14
வனி பரபரத்தாள்.
“நான் உங்ககிட்ட கயல் பத்தி சொன்னதை நீங்க கவனிச்சிங்களா?”என அவசரமாக கேட்டாள் வனி.
“நான் கவனிச்சது கவனிக்காதது இருக்கட்டும். முதலில் நீ நான் சொல்றதை கவனி. நம்ம ரெண்டு பேருக்கும் நடுவில வேற யாரும் வரக் கூடாது. ஓகே. மனசிலயோ? நெக்ஸ்ட் இம்போர்ட்டண்ட் மெசேஜ் கயல் வேலைக்கு வந்தவங்க மட்டும் தான். அது மட்டும் தான் எனக்கும் அவங்களுக்கும் இப்போ உள்ள சம்பந்தம்.
நான் அவங்களுக்கு அண்ணன் முறை தான். அவங்க மனசுல என்ன இருக்குனு எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு..” என்று அவன் சொல்லிக் கொண்டு இருக்கும் போது உள்ளே பாய்ந்தாள் வனி. குறுக்கே பேசக்கூடாது என்ற சட்டம் அவளுக்குக் கிடையாது அல்லவா?
“அதைத்தான் நானும் கேட்கிறேன். அவளுக்கு உங்க மேலே ஏதாவது விருப்பம் இருக்குமா?”
அவள் மீண்டும் ஆரம்பிக்கவும் அவன் அவசரமாக இடையிட்டான்.
“அப்டிலாம் இல்லடி” என்று பதறினான். ஏற்கனவே அவளின் முன்கதையை கேட்கும் போதே இவள் புத்தி போன போக்கு தெரிந்து இருந்தது. இப்போது நேரிடையாக வெட்டென்று சொல்லவும் ஆடிவிட்டான்.
அவன் சொன்னதை காது, மூக்கு, தொண்டை என்று எதிலும் ஏற்றாமல், “எனக்கு சந்தேகமா இருக்கு. அதனால தான் அப்புறமா உங்களை பார்க்கிறத முடிஞ்ச வரை நிறுத்திட்டேன். தவிர அதுக்கு வாய்ப்பும் இல்லை. எப்பவாச்சும் உங்களை இல்லத்துல பாப்பேன். நீங்க எங்க குடும்பத்துக்கு ஏற்கனவே நல்லா தெரிஞ்சவர். உங்ககிட்ட உங்களை தெரியாத மாதிரி முகத்தை வச்சிட்டு எப்படி போக முடியும்? அப்படியும் கிடைச்ச கேப்பில கயல் பத்தி அப்பப்போ…”
அவன் சட்டென்று எழுந்து விட்டான்.
தன் பேச்சை நிறுத்திவிட்டு வனி குழப்பதோடு எழ, பேரர் மீண்டும் வந்தார். இவர் வேறொரு பேரேர்.
“சார் மேடம் என்ன சாப்பிடுறீங்க? ஆர்டர் பண்ணிட்டீங்களா? என கேட்டார்.
“அப்புறம் சாப்பிடுறோம். இப்போ ஆர்ட் கேலரி போயிட்டு வர்றோம்” என்றவனுக்கு திருப்தியாக தலையாட்டினார் அவர்.
நிலா பார்க்கில் அனைத்து பொழுது போக்கு அம்சங்கள், கலைப்பொருள் விற்பனை, புத்தகக் கண்காட்சி, உணவகம், பேக்கரி, பழமுதிர் நிலையம், லஸ்ஸி பேலஸ் முக்கியமாக தனி தேநீர் கடை எல்லாம் உண்டு. உணவகத்தில் டீ காபி மட்டும்தான். டீ கடையில் வித விதமான தேநீர் கிடைக்கும். காஷ்மீர் டீ, ராஜஸ்தானி டீ என்று பல வகைகள் கிடைக்கும். இவ்வளவு வசதிகள் கொண்ட பார்க்கின் ஓனர்தான் யார் என்று தெரியவில்லை.
இங்கே இல்லாவிட்டால் அங்கே என்று வியாபாரம் நடந்தால் சரி அவர்களுக்கு. அதுதான் அந்த பேரரின் திருப்திக்கு காரணம்.
“ஆர்ட் கேளரியா? அங்கே எதுக்கு? டீ குடிக்க வேண்டாமா?”
“நான் ஜூஸ் வாங்கித் தர்றேன். வந்து.. கொஞ்சம் சூடா இருக்குதுல்ல” இரண்டாம் வாக்கியம் எதற்கு சொன்னான் என்பது அவனுக்குதான் தெரியும்.
“சரி போவோம். விண்டோ ஷாப்பிங் தான். சரியா? ஓவரா செலவு பண்ணா அப்பா திட்டுவார் “
“ம்? அவர்தான் ஊர்ல இல்லியே?”
“அதுக்காக அவர் சொன்னதை மீறலாமா?”
“அப்போ அவர் என்ன சொன்னாலும் மீற மாட்டியா?”
“சொல்றதைப் பொறுத்து”
அவனுக்கு இன்னும் கலங்கியது. இவள் எப்போது எப்படி முடிவெடுப்பாள் என்று குழப்புகிறாளே? எப்படியும் அப்பா அம்மா அண்ணன் எல்லோரையும் ஒரு மதிப்பில் வைத்து இருக்கிறாள். இவன் நிலைமை அவளிடம் அந்த அளவு முன்னேறினால் அதுவே பெரிய விஷயம்.
அப்படியே பேசிக் கொண்டே நடந்து கலைப் பொருட்கள் காட்சியம் மற்றும் விற்பனையகத்துக்கு வந்து விட்டார்கள்.
வனி அங்கே வந்ததும் இவனை விட்டுவிட்டு கலைப் பொருட்களை பார்வையிட ஆரம்பிக்க அவன் தலையில் கை வைத்துவிட்டான்.
அங்கே நிர்வாகியாக நின்றவரை அணுகி கொஞ்சம் பேசி முடித்தான்.
“வனிமா, அந்த பித்தளை உருளி நல்லா இருக்குல்ல? நீ அது பக்கத்துல நில்லு. நான் போட்டோ எடுக்கறேன்” என்றான் தன் கைபேசியை எடுத்துக் கொண்டே.
“போட்டோவா? இங்கே போட்டோ எடுக்க விட மாட்டாங்களே?” அவள் ஆச்சர்யமாகக் கேட்டாள்.
“அது நமக்கு ஸ்பெஷல் பர்மிஷன். நீ நில்லு” என்று சத்தம் வராமல் ஒரு போட்டோவை எடுக்க,
“அப்போ நான் செல்ஃபி எடுக்கலாமா?” ‘துறு துறு’ என்று தன் போனை எடுத்தாள்.
கெட்டது திட்டம்!
“ஒரு போன்தான் அலவ்ட் வனிமா. செல்ஃபீ தானே? வா எடுப்போம்” என்று அவளோடு சேர்ந்து எடுத்த சுயமி அவன் வாழ்வில் அவனுடைய முதல் கொண்டாட்டம். காதலுக்குதான் இன்னும் முழு முடிவு சொல்லவில்லையே அவள்?
அப்புறம் சுயமிகளாக எடுத்துத் தள்ள அவனுக்கும் ஆசைதான். அவள் விடவில்லை. கொஞ்ச நேரம் சுற்றிவிட்டு “கிளம்புவோமா?” என்றாள்.
“ஓகே. வா ஜூஸ் சாப்பிடலாம்” என அங்கே அழைத்துப் போனான்.
“ரொம்ப லேட் ஆகிடுச்சு. அப்புறம் கடைலருந்து அம்மாவுக்கு சொல்லுவாங்க” - அவள் தயங்கினாள்.
“அவங்களே கூப்பிட்டு சொல்லுவாங்களா என்ன?” - இவன்
“இல்ல. அம்மா கடைக்கு போன் பண்ணா சொல்ல மாட்டாங்களா?”-
அவள்
“கடைக்கு வேற நம்பர் இருக்கா என்ன?”
“ம். இருக்கே? கஸ்டமருக்கு அந்த நம்பர் தான் கொடுப்போம். உங்களுக்குத் தெரியாதா?”
“தெரியும். ஆனா இல்லை. அது இருக்கட்டும், மலர் மேடம் உனக்கு நேரே போன் பண்ணாம ஏன் கடை நம்பருக்கு கூப்பிடுறாங்க?”
“இதுலயும் கூப்பிடுவாங்களே? அந்த நம்பர்க்கு ஒருவாட்டியாவது கூப்பிட்டுருவாங்க. அது தொழில் அதிபர்னு பில்டப் பண்ணி வச்சு இருக்கேன்ல? அதுக்கு வம்பு வளக்கறதுக்கு கூப்பிடுவாங்க. இங்கே என்ன ஜூஸ் இருக்கு?”
“எல்லா ஜூசும் இருக்கு மேம்” என்று கேட்லாக் எடுத்துக் கொடுத்தசிப்பந்தி சீருடையில் இருந்தாலும் கெத்தாகத்தான் இருந்தான். வயது முப்பது கூட்டல் இருக்கும் போல. கேட்லாக்கை மேலோட்டமாகப் பார்த்துவிட்டு,
“கரும்பு ஜூஸ் இருக்கா?” என்று நிஜமாகவே சீரியஸாக கேட்டாள் வனி.
இல்லத்தில் வளர்ந்தபோது கூட இல்லாமல் இப்போது, ‘எம்மா நீ எங்கம்மா இருக்க? என்ன விட்டுட்டு எங்கம்மா போனே? என்னைக் காப்பாத்தும்மா’ என அலறி விழித்துச் சிரித்தான் மொழி.
அப்போது அவனுக்கு அலைபேசி அழைப்பு வர மொழியின் முகம் பூரா புன்னகை.
‘பாலோ பண்றியாடா பாடி சோடா’
“ஒரு போன் பேசிட்டு வர்றேன். நீ ஆர்டர் பண்ணு. வந்திடறேன்” என்று கொஞ்சம் தள்ளிப் போனான் அவன். அதை அரை குறையாகப் பார்த்தாள் வனி. அவன் பின்னே போக விடாமல் இந்தக் கடைப் பையன் தடுத்துக் கொண்டிருந்தான்.
மெல்லிதாக புன்னகைத்த அந்த சிப்பந்தி தணிவாக ,“சாரி மேம், சுகர் கேன் ஜூஸ் இல்லை. அண்ட் வீ நோட் இட் மேம். ப்ளீஸ் ஹவ் சம் அதர் ஜூஸ் மேம்” என்றவன், “வேற மேம்? இங்கே மாக்டேயில் இருக்கு. ஸ்குவாஷ் இருக்கு. மொஜிட்டோ இருக்கு” என்றான்.
“ஜூஸ்?” என்றாள் கறாராக.
ஜூஸ் ஒன் பை டு மேம்”
“அப்டின்னா?”
“எந்த ஜூஸ் வாங்கினாலும் அதை ஒன் பை டு வா கொடுப்போம்”
“பத்துமா?”
“ஜாஸ்தியாவே இருக்கும் மேம்” என்றவன் விலையும் ஜாஸ்தியாக இருக்கும் என்று சொல்லவில்லை. அது என்ன தேவைக்கு?
“அது இருக்கட்டும். நான் கேட்டது?”
“அந்த ஜூஸ் இல்லை மேம்”
“அப்போ எதுக்கு எல்லா ஜூசும் இருக்குன்னு சொல்றீங்க”
“சாரி மேம்”
“சாரியை வச்சு என்ன பண்றது? போய் ரெண்டு லெமன் ஜூஸ் கொண்டு வாங்க” என்றாள் போனால் போகிறது என்று.
போன் பேசி முடித்தவன் வந்து சேர்ந்தான்.
‘இப்பவாவது வந்தியே ராசா’ என்பதாகப் பார்த்தான் அந்த பையன்.
“போன்ல யாரு?”
இவன் சிக்கிட்டான்! என்று ஜூஸ்காரன் ஜூஸ் கொண்டுவர ஓடிவிட்டான்.
“தெரிஞ்சவர் வனிமா“
“அது ஆமா தான். இல்லன்னா இங்கியே ராங் நம்பர்னு சொல்லி இருப்பீங்க. யார் அந்த தெரிஞ்சவர்? அபிசியல்னா முகத்துல இவ்ளோ லைட் எதுக்கு?”
“இவ்ளோ நோட் பண்றியா என்னை?”
காதல்தான் வழிந்தது அவன் குரலில். அவளுக்கு அவன் கேட்டது மட்டும் புரிந்தது.
“அதுதான் ஊருக்கே தெரியுதே? உங்க முகத்தில தெரிஞ்ச வெளிச்சத்தில ஷாப்ல எரிஞ்ச லைட்ட எல்லாம் அணைச்சிட்டாங்க” என எளிதாக பதிலை முடித்துக் கொண்டாள்.
“பகல்ல அவங்க லைட்டே போடலியே செல்லம்”
“நல்லா யோசிச்சு பாருங்க”
அது உண்மைதான். அந்தக் கடையை கொஞ்சம் இருளோ என்றுதான் கட்டி இருந்தார்கள். ஆங்காங்கே பெரிய மஞ்சள் பாலுனுக்குள் லைட் போட்டு இருந்தார்கள்.
என்ன குடிக்கிறோம்னு தெரியாமயே குடிச்சிட்டு போயிரனும் போல என்று வரும் போது நினைத்து இருந்தான் மொழி.
“அதை விடு. ஜூஸ் சொன்னியா?”
“ம். லெமன் ஜூஸ்”
“ஏன்? உனக்கு அண்ணாசி ஜூஸ் பிடிக்குமே? சொல்ல வேண்டியது தானே?”
“அதுக்கு லேட் பண்ணுவாங்க. அது இருக்கட்டும். இன்னும் கயல் பிரச்சனை தீரலை” நேரே விஷயதுக்கு ஒருவழியாக வந்தாள். அதாவது அப்போது தான் வர விட்டான் அவன்.
என்ன வாய் அவள் வாய்? கொஞ்சமாவது இவனை பேச விடுகிறாளா? அவள் சிந்தையை மாற்ற ஆர்ட் கேளரி கூட்டிப் போனால் அங்கே அவனை மறந்து விட்டாள். போட்டோ பிடித்தாலும் கவனமாக இவனை தவிர்த்து விட்டாள்.
இங்கே சூழல் ரம்மியமாக இருக்கும் என்றுதான் கூட்டி வந்தான். இங்கும் ஜூஸ் நியாயம்.
நடுவே மதிவாணன் வேறு! எங்கே கூட்டிட்டு போனாய் என்று!
தமிழிடமே சொன்னவன் மதிவாணனிடம் சொல்லவில்லை. ஆனால் அவன் கண்டுபிடித்து இருந்தான். அதனால் தான் இன்று அவளுடன் வரவில்லை என்று மொழி ஊகித்தான். இருந்தாலும் அண்ணன் கடமை இருக்கிறதே? போனை போட்டு விட்டான்!
மதிவாணனுக்கு நல்லதொரு பதிலைச் சொல்லி முடித்துவிட்டு வந்தால், அந்த சிப்பந்தியைக் காணோம்.
அந்த பையனிடம் என்ன பேசினாளோ பாவம்! அவனை பையன் என்று சொல்ல முடியாது. அவனும் ஹீரோ போல் தான் இருக்கிறான்.
இன்னும் இவள் கயலை வேறு விடவில்லை. ஆசையாக பேசலாம் என்று வந்தால் இவள் மீட்டிங் போட்டு குறுக்கு விசாரணை செய்கிறாள்.
இதற்கு ஒரே வழி : சரணாகதி தான். எவன் எப்படி போனால் என்ன என்று உண்மைச் சொல்லிவிட வேண்டியது தான்.
அவன் தீர்மானம் எடுக்க எடுக்க இவள் மீண்டும், “எனக்கு அவளை..” என்க,
“நிறுத்துறியா?” என்று பல்லைக் கடித்தான் அவன்.
அவளா அசருவாள்?
“அவளைச் சொன்னா உங்களுக்கு ஏன் கோபம் வருது?” என குதித்தாள்.
“அடியேய் அவங்க உனக்கு அண்ணியா வந்தாலும் வருவாங்கடி” என ஒருவழியாக அவள் வாயை மூடினான்.
வனியின் வாய் மூடினாலும் கண்கள் மகிழ்ச்சியில் அகலமாக விரிந்ததில் தன்னை மறந்த மொழி அதில் மூழ்கினான்.