26
பதிவுத் திருமணம் முடிந்த கையோடு இரண்டு ஜோடிகளுக்கும் பெரிய வரவேற்பை ஏற்பாடு செய்திருந்தார் தமிழ்.
நிலா காலம் கோலாகலம் பூண்டு இருந்தது. அவர்கள் வீட்டில் இரு திருமணங்கள் அல்லவா?
ஜார்ஜ் வில்லியம்ஸ் மொழியை ஆனந்தத்தில் அணைத்துக் கொண்டார்.
“நல்லா இருடா. குடும்பம் குழந்தை குட்டின்னு சந்தோசமா இரு” என மனதார வாழ்த்தினார்.
“சந்தோஷம் சார். இனி இந்த இல்லத்துக்கு சேவை செய்ய அவங்களும் இருப்பாங்க” மனம் பூரித்துச் சொன்னான் மொழி.
திருமண வேலைகள், ரிசப்சன் வேலைகள் போக அன்றாட வேலைகள் என்று அலைச்சலில் உழன்ற அறுவரும் ரிசப்சன் முடிந்ததும் வீட்டுக்குப் போய் உட்கார்ந்து ‘ஹப்பா’ என்றனர்.
உண்மையில் திருமணம் என்ற புளகாங்கிதம் பெரிதாக ஒன்றும் ஆரம்பத்தில் இல்லை மணப்பெண்கள் இருவருக்கும்.
ஆனால் திருமணத்திற்கான சடங்குகள் ஒவ்வொற்றையும் நினைக்க நினைக்க அவை வரிசையாக நடக்க நடக்க எல்லையில்லா மகிழ்ச்சியிலும் வெட்க பெருமிதத்திலும் மிதந்தவர்கள்
ஒருவருக்கொருவர் பேச்சின்றி மணப்பெண் தோழி ஆகினர்.
ஆரம்பத்தில் எவ்வளவுக்கு எவ்வளவு வனியும் கயலும் விறைத்துக் கொண்டு நின்றார்களோ அவ்வளவுக்கவ்வளவு நெருங்கி இருந்தார்கள். இந்த இடைவெளியில் மணமகன்கள் இருவரும் கல்யாண வேலையில் மூழ்கி இருந்தார்கள். விருந்து விசேஷம் என்றால வாலிப ஆண்கள் மாடாய் உழைப்பதும் வாலிபப் பெண்கள் அலங்கரித்துக் கொண்டு மகிழ்வதும் வழக்கம் தானே? என்ன ஒன்று, இதில் அந்த வாலிப ஆண்கள் மணமகன்கள் ஆகிப் போனார்கள். நட்பு, நன்கு தெரிந்த அக்கம் பக்கத்தார் என்று இவர்களின் கல்யாண, ரிசெப்சன் வேலைகளில் சில செய்தாலும் இவர்கள் மட்டும் செய்ய வேண்டிய வேலைகள் தானே அந்த வேலைகளில் அதிகம்? பேசாமல் வேலைகளை காண்ட்ராக்ட் விடலாமா என்று தமிழ் யோசித்த போது, ‘அப்புறம் எங்களுக்கு என்ன மதிப்பு? இதெல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்வோம்’ என்று விட்டார்கள் மதியும், மொழியும்.
இதோ திருமண வரவேற்பு முடிந்தது.
இத்தனை வேலைகளை இழுத்துப்போட்டு செய்து விட்டு முதலிரவில் கோட்டை விட்டால் அடுக்குமா என்ன?
ஆனால் அப்படித்தான் ஆகிவிட்டது.
அலைச்சல், வேலைகள் அதிகம் இல்லை என்றாலும் இரண்டு திருமணங்களையும் சிறப்பாக நடத்த வேண்டும் என்பதுடன் தொடர்ந்து பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்ற பிரார்த்தனைகளையும் இடைவிடாது ஜெபித்துக் கொண்டு இருந்த தமிழ் ரிசப்சன் முடிந்து வீட்டுக்கு வந்ததும் மயங்கி விழுந்தார்.
உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்று மருத்துவம் பார்க்கப்பட்டது.
மலர் தமிழின் நிலைக்கு பதறுவார் என்று பதறிப்போய் அவர் முகத்தை பார்த்த இரண்டு ஜோடிகளும் அதிர்ந்தனர்.
“மயங்கி விழ நல்ல நேரம் பார்த்தார். அட, கடைசிக்கு நாளைக்கு காலைலயாது மயங்கி விழ வேண்டியது தானே? நல்ல நாளும் அதுவுமா பிள்ளைங்களுக்கு நல்லது நடக்க வேண்டிய நேரத்துல இவரை யார் மயங்கி விழ சொன்னா?” என சத்தமாகவே தமிழை திட்டினார் மலர்.
அதில் சற்று கோபமுற்ற வனி, “அம்மா அப்பாவுக்கு உடம்பு முடியாதப்போ என்ன பேச்சு இது?” என்று அதட்டினாள்.
கல்யாண களையில் மகிழ்ந்து பூரித்திருந்த மகளும் மருமகளும் இப்போது மருத்துவமனையில் குழப்பமான முகத்துடன் வீட்டு ஆண்களின் முகத்தை முகத்தை பார்ப்பதில் கோபம்தான் வந்தது மலருக்கு.
“நான் சொல்றேன், அவருக்கு ஒன்னும் இல்லை. சாதாரன படபடப்பு தான். இன்னும் ரெண்டு மணி நேரத்துல ஜங்குன்னு எந்திச்சு உக்காருவார். அவரை நான் பார்த்துக்கறேன். வீட்ல ராத்திரி சாப்பாட்டுக்கு ரிசப்சன்ல இருந்து கொஞ்சம் டிபன் ஐட்டம் கொண்டு வர சொல்லி இருந்தேன். கூடவே கொஞ்சம் வீட்ல இருக்கற செவ்வாழைப்பழம், பிரிட்ஜ்ல இருக்கற பால் இதெல்லாம் எடுத்துக்கோங்க. நீங்க எல்லாரும் முதல்ல வீட்டுக்கு போங்க”
மலர் புதுமண தம்பதிகளை வீட்டுக்கு துரத்தப் பார்த்தார்.
“அம்மா. இன்னும் ஒரு மணி நேரத்துல அப்பாவையும் கூட்டிட்டே வீட்டுக்கு போவோம்”
மதி தாயை சமாதானப்படுத்தினான்.
“வயசாக ஆக உங்க அப்பாவுக்கு கொஞ்சம் கூட மண்டையில மசாலாவே இல்ல. நல்ல நாளும் பொறப்புமா மயங்கி இருக்கிற லட்சணத்தை பாரு? இப்பதான் ‘அவனைப் பார்க்கிறேன், இவனைப் பார்க்கிறேன்’னு பிரச்சனையை இழுத்து வச்சாரு. நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து சமாளிச்சு கூட்டிட்டு வந்தீங்க.இப்போ கம்முனு இருக்கிறத விட்டுட்டு இவரை யார் மயங்கி விழச் சொன்னா?”
மலர் இன்னும் முணுமுணுத்துக் கொண்டே இருந்தார். எப்படியோ தமிழின் நல்ல நேரம் ஒரு வழியாக கண் விழித்தார்.
இப்போது மலர் தமிழிடம் தங்களிடம் பேசியதை போல் கோபமாக பேசி விட்டால் என்ன செய்வது என்று பதட்டத்துடன் புது ஜோடிகள் பார்த்துக் கொண்டிருக்க, மலர் தமிழ் அருகில் சென்று,
“இப்ப பரவாயில்லையாங்க? உடம்புக்கு என்ன செய்யுது? கொஞ்ச நேரத்துல பயம் காட்டிட்டீங்களே?” என்று தழுதழுத்தார்.
அடப்பாவி அம்மா / அத்தை! இவ்வளவு நேரம் பேசியது உண்மையா? இப்போது பேசுவது உண்மையா? சுற்றி இருந்த நால்வரும் ஒரே நேரத்தில் வாயில் கையை வைத்தனர்.
அது அப்படித்தான்.
உரிமையான இடத்தில் கோபத்தை காட்டுவதும் பேரன்பை கொட்டிக் கொடுப்பதும் உயிரினங்களின் இயல்பு.
இதனை இப்போது அறிய முடியாவிட்டால் இன்னும் இருக்கும் தங்கள் முழு வாழ்நாளில் சிறிது சிறிதாக அறிந்து கொள்வார்கள் புதிய மணமக்கள்.
தமிழ் வீட்டுக்கு வந்ததும் மொழி பெட்டியை கட்டி விட்டான்.
“எனக்கும் ஒரு வீடு இருக்கு. அங்கே என் குடும்பம் இருக்கணும்னு எனக்கு ரொம்ப ஆசை இருக்கு. கல்யாணம் உங்க விருப்பப்படி செஞ்சாச்சு. இனிமேலாவது என் பொண்டாட்டியை என் கூட அனுப்பி வையுங்க. உங்க எல்லாரையும் கூட்டிக்கிட்டு அந்த வீட்டுக்கு போகணும் அப்படின்னு நான் சொல்றதுக்கு முன்ன மாமா மயங்கி விழுந்துட்டார். அதான் இப்போ சொல்றேன். நாம கிளம்பலாமா? எங்க வீட்டுக்கு? என்றபடி தமிழை பார்த்தான் மொழி. அவன் கைகளுக்குள் வனியின் கை எப்போதும் சிறைப்பட்டு இருந்தது. அவள் அதை விடுவித்துக் கொள்ளவே இல்லை. அவனும் விடுவதாகவே இல்லை. இதை பார்த்துக் கொண்டிருந்த மற்றவர்கள் பார்க்காத மாதிரியே நடித்துக் கொண்டிருந்தார்கள்.
மொழி சொன்னபடி அவனை அவன் மனைவியுடன் அவன் வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு மற்றவிரு ஜோடிகளும் தங்கள் வீட்டுக்கு வந்தனர்.
“ஒரு வழியா வீட்டுக்கு மருமக வந்துட்டா. இனியாவது ரெஸ்ட் எடுக்காமல் கொஞ்சம் வேலையை செய்” சிரித்துக் கொண்டே சொன்னார் தமிழ்.
“ஓஹோ? இத்தனை நாளும் நான் வேலை செய்யாமல் தான் இருந்தேனோ? நான் வேலை செய்யாமல் தான் இவ்வளவு பெரிசா நீங்க வளந்தீங்களா?” தமிழின் குமட்டில் குத்தினார் மலர். பெற்றோரும் பிள்ளையும் பேசிக் கொண்டு இருக்கும் போதே மதிவாணன் அறையில் இருந்த குளியல் அறையில் குளிக்கப் போய் இருந்தாள் கயல்.
இவர்களில் காதல் சேட்டையை பார்த்து நிம்மதி அடைந்த மதி தன் மனைவி ஏற்கனவே புகுந்துவிட்ட தங்கள் அறைக்குச் சென்றான்.
“பால் எடுத்துட்டு போடா“ என மலர் குரல் கொடுக்க, சிவந்த முகத்தை மறைத்துக் கொண்டு ஒரே எட்டில் தனது அறைக் கதவை அடைந்திருந்தான்.
அறைக்குள் வந்த மதிவாணன் கதவை பூட்டிவிட்டு, “ரொம்ப டயர்டா இருக்கு. குளிச்சிட்டு வரேன். இங்க புக்ஸ் இருக்கு படிக்கணும்னா படி. இல்லை செல்போனையே பாரு” என்றபடி குளிக்கக் கிளம்பினான்.
“செல்போன்ல என்ன பார்க்கிறது?” கயல் புரியாமல் கேட்டாள்.
“இந்த நேரம் என்ன பாக்க முடியும்? எப்படி முதலிரவு நடத்துறதுன்னு பாரு” சொல்லிக் கொண்டு குளியலறைக்குள் சென்று கதவை சாத்தி விட்டான் தடியன். அவன் சொன்னதில் கயலுக்குத்தான் முகத்தை எங்கே கொண்டு போய் வைப்பது என்று தெரியாமல் போனது.
சற்று நேரத்தில் கதவைத் திறந்து வெளியே வந்தவன், “என்ன? பார்த்து வச்சியா?” என தவறாமல் கேட்டான்.
“என்ன? என்ன பார்த்து வைக்கணும்?” மீண்டும் தடுமாறினாள் அவள்.
“அதுதான். முதலிரவு எப்படி நடத்துறதுன்னு“ என முகம் மாறாமல் பேசினான் அவன்.
“இல்லை. நான் அதெல்லாம் பார்க்கலை” தந்தியடிப்பது இப்போது பொதுவாக இல்லை என்பதை போக்கின அவள் வார்த்தைகள்.
“ஏன் பார்க்கலை? ஏற்கனவே பார்த்து வச்சிட்டியா? அதுக்குதானே கல்யாண வேலைல இருந்து உன்னை ரிலீவ் பண்ணேன்?” கேட்டுக் கொண்டு நெருங்கியவனை முறைத்த அவன் மனைவிக்கு ஒரு அளவுக்கு மீறி அவனை முறைக்க முடியாமல் சிவந்திருந்த முகத்தோடு அவன் நெஞ்சில் சாய்ந்தாள்.
“ஏன் நான் பாக்கணும்? ஊர் அறிஞ்ச டாக்டர் உங்களுக்கு தெரியாது?” முணுமுணுத்தாள் அவள்.
“தெரியலையே? இனிமேல் தான் தெரிஞ்சுக்கணும்” என்றவன் அதன் பின் அதை தெரிந்து கொள்வதில் தீவிரமானான். அவனுக்கு உதவியாக அவளும் தான்.
அங்கே, மொழியின் வீட்டில்…
தனது வீட்டுக்கு வந்த மாமனார் குடும்பத்தினருக்கு உரிய மரியாதைகள் செய்த அனுப்பி வைத்த மொழிக்கு அடுத்து என்ன செய்ய என்று தெரியவில்லை என்றெல்லாம் சொல்ல முடியாது. எப்படி பேசுவது? எப்படி ஆரம்பிப்பது? அவன் மனம் பறந்து கொண்டிருந்தது. அந்த பால்ய விவாகத்தை அவள் மதிக்கவே இல்லை. அவன் தன் மனைவியையே பார்க்க அவள் வீட்டை சுற்றி பார்த்துக் கொண்டு இருந்தாள்.
தனக்கு ஏற்றபடி அதை எப்படி மாற்றிக் கொள்வது என்று யோசித்துக் கொண்டு இருந்தாள் அவள். அவளின் சிந்தனைகள் பாத்திரங்கள் பற்றியது. அவள்தான் பாத்திரக்கடை ஓனர் ஆயிற்றே?
ஒருவழியாக பார்த்து முடித்ததும் அடுத்து என்ன என யோசித்தாள்.
அவள் வீட்டினர் வந்திருந்த போது பாலை காய்ச்சி வைத்திருந்தனர். இப்போது பசியும் இல்லை. ரிசப்ஷனில் நின்ற களைப்பு கண்களை சுழற்றியது. தூங்கலாம் என்று முடிவு எடுத்தவள் எங்கே தூங்குவது என சிந்தித்தாள். அதை அவனிடம் தான் கேட்க வேண்டும் நினைத்துக் கொண்டு மொழியை நோக்கி திரும்பினாள் மதிவதனி.
“வந்து.. நான் தூங்கணும்” தயங்கி சொன்னாள் அவனிடம். மணிமொழி தான் நினைத்த எல்லாவற்றையும் தடால் என்று தூக்கிப் போட்டான்.
“வா தூங்குவோம்” என்றபடி வனியை கைகளில் அள்ளிக்கொண்டு தங்கள் படுக்கை அறைக்குள் நுழைந்தான் அவன்.
அவன் திடீர் தாக்குதலில் அதிர்ந்து போனவள் அவனை இறுக்கிக் கொண்டபடியே, “ஐயோ என்ன பண்றீங்க?” என்று அலறத்தான் நினைத்தாள், ஆனால் அது சினுங்களாக வெளி வந்தது. இது போதாதா அவள் கணவனுக்கு?
பிறந்ததிலிருந்து தனக்கே தனக்கான உயிருக்கு தவித்துக் கொண்டிருந்த அவன் மனம் அவன் சாந்தி முகூர்த்தத்தில் சாந்தி அடைந்தது. அவன் இன்னுயிர் மனைவி எப்போதும் அவனுடன் மகிழ்வுடன் வாழ்ந்திருப்பாள்.
காதல் ராஜ வீதியில் காலம் தோறும் அவனுடன் மகிழ்ந்திருப்பாள்
(நிறைவு)

Last edited by a moderator:
Author: நிதனிபிரபு
Article Title: காதல் ராஜ வீதியில் - 26 (final)
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.