இருபத்தி ஆறாம் அத்தியாயம்.
காதல் எங்கள் சொந்தம்.. 26
நினைத்ததை அடைந்தாலும் சிலருக்கு சந்தோஷம் இருக்காது. ஜேனெட் உள்ளுக்குள் கொதித்துக் கொண்டு தான் இருந்தாள். அதற்கு காரணம் அருண்....
“நீ என்னை மயக்கி தந்திரமா உன்னை கல்யாணம் பண்ண வச்சிட்டே. ஆனா ஒண்ணு ஜெனெட்.... என் உடலைத் தான் நீ அடைய முடியும்.... உள்ளத்தை அல்ல. திஸ் இஸ் கோயிங் டூ பீ ஏ லவ்லெஸ் மேரேஜ். வாழ்நாள் முழுக்க, நா உன்னை நேசிக்கவே சான்ஸ் இல்லே....” என்றான். பதிலுக்கு ஜேனெட், அவனையும் கலாவையும் இணைத்து அசிங்கமாக திட்டினாள். அவளை அடிக்க கையை ஓங்கினான். பிறகு கட்டுப்படுத்திக் கொண்டான். அதையும் விவகாரம் ஆக்கிவிடுவாள். அவள் அம்மா ஏரியா கவுன்சலர் வேறு.... பதவிக்கு பயப்பட வேண்டியிருக்கு. சே.. பயத்துடன் ஒரு கல்யாணமா.? என்று நொந்து போனான்.
“பைன் அருண்... உடலுக்கு ஒருத்தி, உள்ளத்துக்கு ஒருத்தி...” ஆங்கில கெட்ட வார்த்தை சொல்லி திட்டிவிட்டு.. “உன்னோட கலாவை நாட்டை விட்டே விரட்டறேன் பாரு....” என்றாள் வன்மத்துடன்.
வீடு தன் பேரில் பதிவாகிவிட்ட ஒரு சின்ன சந்தோஷத்துடன் கலா நர்ஸ் யூனிட் மேனேஜர் ஒலிவியா மில்லிங்ஸ் சை பார்க்கச் சென்றாள். ஒலிவியா அம்பது வயது பெண்மணி. பொதுவாக யூனிட் மேனேஜர் வெள்ளைக்காரியாகத் தான் இருப்பார்கள். அவர்களில் சிலர் ஏஷியன் நர்ஸ்களை மதிப்பதே இல்லை. ஏதாவது ஒரு காரணம் சொல்லி குற்றம் கண்டுபிடிப்பார்கள். இப்படியே நீ செய்தால்.. என்று மிரட்டுவார்கள்.
கதவை தட்டிவிட்டு ஒலிவியாவின் கேபினுக்குள் சென்றாள் கலா.
“ஹாய் கலா.... வாட்ஸ் அப்.?” என்று சிரித்தாள். எப்பவும் கடுகடுவென்று முகம் காட்டும் ஒலிவியா சிரித்தது ஆச்சரியமாக இருந்தது கலாவுக்கு....
“என்னோட.... வொர்க் விசா பத்தி....”
“சாரா தானே உங்க வொர்க் பிளேஸ் சூபர்வைசர்.? உன்னோட கிளினிகல் ஸ்கில்ஸ்.... இஸ் நாட் அப் டூ த மார்க் அப்படின்னு ரிப்போர்ட் கொடுத்திருக்கா சாரா....”
கலா திகைத்தாள். அவள் ஜெனரல் நர்ஸிங் தான் பண்ணிக் கொண்டிருந்தாள். நாலு வருஷம் எக்ஸபீரியன்ஸ் இருக்கு. ஆனா அதில் சிக்கல் என்னவென்றால்.... ரொம்பவும் குண்டான 180 கிலோவுக்கு மேல் உள்ள நோயாளிகளுக்கு சேவை செய்ததில் இவள் தோள்பட்டை வலிக்க ஆரம்பித்தது. வலது கையை உயர்த்தவே முடியவில்லை. எனவே மிட்வொய்வரி கோர்ஸ் படிக்க ஆரம்பித்தாள்., இதில் குழந்தைகளை டெலிவரி பண்ணுவது மட்டும் தான் வேலை. தோள் வலி இருக்காதே.! அதனால் தான் படிக்க ஆரம்பித்தாள். கோரஸ் முடிந்துவிட்டது. கடைசியில் அவளுக்கு தகுதி இல்லை என்று பெயில் பண்ணிவிட்டார்களே!. நன்றாகத் தானே செய்தாள்..... கிளினிகல் ஸ்கில்ஸ் குறைபாடு என்று காரணம் சொல்வது சுலபம். யாரும் கேள்வி கேட்க முடியாது. மற்ற டெஸ்ட் பாஸ் பண்ணினாலும் இதில் பாஸ் செய்தால் தான் வேலை பார்க்க முடியும். சரியான இடத்தில் கை வைத்து விட்டார்கள்.
“ஸோ.. கிளினிக்கல் துறையில் தொடர்ந்து வேலை செய்து, உன் திறமையை நிரூபி. பிறகு தான் உனக்கு பி. ஆர் கிடைக்கும்..”
கண்ணீர் முட்டி நின்றது. வொர்க் விசா எக்ஸ்டெண்ட் ஆக வாய்ப்பில்லை. பி. ஆர் கிடைக்க, கிளினிகல் ஸ்கில்ஸ் திரும்ப ரன் பண்ணனும். அவ விசா கான்செல் ஆகிவிட்ட பின் அவள் எப்படி தொடர முடியும்.?
தலையில் கைவைத்து நொந்து போனாள் கலா. அவள் தொங்கிய முகமும், கலங்கிய கண்களுமாக காபின் விட்டு வெளியே வந்த போது வசுந்தரா எதிர்பட்டாள்.
“என்னாச்சு கலா.? அந்த வெள்ளைக்காரிச்சி என்ன சொன்னா.? கொஞ்சம் கூட நியாயமா அவ நடக்க மாட்டாளே....”
“என்னை வேணுமுன்னே பெயில் பண்ணிவிட்டா வசு.... என்ன செய்யறது.? என் எதிர்காலமே போச்சு. ஊருக்கு மூட்டைக் கட்ட வேண்டியது தான்...” வாய்விட்டு அழுதுவிட்டாள் கலா.
“கலா.. எல்லாம் அந்த ஜேனெட் அம்மாவின் வேலை..”
“என்ன சொல்றே வசு.?”
“நேத்து நீ லீவ். வரலை. ஜேனெட்டின் கவுன்சிலர் அம்மா வந்துச்சு. ஒலிவியா பூதத்துடன் ரொம்ப நேரம் பேசிட்டு இருந்துச்சு. ஜேனெட் பழி வாங்கிட்டா. நீ உன் யூனிவர்சிட்டிக்கு ஃபோன் போட்டு சொல்லு. அவங்க இந்த அநியாயத்தை தட்டிக் கேக்க வாய்ப்பு உண்டு....”
“அப்படியா.?” சிறிது மலர்ச்சி அடைந்தாள். உடனே ஃபோன் போட்டுக் கேட்டாள். வளவளன்னு பேசிட்டு.... நீ மீண்டும் ஜெனெரல் நர்சிங் யூனிட்டில் வேலை செய்யலாமே.... என்று சொல்லி பிரச்சனையை அவளிடமே விட்டுவிட்டார்கள். உதட்டை பிதுக்கினாள் கலா.
“ஒரு வழி இருக்கு கலா....”
“நிஜமாவா சொல்றே.? என்ன என்ன வழி.?” ஆர்வத்துடன் கேட்டாள்.
“சொன்னா நீ தப்பா எடுத்துக்கக் கூடாது..”
“நீ முதல்ல சொல்லு....டென்ஷன் பண்ணாதே வசு.”
“கைவசம் ஒரு வழி இருக்கு உனக்கு. நிரஞ்சன் ஆஸ்திரேலியா நாட்டு சிட்டிசன். அவரை கல்யாணம் பண்ணிக்க.. நீ இங்கேயே இருக்கலாம். ப்ராப்ளம் சால்வ்ட். பிறகு ஒரு வருஷம் கழித்து டிவோர்ஸ் பண்ணிடலாம்.... அவர் காவ்யாவை காதலிக்கறதாலே டிவோர்ஸ் பத்தி சொன்னேன்.. என்ன சொல்றே.? இது தான் இப்ப உனக்கு ஒரே வழி..”
“வசு.. உளராதே. பாவம் அவர் உயிரை நா காப்பாத்தினதுக்கு.... கூலி கேக்கற கேவலமான ஜென்மம் நா இல்ல வசு. காதல்ல நா அடஞ்ச தோல்வியை அவரும் அடையனுமா.? என் விதி படி நடக்கட்டும்.”
வீடு நோக்கி காரை ஒட்டிக் கொண்டிருந்தாள் கலா. அவள் கண்களிலிருந்து நீர் சத்தமின்றி வழிந்து கொண்டிருந்தது. அவளுக்கு ஒரு புறம் தன் நிலை கண்டு சிரிப்பு வந்தது. அழுது கொண்டே சிரிப்பது பற்றி கண்ணதான் ஒரு பாட்டு எழுதியிருப்பார். சிலர் சிரிப்பார், சிலர் அழுவார்.. நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்.. காரும் வீடும் உனக்கு சொந்தம்.. சிரி. ஆனா நாடு தங்க விடலையே அழு.... காரையும் வீட்டையும் வைத்துக் கொண்டு என்ன செய்வது.? தங்க முடியலை என்றால்.? விபத்து ஏதும் இல்லாமல் அவள் வீடு வந்து சேர்ந்தது பெரிய விஷயம். அவள் வந்ததும் கதவு திறந்து விட்டான் நிரஞ்சன்..
“என்னாச்சு கலா.? அருண் ஏதாவது சொன்னானா.? ஏன் ஒரு மாதிரியா இருக்கே.? லஞ்ச் பிரிப்பேர் பண்ணிட்டேன். சாப்பிடு.” என்றான் நிரஞ்சன் அன்புடன்.
“நீ என் மேல் ஏன் இவ்வளவு அன்பா இருக்கே நிரஞ்சன்.? உன்னை கண்டபடி பேசி காயப்படுத்தினேன். அப்படியும் நீ.... யூ ஆர் கிரேட்.”
“அதை விடு கலா. இப்ப என்ன தான் பிரச்சனை.? சொல்லு.”
பதில் ஏதும் சொல்லாமல் கலா.. அவள் உடமைகளை பாக் பண்ண ஆரம்பித்தாள். பேச என்ன இருக்கு?. ஆறு வருஷம் வாழ்ந்த நாடு.... கலர் கலர் கனவுகள் காண வைத்த நாடு.. துரத்திவிடுகிறது. பழகிய இடம்.. பழகிய நட்பு.. பழகிய சொகுசு.. உயிரான காதல் எல்லாம் அவளை விட்டுப் போகிறது.. எப்படி பேசமுடியும்.? ஊமை போல் அங்கும் இங்கும் அலைந்து பொருட்களை சூட்கேசில் அடுக்கினாள்.
“கலா.... உன்னைத் தான்.... என்னாச்சு உனக்கு.? உன்னைப் பார்க்கவே பாவமா இருக்கு. உனக்கு என்ன வேணும் சொல்லு.?” என்றான் நிரஞ்சன் பரிதவிப்புடன்.
“ஒரு முழக் கயிறு வேணும்... எல்லாம் போச்சு நிரஞ்சன். நா செத்துப் போக ஆசைப்படறேன். எனக்கு ஹார்ட் அட்டாக் வந்து உயிர் போனால் தேவலை..” கட்டிலில் தொம்மென்று உட்கார்ந்து கதற ஆரம்பித்தாள்.
“கலா.. கலா நா இருக்கேன் உனக்கு. ப்ளீஸ் அழாதே.. எதுவான சரி பண்ணிடலாம். தூண் மாதிரி இருக்கேன்.. நீ என் கண் முன் உடஞ்சு போறது எதுக்கு.?” என்று உண்மையான ஆதாங்கத்துடன் கேட்டான்.
“கடவுளாலே கூட ஒண்ணும் செய்ய முடியாது நிரஞ்சன். நீ என்ன செய்ய முடியும்.? எனக்கு வொர்க் விசா இல்லை. நா கிளம்ப வேண்டியது தான்... தடக்கென்று எழுந்தவள்....
“ஊருக்கு பிளைட் புக் பண்ண வேண்டியது தான்.” என்று லாப்டாப்பை எடுத்தாள். “சிங்கப்பூர் ஆர்லைன்ஸ் கிடைக்கும்.”
“நில்லு நில்லு.... எதுக்கு நீ ஊருக்குப் போறது பத்தி நினைக்கிறே.?”
சுருக்கமாக ஒலிவியா மூலம் ஜேனெட் அம்மா செய்த சதியை சொன்னாள். “இனி நா ஊருக்குப் போகத்தானே வேணும்.”
“அடக் கடவுளே. என்னால் நம்பவே முடியலை. இப்பவெல்லாம் ஆறு வருஷம் ஆகியும் பி.ஆர் கிடைகலை என்பது அதிர்ச்சியா இருக்கு. ரூல்ஸ் எல்லாம் மாறிட்டு வருது...” அவனுமே இடிந்து போனான். வொர்க் விசா எக்ஸ்டென்ஷன் ஆவதும் இந்த ஜேனெட்டால் தடை ஆகிவிட்டது.
“ஊருக்குப் போய்.. எனக்கு அங்க யாருமே இல்ல.” இவள் இப்படி புலம்பிக் கொண்டிருக்கும் போதே ஜேனட் ஃபோன் வருகிறது..
“இப்ப எதுக்கு என்னை கூப்பிடற.? உன் வெற்றியை கொண்டாடிக்க.” என்றாள் கலா. அமைதியாகப் பேசினாள். உள்ளுக்குள் பொங்கிக் கொண்டு வந்தது. திட்டி ஆகப் போவது என்ன.? ஜேனட் பேய் போல சிரிப்பது கேட்டது. அயோமுகி என்ற அரக்கியை அடக்க முருகப் பெருமான் வந்தார். இந்த அயோமுகியை அடக்க யார் இருக்கா.? என்று பல்லைக் கடித்தாள் கலா.
“நீ வாழ நினைப்பது என்னோட அருணுடன். அது வாழ்க்கையா இருக்காது நரகமா தான் இருக்கும்.. ஏன்னா அவன் மனசில் நா மட்டும் தான் இருக்கேன்.” என்றாள் கலா.
“என்ன வேணா சொல்லிக்க. அருண் என்னோட கீ செயின். எனக்கு அருண். உனக்கு கார் பங்களா.. ஹா ஹா. பட் நோ விசா. ஐ பிட்டி யூ...” மறுபடியும் அருவருப்பான வார்த்தைகளை விட்டாள். பிறகு அவள் சொன்னாள்..
“ஆஸ்க் தட் இடியட் நிரஞ்சன் டூ மேரி யூ.... கேன் யூ.? ஹா ஹா நோ. யூ கான்ட். உனக்கு நன்றாக வேணும்.... நீ கஷ்டப்பட பிறந்தவள்.. பை.” ஜேனெட் குரலில் வன்மம் தீர்த்துக் கொண்ட திருப்தி தெரிந்தது.
“ஜேனெட்.... நா எந்த தப்பும் பண்ணலை. நான் கஷ்டப்பட அந்தக் கடவுள் விட மாட்டார். என் மேல் எதுக்கு பாயற.? எனிவே, ஐ விஷ் யூ வெல்...” என்று சொல்லி ஃபோனை வைத்துவிட்டாள். அருணின் சில நிமிஷ சலனம் அவள் வாழ்வையே புரட்டிப் போட்டுவிட்டது.
“அந்தப் பெண்ணின் மனசு இவ்வளவு வக்கிரம் பிடித்ததா.? கலா இனி கண்ணீருக்கு வேலை இல்லை. எனக்குத் தெரிந்த வழியில் நீ இங்கயே தங்க என்னால் ஆனதை செய்றேன். நீ கவலைப்படாதே.”
“அது முடியுமா நிரஞ்சன்.?”
“முயற்சி செய்வதில் தவறு இல்லையே. உனக்காக.. நம் நட்புக்காக இதை செய்ய மாட்டேனா.? சீர் அப். இன்னும் ஒரு மாசம் இருக்கே.”
கலா அவனை கடவுளை பார்ப்பது போல் பார்த்தாள்.
“எனக்கு பி. ஆர் கிடைக்குதோ இல்லையோ.. எனக்கு நீ இருக்கே. நா உன் ஆதரவை பிடிச்சிட்டு சரியாயிடுவேன். ரொம்ப நன்றி நிரஞ்சன். நோ மோர் டியர்ஸ்.” என்று சிரித்தாள். அவள் இப்போது அழுது கொண்டே சிரிக்கவில்லை. நிஜமாலுமே சிரித்தாள். அது தான் நட்பின் சக்தி. எதையும் தாங்கலாமே இப்படி ஒரு நட்பு இருக்கும்போது.!
சொந்தம் தொடரும்.