பதினைந்தாம் அத்தியாயம்.
காதல் எங்கள் சொந்தம்.. 15
போராட்டங்கள் வெற்றி பெறுமா என்ற ஐயம் வரவே கூடாது. வந்தால்.... அது தான் தோல்வியின் முதல் படி. நிர்மல் மனசு தளர்ந்த சமயம் கற்பகம் சொன்னாள்..
“எனக்காக இருக்கேன்னு நீ சொன்ன பாரு, ரொம்ப பிடிச்சிருக்கு நிர்மல். ஆனா..... பிரபுவை ரொம்ப நேசித்த, நீ இப்ப வெறுக்கிற. அன்பாலே சாதிக்கணும். கஷ்டம் தான். ஒரே வழி.... பொறுமையுடன் இருப்பது தான். அன்பு மெல்லத் தான் வரும். குவிக் பிக்ஸ் மாதிரி உடனே ஒட்டும்ன்னு எதிர்பார்த்தா.... மேலும் உடையும். புரிஞ்சுக்க நிர்மல்..”
“அக்கா....பிரபு இவ்வளவு சுயநலமா இருப்பான்னு நா நினைக்கலை..”
கற்பகம் சிரித்தாள்.. “அது தான் வாழ்க்கை. நா போறேன்.... நீ பிரபுவிடம் அன்பா பேசு. கோபமா உரிமை பேசாதே.... நா வரேன்.”
“நா.. நா.. பேசி சம்மதம் வாங்கிடுவேன் அக்கா.. நீ பயப்படாதே.”
“சரி....” வாசலில் வந்து நின்றது வெள்ளை நிற கேப்.
“வரேன்டா.... நீ முதல்ல இதனாலே டிப்ரெஸ் ஆவதை நிப்பாட்டு.”
“சரிக்கா..” அவள் கையில் பத்தாயிரம் கொடுத்தான் நிர்மல்.
“வேண்டாம் நிர்மல்..”
“வேண்டாம்னு சொல்லாத கா.... நீ இப்ப ஒரு ஆள் இல்ல.. ரெண்டு ஆள். எனக்கு மருமான் பிறக்கறதுக்குள்ளே பிரபு கன்வின்ஸ் ஆயிடனும்ன்னு வேண்டிக்கிறேன்.... ஏழு மாசம் ஆனதும் நீ இங்க தான் வந்து இருக்கணும். அதுக்குத் தான் இந்த வீட்டை விற்காம வச்சிருக்கேன். உனக்கு இங்க தான் ஊர் அறிய வளைகாப்பு கொண்டாடப் போறேன்.... லவ் யூ அக்கா....” அவன் அன்புடன் சொன்னதைக் கேட்டு நெகிழ்ந்து போனாள் கற்பகம். அவள் பட்ட கஷ்டங்கள் எல்லாம் தீருமா.? இல்லை நிர்மல் என்ற தங்கமான தம்பிக்கு தன்னால் இடஞ்சல் வருமா.? கை அசைத்து விடை பெற்றாள். “டிரைவர்....அக்காவை பத்திரமா கொண்டு விடு..”
“சரீங்க ஸார்..” என்றான் டிரைவர் பீட்டர். கார் விரைந்து போய்க் கொண்டிருந்தது. பென்ஸ் காரில் எதிரே வந்து கொண்டிருந்த பிரபு இதை பார்த்து விட்டான். அவன் முகம் கடுமையாக சிவந்தது.
‘எத்தனை முறை சொல்லியிருக்கேன்.. அந்த கற்பகத்தை இங்க கூட்டி வந்து சீராடாதேன்னு.. கேக்க மாட்டேங்கறான்.... ராஸ்கல்..’ பொருமியபடி அந்த வீட்டின் வாசலில் இறங்கி, ஆவேசத்துடன் உள்ளே சென்றான். இன்பா அவனைப் பார்த்து பயகங்கரமாக குறைத்தது. தன் எஜமானனுக்குப் பிடிக்காத ஆளாச்சே.. பிரபுவை விரட்டப் பார்த்தது.
“டேய்.... எருமை. இந்த நாய் சனியனை புடிச்சு கட்டு டா....” இன்பா அவன் மேல் எகிறி எகிறி நெஞ்சு வரை நின்று முன்னங் கால்களால் பிராண்டியது. “நிர்மல்..” என்று கத்தினான் பிரபு. குளித்துக் கொண்டிருந் நிர்மல், நீர் சொட்டச் சொட்ட.. இடுப்பில் ஒரு துண்டை கட்டிக் கொண்டு.. ‘இன்பா.... கோ சிட்..” என்று அதட்டியபடி ஓடி வந்தான். இன்பா பின் வாங்கியது.
“அந்த நாய் பிசாசை கட்டி வைக்க மாட்டியா.? ஓஓப்.. “ என்று மூச்சு வாங்க நெஞ்சில் கை வைத்து “என்னை நாயை விட்டு கிளோஸ் பண்ண முடிவு பண்ணிட்டியா.?” என்றான்.
“ஸாரி அண்ணா.... நீங்க வரேன்னு ஒரு ஃபோன் பண்ணி இருந்தா.. இன்பாவை கட்டியிருப்பேன்...”
“நா பேச வந்தது வேற.. ஆனா அந்தப் பொம்பளை எதுக்கு இங்க வந்தா.? அதை முதல்ல சொல்லு. அநாதை கழுதைக்கு இங்க என்ன வேலை.? ஏதாவது ரொட்டித் துண்டை போட்டு விரட்ட வேண்டியது தானே.? கண்ட கண்ட சனியன்களுக்கு இடம் கொடுக்க இது என்ன சத்திரமா.? புரியுதா இல்லையா உனக்கு.?”
நிர்மலின் பொறுமை போனது. எப்படி பேசுகிறான்.!
“இன்பா உங்களை அட்டாக் பண்ணது தப்பே இல்ல. எதுக்கு அக்காவை சனியன்.. அநாதைன்னு சொல்றீங்க.? நா உயிரோட இருக்கும்வரை அவங்க அநாதை இல்ல... நீங்க போலாம்..”
“டேய்.... இத பார். நா வீட்டை விலை பேசிட்டேன். அட்வான்ஸ் வாங்கப் போறேன். உன்னை அவங்க வீட்டை விட்டு நாயை விரட்டுவது போல விரட்டிடுவாங்க. உன் மரியாதையை காப்பாத்திக்க. சீக்கிரம் உன் திங்ஸ் எல்லாம் கேதர் பண்ணிக்கிட்டு, வீடு வந்து சேர். உன் அண்ணி சுகுணா உன்னை ஆசையோட எதிர்பார்த்துக்கிட்டு இருக்கா. நா வரேன்....”
“அண்ணா.... எந்த கொம்பன் வந்தாலும் நான் இந்த வீட்டை விற்க மாட்டேன். இது என்னோட சொத்து.”
“நிர்மல்.. நா நம்ம பாமினிக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணியிருக்கேன். எனக்கு பணம் வேணும். சித்தப்பா இப்படி என் வாழ்க்கைக்கு உலை வைக்கிறார்ன்னு அவ வருத்தப்பட்டா.. பரவாயில்லையா உனக்கு.?” பிரபு இப்படி பேசினதும் நிர்மல் கொஞ்சம் தடுமாறினான். பாமினி குழந்தையாக அவன் தோளிலும் மார்பிலும் விளையாடி இருக்கிறாள். பாசம்மிக்க சித்தப்பா அவன். தந்தை அடித்தால் அவனிடம் தான் ஓடி வருவாள்.. பாமினி அவன் செல்லப் பெண்.
“என்னடா.. பாமினியா இல்ல அந்த கழிசடையா.? ரெண்டிலே ஒண்ணு சொல்லு.. என் டைமை வேஸ்ட் பண்ணாதே....” பிரபு திட்டவட்டமாக சொல்ல நிர்மல் ஒரு கணம் விழித்தான். பிறகு அவன் அம்மா சாகும்போது சொன்ன வார்த்தைகள் வந்து மோதியது.. “கற்பகம் இனி உன் பொறுப்பு. அவளை நன்றாக பார்த்துக்கறது மட்டுமல்ல.. பிரபு அவளை ஏத்துக்கணும். ஊர் அறிய அவ உங்க வீட்டுப் பொண்ணுன்னு சொல்லணும்.” அம்மாவுக்கு சத்தியம் செய்து கொடுத்திருக்கிறான். அவன் மனம் இறுகியது.
“எனக்கு பாமினியும் முக்கியம்.. அக்கா கற்பகமும் முக்கியம். நா வீட்டை விற்க ஒருபோதும் சம்மதிக்க மாட்டேன்.”
“அப்படியா.. உன்னை வேறு மாதிரி தான் டீல் பண்ணணும்..” புயல் காற்று போல் வேகமாக மறைந்தான் பிரபு. டென்ஷன் ஆன நிர்மல் கண் செருக மயங்கி விழுந்து கைகால் உதற கிடைந்தான்.
நல்லவேளையாக மங்களம் மாமி வந்து கொண்டிருந்தாள்.
“அய்யோ கண்ணு என்னாச்சு.? அந்த கடங்கார அண்ணன் வந்திட்டுப் போனாலே பிரச்சனை தான். அவன் வேகமா காரில் போறத பார்த்தேன்....” மங்களம் மாமி புலம்பிக் கொண்டே நிர்மலிடம்.. “எழுந்துக்கோ ராஜா.... மாமியைப் பாரு..” என்றாள். அவன் நிலைமை சீர் ஆனதும் சொன்னான்..
“மாமி என்னால் உங்களுக்கு கஷ்டம். பாவம் நீங்க..”
“ஒண்ணும் பிரச்சனை இல்ல ராசா. உங்க அம்மா என்கிட்டே சொன்னதை நான் மறப்பேனா.? நீ தைரியமா இரு ராசா. என் புள்ளைக்கு இனி நீ தான் அம்மான்னு சொல்லிட்டுப் போச்சே.... அது ஆத்மா சாந்தி அடையனும். நா உனக்கு எப்பவும் துணையா இருப்பேன் கண்ணு. இரு சூடா டீ போட்டு கொண்டாறேன்..”
சூடான டீ இறங்கியதும் தெளிவு பெற்றான். “மாமி.... பாமினிக்கு கல்யாணம் நிச்சயமாகி இருக்காம். அதுக்கு பணம் வேணுமாம். வீட்டை விற்று தான் ஆகணும்னு அண்ணா அடம் பிடிக்கிறான்.... பாமினி கல்யாணம் என்னால் நின்னு போயிடக் கூடாது.. என்ன செய்யறதுன்னே புரியலை மாமி....”
“உங்க அண்ணன் பிடிவாதம் தெரிஞ்சது தானே.? பாமினிக்கு கல்யாணம் பண்ண காசு இல்லாமலா இருப்பான் பிரபு.? இது ஒரு சாக்கு. அப்ப தானே வீட்டை விக்க சம்மதிப்பே. நீ பாமினிக்கு ஃபோன் பண்ணி கேளு. பிரபு சொல்றது நிஜமான்னு தெரியும்....”
மாமி சமையல் வேலையை ஆரம்பிக்கச் சென்றாள். அவனுக்கு ஹேமாவிடம் பேச வேண்டும் போல் இருந்தது. ஃபோன் அடித்தது.
“ஹலோ....”
“நீங்க தானே நிர்மல்.?”
“ஆமா.... நீங்க.?”
“நா டிஸ்டிரிக்ட் கலெக்டர் சிவசைலம் பேசறேன். உங்க அண்ணாவுக்கு வரப் போகும் வருங்கால சம்மந்தி. என் மகன் மகேந்திரன் தான் உங்க வீட்டு மாப்பிள்ளையா ஆகப் போறார்.... நிச்சயதார்த்தத்துக்கு தேதி குறிக்கப் போறோம். நீங்க கட்டாயம் வந்து சிறப்பிக்கணும்.... அதுக்கு தான் கூப்பிட்டேன்....”
“ரொம்ப சந்தோஷம். அண்ணா சொன்னார். அவசியம் வந்திடுவேன். வாழ்த்துக்கள்......”
“அப்புறம் ஒரு விஷயம்.... நீங்க தப்பா நினைகலைன்னா..”
“சொல்லுங்க சிவசைலம் சார். என்ன விஷயம்.?”
“நீங்க வீட்டை விக்கப் போறதா உங்க பிரதர் சொன்னார். நீங்க எனக்கே கொடுக்கணும்ன்னு கேட்டுக்கிறேன். கன்சிடர் பண்ணுங்க. நா வச்சிடட்டுமா.? அந்த ஏரியாவிலே வீடு வாங்கணுமன்னு எனக்கு ரொம்ப நாள் ஆசை.”
“உங்களுக்கு கொடுக்கறதிலே ஆட்சேபம் இல்ல ஸார். ஆனா வீடு ரொம்ப பழசு. புதுப்பிக்க நிறைய செலவாகும். நீங்க அதுக்கு பதிலா.. இந்த ஏரியாவிலேயே பாலு பில்டர்ஸ் ஆரம்பிச்சிருக்கிற ப்ராஜக்ட்டில் புக் பண்ணிக்கோங்களேன். எதுக்கு சொல்றேன்னா.. அது பெட்டர் சாய்ஸ்... நவீன வசதிகள் கொண்ட தனி வீடுகள் தான். மூவாயிரம் ஸ்குவர் பீட்.. ஸ்பேஷியஸ்சா இருக்கும்....”
“அத போய் பார்த்தேன் நிர்மல் ஸார். மனசுக்கு பிடிக்கலை. கார்டன் இல்ல. என் பையனுக்கு கார்டன் வேணும். அதான். உங்க மக பாமினியும் என் மகனும் அங்க தான் வந்து வாழப் போறாங்க.... “
இதுக்கு என்ன பதில் சொல்வது என்று நிர்மலுக்குத் தெரியவில்லை. அண்ணன் பிரபு நல்லாவே காய் நகர்த்துகிறான்....
“ஹலோ.... லைனில் இருக்கீங்களா.?”
“இருக்கேன் ஸார்.. அண்ணா கிட்டே பேசிட்டு சொல்றேன்..”
“ஓ. கே. தேங்க்ஸ். மீட் யு சூன்.. பை.”
“பை..” புதுத் தலைவலி ஆரம்பமாகிவிட்டது.
இங்கே பாமினி தந்தையுடன் பேசினாள்.
“அப்பா.. எதுக்குப்பா சித்தப்பாவை வீட்டை விக்க சொல்லி கட்டாயப்படுத்றீங்க.? தாத்தா அவருக்குத் தானே எழுதி வச்சிருக்கார். சித்தப்பா பாவம்.... விட்டுக் கொடுங்க அப்பா.”
சுகுணா அவர்களை சாப்பிட கூப்பிட்டாள்.
“பூரி பன்னீர் குருமா ரெடி வாங்க...”
“அம்மா.. பாருமா. அப்பா சித்தப்பாவை கார்னர் பண்ணிட்டு இருக்கார்.” என்று பாமினி புகார் படித்தாள்.
“உங்கப்பா புத்தி ஏன் தான் இப்படிப் போறதுன்னு தெரியலை. அந்த கற்பகத்தை ஓழித்து கட்டணும்ன்னு கங்கணம் கட்டிக்கிட்டு இருக்கார். அதுக்குத் தான் வீட்டை விக்கணும்ன்னு அலையறார். அவ வந்து இருந்திடக் கூடாதாம். அவளும் இந்த வீட்டுப் பொண்ணு தானே.?” என்று நியாயமாக பேசினாள் சுகுணா.
“அறிவு கெட்ட முண்டம். நாளைக்கு நம்ம பொண்ணுக்கு பெரிய இடத்தில் கல்யாணம் ஆகணுமா வேண்டாமா.? கற்பகம் விஷயம் தெரிஞ்சா காறித் துப்புவாங்க. தலைநிமிர்ந்து வாழ முடியுமா.?”
அவன் கத்துவதை பார்த்து வாயை மூடிக் கொண்டாள் சுகுணா. ஒரு பக்கம் மகளின் கல்யாணம்.. மறுபக்கம் தம்பியாக அவள் நினைக்கும் நிர்மலின் நியாயம்.... இது எதில் போய் முடியும்.? என்று கவலைப்பட்டாள் சுகுணா.
சொந்தம் தொடரும்.