புயல் 2
நேர்த்தியாக இருந்த அறையை, மெத்தையின் விளிம்பில் அமர்ந்த படி பார்வையிட்டுக் கொண்டிருந்தாள் ஆர்யங்கா. கழுத்தில் இருக்கும் மாலையைக் கூட கழற்றி வைக்க மனமின்றி அமர்ந்திருந்தாள்.
'இந்தத் திருமண முடிவு சரியானதா?' என்ற எண்ணம் மீண்டும் மீண்டும் கேள்வியாக வந்து அவளை நெருடியது. முன்பின் தெரியாத ஒருவனை, மணந்து அவன் அறையிலே அமர்ந்திருப்பதை நினைத்து அவளுக்கே ஆச்சர்யமாக இருந்தது.
'காரணம் தனக்காகவா? இல்லை அவளுக்காகவா? இல்லை அவனுக்காகவா? யாருக்காக தான் அவனை திருமணம் செய்து, இங்கே வந்து அமர்ந்திருக்கிறேன் ? ' என அவளுக்குள் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதில் தெரியாது குழப்பத்தில் இருந்தாள்.
ஸ்லீவ்லெஸ் டீஷர்ட், டிராக் பேண்ட் சகிதம் அணிந்து குளியலறையிலிருந்து தன்னை சுத்தம் செய்து விட்டு வெளியே வந்தவன், அவள் அப்படியே மாலையுடன் அமர்ந்திருப்பதை கண்டு அருகே சென்றான்.
"ஹேய் என்ன மாலையோடவே இருக்கப் போறீயா ? சாரி எனக்கு இந்த ஸ்மெல்லெல்லாம் பிடிக்காது. ஜஸ்ட் ஃபார்மாலிட்டிக்காக தான் போட்டுக்கிட்டேன். இது இனி தேவைப் படாது, தூக்கிப் போட்டுட்டு போய் ரெப்ரஷாயிட்டு வா !" என்றவன் அறையிலிருந்த சோபாவில் அமர்ந்து செல்லை எடுத்து உயிர்ப்பித்து பார்க்க ஆரம்பித்து விட்டான்.
அவளும் கழுத்திலிருந்து மாலையை கழற்றிக் கையில் வைத்துக் கொண்டவள், குப்பை தொட்டியை நோக்கி மெதுவாக நடந்தாள்.
மாலையையும் குப்பைத் தொட்டியையும் மாறி மாறி பார்த்து நின்றாள். அலைபேசியிலிருந்து கவனத்தை அவள் மீது செலுத்த, அவளது செயலைக் காண விசித்திரமாகத் தெரிந்தது.
"ஆர்யா ! அது ஜஸ்ட் ஒரு மாலை ! அதை டஸ்ட் பின்ல போட என்ன இவ்வளவு யோசனை உனக்கு?" சோபாவில் அமர்ந்த வாக்கிலே கேட்டான்.
அவனுக்கு பதிலளிக்காது அந்த மாலையை குப்பைத் தொட்டியில் போட்டாள். ' இந்த மாலைய போல ஒரு நாள் உன்னை தூக்கிப் போடத் தான் போறாங்க ஆர்யங்கா ! உன்னை கல்யாணம் பண்ணது உன்னோட காலம் காலமா வாழ இல்ல புரிஞ்சுக்க... அவங்க தேவை முடிஞ்சதும் உன்னை இந்த மாலைய போல வேண்டாதவளா தூக்கிப் போட்டுடு வாங்க ! இந்த மாலையா தான் உன்னை நீ நினைச்சக்கணும். அதே நினைப்போடு மட்டும் தான் இந்த வீட்ட விட்டுப் போற வரைக்கும் இருக்கணும். இந்த வீட்ல ஒருத்தர் கிட்ட கூட நெருக்கமாக இருக்க கூடாது நீ !" என்று தனக்குள்ளே எச்சரிக்கையும் கடிவாளத்தையும் போட்டுக் கொண்டு அந்த மாலையை குப்பைத் தொட்டியில் போட்டாள்.
அதை போட்டதும் நீள்விருக்கையில் அமர்ந்திருந்தவனை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தவள், பார்வையை திருப்பித் தனது பையிலிருந்து ஆடையை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் சென்றாள்.
அவளது அழுத்தப் பார்வைக்கு விடையறியாதவன், அவள் உள்ளே சென்றதும் தோள்களைக் குலுக்கி விட்டு மீண்டும் அலைபேசியில் கவனத்தைப் பதித்தவனுக்குள் ஒரு சந்தேகம்,
' மாலைய போடவே இவ்வளவு யோசிக்கறா ! இந்தக் மேரேஜ சீரியஸா எடுத்துப்பாளா?! தெளிவாப் பேசித் தான கூட்டிட்டு வந்தேன். ம்... ஓகே இன்னொரு முறை நியாபகப்படுத்திடலாம் !' எனத் தனக்குள்ளே சொல்லிக் கொண்டான்.
குளிர்ந்த நீரில் தன் பொன் உடலை நனைய விட்டாள். அங்கங்கள் நனைந்தாலும் அவள் மனம் கொண்ட அழலை மட்டும் எந்த நீராலும் அணைக்க முடியாது. அவள் பட்ட மனக் காயங்களிலெல்லாம் நீர் பட்டெரிவது உடலெங்கும் எரிந்தது. காயங்கள் பல நினைவுகளை கொடுத்தன, புதிதாக இன்று பதிவான நினைவுகளை கூட மீண்டும் அசைப் போட்டாள்.
***
ராஜேஸ்வரி "எதுக்கா அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சீங்க? அதுவும் இன்னைக்கி நம்ம பொண்ணுக்கு பெர்தே டே ஃபங்ஷன் இருக்கு. அத்தோட, இன்னைக்கி நம்ம பொண்ணோட மேரேஜ் அனோஸ்மெண்ட் பண்ண போறோம்... இந்த நேரத்தில நீங்க இவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சி வீட்டுக்கு வர கெஸ்ட் முன்னாடி நம்ம குடும்ப மானத்தை வாங்க போறீங்களா?"
"நம்ம பொண்ணுக்கு மேரேஜ் அனோஸ்மெண்ட் பண்ண போறேன் நீ சொன்ன, நான் சரி சொன்னேன். அதே போல என் பையனுக்கு நான் மேரேஜ் பண்ணி வச்சிருக்கேன் நீ..."என முடிக்கும் போதே,
"சோ நான் எதுவும் கேட்காம சரினு சொல்லணும் அதானே? நான் பண்றதும் நீங்க பண்றதும் ஒன்னாங்க? அவனுக்கு இப்போ கல்யாணம் பண்ண என்ன அவசியம்?"எனக் கேள்வி கணவனிடம் கத்தினார்.
"எனக்கு இந்தப் பொண்ணா பிடிச்சிருக்கு கல்யாணம் பண்ணி வைங்கப்பான்னு வந்து நின்னான். என் பையன் ரொம்ப நாள் கழிச்சி என்கிட்ட ஒரு விஷயம் கேட்டிருக்கான். அதை என்னால மறுக்க முடியல கல்யாணம் பண்ணி வச்சேன். அதுல என்ன இருக்கு?"
"என்ன பேசுறீங்க? அதுல என்ன இருக்கு கேஸ்வலா கேக்குறீங்க...! இன்னைக்கி வரப்போற நம்ம வி. ஐ. பீஸ் எல்லாம் கேட்பாங்க, அவங்களுக்கு என்ன பதில் சொல்லுவீங்க? பொண்ணுக்கு கிராண்ட்டா பெர்த்டே ஃபங்ஷன் வக்கிறீங்க, ஏன் பையனுக்கு மேரேஜ கிராண்ட்டா வைக்கல கேட்க மாட்டாங்களா? எல்லாருக்கும் நான் பதில் சொல்லிட்டே இருக்கணுமா? "
"இல்ல அவன் விருப்பத்தை தெரிஞ்சுட்டா மட்டும், நீ அவனுக்கு கிராண்டா மேரேஜ் பண்ணி வச்சிடுவீயா என்ன? அவன பத்தி நீ யோசிக்கறதே மறைந்து போயிட்டீயே ராஜி ! உன் பார்வை முழுக்க மாறிடுச்சி ராஜி ! பொண்ணை ஒரு மாதிரியும் பையனை ஒரு மாதிரி நீ பார்க்க ஆரம்பிச்சாச்சு... என் பையன் உன் கண்ணுக்கு தெரியல ! இனி தெரியவும் மாட்டான். ஆனா என்னால அப்படி இருக்க முடியாது எனக்கு என் பொண்ணும் பையனும் ஒன்னு தான். அவனுக்கு நான் செய்ய வேண்டிய கடமை இருக்கு நான் செய்றேன். நீ அவங்களை அக்சப்ட் பண்ணலனாலும் அவங்க இங்க தான் இருப்பாங்க... இது அவனோட வீடு !"என்றார்.
"இன்னைக்கே அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணுமா? ஃபங்ஷன் முடிஞ்சது உங்க கூத்த வச்சுக்க வேண்டியது தான?" என முகம் சுளிக்க, மகனின் கல்யாணம் அவருக்கு கூத்தாகத் தெரிவதை எண்ணி விரக்தியில் சிரித்தான் பிருத்வி மௌலி !
"மக கல்யாணத்தை பத்தி சொல்ல ஊர கூட்டுவ! மகன் கல்யாணம் உனக்கு கூத்தா தெரியுதா? எப்படி இப்படி மாறின ராஜி நீ? உனக்கு ஒரு பொண்ணு மட்டும் தாங்கற நினைப்பு தான் இருக்கா? அவன் நீ பெத்தவன்ற எண்ணம் இல்லையா?"என ஆதங்கமாக கேட்டார்.
அவரால் பதில் பேச முடியவில்லை... அவரையும் பிருத்வியையும் அழுத்தமாகப் பார்த்து விட்டு உள்ளே போய் விட்டார்.
தந்தையின் முன் வந்து நின்ற பிரணவி, "அம்மாவ இவ்வளவு பேசுறீங்க, உன் பார்வை மாறிடுச்சின்னு, அவன் உன் பையன் இல்லையானு கேட்கிறீங்க, ஆனா உங்க பார்வை மட்டும் சரியா இருக்காப்பா? நீங்க மட்டும் உங்க பொண்ணப் பத்தி யோசிக்குறீங்களா? இன்னைக்கி உங்க பொண்ணுக்கு பெர்த்டே ஃபங்ஷன்... என் மேரேஜ் பத்தி அன்னோஸ்மெண்ட் பண்ண போற இந்த நேரத்துல இவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணுமா? இப்படி கல்யாணம் பண்ணி வச்சி எல்லாரோட சேர்த்து என் ஹாப்பி மூட் ஸ்பாயில் பண்றீங்கள இதுக்கு என்னப்பா அர்த்தம்? உங்களுக்கு அவன் மட்டும் தான் புள்ளையா? நான் இல்லையா? "எனக் கேட்கவும் ,
மகளை சிரிப்புடன் பார்த்தவர்
"இதுவரைக்கும் என் பையனை சார்ந்த எந்த விஷயமும் உங்களை பாதிச்சிருக்கா மா? இல்லையே இந்த விஷயம் மட்டும் உங்களை பாதிச்சிடுமா என்ன? உங்க ஹாப்பி மூட்ட என் பையனால ஸ்பாயில் ஆகாது டா ! நீ உன் பெர்த்டே ஃப்ங்ஷன் சந்தோஷமா செலிப்ரேட் பண்ணு ! "எனப் பாசமாக பேசி அவள் கன்னத்தை தட்ட,
அவளோ அவர் கையை தட்டி விட்டு" என் பையன் என் பையன்... சொல்றீங்க நான் உங்க பொண்ணு இல்லையா?"என ஆத்தங்கத்துடன் கேட்டாள்.
"நீயும் என் பொண்ணு தான்டா ! அதுல என்ன உனக்கு சந்தேகம்?"
"அப்ப ஏன் இப்படி ஒரு காரியத்தை பண்ணீங்க?"
அதற்கும் கோபம் கொள்ளாமல்" உனக்கு நல்லது பண்ண உன் அம்மா ! உன் அம்மாவோட சொந்தங்கள், என் சொந்தங்கள் நிறைய பேர் இருக்காங்க. ஆனா என் புள்ளைக்கு நான் மட்டும் தான் இருக்கேன். அவனுக்கும் ஒரு நல்லது பண்ணனும்ன்ற ஆசை எனக்கு மட்டும் தான் இருக்கு... உன் சந்தோஷம் எவ்வளவு முக்கியமோ அதே அளவு அவன் சந்தோஷமும் எனக்கு முக்கியம் !"எனக்கு விளக்கம் கொடுக்க, தந்தையின் பதிலை எரிச்சலடைந்தவள், இதற்கு காரணமான உடன்பிறந்தவனை பார்வையால் எரித்து விட்டு உள்ளே சென்று விட்டாள்.
"ஏன் மச்சா இப்படி பண்ணீங்க?"என மேகன் கேட்கவும்" அவங்களுக்கு சொன்ன பதில் தான் உனக்கும் மேகா ! போ போய் ஃப்ங்ஷனுக்கு தேவையானத பாரு !"என்று அனுப்பி வைக்க, அவர்கள் யாரும் அவரை எதிர்த்து எதுவும் கேட்கவில்லை.. உள்ளே சென்று விட்டார்கள்.
ஆர்த்தி தட்டோடு நின்றிருந்த கனகாவைப் பார்த்தவர், " ஆர்த்தி எடு கனகா !"என்றார்.
அவளும் ஆர்த்தி இருவர் நெற்றிலும் திலகமிட்டு, அவர்களை தாண்டி சென்றாள்.
"வலது காலை எடுத்து வச்சி உள்ள வா மா ! நீயும் தான்டா "என்றார்.
ஒரு சேர வலது காலை எடுத்து வைத்து உள்ளே வந்தனர்.
மகனின் தோளை தட்டி, "மகளே ! இது இனி உன் வீடு ! இவங்க எல்லாரும் உனக்கும் உறவு தான். இங்க நீ உரிமையா உனக்கு வேண்டியதை கேட்கலாம், செய்துக்கலாம், பேசலாம்... தயக்கமில்லாம கூச்சம் பார்க்காம எல்லாரோடவும் பழகுமா? இவங்களும் உனக்கு சொந்தம் தான் "என்றார்.
"இவளுக்கு ஓகே ! இங்க இருக்கிறவங்களுக்கு பா? அவங்களும் அப்படி நினைப்பாங்களா? " என்ற மகன் கேட்க கேள்விக்கு பதில் இல்லாமல்
"பிருத்வி!"என திணற,
"எதுக்குபா பொய் சொல்லி அவளை வரவேற்கணும், என்னை போல இவளுக்கும் இங்க உறவுனு சொல்லிக்க யாருமில்ல, நீயும் இவனை போல தனியாள் தான். உனக்கான மரியாதையை இங்க நீ எதிர்பார்க்க கூடாதுனு உண்மை சொல்லிக் கூட்டிட்டு வாங்கப்பா !
சில நேரம் உண்மையை விட பொய் ஆறுதலா இருக்கும்ன்னு நினைச்சு சொன்னாலும் பொய்யோட சாயம் அதிக நேரம் இருக்காதுப்பா சீக்கிரம் மறஞ்சுடும் ! உண்மை தெரியும் போது ஏமாற்றமும் வலிக்கும் ஆறுதல் சொல்லிட முடியாது. ஷி க்னோஸ் எவ்ரி திங் பா ! அவளுக்கு என்ன பத்தி எல்லாம் தெரியும். நீங்க பொய் திரை போட்டு எதுவும் சொல்ல வேண்டாம்"என்றவன் முறுவலுடன் தந்தையைப் பார்க்க, அவர் முகமோ வலியில் கசங்கியது.
அவர் தோளை தட்டி விட்டு உள்ளே நடந்தான். அவளும் உடன் சென்றாள். ஆனால் அவர்களது பேச்சில் அவள் மனம் தொக்கி நின்றது.
' இவன் என்ன சொல்றான்? என்ன பேசுறான்? ஒன்னும் புரியல. எனக்கு எல்லாம் தெரியும் சொல்றான் ! ஆனா இவன பத்தி எனக்கு எதுவும் தெரியாதே ! எதுவும் சொல்லாம கூட்டிட்டு வந்துட்டு, இவளுக்கு எல்லாம் தெரியும் இவனே பொய் சொல்றான்... இவன புரிஞ்சுக்க முடியுமா என்னால?' என யோசனையோடு அவன் பின்னே சென்றாள்.
தன் அறைக்குச் செல்ல இருந்தவர்களை தடுத்த ராஜமௌலி "விளக்கு ஏத்தச் சொல்லி ரெண்டு பேரும் கடவுளை வணக்கிட்டு போங்க !"என்றார்.
அவனும் தந்தைக்காக பூஜை அறைக்குள் அவளை அழைத்து சென்றான். அவள் விளக்கு ஏத்த, இருவரும் கடவுளை வணங்கிவிட்டு அறைக்குச் சென்றனர்.
***
உடையை மாற்றி கூந்தலை துவாலையில் உலர்த்திய படி
வெளியே வந்தவளுக்கு கொஞ்சம் சங்கட்டமாக இருந்தது. குளித்து விட்டு வந்ததும் பசி எடுக்க அவனிடம் எப்படி கேட்பதென்ற தயக்கமுன் வேறு... அவன் முதுகை வெறித்து பார்த்தாள்.
இவனும் அலைபேசியில் "முத்து அண்ணா சாப்பிட என்ன இருக்கு?"என்றான். அவள் மனதை படித்தது போல, விழிகளை அகல விரித்தாள்.
அங்கிருந்தவரோ "தம்பி சாப்பட எதுவும் இல்ல தம்பி ! இங்க சமையல் மேப்பார்வை பார்த்திட்டு இருக்கேன். உங்களுக்கு எ..."என இழுத்த தோணியிலே புரிந்து கொண்டவன் அலைப்பேசியை வைத்து விட்டு அடுத்த கணம் ஸ்விகி செயலியை திறந்து, "உனக்கு என்ன வேணும்?" என அவளிடம் திரும்பாமலே கேட்டான்.
அவன் கேள்வியில் சுதாரித்தவள் "எதுனாலும் ஓகே"என்றாள்.
அவனும் இருவருக்கும் பிரியாணியை ஆடர் செய்தவன், மீண்டும் முத்துவிற்கு அழைத்து" ஆடர் பண்ணிருக்கேன் பார்சல் வரும் என் ரூமுக்கு கொடுத்து விடுங்க"என்று கட்டளையிட்டவன், கைகளை முறுக்கி கொண்டு எழுந்தான்.
அவனையே பார்த்திருந்தவள் சட்டெனப் பார்வையை திருப்பிக் கொண்டாள். "எனக்கு கொஞ்சம் டயர்டா இருக்கு. ஆடர் பண்ணது வந்ததும் சாப்ட்டு ரெஸ்ட் எடு ! நான் தூங்க போறேன். என்னை டிஸ்டர்ப் பண்ணாதே "என்று மெத்தையில் படுத்துக் கொண்டான்.
அடுத்த அரைமணி நேரத்தில் அவர்கள் ஆர்டர் செய்த பிரியாணி பார்சலும் வர, முத்து அதை வாங்கி பிருத்வி அறைக்கு கொண்டு செல்ல,
இடம் மறித்து நின்ற மேகன் அவனிடம்"யார் ஆடர் பண்ணிருக்கா? யாருக்கு சாப்பாடு கொண்டு போற முத்து?"எனக் கேட்கவும் அவனோ பக்கத்திலிருக்கும் ராஜமௌலியை பயத்துடன் விழித்தவன்,
"பிருத்வி ஐயா தான் ஆர்டர் போட்டாருங்கயா ! ஆர்டர் வந்ததும் வந்து கொடுக்கச் சொன்னாருங்கயா?"
"ஏன் இங்க என் மகனுக்கு சாப்பாடு கூட இல்லையா ? இல்ல இங்க சமைச்சி கொடுக்க தான் ஆள் இல்லையா? முத்து நீ என்ன பண்ணிட்டு இருக்க?"
"இல்லங்கயா அம்மா அங்க சமையல் வேலைய மேப்பார்வை பார்க்க சொன்னாங்கயா ?"என்றான் பயத்துடன்.
"இப்ப எதுக்கு கத்திறீங்க? இங்க எல்லாருக்கும் ஃபங்ஷன் வேலைய பிரிச்சி கொடுத்தாச்சி, அந்த வேலை இருக்கறனால சமைக்கல... அதுக்கு என்ன இப்போ?"
"இவங்க வேலையில இருக்கறதால தான ஃபங்ஷன் வேலைய பார்க்கறாங்க... சமைக்க கூட நேரமில்லாத இவங்கள வேலையை விட்டு தூக்கிட்டா என்ன!"எனக் கேட்கவும்
" ராஜா !"எனக் கத்தினார் ராஜேஸ்வரி.
"என் பையனுக்கு போக தான் இங்க எல்லாம்... அவனுக்கே சமைச்சு கொடுக்க ஆள் இல்லாதப்ப இங்க எதுக்கு இத்தனை வேலை ஆட்கள் எல்லாரையும் ஃபையர் பண்ணிடுவேன்"என்று கோபத்தில் சீற, வேலையாட்கள் பயந்து போனார்கள்.
கீழே ஆரவம் கேட்டு அறையிலிருந்து வெளியே வந்த ஆர்யா, ராஜமௌலியின் கோபத்தைக் கண்டாள்.
"இது தான் லாஸ்ட் வார்னிங்! இனி இது போல நடந்தது, நீங்க எல்லாரும் இங்க வேலை பார்க்க மாட்டீங்க !"என மிரட்டியவர், மருமகளை பார்த்ததும் பார்வையை மாற்றி விட்டு முத்துவிடம் கண்ணைக் காட்டினார்.
அவனும் பார்சலை அவளிடம் நீட்டினான்.
பார்சலை வாங்கியவள் ராஜமௌலியைப் பார்க்க, அவரோ கோபத்தை அடக்கிக் கொண்டு
"சாரி மா ! இனி இது போல நடக்காது"என்றார். "இட்ஸ் ஓகே அங்கிள் " என்று உள்ளே சென்று விட்டாள்.
அனைவரையும் ஒரு பார்வைப் பார்த்து விட்டு வெளியே சென்று விட, மச்சானின் கோபத்தை வெகு நாட்களுக்கு பின் பார்க்கிறார் மேகன். ராஜேஸ்வரிக்கோ கொஞ்ச நாள் இல்லாத தலைவலி மீண்டும் வந்தது போல இருந்தது.
உள்ளே வந்தவளுக்கு உறங்கும் அவனையும் அவனது குடும்பத்தை பற்றியும் எந்த ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை. ஆனால் ஒன்று இவனது தந்தையைத் தவிர மற்ற அனைவரும் இவனை ஒதுக்கி வைத்திருக்கிறார்கள் என்று தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது.
அதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்பதை அவள் யோசிக்க விரும்பவில்லை..
'நானே இங்க தேவையில்லாத ஆணி தான் எனக்கு எதுக்கு இந்த வேண்டாத ஆணி...? ' என்று ஆர்வமில்லாமல் அதை விட்டு விட்டாள்.
அவனது பக்கங்களை அறிந்து கொண்ட பின் பேதையவள் என்ன செய்வளோ?!

Author: ரோசி கஜன்
Article Title: குழல் யாசிக்கும் புயலே - 2
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.