவனது வார்த்தைகள் வீரியமாக வந்து விழுந்தன.
"வசீ… ஸ்டாப் இட்!" என்றவள். கண்ணீர் கன்னங்களில் வழிந்தது.
அதை பார்த்தவன் இன்னும் கோவமானான்.
அவளது கண்ணீர் கூட அவனை அசைக்கவில்லை; மாறாக கோபத்தைத் தூண்டியது.
"முதல்ல அழுகையை நிறுத்து… எரிச்சலா இருக்கு. தப்ப சுட்டிக்காட்டினா பதில் சொல்ல முடியலன்னா உடனே கண்ணீர் வந்திடும்ல," என்றான். கண்களிலும் குரலிலும் கோவத்தை காட்டி, கோவம் இருந்தாலும் முகம் இயல்பாக இருந்தது.
வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு அவன் சாதாரணமாகப் பேசுவது போல் தான் தோன்றும். அருகில் இருந்தவளுக்கு அவன் குரலில் காட்டிய பேதமும், கண்களின் சூடும் நெஞ்சை சுட்டது.
.
"வசீ… பிளீஸ், நீங்க ரொம்ப ஹர்ட் பண்ணறீங்க. நான்… நான் பொய் சொன்னது தப்புதான். அதுக்கு என்னவெல்லாம் சொல்லறீங்க? நான் அவ்வளவு மோசமா? பொய் சொல்லி எதுவும் செய்யவேனா ? இவ்வளவுதான். என்னை நீங்க புரிஞ்சு வச்சிருக்கீங்களா?
சாரி, இவ்வளவு மோசமா தான் என்னை நெனச்சிருபீங்கன்னு நான் நினைக்கல," என்று அவள் தவிப்பான குரலில் கூறினாள்.
அவளின் தவிப்பில் அவன் கொஞ்சம் நிதானமானான். அவனுக்கு யாரும் இப்படி தேவையில்லாமல் பொய் சொன்னாலும் பிடிக்காது, அதுவும் மனதுக்கு நெருக்கமானவளின் பொய் அவனால் தாங்க முடியவில்லை.
"மது, இங்க பாரு. சாரி, நான் இப்படி பேசனும்னு நினைக்கல," என்று அவன் தொடர்ந்தான் .
"நீ… உன்ன.. தியேட்டர்ல பார்த்ததும் சந்தோஷமா இருந்துச்சு. நீ நான் கூப்பிட்டு வராம அவன் கூட வந்ததும் கொஞ்சம் கோவம் வந்தது தான். அப்புறமும் சரி, உன்னை என்னோட அழைச்சுக்கலாம்னு தான் கூப்பிட்டேன். ஆனா நீ முதலில் பேசும் போது, விளையாடி பார்க்கத் தான் பேசினேன். ஆனா நீ ஒவ்வொரு பொய்யும் சொல்லும் போது, எனக்குள் நான் எப்படி உணர்ந்தேன். எப்படி நீ பொய் சொல்லலாம், அதுவும் என்கிட்ட? நான் உனக்கு அவ்வளவு தூரமா போய் விட்டேன் என்றுதோணிடுச்சு," அவள் குறுகிட்டாள்.
"அதுக்கு காரணம் நீங்கதான்," என்றாள் கோவமாக. இப்போது அவளுக்கும் கோவம் வந்திருந்தது.
அவன் அவளை என்னவென்று பார்த்தான்.
"நான் எப்பவும் சித் கூட பேசினாலும், அவன் கூட வந்தாலும், போனாலும் உங்களுக்கு பிடிக்கல. அவனுக்கு இம்பார்டன்ஸ் குடுகிறேன்னு, கோவம். உங்களுக்கு சந்தேகம். அதான் எப்பவும் இப்படியே பண்ணறீங்க," என்றான்.
"மது… காம் டவுன். குரலை உயர்த்தாம பேசு. பார், எல்லோரும் பார்க்கிறாங்க," அவன் சொன்னதும்
"எது… சத்தம் போடாம, என் மனசு உடைச்சிங்களே அத சொல்லறீங்களா?" என்றாள் அவள். சீற்றத்துடன், அதன் பிறகு அவன் கூறிய ஏதும் அவள் செவி சேரவில்லை.
"சரிதான்… ஆமா, அவனுக்கு தான் உங்களைவிட முக்கியத்துவம் தரேன். இனியும் தருவேன், ஏன்னா அவன் என் ஃப்ரெண்ட். அது மட்டுமில்லை; சின்ன வயசிலிருந்தே என்னை அப்படிப் பார்த்துக்குவான். எனக்கு சின்ன வயசிலிருந்து எல்லாமே அவன்தான். எனக்கு ஹஸ்பண்ட் வந்தாலும், அவனுக்கு வொய்ஃப் வந்தாலும், எங்க இரண்டு பேருக்கும் நாங்க ஒருவருக்கொருவர் முக்கியத்துவம் கொடுப்போம்," அவளும் கத்தினாள்.
அது அந்த எங்க உறவை புரிந்துகொள்ளக்கூடியவர்களுக்கு தான் எங்கள் வாழ்க்கையில் இடம் இருக்கிறது. அவளை கண் எடுக்காமல் பார்த்தவன் மனதோ அவளது உங்களை விட எனக்கு அவன்தான் முக்கியம் என்ற வார்த்தைகளிலேயே ஊசல் ஆடியது .
“என்னை விட இவளுக்கு அவன் தான் முக்கியமா?” –அவனால் தாங்க முடியவில்லை.
அதற்குப் பிறகு அவள் பேசியதை அவன் செவிமடுக்கவில்லை. அவளையே பார்த்தவன் விழிகளில் வலியுடன் கடைசியாக என்ன சொல்ல வர என்றான்.
அவனது வார்த்தையில் அவனை நேர்கொண்டு பார்த்தவள் மனது அவனின் கண்களில் தெரிந்த வலியில் தவிக்க தொடங்கியது.
அவளைக் புரியவைக்க தான் பேச ஆரம்பித்தாள். ஆனால் அவளையும் மீறி சில வார்த்தைகள் வந்துவிட்டன. அவளும் சித்துவும் விளையாட்டாக எடுத்த முடிவுகள் ஆனால் அவளுள் அது ஏனோ கல்வெட்டு போல பதிந்ததில் அவளை சரிபாதியாக ஏற்பவன் தெரிந்து கொள்ள வேண்டும் என்றே சொல்லப்பட்ட வார்த்தைகள். பின்வரும் நாட்களில் இதை கொண்டு மேலும் பிரச்சனை வரக்கூடாது என்று நினைத்து அவள் சொல்ல அங்கு நடந்ததோ வேறு.
ஆனால் அவளுக்கு புரியவில்லை. காதல் மற்றும் கல்யாணத்திற்கு முன்னர் எதுவும் முக்கியமாக இருக்கலாம், முடிவெடுக்கலாம். ஆனால் அதற்குப் பிறகு துணைக்குரிய முக்கியத்துவம் வேறு யாருக்கும் கொடுக்க முடியாது. நம் வாழ்க்கையில் முக்கியமானவர்கள் பலர் இருக்கலாம், ஆனால் நம் வாழ்க்கையை முழுமையாகப் பங்கு பெறுபவர்கள் நம்மிடம் அவர்களுக்கான முக்கியத்துவத்தையும், நம்பிக்கையையும் எதிர்பார்ப்பார்கள். அந்த எதிர்பார்ப்பு உடைக்கும் இடத்தில் காதல் தன் பலத்தை இழக்கும்.
“வசீ…” – என்று அவள் தடுமாறினாள்.
அவனது குரலின் கடுமை அவளை அச்சுறுத்தியது. எச்சிலை கூட்டி விழுங்கியவள் அவனையே கண் எடுக்காமல் பார்த்தாள்.
“சோ… என்னைவிட உனக்கு அவன் தான் முக்கியம் இல்லையா?” – என்று கேட்டவனின் குரலில் அதீத அழுத்தம்.
அவளது மனம் பதறியது. அவள் சொன்னதற்கு இப்படி ஒரு கோணத்தில் எதிர்வினை வரும் என்று நினைக்கவில்லை.
“வசீ… நான் என்ன சொன்னேன்னா?” – என்றவளை அவன் கை நீட்டி தடுத்தான்.
“நீ சொன்னவரைக்கும் போதும். நீ யாரை வேண்டுமானாலும் முக்கியமா நினைக்கலாம். ஆனா எனக்கு நீதான் எப்போதும், .. எப்போதும் என்றவன் குரலில் அழுத்தம் இருந்தது …”
அவன் குரலில் தெரிந்த வலியில் ,அவள் தொண்டைக்குள் தவிப்பை உணர்ந்தாள். அவளுக்கு வார்த்தைகள் வர மறுத்தது. மனம் “அச்சோ அச்சோ” என்று தவித்தது.
“எனக்கு நீங்க தான் முக்கியம், வசீ…” – என்று மனம் ஓலமிட்டது.
ஆனால்,அவளது வார்த்தைகள் தொண்டைக்குழியைத் தாண்டவில்லை.
அவன் சொன்னான், “இல்லை, இல்லை,” அறிவித்தான்.
ஆனா “என்னை முக்கியமா நினைக்காதவ எனக்கும் வேண்டாம். யாரை முக்கியமா நினைக்கிறாயோ அவனையே காதல் செய்…” – அந்த வார்த்தையை அவன் சொல்ல விரும்பவில்லை.
அதனை கேட்ட நொடி, “வசீ…” என்ற வார்த்தைகள் காற்றாய் தான் வந்தது. அவளோ , “என்ன சொல்கிறான் இவன்?” ஒருவித அதிர்வுடன் பார்த்தாள் .
அவனை விட்டுவிட்டு வேறொருவனையா அதுவும் சித்துவை போய் என்ன சொல்லிவிட்டான்.
அவனுக்கு ஏன் என்னை புரியவில்லை. என்னை ஏன் அவனுக்கு புரியவைக்க முடியவில்லை.வேறொருவனை அவளது வாழ்வில் கற்பனைக்கு கூட அவளால் நினைக்க முடியவில்லை,
அப்படி சொல்ல ,”அவனால் எப்படி முடிந்தது?”
வசீ… பிளீஸ், இந்த சின்ன விசி… அவளை முடிக்க விடவில்லை.
திரும்ப திரும்ப, “இதைக் சின்ன விஷயம், சாதாரணம் விஷயம் அப்படி சொல்லாத மது இங்க வலிக்குது” என்று இதயப் பகுதியை சுட்டிக்காட்டினான்.
நான் உனக்கு முக்கியமில்லை என்பது உனக்கு சாதாரணமா?,அவன் தான் உனக்கு முக்கியம்ன்னு சொல்லி என் மனசை உடைக்கிறது. உனக்கு சாதாரணமா? இருக்கலாம், உனக்கு நான் தான் முக்கியம் இல்லையே , அப்ப அது சாதாரணம் தான் என்றவனால்,.
அதற்குப் மேல் அங்கே நிக்க கூட முடியவில்லை.
“குட்… பாய்…” என்றவன் விறுவிறுவென்று, அவனது காரை நோக்கி நடந்தான்.
.அவன் பேசிவிட்டு சென்ற நொடி, அவளுக்குஎன்ன சொல்ல , என்ன செய்ய வேண்டும் என்று எதுவும் ஓடவில்லை; எதையும் செய்ய இயலாமல் அவளது கால்கள் அசைய மறுத்தது.
"லூசனாடா நீ…!" என்று தவித்தாள். நீதான் எனக்கு மிகவும் முக்கியமானவன் என்பதை எப்படி உணரவைப்பேன். ஒரு வேகத்தில் , கோவத்தில் சித்து தான் முக்கியம் என்று சொல்லிவிட்டாள் தான் ஆனால் நிதர்சனம் என்ற ஒன்று உள்ளதே! அதனை அவனுக்கு எப்படி உணர்த்துவாள். அவளுக்கு அவன் தான் முதன்மையானவன் என்று அவனுக்கு எப்படிக் உணர்த்துவது என்று தெரியவில்லை.
அவள் மனம் அடித்துக்கொண்டது, தவறு செய்த குழந்தை போல, என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் தவித்தாள். அவனுடன் சண்டை போட்டாலும், அவனிடம் தான் கோவம் கொண்டாள் என்றாலும் கூட, அவளது மனம் அவனின் தோல் சாய்ந்து ஆறுதல் தேடவே விரும்பியது.
இனி என்ன .. இனி என்ன செய்து இதை சரி செய்வது. எப்படி என் காதலை மீட்பேன் . கதறிய மனதில் அவனால் கீறப்பட்ட காயத்தில் உண்டான வலியில் இருந்து அவளுக்கு நிவர்த்தி உண்டா? அவளவன் அவளது காயதுக்கு மருந்திடுவானா? அல்லது மேலும் அவளை காயபடுத்துவானா?