குழல் - 30
ஐந்து மாதம் மேடிட்ட வயிறுடன் அந்த மண்டபம் முழுக்க மகிழ்ச்சியாக உலவிக் கொண்டிருந்தாள் திலோத்தமா.
அளவான அழகான மண்டபம்… கூட்டமும் மிகவும் அளவான கூட்டம்தான். ஆனால் மண்டபம் நிறைந்த கூட்டம். உறவற்ற நான்கு பேரும் இணைந்திருக்கும் ஒரு அழகிய வைபோகம். இத்தனை நட்புக்களும் நெருக்கங்களும் கிடைத்ததே அவர்கள் வாழ்வின் வரம் அல்லவா.
ஆம்… இன்று இளங்கோ, ரஞ்சனி இருவரின் திருமணம்.
தான் ஆசைப்பட்டது போன்றே தனது நண்பனின் திருமணத்தை பிரமாண்டமாகவே நடத்திக் கொண்டிருக்கிறான் அமரவர்மன். அவர்களது வாழ்வில் அவர்களே தேடிக்கொண்ட உறவுகள்தான் அங்கு குழுமி இருக்கும் அனைவரும்.
தன் நண்பன் கண் பார்க்க தனது திருமணம் நடக்க வேண்டும் என்று ஆசை கொண்ட இளங்கோவின் ஆசையும் ஈடேறி இருக்கிறது. இதோ அவன் நண்பனின் விழிகள் எந்நேரமும் சிரித்துக் கொண்டல்லவா இருக்கின்றன.
அமரனின் வாழ்வில் வழித்துணையாய் இளங்கோவும் விழித்துணையாய் திலோவும் நுழைந்த பின்பு அவன் வாழ்க்கை அவனது குழலின் இசை போன்றே அத்தனை வசீகரம்தான்.
நண்பர்கள் இருவருமே தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளரின் ஆஸ்த்தான இசை கலைஞர்களாக திரை உலகில் தெளிவாகவே கால்பதித்து விட்டனர். அதையும் தாண்டி நிறைய நிகழ்ச்சிகள், சொந்தமான இசைக்குழு, யூடியூப் சேனல் என்று எந்நேரமும் இசை நோக்கியா பயணத்தில் அவர்களுக்கென்று ஒரு தனிக் கூட்டத்தை உருவாக்கி வைத்திருக்கின்றனர்.
வாழ்வில் ஒரு நல்ல நிலைக்கு உயர்ந்து தங்களுக்கான இணையையும் தெளிவாக கைப்பிடித்து ஒவ்வொரு நாளையும் இனிக்க இனிக்க சுவைக்கின்றனர்.
வாழ்வின்மேல் பெரிதான பற்றில்லாமல் இசையை மட்டுமே சுவாசமாக்கி அதன் மூலம் ஒரு நிம்மதி, நண்பனின் அருகாமை என்று வாழ்ந்திருந்த அமரனின் வாழ்வு திலோத்தமா என்ற ஓர் அழகிய தேவதையால் அவன் விழிகள் மட்டுமல்ல வாழ்வும்கூட ஒளிமயமாகிப் போனது.
காதலித்தே கொல்பவளை இவனும் காதல் செய்தே வெல்கிறான்.
அவர்களை விட்டுச் சென்ற முதல் தெய்வீகக் குழந்தையை விழிகளுக்குள் தேக்கி இதோ அவர்கள் காதலின் அடுத்த பரிசான கருவினை அவள் வயிற்றில் சுமக்க அவன் இதயத்தில் சுமக்கிறான்.
இளங்கோ திருமணம் முடிந்த பின்னும் அவர்களுடன் ஒரே வீட்டில்தான் வசிப்பது என்று அவர்களுக்குள் ஒப்பந்தமிட்டுத்தான் ஒவ்வொன்றும் நடந்து கொண்டிருக்கிறது.
இணைபிரியா தோழர்களும் தோழிகளும் வாழ்விலும் இணைபிரியாமல் வாழவேண்டும் என்று முடிவு செய்துள்ளனர்.
சுற்றங்கள் இன்றி இருந்தவர்கள் இனி அவர்களே ஒருவருக்கு ஒருவராக உற்ற பந்தமாக மாறி இனிவரும் நாட்களில் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாக வாழப் போகின்றனர்.
புதுத்தாலி கழுத்தில் மின்ன புத்தம் புது மலராக அமர்ந்திருந்த ரஞ்சனிக்கு அலங்காரம் செய்து கொண்டிருந்தாள் திலோத்தமா. அவளது வயிறு இவளது முதுகில் ஒட்டியபடி இருக்க பின்னால் நின்று பூ வைத்துக் கொண்டிருந்தாள். ஐந்து மாதங்கள் முழுமையாக நிறைவடைந்து இது ஆறாவது மாதம் தொடங்கியிருந்தபடியால் டொம்மென குழந்தையின் அசைவை தன் முதுகில் உணர்ந்திருந்தாள் ரஞ்சனி.
வேகமாக திரும்பியவள் “ஏய்… உன் பையன் அசையறான்டி... என் முதுகுல எட்டி உதைக்கிறான் பாரேன்…” என்று ஆசையாகக் கூற முன்னல் வந்து நின்று அவளது முன் நெற்றி முடிகளை சரிசெய்தபடியே சிரித்துக் கொண்டாள் திலோத்தமா.
“இது அவன் அப்பாவோட கதை பேசுற நேரம்… டைம் ஆச்சு… அப்பா எங்கேன்னு அசைஞ்சு பார்த்து கேட்கிறார் ஐயா…”
சிரித்தவளின் வயிற்றினை மெல்ல வருடி அங்கு ஒரு முத்தமிட்டாள் ரஞ்சனி.
“நீ பையன்தான்னு எங்க எல்லாருக்கும் முழு நம்பிக்கை இருக்கு… ஏன்னா நான் பொண்ணுதான் பெத்துக்கப் போறேன்… என் பொண்ணு உனக்குத்தான்… அத்தையை இப்பவே எட்டி உதைக்கிறியே கண்ணா…”
சொன்னபடியே மீண்டும் அவள் வயிற்றை வருட தொம்மென அவள் விரல்களிலும் அந்த அதிர்வை உணர்ந்தவள் விழிகள் விரித்து திலோவை நிமிர்ந்து பார்க்க அவளோ கடகடவென சிரித்திருந்தாள்.
“பொண்ணு பெத்து தரேன்னு சொல்லிட்டு அதுக்கான வேலையை பாக்காம என்கூட என்ன பேச்சு வேண்டி கிடக்குன்னு சொல்றான் என் பையன்… புரியுதா..?”
“அச்சோ…” வெட்கத்தில் முகத்தை மூடிக்கொண்டாள் ரஞ்சனி.
“சரிதான்… என்கிட்டயே இத்தனை வெக்கமா..? அப்போ என் அண்ணன் பாவம் இல்லையாடி…”
இன்னும் கொஞ்சம் அவளை சீண்டி சிலிர்க்க வைத்து இளங்கோவின் அறைக்கு அவளை அனுப்பி வைத்து தனது அறைக்குள் நுழைந்தாள் திலோ.
மெல்லிய புல்லாங்குழல் இசை அறை முழுக்க பரவியிருக்க கட்டிலில் சாய்ந்தபடி கண்மூடி இருந்தான் அமரன்.
கடந்த இரண்டு மாதங்களாக அவன் வீட்டில் இருக்கும் நேரங்களில் எல்லாம் அதிலும் மனைவியோடு தனிமையில் இருக்கும் நேரங்களில் எல்லாம் அவன் இசைத்த புல்லாங்குழல் இசைதான் காற்றோடு கலந்து அந்த அறை முழுக்க நிறைந்திருக்கும்.
“அப்போ உங்க பையனையும் உங்களை மாதிரிதான் உருவாக்கப் போறீங்க… சரியா..?” கேட்டபடியே அவன் நெஞ்சில் சாய்ந்து படுத்துக் கொள்வாள் திலோ.
“எந்த கட்டாயமும் நம்ம குழந்தைக்கு நான் கொடுக்க மாட்டேன்… அவனுக்கு என்ன விருப்பமோ அதுதான்… ஆனா இப்படி நீ கன்சீவா இருக்கும்போது மியூசிக் கேட்டா அது உனக்கும் சரி, நம்ம குழந்தைக்கும் சரி, ஒரு நல்ல அட்மாஸ்பியரை உருவாக்கிக் கொடுக்கும்... அதுக்குத்தான்…” என்றவன் அவளை புரட்டிபா படுக்க வைத்து அவள் கன்னங்களில் முத்தமிடுவான்.
சூல் கொண்டதால் ஏற்பட்ட இயல்பான பூரிப்பிலும் கணவனின் காதலிலும் இன்னும் கூடுதலாய் அழகாகி பளபளத்து ஒவ்வொரு நாளும் அவனை தன்னுள் சுழட்டி போட்டுக் கொண்டே இருக்கிறாள் அவன் காதல் ராட்சஷி.
இன்னும் இரண்டு மாதங்கள் வேலை செய்து முடித்து வேலைக்கு ஓய்வு எடுக்கும் எண்ணத்தில் இருக்கிறாள். குழந்தை பிறந்தபின் முழுக்க முழுக்க குழந்தையை கவனித்தால் போதும் என்று தெளிவாக கூறிவிட்டான் அமரன்.
“நம்ம வாழ்க்கையை குறை இல்லாமல் நடத்துற அளவுக்கு நல்ல வருமானம் எனக்கு இருக்கு. காசை தேடி ஓட வேண்டிய கட்டாயமோ அவசியமோ நமக்கு இல்லடி. இருக்கிறதை வச்சு நம்மால நிறைவா வாழ முடியும். உறவுகளோட அருமையே தெரியாம அந்த சந்தோஷத்தை பெருசா உணராம வாழ்ந்தவங்கதானே நாம. ஆனா நம்ம குழந்தைக்கு அந்த கஷ்டமெல்லாம் இருக்கவே கூடாது. அம்மா, அப்பா, அத்தை, மாமா இப்படி உறவுகள் அவங்க மூலம் கிடைக்கிற சந்தோஷங்கள் இதையெல்லாம் முழுக்க முழுக்க கொடுக்கணும். அதனால உன்னோட ஆசைக்காக இன்னும் ரெண்டு மாசம் வேலை பார்த்து முடிச்சுட்டு வேலையை ரிசைன் பண்ணிடு. உனக்கு ஒரு அடையாளத்தைத் தேடிக்கணும்னுதான் கஷ்டப்பட்டு படிச்சு நல்ல வேலைக்கு போய் நல்ல சம்பளத்தில இருக்க… அது எனக்கு புரியுது… ஆனா அதையெல்லாம் தாண்டி குடும்பம் உறவு அது சார்ந்த விஷயங்கள் இனி வரப்போற நம்ம வாழ்க்கைக்கு ரொம்ப ரொம்ப முக்கியம் இல்லையா. இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகல. உன் கையில படிப்பு இருக்கு. தேவைப்பட்டா திரும்ப கையில எடுத்துக்கலாம். ஆனா நம்ம குழந்தை முழுக்க முழுக்க நம்ம கவனிப்புல நம் அன்புல வளரணும்…”
அவளது எண்ணமும் அதேதானே. அவர்கள் அனுபவிக்க தவறியவற்றை அவர்கள் பெரும் செல்வங்கள் அனுபவிக்க வேண்டும் என்பதுதானே அவளது ஆசையும். கணவனின் எண்ணத்திற்கு முழுமையாய் தனது இசைவனை தெரிவித்திருந்தாள் திலோத்தமா.
இன்றும் அறைக்குள் நுழைந்து கணவனின் அருகில் அமர்ந்தவளை வாரி அணைத்து தன் நெஞ்சில் போட்டுக் கொண்டான். வழக்கம்போல் விரல்கள் அவளது வயிற்றை வருட இதழ்கள் அவள் கன்னங்களை வருடிக் கொண்டிருந்தன.
“இளங்கோ அவன் வாழ்க்கையை இன்னைக்கு ஆரம்பிக்கப் போறான்… என் மனசு ரொம்ப சந்தோஷமா இருக்குடி…”
அவள் கழுத்தில் புதைந்து வாசம் பிடித்தபடியே கூறியவனிடம் சிரிப்பை பதிலாக்கி அவன் சிகையை கோதிக் கொண்டிருந்தாள் திலோ.
“உங்க தங்கச்சி நமக்கு பொண்ணு பெத்து தரப் போறாளாம்… நம்ம பையனை இப்பவே புக் பண்ணி வச்சுட்டா…” என்று சிரித்தவளின் அழகை சில நொடிகள் ரசித்தவன் அவள் இதழ்களில் அழுத்தமாய் முத்தம் பதித்தான்.
“அடுத்து அவங்க பையன் பெத்துக்கட்டும்… நாம பொண்ணு பெத்துப்போம்… பொண்ணு கொடுத்து பொண்ணு எடுத்துக்கலாம்… இன்னும் சூப்பரா இருக்கும்தானே… நம்ம குடும்பத்துல இன்னும் நிறைய பேர் இணையும்போது ரொம்ப பெருசாயிடும்… எல்லாரும் ஒன்னுக்குள்ள ஒன்னா… யோசிக்கவே நல்லா இருக்கு இல்லடி…”
“அது சரி… உள்ளே இருக்கிற தலைவர் வெளியே வரவே இன்னும் நாலு மாசம் இருக்கு… நீங்க அடுத்தடுத்து பிளான் பண்ணிட்டீங்க…”
“ஆமா… நீ ஓகே சொன்னா அரை டஜன் பெத்துக்ககூட எனக்கு ஆசைதான்…” என்று கண்ணடித்து சிரித்தான்.
“எப்பா… என் உடம்பு தாங்காது சாமி…” என்றவளை மென்மையாய் அணைத்து அவள்மேல் பட்டும் படாமல் படர்ந்தவன் “இன்னைக்கு தாங்குமா..?” என்றான் காதோடு கிசுகிசுப்பாக.
அவன் எண்ணம் புரிந்து சிரித்தவள் “நான் என்ன மாட்டேன்னா சொன்னேன்…” என்று செல்லமாய் மூக்கை சுழிக்க முத்தங்களோடு மென்மையான ஒரு மோக முற்றுகை ஆரம்பமானது.
அங்கு முதலிரவு தம்பதியர் இருவருமே வெட்கச் சிரிப்போடு இப்பொழுதுதான் விரல் கோர்க்கத் தொடங்கி இருந்தனர்.
அவன் ஏதோ பேச நினைத்து தயங்கி பின் அவளை நெருங்கி மென்மையாக அவள் கன்னத்தில் முத்தமிட்டிருந்தான்.
“நீங்க ஏதோ சொல்ல வர்றீங்க… ஆனா இப்போ வேணாம்னு உங்களுக்கு தோணுது… அப்போ நான் சொல்லிரட்டுமா..?”
மெல்ல அவளிடமிருந்து விலகி என்ன என்பதுபோல் தலைசாய்த்து பார்த்தான் இளங்கோ.
“நாம நாலு பேரும் இனிமே ஒரே குடும்பமா இங்கே ஒன்னாதான் வாழப் போறோம். காலம் முழுக்க இதே சந்தோஷத்தோட இப்படியே வாழணும்னு நமக்குள்ள முடிவு பண்ணி இருக்கோம். எல்லா நேரமும் சிரிப்பும் சந்தோஷமும் அனுசரிப்புமா இருந்திட முடியாது. கண்டிப்பா சின்னச் சின்ன சண்டைகள் சங்கடங்கள் இதெல்லாம் நமக்குள்ள வரும். உங்களுக்கு என்கிட்ட ஒரு பெரிய குழப்பம் இருக்கு. நான் சட்டுனு ஒரு முடிவு பண்ணி பட்டுனு ஏதாவது பேசிடறேன். இதுக்கு முன்ன அதெல்லாம் நடந்திருக்கு. ஆனால் அந்த ரெண்டு விஷயமும் நிறைய பாடத்தை கத்துக் கொடுத்துடுச்சு. இப்போ நாம வாழ்க்கையை ஆரம்பிச்சுட்டோம்… இனி அப்படி நிதானம் இல்லாம எதையும் முழுசா ஆராயாம எந்த விஷயத்தையும் பேசமாட்டேன். அப்படியே நான் கொஞ்சம் முன்ன பின்ன இருந்தாலும் என்னை சரி பண்ண என் நிதானமான செல்லக் கணவன் நீங்க இருக்கீங்க… சண்டைகள் நமக்குள்ளேயும் வரும்… அவங்க கூடவும் வரும்… ஆனா அதெல்லாம் நமக்குள்ள இன்னும் இறுக்கத்தையும் நெருக்கத்தையும் அதிகப்படுத்துமே ஒழிய பிரிவினையை கொண்டு வந்துடாது. அதுக்கு நான் கேரண்டி. இனிமே நமக்கு அவங்கதான்… அவங்களுக்கு நாமதான்… நம்ம குழந்தைகள் உறவோடு வாழப் போறாங்க…”
அவன் இதயத்திற்குள் தேக்கி வைத்திருந்த அனைத்தையும் அவள் வாய்மொழியாக கேட்டவனுக்கு சொல்ல முடியாத மகிழ்ச்சியும் ஆச்சரியமும்… அவளை இழுத்து அள்ளி அணைத்து ஆசை தீர முத்தமிட்டவன் அவளை படுக்கையில் சரித்து அதே முத்தத்தை யுத்தமாக மாற்றத் தொடங்கினான்.
எதார்த்த வாழ்க்கையில் நிறைய ஏற்ற இறக்கங்கள் உண்டு… இன்பம் துன்பம், மகிழ்ச்சி துக்கம், கோபம் அன்பு, இவை அனைத்தும் கலந்த வாழ்க்கைதான் சுகிக்கும் சுவைக்கும்.
சிறுவயதிலேயே பல அனுபவங்களை கடந்து வந்தவர்கள் எல்லாவற்றையும் அழகாக சமாளித்து தங்களது வாழ்க்கையை இன்னும் இன்னும் அழகாக்கப் போகின்றனர்.
அமரனும் திலோவும் நட்பு என்னும் உறவில் இளங்கோ ரஞ்சனி மூலம் பெரும் வெற்றி கண்டவர்கள்.
ஆகச்சிறந்த அந்த நட்புக்கள் காலம் முழுக்க அவர்களோடு கைகோர்த்து பயணிக்கப் போகின்றனர்.
காதலுக்கு இலக்கணமாய் நட்பின் இலக்கியமாய் காவியமாக காத்திருக்கும் அவர்களது வாழ்வில் பொக்கிஷங்களாய் மழலைச் செல்வங்கள் இன்னும் கூடுதல் அழகை கொட்டிக் கொடுக்கப் போகின்றனர்.
கடும் பாறையையும் தகர்க்கும் சக்தி காதலுக்கு உண்டு.
மூங்கில் வெறும் மரமாய் இருக்கும்வரை அதன் நிலை வேறு…
அதனை செதுக்கி சீரமைத்து குழலாய் மாற்றும்போது அதன் பரிணாமம் மாறுபடும்.
ஆனாலும் வெற்றுக் குழலுக்கு வீரியம் இல்லையே…
அதில் ஆரோகணிக்கும் காற்றால் மட்டுமே குழல் அழகு பெற்றுவிடுமா…?
குழல்மீது காற்றை திணிக்கும் அனைவராலும் மயக்கும் இசையை கொடுத்துவிட முடியாதே.
அந்தக் குழலில் நிறையும் காற்று கீதமாய் நாதமாய் உருமாற இசையை காதலோடு அரசாட்சி செய்யும் ஒரு நபர் வேண்டும்.
இங்கும்கூட வெற்றுக் குழலாய் இருந்தவனின் மூச்சுக் காற்றாய் நிறைந்து அவன் வாழ்க்கை முழுக்க காதல் எனும் இன்னிசை மழையை கொட்டித் தீர்ப்பாள் அமரவர்மனின் திலோத்தமா.
சுபம்