• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

காதல் எங்கள் சொந்தம் - 18

நிதனிபிரபு

Administrator
Staff member
பதினெட்டாம் அத்தியாயம்

காதல் எங்கள் சொந்தம்.... 18

மனம் குழம்பிவிட்டது. பாரம் ஏறிவிட்டது. இதயம் கணத்துவிட்டது... இப்படி ஒரு நிலையில் தான் மனிதர்கள் மனநல மருத்துவரை நாடுவார்கள். ஹேமாவுக்கு அந்த நிலை வந்தது.

காவ்யா சொன்ன மனநல மருத்துவர் டாக்டர் சுகாசினியைப் போய் பார்த்தாள் ஹேமா. “சொல்லு மா..” என்றார் புன்னகையுடன். அது ஒரு அபூர்வ புன்னகை. அது அவள் நெஞ்சுக்குள் இறங்கி ஒரு தைரியத்தைக் கொடுத்தது.

“டாக்டர்... சொல்லுங்க. என்னை எப்படி ஹாண்டில் பண்ணுவதுன்னு எனக்கேத் தெரியலை.... இரவு படுத்தால் தூக்கம் வர்றதில்லை. துக்கம் தான் வருது. என் அபூர்வ மெடிக்கல் பிரச்சனையால் என் காதலனை இழந்தேன்.... அப்பா ஒரு வரன் பார்த்து இருக்கார்..” அவள் முழு விவரமும் சொல்லும்வரை பேசாது கேட்டுக் கொண்டிருந்தார் சுகாசினி. அவரிடம் எல்லாவற்றையும் கொட்டித் தீர்த்தாள். அதுவே அவளுக்கு மெண்டல் ரிலீப்யாக இருந்தது. டாக்டருக்கு சுமார் ஐம்பது வயது இருக்கலாம். படித்த கம்பீரமான களை பொருந்திய சிரித்த முகம்.. எப்படி இந்த புன்னகை தோற்றம்?.. இவருக்கு பிரச்சனைகளே இருக்காதா.? வியந்தாள்.

“ஹேமா உங்க பிரச்சனை நீங்க உருவாக்கிக் கொண்டது இல்ல. சில பேர் இருக்காங்க.... ஸ்மூத்தா போயிகொண்டிருக்கும் வாழ்க்கையை அவங்களே சிக்கல் ஆக்கிட்டு வந்து நிப்பாங்க....”

“ஒரே ஒரு காதல்.. ரொம்ப நம்பிக்கை தந்த காதல்.. என்னோட பிரச்சனையை முதலிலேயே சொல்லிட்டேன். நோ ப்ராப்ளம்ன்னு சொன்னார். அதனால் மனசை முழுவதுமா பறிகொடுத்திட்டேன். கடைசி நிமிடத்தில் டிராக் மாறி போயிடுச்சு....எனக்கு எதிர்காலமே இல்லையா.? வாட் அபௌட் மை பியூசர்.? கேள்விக் குறியா.?”

“நோ.. நோ.. மனசை தளரவிடக் கூடாது ஹேமா. நீங்க மற்ற பெண்களை விட எந்த வகையிலும் குறைந்தவர் இல்லே. தாழ்வு மனப்பான்மை வரவே கூடாது.. ..”

“எப்படி டாக்டர்.? மனசு வலிக்குது.”

“அய்யோ நமக்கு இப்படி ஆச்சேன்னு சுணங்கிப் போவது இயற்கை தான்.. ஆனா ஹேமா உனக்குத் தெரியுமா.... உன்னைப் போல் கர்பப்பையை இழந்த பெண், குழந்தை பெற்ற அதிசயத்தை.. நம் நாட்டிலேயே செய்து காட்டி இருக்கிறார்.. டாக்டர் கமலா செல்வராஜ்.... பத்திரிகையில் வந்துச்சே பார்க்கலையா.?”

“நிஜமாவா டாக்டர்.?”

“இன்னொரு தகவல் சொல்றேன். கேசியா என்ற மாடலிங் பெண் 17 வயதுவரை பூப்பெய்தவில்லை. அவருக்கு ரத்தப் பரிசோதனை, பெண்களின் இனப்பெருக்க உறுப்புகளை ஆய்வு செய்யும் டிரான்ஸ்வஜைனல் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொண்ட பின் தான் புரிந்தது.. அவர் பிறக்கும்போதே கர்பப்பை இல்லாமல் பிறந்திருக்கிறார், மனமுடைந்து அழுதிருக்கிறார்..”

“நானும் அப்படிதான் டாக்டர். உண்மை தெரிஞ்சதும் பாத்ரூம் சென்று சத்தம் வராமல் கதறி அழுதேன்.... அம்மா இல்லாத குறை அப்பதான் ரொம்ப தெரிஞ்சுது....”

“ஹேமா...... டாக்டர்கள் உனக்கு ஹெல்ப் பண்ணுவார்கள். மத்தபடி நீங்க குடும்ப வாழ்க்கைக்கு தகுதி ஆனவர் தான். குழந்தையை தத்து எடுத்துக்கலாம்.... இல்லைன்னா இன்னொரு சாய்ஸ் இருக்கு. இறைவன் செய்த தவறை நிவர்திக்கும் பொருட்டு சயன்ஸ் முன்னேறி இருக்கு. எப்படி தெரியுமா.? உங்களுக்கு ஓவரீஸ் இருக்கு.... வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும். கன்சல்ட் ஏ ஸ்பெஷலிஸ்ட்....” பல நம்பிக்கையான வழிமுறைகளை சொல்லி, அவளை அனுப்பிவைத்தார் டாக்டர்.

புது மனுஷியாக வெளியே வந்தாள் ஹேமா. அவள் விடுதிக்கு வந்தாள். காவ்யாவிடம் டாக்டர் சொன்னதை சொன்னாள்.

“ஹேமா.... எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. உனக்கு ஒரு நல்ல துணை அமையும்ன்னு நா நம்பறேன்...” அங்க சசி கண்ணை கசக்கிக் கொண்டு வந்தாள். “என்னாச்சு சசி குட்டிக்கு.” என்று கேட்டாள் ஹேமா. காவ்யா பதில் சொன்னாள்.

“அதை ஏன் கேக்கற ஹேமா?. சசியின் தந்தையை மீண்டும் தொடர்பு கொண்டேன். அவன் ஹலோ சொல்லிவிட்டு.. சசி பற்றி சொன்னதும் அவன் தன் மனைவியிடம் ஃபோனைக் கொடுத்து விட்டான்... அவ என்ன சொன்னா தெரியுமா.?”

“குழந்தையை நா பார்த்துக்க முடியாதுன்னு சொல்லியிருப்பா..” கைப்பையை மேஜை மேல் வைத்துவிட்டு ரோசியை காப்பி கொண்டு வரச் சொன்னாள் ஹேமா.

ரோசி ரெண்டு கப் காப்பி கொண்டு வந்து வைத்தாள். அவள் போனதும்.. “குழந்தையை அனுப்பி வையுங்கன்னு சொன்னா..” என்றாள் காவ்யா. ஹேமா நம்பமுடியாமல் பார்த்தாள்.

“என்ன நிஜமாவா.? நிஜம்ன்னா.... சசிக்கு நல்ல காலம் தான்.”

“அடுத்து என்ன சொன்னா தெரியுமா.? அது தான் ஹைலைட்.”

“என்ன சொன்னா.? சஸ்பென்ஸ் வைக்காதே காவ்யா.”

“நா அவளை நல்ல குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்து விடறேன். எல்லா செலவுகளையும் பார்த்துக்கறேன். நீங்க அவளை வந்து பார்க்கும் கார்டியனாக இருங்க.. டீலான்னு சொல்றா.”

“ச்சே.... மொத்தத்தில் கழட்டி விடறதுக்கு சமம். பூசி மெழுகி சலியூஷன் சொல்றா மாதிரி ஒரு பாவ்லா....”

“அதே தான். சசி பொறுப்பை நாம ஏத்துப்போம். அவளுக்கு நல்ல உறவாக இருப்போம். அநாதை இல்லத்தில் வளர வளர அவளுக்கு தனிமை.... ஏக்கம்.... வருத்தம் எல்லாம் வரும்... சசிக்கு அந்த கஷ்டம் வேண்டாம்.. அந்த பெண்ணிடம்.. உங்க பெருந்தன்மைக்கு தேங்க்ஸ்ன்னு சொல்லி வச்சிட்டேன்..”

பத்து வயசிலேயே பணமும் உறவும் இல்லாமல்.. தன்னை பார்த்துக் கொள்ளும் வயசும் இல்லாமல்....சசி பாவம். இந்த சிறுமியின் நிலையை விட என் நிலை மேல்.. என்று எண்ணிக் கொண்டாள் ஹேமா. உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு.. கண்ணதாசன் கொடுத்த ஆல் டைம் ரெமெடி தான் ஞயாபகம் வந்தது அவளுக்கு. முட்டி மோதும் வாழ்க்கை தான்.. ஒரு கை பார்ப்போம் என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்.

“சரியான பதில் தான் காவ்யா. சசி இனி நம்ம பொறுப்பு.. சசி நீ இனி அழவே கூடாது. நானும் காவ்யா ஆன்ட்டியும் உன்னை நல்லா பார்த்துப்போம். உனக்கு ரெண்டு அம்மா கிடச்சாச்சு..” என்றாள் ஹேமா. குழந்தை முகத்தில் மின்னல் போல் ஒரு வெளிச்சம் தெரிந்தது. ரத்த சம்பந்தம் இருந்தால் தான் அன்பு காட்ட முடியுமா என்ன.? மனதால் உறவு கொண்டால் அன்பை வாரி வழங்க முடியுமே.! சசியை இருவரும் அணைத்துக் கொண்டார்கள். மகிழ்ச்சியாக சில நாட்கள் கழிந்தது. ஒரு நாள்....

“காவ்யா.... சசிக்கு புது உடைகள் தேவை. நா அவளைக் கூட்டிக்கிட்டு கடைக்குப் போறேன். நல்ல ரெடிமேட் ஷாப் சொல்லு.?” என்று ஹேமா கேட்க.. சசி ஹய்யா என்று குதித்தாள். மேகம் விலக்கின நிலவு போல் அவள் முகம் பளிச்சிட்டது.

“ரேணுஸ் பாஷன் நல்லாயிருக்கும். ப்ரியா காம்பிளெக்சில் இருக்கு. வெல்கம் ஹோட்டல் எதிரில் இருக்கும்.... என் கார் எடுத்திட்டுப் போ காவ்யா.”

“ஓ. கே.. சசி வா உனக்கு நா புது மாதிரி ஹேர் ஸ்டைல் பண்ணிவிடறேன்..” சசி மகிழ்ச்சியுடன் உட்கார்ந்தாள். அவளுக்கு சைட் வகிடு எடுத்து.... சின்னதாக முன்னால் இருபக்கமும் ஜடை பிண்ணிவிட்டு.. மீதி முடி முதுகில் புரளும்படி விட்டாள். கண்ணாடியில் பார்த்த சசி..

“ஐய்.. எங்கம்மா இப்படித்தான் பிண்ணுவாங்க..”

“வா.. வா.. வா.. கிளம்பலாம்.”

காரோட்டிக் கொண்டு அவள் கடை முன் நிப்பாட்டினாள். சசி இப்பொழுது உம்மென்று இருக்கும் சிறுமி இல்ல.... அன்பு நிழல் கிடச்ச பட்டாம்பூச்சி சசி.! சிறிது அன்பு காட்டினாலே மலரும் சசி.. இருவரின் கொள்ளை அன்பை அனுபவிக்க ஆரம்பித்ததும் சூரியகாந்தி பூ போல் அவர்களை சுற்றி வருகிறாள். ஹாய் ஸ்டெப் பாதர்.. நீ ஒரு அதிர்ஷ்ட்ட தேவதையை மிஸ் பண்ணிட்டே.. உனக்குத் தான் அது நஷ்டம்.. என்று அவனுக்கு மெஜெஜ் போட்டுவிட்டாள் சசி. ப்ளு டிக் வந்தது. ஆனால் பதில் ஏதும் இல்லை.

சசிக்கு பிடித்த ஆடைகளை வாங்கிக் கொண்டாள் ஹேமா.

“சசி.. பஜார் ரோட் போலாமா.? அங்க பேஸ்ட்ரி கானர் கடையில் சூப்பர் ஐஸ்கிரீம் கிடைக்கும்..”

போனார்கள். சப்போட்டா பிளேவரில் ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டார்கள். “ஆன்ட்டி.. பசிக்குது. சோளா பூரி என் பேவரட்..” பிஸியான வொடீஸ் ரெஸ்டோரன்ட் போனார்கள். ஆர்டர் பண்ணிவிட்டு உட்கார்ந்தார்கள். பக்கத்து டேபிளில் மூவர் வந்து உட்கார்ந்தார்கள். ஆர்டர் பண்ணிவிட்டு பேச ஆரம்பித்தார்கள். அவர்கள் பேச்சில் நிர்மல் பேர் அடிபட்டதும் கூர்ந்து கேட்டாள்.. பதட்டப்படாதே ஹேமா.. என்று சொல்லிக் கொண்டாள்.

“முத்து.... அந்த நிர்மல் பற்றி நீ என்ன நினைக்கற.?”

“ரவி.. அவன் ஒரு உடம்பு சரியில்லாதவன். மிரட்டினா போதும் பிட்ஸ் வந்து மயங்கிடுவான். நாம காரியத்தை சாதிச்சுக்கலாம்....”

“ஓ.கே நாளை இரவு பன்னிரெண்டு மணிக்குப் போலாம்..”

“அவன் நாய் நம்ம பதம் பார்த்திடுமே..”

“உனக்கு விஷயம் தெரியாதா.? அது இப்ப கற்பகம் வீட்டில் காவலுக்கு இருக்கு....”

“அப்படியா.? ரொம்ப சௌகரியமா போச்சு..”

சிரித்து பேசி சாப்பிட்டுவிட்டு கிளம்பினார்கள். ஹேமாவுக்கு பகீர்ரென்றது. அடப் பாவிகளா.. அண்ணன் தம்பிக்குள் உள்ள சண்டையை பயன்படுத்தி சதி வேலையில் இறங்கி இருக்காங்க போலிருக்கே.... அது என்ன சதி.?

சசியை விடுதியில் கொண்டு வந்து விட்டாள். காவ்யா சொன்னாள்..

“சசியும் நீயும் போன அவுட்டிங் பயங்கர சக்சஸ் போலிருக்கு..” சசி குதித்துக் கொண்டு ஐஸ்கிரீம் சாப்பிட்டதை பற்றி அளந்து கொண்டிருந்தாள். ஹேமா முகம் இறுகி இருக்க..

“ஹேமா.. என்னாச்சு.? ஒரு மாதிரியா இருக்கே.” என்றாள் காவ்யா.

“ஒன்னுமில்ல தலைவலி காவ்யா.” என்று சொல்லிவிட்டாள்.

“ரோசி.... இஞ்சி டீ போட்டு கொண்டுவா..” காவ்யா சொல்ல.. இஞ்சி டீ வந்தது. குடித்தாள் ஹேமா.

“மாத்திரை போட்டுக்கோ ஹேமா.”

“வேண்டாம் காவ்யா. ரெஸ்ட் எடுத்தா சரியாயிடும்.” என்றுவிட்டுப் தன் அறைக்குச் சென்றாள் ஹேமா. படுக்கையில் படுத்தாள். அந்த உரையாடல் திரும்பத் திரும்ப காதில் ஒலித்தது. நிர்மலை பார்க்கக் கூடாது, பேசக் கூடாதுன்னு சந்திரன் சொல்லியிருக்கான். காவ்யாவுக்கு தெரிந்தால் அங்க போக விட மாட்டாள்.

என்ன செய்வது என்று குழம்பிப் போனாள் ஹேமா. காவ்யாவிடம் சொல்வதா வேண்டாமா.? இவர்கள் என்ன செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள்.! ஒன்றும் புரியவில்லை. நிர்மலுக்கு ஆபத்து. பாவம் அவன். எப்படியாவது சந்திச்சு எச்சரிக்கை செய்து விட வேண்டும்... எப்படி வேடிக்கை பார்த்து கொண்டு சும்மா இருக்க முடியும்.? உதவி செய்தே ஆகவேண்டும் என்று எண்ணிக் கொண்டாள்.

மங்களம் மாமி ஃபோன் செய்தாள்.

“சொல்லுங்க மாமி....”

“எனக்கு பேரப் புள்ள பிறந்திருக்கு ஹேமாம்மா....”

ஆஸ்பத்திரி பேர் சொன்னாள்.. “பார்க்க வாங்கம்மா. காவ்யா அம்மாவுக்கும் ஃபோன் பண்ணி சொல்லியிருக்கேன். ரெண்டு பெரும் வாங்க.”

காவ்யாவும் அவளும் சென்றார்கள். அங்கே நிர்மலும் வந்திருந்தான். நிர்மலுடன் எப்படி தனியாக பேசுவது.?

சொந்தம் தொடரும்.
 
Top Bottom