• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஒரு பார்வையிலே என்னை வீழத்திவிட்டாய் - 35

நிதனிபிரபு

Administrator
Staff member
பார்வை 35

இதயம் ஒன்றாகி போனதே
கதவே இல்லாமல் ஆனதே
இனிமேல் நம் வீட்டிலே
பூங்காற்று தான் தினம் வீசுமே
அவளுக்கு குழந்தை ஆர்த்தியைப் பார்க்கப் பார்க்க அவ்வளவு ஆதங்கமாக இருந்தது. கடவுள் ஏன் இப்படி விக்ரமின் வாழ்க்கையை ஆக்கினார் என்று அவளுக்கு மிகவும் வருத்தமாகவும், கடவுளின் மீது கோபம் கூட வந்தது. ஆனால் அதனால் தானோ என்னவோ, இந்த அழகுத் தேவதை இவர்களுக்கு கிடைத்திருக்கிறாள் என்று எண்ணி, அவளது நெஞ்சம் ஆனந்தத்தில் விம்மியது.

அங்கே தன் பிஞ்சுப் பாதங்களால் தத்தித் தத்தி நடந்து வந்த ஆர்த்தி, “அப்பு, தூக்கி” என்று வசீகரனிடம் வந்தாள். அவளை வாரி அணைத்துக்கொண்டவன் தோளில் சாய்ந்தபடி, மதுமதியைப் பார்த்து சிரித்தாள். குழந்தை இருவரையும் மாறி மாறிப் பார்த்தது; அவளது பார்வையில் இருவரும் புன்னகைத்தனர்.

“வசீகரன் , குட்டிக்கு என்ன வேணும்?” என்றான்.

மதுமதியை காட்டி, “பாப்பு அம்மா” என்று முன்பு சொன்னதை நினைவில் வைத்து, தத்தித் தத்தி சொல்ல, “ஆமா டா குட்டி, பாப்பு அம்மாதான் நான்,” என்று மதுமதி அவளை அவனிடமிருந்து வாங்கிக் கொண்டாள். அவள் மனதில் தாய்மை உணர்வு ததும்பி பெருகியது. பெற்றால்தான் பிள்ளையா? பெறாமலே அவளுக்கு தான் அன்னையாகிவிட்டாளே. அவளை உச்சிமுகர்ந்தவள், கண்களில் வந்த கண்ணீரை குழந்தைக்கு காட்டாமல் துடைத்துக் கொண்டாள். அவளின் மனம் கவர்ந்தவனிடமிருந்து அதை மறைக்க முடியுமா? குழந்தையைத் தூக்கிக்கொண்டிருந்தவளை தோளோடு அணைத்து ஆறுதல் கூறினான். குழந்தையை அவள் இறக்கிவிட, அவள் விளையாட ஓடிவிட்டாள்.

“வசீ, என்ன இது? விடுங்க, யாரும் பார்க்கப் போறாங்க,” என்றவளிடம், “வெளிய இருக்கோம்ன்னு தான் இப்படி; இல்லனா என் அணைப்பு வேற மாதிரி இருந்திருக்கும்,” என்றவனை அவள் முறைத்தாள்.

“சும்மா சும்மா முறைக்காதடி. விட்டா, முறைக்கறது எப்படின்னு உன்கிட்ட கேட்டு ஒரு புக்கே போடலாம் போல,” என்றான் அடக்கப்பட்ட புன்னகையுடன்.

“என்ன, உங்களுக்கு என்னைப் பார்த்தா கிண்டலா தோனுதா?” என்றாள்.

“இல்லையே, வேற என்னெல்லாமோ தோணுது. பொது இடமா இருக்கேன்னு தான் பார்க்கிறேன்,” என்றான் கள்ள புன்னகையுடன்.

“தோணும், தோணும். பேசற வாயிலேயே நாலு அடி போட்டா இப்படி எல்லாம் தோணாது,” என்றவளை நோக்கி,

“வாயிலை அடிக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டியா? அதை உன் வாயாலேயே அடிடி,” என்று அவளது காதருகில் கிசுகிசுத்தான். அவன் சொன்னதில் ஏற்பட்ட முகச்சிவப்பை மறைக்க முயன்றவள், அவனை கைகளால் கிள்ளினாள்.

“ஔச்… என்னடி இப்படி கிள்ளற?” என்றான் வலிக்கும் இடத்தை தடவியவாறு.

“இனி இப்படி பேசினா கடிச்சு வச்சிருவேன்,” என்றவளின் பேச்சைக் கேட்டவன் அவளையே அடக்கப்பட்ட புன்னகையுடன் பார்த்தான்.

பார்வையே சரியில்லையே என்று எண்ணியவள், “என்ன?” என்றாள் புருவங்களை உயர்த்தி.

“சொன்னா கோபப்படக் கூடாது,” என்றவனை அவள் ஒரு மார்க்கமாக பார்த்தாள்.

“இல்ல கடிப்பன்னு சொன்ன எங்க கடிப்ப, வாயிலையா?” என்றவனைத் துரத்தத் தொடங்கினாள்.

“வசீ, நில்லுங்க!” என்று துரத்தியவள், எட்டி அவன் சட்டையைப் பிடிக்க, அவன் நிற்கவும் அவனது பின்னால் மோதி விழப் போனவளை . இடையைப் பிடித்து நிறுத்தினான். இருவருக்கும் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி நின்றனர்; இருவரது விழிகளும் ஒன்றோடொன்று கலந்து உறவாடின. அவனது நெருக்கத்தில் அவள் விழிகளை விரித்தாள். அவளது விழிகளை ஆழ்ந்து பார்த்தவன் மனது அதில் மூழ்க துடிக்க இருந்த நிலையிலேயே அவனது விரல்களின் அழுத்தம் அவளது இடையில் கூடியது. அவனின் கட்டுப்பாடுகளை உடைத்து, அவனது இதழ்கள் அவளின் கன்னம் தீண்டின.

“அம்மா!” என்ற ஆர்த்தியின் குரலில் இருவரும் சட்டெனப் பிரிந்து நின்றனர். பிறகு தான் எங்கே நின்று என்ன செய்தோம் என்பதையே உணர்ந்தனர். அவனைத் துரத்தி வந்ததில், சிறுவர் விளையாட்டு பூங்காவைக் கடந்து சற்று தள்ளி வந்திருந்தனர். அங்கு யாரும் இல்லை தான்; ஆனால் யாராவது பார்த்திருந்தால்… அய்யோ என்றிருந்தது மதுமதிக்கு.

“சொல்லு தங்கம்,” என்றவள், அவளைத் தூக்கிக்கொண்டவளுக்கு இன்னும் பதட்டம் தீரவில்லை. அவனுக்கு அப்படியொரு பதட்டம் இல்லைபோல . “யாரும் இல்லை மது, டோன்ட் வொர்ரி,” என்றான் கனிவாக.

அவளின் கன்னத்தில் முத்தமிட்டாள் குழந்தை. “என்ன?” என்று அவள் குழந்தையைப் பார்த்தாள்.

“அப்பு முத்தா,” என்று வசீகரன் மதுமதிக்கு முத்தமிட்டதை அவள் சொல்ல, மதுமதிக்கு எங்காவது ஒளிந்து கொள்ளலாமா என்றபடி ஆனது.

“அப்பா முத்தம் தந்ததால பாப்புவும் அம்மாவுக்கு முத்தம் தந்தாங்களா?” என்று அவன் கேட்க, குழந்தை ஆமாம் என்று தலையசைத்தது.

“என்னோட தங்கம் டா நீங்க,” என்றவன் மதுமதியிடம் கண் சிமிட்டினான்.

அடுத்த நாள் அலுவலகத்தில்

மித்ரன் தான் இருவரையும் ஓட்டி விட்டான்.

வாழ்த்துக்கள் மச்சான் என்று கட்டியணைத்து வாழ்த்தினான்

என்னடா புது மாப்பிளை, “எப்படியோ கல்யாணத்தை நீ நினைத்த மாதிரி பண்ணுவதற்கு ஏற்பாடு பண்ணிட்டே! எங்கடா மச்சான் எனக்கு ட்ரீட்?” என்றான் மித்ரன்.

“இத போய் உன் தங்கச்சிக்கிட்ட கேளேன். என்றான் வசீகரன்

அதுவே பாவப்பட்ட ஜீவன்; உன்ன கல்யாணம் பண்ணுறதுக்கே அவளுக்கு பெரிய அவார்டு கொடுக்கணும். இதுல அவர்கிட்ட ட்ரீட் வேற கேட்க சொல்றியா நீ?” என்றான்.

“டேய், நீ எனக்கு நண்பனா, இல்லை அவளுக்கு அண்ணனா ?”

“அவளுக்கு தான்டா அண்ணன்; அதனால அப்படித்தான் பேசுவேன்.” என்றான் மித்ரன்

வசீகரன் முறைக்க , சரி விடு மச்சான்

“எப்படிடா சம்மதிக்க வைத்தே?”என் தங்கச்சியை , என்ன கால்ல விழுந்திட்டையா?என்றான் கிசுகிசுப்பாக. எனக்கு நம்ம காலேஜ் கல்சுரல்ஸ் அன்னைக்கே தெரியும் டா மச்சான் என்றான் மித்ரன்

வசீகரன் அவனை முறைக்க ,

சரி,சரி முறைக்காத எப்படின்னு சொல்லு என்றான் மித்ரன்

மித்ரா, அவளுக்கு என் மேல கோபம் மட்டும் தான் டா. நான் அவளிடம் அப்படி பேசிட்டேன்னு ; அதனால என் மேல கோபம் இப்பவும் இருக்குதான் . என்னை வச்சு செய்யுறா , இன்னும் செய்வா . ஆனா அவ என்ன தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ண மாட்டாள் — எனக்கு நல்லா தெரியும்..

நீ பேசிய பேச்சுக்கு கோவ படாம இருந்தா தான் அதிசயம் என்றான் மித்ரன்

நண்பனை ஒரு பார்வை பார்த்தவன் ,நீ சொன்ன போல கால்ல விழவும் தயாரா தான் இருந்தேன் அதுக்கு அவ கேட்ட பாரு ஒரு கேள்வி சாத்தியமா முடியலை டா , வேற என்ன சொல்ல நான் செய்த தப்பை திரும்ப கண்டிப்பா எப்பவும் செய்ய மாட்டேன் என்று வாக்கு கொடுத்திருக்கேன். அதே மாதிரி இப்போ நான் அவளுக்கு வேற எதுவும் சொல்ல போறது இல்லை . அவ மேல நான் வைத்திருக்கிற காதலையும் அன்பபையும் அவ என் கூட வாழ்ந்து பார்த்து, தெரிஞ்சுக்கட்டும்னு இருக்கேன்.”என்றவன் சொல்ல சொல்ல அவன் கண்களில் அவள் மீதான காதல் மின்னியது.

வசீகரன் சொல்லச் சொல்ல, அவனைப் பார்த்திருந்த மித்ரனின் விழிகளிலும் மகிழ்ச்சி மிகுந்திருந்தது.அவனின் இந்த பரிமாற்றம் அவனுக்கு வியப்பாக இருந்தது. எப்பவும் கோவத்தை மட்டுமே மற்றவர்கள் முன் வெளிப்படையாக காட்டும் அவன் முகம் இன்று காதலை காட்டி இருக்கிறது.

ரொம்ப சந்தோஷம் மச்சான் என்றான் மித்ரன்.

அடுத்த வாரம் சில நெருங்கிய சொந்தங்களின் முன்னிலையில் மதுமதிக்கு பூ வைத்து உறுதி செய்துகொண்டனர். அன்றே நிச்சயம் மற்றும் கல்யாணத்திற்கான தேதிகள் குறிக்கப்பட்டன. அன்று மித்ரன் கூட்டிய அலப்பறையில் வசீகரன் தான் கடுப்பாகிவிட்டான்.

அன்று மயில் வண்ண நிறத்தில், கரையில்லாமல் ஆங்காங்கே மயில் சின்னம் பொறித்த மென்பட்டு புடவையில், அழகு தேவதையாக இருந்தவளை வசீகரன் தனது கண்களில் நிரப்பிக் கொண்டிருந்தான்.

அங்கே மதுமதி, பிரியா, வித்யா மற்றும் சில சொந்தங்களுடன் அமர்ந்திருந்தாள். மதுமதி சித்தார்த்திடம் ஏதோ கேட்டு அவனை கூப்பிட, அவனும் அவளருகில் அமர்ந்தான். அவர்கள் பேசுவதைக் பார்த்த மித்ரன், வசீகரனை சீண்டிக் கொண்டிருந்தான்.

“என்ன மச்சான், தங்கச்சி உன்னை கூட பார்க்காமல் இப்ப அவள் ஃப்ரெண்ட் கூட தான் பிஸியாக இருக்காளா?” என்றான்.

“என்னடா, கோத்துவிடுறையா? சில் வண்டு சிக்காது டா… ஒரு முறை நான் பட்டது போதாதா?” என்றான் வசீகரன்.

“ஓ, அப்படியா?” என்றான் மித்ரன் புன்னகையுடன்.

“டேய், திரும்ப விளையாட்டுக்குக் கூட இப்படிப் பேசாத,” என்ற வசீகரனிடம்,

“டேய், அவ்வளவு நல்லவனா டா நீ?” என்று மித்ரன் பார்த்தான்.

“மச்சான், வேண்டாம்… நான் வெறியாயிடுவேன்,” என்றான் வசீகரன்.

“சரி மச்சான், கூல் கூல்,” என்று மித்ரன் சொல்ல,

“டேய், உண்மையா சொல்றேன்… ஒரு நல்ல நட்பை கொச்சைப்படுத்திப் பேசிட்டேன்னு நான் எவ்வளவு நாள் வருத்தப்பட்டேன் உனக்கே தெரியும். அவ எவ்வளவு பேருடன் பேசினாலும், பழகினாலும் அவளோட எல்லைகள் அவளுக்குத் தெரியும். அவ என்னைத் தவிர யாரையும் என் இடத்தில்—விளையாட்டுக்குக் கூட—நினைக்க மாட்டா டா.”

“புரிஞ்சா சரி… வசீ, சும்மா உன் மனசை தெரிஞ்சுக்க தான் கேட்டேன்,” என்ற மித்ரனை வசீகரன் முறைத்தான்.

“கோவக்கார நண்பா… உனக்கு பாசம் அதிகம் டா,” என்று பாடி வசீகரனின் தோளில் தட்டியவன், “ப்ரியா கூப்பிடறாள்னு நினைக்கிறேன்,” என்று சொல்லி அங்கிருந்து நழுவினான்.





அன்று திருமணத்துக்கான உடைகள் எடுக்கச் சென்றிருந்தனர். வசீகரன் மீனாட்சியிடம் முதலிலேயே சொல்லிவிட்டான்—மணமகன், மணமகளுக்கான உடைகளை தாங்கள் இருவரும் மட்டுமே தேர்வு செய்வதாக. மீனாட்சி அவனைப் பார்த்து, “அப்புறம் நாங்க அத்தனை பேரும் வந்து என்னடா செய்ய?” என்று கேட்க, “அம்மா, அதுக்கு உங்களுக்கு தெரியாத யோசனையா? மற்ற எல்லோருக்கும் எடுங்க மா; அப்புறம் நாங்க தேர்வு செய்யறதுக்கு பில் பே பண்ணிடுங்க ,” என்றவனை அவர் முறைத்தார்.

“அம்மா, சொன்னது புரிஞ்சுக்குங்க மா,என் செல்ல அம்மா இல்ல என்றவனிடம்

இல்ல என்றார் அவர்

அவன் திடுக்கிட்டு பார்க்க அவர் சிரித்தார். அவன் மீண்டும் அம்மா, அம்மா ப்ளீஸ்,பிளீஸ் ” என்றதும் மகனின் ‘ப்ளீஸ்’ இல் இளகியவர், “சரி, சரி,” என்றார்.

“உன் அத்தையை சமாளிப்பதுதான்டா எனக்கு பெரிய டாஸ்க்,” என்றார் மீனாட்சி.
“அதெல்லாம் நீங்க சமாளிச்சிடுவீங்க அம்மா. அப்படியில்லாமல் இவ்வளவு வருடம் எப்படி இருந்தீங்க?” என்றவனை முறைத்தவர், அவன் முகத்தில் தோன்றிய மகிழ்ச்சியை பார்த்து, வெகு நாட்களுக்கு பிறகு அவனை இப்படி பார்க்கும் சந்தோஷத்தில் அவரது மனமும் குளிர்ந்தது.

“அத்தை வீட்டிலிருந்து யாரெல்லாம் வராங்க?” என்றான் அவன்.
“மாமா வரமாட்டேன் என்று சொல்லிட்டார் டா. அத்தை, நம்ம நித்யா, வித்தி குட்டி — அவங்க மூணுபேர்தான்,” என்றார்.
“ஓ… சரி என்றவன் , வித்யாவை மட்டும் ‘குட்டி’ன்னு சொல்லிட்டு, நித்யாவை ஒன்றும் சொல்லாம இருக்கீங்க. அது அவளுக்குத் தெரியணும்; அப்புறம் இருக்கு உங்களுக்கு!” என்றான் அவன்.
“என்னடா செஞ்சுடுவா என்னை? வித்யா வந்து என்னோடு ஒட்டிக்கிற மாதிரி ஒரு நாளாவது நித்யா ஒட்டியிருப்பாளா? இல்ல உங்க அத்தைதான் அதற்கு விடுவாளா?” என்றார்.
“சரி சரி, விடுங்க. என்னோட பிரச்சனைக்கு வாங்க,” என்றான் அவன்.

அவன் இப்படி சகஜமாக பேசியது அவனது கல்லூரி காலம் வரைதான். அதற்குப் பிறகு வேலைகளில் பொறுப்பெடுத்தபின், அவன் சந்தோஷத்தை இவ்வளவு வெளிப்படையாக காட்டியதே இல்லை. இன்று அவனை பார்த்த தாய் மனம் குளிர்ந்திருந்தது.

“என்ன யோசனை?” என்றவனிடம்,
“உனக்கு என்னடா பிரச்சனை? நீ சொன்னபடி, நீயும் மதுவும் மட்டும் மேல போய் உங்களோட டிரஸ்ஸை வாங்கி வையுங்கள். நாங்க வந்து பில் போட்டு தர்றோம். போதுமா? நான் மத்தவங்களை சமாளிச்சுக்கிறேன்,” என்றார் அவர் புன்னகையுடன்.
 
Top Bottom