குழல் - 18
கூடத்திற்கும் போர்டிகோவிற்கும் அலைபாய்ந்தபடி திரிந்து கொண்டிருந்த அமரனை ஆராய்ச்சியாக பார்த்தபடியே செடிகளுக்கு தண்ணீர் விட்டுக் கொண்டிருந்தான் இளங்கோ. முந்தைய நாள் இரவும் உறங்காமல் அடிக்கடி எழுவதும், தண்ணீர் பருகுவதும், கூடத்தில் வந்து அமர்வதும், ஜன்னலின் ஓரம் சென்று நிற்பதுமாக அவன் அல்லாடிக் கொண்டிருந்ததை கவனித்துக் கொண்டுதான் இருந்தான்.
காரணம் விளங்காமல் இல்லை. ஆனாலும் கண்டும் காணாமல் தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தான்.
“இன்னைக்கு நமக்கு வெளில ஒரு வேலையும் இல்ல. போன வாரம் யூடியூப்ல எதுவும் அப்லோட் பண்ணல. ஏகப்பட்ட கமெண்ட்ஸ்… இன்னைக்கு கண்டிப்பா ஒரு அப்டேட் கொடுக்கணும்… கொஞ்சநேரம் ரிகர்சல் பாத்துட்டு அப்லோட் பண்ணிடலாம்…”
சொன்னபடியே போர்டிகோவில் நின்றிருந்தவனை கடந்து கூடத்திற்குள் நுழைந்தான் இளங்கோ.
இவன் பேசியதை அவன் காதில் வாங்கியதாகவே தெரியவில்லை. கவனம் முழுக்க எதிர்திசையில் பதித்திருந்தான்.
“டேய்… அங்கே என்ன பண்ற..? நான் சொன்னது காதுல விழுந்துதா இல்லையா..?”
“ப்ச்…”
சலிப்பாய் இதழை வளைத்தபடியே வீட்டிற்குள் நுழைந்தவன் நெற்றியை தேய்த்தபடி சோபாவில் அமர்ந்தான்.
“நீயும் ஒன்னும் டிபன் பண்ணின மாதிரி தெரியல. எனக்கும் பண்ற ஐடியா இல்ல. சரி… நான் போய் நமக்கு டிபன் ஏதாவது வாங்கிட்டு வந்துடறேன்… சாப்பிட்டு நம்ம வேலையை ஆரம்பிக்கலாம்…”
அமரனை ஆழ்ந்து பார்த்தபடியே சொன்ன இளங்கோ அவனை கடந்து நடக்க எக்கி அவன் கைப்பற்றி நிறுத்தி இருந்தான் அமரன்.
“எனக்கு பசிக்கலடா…”
“ஆனா எனக்கு பசிக்குதே…”
“உ..உன் தங்கச்சி கொண்டு வந்து இந்நேரம் கொடுத்திருப்பாளே இ..இன்னும் வரக்காணோம்…”
தனது எதிர்பார்ப்பினை மறைத்து சமாளித்து பேசியவனை இதழ்களை குவித்து நாக்கை உள் கன்னத்தில் வைத்து குறும்புப் பார்வை பார்த்தான் இளங்கோ.
“அவளுக்கு மாசமானா கட்டுக்கட்டா பணம் அவிழ்த்து கொடுக்கிறோமா..? மூனு வேளையும் நமக்கு சமைச்சு வந்து கொடுக்கணும்னு எதிர்பார்க்கிறதுக்கு..?”
“நீதானடா நாக்குல ஜொல்லு ஊத்திக்கிட்டு முழுங்குவே…”
“நீ அப்படியே எட்ட நின்னு வேடிக்கை பாப்பியோ… பிடிக்காத மாதிரியே என்கிட்ட புடுங்கிதானடா திம்ப…”
நண்பனின் பேச்சில் எழுந்த புன்னகையை உதட்டுக்குள் மறைத்தபடி தனது பிடரியை வருடினான் அமரன்.
அவனை அழுத்தமாய் பார்த்து மீண்டும் நடந்தவன் “அவ ஏன்டா வரல..?” என்று முதுகற்கு பின்னே கேட்ட குரலில் நின்று திரும்பினான்.
“என்ன ராசா..? என்னமோ காதுல விழுந்த மாதிரி இருந்ததே…”
இரண்டு அடிகள் அவனை நோக்கி நடந்து காதை அவன்புறமாக தணித்தபடியே கேட்டான் இளங்கோ.
“அவ… ஏன்… வரல…?” வார்த்தைகளை மென்று விழுங்கியபடி கேட்டான் அமரன்.
“வரும்போதெல்லாம் அடிச்சு துரத்துவ… வார்த்தையால குத்திக் கிழிச்சு கூறு போட்டு அனுப்புவ… அப்பவும் ரோஷம் கெட்டு ஓடி வந்தா திமிரா கண்டும் காணாம இருப்ப… இப்ப என்ன..? அவளை அழ வைக்கணும்.. அதுக்குதானே தேடுற… அவளும் மனுஷிதானடா… அவளுக்கும் மனசுன்னு ஒன்னு இருக்குல்ல… அது வலிக்கும்னு உனக்கு புரியுதா புரியலையா..? நீ என்ன சைக்கோவாடா..? இதைவிட ஒரு பொண்ணால காதலிக்க முடியும்னு எனக்கு தோணல. அன்னைக்கு ஒருத்தி கேட்டா… உன் ஃபிரண்ட் என்ன பெரிய அப்பாடக்கரான்னு… அந்த வார்த்தை சரிதான்னு எனக்கு இப்ப தோணுது. வலிய வலிய வந்தா ஒரு உண்மையான அன்புக்குகூட மதிப்பு இருக்கிறது இல்லேல்ல. நான் யோசிக்காத விஷயத்தைகூட அவ யோசிச்சு ஒரு வாரம்… ஒரு வாரம் உனக்காக இருக்கிற வேலையெல்லாம் விட்டுவிட்டு எத்தனை வேலைகளை பண்ணிட்டு வந்து உட்கார்ந்திருக்கா. யாருக்காகடா..? எல்லாம் எதுக்காக..? அவளைப் பார்த்தால் உனக்கு பைத்தியக்காரி மாதிரி தெரியுதா..? இன்னும் என்னதான் எதிர்பார்க்கிற..? இப்ப அவ வரலையான்னு என் வாயை அனாவசியமா புடுங்குற… வேணாம் அமர்… இருக்கிற வெறியில கண்டபடி பேசிடப் போறேன்…”
கோபமாகச் சொன்னவன் விறுவிறுவென வெளியேறி வண்டியில் ஏறி அமர “என்னை அவ வீட்ல கொண்டு போய் விடு…” என்றபடியே போர்டிகோவில் வந்து நின்றிருந்தான் அமரன்.
“என்ன..?”
ஆச்சரியத்தோடு தன்னிச்சையாய் வண்டியில் இருந்து இறங்கி இருந்தான் இளங்கோ.
“என்னை அவ வீட்டுக்கு கூட்டிட்டு போ… ஒருமுறை போய் பழகிட்டேன்னா… அப்புறம் எனக்கு ஈஸி ஆயிடும்… எதிர்வீடு… கிராஸ் பண்ணி மாடி ஏறணும்… இன்னும் பழகாத விஷயம் இல்லையா…”
தடுமாற்றம் இன்றி பேசிய நண்பனை தாவி அணைத்துக் கொண்டான் இளங்கோ.
“அமர்… அமர்… அப்போ… அப்போ…”
“இப்போ எதுக்குடா இரட்டைக்கிளவில பேசிட்டு இருக்க..? லேட் பண்ணாம என்னை கூட்டிட்டு போ… ஆபீஸ்க்கு கிளம்பிடப் போறா…”
குறும்பாய் அமரன் கூற இதழ்களில் பூத்து நின்ற புன்னகையோடு அவன் கைப்பற்றிக் கொண்டு திலோத்தமாவின் வீடு நோக்கி நடந்தான் இளங்கோ.
தன் எதிரில் அமர்ந்திருந்தவனை நம்ப முடியாமல் இமைகள் சிமிட்டகூட மறந்து பார்த்தபடியே அமர்ந்திருந்தாள் திலோத்தமா. அவனை பக்குவமாக அழைத்து வந்து திலோவின் வீட்டிற்குள் அனுப்பி வைத்து அவள் அழைத்தும் நிற்காமல் அவர்களுக்கு தனிமை கொடுத்து அங்கிருந்து ஓடியே போயிருந்தான் இளங்கோ.
தன் கண்களில் மாட்டியிருந்த கூலர்ஸை கழற்றி அங்கிருந்த மேஜையில் வைத்து வெற்று விழிகளால் எதிரில் இருந்த பிம்பத்தை தோராயமாக ஆராய்ந்தபடி அமர்ந்திருந்தான் அமரன். அந்த நிறம் மங்கிய கண்களையும் காதலோடுதான் பார்த்தாள் திலோ. இந்த நொடி அவள் மனதில் பூத்த மகிழ்ச்சி இரண்டுவிதம்.
ஒன்று மற்றவர்களிடம் கண்ணாடி கொண்டு மறைக்கும் கண்களை இனி உன்னிடம் மறைக்க வேண்டிய அவசியமே இல்லை என்பதுபோல் அவன் விழிகளை அவளுக்கு விரும்பியே காட்டுகிறான்.
மற்றொன்று அவளை தேடி அவள் வீட்டிற்கே வந்து அவள் எதிரில் அமர்ந்திருக்கிறான்.
நம்ப முடியவில்லை… கையை கிள்ளிப் பார்த்துக் கொள்கிறாள்… சமையலறையில் செய்து கொண்டிருந்த வேலையை அப்படியே போட்டுவிட்டு அவனையே பார்த்தபடி எதிரில் வந்து அமர்ந்திருக்கிறாள்.
இனிக்கும் இந்த நொடிகளை தாண்டி வேலையாவது ஒன்றாவது..?
“அமர்.. என்ன சாப்பிடுறீங்க..?”
உள்ளே பொங்கும் பரவசத்தை மறைக்க முயன்றும் அவளது குரல் வெளிப்படுத்தியது.
ஒன்றும் வேண்டாம் என்று இடவலமாக தலையை மட்டும் அசைத்தான். அவளிடம் நிறைய பேச மனதிற்குள் வார்த்தைகள் முட்டி மோதுகின்றன. ஆனால் வார்த்தைகள் வெளிவராமல் நாக்கு உள்ளே இழுத்துக் கொண்டதுபோல் அப்படி ஒரு தடுமாற்றம்.
“சமைச்சுட்டேன்… இன்னும் அஞ்சு நிமிஷ வேலைதான்… இருங்க வந்துடறேன்…”
சொன்னபடியே வேகமாக எழுந்தவளிடம் “இல்ல… எதுவும் வேணாம்… நான் உன்கூட பேசணும்…” என்றவனது காந்தக்குரல் தடை போட்டு நிறுத்த மீண்டும் அதே இடத்தில் அமர்ந்தாள்.
“சொல்லுங்க…”
“உ..உனக்கு… உனக்கு ஏன் என்மேல இப்படி ஒரு… இப்படி ஒரு…”
எத்தனை முயற்சித்தாலும் முயன்ற வார்த்தைகள் வெளிவராமல் தொண்டைக்குழிக்குள்ளேயே நின்று போயின.
கைகளை கோர்த்து கோர்த்து விரித்து கண்களை இங்கும் அங்கும் சுழற்றி அடிக்கடி பிடரியை வருடி என்று அவனது தடுமாற்றங்கள் அனைத்தையும் சொட்டு விடாமல் ரசித்துக் கொண்டிருந்தாள் திலோ.
“காதல் காரணம் பார்த்து வருமா அமர்..?” தெளிவான கணீர் என்ற பதில் அவளிடம்.
பதில் பேசாமல் தோராயமாக அவள் அமர்ந்திருந்த பகுதியை வெறித்தபடி அமர்ந்திருந்தான் அமரன்.
“விபரம் தெரிந்த நாள்ல இருந்து எதுலயுமே பெரிதான பிடித்தமே இல்லாம வாழ்க்கை இழுத்துட்டுப் போன வழிகள்ல பயணிச்சவ நான். படிப்பு, கை நிறைய சம்பளம் ரெண்டு மட்டும்தான் என் மனசுல ஆழமா பதிஞ்சு இருந்தது. அது ரெண்டையும் அட்டெய்ன் (attain) பண்ணிட்டேன். ஆனாலும் ரசனையான வாழ்க்கைன்னு சொல்லுவோம் இல்லையா… அதை நோக்கி மனசு பயணிச்சப்போ மனசோட ஆழத்தில இருந்து பிடித்தமான விஷயம் எங்கேயும் தெரியல. அப்படி என் மனசு முழுமையான பிடித்தத்தோட மூழ்கி விழுந்தது உங்ககிட்ட மட்டும்தான். உங்ககிட்ட மட்டும்தான் என் மனசு தேடின அத்தனை விஷயங்களும் இருக்கிறதா தோனுச்சு. மூனு வருஷத்துக்கு மேல உங்களை துரத்திக்கிட்டே ஓடி வரேன்… பிடித்தம் கூடுதே ஒழிய குறையவே இல்ல. இதுக்கு காரணம் எல்லாம் என்னால கண்டுபிடிக்க முடியல அமர்… ஒரே காரணம் காதல்… என் அமர்மேல எனக்கு இருக்கிறது அலாதியான காதல்…”
அவள் பேசிய வார்த்தைகளில் நெக்குறுகி தன்னிலை மாறி தொண்டை அடைக்க கீழிதழை அழுத்தமாக கடித்துக் கொண்டான் அமரன்.
நம்பவே முடியவில்லை… தன்னை ஒரு பெண் தன்னிடம் இருந்து காதலாக ஒரு பார்வையோ வார்த்தையோ கிடைக்காத போதும் ஒருதலையாக இத்தனை காலமாக இப்படி நேசிக்கிறாள் என்பதே மூளையில் ஒருவித போதையை ஏற்றியது. காதலிப்பதைவிட காதலிக்கப்படுவது தேவசுகம்… அந்த சுகத்தை அவன் அனுபவிக்கத் தொடங்கி நாட்கள் பல ஆயிற்று.
இவன் மனமும் என்றோ அவளிடம் சரிந்து போனதே… அவளது அளப்பரிய காதலால்தான் இது சாத்தியம் என்பது புரிகிறது. தன்னால் அவள் அளவுக்கு காதலை அவளிடம் கொடுக்க முடியுமா என்ற சுய ஆராய்ச்சியும் எழுகிறது. அந்த அளவிற்கு அவளது காதலுக்கு தான் தகுதி ஆனவனா என்ற எண்ணமும் தோன்றாமல் இல்லை.
அவனுக்குள்ளும் ஆசைகளும் உணர்வுகளும் ஏக்கங்களும் இருக்கத்தானே செய்கின்றன. அவனும் மனிதன்தானே… நிறைய ஆசைகளை இழந்தவன்தானே. ஆசையில் பூத்து பூரிக்கும் மனதை கடிவாளம் இட்டு கட்டுப்படுத்தி தன்னை இரும்பு போல் இறுக்கமானவனாகவே வடிவமைத்துக் கொண்டான். தன்னிடமிருந்தே தன்னை காத்துக் கொள்ள இதனை தாண்டிய வேறு மார்க்கம் அவனுக்கு தெரிந்திருக்கவில்லை.
ஆனால் அனைத்தையும் உடைத்துப் போட்டுவிட்டாள் அவன் எதிர் வீட்டிலேயே குடி வந்த ஒருத்தி. சிறையிலிருந்து விடுபட்ட இதயம் வெகுவாய் துடிக்கிறது… ஆசைப்பட்ட விஷயங்களுக்காக ஏங்குகிறது… நிறைய எதிர்பார்க்கிறது… நிறைய தேடுகிறது… அவள் கொட்டிக் கொடுக்கிறாள்… அதில் முழுவதுமாக முகிழ்த்து நனைந்தபின் அதிலிருந்து விடுபட்டு வெளிவருவது என்பது அவனால் முடியவே முடியாது.
“என்னை விட்டுப் போயிட மாட்டியே..?”
அவன் காதல் சொல்ல தேர்ந்தெடுத்த வார்த்தைகள் இவைதான். இதற்குள் அனைத்துமே அடங்கிப் போனதே.
கண்கள் பனிக்க வேகமாக எழுந்து அவன் அருகில் வந்து அமர்ந்து கொண்டாள் திலோத்தமா. அவன் விரல்களைப் பற்றி தன் உள்ளங்கைக்குள் அழுத்திக் கொண்டாள்.
“என் உயிர் போனாதான் நீங்க சொன்னது நடக்கும்…” குரல் அடைக்கக் கூறினாள்.
“அப்படி ஒரு சூழ்நிலை வந்தா என்னையும் உன்கூடவே கூட்டிட்டு போயிடறியா..?”
கரகரத்த குரலில் கூறியவனை பாய்ந்து கட்டிக் கொண்டாள் திலோ. மகிழ்ச்சியில் சத்தமிட்டு அழுதாள்.
அவளது முதல் ஸ்பரிசத்தில், அந்த அணைப்பில், அவன் மூளைவரை ஏற்றி வைத்திருந்த அவளது வாசத்தில், அந்த அழுகையில், அதன் நிஜத்தில், புன்னகையோடு தானும் கண்களில் நீர் நிறைத்தவன் அவளை முதுகோடு அணைத்திருந்தான்.
“அவ்வளவு சீக்கிரம் போகமாட்டேன் அமர்… உங்ககூட சேர்ந்து நிறைய வாழணும்… நிறைய சந்தோஷங்களை பாக்கணும்… என் அமரோட காதல் எப்படி இருக்கும்னு ஒரு ஒரு நொடியும் அதை அனுபவிச்சு ரசிக்கணும்… இப்படி நிறைய இருக்கு…”
விம்மலோடு கூறியவளை தன்னிலிருந்து விலக்கினான். கைகள் தடுமாற அவள் முகத்தை பற்றிக் கொண்டான்.
மெல்ல விரல்களால் அவள் முகவடிவை அளந்தான். கற்பனைக்குள் அவள் ஓவியத்தை தீட்டிக் கொண்டான் போலும். உடல் சிலிர்க்க சிரித்தபடியே அவன் செயலை ரசித்திருந்தாள். அவள் ஜென்மமே சாபல்யம் அடைந்ததுபோல் அந்த நொடி அவளது வாழ்வின் தேவநொடியாக மாறிப்போனது.
அவன் இரு கை விரல்களையும் பற்றி தன் இரு கன்னங்களிலும் வைத்து அழுத்திக் கொண்டவள் கண்மூடி அந்த கணத்தை இதயத்திற்குள் புதைத்தாள்.
“உனக்கு ஆபீசுக்கு டைம் ஆச்சுதானே…”
அவள் அருகாமையில் இதயம் மயிலிறகாய் மாறிய அழகியலை ரசித்தபடியே புன்னகையோடு கேட்டான்.
“இன்னைக்கு நான் ஆபீசுக்கு போகப்போறது இல்ல…”
சொன்னவள் மீண்டும் அவனை அணைத்திருந்தாள்.
(தொடரும்)