பார்வை 31
ஒரு தெய்வம் தந்த பூவே…
கண்ணில் தேடல் என்ன தாயே…
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே…
வானம் முடியுமிடம் நீதானே…
காற்றைப் போல நீ வந்தாயே…
சுவாசமாக நீ நின்றாயே…
மார்பில் ஊறும் உயிரே…
அடுத்த நாள் வசீகரன் மதுமதிக்கு அழைத்திருந்தான்.
“மது, இன்னைக்கு வெளியில எங்காவது போகலாமா?” என்றான்.
“இல்ல, இன்னைக்கு சித்தார்த்துடன் வெளியே போகணும்,” என்றாள் அவள்.
இப்போது அவளிடம் முன்னர் இருந்த தயக்கம் எதுவும் இல்லை. “நீ என்ன வேண்டுமானாலும் நினைத்துக்கொள், எங்களது நட்பு இப்படித்தான்” என்ற தோரணையில் இருந்தாள். அவள் அவனை சீண்டுவது அவனுக்கும் புரிந்தது. அவள் வேண்டுமென்றே சொல்கிறாள்; கோபப்படக்கூடாது என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டவன், நிதானமாகவே அவளை கையாண்டான்.
வசீகரன் எதுவும் சொல்லாமல், “சரி, அப்போ நாளைக்கு ஓகேவா? உன்னோட கொஞ்சம் முக்கியமா பேசணும்,” என்றான்.
“நாளைக்கு நான் கருணை இல்லம் போகணும். போயி இரண்டு மூன்று வாரம் ஆகிறது. அதனால் நாளைக்கு கண்டிப்பா அங்கே போகணும்,” என்றாள் மொட்டையாக. உன்னுடன் வருகிறேன், வரவில்லை என்று எதுவும் வெளிப்படையாக அவள் சொல்லவில்லை.
அவனை வேண்டுமென்றே தவிர்க்க நினைக்கிறாள் என்று உணர்ந்தவனுக்கு , இவள .. என்று சுறுசுறுவென உள்ளுக்குள் பொங்கிய கோவத்தை அடக்கியவன் , “சரி, நாளைக்கு அங்கேயே மீட் பண்ணலாம்,” என்றவன். அவள் மேலே பேசும் முன் கால் கட் செய்துவிட்டான்.
அவனை கடுப்பாக்கி விட்டோம் என்பது அவளுக்கு புரிந்தது. அதில் உள்ளுக்குள் கொஞ்சம் திருப்தியும் இருந்தது.கூட இருந்துதானே தண்டனை குடுக்கணும் இப்ப என்ன பண்ணறீங்கன்னு பார்க்கிறேன் என்று எண்ணியவளுக்கு “ரொம்ப ஓவரா பண்றோமோ?” என்றும் அவளுக்கு சற்று குறுகுறுத்தது.
அவனுடனான மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கச் சொல்லியது அவளது காதல் கொண்ட மனம். ஆனால் மற்றொரு மனமோ அவனை சீண்டிப் பார்க்கச் சொன்னது. அவள் வேண்டுமென்று செய்வதில்லை; அவனின் மீதான அவளது காதல் கடலளவு. எனினும் அவன் உதிர்த்த வார்த்தைகளின் மீதான கோபம் சில நேரங்களில் தானாகவே வெளிப்பட்டுவிடும். அதைத் தவிர்க்க நினைத்தாலும் முடியவில்லை.
அன்று ஞாயிற்றுக்கிழமை, வசீகரன் கருணை இல்ல வளாகத்தில் தனது காரை நிறுத்திவிட்டு, நிர்வாக அலுவலர் அறையை நோக்கிச் சென்றான். அவரிடம் சிறிது நேரம் பேசிவிட்டு, தனது திருமணத்தைப் பற்றியும் கூறியவன், பின்னர் ஆர்த்தியைப் பார்க்கப் போவதாகச் சொல்லி குழந்தையிடம் சென்றான்.
மதுமதி அங்கு வரும்போது, ஆர்த்தி வசீகரனின் கையில் பாந்தமாக அமர்ந்திருந்தாள். தூரத்திலிருந்து அவர்களைப் பார்த்தவளுக்கு, அவர்கள் இருவரின் கூட்டுக்குள் தானும் அடைக்கலம் ஆக வேண்டும் என்ற உணர்வைத் தவிர்க்க முடியவில்லை.
அவர்களை நோக்கி மெல்ல எட்டுகள் வைத்தவள், அருகில் சென்றதும் குரலைச் செருமினாள். ஆர்த்தியுடன் கனிவாகப் பேசிக்கொண்டிருந்தவன் அவளை விழி உயர்த்திப் பார்த்தான்.
“வா மது,” என்றவன் சற்று இடம் விட்டு அமர, அவன் அருகில் அவளும் அமர்ந்தாள்.
அவளைப் பார்த்ததும், “ஆன்தி... ஆன்தி...” என்று ஆர்த்தி துள்ளிக்கொண்டு அவளிடம் தாவினாள்.
“பார்த்து... பார்த்து...” என்றவள் அவளை அள்ளி எடுத்து தூக்கி ஒரு சுற்று சுற்றி மடியில் அமர்த்திக்கொண்டாள்.
“ஆன்தி சாக்கி... சாக்கி...” என்று அவள் கழுத்தை கட்டிக்கொண்டு கேட்க, உடனே வசீகரன்,
“ஆன்டி இல்ல டா... அம்மா சொல்லு,” என்றான் மதுமதியை பார்த்துக்கொண்டே.
மதுமதிக்கு இது முன்னமே தெரிந்திருந்தாலும், சட்டென ஒரு தடுமாற்றம்.
“என்ன பார்க்கிற மது? இதைப் பற்றி பேசத்தான் உன்னை கூப்பிட்டேன். இது நான் எப்பவோ முடிவு பண்ணியது தான். ஆனா உனக்கு இஷ்டமா என்று கேக்கணும் இல்ல?” என்றவனை முறைத்தவள்.
“என்னிடம் கேட்கணும்னு நினைக்கிறவர்தான் குழந்தைக்கிட்ட ‘அம்மா’ன்னு அறிமுகப்படுத்துவாங்களா?” என்றாள்.
“உன்னைப் பற்றி எனக்கு தெரியும்,” என்று ஒரு பார்வை பார்த்தவன், “நீ மறுக்க மாட்டேன்னு எனக்கு நம்பிக்கை. அதான் சட்டுன்னு இப்படி வந்துருச்சு,” என்றான்.
இவர்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்த குழந்தை, “அப்பு…” என்று வசீகரனை அழைத்து, மற்ற குழந்தைகள் விளையாடும் இடத்தை காட்டி அங்கே போகச் சொன்னது.
“பாப்பாவுக்கு அங்க போகணுமா?” என்று அவன் கேட்க, அவள் தனது பார்பிடால் தலையை மேலும் கீழும் அசைத்தாள். அவளைத் தூக்கிக்கொண்டு போய் அங்கே விட்டான்.
“செல்லம், பார்த்து விளையாடணும்,” என்று சொல்லி அங்கே இருந்த ஆயாவிடம் கவனிக்கச் சொல்லிவிட்டான்.
மீண்டும் மது அருகில் வந்து அமர்ந்தவன், அவனையே விழி அகலாமல் பார்த்துக் கொண்டிருந்தவளிடம், “என்ன?” என்று புருவம் உயர்த்தினான்.
“இதுவரை இவ்வளவு பொறுமையா உங்களை நான் பார்த்ததே இல்லை,” என்றாள்.
“ஒரு பிள்ளைக்கு அப்பா ஆனா எல்லாமே தானா வந்திடும்,” என்றவனை அவளுக்கு இன்னும் பிடித்தது.
அவளின் விழிகளும் அதையே பிரதிபலித்தன.
“என்ன பார்வை?” என்றவன், “இப்படியெல்லாம் பார்த்தா கல்யாணம் வரைக்கும் எனக்கு தாங்காது மா,” என்றான் கள்ளச் சிரிப்புடன்.
உடனே அவனை அவள் முறைத்தாள்.
“இம்… இப்படியே இரு. இது தான் உனக்கும் நல்லது, எனக்கும் நல்லது,” என்றவனை எதை கொண்டு அடிக்கலாம் என்றே அவளுக்கு தோன்றியது.
“சரி, சரி,” என்றான் கண்களில் புன்னகை மின்ன.
“இந்த குழந்தை யாருன்னு தெரியும்ல?” என்று அவன் கேட்க, அவள் ஆமோதிப்பாக தலையசைத்தாள்.
“அத்தை சொன்னாங்க,” என்றாள்.
அவளுக்கு மிகவும் ஆதங்கமாக இருந்தது — எப்படி தாயிடமிருந்து பிள்ளையைப் பிரித்தார்கள் என்று.
“வசு அக்கா இப்ப எப்படி இருக்காங்க?” என்றாள்.
“இன்னும் டிப்ரஷன் டேப்லெட்ஸ் எடுத்துட்டுதான் இருக்கா. அவளைப் பொறுத்தவரைக்கும் அவனும் இல்லை, குழந்தையும் இல்லை என்ற நிலைமையில இருக்கா. முதல்ல அங்கிள் மேல எனக்கு கோபமா தான் இருந்துச்சு. ஆனா இந்த குழந்தை அவளிடம் இருந்தா, அவள் வாழ்க்கையில வேற எதையும் யோசிக்க மாட்டா. அதுக்காக என்னிடம்கூட சொல்லாம இப்படி ஆசிரமத்தில விடுவார்னு நான் நினைக்கல.
விக்ரம் எனக்கு எவ்வளவு முக்கியம்னு தெரிந்தும் இப்படி பண்ணிட்டார்னு தான் எனக்கு கோபம். வசு மேல அவருக்கு இருக்கிற அக்கறை சரிதான்… ஆனா…”
சற்று நிறுத்தியவன் ,
விக்ரம் குழந்தை அனாதையா வளர்வதில் எனக்கு விருப்பம் இல்ல அப்பவே முடிவு பண்ணிட்டேன். அவளை நானே வளர்க்கலாம்ன்னு. ,
“வசு என் சைல்ட்ஹூட் ஃப்ரெண்ட். எனக்கு அவ வாழ்க்கையும் முக்கியம், மது…” என்றான்.
“உனக்கு தெரியுமா மது… அவங்க ரெண்டு பேரும் அவ்வளவு க்ளோஸ். அவங்க இருவரையும் பார்க்கும் போதெல்லாம் எனக்கு ரொம்ப கில்ட்டா ஃபீல் ஆகும். உன்னுடனான எத்தகைய நாட்களை நான் இழந்திருக்கேன் என்று எனக்கு புரிய வைத்த காலங்கள் அவை…” என்றவனிடம் இருந்து ஒரு நெடிய மூச்சு வெளியேறியது.
“நான் உன்கிட்ட அப்படி பேசி இருக்கக் கூடாதுன்னு எனக்கு தோணிக்கிட்டே இருக்கும்…”
அவள் அவனையே பார்த்தாள். “என்ன?” என்றான் அவன்.
“ஒன்றும் இல்லை…” என்று தலையசைத்தாள். ஆனால் அவள் விழிகளில் பிரதிபலித்த வலியில், அவனது மனமும் பாரமானது.
விழிகளை வேறு திசையில் திருப்பியவன், சிறிய அமைதிக்குப் பிறகு தொடர்ந்தான்:
“உனக்கு விக்ரம் ஞாபகம் இருக்கிறதா மது?” என்று கேட்டான் வசீகரன்.
“ம்ம்… தெரியும். உங்க கூட எம்.பி.ஏ படிச்சவர் தானே?” என்றாள்.
“ம்ம்…” என்றவன்,
“ஆனா எனக்கு அவனை அவனோட 13-வது வயசிலிருந்து தெரியும் மது. பிறந்ததும் அனாதையாக்கப்படுவது ஒரு வகைனா… நல்ல அம்மா அப்பாவுடன் வாழ்ந்து, அவர்கள் திடீரென்று இல்லாமல் போய், கூட இருந்த உறவுகளால் அனாதையாக்கப்படுவது அதைவிட கொடுமை.
அதுவும் அவன் சித்தப்பா குடும்பம்… அவன் அவ்வளவு கெஞ்சியும் கேக்காமல் அவனை இங்கே விட்டுட்டு போயிருக்காங்க.
வந்த புதுசுல ரொம்ப கஷ்டப்பட்டான். யாரிடமும் பேச மாட்டான். ஆனா நல்லா படிப்பான். அவனுக்கு அப்பாதான் ஸ்காலர்ஷிப் கொடுத்தார்.
எங்க குடும்பமும் வசு குடும்பமும் ஆசிரமத்துக்கு அடிக்கடி வருவோம். எப்போதும் வருத்தத்தை கண்களில் சுமந்து இருக்கும் அவனைப் பார்த்தாலே எனக்கு கவலையா இருக்கும். அவனோட பேச நிறைய முயற்சி பண்ணிருக்கேன்… ஆனா கொஞ்சம் கூட மசிய மாட்டான்…”
அன்றைய நினைவில் அவன் இதழ்களில் ஒரு சிறிய புன்னகை மலர்ந்தது.
“ஆனா செம டேலண்ட். எல்லாமே மெரிட்ல தான் படிச்சான். அப்பா அவனை பி.இ படிக்க வைக்கிறேன் சொன்னதுக்கு கூட ‘வேண்டாம்’ன்னு சொல்லிட்டு ஒரு நார்மல் டிகிரி தான் படிச்சான்.
அப்புறம் அப்பாவோட கட்டாயத்தில் தான் என் கூட எம்.பி.ஏ சேர்ந்தான். அப்ப வரைக்கும் நான் பேசினாலும் ரொம்ப பேச மாட்டான். அப்பாவுக்கு அவனோட திறமை பார்த்து ரொம்ப ஆச்சரியமா இருக்கும்.
அவனை என் கூட வைத்துக்கணும் என்பது அவரோட ஆசை. எம்.பி.ஏ ஆரம்பத்துல கூட, ஒரு வகுப்பு தோழனாகத்தான் என்னிடம் பேசுவான். முன்னாடியே தெரிந்த மாதிரி கூட காட்டிக்கொள்ள மாட்டான். எனக்கே ஆச்சரியமா இருக்கும்—இப்படி எப்படி இருக்க முடியும் என்று.
அப்போ எல்லாம் நானும் விட்டுட்டேன்…”
இப்போது அவளை பார்த்து நின்றவன் மீண்டும் கேட்டான்:
“அந்த காலேஜ் கலவரம் ஞாபகம் இருக்கா உனக்கு?” அன்றைய அவளின் பதட்டம் இன்னும் அவனின் நினைவில் நிழலாடியது.
அதை அவள் எப்படி மறப்பாள்… அந்த நாள் அவளது துடிப்பு இன்னும் நினைவில் இருந்தது. ஆனால் அமைதியாக “ஆம்…” என்றாள்.
“அதுக்குப் பிறகுதான் அவனை நான் விடவே இல்லை. அவன் ஒதுங்கி போகும் போதெல்லாம் நான் அவனை விடாமல் பிடிச்சுக்கிட்டேன். கொஞ்சம் கொஞ்சமா அவனுடைய கூட்டிலிருந்து வெளியே வரவச்சேன்.
அதுக்குப் பிறகு அவனுக்கு நான்னா உயிர் மாதிரி. எனக்காக எதுவும் செய்யும் அளவுக்கு மாறினான். எப்படி அப்படி மாறினான்னு இப்போவும் எனக்கு ஆச்சரியம்தான்…”
அவன் விழிகளில் அந்த நினைவுகள் மலர்ந்தன.
“அப்ப வசுந்தராவும் என் கூடதான் எம்.பி.ஏ படிச்சா. நாங்க எல்லாரும் ஒரே கிளாஸ். எப்படி அவங்களுக்கு காதல் வந்துச்சுன்னு எனக்கு தெரியல. ஆனா விக்ரமுக்கு அவளை சின்ன வயசிலிருந்தே பிடிச்சிருக்கும் போல.
நாங்க ஆசிரமம் போறப்போதெல்லாம் வசுவும் எங்களோடவே வருவா. நாங்க மூணுபேரும் விளையாடுவோம். அவன் மட்டும் வர மாட்டான். ஆனா ஒரு வயசுக்குப் பிறகு, என் கூடவும் வருண் கூடவும் பேச மாட்டான்… ஆனா வசுவிடம் மட்டும் பேச முயற்சி பண்ணுவான்.
அப்பவே அவள்மேல் அவனுக்கு ஒரு எண்ணம் இருந்திருக்கும் போல.
திடீர்னு ஒரு நாள் காதல்ன்னு வந்து சொன்னாங்க. எனக்கு ரொம்ப சர்ப்ரைஸா இருந்துச்சு. ஆனா அங்கிள் ஒத்துக்கவே இல்ல. எப்படியோ அவரை சமாளிச்சு, இவங்களுக்கு கல்யாணம் பண்ணி வைத்தோம்.
அப்போ விக்ரமும் எங்க ஆபீஸ்ல தான் வேலை பார்த்தான். அப்பா அவனுக்கு சப்போர்ட் பண்ணதால அங்கிளால எதுவும் சொல்ல முடியல…”
அவனின் நினைவில் கண்மூடி நின்றவன் பின் மெதுவான குரலில் .
“சின்ன அழகான குருவிக்கூடு மாதிரி வாழ்க்கை மது… அவனோடது . அது இப்படி கட்டியதும் கலைஞ்சிரும்ன்னு என்று நாங்க யாரும் நினைக்கல.
வசு கர்ப்பமாக இருந்தப்போ அவன் எவ்வளவு சந்தோஷப்பட்டான் தெரியுமா… ‘என் குழந்தையை நான் அனுபவிச்ச எந்த கஷ்டமும் இல்லாம நல்லா வளர்ப்பேன்’ன்னு சொல்வான்.
அவனுக்கு பெண் குழந்தைன்னா ரொம்ப ஆசை. அவளுக்கு நல்ல அப்பாவா இருந்து, எல்லாமே பார்த்து பார்த்து செய்யணும் என்பதுதான் அவனோட பெரிய கனவு…”
அவன் பேச முடியாமல் நின்றான். குரல் தழுதழுத்தது. கண்களில் நிரம்பிய கண்ணீரை விரலால் துடைத்தான்.
“அவனைப் போலவே அவன் குழந்தையும்… அதான் என்னால தாங்க முடியல மது… இன்னும் அவன் இல்லன்னு என்னால நம்பவே முடியல. இப்போ கூட அவன் இருக்கிற மாதிரி தான் எனக்கு தோணும்.
அப்படி அவனோட உடலை பொட்டலமா பார்த்தப்போ… என்னால தாங்கிக்கவே முடியல…”
ஒரு ஆழ்ந்த மூச்சை விட்டவன் தொடர்ந்தான்:
“அவன் எப்படி அவன் குழந்தையை வளர்க்கணும் என்று நினைத்தானோ… அதைவிட நல்ல அப்பாவா நான் அவளை வளர்க்கணும் — அதுதான் என்னோட கனவு, மது.
அதுக்கு நீ எப்பவும் என்கூட துணை நிற்கணும்… இருப்பியா?”
அவன் கேட்டான்.
அவளும் கண்ணீர் நிரம்பிய கண்களுடன் அமைதியாக தலையசைத்தாள்.