• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஒரு பார்வையிலே என்னை வீழத்திவிட்டாய் - 5

நிதனிபிரபு

Administrator
Staff member
பார்வை-5

வசீகரனின் மனது அவளிடம் தடுமாறியது. அவன் பார்க்காத பெண்கள் இல்லை அவனின் மனம் ஏனோ இரண்டு நாளாக அவளிடமே நின்று சண்டித்தனம் செய்துகொண்டிருக்கிறது . யோசித்தவன் தலையை உலுக்கி கொண்டு மிதரனுடன் நடந்தான்

அவர்கள் கேண்டீனில் இருந்து வெளியே வந்த போது, மதுமதி தனது நண்பர்கள் மற்றும் சித்துவுடன் கேண்டீனுக்கு வந்தாள். அந்நேரம் தோழிகளுடன் சிரித்து பேசிக் கொண்டு வந்த மதுமதியை உடன் வந்த சித்து, “பட்டு இங்க வந்து உக்கார்” என்று கூறி, மதுமதியின் கையை பிடித்து ஒரு சீட்டில் அமர்ந்து, தானும் அருகில் அமர்ந்தான்.

அக்கணம் மதுமதி வசீகரனை பார்க்கவில்லை ; ஆனால் சித்து அவளின் கையை பற்றிய கணம் வசீகரன் மனதில் மெலிதாக வலித்தது. ஒரு வேலை மித்ரன் சொன்னது உண்மையாக இருக்குமோ என்று அவன் எண்ணினான். அவர்களின் நெருக்கம் பார்க்க பார்க்க, அவன் உள்ளுக்குள் ஏதோ உடைவது போல் இருந்தது. முகம் இறுக சற்று சுதாரித்தவன், மித்ரனுடன் கலைவிழா மேடை நோக்கி சென்றான்.

வசீகரன் தான் அவனது கல்லூரியின் ஸ்டூடண்ட் சார்மேன். எனவே நிகழ்ச்சிகள் ஏற்பாடு எல்லாம் அவனதும். அவனுக்கு கீழ் அவன் நண்பர்கள் குழுவும் இருந்தது. அவன் நாளைக்கு நடைபெறும் நிகழ்ச்சிகளை பற்றி நண்பர்களுடன் கலந்தாலோசிக்க, டூ வீலர் ஸ்டாண்ட் அருகே மரத்தருகே வர சொன்னான். அங்கே எல்லோரும் வந்து சேர்ந்து, நாளைய நிகழ்வுகள் பற்றி திட்டமிடத் தொடங்கினர்.

அந்நேரம் கேண்டீனில் இருந்து வெளியே வந்த மதுமதி, “ரொம்ப தலைவலி இருக்கிறது, வீட்டுக்கு செல்ல போகிறேன்,” என்று கூறி சென்றாள். உடனே சித்து, “இருடி, நான் டிராப் பண்ணரேன்,” என்று டூ வீலர் ஸ்டாண்ட் நோக்கி சென்றான்.

அங்கே இருந்த சித்துவின் நண்பன், “என்னடா, இப்பவே கெளம்புர?” என்றான். சித்து, “இல்ல, மச்சி, என் கசின் ரொம்ப தலைவலியா இருக்குனு சொன்னா அதான் டிராப் பண்ண போறேன்,” என்றான்.

மச்சி, “யாருடா அது? சொல்லவே இல்ல,” என்று கேட்டான்.

சித்து, “அது சொல்லவே இ தெரிஞ்சு என்ன பண்ண போற மச்சி ,” என்றான்.

உடனே அவன் நண்பன், “ ஒரு ஜெனரல் நாலேட்ஜ் தான்,” என்றான்.

சித்து, “அவன் தோலில் பலமாக ஒரு அடியை போட்டவன் போடா, உன் ஜெனரல் நாலேட்ஜ் பற்றி எனக்கு நல்ல தெரியும்,” என்றான். நண்பன் சிரித்துக் கொண்டே, “என்னடா, ஒண்ணும் சொல்ல மாட்டேன்ற லவ்வா,” என்றான்.
“சீ… போடா, அவ எப்போதும் என் நல்ல ஃப்ரெண்ட் தான்,” என்றான் இப்போதும் சிரித்துக் கொண்டே.

சித்தார்த் அவனுடன் பேசிக்கொண்டிருந்தான். அந்நேரம் மதுமதி அங்கே வந்து சேர்ந்தாள். அவளைப் பார்த்ததும் சித்துவின் நண்பன் சிரித்தபடி,
“ஹாய்” என்றான்.

ஒரு கணம் சித்துவை யார் என்பதுபோல் பார்த்தாள் மதுமதி. அந்த பார்வையில் சிறு தயக்கம் இருந்தது. உடனே சித்து,
“மது… இவன் என் ஃப்ரெண்ட். பெயர் சந்துரு,” என்று அறிமுகப்படுத்தினான்.

மதுமதி மெதுவாகப் புன்னகைத்தாள்.
“ஹாய்,” என்றாள்.
அவளது புன்னகையைப் பார்த்ததும் சந்துரு அசடுவழியச் சிரித்தான்.

அவனை வித்யாசமாக ஒரு கணம் பார்த்தாள் மதுமதி. பின்னர் சித்துவை நோக்கி,
“சித்து… புறப்படலாமா?” என்றாள்.

“ம்…” என்ற சித்து,“சரி சந்துரு, நாங்க கிளம்புறோம்,” என்றான்.

சித்துவின் தோளைப் பற்றிக்கொண்டு வண்டியில் ஏறிய மதுமதி,
“கிளம்பு,” என்று அவன் தோளைத் தட்டினாள்.
சித்து நண்பனிடம் தலை அசைத்தான். வண்டி நகர, இருவரும் ஏதோ பேசிச் சிரித்துக்கொண்டே அந்த இடத்தை விட்டு விலகினர்.

அவர்கள் போகும் திசையை சந்துருவை அடுத்து இன்னொருவனும் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.அவனின் மனதில் பொறாமை தீ கொழுந்துவிட ஆரம்பித்தது.
அவர்கள் மறைந்ததும், சந்துரு மெதுவாக அந்த இடத்தை விட்டு வசீகரன் குழு இருக்கும் பக்கம் நடந்தான்.

“யாரு தம்பி அது?” என்று மித்ரன் கேட்டான்.
“அண்ணா… சித்து. நம்ம டிபார்ட்மெண்ட் தான்,” என்றான் சந்துரு.
“அது ஓகே டா. சித்துவுடன் இருந்தது யாரு? அவன் லவ்வரா?” என்று கேட்டவன், கடைக்கண்களால் வசீகரனை நோக்கிப் பார்த்தான்.

சந்துரு உடனே வெட்கத்துடன் சிரித்தான்.
“இல்ல அண்ணா… அவன் கசின் ஆனா…”
“என்னடா, ஆனானு இழுக்குற?”
“அது அண்ணா… நல்லா இருக்கா இல்ல… நான் லவ் பண்ணலாமானு தான்,” என்றான். பேசிக்கொண்டே காலால் மண்ணை அரைஅடிக்கு தோண்டினான்.

“போதும் டா… தண்ணி வந்திடப் போகுது,” என்று ஒருவர் சிரித்தான்.
சுற்றியிருந்தவர்களும் சிரிப்பில் கலந்து கொண்டனர்.

ஆனால் அந்த சிரிப்பு வசீகரனுக்கு எட்டவில்லை.
“போதும் டா… சிரிச்சது. வேலையைப் பார்க்கலாமா?” என்று கடுப்புடன் சொன்னான்.

அவனது முகத்தைப் பார்த்த மித்ரன் உடனே அமைதியாகிவிட்டான்.


அடுத்த நாள் கல்லூரி நிகழ்வுகள் எந்த சுணக்கமும் இன்றி இனிதே நகர்ந்துகொண்டிருந்தன.
ஆனால் வசீகரனின் கண்கள் எங்கு தேடியும் மதுமதியை காணவில்லை.

அவள் தோழிகள்… சித்து… யாரிடமும் அவள் இல்லை.
எப்படி விசாரிப்பது என்று தெரியாமல் குழம்பியவனுக்கு, அவள் கல்லூரி நடத்திய மெல்லிசை நிகழ்ச்சியில் சிறப்பாகப் பாடிய மதுமதிக்குச் சிறப்பு பரிசு வழங்க வேண்டும் என்று கலைவிழா குழு எடுத்த முடிவு நினைவுக்கு வந்தது.

உடனே சித்துவை அழைத்தான்.

“அண்ணா… அவளுக்கு ஏதோ ஹெல்த் இஷ்யூனு சொன்னா,” என்றான் சித்து.
“இல்ல… அவங்களுக்கு ப்ரைஸ் இருக்கு. அதான் காணோமேன்னு கேட்டேன்,” என்றான் வசீகரன் இயல்பாக.


“நோ வோர்ரீஸ் அண்ணா. அவ ஃப்ரெண்ட் கீதா ரிசீவ் பண்ணிப்பா.”


“ம்… ஓகே,” என்றவனிடம் ஒரு பெருமூச்சு வெளியேறியது.

“என்னடா… மூச்செல்லாம் பெருசா இருக்கு?” என்று மித்ரன் அவன் தோளைத் தட்டினான்.
“ஒண்ணும் இல்ல,” என்றான் வசீகரன்.
“ஒண்ணும் இல்லாமலா அவளப் பத்தி விசாரிக்குற? முகத்திலேயே கடுப்பு தெரியுதே. கடுகு போட்டா பொறிஞ்சிடும் போல,” என்று நமட்டுச் சிரிப்புடன் சொன்னான்.

வசீகரன் அவனை முறைத்தான்.
“சரி சரி விடு. சண்டைனா சட்டை கிழியறதும், காதல்னா காத்திருக்கறதும் சகஜம் பா,” என்றான் மித்ரன்.
“என்னடா… ஒன்னுக்கொன்னு சம்பந்தமே இல்லாம பேசுற?” என்று வசீகரன் கடுப்பாகச் சொன்னான்.
“விடு மச்சி… இன்னைக்கு எது சொன்னாலும் குற்றம் கண்டுபிடிக்குறதையே வேலையா வச்சிருக்க போல,” என்றான் சலிப்புடன்.

சிறிது நேரத்தில் வசீகரன் முகத்தை இயல்பாக்கிக்கொண்டு,
“சரி வாடா… போலாம்,” என்றான்.

ஒருவாறு அன்றைய நிகழ்வுகள் இனிதே முடிவடைந்தன.

அவளின் நினைவுகளில் நனைந்து கொண்டிருந்த வசீகரனின் மனதை கலைப்பதுபோல் செல்போன் மணி சிணுங்கியது.
போனை எடுத்தவன்,
“ஹலோ,” என்றான்.

மறுபுறம் தந்தையின் குரல்.
“சொல்லுங்கப்பா,” என்றான் மரியாதையுடன்.

“வசி… ஒரு செயலாளரை நியமிக்க வேண்டும் என்று சொன்னேனல்லவா?நீ சொன்னாய் என்று மோகன் அங்கிள் ஒரு பெண்ணை சிபாரிசு செய்தார். சென்ற திங்களன்று வரச் சொன்னேன். நம்ம எதிர்பார்ப்பை விட திறமையானவள். வேலைக்கும் நியமித்துவிட்டேன். நீ டெல்லியிலிருந்து திரும்பி வந்ததும் சொல்லலாம் என்றிருந்தேன். அதற்குள் நீ அலுவலகம் போய்விட்டதாக அம்மா சொன்னா… அதான் அழைத்தேன்,” என்றார்.

“அந்த பெண்ணும் பார்க்க நல்லவிதமாகத்தான் இருக்கிறாள். அவளுடைய அப்பா நம்ம ஊர்பக்கம் தான் என்று மோகன் சொன்னான். அதனால் கவலை வேண்டாம்,” என்றார்.

அவருக்குத் தெரியவில்லை—அவளை வரவழைத்ததே அவன்தான் என்று.

வசீகரனின் இதழோரங்களில் மெதுவான புன்னகை மலர்ந்தது.
“ஓகே அப்பா,” என்றவன், குரலை மாற்றாமல்,
“அவங்க பேரென்ன?” என்று கேட்டான். அவனின் செவிகளில் நீக்கமற கேட்க்க துடிக்கும் பெயர்

“சொல்ல மறந்திட்டேன் பார்… பெயர் மதுமதி பிரதிக்ஷா,” என்றார் தந்தை.

போனை வைத்தவன் மெதுவாக அந்தப் பெயரை உச்சரித்தான்.
“மதுமதி… பிரதிக்ஷா…”

அந்த ஒலியே அவன் மனதுக்குள் ஏதோ சொல்லாமல் சொன்னது.
மறக்க முடியாத பெயர்.
அவன் உள்ளப் பெட்டகத்தில் யாரும் அறியாமல் பொக்கிஷமாகப் பாதுகாத்த பெயர்.

அவனை விட்டு சென்ற தேவதை மீண்டும் அவன் வாழ்க்கைக்குள் திரும்பி வந்ததுபோல் உணர்ந்தான்.
ஆம்… அவள் தேவதைதான்.

ஆனால் அந்த தேவதை ஏன் அவன் மனதை உடைத்தாள்?
அவளுக்கு நான் முக்கியமில்லையா?
அன்றைக்கும் இன்றைக்கும் அவனுள் எழும் இந்த கேள்விக்கு விடை தெரிந்தாலும் . அவள் சொன்னதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அவள் அவனின் மனதை உடைத்தாளா, இல்லை அவன் தானே அதை உடைத்துக்கொண்டானா—அவனுக்கே தெளிவில்லை. அவளிடம் கடுமையாக நடந்துகொண்ட போதும், அவன் உள்ளுக்குள் அவளுக்காக உருகிக்கொண்டிருந்தான்..

இப்போது நினைத்தாலும், அவனின் முட்டாள்தனம்தான் அவனை சாடுகிறது. அவள் அன்று சொல்லிய வார்த்தைகள், இவனது பேச்சால் அவளில் உண்டான கோவத்தில் விளைந்தவையே. நிச்சயமாக அவனை காயப்படுத்தவோ, அவன் மனதை உடைக்கவோ அவை சொல்லப்பட்டவை அல்ல. அவர்களது நட்பின் ஆழத்தை அவனுக்கு அழுத்தமாக உணர்த்தவே அவள் அவ்வாறு சொன்னாள். ஆனால், அவள் சொல்ல நினைத்தது கோவத்தின் வேகத்தில் வேறு வடிவம் கொண்டு உதிர்ந்துவிட்டது. அதை உணர்ந்தபோது, அவள் மனமும் அமைதியிழந்து தவித்தது. அவனிடம் சொன்ன அந்த வார்த்தைகள் அவள் மனத்தையும் தவிக்க வைத்தன. பின்னர்தான் அவனும் அதை உணர்ந்தான். உணர்ந்து என்ன செய்வது? கோவத்தில் எல்லாமே முடிந்துவிட்டது.

இப்போதும் அவனுக்கு, “அவளுக்கு நான் முக்கியமில்லையோ?” என்ற எண்ணம் தோன்றும். அப்பொழுதெல்லாம் மனம் கசங்கினான் தான். அந்த எண்ணமே அவனை அவளுக்கு எதிராக புரட்டிப்போடும்.

அன்று முழுவதும் அவள் நினைவுகள் அவனை அவ்வப்போது ஆட்கொண்டன. அவள் நினைவு வந்தபோதெல்லாம், அவன் மனதில் ஒரு இதம் பரவுவதை அவனே உணர்ந்தான். ஆனால் அந்த நாள், அவளை அவன் இறுதியாக பார்த்த நாள். அதை நினைத்து அவன் மனம் கசந்தது. அதன் பிறகான நாட்களில் அவளை எப்போதும் அவன் தொடர்ந்தான் தான் ; ஆனால் பார்க்க மட்டும் துணிந்ததில்லை.

அன்று வேலையில் அவனுக்கு கவனம் செல்லவே இல்லை. நேரத்தை நெட்டி தள்ளினாலும், நேரம் மெதுவாக நகர்வது போலவே இருந்தது. ஒவ்வொரு மணி நேரத்தையும் கடக்கும்போது, திரும்பிப் பார்த்தால் ஒரு யுகம் கடந்தது போல் உணர்ந்தான்.

மாலை நான்கு மணியளவில் அலுவலகத்திலிருந்து கிளம்பினான். கார் சாவியை விரல்களில் சுழற்றியபடியே வந்தவன், தனது பிஎம்டபிள்யூ ரக காரை உயர் வேகத்தில் கிளப்பினான். ரேஸ் கோர்ஸின் பிரதான சாலையில் திரும்பும் போது, சட்டென்று பிரேக்கை அழுத்தினான். எதிரே வந்த ஸ்கூட்டியும் க்ரீச் என்ற சத்தத்துடன் நின்றது.
 
Top Bottom