பார்வை 9
பிரியாவும் மித்ரனும் அங்கிருந்து நகர்ந்தனர்.
அவர்கள் சென்றதும், சிறிது தயக்கத்துடன் மது,
“நானும்… டிரஸ் பர்சேஸ் பண்ணணும்,” என்றாள்.
“சரி வா… வாங்க போகலாம்,” என்றான் வசீகரன்.
அவள் சற்றே யோசனையாக அவனைப் பார்க்க,
“வாட்?” என்றான்.
“நீங்க ஏன்?” என்றாள் தயக்கத்துடன்.
“ஏன்? என் கூட வர மாட்டீங்களா?” என்றவன் —சற்றே கோபமாய் பார்க்க
“இப்ப எதுக்கு கோபப்படுறீங்க? நானே போய்க…” என்று அவள் சொல்லத் தொடங்க,
பரவாயில்லை நானும் வரேன், எனக்கும் நேரம் போகவேண்டாமா என்றவனை அதற்குமேல் எப்பிடி தவிர்க்க என்று அவள் பார்க்க ,அவன் முகம் இறுகுவதை உணர்ந்தவள், சட்டென்று
“சரி வாங்க… போகலாம்,” என்றாள் . .
எதுக்கும் கோபம் , இவர்… என்ன மேக்கோ தெரியலை. சரியான ஆங்கரி பேட், என்று மனதுக்குள் புலம்பியபடி அவனுடன் நடந்தாள்.
அவனோ முகம் இலகுவாக, அவளோடு நடக்கத் தொடங்கினான்.
RMKV-யின் மென் பட்டு பிரிவுக்கு சென்றதும்,
மது அங்கே இருந்த பெண்ணிடம் புடவைகளை காட்டச் சொன்னாள்.
ஒவ்வொரு புடவையாக அந்த பெண் எடுத்து விரித்துக் காட்டினாள் அந்த பெண்,
“உனக்கு… சாரி ரொம்ப பிடிக்குமா?” என்று கேட்டான் வசீகரன்.
அவன் குரலில், விழிகளை உயர்த்தி அவனை பார்த்தவள்,
“ஆமாம்,” என்றாள் புன்னகையுடன்.
“அதுவும் பட்டுனா ரொம்ப பிடிக்கும்.”
“அப்புறம் என்ன… என்னை ‘நீ, வா, போ’ன்னே பேசுங்க . ‘நீங்க, உங்க’ன்னு கஷ்டப்பட வேண்டாம்,” என்றாள் அவள் சிரித்தபடி.
“தாங்க்ஸ்,” என்றான்.
அவள் புருவம் சுருக்கிப் பார்க்க,
“உன்னை ஒருமையில் பேச தான் வருது… அத நீ புரிஞ்சுகிட்டதுக்கு,” என்றான்.
“ஓகே…” என்று மெதுவாக சிரித்தவள்,
“இப்ப சாரி செலக்ட் பண்ண ஹெல்ப் பண்ணுறீங்களா?” என்றாள்.
ஒவ்வொரு புடவையாக அவள் எடுத்துப் பார்த்தபோது,
வசீகரனின் விழிகள் அவளை ரசித்துக்கொண்டிருந்தன.
அவளும் அதை கவனிக்கத் தவறவில்லை.
மாம்பழ மஞ்சள் நிறத்தில், அரக்கு நிற கரை போட்ட புடவையை அவள் தோளில் வைத்து பார்த்தபோது,
அவளுக்கும் அது பிடித்தது.
“இதையே எடுக்கலாமா ,” என்றாள்.
ஹம் .. நாட் பேட் என்றவனின் விழிகளில் தோன்றிய மெச்சுதல் பார்வை,
அவளின் முடிவை உறுதி செய்தது.
புடவைக்கு பில் போட்டுவிட்டு,
இருவரும் மீண்டும் கஃபே நோக்கி நடந்தனர்…
எதிரெதிரே இருந்த இருக்கைகளில் இருவரும் அமர்ந்திருந்தனர்.
“மது, என்ன சாப்பிடற?”
“நான் ஆர்டர் சொல்லிட்டு வரேன்,” என்றான்.
“எனக்கு ஒன்னும் வேண்டாம்,” என்றவள், அவனது முறைப்பைப் பார்த்ததும்,
“ஒரு ஃபிரெஷ் ஜூஸ்,” என்றாள் சட்டென.
அவளது பதட்டத்தை நினைத்து விரிந்த புன்னகையை மீசைக்கடியில் மறைத்தவன்,
“ஓகே,” என்றான்.
அவனுக்கு கூல் காப்பி, அவளுக்கு ஜூஸ்—இரண்டையும் கொண்டு வந்தான்.
“தாங்க்ஸ்,” என்றாள் மெதுவாக.
“பேசவே பயப்படுற , பிறகு எப்படி பழக?” என்றான் புன்னகையுடன்.
“சாரி… உண்மையாவே எனக்கு எதுவும் சாப்பிட தோணல. அதான் வேண்டாம்னு சொன்னேன்,” என்றாள்.
“ம்ம்…”
“எனக்கு பசிக்குது. உன்னை பார்த்துக்கிட்டு என்ன சாப்பிட சொல்லறயா?” என்றான்.
அவள் நமட்டு சிரிப்புடன் அவனை பார்த்தாள்.
“ஏன்?” என்றவாறு அவன் புருவங்களை உயர்த்தினான்.
“சொன்ன மாதிரி கோபப்பட மாட்டீங்களே?” என்றவள்,
“இது இப்ப வந்த கோபம் என்மேலையா, இல்ல பசியால வந்ததா?” என்றாள்.
அவன் முறைத்தான்.
“அதுக்குள்ள கோபப்படுறீங்க. இப்படி பார்த்தா எப்படி பேசறது? அப்புறம் திரும்பவும் வாயை கம் போட்டு ஒட்டிக்குவேன்,” என்றாள்.
அவன் தன்னைத் தானே கட்டுப்படுத்த முடியாமல் சத்தமாக சிரித்தே விட்டான்.
“ம்ம் நல்லா தான் பேசற ” என்றான் ஆச்சரியத்துடன்.
அடுத்த நிமிஷமே அவள் மீண்டும் தன்னுள் சுருங்கிவிடுவாளோ என்று எண்ணி பேச்சை மாற்றினான்.
“இப்ப எதுக்கு புடவை பர்சேஸ்? ஏதாவது ஃபங்ஷனா? இல்ல பிறந்தநாளா?”
“பிரியா அக்கா மேரேஜ்க்கு,” என்றாள்.
“ஆமாம்… மித்ரன் சொன்னான். அவன் அண்ணாதானே மாப்பிள்ளை?”
“ஆமாம்,” என்று தலையசைத்தாள்.
ஆர்டர் செய்த குளிர்பானங்களை இருவருமாக பேசிக்கொண்டே அருந்தி முடித்தனர். இவ்வளவிலும் அவனின் பார்வை சற்றும் மாறவில்லை.
அவளோ, அவனுடன் இருப்பதே ஒரு தடுமாற்றமாக உணர்ந்து, அவனை ஏனென்றும் நேர்கொள்ளாமல் தலையை குனிந்தபடி அமர்ந்திருந்தாள். இனி என்ன பேசுவது , எப்படிப் பேசுவது என்ற குழப்பம் அவளை உள்ளுக்குள் சுருட்டிக் கொண்டிருந்தது.
“அச்சோ… இவன் ஏன் இப்படி பார்க்கிறான்?”
என்று நினைத்தவளின் விழிகள், மடியில் கோர்த்து வைத்திருந்த தன் கைகளையே ஆராய்ந்து கொண்டிருந்தன.
அமைதியை கலைக்கும் வகையில் குரலைச் செருமியவன்,
“அப்புறம் மது… இங்கதானா இல்ல வேற எங்கேயாவது போயச்சா ?” என்றான். அவன் குரலில் இயல்பான கேலி ஒட்டிக் கொண்டிருந்தது.
சட்டென நிமிர்ந்தவள்,
“வாட்?” என்று புரியாமல் அவனை பார்த்தாள்.
“இல்ல… ரொம்ப யோசனையா இருந்தீங்க. அதான் இந்த உலகத்தில தான் இருக்கிறாயா இல்ல கனவு காண போயாச்சா ,” என்றான், இதழ் ஓரத்தில் சின்ன குறும்புன்னகையுடன்.
“அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல,” என்றாள் தயங்கிய குரலில்.
அவனின் தொடர்ந்த பார்வையைத் தாங்க முடியாமல் மீண்டும் தன் விழிகளை வேறு திசை திருப்பினாள்.
“என்ன? என்னைப் பார்த்தா வில்லன் மாதிரியா தெரியுது? இல்ல பயமா இருக்கா ? மித்ரன்கிட்ட பேசுற மாதிரி கூட என்னோட சாதாரணமா பேச மாட்டேங்குற?” இவ்வளவு தயக்கம் ?
அவனின் கேள்வி கேலியாய் இருந்தாலும், அதில் ஒரு எதிர்பார்ப்பு ஒளிந்திருந்தது.
“அப்படியெல்லாம் இல்ல,” என்றவள் விழிகளில் தயக்கம் !”
அவன் விழிகள் மட்டும் பேசின. ‘என்னிடம் மட்டும் ஏன் இவ்வளவு தயக்கம்?’ என்று கேட்பதுபோல்.
“அது…” என்று இழுத்தவள், தன்னைத் தானே சமாளித்துக் கொண்டு,
“உங்கள் முதல்முறை பார்க்கும் போதே நீங்க என்கிட்ட ரொம்பவும் கோவபட்டீங்க அப்ப இருந்தே உங்களை பார்த்த எனக்கு பயம் . அவள் சொல்ல சொல்ல அவனுக்கு அந்த நாளில் நடந்தது எல்லாம் நினைவில் வந்து தித்தித்தது. அவனது மனமோ சொதபீட்டையே வசீ என்று தன்னையே கடிந்து கொண்டது. அவள் பாவனையோடு சொல்வதை ஒரு புன்னகையோடு பார்த்துக்கொண்டிருந்தான். அப்புறம் அந்த பாஸ்கட் பால் கோர்ட்ல வச்சு பிராமிஸ் நான் அந்த போர்ட் வச்சிருக்கல, அது சித் ஃப்ரெண்ட் அந்த அக்கா தான் வச்சிருந்தாங்க . அவங்க எங்கேயோ போகவும் என்கிட்ட குடுத்தாங்க , நானும் என்னனு பார்க்காம கையில பிடிச்சுக்கிட்டேன். நீங்க என்னை தப்பா நினைக்காதீங்க …முதலே உங்க கண்களை பார்த்தா எனக்கு பேசவே வராது , இப்ப இதுவும் சேர்ந்து.. உங்கள பார்த்தாளே எனக்கு ரொம்ப பயமா, தயக்கமா .. பேச வந்தது மறந்தே போகுது,” என்றாள் பரிதாபமாக .
“அப்புறம்… சும்மா சும்மா கோபப்படுறீங்க. அப்புறம் எப்படி பேசறது? என்ன பேசினா கோபப்பட மாட்டீங்கன்னும் தெரியல… அதனால தான்.”
அவன் அவளையே விழியெடுக்காமல் பார்க்க கண்டவள்,
‘இப்ப நான் என்ன சொல்லிட்டேன்? ஏன் இப்படி பார்க்கிறார்?’
என்று மனதுக்குள் பதறியவள், ‘பெருமாளே…’ என்று எண்ணிக் கொண்டு விழிகளைத் தாழ்த்திக் கொண்டாள்.
தற்போது அவன் இதழ்களில் குறும்புன்னகை மெதுவாக மலர்ந்தது.
“பழகிக்க ,” என்றான் எளிதாக.
“என்ன என அவள் திகைக்க!”
என்னை, என் கோவத்தை பழகிக்கன்னு சொன்னேன் என்றான் அவன் சற்றும் அதிராமல்
ஆனால், அவள் அதிர்ந்து விழித்தாள்.
“ஏன் மது ,உனக்கு அப்படி தோணவே இல்லையா?”
“உள்ளம் தடதடக்க எப்படி? என்றாள்.”
அந்த அட்டையில் உள்ளது போல ?
என்ன.. எந்த அட்டை?என்று தடுமாற
பேஸ்கட் பால் கோர்ட்ல வச்சிருந்தையே என்றவனின் கேள்வி புரியத்துவங்க மனம் அதிர விடை தெரியா குழந்தையாய் தவித்தாள்.
இப்படி கேட்பான் என்று துளியும் எண்ணவில்லை ஆம் என்றும் சொல்லும் எண்ணமும் இல்லை , இல்லை என்று சொல்ல முடியும் என்றும் தோன்றவில்லை.
ஆனால் , அவன் சொன்னான் அவனின் காதலை.
அவளை பார்த்த நிமிடத்தில் இருந்து அவனை ஆழிபேரலையாய் அவள் சுருட்டி கொண்டதை, ஒவ்வொரு நிமிடமும் அவளது நினைவால் அவன் தவிப்பதை , அவளது அருகாமை வேண்டும் என்று மனம் அடம்பிடிப்பதை, என்று அவன் சொல்ல சொல்ல அவளது கண்கள் இரண்டும் அதிர்ந்து விரிந்தன. “இதை இப்பவே சொல்லுவேன்னு நான் நினைக்கலை. ஆனா உன்னை இங்க பார்த்த பிறகு என் பார்வை உன்னைத் தாண்டி எங்கும் நகரல.
என்னால என்னையே...... என்றவன் சற்று நிறுத்தி
இப்ப நீ பக்கத்தில இருக்கிற இந்த நிமிஷம்… என் மனசில இருக்கிறதை உன்கிட்ட சொல்லணும்னு தோணுது,” என்றான்.
அவள் அவனையே பார்க்க .
“எனக்கு உன்னை ரொம்பப் பிடிச்சிருக்கு.
என் வாழ்க்கை முழுசுக்கும் நான் வாழும் காலம் வரைக்கும் நீ எனக்கு வேணும்.உன்னை மட்டுமே காலம் முழுதும் இங்கே சுமக்கணும் என்று தன் நெஞ்சை காண்பித்தான் .
வயதான காலத்தில உன் மடியில் தலை சாய்ச்சி இளைப்பாறவும், நீ வேணும், இப்படி ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு செயலிலும் நீ எனக்கு நீக்கமற வேண்டும் மது. என்றவன் சட்டென்று அவளின் விரல்களை பற்றி அவளின் விழிகளை நேர்கொண்டு பார்த்து சொன்னான்
I deeply love you, Madhu…”
“கல்ச்சரல்ஸ்… அன்னைக்கே சொல்லியிருப்பேன்.
தப்பா நினைச்சுக்குவேன்னு தான் சொல்லல,” என்று அவன் மீண்டும் அவளையே பார்த்தான்.
மது என்றவன் விழிகளை அவள்நேர்கொண்டு பார்க்க, அவன் கண்களில் அவளுக்கான காதல் அளவில்லாமல் கொட்டிக் கிடந்தது. அவளின் பதிலுக்காக தவித்தவன் விழிகளில் அந்தத் தவிப்பும் தெளிவாக தெரிந்தது.
அவளோ , நான் .. நான்.. என்று தடுமாற
அவளது தடுமாற்றத்தை பார்த்தவன் விழிகளில் ரசனை நிறைந்திருந்தது.
“உடனே சொல்லணும்னு இல்ல… மெதுவா யோசிச்சு கூட சொல்லலாம்,” என்றவனின் பேச்சில் அவள் சற்று ஆசுவாசமானாள்.
‘சரி’ என்பது போல, தலையை எந்தப் பக்கம் என்றில்லாமல் எல்லா பக்கமும் ஆட்டினாள்.
அவனின் பார்வை மாற்றம் அவளுக்கு புரிந்ததுதான். ஆனாலும் இவ்வளவு விரைவாக அவனிடம் இருந்து இதை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. பேச்சுக்கு பஞ்சமாகி நின்றவள், என்ன சொல்வதென்று தெரியாமல் தடுமாறி மனம் அல்லாடியது.
அவளுக்கு “பார்த்ததும் காதல்” என்பதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. அவனை பிடித்திருக்கிறது; ஆனால் அதை காதல் என்ற வரையறைக்குள் கொண்டு வர அவளால் முடியவில்லை.
மேலும் அவனது வசதி, பணம் அவளை மலைக்க வைத்தது. வளம் படைத்தவன் என்பதே அவனது பேச்சில் தெரிந்து கொண்டவள், மிடில் கிளாஸ் வீட்டு பெண்ணான தன்னுக்கும் அவனுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாத அவனது உயரம் அவளை பிரம்மிக்க வைத்தது.
நட்பை தாண்டி அவனை நெருங்க சற்று பயந்தாள்.
ஆனால் அவனுக்கு அவளை பிடித்திருக்கிறது; அதைத் தாண்டி அவன் எதையும் யோசிக்கவில்லை.