பார்வை 23
எந்தன் வாழ்க்கையே உந்தன் விழிவிளிம்பில்…
என்னைத் துரத்தாதே உயிர் கரையேறாதே…
இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்…
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்…
இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்…
என்ன சொல்லப் போகிறாய்…
மதுவுக்கு கோபமும் ஆத்திரமும் எல்லாம் அவன் மீது ஒருங்கே எழுந்தது. நேரில் அவன் இருந்திருந்தால் கிழித்துத் தொங்கவிடும் அளவுக்கு ஆத்திரம் வந்தது. அவளது விருப்பம் கேட்கவில்லை; அவளிடம் பேசியவற்றுக்கு மன்னிப்பும் கேட்கவில்லை. அவனாகவே ஒரு முடிவு எடுத்து பேசுகிறான். அவளுக்கென்று விருப்பமும் வெறுப்பும் இல்லையா? எப்போதுமே இவன் இப்படித்தான். மனது சோர்ந்தது. அவன் அவளை விடமாட்டான் என்பதை நினைத்து சந்தோஷப்படவா, இல்லை வருந்தவா என்று அவளுக்கு புரியவில்லை. சரி, வருவதை எதிர்கொள்ள தன்னை ஆயத்தப்படுத்தினாள்.
இங்கு வருண் மற்றும் மதுவின் நட்பு வெகுவாக வளர்ந்தது. அவர்களது முதல் சந்திப்பு அவ்வளவு நன்றாக அமையவில்லை வருணுக்கு. அதற்கு அடுத்த நாள் வீட்டுக்கு வந்தவளை பார்த்தவன் விழிகள் சங்கடமாக இருந்தது. அவள்தான் பேசி பேசி அவனது சங்கடத்தை போக்கினாள். இருவரும் ஒத்த வயதுடையவர்கள் என்பதால் நண்பர்களாகினர்.
சனிக்கிழமைகளில் அவன் வார விடுமுறைக்கு வீட்டுக்கு வருவதால், மதுவும் அவனும் அவ்வப்போது சந்தித்து கொண்டனர். சித்துவிடம் தோன்றிய உணர்வு போல, இவனிடமும் நல்ல நண்பன் என்ற எண்ணமே இருந்தது.
ஆனால் வருணின் அண்ணன் புராணத்தில் தான் மது சலிப்படைவாள். வருணுக்கு ரோல் மாடலே அவன் அண்ணன் தான். உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதிலாகட்டும், உணவு கட்டுப்பாட்டிலாகட்டும், ஒரு செயலை திறம்பட செய்வதிலாகட்டும்—எல்லாவற்றிலும் அவன் அண்ணன் தான் “தி பெர்பெக்ட்” என்பான்.
வருண் சொல்லச் சொல்ல, “யாருடா அது? எனக்கே பார்க்கணும் போலிருக்கே!” என்று மனதிற்குள் கவுண்டர் கொடுத்துக்கொண்டு இருப்பாள். அவளின் கிண்டல் பார்வையை பார்த்து பேச்சை நிறுத்தி அவளை முறைத்தான் வருண்.
“ஓய், என்ன கிண்டல் செய்கிறாயா? உன்னிடம் சொன்னேன் பாரு!” என்று முகத்தைத் திருப்பிக்கொண்டான்.
“டேய், நான் ஒன்றுமே சொல்லலியே!” என்றாள் அப்பாவியாக முகம் வைத்துக்கொண்டு.
“போதும், அப்பாவி மாதிரி முகம் வைத்து என்னை பாவி ஆக்காத!”
அவன் சொன்னதில் முகம் மலர்ந்தவள், “சரி, சொல்லு. அப்புறம் உங்க அண்ணன் எதில் வல்லவர்? ஸ்டார்ட் மியூசிக்!” என்றாள்.
“என்ன ஓவரா பண்ணற? எங்க அண்ணன் கிட்ட போட்டு கொடுத்துடுவேன் பார்த்துக்கோ!”
“அப்படியா?” என்றாள் மீண்டும் சிரிப்புடன்.
“ஏன், நான் சொல்ல மாட்டேன்னு நினைக்கிறாயா?” என்றான் அவன்.
“ஆஃப் கோர்ஸ்! நீ என் நண்பன்டா!” என்றாள் மிதப்பாக.
“அந்த தைரியம் தான் உனக்கு! போ, இனி அவனைப் பற்றி உன்னிடம் எதுவும் பேச மாட்டேன்,” என்றான் முறுக்கிக் கொண்டு.
“சரி சரி… சாரி டா,” என்றாள் அவளும் தண்மையாக.
கொஞ்ச நேரம் தான். பிறகு அவன் எப்படியும் ஏதாவது ஒன்றில் தனது அண்ணனின் பிரதாபத்தை பேச்சில் கொண்டு வந்து விடுவான்.
இவன் இப்படி அண்ணனின் புகழைப் பாட, மதுமதிக்கு அவனை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் உருவானது. வருண் சொல்லச் சொல்ல அது அவளுக்கு வசீகரனை நினைவூட்டியது. “அவனும் இப்படித்தானே?” என்று நினைத்தாள். இரண்டும் ஒருவரே என்று அவள் அறியவில்லை.
அன்று சொக்கலிங்கம் மதுமதியை நேரே அலுவலகத்திற்கு வரச் சொல்லிவிட்டார். ஜே.எம். பில்டர்ஸ் என்ற வானுயர்ந்த கட்டிடத்தை பார்த்தாள். ஏற்கனவே ஒருமுறை வந்திருந்தாள் தான்; அன்று சொக்கலிங்கத்துடன் காரில் வந்திருந்தாள். மீட்டிங் முடிந்ததும் அவசரமாக சென்றுவிட்டாள்.
இன்று அவளது வாகனத்தில் அந்த வளாகத்தில் நுழையும் போதே நிதானித்து பார்த்தவள் முகம் மலர்ந்தது. இவ்வளவு பெரிய நிறுவனத்தில் அதிக சம்பளத்தில் வேலை கிடைத்ததே எவ்வளவு பெரிய விஷயம்! அவளுக்கு பிரம்மிப்பாக இருந்தது. தன்னுள் ஒரு நிமிர்வு தோன்றியது.
அவள் உள்ளே வந்தவுடன் வரவேற்பில் இருந்த பெண், “குட் மார்னிங் மேம்” என்றாள். இவளும் பதிலுக்கு கூறி, “சார் வந்தாச்சா, சரிகா?” என்று கேட்டாள்.
“பெரிய சார் இன்னும் வரவில்லை மேம். சின்னவர் வந்துவிட்டார். நீங்க வந்ததும் உங்களை பார்க்கச் சொன்னார்,” என்றாள்.
“தாங்க்யூ, சரிகா,” என்றவள் தனது சின்ன முதலாளியை பார்க்க அவன் அறை நோக்கி நடந்தாள்.
அவள் வருவதை தனது அறையிலிருந்த மானிட்டர் வழியாக பார்த்தவன் விழிகளில் கள்ளச் சிரிப்பு மலர்ந்தது. “சிரி டா சிரி… அவ வந்ததும் தான் உனக்கு இருக்கு,” என்று மனதில் நினைத்தபடி கதவு திறக்கும் கணதுக்காக காத்திருந்தான்.
சில நிமிடங்களில், “எக்ஸ்க்யூஸ் மீ” என்று அவள் கதவைத் தட்ட, “எஸ்” என்றவன் குரலில் கதவு திறக்கப்பட்டது.
சிறு முறுவலுடன் உள்ளே வந்தவள், அங்கே அமர்ந்திருந்தவனை கண்டதும் அதிர்ந்து நின்றாள். “இவனா?” என்ற அதிர்ச்சி சில நொடிகள் மட்டுமே. தன்னை சமாளித்தவள், “குட் மார்னிங் சார்” என்றாள் அதே புன்னகையுடன்.
அவள் வந்தது முதல் அவள் முக மாற்றத்தை கவனித்தவன் விழிகளில் மெச்சுதல் தெரிந்தது.
“வெல், உங்க பேர் மிஸ் மதுமதி பிரதிக் தானே?” என்று முறையாக பேச்சை தொடங்கினான்.
அவள் எஸ் சார் என்று தலையசைத்தாள். மனதோ—“உலக மகா நடிப்புடா சாமி! சிவாஜி கணேசனே தோற்றுவார் உன்னிடம்!” என்று நினைத்துக்கொண்டது. அதே நேரம், “நீ மட்டும் என்ன?” என்று அவளையும் மனம் கேள்வி கேட்டது.
“குட்,” என்றான்.
“அப்பா உங்களைப் பற்றி சொன்னார். நைஸ் டூ மீட் யூ,” என்று கை நீட்டினான்.
அவளும் மரியாதைக்காக கை நீட்ட, பற்றியவன் அவளது கையை விடவில்லை. பொறுமை இழந்தவள் கையை இழுத்துக்கொள்ள முயன்றபோது மெதுவாக விட்டான். அவள் முறைக்க, அவன் கண்கள் சிரித்தன.
“சிட், மது. அப்பா இப்போ வந்துவிடுவார்,” என்றான்.
அவள் இயந்திரம்போல் அமர்ந்தாள். வெளியிருந்து பார்க்க அமைதியாகத் தோன்றிய அந்த கண்ணாடி அறையில், உள்ளுக்குள் இருவரது மனங்களிலும் உணர்ச்சி புயல் கொந்தளித்துக் கொண்டிருந்தது.
ஒரே அறையில் அவனுடன் இருக்க முடியாமல், “நான் வேணும்னா வெளியே வெயிட் பண்ணறேன் சார்,” என்றவள் அவனின் பதிலை எதிர்பார்க்காமல் வெளியே ரிசெப்ஷனில் அமர்ந்தாள்.
“இவள…” என்று பற்களை கடித்தவனுக்கு, பல்லை கடிக்க மட்டுமே முடிந்தது அதற்கு மேல் எதுவும் செய்ய முடியவில்லை. ஏதாவது சொல்லி அவள் வேலையை விட்டு சென்றுவிட்டால்? என்ற எண்ணத்தில் அமைதியானான்.
அவளோ உள்ளுக்குள் கொதித்துக் கொண்டிருந்தாள். “இவனா? இவனுடைய நிறுவனமா?” என்று எண்ணி மனம் அமைதியடையவில்லை. அவன் கையை விடாமல் பிடித்தது பெரும் எரிச்சலை ஏற்படுத்தியது.
அவனது அப்பா மில் தானே வைத்துள்ளதாக சொன்னான். இதுவும் அவனது நிறுவனமா?
இனி இங்கே தன்னால் வேலை செய்ய முடியுமா? என்ன சொல்லி வெளியேற முடியும்? எல்லோரும் கேட்பார்களே, என்ன சொல்வது?
உண்மையான காரணத்தை சொல்ல முடியுமா என்று மனது தவித்தது.
சிறிது நேரத்தில் சொக்கலிங்கம் வர, அவருடன் அவரது அறைக்கு சென்றவள், மதியம் வரை அவர் சொன்னதை எல்லாம் இயந்திரம் போல செய்துவிட்டு, “அங்கிள், எனக்கு மிகவும் தலைவலி உள்ளது” என்று சொல்லிவிட்டு அரை நாள் விடுப்பெடுத்து சென்றுவிட்டாள்.
வசீகரனும் அவளுக்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கும் என்று உணர்ந்தவனாக, அவளை அதற்குமேல் தொந்தரவு செய்யவில்லை.
அலுவலகத்தை விட்டு வெளியே வந்தவள் நேரே வீட்டுக்கு செல்லாமல் கோவிலுக்கு சென்றாள். கோணியம்மன் கோவிலில் அம்மனை தரிசித்தவளின் மனது சற்று அமைதி அடைந்தது.
பின் சற்று நிதானமாக யோசித்தாள். தலைவலி என்பதற்காக தலையை வெட்டியா விடுகிறோம்; மருந்து போட்டு சரிசெய்துகொள்வதில்லை. அதுபோல இவனை பார்த்து பயந்து வேலையை விட்டுவிடக் கூடாது. இவனை பார்த்து பயந்து வேலையை விட்டதாக நினைத்தால் அது அவளுக்கு அவமானம் தான்.
இனி ஒருமுறை கூட அவனிடம் அவமானப்பட்டு நிற்கக் கூடாது. அவனுக்கு இனி என் மனதில் எப்போதும் இடம் இல்லை. இனி தான் உண்டு, தன் வேலை உண்டு என்று வேலையில் சரியாக இருந்துகொள்ள வேண்டும். வேலையில் குறை சொல்லும் நிலை ஏற்படக் கூடாது என்று எண்ணியவள், வேலையை விடும் முடிவை மாற்றிக் கொண்டாள்.
முடிவு எடுத்ததும் மனதில் ஒரு நிம்மதி பரவ, வீட்டிற்கு சென்றாள்.
ஆனால் அங்கே, இவளின் முடிவுகளை எல்லாம் மாற்ற வல்ல ஒருவன் இருக்கும் போது அது சாத்தியமாகுமா என்ன?.
அடுத்த நாளும் அலுவலகம் சென்றவள், முதல் நாள் போல எல்லாம் தடுமாறவில்லை.
அந்த வாரம் முழுவதும் அவளை அலுவலகத்தில் பார்க்கும் போது எல்லாம் அவனது உள்ளம் உள்ளே தடத்தடத்து கொண்டேதான் இருந்தது. “எங்கே வேலையை விட்டு நின்றுவிடுவாளோ?” என்று அதை வெளிக்காட்டினால், அவன் வசீகரன் அல்லவே. ஆயினும் அவனுக்கு ஒரு நம்பிக்கை விட்டு செல்லமாட்டாள். “எங்கே சென்றால் , அவளை தான் பயந்தவளாக நினைத்து விடுவேன்” என்று எண்ணி அவள் செல்ல மாட்டாள் என்று சரியாக கணித்தான்.
போனில் தைரியமாகப் பேசியவனால், நேரில் அவளிடம் சமாதானம் பேச முடியவில்லை. அவளின் அருகில் அவன்தான் உணர்வுகளின் குவியலாக மாறிவிடுகிறானே! அவளது பாராமுகம் அவனை என்னவோ செய்தது. தள்ளி நின்று ரசித்தானே தவிர, அவளை நெருங்க பயமாக இருந்தது.
அதற்கு பிறகான நாட்களில் அவள் அவனை கண்டுகொள்ளவில்லை. முன்னர் தெரிந்தது போல் காட்டிக்கொள்ளவும் இல்லை, புதிதாக பார்பவர்களிடம் நடப்பது போல நடந்துகொண்டாள். அவளின் முயற்சி அவனுக்கும் புரிந்தது. அதனால் அவனுக்குதான் நிம்மதி இல்லாமல் போனது. அவளை எப்படி சரி செய்வது என்று தெரியவில்லை.
மது… மது… ஏண்டி, என்னை இப்படி கொல்லற? தப்புதான் நான் பேசியது, தப்புதான்… அவனது மனம் அரற்றியது. “மன்னிக்க கூடாதா?” என்று அவளுக்காக, அவளின் அன்புக்காக ஏங்கியது மனது. அவளின் மீது சின்னதாக ஒட்டி கொண்டிருந்த கோபமும் அவளின் அருகில் கண்ணுக்கு தெரியாமல் மறைந்திருந்தது. ஆனால் அவளுக்கு இன்னும் கோவமும், வருத்தமும் இருந்தது. அதை எப்படி களையப்போகிறோம் அது தெரியாமல் தடுமாறி நின்றான் . .
மது மேடம் ஜெய் சார், உங்களைப் புது பிராஜெக்ட் ஃபைலை எடுத்துட்டு அவரது ரூமுக்கு வர சொன்னார் என்று ஆபீஸ் பியூன் சொல்லி செல்ல அவளுக்கு பதட்டமானது.
ஒருவாரமாக அவனை பார்க்காமல் இருக்க அவள் செய்த குரளி விதைகளை எல்லாம் பார்த்து அவனுக்கு மனதுக்குள் அவளை நினைத்து புன்னகை மலர்ந்தது. இன்று நேரடியாக தன்னை வந்து பார்க்க வர சொல்லிவிட்டான். இப்போது என்ன செய்வாள் என்று பார்க்க அவனுக்கு ஆர்வமாக இருந்தது.
அவன் கொண்டுவர சொல்லியிருந்த ஃபைலை எடுத்துக்கொண்டு வந்தாள். எக்ஸ்க்யூஸ் மீ சார், என்று முகத்தை தூக்கிவைத்து கொண்டு அறைக்குள் நுழைந்தவள் முகம் பூவாய் மலர்ந்தது. முகத்தில் புன்னகை மலர பார்த்தவள் உதடுகள் “மித்ரன் அண்ணா”, என்று சத்தமில்லாமல் முணுமுணுத்தது.