• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

குழலில் காற்றாகினாள் - 24

STN - 29

Member
குழல் - 24

மிகவும் சோர்ந்து முகமும் கண்களும் வீங்கி தளர்ந்து போய் வீட்டிற்குள் நுழைந்திருந்தாள் திலோ… இன்னும் இரண்டு நாட்களில் வெளிநாடு செல்ல வேண்டி இருப்பதால் தேவையானவற்றை பேக்கிங் செய்யும் வேலையில் இறங்கி இருந்தனர் நண்பர்கள் இருவரும். ரஞ்சனியும் அன்று அங்குதான் வந்திருந்தாள் இளங்கோவிற்கு உதவுவதற்காக.

“எப்போடீ வந்த..?” குரலிலும் கூட சோர்வுடன் கேட்டபடியே அயர்ந்து போய் சோபாவில் அமர்ந்தாள் கிலோ.

“அரை மணி நேரம் ஆச்சு… நீ ஏன்டி என்னமோ மாதிரி டல்லா இருக்க…” என்றபடியே அருகில் வந்து அமர்ந்தாள் ரஞ்சனி.

“ஆமா என்னடா ஆச்சு..? முகமெல்லாம் வீங்கி இருக்கு… கண்ணெல்லாம் வீங்கி இருக்கு…”

கேட்டபடியே இளங்கோவும் வர அறைக்குள் இருந்து வேகமாக வெளியேறி வந்தான் அமரன்.

“என்னாச்சு பேபி..? உரத்து கேட்டபடியே வேகமாய் அவளை நெருங்கி அமர்ந்து அவள் முகத்தை வருடினான்.

“ஒ‌..ஒன்னும் இல்ல… இன்னைக்கு கொஞ்சம் வேலை அதிகம்…” என்றவள் சிரிக்க முயன்றாள்.

“ஆனா கண்ணு முகம் எல்லாம் வீங்கி இருக்கு… அழுதியா..?” தெளிவாக கவனித்து கேட்டிருந்தான் இளங்கோ.

“ஆமா… அழுதிருக்கா… நல்லாவே தெரியுது…” தானும் திடமாக கூறி இருந்தாள் ரஞ்சனி.

பொய் சொல்லி சமாளிக்க முடியாது என்பது தெரிந்து போனது.

“கோடிங் பண்ணும்போது ஒரு சின்ன மிஸ்டேக் பண்ணிட்டேன். சுப்பீரியர் ரொம்ப திட்டிட்டார்… அதான்… வேற ஒன்னும் இல்ல…”

“அழற அளவுக்கா திட்டினான்..?” என்ற அமரனின் முகத்தில் கடுகடுப்பு.

“சமயத்துல இதெல்லாம் நடக்கும் அமர். அப்புறம் அவரே கூப்பிட்டு சமாதானப்படுத்திட்டார்…” என்றவள் “சரி… நாம பேக்கிங் ஆரம்பிக்கலாமா..?” என்று வேற பேச்சிற்கு மாறி இருந்தாள்.

“இன்னைக்கே பண்ணணும்னு இல்ல… நாளைக்கு கூட பண்ணிக்கலாம்… பாதி முடிச்சாச்சு…” என்றவன் தன்னிச்சையாக அவள் தலையை வருடி தன் தோளில் சாய்த்துக் கொண்டான்.

அவனது அருகாமையும் அந்த அரவணைப்பும் உள்ளுக்குள் பொங்கிப் பிரவாகிக்கும் உணர்வுகளை உடைத்து வெளியேற்றத் தயாரானது. ஒரு சிறு கண்ணீர் துளியும் அனைத்தையும் கெடுத்துவிடும் என்று புரிந்து தொண்டைக் குழிக்குள் அனைத்தையும் விழுங்கினாள் திலோ.

அவள் சோர்வாக இருந்ததால் இளங்கோவை துணைக்கு வைத்துக் கொண்டு அவனுடன் பேசியபடியே இரவு உணவை தயாரித்து இருந்தாள் ரஞ்சனி. அனைவரும் பேசியபடியே உணவு உண்டனர். தான் சகஜமாக இருப்பதாக காட்டிக் கொண்டு ஆனவரை சிரித்தபடி அவர்களோடு தானும் உணவை எடுத்துக் கொண்டாள் திலோ. ஆனால் உணவு உள்ளே இறங்க மறுத்தது… மருந்தை விழுங்குவது போல் விழுங்கினாள்.

“அண்ணா… பெஸ்ட் ஆஃப் லக்… நல்லா பண்ணுங்க ரெண்டு பேரும்… நான் கிளம்புறேன்… நீங்க ஏர்போர்ட் போகும்போது நேரா அங்கேயே வந்துடுறேன்…” என்றபடியே எழுந்து கொண்டாள் ரஞ்சனி

“ரொம்ப டைம் ஆயிடுச்சும்மா… இங்கேயே தங்கிட்டு நாளைக்கு இப்படியே ஆபீஸ் போகலாமே…” என்றான் அமரன்.

“இல்லண்ணா… இளா என்னை கொண்டு வந்து டிராப் பண்ணிடுவார்… அவர் கூடதானே வந்தேன்… நாம ஏர்போர்ட்ல மீட் பண்ணலாம்…” என்றவள் திலோவிடமும் சொல்லிக் கொண்டு இளங்கோவுடன் கிளம்பிச் சென்றிருந்தாள்.

கணவனின் அன்பான பேச்சில் ஓரளவு சகஜமாகி இருந்தாள் திலோத்தமா. வேறொரு சாவி இருப்பதால் எத்தனை மணி ஆனாலும் இளங்கோ கதவை திறந்து கொள்வான் என்பதால் இவர்கள் கதவை பூட்டிக் கொண்டு படுக்கைக்கு சென்றிருந்தனர்.

“ஆர் யூ ஓகே பேபி…”

கேட்டபடியே அவளை நெருங்கிப் படுத்து மென்மையாக அணைத்து கொண்டான் அமரன்.

“ம்ம்…” என்றவள் தானும் அவன் நெஞ்சில் புதைந்து அழுத்தமாக முகத்தை பதித்துக் கொண்டாள்.

அவளது மன அழுத்தத்திற்கு தனது முத்தங்களும் அதனை தொடரும் தேடல் பயணமும் இதமாக இருக்கும் என்று எண்ணியவன் தனது அடுத்த கட்ட நகர்வை துவக்கி இருந்தான்.

“நீ இங்கே வர்றவரைக்கும் ஃபிஷிக்கல் ரிலேஷன்ஷிப் உங்களுக்குள்ள வேணாம்மா… இப்போதான் கரு கூடி இருக்கு… அது ரிஸ்க் ஆயிடும்…”

ரேஷ்மா கூறியது மூளைக்குள் உரைக்க அவனை தன்னிடமிருந்து விலக்கினாள் திலோ.

“ஏன்டா..? வேணாமா..? டயர்டா இருக்கா..?” தலை நிமிர்த்தி அவள் கன்னத்தில் இதழ் உரச மெல்லிய குரலில் கேட்டான்.

“நான்… நான்… இன்னைக்கு பீரியட்ஸ் அமர்…”

சொல்லி முடித்து இதழ்களை அழுத்தமாக கடித்துக் கொண்டாள்.

“ஓஓஓ… சாரி பேபி… எனக்கு தெரியாது… அதனாலதான் இவ்வளவு டயர்ட்னெஸ்… பத்தாததுக்கு அவன் வேற உன்னை டென்ஷன் பண்ணி இருக்கான். முடியலேன்னா லீவ் போட்டுக்கலாமே…இங்கே வா…”

மோகத்தில் கிறங்கி இருந்த விழிகள் சட்டென கனிவுக்கு மாறி காதலோடு அவளை கை விரித்து அழைக்க நகர்ந்து சென்று அவன் நெஞ்சில் படுத்துக் கொண்டாள். இதமாக அவளை அணைத்து மெல்ல முதுகோடு வருடினான் அமரன். அவளது கொதிக்கும் இதயத்திற்கு அந்த வருடலும் கணவனின் அன்பும் மயிலிறகால் வருடிய உணர்வை கொடுத்தது. மெல்ல கண்மூடிக் கொண்டாள்.

“வயிறு வலிக்குதா பேபி..?”

ஆதுரமாக கேட்டவன் அவளது மேல்சட்டையை விலக்கி வயிற்றை மெல்ல வருடிக் கொடுத்தான்.

அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. உதடு துடித்து நெஞ்சம் குமுறி தவித்தது. இதே வயிற்றுக்குள் அவனது விதை அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கிறது… தந்தையின் ஸ்பரிசத்தில் என்ன உணர்ந்திருக்கும்..? தான் தந்தையாகிவிட்ட மகிழ்வோடு ஆசையாக வருட வேண்டியவன் வேறு எண்ணத்தில் அல்லவா வருடிக் கொண்டிருக்கிறான். இப்படி ஒரு சூழ்நிலை எந்த பெண்ணுக்கும் வந்துவிடவே கூடாது என்று அவள் இதயம் அலறியது.

எத்தனை முயன்றும் அழுகையை கட்டுப்படுத்தவே முடியவில்லை. வெடித்து அழுதால்தான் ஓரளவு இதயம் அமைதி பெறும் என்று தோன்றியது. அவனிலிருந்து விலகினாள்.

“என்னடா..?”

“ரெஸ்ட் ரூம் போயிட்டு வந்துடறேன்… நீங்க தூங்குங்க…”

அடைக்கும் குரலை செருமி சரிப்படுத்தி கூறி குளியலறைக்குள் நுழைந்தவள் அப்படியே மடிந்து அமர்ந்து வாயை மூடிக் கொண்டு கதறி அழுதாள்.

மறுநாள் ஓரளவுக்கு தன்னை சமைளித்துக் கொண்டவள் அமரனுக்கு தேவையானவற்றை தெளிவாக பேக் செய்து கொடுத்திருந்தாள்.

“பேபி… 15 நாளைக்கு நீ இங்கே தனியா இருக்க வேணாம்… ரஞ்சனி கூட போய் தங்கிக்கோ… உனக்கு அங்கே இருந்து ஆபீஸ் இன்னும் பக்கம்தானே…”

அன்று இரவு அவளை நெஞ்சில் சாய்த்தபடியே கூறியிருந்தான் அமரன்.

“பாக்குறேன் அமர்… ஒரு வாரம் வேற பிரான்சுக்கு போற மாதிரி இருக்கும்… அது இங்கே இருந்துதான் பக்கம்…”

அவளும் அடுத்த நாள் பெங்களூரு கிளம்ப வேண்டுமே… சமாளிப்பாக பதில் அளித்திருந்தாள்.

அடுத்த நாள் காலை அனைவரும் விமான நிலையம் கிளம்பிச் சென்றிருந்தனர். ரஞ்சனி அங்கு தயாராக இருந்தாள். தத்தம் இணைகளை அணைத்து விடைகொடுத்து அனுப்பி இருந்தனர் இருவரும்.

அவளது சோர்ந்த உடலையும் முகத்தையும் பார்த்த ரஞ்சனி தன்னுடனே வந்து தங்கிக் கொள்ள சொல்லி கூற அமரிடம் கூறிய அதே காரணத்தை கூறி தன் வீட்டிற்கு கிளம்பி இருந்தாள் திலோ.

ஆயிற்று… மறுநாள் பெங்களூர் வந்து சேர்ந்தாயிற்று. ரேஷ்மாவின் மருத்துவமனையில் ஒரு பிரத்தியேக அறையில் அவளுக்கு தனிப்பட்ட முறையில் அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.

“எல்லாம் கிளியரா இருக்கு… ஒன்னும் பிரச்சனை இல்ல… நாளைக்கே பண்ணிடலாம்…” என்ற ரேஷ்மா அவளது உயிர்ப்பற்ற கண்களையும் எத்தனை மறைத்தும் வெளிப்பட்டுப் போன வேதனை படிந்த முகத்தையும் கண்டு கொண்டார்.

“ரொம்ப ஃபீலிங்கா இருக்கா..?” மென்மையாக அவள் கன்னத்தை வருடியபடியே கேட்டார்.

பதில் பேசாமல் கசப்பாய் புன்னகைத்தாள் திலோத்தமா.

“ஒரு பொண்ணா எனக்கும் இது உறுத்தலான ஒரு விஷயம்தான். எந்த அரசாங்கமும் இதற்கு முறையான அங்கீகாரம் கொடுக்கவே இல்ல. ரிஸ்கி ஃபேக்டர்லதான் இந்த வேலையை நான் செய்யறேன். அந்த அளவுக்கு அழுது புலம்பி என் மனசை நீ ரொம்ப கரைச்சிட்ட. ஒரு பக்கம் பார்த்தா சில நியாயங்கள் இருக்கிற மாதிரியும் தோணுது. ஒரு மனுஷனுக்கு கண்ணு கொடுக்கிறது உயிர் கொடுக்குறதுக்கு சமம். ஆனா அதுக்கு ஒரு உயிரை அழிக்க வேண்டிய கொடுமையும் சேர்ந்திருக்கு. அதுவும் அவர் உருவாக்கிய உயிரையே… எல்லா விஷயத்தையும் யோசிச்சுப் பார்த்தா நியாயங்களும் அநியாயங்களும் சரிசமமாதான் இருக்கு. ஆனா பெரிய ஆறுதலான விஷயம் என்னன்னா உன்னால இன்னும் எத்தனை குழந்தைகளை வேண்டுமானாலும் பெத்துக்க முடியும். ஆனா பார்வையை வேறு மார்க்கத்தில உன் கணவனுக்கு கொடுக்க முடியாது. அதுக்காகத்தான் இதுக்கு நான் ஒத்துக்கிட்டேன். இதே மாதிரி ஒரு சர்ஜரி பண்ணி சக்சஸ் பண்ணின அமெரிக்கன் டாக்டர் கிறிஸ்டிதான் இதை பண்ணப் போறாங்க. அவங்கதான் அத்தனை நம்பிக்கை கொடுத்திருக்காங்க. சோ… வருத்தப்படாதே… சீக்கிரமே உனக்கு அழகான இன்னொரு குழந்தை கிடைக்க நான் கடவுள்கிட்ட பிரார்த்தனை பண்ணுறேன்…”

மருத்துவர் என்பதை தாண்டி ஒரு பெண்ணாக அவளுக்கு ஆறுதல் கூறியிருந்தார் ரேஷ்மா.

நடக்கப்போவது இதுதான்… கரு ஸ்டெம் செல்கள் உருவாக்கம்.

பொதுவாக ஸ்டெம் செல்களின் அத்தியாவசியமும் அதன் பயன்பாடும் ஓரளவு நமது மக்களிடையே பரவலான புரிதலை தோற்றுவித்துக் கொண்டுதான் இருக்கிறது. இன்னும் முழுமையாக சென்றடையவில்லை என்றாலும் நல்ல படித்த தெளிவான மக்கள் அதன் மகத்துவத்தையும் புரிந்து கொண்டிருக்கின்றனர். தீர்க்கப்படாத நோயையும் தீர்க்கக் கூடிய வல்லமை இந்த ஸ்டெம் செல் சிகிச்சையில் சாத்தியமாகும்.

அமரனின் முந்தைய சான்றுகளின்படி உடல் ரீதியாக முழுமையாக ஆரோக்கியமானவன்… இளவயது… ஏற்கனவே பார்வையை வைத்திருந்தவன்… பிறவிக் குருடன் அல்ல… முழுக்குருடனும் அல்ல… பத்து வயதுக்கு மேல்தான் பார்வை குறைபாடு அதிலும் அதீதமான வெளிச்சமும் மன அழுத்தமும் ஒன்று சேர்ந்து அவனது ரெட்டினாவை பாதித்திருக்கிறது.

வேறு எந்த அறுவை சிகிச்சை மூலமும் அவனது பார்வையை திரும்பப் பெறுவதற்கான சாத்தியங்கள் குறைவுதான். ஆனால் ஒரே ஒரு மார்க்கம்… ஸ்டெம் செல் ட்ரீட்மென்ட் மட்டுமே…

இதனை அவனுடைய உடலில் உள்ள எலும்பு மஜ்ஜையில் இருந்தோ வேறு பகுதியில் இருந்தோ எடுத்தும் கூட சிகிச்சையை மேற்கொள்ள முடியும். ஆனால் பார்வை கிடைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. இதைத்தான் இதற்கு முன்னரும் அவனுக்கு சிகிச்சை அளித்த பலரும் தெரிவித்திருந்தனர்.

அவனது பார்வையை மீட்க மிகவும் பலம் வாய்ந்த சக்தி மிக்க செல் அணுக்களை அவனுக்கு செலுத்தியாக வேண்டும். அது அவனது உயிரணுவில் உருவான ஒரு உயிராக இருக்க வேண்டும். அவனுக்கு குழந்தை பிறந்த பின் அந்த குழந்தையிடம் இருந்து எடுக்கப்படும் ஸ்டெம்செல் மூலம் இதே முறையை பயன்படுத்தி பார்வையை திரும்ப பெற முடியாதா என்ற கேள்வி எழலாம். ஆனால் அதற்கான வாய்ப்பிலும் வெள்றி கிடைக்கும் என்று சொல்ல முடியாது.

அதை தவிர்த்து அவனது குழந்தை கருவாக வயிற்றில் உதித்த வெகு சில வாரங்களுக்குள் அந்த கருவுக்கு வீரியமும் வேகமும் அதிகமாக இருக்கும். தொடர்ந்து அந்த செல்கள் நிறைய பிரிந்து அவற்றின் சக்தியை அதிகப்படுத்தும் வல்லமை பெற்றவையாக இருக்கும். அந்த கருவினில் இருந்து முழுமையாக ஸ்டெம் செல்களை எடுத்து சில நாட்கள் வளர்த்து அதன் மூலம் அவனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டால் பார்வை கிடைப்பதற்கான வாய்ப்புகள் 90% க்கு மேல் உண்டு. இதனை கிறிஸ்டி என்ற மருத்துவர் இதற்கு முன் ஒருவருக்கு நிகழ்த்தி வெற்றியும் கண்டுள்ளார்.

இவற்றையெல்லாம் எப்படியோ ஆராய்ந்து தெரிந்து கொண்டுதான் ரேஷ்மாவிடம் இடைவிடாமல் போராடினாள் திலோத்தமா. ஏனென்றால் வயிற்றில் இருக்கும் கருவை கொல்வது சட்டப்படி குற்றமானதும்கூட. அதுவும் இல்லாமல் இந்த சிகிச்சை முறையை எந்த சட்டமும் இதுவரை அங்கீகரித்ததில்லை. சட்டத்திற்கு புறம்பான ஒரு வேலைதான்.

தன் கண்ணுக்கு கண்ணான கணவனுக்கு கண் பார்வை வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தன் உயிரையும் கூட கொடுக்கும் அளவு துணிந்து நிற்கும் அந்த பெண்ணின் அளப்பரிய அளவிட முடியாத காதலில் அசந்து போய்தான் அவளுக்காக இதை ஒத்துக் கொண்டார் ரேஷ்மா.

இதோ அமரனின் விதை அவனுக்கு பார்வை தர தனது மொத்த உயிரையும் கொடுக்க தயாராகி இருக்கிறது.

மறுநாளே தெளிவான சிகிச்சைகளுடன் குழப்பம் இன்றி திலோவின் கருவில் இருந்து ஸ்டெம் செல்கள் முழுமையாக எடுக்கப்பட்டிருந்தன.

தாய்மை உணர்வை முழுமையாக உணரும் முன் தன்னவனுக்காக தன் குழந்தையை தாரை வார்த்துக் கொடுத்திருந்தாள் அவன் தர்மபத்தினி.

இனி அடுத்து நடக்கப் போவது..??

(தொடரும்)
 
Last edited by a moderator:

Gowri Karthikeyan

Well-known member
குழந்தை பிறந்த பிறகு, அம்மா ஓட placenta la இருந்து எடுக்கும் stem cells தானே usually preserve பண்ணுவாங்க?????
அது தானே highly precious stem cells🤔🤔🤔🤔🤔🤔......
 
Top Bottom