கலிங்கனின் காவியம் - 42

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
402
588
93
Hyderabad
❤️❤️❤️அழகான மலைதொடர்
அதன் உச்சியில் இருந்து கொட்டும் நீர்வீழ்ச்சியை காண மலையேறும் கப்பிள்ஸ்.அவர்களின் யதார்த்த உரையாடல்கள்..சிரிக்காத கலிங்கின் செல்பி முகம் குரங்கு முகம்,சிரித்த முகமே மனுஷ முகம் counter super by Varuna 🤣🤣..
அதற்கு அவன் விளக்கமும் ஏண்டா காலை வாறி விடுவது போல் பேசினோம்(leg pulling),உண்மை அன்பை எதிர்ப்பார்பவனிடம் என நோந்திருப்பா.
அதன் பிறகான அவள் கேள்விகளும் அவன் பதில்களும் வேற லெவல்.
எல்லாமே ரொம்ப அழகா இருந்தது ரசிச்சு படிச்சேன்..Lovely.Lively.


நிதாமா கதை இழுக்கறா மாதிரி தான் போகுது.எப்படி சொல்றது என்று முழித்து கொண்டிருந்தேன்.நீங்களே opinion கேட்டதால் சொல்றேன்.தவறாக எடுத்து கொள்ளாதீர்கள்.கடத்தல் பற்றிய வர்ணணைகள்ரொம்ப இல்லாமல் நேர பாயிண்டா சூர்யா,நிலா,வரதன் பழிவாங்கல்,அல்லது மாறன் அவன் பெற்றோர் வருணா மீட் பண்ணி உண்மை புரிய வைக்கறது இல்ல ஆதிக்கு நல்ல characterisation இப்படி இருந்தா
இன்னும் உயிர்ப்பா இருக்கும் போல தோணுது.அதுவே நிறைய எபி போகும்.

அவர்கள் தொழில் ரவுடியிசம். வன்முறை உண்டு என்பது இது வரை கொடுத்த எபிகளில் நன்றாகவே புரிந்து விட்டது.தீயவற்றையும் அளவுக்கு மீறி describe பண்ண வேண்டாமே என்பதே எனக்கு.Please don't bother if I am wrong.🙏🙏

எல்லாவற்றிலும் நீங்க கலக்குறீங்க அதில் சந்தேகமேயில்லை.கலிங் charcter ஒரு clear desire or purpose நோக்கி போறா மாதிரி உங்க focus இருக்கு.ஆனா எங்களுக்கு இன்னும் அது மூடு மந்திரமாவே இருக்கு.Just Varuna க்கு ஒரு நல்ல turning point எதிர்பார்க்கிறேன்,அவள் அறியாமையிலேயே உழன்று கொண்டிருக்கிறாள்.

இதுவரை
எல்லா கதாபாத்திரமும் இயல்பா, ரொம்ப எதார்த்தமா உண்மையா இருந்தாங்க..(அவரவர் charcter படி)இதுவரை நல்ல கதை குடுத்த உங்களுக்கு என் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்!!
🙏🙏Thanks Nithama.
 

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
983
890
93
Madurai Tamil Nadu
நிதாம்மா...நானெல்லாம் ஓவ்வொரு எபியும் இரண்டு மூணு தடவை படிக்கிறேன்...கதை இழுத்தடிக்கிற மாதிரி இருந்தால் அப்படி படிக்க முடியுமா ... உங்களுக்கு எப்படி வருதோ அப்படியே கொடுங்க...
 

Goms

Well-known member
May 22, 2025
822
813
93
Chennai
பாருங்க இந்த பயபுள்ளையை 😀கடலையும், தரையையும் தாண்டி வான ஊர்தியை பற்றி யோசிச்சா, இவன் வானுயர்ந்த மலையையும், அருவியையும் காட்ட கூட்டி வந்திருக்கான்😂 செம்ம 👌🏻

எங்க ஆளு எதுவானாலும் முகத்துக்கு நேரா சொல்லிடுவா (எப்படி உன் முகத்தை பற்றிய உண்மையை சொன்னா😂). நீயும் அது மாதிரி உன்னோட எல்லா உண்மைகளையும் இப்போவே சொல்லிட்டின்னா உனக்கு நல்லது. இல்லாட்டி நீ விழுந்து விழுந்து கொஞ்சும் கைகள் உன்னை வேற மாதிரி கவனிக்க நேரிடும், பார்த்துக்கோ 😄

Really lovely episode ❤️🥳
 

Mrs. Jeevakan Rathika

Active member
Aug 21, 2025
209
248
43
France
கதை நீர்வீழ்ச்சி போல கலகலப்பாக ,தென்றல்போல வருடி, வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது, பின் நதியாக தவழ்கிறது. அருமையான உங்கள் எழுத்துநடை.
 
  • Like
Reactions: Shameem @ Sumithra

thanga then mozhi

Active member
May 6, 2026
195
159
43
Cheyyar
அத்தியாயம் 42.1

அத்தியாயம் 42.2


மக்களே, கதை இழுத்தடிக்கிற மாதிரி ஏதும் இருக்கா? எனக்கு கதையை வேகமா முடிக்கோணும். ஆனா அது போய்க்கொண்டே இருக்கு. என்ன எண்டு சொல்லுங்க ஓகே.
நீ தாண்டா எல்லோரையும் மயக்குற 🥰🥰