பார்வை 25
நெடுங்காலமாய் புழங்காமலே…
எனக்குள்ளே நேசம் கிடக்கின்றதே…
உனை பார்த்ததும் உயிர் தூண்டவே…
உதடுகள் தாண்டி தெறிக்கின்றதே…
அவள் வேகமாக நடந்தாலும், கால்கள் நடுங்கின.
ஆனால் அவன் முத்தமிட்ட விரல்களில் இன்னும் அவனின் இதழ்களின் வெம்மையை உணர்ந்தாள்.
அவளது பின்னோடு வந்தவன்,“மது…” என்று மெதுவாக அழைத்த குரல், அவளது அடிகளை நிறுத்தியது.
நிற்கக் கூடாதென்று புத்தி சொல்ல, திரும்பிப் பார்க்கவேண்டுமென்று இதயம் கெஞ்சியது.
“என்னை மன்னிக்கவே மாட்டாயா மது ?, நீ இப்படி என்னை விட்டு விலக விலக எனக்கு எங்க நம்ம வாழ்க்கை இப்படியே போய்விடுமோன்னு … எங்க “மீண்டும் உன்னை இழந்துடுவேனோன்னு பயம்.”. என்றான் அவன் மெதுவாக நெருங்கி.
அவள் மெதுவாக திரும்பினாள். கண்களில் துளிகள் மிதந்தன.
“இழந்தது நான்தான்…” என்றாள் தளர்ந்த குரலில்.
“நீங்க அன்னைக்கு சொன்ன எதுவும் என்னால மறக்க முடியல … அப்படி மறக்க கூடியதும் நீங்க என்னை சொல்லல, பிளீஸ் அத அப்படியே விட்டுடலாம் .”எனக்கு எதுவும் வேண்டாம் வசீ அவளது குரல் மெலிந்து ஒலித்தது.
நீண்ட நாட்களுக்கு பிறகான அவளது வசீ என்ற அழைப்பில் அவனது உள்ளம் தடுமாறியது .
மெல்ல அவளை அவன் நெருங்கி நின்றான். இடையில் காற்றுக்குக் புக கூட இடமில்லாத தூரம். அவனது இறுக்கமான அணைப்பில் அவள்..
“மது , நான் .. நான்.. அன்னைக்கு பேசியது ரொம்ப தப்புதான் அந்த தப்ப திருத்திக்க எனக்கு ஒரு வாய்ப்பு கொடுன்னு தான் சொல்லறேன் … உன்னை, உன் காதலை என்னால இழக்க முடியாது மது.
என்னோட காதல் அது அன்னைக்கும், இன்னைக்கும்,என்னைக்கும் உண்மையாதான் இருந்தது…
இப்ப என் உயிரோட கலந்து இருக்கு…
எப்பவும் நான் சுவாசிக்கும் மூச்சா இருக்கும்.”என்றவன் அவளது முகத்தை நிமர்த்தி விழிகளோடு விழிகளை கலக்க விட்டான்.
அவள் கண்களை மூடினாள். கன்னத்தில் உருண்ட கண்ணீரை அவன் விரலால் துடைத்தான்.
நின்று கொண்டிருக்கும் இடம் அவனது அறையின் முகப்பு அந்த தளதுக்கு அனாவசியமாக யாரும் வர மாட்டார்கள் தான் என்றாலும் அவனை சந்திக்கவென்று யாரும் வந்திருந்தால் . தாங்கள் இருக்கும் நிலையை யாரேனும் பார்த்திருந்தால் , நிதர்சனம் புரிய அவனை சட்டென்று விலக்கியவள் வேகமாக அவ்விடத்தைவிட்டு நடந்தாள், இல்லை, இல்லை ஓடினாள்....
ஓடியவளையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். அவனுக்கு உள்ளுக்குள் இருள் சூழந்த அறையில் வந்த தீக்குச்சியின் சிறிய வெளிச்சமாய் நம்பிக்கை பிறந்தது.
அதற்க்கு பிறகான நாட்களில் அவனை நேரில் சந்திப்பதை தவிர்த்தால், அப்படியே சந்தித்தாலும் அவன் விழிகளை முற்றிலும் தவிர்த்தாள், அவளது முகம் கோவத்தின் சாயலை பூச்சிக்கொண்டது. மீண்டும் அவளது கண்ணாம்பூச்சி ஆட்டத்தில் அவனுக்கு உள்ளுக்குள் கோவம் துளிரத்தாலும் அவனது காதல் மனமோ அவளை ரசிக்கவே செய்தது.
“கோபப்படுற உன் முகம் கூட எனக்கு ரொம்பப் பிடிக்கும், மது…
ஏன்னா அந்த கோபத்துல கூட நான்தான் இருக்கேன்னு.” எனக்கும் தெரியும் மது என்று மனதுக்குள் சொல்லி கொண்டான். அப்படியே சில நாட்களை கடந்தார்கள்.
அந்த வாரத்திற்கு பிறகு அவள் அலுவலகம் செல்லவில்லை. மீண்டும் பழையபடி வீட்டிலிருந்தே அலுவலகப் பணிகளைச் செய்து வந்தாள்.
மீனாட்சி அம்மாளுக்கு அவளை பார்த்ததும் அவ்வளவு சந்தோஷம். அவருக்கு அவளின் மீது பார்த்த முதல் நாளில் இருந்தே ஏதோ பிடித்தம்.இப்போது அவரது நெருக்கிய தோழியின் மகள் என்றறிந்ததும் இன்னும் அவளின் மீதான பிடித்தம் கூடியது.
இப்போது வருண் அவன் அண்ணனைப் பற்றி பேசும் போதும், மீனாட்சி அம்மாள் தன் மூத்த மகனைப் பற்றி பேசும் போதும், முகம் மாறாமல் இருக்க பெரும்பாடு பட்டாள். முயன்று தன்னை இயல்பாக்கிக் கொண்டாள்.
ஏதாவது ஒன்றிரண்டு நாட்களில் வசீகரனும் வீட்டில் இருக்கும் வேளைகளில், அங்கே அவளுக்கு மூச்சு முட்டுவது போல இருக்கும். ஆனால் அப்படியான தருணங்களில் அவனுக்கு பேரானந்தமாக இருக்கும். அவள் அங்கே, அவனின் அருகில், அவன் கண் பார்வையில் இருக்கிறாள் என்ற உணர்வே அவனை அமைதிப்படுத்தும். இப்படி இருவரும் இருவேறு உணர்வுகளில் இருந்தாலும், இருவருக்கும் இடையேயான காதல் மாறவில்லை.ஆனால் இவர்கள் இருவரையும் மற்றவர்களும் கவனிப்பார்கள் என்பதை இருவரும் மறந்திருந்தனர் .
ஒரு நாள் மீனாட்சி தன் பெரிய மகனைப் பற்றி புலம்பியபோது, ஆசிரமத்தையும் அங்குள்ள ஒரு குழந்தையையும் பற்றி சொன்னார்.
“நீ சொல்லுவியே டா கருணை இல்லம்... அங்கே ஒன்னரை வயதில் ஒரு குழந்தை இருக்கிறது — ஆர்த்தி. அவளைத்தான் தத்தெடுப்பேன்; அவளே போதும், கல்யாணமே வேண்டாம் என்று ஒரே பிடிவாதம். அதனால்தான் அங்கிளுக்கு அவன் மீது கோபம்,” என்றார்.
‘ஆர்த்தியா?’ என்று நினைத்தவளின் மனம் பரபரத்தது. அந்தக் குழந்தைக்கும் இவனுக்கும் என்ன சம்பந்தம்?
“ஏன் ஆன்டி?” என்று கேட்டாள்.
“என்ன சொல்ல? அந்தக் குழந்தையும் பாவம்தான். அவள் அவனுடைய நண்பனின் குழந்தை. அவனும் அந்த ஆசிரமத்தில் வளர்ந்த பையன் தான். இவன் கூட எம்.பி.ஏ. படித்தவன். நம்ம அங்கிளோட நண்பரின் மகள் வசுவும் இவங்களோடத்தான் படிச்சா. ரெண்டு பேரும் காதலிச்சாங்க. அங்கிளோட நண்பர் ஒத்துக்கொள்ளவில்லை. ஆனா வசு பிடிவாதமாக அவனைத் திருமணம் செய்துகிட்டாள். அவனும் நல்ல பையன் தான்; ஸ்காலர்ஷிப்-ல படிச்சவன். நல்ல வேலைக்குப் போனான்.
ரெண்டு பேரும் பதிவுத் திருமணம் செய்துகிட்டாங்க. நல்லாதான் இருந்தாங்க. யார்கண்ணு பட்டுச்சோ! அவள் எட்டாம் மாதம் கர்ப்பமாக இருந்தப்போ, வெளியூர் வேலை விஷயமாக போனவன் திரும்பி வரும்போது பொட்டணமா தான் வந்தான். அந்த அதிர்ச்சியில் வசுவுக்கு குறைபிரசவம் ஆச்சு. தாயையும் பிள்ளையையும் காப்பாற்ற போதும் போதும்னு ஆயிடுச்சு.
வசுவின் அப்பா, ‘இனியாவது என் மகள் நன்றாக இருக்கணும்’ என்று, பிள்ளை இறந்ததாக சொல்லி குழந்தையை ஆசிரமத்தில் விட்டுவிட்டார். அதனால் ஜெய்க்கு அவர்மேல் ரொம்ப கோபம். அந்தப் பிள்ளையை தானே தன் பிள்ளையாக வளர்ப்பேன் என்று இருக்கான்.”
“அங்கிளுக்கு அந்தப் பிள்ளையைத் தத்தெடுப்பதில் பிரச்சனை இல்லை. இவன் கல்யாணம் வேண்டாம் என்பதில்தான் வருத்தமும் கோபமும்,” என்றார் அவர் வருத்தத்துடன்.
இதற்கு அவளால் என்ன சொல்ல முடியும்? அவனுக்கு திருமணம் என்று நினைத்ததும் நெஞ்சில் சுருக்கென்ற வலி உண்டானது. ஏன் வேண்டாம் என்கிறான்? தன்னைப் போல அவனும் யாரையாவது நினைத்துதான் வேண்டாம் என்றிருப்பானா? இப்போது அவனுடனான சந்திப்புகள் தற்செயலானவையா? இல்லை திட்டமிட்டவையா? நினைக்க நினைக்க மனம் பரபரத்தது.
“மது… மதுமா…” என்று மீனாட்சி பலமுறை அழைத்த பிறகுதான் அவள் நினைவுக்கு வந்தாள்.
“சொல்லுங்க ஆன்டி,” என்றாள்.
“என்னடா ஒரே யோசனை? ஆன்டி பேசி பேசி ரொம்ப போரடிக்கிறேனா?” என்று புன்னகைத்தார்.
“இல்லை,” என்று மறுப்பாகத் தலையசைத்தவளிடம்,
“இரு, உனக்கு கேசரி எடுத்துவறேன். உன்னோட பேசிட்டு மறந்துட்டேன்,” என்று சொல்லி எழுந்து சென்றார்.
அவர் போவதை பார்த்த அவள் மீண்டும் அவளவனின் யோசனையில் மனம் தடுமாற அமர்ந்திருந்தாள் .
மித்ரனின் திருமண நாளும் நெருங்கியது. அலுவலகத்திலிருந்து அதற்குச் செல்வதற்காக வாகனம் ஏற்பாடு செய்திருந்தான் வசீகரன். மதுமதியும் அலுவலக நண்பர்களுடன் செல்லலாம் என்று இருந்தபோதும், அவளைத் தன்னுடன் அழைத்தான் அவளது நாயகன்.
அவளோ உடன் வர மறுத்தாள்.
“மது, சொன்னதை கேட்கணும். அவர்கள் எல்லோரும் திருமணத்தன்று வரத்தான் ஏற்பாடு செய்திருக்கிறேன். நீ பிரியாவுக்காக முன்னாடியே போக வேண்டாமா?” என்றான் அவன்.
“உங்க கரிசனம் எனக்கு வேண்டாம் சார். மற்றவர்கள் அப்படி வரும்போது நான் மட்டும் உங்களுடன் வந்தால் அது சரியாக இருக்காது,” என்றாள் அவள்.
அவன் முறைக்க,
“இப்ப எதுக்கு கோபப்படுறீங்க? அப்படி முன்னாடியே போகணும்னா நானே போயிடறேன். உங்களுக்கு அந்த சிரமம் வேண்டாம்,” என்றாள்.
வசீகரன் எதுவும் சொல்லவில்லை, அமைதியாக அவளை பார்த்தான்.
அன்று மாலை
“மது, ஏன் வசி அண்ணா கூட வரலன்னு சொன்னியாம்? ஏன் டி?” என்று பிரியா அவளை அழைத்திருந்தாள்.
“நான் உன்கிட்ட முன்னாடியே சொன்னேன்ல, மூன்று நாள் முன்னாடி வரணும்னு. அப்புறம் ஏன் மது இப்படி பண்ணற? அண்ணா கூட வந்தா உனக்கு சேஃப்னு தானே சொல்லறேன். புரிஞ்சுக்கோ. சித்து அண்ணாவும் வெளியூர் போயிருக்காங்க. நீ தனியா வந்தா எனக்கும் நீ வர வரைக்கும் பதட்டமா இருக்கும்,” என்று என்னென்னவோ கூறி அவளை சம்மதிக்க வைக்க முயன்றாள்.
“யோசிச்சு சொல்லறேன் பிரியு,” என்று வைத்து விட,
“உன் பிடிவாதம்தான் முக்கியம், இல்ல?” என்று கோபமாக பிரியாவும் வைத்து விட்டாள்.
அடுத்த நாள் வசீகரன் மதுமதிக்கு அழைத்தான்.
“என்ன மது, முடிவு செய்திருக்க?” என்றான்.
“எதைப் பற்றி கேக்குறீங்க? உங்களுக்குன்னா எப்பவும் ‘நோ’ தான் என் பதில்,” என்றாள்.
“வெயிட், வெயிட். நான் அதைப் பற்றி பேச வரல. என்கூடவே ஊருக்கு வர்றியா இல்லையா அதைப் பற்றி,” என்றான்.
“ஷ்…” என்று தலையைத் தட்டிக்கொண்டவள், “நான் தனியாவே வந்துட்றேன்,” என்று வீம்பாகச் சொன்னாள்.
“ஏன் மது, பயப்படுறியா?” என்றான் அவன்.
“எதுக்கு?” என்றாள் அவள்.
“ம்ம்.. உன் மனசு மாறிடும்னு…” என்றான் அவன்.
“இன் யுவர் ட்ரீம்ஸ்! நெவர்… என்னைக்கும் மாறாது,” என்றாள்.
“அப்படின்னா கூட வர வேண்டியதுதானே?” என்றான் அவன்.
“வரலைன்னா விட வேண்டியதுதானே?” என்றாள் சற்று கடுப்பாக.
“நீ வரலைன்னா உனக்கு என்னை பார்த்து பயம்? எங்க, என்மேல உள்ள காதல் வெளிவந்திடுமோன்னு பயம் ?” இப்படி நான் எடுத்துக்கவா,என்று நக்கலாகக் கேட்டான்.
அவனை முறைத்தவள், “உங்க நம்பிக்கையை உடைக்கவே உங்களோட வர்றேன்,” என்றாள்.
அவள் வருகிறேன் என்று சொன்னதை கேட்டதும் உள்ளம் துள்ளியபோதும், அவன் காட்டிக்கொள்ளாமல், “அதையும் பார்க்கலாம்,” என்று சவாலாகச் சொன்னான்.
அவள் முகத்தைத் திருப்பிக்கொள்ள, அவனது இதழில் கீற்றுப் புன்னகை மலர்ந்தது. “இவளை சமாளிக்க என்னென்ன தந்திரம் செய்ய வேண்டி இருக்கு!” என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டான்.
அவள் வருகிறாள் என்றதும், அவளுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டான். அவள் அவனுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை ஒவ்வொரு செயலிலும் உணர்த்தினான். அவளுக்கு புரிந்தாலும், அவள் காட்டிக்கொள்ளவில்லை.
அவளது அருகாமையில் அவனது மனம் ஆழிப்பேரலையென ஆர்ப்பரித்துக்கொண்டிருக்க, அதை அடக்க வழி தெரியாமல் அவன் தத்தளித்தான். அவனது அருகாமையிலும் காதலிலும் அவளுக்கு மனம் இளகினாலும், அதனை அவன் பக்கம் சாயாமல் காக்க அவள் பெரும் முயற்சி செய்து கொண்டிருந்தாள்.
அவன் பார்க்காத போது அவனைப் பார்ப்பதும், அவன் பார்த்தால் வெளியில் பார்ப்பதுமாக அவள் இருந்தாள். அவளை அனுதினமும் கவனித்து வந்தவனுக்கு அவளது செய்கைகள் தெரியாதா என்ன? தான் பார்த்தால் அவள் தன்னைப் பார்க்க மாட்டாள் என்று முடிந்தவரை அவளைப் பார்ப்பதைத் தவிர்த்தான். அவள் அவனைப் பார்ப்பதை உணர்ந்தவனுக்கு இதயத்தில் சாரல் மழை பொழிந்தது.
இருவரும் அவரவர் உணர்வுகளில் மூழ்கியபடி, தென்காசியை வந்தடைந்தனர்.
மதுமதிக்கு சென்றமுறை வந்ததும், அவனிடம் காதலைச் சொன்னதும், அதையடுத்த நிகழ்வுகள் அனைத்தும் நினைவுக்கு வந்தன. “வேண்டாம்…இது .. எதுவும் வேண்டாம்…” என்று மனம் தவித்தது.
அவள் மறுக்க மறுக்க, சென்றமுறை வந்தபோது சென்ற இடங்களுக்கெல்லாம் அவளை அழைத்துச் சென்றான்.
“என்னை பார்த்து பயமா?” என்று கேட்டுக் கேட்டே அவளை வரவழைத்தான்.
அங்கெல்லாம் சென்றபோது அவளது மனம் பட்ட பாடு அவளுக்குத்தான் தெரியும். அவனது அருகாமை மனதுக்கு இதமாக இருந்தபோதும், அன்றைய அவனது வார்த்தைகள் அவர்களின் இணைவுக்கு தடையாக இருந்தது.
அதை கடக்க அவளால் முடியுமா?எண்ணியவளுக்கு
திரும்பவும் “வேண்டாம்” என்றே அவளது புத்தி சொன்னது. மனமோ மாறாக, அவனும் அவனது காதலும் வேண்டும் என்று அவனுக்காக துடித்தது.