பார்வை 3
மலை போல நின்றவனை
மண் மீது துகளாய் செய்தாய்
விழுதோடு நின்றவனை
வேரோடு புயலாய் சாய்த்தாய்
உயிர் போகுதடி
மனம் நோகுதடி வலியே
வலி தீர்ந்திடுமா
உயிர் மீண்டிடுமா சகியே
ஜெய வசீகரன்—
அலை அலையான கேசம், கூர்மையான பார்வை, அந்தப் பார்வைக்கு ஈடாகத் தோன்றும் கூர்மையான நாசி, மாநிறத்திற்குச் சற்றே கூடுதலான நிறம் எனப் பார்ப்பவரின் கவனத்தை உடனே ஈர்ப்பவன். ஆறடி இரண்டு அங்குல உயரம். தினமும் செய்யும் உடற்பயிற்சியின் விளைவாக முறுக்கேறிய புஜங்கள், அவன் உடலை எவ்வளவு கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறான் என்பதைப் பார்க்கும் போதே சொல்லாமல் சொன்னது. சற்றே ஆளுமை நிறைந்த தோற்றம். தாடி, மீசை neatly ட்ரிம் செய்யப்பட்டிருந்தன.
கருப்பு நிற கோட்டும், அதே நிற பாண்டும், வெளிர் நீல நிற ஷர்ட்டும் அணிந்து, அவன் பெயருக்கேற்றபடி வசீகரமாகத் தோன்றினான். அலுவலக வராண்டாவில் தனது பிளாக் கலர் BMW காரை நிறுத்திவிட்டு, தன் அறையை நோக்கி நடக்கத் தொடங்கினான். எதிரே வந்த தனது மேனேஜர் பிரசாதிடம்,
“இன்னும் அரை மணி நேரத்திற்கு என்னை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம்,”
என்று சொல்லிவிட்டு, நேராக தன் அறைக்குள் சென்றான் கதவை மூடினான்
அறையின் உள்ளே நிலவிய அமைதி -. அவன் அகத்தின் உள்ளே இல்லை.
அவள் முகம், அவள் விழிகள், அவள் சிரிப்பு…
ஒவ்வொன்றும் நினைவுகளாய் அவன் நெஞ்சுக்குள் மெல்ல மெல்ல ஊடுருவின. நினைக்கக் கூடாதென்று தீர்மானித்த ஒவ்வொரு தருணத்திலும், அவள்தான் அவனுக்குள் அதிகமாக நுழைந்தாள்.அவன் எண்ணம் முழுவதும் அவளையே சுற்றிக்கொண்டிருந்தது. இப்போதும் அப்படித்தான்,அப்போதும் அப்படித்தான். அவளை கண்ட நாள்முதல், அவனுடைய உலகம் அவளென்றானது. .
அவள் அருகில் இருந்த போதும் சரி, அவளை விட்டு விலகி இருந்த போதும் சரி—அவனின் உலகம் அவள் மட்டுமே. அவளை அவன் வீட்டில் பார்த்த தருணத்தில் அவனுள் எழுந்த உணர்வுகள் சொல்லில் அடங்காதவை. அவன் வீட்டில்… அவள். அவன் நினைத்தபடியே, அவளை அவன் பார்வைக்குள் கொண்டு வந்துவிட்டான்.
ஆனால் ஏன்? எதற்காக?
இந்த விடை தெரியாத கேள்விகள் அவனுக்குள் எப்போதும் உண்டு. வேண்டாம் என்று விட்டு வந்தவளை, ஏன் மீண்டும் அருகில் வைத்திருக்க வேண்டும்? அவளிடம் சிக்கிக்கொண்ட மனதை மீட்கும் வகையரியாது தவித்தான். நீறு பூத்த நெருப்பாய் அவளுள் கனன்று கொண்டிருக்கும் காதல் நெருப்பு, யாராலும் அணைக்கப்படாமல், இன்னும் அவன் நெஞ்சை வதைத்துக்கொண்டே இருக்கிறது.
.
நான் எதுவும் செய்யல…
எல்லாம் எனது கட்டுப்பாட்டுக்குள்ளே எனது கையில் தான் இருக்கிறது …அவனது உள்ளம் கதறியது ।
ஆனால் அந்தச் சுயநலமான உண்மையை அவன் மனம் நன்கு அறிந்திருந்தது.
அவளை அருகில் வைத்துக்கொண்டது அவளுக்காக அல்ல.
அது அவனுக்காக.
அவள் இல்லாத வெறுமையை தாங்க முடியாமல்,
அவள் நினைவுகள் இல்லாத நாட்களை எதிர்கொள்ள முடியாமல்,
அவளை தன் பார்வைக்குள் வைத்துக்கொள்வதற்காக.
அவன் ஒரு நெடிய மூச்சை விட்டான்.
மார்பை அழுத்தும் அந்த உணர்வை வார்த்தைகளால் விளக்க முடியவில்லை.காதலா? குற்ற உணர்வா?
அல்லது இரண்டும் கலந்த ஒரு சுமையா?
ஒரே ஒரு விஷயம் மட்டும் அவனுக்குத் தெளிவாக இருந்தது—
அவள் அவன் வாழ்க்கையில் முடிந்து போன அத்தியாயம் அல்ல.
அவளைத் தவிர்த்துவிட்டு அவனால் இனி முன்னே செல்ல முடியாது.
இந்தக் காதல் அவனை காப்பாற்றப் போகிறதா…
அல்லது முழுமையாக சிதைக்கப் போகிறதா…
அந்த பதிலுக்காகவே, அவன் உள்ளம் அமைதியில்லாமல் துடித்துக்கொண்டிருந்தது.
அவன் மனதை அவள் உடைத்த அந்த நாள்… அவள் மீதான கோபம்… அவள் மீது அவன் வீசிய வார்த்தைகள் அதனால் ஏற்பட்ட விளைவுகள்… இப்போதும் அவனை நிலைதடுமாற வைத்தன.ஆனால் அவளை பார்த்த பிறகு அவளை அவனால் எப்பொழுதும் விட்டுக்கொடுக்க முடியாது. அவள் அவனுடையவள் .
கண்களை மீண்டும் மூடி, தன்னைத் தானே கட்டுப்படுத்திக்கொண்டான். அவன் எண்ணங்கள் ஆறு வருடங்களுக்கு முன்னே பயணித்தன.
அப்போது அவன் அந்தக் கல்லூரியில் இளங்கலை பொறியியல் நான்காம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தான். கல்லூரிகளுக்கு இடையேயான கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடந்து கொண்டிருந்த சமயம். மூன்று நாட்கள் நடைபெற இருந்த அந்த விழாவை, அவன் கல்லூரியே முன்னின்று நடத்திக் கொண்டிருந்தது.
வசீகரன் நண்பர்களுடன் கல்லூரி கேண்டீனில் நின்று பேசிக்கொண்டிருந்தான்.
“எக்ஸ்க்யூஸ் மீ…”
அந்தப் பெண்குரலில் திரும்பியவனின் விழிகள் விரிந்தன. அவள் கையில் வைத்திருந்த டிரேயிலிருந்து ஒரு பழச்சாறு குவளை அவனை நோக்கி சரியத் தொடங்கியது.
“ஏய்… ஏய்…”
அவன் குரலில் அவள் சுதாரித்துக்கொண்டாள். சட்டென்று குவளையைப் பிடித்தாள். இருந்தாலும், சிறிதளவு பழச்சாறு அவன் சட்டையில் சிந்திவிட்டது.
அவனின் கோபம் நிறைந்த விழிகளைப் பார்த்து ஒரு நிமிடம் அவள் விதிர்விதிர்த்துப் போனாள்.
“கண்ணு தான் இவ்வளவு பெருசா இருக்கே, அப்புறமும் கண்ணு தெரியலையா? இப்படி என் மேல மோத வர?” என்று அவன் கடுமையாக சொன்னான்.
அவனது நண்பன் மித்ரன் உடனே,
“டேய் மச்சி, விடுடா… பாவம். விட்டா அழுதிடுவா போல,” என்றான்.
அப்போதுதான் அவளை கூர்ந்து பார்த்தான் வசீகரன். அவனை அவள் மருட்சியாகப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் தன்னை நோக்குவதை உணர்ந்தவளும்,
“சாரி…”
என்றாள்—வார்த்தைக்கே வலி இல்லாமல்.
பச்சை நிற ஜார்ஜெட் சாரி. மெலிந்த உடல்வாகு. பின்னியிடப்பட்ட நீண்ட கூந்தல். அதில் காதோரம் சூடிய ஒற்றை சிவப்பு ரோஜா. சந்தனம் நிற முகம். பெரிய அகன்ற விழிகள். அந்த விழிகளின் மத்தியில் ஒரு சிறிய கருப்பு பொட்டு. அதற்கு மேலே சன்னமான சந்தனக் கீற்று. காதுகளில் சிறிய ஜிமிக்கி. என்று அவனை ஒரு நிமிடத்தில் வாரி சுருட்டி கொண்டாள்.
ஓ மை காட் !.. என்ன .. இவ இவ்வளவு அழகா நம்ம கண்ணுக்கு தெரியுறா? .. ராசனையுடன் பார்த்தவன் ஒரு கணம் அதிர்ந்தான்.
நெற்றியில் தன் கட்டை விரலை வைத்து ஒரு சிறு அழுத்தம் கொடுத்தவாறு, மெல்ல பார்வையைத் திருப்பிக்கொண்டான். அவள் என்ன செய்வது என்று புரியாமல் அவனைப் பார்த்துக்கொண்டிருக்க, மித்ரன்,
“பரவாயில்லை… போமா,” என்றான்.
அவள் ஒரு முறை தயங்கித் திரும்பிப் பார்த்தாள். அவளது நண்பி சந்தியா,
“வாடி… போகலாம்,”
என்று அவள் கையில் இருந்த டிரேயை வாங்கிக்கொண்டு அருகிலிருந்த மேசையை நோக்கி சென்றாள். மதுமதியும் தனது நண்பிகளுடன் பேசிக்கொண்டே அங்கிருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டாள். அவள் பார்வை, புன்னகை, ஒற்றை சிரிப்பு எல்லாம் வசீகரனின் மனதை மெதுவாக கவர்ந்து
மதுமதி.
இளங்கலை பொறியியல் முதலாம் ஆண்டு மாணவி.
அந்த விழாவிற்காக, விதியால் அவன் உலகுக்குள் அடியெடுத்து வைத்தவள்.
அதே சமயம், வசீகரன் வாஷ்ரூம் நோக்கி சென்றான்.
“இடியட்…”
என்று அவளைக் குறித்துப் புலம்பியபடியே, தனது சட்டையில் பட்ட பழச்சாறு கரையை கழுவ முயன்றான். கரை முழுவதும் போகவில்லை.
அவன் தனது காரை நோக்கிச் சென்று, அதில் வைத்திருந்த மற்றொரு சட்டையை அணிந்துகொண்டான்.
அங்கே வந்த மித்ரன்,
“என்ன மச்சி… காஸ்ட்யூம் சேஞ்சா?” என்றான்.
“ஆமாம் டா… அந்த இடியட் பண்ண வேலை,” என்றான் கடுப்புடன்.
“ஸ்வீட் இடியட்-ஆ மச்சி?”
கண்களைச் சிமிட்டியவாறு கேட்டான் மித்ரன்.
வசீகரன் அவனை கேள்வியாகப் பார்த்தான்.
“பார்த்தேன்… நீ அவளை எப்படி பார்த்தன்னு,” என்றான் கேலியாக.
உடனே வசீகரன் முறைத்தபடி,
“எப்படி பார்த்தேன்?” என்றான் காட்டமாக.
“அது உனக்குத்தானே பா தெரியும்,” என்றான் மித்ரன் சிரிப்பை அடக்கியபடி.
“அதெல்லாம் ஒண்ணும் இல்ல… போடா,”
என்றான் குரலில் மாற்றம் காட்டாமல்.
“சரி… நம்பிட்டேன்,”
என்றான் மித்ரன் ஒரு மாதிரி குரலில்.
உடனே வசீகரன் அவனை முறைத்து, வாயின் மேல் கையை வைத்து வாயை மூடு என்பது போல சைகை செய்தான். இதற்கு மேல் பேசினால் மேலும் திட்டு விழும் என்று புரிந்த மித்ரன், வாயை மூடிக்கொண்டான்.
கேண்டீனிலிருந்து வெளியே வந்த மதுமதி, தனது நண்பிகளுடன் பேசிக்கொண்டே ஆடிட்டோரியம் நோக்கி சென்றாள். அங்கே அவளது அத்தைப் பையன் சித்தார்த் வந்தான்.
“ஏய் மது… சாப்பிட்டாச்சா?” என்றான்.
மதுமதி புன்னகையுடன், அவனை தனது நண்பிகளிடம்,
“என் அத்தையோட பையன்,”என்று அறிமுகப்படுத்தினாள்.
அவளது நண்பி கீதா,“செம ஹேண்ட்ஸம் மா… இருக்கான் டி,”
என்று மதுவின் காதில் கிசுகிசுத்தாள்.
அதை கேட்ட சித்தார்த்,“என்ன ரகசியம்?” என்றான்.
“ஒன்னும் இல்ல சித்து… நீ ரொம்ப ஹேண்ட்ஸம்,”
என்று சொல்லப் போன மதுவின் வாயை கீதா மூட, இருவரையும் பார்த்து சித்து தலையை ஆட்டியபடி சிரித்தான்.
“சரி டி… மதியம் பேஸ்கட் பால் மேட்ச் இருக்கு. ஞாபகம் இருக்குல?” என்றான்.
“இருக்கு இருக்கு… உங்க காலேஜ்க்கும் எங்க காலேஜ்க்கும் தானே?” என்றாள்.
“யார் ஜெயிப்பாங்கனு நினைக்கிற?”
“நாங்கதான்,”என்றாள் எடுப்பாக.
“அப்படியா… அதையும் பார்க்கலாம்,” என்றான்.
“ஏன் என்றவளிடம் … எங்க டீம்ல செம பிளேயர்ஸ் இருக்காங்க. அதுவும் வசீ அண்ணா செமயா ப்ளே பண்ணுவார்,” என்றான்.
“அப்படியா? எங்க டீம்லயும் நல்ல பிளேயர்ஸ் இருக்காங்க,” என்றாள் அவள்.
“சரி… என்ன பெட்?” என்றாள்.
“நீயே சொல்லு,” என்றான்.
“இந்த வாரம் பரூக் ஃபீல்ட் மால். தோற்றவங்க செலவுல,” என்றாள்.
“டன்,”
என்று சொல்லி முஷ்டியை மடக்கி நீட்ட, அவளும் அவ்வாறே செய்து அவனுடன் முஷ்டியை இடித்தாள்.
அருகிலிருந்த கீதா,
“நானும் வரலாமா?” என்று சித்தார்த்தைப் பார்த்தவாறு கேட்டாள்.
மதுவை பார்த்த சித்து,“என்னது?” என்றான்.
அவள் தோளை குலுக்க,
“நெக்ஸ்ட் டைம்,”என்றான் சித்து.
வெளிப்படையாக வேண்டாம் என்ற பதில் கேட்ட கீதாவுக்கு முகம் சப்பென்று ஆனது.
இவர்கள் இருவரும் முன்னால் நடக்க, அவளது தோழிகள் பின் தொடர்ந்தனர்.
“அப்புறம்… பட்டு, எங்க காலேஜ் எப்படி?” என்றான்.
“நல்லாதான் இருக்கு… ஆனா உங்க காலேஜ் பசங்க ரொம்ப முசுடு போல,” என்றாள்.
சற்றுமுன் நடந்த சம்பவம் அவள் நினைவில் இருந்தது.
“ஏன்?”
“உன்னை பார்த்தாலே தெரிஞ்சிடுதே… ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்,” என்றாள் குறும்புடன்.
அவள் விழிகளில் தெரிந்த குறும்பைப் பார்த்தவன் புன்னகையுடன்,
“சரி வா… போகலாம்,”
என்று அவள் கையைப் பிடித்தான்.
அவள் மீது அவனுக்கு ஒருபோதும் கோபம் வந்ததில்லை. அவனுக்கு அவள் எப்போதும் அவனது பட்டு குட்டி தான். வெளியிடங்களில் அந்தப் பெயரைச் சொல்ல மாட்டான். வீட்டில் அவளுக்கு எப்போதும் பட்டு தான். சின்ன வயதில் அவளைத் தொட்டு பார்த்தபோது குழந்தையின் பட்டு போன்ற மென்மை நினைவில் இருந்து வைத்த பெயர் அது.
“எங்கே?” என்றாள் மது.
“பேஸ்கட் பால் கோர்ட்டுக்கு,” என்றான்.
“இப்பவே வா,” என்றாள்.
“வா… முதல் ரோல அப்பதான் சீட் கிடைக்கும்,” என்றான்.
அவனைப் பார்த்து மென்மையாக புன்னகைத்தவள்,
“நீ எப்பவும் இப்படிதானா?” என்று கேட்டாள்.
சித்து, அவன் நண்பர்கள், மது மற்றும் அவளது தோழிகள் என அனைவரும் கோர்ட்டை நோக்கி நடக்கத் தொடங்கினர்.
இன்று அவளுடைய கல்லூரிக்கும் சித்துவின் கல்லூரிக்கும் இடையே நடைபெறும் இறுதி கூடைப்பந்துப் போட்டி என்பதால், மைதானமே ஒரு திருவிழா போல களைகட்டியிருந்தது. முதல் வரிசையில் அமர்ந்திருந்த மாணவ, மாணவியர் தத்தம் கல்லூரி வீரர்களுக்கு ஆதரவாக வண்ணமயமான பதாகைகளைத் தாங்கியபடி உற்சாகத்துடன் காத்திருந்தனர்.