குழல் - 23
சோப்பு நுரையுடன் வெற்று மேனியாய் விழுந்து கிடந்தவளின் மேலே முழுமையாய் படர்ந்து விழுந்து கிடந்தான் அமரன். விழுந்தது மட்டுமல்லாமல் அவன் இதழ்கள் அவளது மூக்கிற்கும் இதழ்களுக்கும் இடைப்பட்ட இடத்தில் அழுத்தமாக பதிந்தும் போய் இருந்தது.
பயத்தில் அவனை அவள் இறுக்கி அணைத்திருக்க அவனும் தன்னிச்சையான ஒரு உணர்வுடன் அவளை முதுகோடு பற்றி இருந்தான்.
முதன்முறையாக இருவரின் முழுமையான ஸ்பரிசம்… அதிலும் அவள் இருந்த கோலம்…? அவன் விழிகளால் பார்க்க முடியாமல் போய் இருக்கலாம்… ஆனால் மொத்தமாய் உணர முடியுமே… உணர்ந்தான்… கிளர்ந்தான்…
அடர்ந்த உச்சி முடிகள் அனைத்தும் நட்டுக் கொண்டன. சோப்பு வாசத்துடன் அவளது மொத்த வாசமும் மூளையில் ஏறி பித்துப் பிடிக்கச் செய்தது. அவளது வெற்று முதுகை பிடித்திருந்த அவன் விரல்கள் கிறக்கத்தோடு அழுத்தமாக பதிந்தன.
இறுக்கிப் பிடித்து அசைவற்றுக் கிடந்த அதே கோலத்தில் இருவரது விழிகளும் தன்னிச்சையாய் மூடியும் கொண்டன. இளமை உணர்வுகள் இருவரிடமும் வெடித்துக் கிளம்பி உஷ்ணத்தை பாய்ச்சத் தொடங்க காய்ச்சல் கண்டவர்கள் போல் சில நொடிகளுக்குள் கொதித்துப் போய் கிடந்தனர் இருவரும்.
அவளது மேல் இதழை ஒட்டி ஸ்பரிசித்து இருந்த அவனது இதழ்கள் விரதம் தணித்து வேட்கையுடன் கீழ் இறங்கி அவளது செம்பவழ இதழ்களில் அழுத்தமாய் பதிந்து கொண்டன. அந்த இதழ் ஸ்பரிசத்தில் உடல் குலுங்கி அவன் பிடரி முடியை இறுக்கி பற்றி இருந்தாள் பெண்ணவள்.
கூடுதலாய் கிளர்ந்த மோகத்துடன் மெல்ல பிளந்திருந்த அவள் இதழ்களை அடங்காத ஆசையுடன் சுவைக்கத் தொடங்கி இருந்தான் அவள் அமரன்.
கிறக்கம் கூடி இறுக்கமும் கூடி மொத்தமாய் வெடித்து வெளியேறிய மோகச் சீற்றத்துடன் இதழ் பிரிக்காமல் அவளை அப்படியே கைகளில் அள்ளி இருந்தான். தடுமாற்றமின்றி தாபத்தோடு நடந்து சென்றவன் அவளைப் படுக்கையில் போட்டு மொத்தமாய் அவள்மேல் படர்ந்திருந்தான்.
அடுத்தடுத்து நடந்தவை எல்லாம் அனல் தெறிக்கும் ஆலிங்கனப் போர்தான். உள்ளுக்குள் பொத்தி புதைத்து வைத்த ஆசைகள் அனைத்தும் இருவரிடமும் மொத்தமாய் உடைபட்டு வெளியேறி இருக்க தங்குதடை இன்றி அவன் எடுக்க அவள் கொடுக்க இன்பத்தின் உச்சம் இன்னது என்று இருவரும் உணர்ந்த தேவ தருணங்கள்தான் அனைத்தும்.
விழிகள் உணராத அனைத்தையும் தன் மூளைவரை உணர்ந்து மொத்தமாய் அவளை தனக்குள் நிறைத்திருந்தான் அவள் கணவன். அனைத்தும் முடிந்து வியர்வையோடு சோர்ந்து போய் கட்டி அணைத்துக் கொண்ட இருவரின் இதழ்களிலும் மந்தகாசப் புன்னகை.
தன் வாழ்வில் எத்தனையோ மகிழ்ச்சிகளை அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கும் தனது காதல் மனைவியின் மூலம் பெற்றுக் கொண்ட இந்த உச்சபட்ச மகிழ்ச்சியில் தன்னை முழுதாக தொலைத்திருந்தான் அமரன்.
அதன் பின்னான தருணங்கள் அனைத்தும் அவர்களுக்கே அவர்களுக்கான தனிமையும் இனிமையும் கூட்டிய பொழுதுகள்தான். சட்டங்களையும் விதிகளையும் வகுத்தவன் நேரம் காலம் இன்றி இரவு பகல் இன்றி தோன்றும் போதெல்லாம் அவளை நாடி நினைத்த போதெல்லாம் அவளை கூடி இன்பத்தின் எல்லையை தொட்டுத் தொட்டு மீண்டான்.
“திலோ… மை பேபி… என்னை கொல்றடி… என்னென்னவோ பண்றடி…”
மோகத்தில் மூச்சு முட்ட முத்தமிட்டு நிறைய பிதற்றினான்.
அவர்களது இறுகிப்போன இந்த நெருக்கத்தை தெளிவாகவே கண்டு கொண்டான் இளங்கோவும்.
“நீ சொன்னது சரிதான்டி… பஞ்சும் நெருப்பும் பக்கத்துல பக்கத்துல இருந்தா பத்திக்காமலா இருக்கும்… இங்கே மொத்தமா பத்திக்கிட்டு வீடே எரியுது… நீதான் மனசு இறங்கி என்னை காப்பாத்தணும்…”
தன்னவளுக்கு அழைத்து கொஞ்சிக் கொண்டிருப்பான் இளங்கோ.
நாட்கள் வாரங்களாகி மாதங்களை நோக்கி பயணிக்கத் தொடங்கி இருந்தன. இளங்கோ ரஞ்சனியின் காதலும் இன்னும் இறுக்கம் பெற்றிருந்தது. அவர்களது திருமணம் பற்றிய பேச்சுகளையும் எடுக்கத் தொடங்கி இருந்தான் அமரன்.
சீக்கிரமே உனக்கு ஆபரேஷன் ஏற்பாடாகிடும். திலோ அந்த டாக்டர்கிட்ட பேசிட்டுதான் இருக்கா. அவங்களும் இந்தியா வரப் போறாங்களாம். இதை பணாணிட்டா நிச்சயமா உனக்கு பார்வை வந்துடும். என் கல்யாணத்தை நீயும் திலோவும் முன்ன நின்னு உன் கண் பார்க்க நடந்தா நான் இன்னும் ரொம்ப சந்தோஷப்படுவேன்டா…” நெகிழ்ந்து கூறிய நண்பனின் ஆசைக்கு ஆமோதித்து இருந்தான் அமரன்.
அன்று அலுவலகத்தில் கம்ப்யூட்டர் திரையை வெறுமனே வெறித்தபடி அமைதியாக அமர்ந்திருந்தாள் திலோத்தமா. இதயத்தில் பெரும் அதிர்வு…உடலில் நடுக்கம்… ஏசியின் சில்லிப்பையும் தாண்டி வியர்த்துக் கொண்டே இருந்தது. கடத்த மூன்று நாட்களாக நிறைய உடல் சோர்வு, சில உணவுகளின் மீது ஒவ்வாமை, குமட்டல், தலை சுற்றல் என்று அவள் எதிர்பார்த்த ஒருவித நிகழ்வு அவளுக்குள் நிகழ்ந்து கொண்டிருப்பதை உணர முடிந்தது.
நாட்களை கணக்கிட்டாள்… நெஞ்சுக்குழி ஏறி இறங்கியது… சத்தமின்றி அலுவலகத்திற்கு கிளம்பி வந்திருந்தாள். இதோ தன் உள்ளங்கைக்குள் அழுத்தமாய் வைத்து மூடி இருந்த அந்த பொருளை திறந்து பார்த்தாள்.
கர்ப்பத்தை உறுதி செய்யும் குட்டி வெள்ளை நிறக் கருவி… மெல்லிய நடுக்கத்துடன் எழுந்தவள் கழிவறைக்குள் நுழைந்தாள். படபடப்புடன் பரிசோதித்து முடிவு வந்தவுடன் விழிகள் விரிந்து இதழ்களும் விரிந்தன. அவள் எதிர்பார்த்த ஒன்று நடந்திருந்தது… அமரனின் விதை அவள் வயிற்றில். சிரித்திருந்த இதழ்கள் சில நொடிகளில் அழுகையில் பிதுங்கின. ஆனந்தத்தில் துளிர்த்த கண்ணீர் வேதனையில் வெடித்து வெளியேறியது.
தனது வயிற்றை வருடியவள் முதுகு குலுங்க அழுதாள்.
“இந்த நாளுக்காகத்தான் செல்லம் அம்மா காத்திருந்தேன்… நீ உருவானதே உன் அப்பாவோட விழிகளுக்கு உயிர் கொடுக்கத்தான்… உன்னால மட்டும்தான் அவர் உலகத்தை வெளிச்சமாக்க முடியும். எப்பவோ எனக்குள்ள முடிவு செஞ்ச விஷயம்… ஒரு பெண்ணா ஒரு அம்மாவா தீராத பாவத்தை செய்யப் போறேன்… காலம் முழுக்க அந்த சுமையை சுமக்கப் போறேன்… ஆனா என் அமர் அழுத்தம் இல்லாத அமைதியான மனசோட இந்த அழகான உலகத்தை ஆசை தீர பார்த்து ரசிக்கப் போறார்… சந்தோசமா வாழப் போறார்… அவர் விழிகள்ல அந்த பார்வையில நீயும் உயிர்ப்போட வாழப்போற… இனி வரப்போற நாட்கள்ல அவர் கண்கள்லதான் நான் உன்னையும் பார்க்கப் போறேன் செல்லம்… என்னை மன்னிச்சிடு… மன்னிச்சிடு தங்கம்… இதை தாண்டி வேற எல்லா மார்க்கமும் அவர் விஷயத்துல அடைபட்டு கிடக்குது. உன் அப்பாவுக்காக உயிர் தியாகம் செய்வியா..?”
தன் வயிற்றை வருடியபடியே குனிந்தபடி பேசிக் கொண்டிருந்தவளின் விழிகளில் இருந்து சொட்டு சொட்டாய் கண்ணீர் திரண்டு தரையில் பட்டுத் தெறித்தது. ஆனவரை மனது இலகுவாகும்வரை அழுது தீர்த்தவள் ரேஷ்மாவிற்கு அழைத்திருந்தாள்.
“குட்… எத்தனை வாரங்கள் ஆகி இருக்கு..?”
“இரண்டு வாரம் முடிஞ்சது டாக்டர்…”
இன்னும் இரண்டு வாரம் ஆனாலும் தப்பில்ல… இருந்தாலும் அடுத்த வாரமே நீ கிளம்பி பெங்களூர் வந்துடு. ஸ்டார்டிங் ஸ்டேஜ்தான் மஸ்ட்…”
“ஓகே மேடம்…”
“உன் கணவரும் உன்னோடு வர்றார்தானே…”
“இ..இல்ல மேடம்… அவர் வெளிநாட்ல ஒரு ப்ரோக்ராமுக்கு புக் ஆகிட்டார்… இன்னும் ரெண்டு நாள்ல கிளம்பிடுவார்… வ..வர்றதுக்கு 15 நாளைக்கு மேல ஆயிடும்…”
“அவ்வளவு லேட்டா இந்த வேலையை ஸ்டார்ட் பண்ண முடியாதும்மா… அடுத்த வாரம் ஸ்டார்ட் பண்ணனும்…”
“அவர்கிட்ட நான் பேசிட்டேன் மேடம்… ஏற்கனவே பேசி அவருக்கு நிறைய சமாதானம் சொல்லி அவர் சம்மதத்தோடதான் எல்லாம் நடந்தது… இப்பவும்கூட அவர் சம்மதத்தோடதான் உங்களுக்கு கூப்பிட்டு பேசுறேன்…”
“இருந்தாலும் அவர்கிட்ட நானும் பேசணும்மா… நேர்ல வரலைன்னாலும் போன்லையாவது அவருடைய சம்மதத்தை எனக்கு கொடுக்கணும். அதோட அடுத்து ஆபரேஷன் பண்ணும்போதும் எல்லாத்தையும் தெளிவா ஒத்துக்கிட்டு கையெழுத்து போட்டு கொடுக்கணும்…”
தன் தரப்பை தெளிவாகக் கூறியிருந்தார் ரேஷ்மா. இந்த சூழலை எல்லாம் எதிர்கொள்ள வேண்டும் என்பது அவளுக்கும் தெரியும்.
“கண்டிப்பா மேடம்… அவர் கூடவே நீங்க பேசலாம்… கொஞ்ச நேரத்துல உங்களுக்கு கால் பண்றேன்…”
இணைப்பை துண்டித்தவள் இழுத்து மூச்சுவிட்டு தன்னை சமன் செய்து அனைத்து தெய்வங்களுக்கும் பிரார்த்தனைகள் வைத்து அமரனுக்கு அழைத்தாள்.
“எங்கே இருக்கீங்க அமர்..?”
“ரிகர்சல் வந்து இருக்கேன்டி… இப்போ பிரேக்தான்… இன்னும் ரெண்டு நாள்ல ஃபாரின் ட்ரிப் இருக்கே… உன்னை பிரிஞ்சு 15 நாள் எப்படி இருக்கப் போறேன்னு தெரியல. இப்போகூட எனக்கு ஏதேதோ நினைப்புதான்… என்னை மொத்தமா கெடுத்து வெச்சிட்டடி போக்கிரி…”
காதல் கொஞ்சல் மொழியோடு அவன் குழைந்து பேசிக் கொண்டிருக்க இவளோ பொங்கி வழியும் கண்ணீரை முயன்று கட்டுப்படுத்தி தன்னை நிலைப்படுத்தினாள்.
“அமர்… ரேஷ்மா மேடம் கூப்பிட்டு இருந்தாங்க… அவங்க ஃபாரின்ல இருந்து வந்தாச்சு… நீங்க உங்க ப்ரோக்ராம்ஸ் எல்லாத்தையும் முடிச்சிட்டு வந்ததுக்கு அப்புறம் டிரீட்மென்ட் ஸ்டார்ட் பண்ணிடலாம்னு சொன்னாங்க… இப்போ அவங்களுக்கு கான் கால் போடுறேன். அவங்க பண்ணப் போற இந்த விஷயத்துல உங்களுக்கு சம்மதமான்னு கேப்பாங்க. எனக்கு முழுமையான சம்மதம்னு நீங்க சொல்லணும் அவ்வளவுதான்…”
“அதுக்கு என்னடி..? சொல்லிட்டா போகுது… இதெல்லாம் அவங்க ப்ரொசீஜரா..?”
“ஆமா…”
“சரி… அவங்களுக்கு கால் பண்ணு… நான் பேசுறேன்…”
அவனது இணைப்பை ஹோல்டில் வைத்து ரேஷ்மாவிற்கும் அழைத்தாள்.
“டாக்டர்… என் ஹஸ்பண்ட் லைன்லதான் இருக்கார்… ப்ரோக்ராம்ல இருந்து அவசரமா வெளியே வந்து நிக்கிறார்… நான் தெளிவா அவர்கிட்ட எல்லாமே சொல்லிட்டேன்… நீங்க சிம்பிளா சொல்லி சம்மதம் கேட்டுடுங்க…”
“சரிம்மா…”
இதயம் அதிர தேவையற்ற வார்த்தைகள் எதுவுமே இருவருக்கும் இடையில் முளைத்து விடவே கூடாது என்று தெய்வத்தை வேண்டியவள் குனிந்து தனது வயிற்றை வருடினாள்.
“நீ உன் தந்தைக்காக மட்டுமே உதிச்ச தவக்குழந்தை… எந்த குழப்பமும் வந்துடாம பார்த்துக்கோடா கண்ணா…”
தனது கருவையே கடவுளாக பாவித்து கண்ணீருடன் கேட்டுக் கொண்டவள் இருவருக்கும் இடையில் இணைப்பை ஏற்படுத்து இருந்தாள்.
“ஹாய் டாக்டர்… குட் மார்னிங்… ஐ அம் அமரவர்மன்…”
“ஹாய் சார்… திலோ உங்க மெடிக்கல் ஹிஸ்டரி எல்லாத்தையும் என்கிட்ட காமிச்சா… நிறைய பேசினா… அதைப்பத்தி எல்லாம் உங்ககிட்ட சொல்லி இருப்ப இல்லையா..?”
“ஆமா டாக்டர்… எல்லாமே தெளிவா சொல்லிட்டா…”
“இந்த விஷயத்துல உங்களுக்கு ஒன்னும் ஆட்சேபணை இல்லையே…”
“ஆரம்பத்துல பெரிய உடன்பாடு எல்லாம் இல்ல. என் மனைவிதான் எனக்குள்ள நிறைய நம்பிக்கையை கொடுத்தா… ஆசையையும் கொடுத்தா… சரி இதுல ஒன்னும் தப்பு இல்லைன்னு தோணுச்சு. அதனால நானும் சம்மதம் சொல்லிட்டேன்…”
“அப்போ உங்களுக்கு பூரண சம்மதம்தானே…”
“100% சம்மதம் டாக்டர்…”
“இந்த உரையாடலை நாங்க ரெகார்ட் பண்ணி வச்சுப்போம்… இதுவும் எங்களுக்கு ஒரு ரெக்கார்டுதான்…”
“ஓகே டாக்டர்… எனக்கு பூரண சம்மதம்… நீங்க எப்போ எங்கே என்ன பண்ணனும்னு சொல்லுங்க… அந்த சமயத்துல நான் அங்கே இருப்பேன்… வேற ஏதாவது…?”
“திலோவோட…”
ரேஷ்மா ஆரம்பிக்கும்போதே வேகமாக இடை புகுந்திருந்தாள் திலோத்தமா.
“டாக்டர்… அவர் வேலையை விட்டுட்டு வந்து பேசிட்டு இருக்கார்… எல்லாரரையும் அவருக்காக காத்துட்டு இருக்க சொல்ல முடியாது. மத்த டீடைல்ஸ் நாம பேசிக்கலாமே…” என்று அவசரமாக அடுத்த பேச்சு எதுவும் எழுந்து விடாமல் முற்றுப்புள்ளி வைக்க முயற்சித்தாள்.
“ம்ம்… ஓகே மிஸ்டர் அமரவர்மன்… நீங்க உங்க வேலையை பார்க்கலாம்… சீக்கிரமே உங்களுக்கு பார்வை கிடைச்சிடும்னு நம்புவோம்…”
“தேங்க்ஸ் டாக்டர்…”
வேகமாக அவனது இணைப்பினை துண்டித்து ரேஷ்மாவிடம் தேவையான விளக்கங்களை பெற்றுக் கொண்டாள்.
மொத்த இணைப்பையும் துண்டித்தபின் இழுத்து மூச்சுவிட்டு தன்னை ஆசுவாசப்படுத்தினாள்.
அவள் வகுத்து வைத்த திட்டங்கள் ஒவ்வொன்றிலும் மெல்ல மெல்ல வெற்றிப் படிகளில் ஏறிக் கொண்டிருக்கிறாள். உச்சத்தை தொடும் நாள் என்பது அவள் அவன் பார்வையை பெற்று அழகோடு சிரிக்கும் அந்த நாள்தான்.
எந்த பெண்ணுமே அனுபவிக்காத ஒரு கொடும் துயரத்தை இதயத்தில் ஏற்றி இருக்கிறாள் இந்த நொடியில். தங்களது காதலில் முகிழ்த்த கர்ப்பத்தின் தடத்தை கணவனிடம் மட்டுமே முதலில் வெளிப்படுத்தி மகிழ்வாள் ஒரு மனைவி.
அந்த பாக்கியம் கிட்டாத துரதிர்ஷ்டசாலி ஆகிப் போனாள் திலோ.
இன்னும் சில நாட்களில் மொத்தமாய் கரைந்து போக காத்திருக்கும் கொடூரத்தை யாரிடம் என்னவென்று சொல்லிவிட முடியும்..? காலம் முழுக்க இதயத்தில் அழுந்தப் போகும் பாரத்தை இந்த நொடி முதலே சுமக்கத் தயாராகி இருந்தாள் கிலோ.
அனைத்தும் எதற்காக..?
அவளவனுக்காக…
அவள் கொண்ட காதலின் வீரியம் தன் கருவையே பணயம் வைத்திருந்தது.
என்ன செய்யப் போகிறாள்..???
(தொடரும்)