பார்வை 2
“ஓ…”என்றவள் முகத்தில் கலவையான உணர்வுகள் வந்து போனது. ஏன் என்று அவளை கூர்ந்து பார்த்தவர் அவளிடம் என்னவென்று கேட்கவில்லை .
சட்டென்று முகபாவனையை மாற்றி, அவரை சிறு முறுவலுடன் பார்த்தவளது மனம் அலைகடலென ஆர்ப்பரித்தது. அதை அவள் மட்டுமே அறிவாள். எப்போதும் போல பொங்கும் மனதை அடக்கிக் கொண்டு,
“எப்பொழுது நான் அங்கே செல்ல வேண்டும் சார்?”
என்றாள் இயல்பாக.
இங்கு ஒரு இரண்டு மாதங்கள் தான். பிறகு அங்கு தான். எங்களது கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனிக்காகத்தான் உன்னை முக்கியமாக வேலைக்கு நியமித்தேன். இந்த இரண்டு மாதங்களும் தேவைப்படும் போது அங்கு சென்று வந்தால் போதுமானது. என் மகன் இந்த இரண்டு மாதங்களும் வேலை விஷயமாக வெளிநாடு அவ்வப்போது சென்று வருவான். அதுவரை இங்கு எனக்கு உதவியாக இருந்துவிட்டு, பிறகு அங்கு அலுவலகத்தில் வேலை செய்யலாம். இன்னும் ஏதாவது சந்தேகம்?”
என்று கேட்டார்.
“இல்லை சார்,”
என்றாள் பளிச்சென்ற புன்னகையுடன்.
ஆழமாக புன்னகைத்தவர்,
“என் பழைய செயலர் என்னைப் போல வயதானவர். இப்போது வெளிநாடில் அவரது மகளிடம் சென்று விட்டார். எனக்கும் இப்போ முன்னைப் போல அலைய முடியவில்லை.
அதனால்தான் உன்னைப் போன்ற இளையவர்களை வேலைக்கு வைத்துக் கொண்டால் எனக்கு வசதியாக இருக்கும் என்று என் பிள்ளை ஜெய் தான் மோகனிடம் சொல்லியிருப்பான் போல . அவன் தான் உன்னை சிபாரிசு செய்தான். அதனால் இரண்டு இடங்களிலும் மாற்றி மாற்றி வேலை இருக்கும்,”
என்றார்.
அவளும் புன்னகையுடன் தலையசைத்துக் கொண்டாள்.
வேலையைப் பற்றிய பேச்சு அவ்வளவுதான்.
“இப்ப சொல்லுமா… பெயர் என்ன சொன்னாய்? ஆ… மதுமதி பிரதிக்ஷா… வித்யாசமான, அருமையான பெயர்,” என்றார்.
“சரி… காபியா அல்லது டீயா? என்ன சாப்பிடுகிறாய்?” என்று இயல்பாக கேட்டார்.
அதற்குள்ளாகவே, அவரது மனைவி மீனாட்சி அம்மாள் அவர் மனதைப் படித்தவர் போல காபி டிரேயுடன் உள்ளே வந்தார். மூவரும் ஆளுக்கு ஒரு கப் காப்பியை எடுத்துக்கொண்டனர்.
இருவருக்கிடையேயான அன்யோனியம் அவளைக் கவர்ந்தது. சொல்லாமலேயே புரிந்துகொள்ளும் அந்த அன்பும், ஒருவரை ஒருவர் நம்பி நிற்கும் அந்த நெருக்கமும் அவர்களது ஒவ்வொரு பார்வையிலும் வெளிப்பட்டது.
இதுபோல நம் வாழ்க்கையும் இருந்திருந்தால்…
அந்த எண்ணம் அவளுக்கே அந்நியமாக இருந்தது. திருமணத்தைப் பற்றி நினைக்காதவளும், நினைக்க விரும்பாதவளுமான அவள்,
என்ன… இப்படி எண்ணத் தொடங்கிவிட்டோம்?
என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டாள்.
அவள் அனைத்தையும் மறந்துவிட்டாளா?
மன்னித்துவிட்டாளா?
அல்லது மறக்கவும் மன்னிக்கவும் முயற்சிக்கிறாளா?
தெரியவில்லை. அவளிடம் அந்தக் கணத்தில் இருந்தது ஒரு ஆழமான பெருமூச்சு மட்டுமே.
அவர்கள் இருவரையும் அவளுக்கு பிடித்திருந்தது.
அதேபோல், மீனாட்சி அம்மாளுக்கும் மதுமதி மீது ஏதோ ஒரு நெருக்கம் உடனே உருவாகிவிட்டது.
அவர்கள் இருவரையும் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. மீனாட்சி அம்மாளுக்கும் மதுமதியை மிகவும் பிடித்துப் போயிற்று.
“ரொம்ப அழகா இருக்குற கண்ணு,” என்று அவளை கையைப் பிடித்தவாறு சொன்னார்.
“பார்த்த மாத்திரத்திலே மனசுல ஒட்டிட்ட. எனக்கு ரெண்டுமே பசங்கதான்… அதனால பெண் பிள்ளைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்,” என்றார் புன்னகையுடன்.
“அப்போ உங்க பசங்களை உங்களுக்கு பிடிக்காதா ஆன்டி?” என்றாள் சிறு கேலியுடன்.
சற்றென்று அதிகம் பேசி விட்டோமே என்று உணர்ந்து, நாக்கை கடித்துக்கொண்டாள்.
“உன்னிடம் கவனமா பேசணும் போல இருக்கு,”
மீனாட்சி அம்மாள் சிரித்தபடியே சொன்னார்.
“சாரி ஆன்டி,” என்றாள் மதுமதி.
“பரவாயில்லை. நீ இப்படியே பேசு. எனக்கு இப்படி பேசினால்தான் பிடிக்கும். எப்படியோ இனி நீ தினமும் இங்க வந்துடுவ. இவர்கூட இருந்து எனக்கும் போர் அடிச்சிருச்சு,” என்றார் அவளைப் பார்த்து கண்சிமிட்டியபடி.
“பார்த்தா அப்படித் தெரியவில்லையே ஆன்டி. இன்னும் நூறு வருஷம் கிடைச்சாலும் போதும்னு சொல்லுவீங்க போல தெரியலையே,” என்றாள் கண்களில் சிரிப்புடன்.
பதிலுக்கு புன்னகைத்தவர், மனைவியை கண்களால் வருடியபடி,
“சரியாக சொன்னாய், மதும்மா,” என்றார்.
அவர் மீனாட்சி அம்மாவைப் பார்த்து, நான் சொன்னது சரியா? என்பது போல புருவத்தை உயர்த்தினார். கணவரின் பார்வையில் எழுந்த கன்னச் சிவப்பை மறைத்தவாறு, கோபமாக,
“என்ன இது… சின்னப் பெண்ணின் முன்னால இப்படி ஒரு பார்வை?” என்று சொக்கலிங்கத்தை பார்த்து முறைப்புடன் கிசுகிசுப்பாக சொல்லிவிட்டு ,
“சரி சரி, வேலையைப் பாருங்க,” என்று அங்கிருந்து சென்றார்.
பெரியவர்களின் பார்வை ஜாலங்களை பார்த்து மதுமதிக்கு வியப்பும் சிரிப்பும் ஒருசேர இருந்தது.
“பார்த்தாயா, உன் ஆன்டி எப்படி தப்பிச்சு ஓடுறா?” என்றார் அவரும் புன்னகை முகமாக.
அவளும் பதிலுக்கு புன்னகைத்தாள். .
அந்தச் சிரிப்பில், அவள் மறந்துவிட்டதாக நினைத்த ஒரு வாழ்க்கையின் நிழல் வரிவடிவமாக மின்னி மறைந்தது.
மதுமதியிடம் வேலைகள் பற்றிய விவரங்களை விரிவாகச் சொன்னார் சொக்கலிங்கம்.
“சரி,” என்று தலையசைத்தவள், அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தாள். இடையிடையே அவள் “சார்” என்று அவரை அழைக்கவும், அவர் சிரித்தபடியே,
“என்னை ‘சார்’னு எல்லாம் கூப்பிட வேண்டாம். ‘அங்கிள்’னு கூப்பிடு. அது கஷ்டமா இருந்தா, பேர் சொல்லிக் கூப்பிடு. அப்படியாவது என் வயசு குறையுதானு பார்க்கலாம்,” என்றார்.
அவளும் புன்னகைத்துவிட்டு,
“பெயர் சொல்லி எல்லாம் கூப்பிட மாட்டேன். அப்புறம் நானும் வயசாகிடுவேனாக்கும். ‘அங்கிள்’ன்னு வேண்டுமானால் கூப்பிடுகிறேன்,” என்றாள்.
“என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள்?” என்றவாறு மீண்டும் பழச்சாறுடன் வந்தார் மீனாட்சி அம்மாள்.
“ஒன்னும் இல்ல மீனாட்சி. மதுவை என்னை ‘அங்கிள்’னு கூப்பிடச் சொன்னேன். இல்லனா பேர் சொல்லிக் கூப்பிடலாம்னு சொன்னேன். அதுக்கு, பேர் சொல்லிக் கூப்பிட்டா அவளுக்கு வயசு அதிகமாகிடும்னு, அதனால ‘அங்கிள்’ன்னே கூப்பிடுவேன்னு சொல்றா,” என்றார்.
மதுமதியைப் பார்த்து சிரித்த மீனாட்சி அம்மாளும்,
“அங்கிள் குறைவா எடை போட்டுக்காதே. விட்டா இப்பதான் எனக்கு பதினைந்து வயசுன்னு பாரு. கவனமா இல்லன்னா உன்னை அவருக்கு பாட்டி ஆக்கிருவா,” என்று கண்சிமிட்டினார்.
“மதுமா, உனக்கு என்ன பிடிக்கும்? மதியம் உனக்கும் இங்கேயே சமைச்சு தரேன்,” என்றார்.
“ஆண்டி, நான் லஞ்ச் கொண்டு வந்திருக்கேன்,” என்றாள் அவள் அவசரமாக.
“மதுமா, நீ பயப்படாத. மீனாட்சி நல்லாதான் சமைப்பா,” என்றார் சொக்கலிங்கம்.
பின்னர், “மீனாட்சி சமையலை நீ இன்னைக்கு சாப்பிடு,” என்றவர், சிரித்தபடியே,
“இன்னைக்கு வேணா மீனாட்சி சமையலிலிருந்து நான் தப்பிச்சுக்கறேன். உன் லஞ்ச் பாக்ஸை எனக்கு கொடுத்திடு,” என்றார்.
அப்போது மதுமதி,
“என்ன அங்கிள்… என்னை பயப்படாதன்னு சொல்லிட்டு, நீங்களே பயப்படுறீங்க போல தெரியுது,” என்றாள், முத்துப் பற்கள் தெரிய சிரித்தபடி.
இருவரையும் பார்த்து சற்றே சன்னமாக முறைத்த மீனாட்சி அம்மாள் அங்கிருந்து நகர, சொக்கலிங்கம் மதுமதியைப் பார்த்து கண்களைச் சிமிட்டினார்.
மதிய உணவு நேரமும் இப்படியே கேலியும் கிண்டலுமாகவே சென்றது. மதிய இடைவேளைக்குப் பிறகு, மதுமதி வேலையில் முழுக் கவனம் செலுத்தினாள்.
முதல் நாளே சொக்கலிங்கத்துக்கு மதுமதியை மிகவும் பிடித்துப் போயிருந்தது. நேர்த்தியாகவும் சுறுசுறுப்பாகவும் அவள் கொடுக்கப்பட்ட வேலையைச் சிறப்பாக செய்தாள்.
மதுமதிக்கும் அந்த இடம், அந்த வேலை, பெரியவர்களின் அன்பு, மேலும் அன்று கிடைத்த பாராட்டுகள்—எல்லாமே மனதுக்கு நிறைவாக இருந்தன. அன்று நாள் அவளுக்குச் சிறப்பாகவே சென்றது.
வீட்டுக்குச் சென்றதும், அன்று நடந்ததை ஒன்றுவிடாமல் கணேசமூர்த்தியிடம் சொல்லி முடித்தாள். அவருக்கும் அது திருப்தியாகவே இருந்தது.
உடனே பரிமளம்,
“இப்போ உங்களுக்கு சந்தோசமா? ரொம்ப கவலைப்பட்டீங்களே,” என்றாள்.
அடுத்து வந்த நாட்களும் அவ்வாறே இனிமையாகக் கழிந்தன.
சொக்கலிங்கம் “எள்” என்றால் முதல் எண்ணையாக நின்றாள் மதுமதி. அவரும் அவளுக்குப் புரியும்படி, வேலையின் நெளிவுச் சுழிவுகளை எளிமையாக எடுத்துச் சொன்னார்.
அன்று வெள்ளிக்கிழமை.
மாம்பழ நிறத்தில், கரும்பச்சை நிறக் கரை கொண்ட பட்டுப் புடவையை உடுத்தி, தலையில் ஒற்றை மல்லிகைச் சரத்தைச் தொங்கவிட்டிருக்க . பார்ப்பதற்கு ஒரு தேவதை போலவே தெரிந்தாள்.
அந்தப் புடவையின் மீது அவளுக்கு எப்போதுமே ஒரு ஈர்ப்பு. அதை உடுத்தும் போதெல்லாம் மனம் நிறைவடையும். இன்றும் அப்படித்தான்.
வேறு எண்ணங்கள் வர முயன்றாலும், அவற்றை ஒதுக்கியவள், கண்ணாடியில் ஒருமுறை தலையைச் சரிசெய்துகொண்டு புறப்பட்டாள்.
காம்பவுண்டுக்குள் நுழையும் போதே, செடிகளுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்த மீனாட்சி அம்மாள் எதார்த்தமாகத் திரும்பினார்.
“மதுமா…” என்று விழிகள் விரிய,
“மகாலட்சுமியே வீட்டுக்கு வந்த மாதிரி இருக்கு,” என்று சொல்லி, இரு கைகளாலும் அவள் முகத்தைச் சுற்றித் திஷ்டி கழித்தார்.
“அதனால் என்ன ஆன்டி… மகாலட்சுமி உங்க வீட்டுக்கு வந்துட்டதாவே நினைச்சுக்கோங்க,” என்றாள் பளிச்செனும் புன்னகையுடன்.
“ஆமாண்டி தங்கம்… பேசாம நீ என் வீட்டுக்கு மருமகளா வந்திடு,” என்றாள் மீனாட்சி அம்மாள் வெகுளியாக.
இதைக் கேட்டு எதிர்பாராத அதிர்ச்சியில் மதுமதி ஒரு நொடிக்கு விழித்தாள். உடனே சுதாரித்துக்கொண்டு,
“வந்துட்டா போச்சு… இன்னைக்கே வந்துடவா ஆன்டி?” என்றாள் கேலியாக.
வீட்டுக்குள் அடியெடுத்து வைக்கப் போனவள்,
“என்ன ஆன்டி… வலது கால வைச்சு உள்ளே வரவா?” என்று சொல்லி பளீரென்று புன்னகைத்தாள்.
அவள் விழிகளில் தெரிந்த குறும்பைக் கண்ட மீனாட்சி அம்மாள்,
“ஒரு பேச்சுக்குச் சொன்னா உடனே இப்பவே வர்றேன்னு சொல்றியே,” என்று சிரித்தார்.
“பார்த்தீங்களா ஆன்டி… நீங்களே சொல்லிட்டு இப்போ என்ன காலை வார்றீங்களே,” என்றாள்.
“பேச்சுக்கு சொல்லல டா… மனசாரச் சொல்லறேன். நான் மட்டும் நினைச்சா போதுமா?” என்று எண்ணியவர் ஒரு பெருமூச்சை விட்டார்.
“மருமகளா எதுக்கு ஆன்டி… மகளா வரக்கூடாதா?” என்றாள்.
“மகன்னா ‘அம்மா’ன்னு கூப்பிடணும். நீ ஆன்டி இல்ல சொல்லறே,” என்றார் விடாமல்.
பேச்சு செல்லும் திசை அவளுக்குப் பிடிக்காமல் போக, பேச்சை மாற்றியவள்,
“அதை விடுங்க ஆன்டி… இன்னைக்கு என்ன சமையல்? சொல்லுங்க,” என்றாள்.
அதோடு அந்த உரையாடலை விட்டுவிட்டார் மீனாட்சி அம்மாள்.
“சரி, நீ வேலையைப் பாரு. நான் பிறகு உனக்கு பால் கொழுக்கட்டை கொண்டுவரேன்,” என்று சொல்லி சமையலறை நோக்கி சென்றார்.
இந்தப் பேச்சுகளுக்கிடையிலும், போர்டிகோவில் நின்றிருந்த புதிய காரை கவனிக்காமல் விடவில்லை மதுமதி.
யாருடையதாக இருக்கும்? என்று யோசித்தபடியே ஆபீஸ் ரூம் நோக்கி நடந்தாள்.
யாரோ தன்னைப் பார்த்துக்கொண்டிருப்பது போல உணர்ந்து, சுற்றிலும் பார்வையைச் சுழற்றினாள். யாரும் கண்ணில் படவில்லை.
அலுவலக அறைக்குள் நுழைந்த அவளை, மாடியில் கவனித்துக் கொண்டிருந்தவனின் மீசைக்கடியில், யாரும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு ஒரு மெல்லிய புன்னகை.
அவன் இதழ்கள் மெதுவாக முணுமுணுத்தன—
“மை லிட்டில் லவ்…”
அவளை இன்னுமொரு முறை பார்வையால் ஸ்பரிசித்தவன், திரும்பிக் கொண்டான்.
அப்போது அவனிடம் இருந்தது ஒரு நெடிய மூச்சு.
தன் நெஞ்சை மெதுவாக நீவியபடி நின்றான்.