• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

காதல் எங்கள் சொந்தம் - 13

நிதனிபிரபு

Administrator
Staff member
பதிமூன்றாம் அத்தியாயம்

காதல் எங்கள் சொந்தம்.... 13

இக்கட்டான சூழ்நிலை.... தங்கையின் மேல் உள்ள அன்பின் மிகுதியால் சந்திரனுக்கு கோபம் வந்தது.

தங்கையை அறிமுகமில்லாத ஆணுடன் பார்த்ததும் சந்திரன் திகைத்தான். தன்னிடம் அனுமதி பெறாமல் அவள் இதுவரை எதுவும் செய்ததில்லையே.! என்னாச்சு அவளுக்கு.?

அண்ணனை திடீரென பார்த்ததும் ஹேமா பயந்தாள். அவன் முகம் சிவந்ததை கண்டு தடுமாறினாள். எப்படி எல்லாம் திட்டப் போகிறானோ!.... இவன் எங்கே இங்கு.? ஒரு ஃபோன் பண்ணி சொல்லலை. நான் வேண்டாதவள் ஆகிவிட்டேனா.?

“என்ன ஹேமா.... கால் முளச்சிடுத்து போல. யார் இவர்.?” கூர்மையாக நிர்மலை பார்த்தான் சந்திரன்.

“அண்ணா இது நிர்மல். வீட்டு ஓனர். இவரைத் தான் வீட்டு விஷயமா பார்க்கப் போயிருந்தேன். அப்படியே இந்த பங்ஷனுக்கு கூட்டி வந்தார்.... ஆமா நீ என்ன? வரேன்னு எனக்கு ஒரு கால் கூட பண்ணலை..? அப்பா எப்படி இருக்கார்.?” ஹேமா குரல் நிதானமாக ஒலித்தது. பயந்தாள் என்றாலும் அதை அவள் வெளிக் காட்டிக் கொள்ளவில்லை.

இது வேறு ஹேமா என்று சந்திரனுக்கு ஒரு உணர்வை ஏற்படுத்தியது. அண்ணனும் தங்கையும் மோதிக் கொள்ளவார்களோ.! காவ்யா நிலமையை சீர் பண்ண பேசினாள்.

“சந்திரன்.... உங்க கிட்டே சொல்ல மறந்திட்டேன். ஹேமா என்னிடம் சொல்லிட்டுத் தான் கிளம்பினாள். மங்களம் மாமி எங்க விடுதியில் அப்பாவை கவனிக்க ஆறு மாசம் பணி புரிந்தார்கள். அதை சொல்லி நான் தான் அப்படியே நிர்மலுடன் வந்திடுன்னு சொன்னேன்..” என்று

பொய் சொன்னாள். சொல்லாமல் கொள்ளாமல் ஹேமா சென்றது பற்றி அவள் மூச்சு விடவில்லை.

சந்திரனின் கோபம் பொங்கும் பாலில் தெளிக்கப்பட்ட நீர் போல் அடங்கியது. ஹேமாவும் அதை உணர்ந்தாள்.

“சரி வாங்க போலாம். நிர்மல் கிளாட் டூ மீட் யூ..” நிர்மலோடு கை குலுக்கினான். அதற்குள் மங்களம் மாமியே ஓடி வந்து வரவேற்றது எல்லோருக்கும் ஒரு விடுதலை போல் இருந்தது. ஹேமா கண்ணால் காவ்யாவுக்கு நன்றி சொன்னாள். இட்ஸ் ஓ.கே என்று காவ்யாவும் சின்னதாக தலை அசைத்தாள். இதை நிர்மல் கவனிக்கத் தவறவில்லை. சந்திரனை கண்ணால் காட்டி.. ஹேமாவிடம் கிசுகிசுத்தான்.

“அவர் தான் உன் அண்ணாவா.? செம கண்ட்ரோல் ப்ரீக் போலிருக்கு.” ஹேமா பட்டென்று சொன்னாள்....

“அப்படியெல்லாம் இல்ல. அவர் என் மேல் ரொம்ப அன்பும் அக்கரையும் கொண்டவர்..”

“ஓவர் அக்கரைன்னு புரியுது.... பேபி பண்ணறார். என் அண்ணா என்னை கவனிப்பது போல.... அண்ணாக்களே இப்படித்தான்.” அவன் சொல்லி வாய் மூடவில்லை.. பிரபு உள்ளே தன் மனைவியோடு இருப்பதை நிர்மல் பார்த்தான். பிரபுவும் பார்த்துவிட்டான். வீட்டை வாங்கப் போவதா சொன்னாளே.. இப்ப நிர்மல் கூட வந்திருக்கா, நிர்மல் அவளையும் பிரேன் வாஷ் பண்ணிவிட்டானா.? வரும் பார்ட்டிகளை எல்லாம் ஏதாவது சொல்லி வாங்க விடாமல் பண்ணிக் கொண்டிருந்தான் நிர்மல்.

மங்களம் மாமி மேல் இரு குடும்பமும் அன்பும் பாசமும் கொண்டிருந்தனர். காவ்யாவின் தந்தையின் கடைசி காலத்தில் மங்களம் வந்து ஒரு தாயைப் போல் அவரை கவனித்துக் கொண்டது, காவ்யாவின் அம்மா வேதவல்லிக்கு ஆறுதலாகவும் பலமாகவும் இருந்தது. கணவனை பறிகொடுத்த சமயம்..

“அம்மா.... அவர் நட்சத்திரமா வானத்திலிருந்தே உங்க குடும்பத்துக்கு பாதுகாப்பா இருப்பார். மரணம் இயற்கை. நீங்க மனசு ஓடியாம இருந்தாத் தானே காவ்யா அம்மாவை பார்த்துக்க முடியும்.?” உள்ளன்புடன் மங்களம் சொன்ன சொற்கள் அவை. அந்த சமயம் அது கொடுத்த தெம்பு சாதாரணமானது அல்ல. அந்த அன்புக்காகத் தான் காவ்யா வந்திருந்தாள்.

“’என் கூட வாங்களேன்.... “ என்று சந்திரனையும் இழுத்து வந்தாள்.

மங்களம் பயங்கர பிசி. இவ்வளவு மகிழ்ச்சியான நிகழ்ச்சியை ஹேமா இப்ப தான், ரொம்ப நாள் கழித்துப் பார்க்கிறாள். உறவினர்களின் மகிழ்ச்சிக் கூட்டம், வளைகாப்பு பெண் அர்ச்சனாவின் நாணமும் பூரிப்பும் கொண்ட தாய்மைத் தோற்றம்.. அவள் கணவனின் தந்தையாகப் போகும் பெருமிதம்.. எல்லாவற்றையும் சின்னக் குழந்தையின் குதூகலத்துடன் ரசித்துக் கொண்டிருந்தாள் ஹேமா.

சந்திரன் முகம் இறுக்கமாக இருக்க..

“என்ன யோசனை சந்திரன்.? மூட் அவுட்டா.?” காவ்யா சொல்ல....

“ஹேமா பத்தி தான். அவ இப்படி தன்னிச்சையாக..”

“டோன்ட் பீ சில்லி சந்திரன். என்னை நம்பி தானே அவளை விட்டிட்டுப் போனீங்க்.? நிர்மல் ஒண்ணும் பயங்கரவாதி இல்லே..”

சந்திரன் லேசாக சிரித்துவிட்டு, சகஜமாக இருப்பது போல் காட்டிக் கொண்டான். அர்ச்சனா ரெண்டு கைகளிலும் வளை குலுங்க நாற்காலியில் உக்கார.. உறவினர்கள், அவள் கணவன் வீட்டைச் சார்ந்தவர்கள் என்று அனைவரும் அவளுக்கு சடங்கு சுற்றி ஆசீர்வாதம் பண்ணி.. கையில் ஒரு கவர் கொடுத்தனர்.

சந்திரன் ஐயாயிரம் ரூபாய் கவரில் போட்டு, ஆசீர்வதித்து கொடுத்தான். காவ்யாவும் அதே போல் கொடுத்தாள்.

“நிர்மல்.. பெண்ணை ஆசீர்வாதம் பண்ணி கிப்ட் கொடுக்க நான் காசு கொண்டு வரலையே.... ஒண்ணும் கொடுக்காட்டி அசிங்கமா இருக்குமே. நா அதை யோசிக்க மறந்திட்டேன்.. என்ன செய்ய.?” என்றாள் வருத்தமுடன்.

“கவலைப்படாதே.... நான் உன் பெயரையும் சேர்த்து தான் கவரில்.. பெஸ்ட் விஷஸ் ப்ரம் நிர்மல் அண்ட் ஹேமான்னு எழுதி இருக்கேன் பார். இருவரும் ஒன்றாக சென்று கவரைக் கொடுப்போம்.” என்றான். “அதெப்படி.?.. நீங்க வேறு நான் வேறு.” அவள் தயங்கினாள்.

இதை கவனித்த சந்திரன் ஒரு கவரில் பணம் போட்டு....

“நிர்மல் அதை நீங்க கொடுங்க. இதை ஹேமா கொடுப்பா.. வாங்கிக்க ஹேமா..” என்றான் சந்திரன்.

“தேங்க்ஸ்..” என்று வாங்கிக் கொண்டாள் ஹேமா.

“உங்க அண்ணனுக்கு என்னைப் பிடிக்கலை போலிருக்கு..”

“நீங்க உரிமை எடுத்தது அவருக்குப் பிடிக்கலை.”

அவளுக்கும் காவ்யாவுக்கும் வளைகள் கொண்டு வந்து கொடுத்தாள் மங்களம். “நீங்க எல்லாம் வந்தது எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. சாப்பிட்டு விட்டுத் தான் போகணும்.” என்றாள்.

“விருந்து சாப்பாடு மிஸ் பண்ண மாட்டோம் மாமி.” என்றான் நிர்மல்

சாப்பாடு முடிந்து விடை பெற்று கிளம்பினார்கள்.

“ஹேமா வா போலாம்....” என்றான் சந்திரன். நிர்மலுடன் போய் விடப் போகிறாள்....

“நிர்மல் பை..” என்று சொல்லி ஹேமா அண்ணனுடன் கிளம்பினாள்.

காரை காவ்யா ஓட்ட, அண்ணனும் தங்கையும் பின் சீட்டில் அமர்ந்தார்கள். காத்திருந்தது போல் வெடித்தான் சந்திரன்.

“ஹேமா.. வாட் இஸ் திஸ்.? எதுக்கு நீ அந்த நிர்மல் கூட எல்லாம் ஜோடியா வரே.? அவனுடன் உனக்கு என்ன பர்சனல் நெருக்கம்.?”

“அண்ணா.... ஜஸ்ட் லைக் தட்..”

“என்ன ஜஸ்ட் லைக் தட்.? நிர்மலுடன் பேசி வீட்டை வாங்க முடியுமான்னு தான் கேட்டுக்கிட்டேன். நீ ஒரு படி மேலே போய் அவனுடன் வந்து நிக்கிற. சித்தப்பாவுக்கு தெரிஞ்சா என்னாகும் தெரியுமிலே.? என்னை நம்பி தானே உன்னை இங்க அனுமதிச்சிருக்கார். அங்கே அவர் கவலைப்பட்டு புலம்பிட்டு இருக்கார். நீ இங்கே ஜாலியா சுத்திட்டு இருக்கே... மறந்திட்டியா அகில் பண்ண கூத்தை.? அறிவில்ல உனக்கு?..”

ஹேமா கண்ணீரை கண்களில் நிறுத்தி வைத்துக் கொண்டாள். கண்ணீர் பலகீனப்படுத்தும்.

“அண்ணா.. நான் ஒண்ணும் டீன்ஏஜ் ரெண்டும் கெட்டான் இல்ல. எனக்கு என்னைத் தெரியும். எப்படி பழகணும்ன்னு தெரியும். சும்மா எல். கே. ஜி பிள்ளையை அதட்டுவது போல அதட்ட வேண்டாம். நிர்மலிடம் ப்ரெண்ட்லியா தான் பேசிட்டு இருக்கேன்..”

“இந்த புடவை ஏது.? இது போல் புடவை உன்னிடம் கிடையாதே.? கண்ட கண்டவன் கொடுக்கும் புடவையுடன்.. என்ன ஹேமா இது.? அந்த அகில்.... இப்படித்தானே உன் பிறந்தநாளுக்கு புடவை வாங்கிக் கொடுத்து மயக்கினான்...”

“ஸ்டாப் இட் அண்ணா. நான் ஒண்ணும் சீப் டைப் கிடையாது. ஒரு புடவையை காட்டி என்னை மயக்க முடியாது. நிர்மல் ஒரு டிப்ரெஷனில் இருக்கான். கூப்பிட்டான்.. பாவமா இருந்துச்சு. நல்ல டிரெஸ் இல்லே. அவன் அம்மா புடவைய கொடுத்தான். அவ்வளவு தான். இதில் எதுவும் பிஷ்ஷியா இல்லே. அவமானமா இருக்கு.. நீங்க பேசறதை கேட்க..” கத்தினாள் ஹேமா.

வயடைத்துப் போய்விட்டான் சந்திரன். ஹேமாவா இப்படி பேசுவது.?

“ஹேமா என்ன பேசற நீ?. உன் நல்லதுக்கு தானே சொல்றேன். ஏற்கனவே அகிலால் காயப்பட்டிருகே. உன்னைப் பாதுகாத்து, நல்ல இடத்தில் கட்டிக் கொடுக்க வேண்டிய கடமை எனக்கிருக்கு. அந்த உரிமையில் பேசறேன்... ஹேமா புரிஞ்சுக்க.”

கார் வேகமாக போய்க்கொண்டிருந்தது. கோடை ஸ்தல மார்க்கெட் தாண்டி ஏரி அருகே சென்று கொண்டிருந்தது. ஏரியில் சிலர் படகு சவாரி செய்து கொண்டிருந்த காட்சி அழகாக இருந்தது. ஏரியின் நீர் பரப்பை பார்த்துக் கொண்டு உட்கார்ந்து இருக்க வேண்டும் போல் ஹேமாவுக்குத் தோன்றியது. எனக்கு என் மனசு வேணும். அது அடுத்தவங்க ஆளுமையில் இருக்கு. அது அண்ணனே ஆனாலும்.. மன்னிக்க முடியாது. இத்தனை நாள் பொறுத்தது தவறு....

“காரை நிப்பாட்டு காவ்யா.. நா கொஞ்ச நேரம் ஏரி அருகில் களைப்பாற விரும்பறேன்.”

காரை நிப்பாட்டினாள் காவ்யா.

“நானும் தங்கச்சியோட இறங்கிக்கிறேன்.....”

“சரி.. அண்ணனும் தங்கையும் பேசி சமாதானம் ஆகிட்டு வாங்க.”

“நோ.. நா தனியா இருக்க விரும்பறேன்....”

தீர்மானமாக சொல்லி ஹேமா இறங்கிக் கொண்டாள்.

“ஹேமா.... தெரியாத ஊரு. நா கூட வரேன்.”

“ஸாரி.... ஐ நீட் மை ஸ்பேஸ். யாரும் கூட வரத் தேவையில்ல. அதிலும் கூடப் பிறந்த தங்கையை புடைவைக்கு மயங்கிப் போகும் ரகம் என்று சீப்பா பேசிய ஒருத்தர் என் கூட வரவேண்டாம்.... எனக்குன்னு ஒரு மரியாதை இருக்கு.” கண்ணீரை அடக்கிக் கொண்டு அவள் சொன்னதை கேட்ட சந்திரன் திடுக்கிட்டுப் போனான். ஹேமா என்னென்னவோ பேசறா....

“ஹேமா.... மரியாதை குறைவா நடத்தறேன்னு சொல்றே. என்ன உளரிட்டு இருக்கே.? சரி.. தப்பா பேசியிருந்தா ஸாரி..”

“உன் ஸாரியை குப்பையில் போடு.” கதவை அறைந்து சாத்தினாள். வேகமாக நடந்தாள்.

“சந்திரன்.. அப்செட் ஆகாதீங்க. ஹேமா கூல் ஆன பிறகு பேசிக்கலாம்.” சந்திரன் முகத்தில் ஈ ஆடவில்லை. இவனை எப்படி சமாதானப்பட்டுதுவது என்ற கவலையுடன் மலர்விழி விடுதி நோக்கி காரை செலுத்தினாள் காவ்யா.

அங்கே ஒரு பஞ்சாயத்து காத்துக் கொண்டிருந்தது அவளுக்கு எப்படித் தெரியும்.? அவள் காரை விட்டு இறங்கியது தான் தாமதம் ரோசி ஓடி வந்து “ அம்மா.... உள்ளே அந்த பிரசாத் அட்டகாசம் பண்ணிட்டு இருக்கான்.” ரோசி பயத்துடன் நடுங்கி நின்றாள்.

சொந்தம் தொடரும்.
 
Top Bottom