குழல் யாசிக்கும் புயலே
புயல் 3
உணவு பொட்டலத்தை கையில் ஏந்திய படி அறைக்குள் நுழைந்தாள் ஆர்யங்கா.
கீழே நடப்பதை அறியாது மெத்தையில் உறங்கும் பிருத்வியை ஒரு கணம் பார்த்து பெருமூச்சு விட்டவள் தண்ணீர் குடுவையை அருகில் வைத்துக் கொண்டு ஒரு பொட்டலத்தை மட்டும் பிரித்துச் சாப்பிட்டாள்.
அறையை சுற்றிப் பார்த்த படி உண்டவளின் கண்களில் அவனது புகைப்படங்கள் சிக்கின. அனைத்து புகைப்படங்களில் அவன் மட்டுமே நின்றிருந்தான். தாயுடனோ தங்கையுடனோ நிற்பது போல ஒரு புகைப்படமும் இல்லை. ஒரு புகைப்படத்தில் மட்டும் தந்தையுடன் நிற்கிறான். மற்ற குடும்பத்தினருடனான புகைப்படங்கள் அங்கே ஏதும் இல்லை.
' இவனை ஏன் மொத்த குடும்பமும் வெறுக்கிறது? அப்படி என்ன தான் இவன் செஞ்சான்?' என மனம் உள்ளுக்குள் கேள்வியை எழுப்ப, அதே மனம் 'நமக்கு எதுக்கு?' என எண்ணியும் கொண்டது.
உண்டு முடித்தவள், அங்கிருந்த நீள் இருக்கையில் சென்று படுத்துக் கொண்டாள். உறக்கம் கண்கள் தழுவ கண்களை மூடி உறங்கினாள்
****
தேவேந்திரமேகனும் விஜயராகவ மௌலியும் சிறுவயது தோழர்கள் ஒன்றாக சேர்ந்து எழுப்பிய கட்டடத்தில் தான் இன்று மேகன் வம்சத்தினரும் மௌலி வம்சத்தினரும் வசித்து வருகிறார்கள்.
பெரியவர்கள் இருவர் ஆரம்பித்த "MM" மசாலா கம்பெனியை இன்று அவர்களது பிள்ளைகள் சிரத்தையுடன் நடத்தி வருகிறார்கள்.
தமிழ்நாட்டு அளவில் முதலிடமும் இந்திய அளவில் ஐந்து இடங்களுக்குள் ஒன்றாக இருக்கிறது இந்த "MM " மசாலா கம்பெனி.
தேவேந்திரமேகனுக்கு கண்ணம்மாவிற்கும் மூன்று பிள்ளைகள் மூத்தவன் தன்வேந்திர மேகன், இரண்டாவது தனராஜேஸ்வரி மூன்றாவது அமிர்தா !
விஜயராகவமௌலிக்கும் மீனாட்சிக்கும் பிறந்தவர்கள் தான் ராஜமௌலி, ரவி மௌலி இருவர் மட்டுமே.
ராஜேஸ்வரி, ராஜமௌலியை காதலித்து கரம் பற்றினார். இருவருக்கும் பிறந்த முத்துக்கள் பிருத்வி மௌலி , பிரணவிமௌலி.
அமிர்தாவையும் ரவிக்கு கட்டி வைக்க எண்ணினார்கள். ஆனால் ரவி தன்னுடன் படித்த பெண்ணை காதலித்ததால் பெற்றவர்களிடம் தெரிவித்தார்.
தங்கள் குடும்பத்திற்கு இணையாக பெண் வீடும் வசதி படைத்திருக்க, அவர்கள் காதலுக்கு சம்மதம் தெரிவித்து திருமணம் செய்து வைத்தனர்.
ரவிக்கும் செல்வராணிக்கும் பிறந்த ஒரே முத்து ருத்விக் மௌலி.
தன்வேந்திரமேகனுக்கும் பார்வதிக்கும் பிறந்த முத்துக்கள் வித்யூ மேகன், மகள் வினையா மேகன்.
அமிர்தாவிற்கும் சேகரனுக்கும் பிறந்த ஒரே புதல்வி அனுபல்லவி.
***
தந்தை, மகனும் செய்த செயலால் சற்று முன் இருந்த பரபரப்பெல்லாம் அடங்கி, மொத்த குடும்பமும் கடுங்கோபத்தில் இருக்கின்றனர்.
நடுக்கூடத்தில் நடுநாயகமாக ராஜேஸ்வரி அமர்ந்திருந்தார். ராஜமௌலியை தவிர பெரியவர்கள் அனைவரும் கூடத்திலே ஒன்று கூடியிருந்தனர், இளையவர்கள் பிரணவிக்கு ஆறுதலாக அவளுடன் அறைக்குள் இருந்தனர்.
" ராஜிக்கா ! அன்னைக்கே சொன்னேனே இவனால நமக்கு அவமானம் தான். இவன வீட்டுல வச்சிருக்க வேணாம், அனுப்பிடுங்கனு பல தடவ தலைப்பாட அடிச்சிக்கிட்டேன். நீங்களும் கேக்கல மாமாவும் கேக்கல ! இப்போ மறுபடியும் நமக்கு அவமானத்தை தேடி தர்றது போல எவளையோ இழுத்துட்டு வந்திருக்கான். இன்னைக்கு நடக்கிற ஃபங்க்ஷன்ல யார் முகத்திலையும் சிரிப்பு இல்லாம பண்ணிட்டான் உங்க புள்ளை. முக்கியமா பிரணவி ! பாவம் அவ முகத்துல இருந்த மொத்த சிரிப்பும் வத்தி போச்சி ! எல்லாம் உங்க புள்ளையால ! " என நொடித்துக் கொண்டார்.
"அண்ணி! அண்ணன் இப்படி ஒரு காரியம் பண்ணுவார் நான் எதிர்பார்க்கல இன்னைக்கு வரவங்க எல்லாரும் நம்மளை தான் கேள்வி கேட்பாங்க... அவங்களுக்கு என்ன பதில் சொல்றது? குடும்பமா சந்தோசமா இருக்க வேண்டிய நேரத்துல யாரும் ஒரு சொல் சொல்லிட்டாலும் நமக்கு தான அவமானம் அண்ணி! அண்ணன் கிட்ட சொல்லி பிருத்வியை அந்த நேரத்துல வெளிய வர கூடாதுன்னு சொல்லி வைங்க.. இல்லைன்னா வரவங்க கேக்குற கேள்விக்கு பதில் சொல்லிட்டு இருக்கணும் நாம !"
"ரவி சொல்றது சரி தான் ராஜி. வீட்ல விசேஷம் நடுக்குதுனு அண்ணனுக்கு தெரியும் தான?! வேணும்னே இப்பிடி பண்றாரா?
இந்தக் கல்யாணத்தை இன்னைக்கி தான் இவர் நடத்தி வைக்கணுமா? வேற நாளே இல்லையா? என் மகன் வேற நேரத்துல வந்திடுவான், அவனுக்கு தெரிஞ்சா கோபப்படுவான். எனக்கு இந்த ஃபங்சன் நல்ல படியா நடக்கணும். அண்ணன் கிட்ட பேசி அவங்க ரெண்டு பேரையும் வெளிய வர விடாம பண்ணு ! அது தான் நமக்கு நல்லது ராஜி " என பார்வதியும் அவ்வாறே சொல்ல,
அமிர்தா வாயை திறக்கவே இல்லை. ஆனால் பிருத்வியை நினைத்து உள்ளுக்குள் கண்ணீர் வடித்தார்.
"ஏற்கெனவே அவனால நாம சந்திச்ச அவமானமே அதிகம் இதுல இது வேறயா? என் வீட்டு ஆளுங்களுக்கு என்னால பதில் சொல்லிட்டு இருக்க முடியாது சீக்கிரமா இதுக்கு ஒரு முடிவு கட்டுங்க அக்கா " என செல்வராணி மேலும் ஏத்தி விட , வேகமாக தன் கணவனை தேடி வெளியேறி இருந்தார் ராஜேஸ்வரி.
கூடத்தில் அமர்ந்து இவர்கள் பேசிக் கொள்வதை எல்லாம் வெற்று சிரிப்புடன் கேட்டுக் கொண்டிருந்தான் பிருத்வி.
பிருத்வியை தூக்கி வைத்து கொண்டாடிய குடும்பம் இன்று அவனை அவமானச் சின்னமாக பார்க்கிறது. அதற்கு முழு காரணம் அவனில்லை. அது விதி ! அவன் என்ன செய்வான்? அவன் செய்த தவறு போல அவளை ஒதுக்கி வைத்து விட்டனர்.
ஆனால் அதையெல்லாம் பெரிதாக எண்ணி வருந்தாமல் தனக்கென ஒரு பாதை அமைத்து அதில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறான் பிருத்வி மௌலி.
மொத்த குடும்பமும் பிருத்வியை அவமானமாக நினைக்க, அவனை கடவுளாக பார்க்கும் மக்களும் இருக்க தான் செய்கிறார்கள்.
"ஸ்மைல் ப்ளீஸ்" என்று சிறிதாக ஆரம்பித்த பேக்கரி தான், இன்று பெரிதளவில் கிளைகள் பரப்பி வெற்றிகரமாக லாபம் கொழிக்கிறது.
வேலை இல்லாத ஊனமுற்றவர்களின் எதிர்காலமென மாறி நிற்கிறது இந்த ஸ்மைல் ப்ளீஸ் பேக்கரி.
தனியாக ஃபேக்டரியும், பேக்கரி கடைகளும் என அவனுக்கு கீழ் இயங்கி கொண்டிருக்கின்றன .
அதில் ஏராளமான ஊன முற்றோர் , முதியவர்கள், ஆதரவற்றோர் என அதிக பேருக்கு வேலை கொடுத்து, அவர்களுக்கு தங்கும் வசதியும் செய்து கொடுத்திருந்தான்.
இதில் குடும்பமாக வாழ்பவர்களுக்கு வீடும், அவர்களின் குழந்தைகளுக்கான படிப்பு செலவு முழுவதுமாக எடுத்துக் கொண்டு, படிக்க வைப்பது என எல்லா வசதிகளும் அவர்களுக்கு செய்து கொடுத்திருந்தான் பிருத்வி. அவன் தான் அவர்கள் தினமும் வணங்கும் மனித கடவுள்.
வெளியே பிரச்சனை தீப்பற்றி எரிய, ராஜாவோ அறைக்குள் அமர்ந்து புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தார். புயல் போல உள்ளே நுழைந்தார் ராஜேஸ்வரி.ராஜாவின் செயலை கண்டு மேலும் கொதித்து போனார்.
"பண்றதெல்லாம் பண்ணிட்டு எதுவும் பண்ணாதது போல எப்படிங்க உங்களால இருக்க முடியுது!"
"அதுக்காக தம்பட்டம் அடிக்க சொல்றியா?"
"ம்ம்... ஓ அதையும் செய்வீங்களா?
"கண்டிப்பா ! இன்னைக்கி பிருத்வியோட திருமணத்தை சேர்த்து சொல்லிட வேண்டியது தான்" என்றவரை திகைப்போடு பார்த்தவர்.
"ஏன் மொத்த குடும்பமும் அவமானப் பட்டு போகணுமா?"
"இதுல என்ன அவமானம் இருக்கு ராஜி!"
"அவமானம் தான் ! உங்க பிள்ளையால எங்களுக்கு அவமானம் தான்"
"ராஜி ! பார்த்து பேசி, அவன் உனக்கும் பிள்ளை தான்"
"அதுக்காக அவன் பண்றதை எல்லாம் பொறுத்துட்டு போக சொல்றீங்களா? இப்போ எதுக்கு அவன் கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்கான்? அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும் இப்போ யார் அழுதா? என் பொண்ணோட சந்தோஷமே போச்சிங்க! "
"உனக்கு உன் பொண்ணு மட்டும் தானா ராஜி ! பிருத்வி நீ பெத்தவன் தானடி! அவன் மேல அப்படி என்னடி உனக்கு அவ்வளவு வெறுப்பு ? அவன் அப்படி என்ன செஞ்சிட்டான்? அவன தூக்கி வச்சி கொண்டாடின நாட்கள் எல்லாம் மறந்து போச்சா ராஜி ! வெளிய அவனை பார்க்குற பார்வையே வேற ! ஆனாலும் நீயும் நம்ம குடும்பம் தான் அவனை அவமானமா பார்க்கிறீங்க ! "
"எங்களை பொறுத்த வரைக்கும் அவன் இந்த வீட்டோட அவமானச் சின்னம் தான்.. அதை மாத்தவே முடியாது. தயவு செய்து சொல்றேன் காலையில பண்ணினது போல ஈவினிங் ஃபங்சனலையும் அப்படி எதுவும் பண்ணி தொலச்சிடாதீங்க ! உங்க பிள்ளையையும் அவன் கூட்டிட்டு வந்தவளையும் ஃபங்சன் முடியற வரைக்கும் ரூமுக்குள்ள இருக்க சொல்லுங்க ! இந்த குடும்பம் சந்தோஷமா இருக்கணும் நினைச்சா அதை மட்டும் பண்ணுங்க" என்று கையெடுத்து கும்பிட்டு கேட்டு விட்டு செல்ல, மனம் நொந்து போனார்.
பெத்த தாயே தன் மகனை அவமான சின்னமாக பார்க்கும் கொடுமை எல்லாம் இங்க தான் நடக்கிறது. பிருத்வியிடம் இதை எப்பிடி சொல்வதென்றும் அவன் எப்பிடி எடுத்துக் கொள்வானென்ற பதற்றமும் கலக்கமும் வேதனையும் அவரை உள்ளுக்குள் ஒரு வழி செய்தன.
அதே நேரத்தில் உயர்தர காரொன்று உள்ளே நுழைந்தது.
கூடத்தில் இன்னும் பேச்சு வார்த்தைகள் ஓடிக் கொண்டிருக்க, முருகன் தான் ஓடி வந்து , "சின்ன ஐயா வந்துட்டாருங்க !"என்று செய்தியை சொல்லி விட்டு போனான்.
அதுவரை கடுகடுவென இருந்தவர்களின் முகங்கள் அனைத்தும் பிரகாசித்தன !
"கனகா ஆரத்தி எடுத்துட்டு வா "என்று கட்டளையிட்ட படி பார்வதி மகனை வரவேற்க முன்னே செல்ல தன்வேந்திரனும் உடன் சென்றார். அவர்களை பின் தொடர்ந்தனர்.
கதவை திறந்து கொண்டு படு ஸ்டைலாக இறங்கினான் வித்யூ மேகன்
ஆர்த்தி சுற்றியதும், "மேகா !" என்ற பாசமான விளிப்புடன் வந்த தாய் தந்தையை கட்டி அணைத்து பாசத்தை பொழிந்தான். அங்கு நின்ற ஒவ்வொருவரையும் கட்டி தழுவினான்.
"எங்கம்மா அத்தை, மாமா, பிரணவி யாரையும் காணோம்?"
"அதுவா ஃபங்சன் விஷயமா உள்ள மாமாவும் அத்தையும் பேசிட்டு இருக்காங்க ! நீ உள்ள வா?"
"அதெப்படி வீட்டோட மருமகனை வரவேற்க மாமனாரும் இல்ல மாமியாரும் இல்ல , கட்டிக்க போற கணவன் வந்திருக்கேன் அவனை ஆசையா மறைஞ்சு நின்னு லுக்காவது விடணும்ல இந்த பிரணவி ! அவளையும் காணோம். இது தான் எனக்கு நீங்க தர மரியாதையா ? சாரி நான் வர மாட்டேன். மரியாதை இல்லாத இடத்துல நான் வர மாட்டேன் "என்று முறுக்கி கொண்டு நின்றான் வித்யூ.
"வித்யூ என்ன இது சின்ன பிள்ளை போல அடம்பிடிக்கிறது? உள்ள வா?"
"என்னங்க அவ சரியா தானே கேட்குறான். வருங்கால மருமகனை வரவேற்காம எங்க போனாங்க அண்ணனும் உங்க தங்கச்சியும் ! வீட்டுக்கு வர போற மருமகனை இப்பிடி வரவேற்காம இருக்கிறது" என அவரும் மகனுக்கு தூபம் போட, சரியாக வித்யூ வந்த விஷயத்தை கேட்டு இருவருமே வேகமாக வந்தனர்.
"வித்யூ " என அழைத்த படி வந்த ராஜியிடம் விலகி நின்று போக்கு காட்டினான்.
"என்னடா?"
"இது தான் உங்க வீட்டு மாப்பிள்ளைக்கு நீங்க தர மரியாதையா மாமியாரே? இப்பவே இந்த மரியாதைன்னா மேரேஜ்க்கு அப்புறம் இந்த மரியாதையும் கிடைக்காது போலவே" என அசட்டையாக சொன்னவனின் காதை செல்லமாக திருகியவர் " என்ன தான் நீ வளர்ந்து எங்க வீட்டு மாப்பிள்ளை ஆனாலும் நீ நான் வளர்த்த பிள்ளை உன்னை அப்படி தான் பார்ப்பேன். என் பார்வை மாறாது வித்யூ செல்லம்" என்று அணைக்க அவனும் "லவ் யூ த்த " என்று அணைத்துக் கொண்டான்.
அவரிடம் விலகி ராஜாவிடம் வந்தான் " ஹாய் மாமா ! " என்று அவரை அணைத்தவன் "எப்படி இருக்கீங்க?" என்று நலம் விசாரித்தான். அவரும் பதில் தந்த படி உள்ளே அழைத்து சென்றான்.
இதையெல்லாம் பால்கனி வழியே பார்த்துக் கொண்டிருந்த பிருத்வி, தலையை திருப்பி சோபாவில உறங்கி கொண்டிருக்கும் ஆர்யங்காவை பார்த்தான்.
வித்யூ உள்ளே வர, வினையா, ருத்விக், அனுபல்லவி அவனை சூழ்ந்தனர். அவர்களை தொடர்ந்து பிரணவியும் ஒட்ட வைத்த சிரிப்புடன் வந்தாள்.
"என்ன பெர்த் டே பேபி ! அத்தானை பார்த்திட்டு வெட்கப் படுவனு பார்த்தா முகத்துல சிரிப்பு கூட இல்லாமல் வர்ற என்ன விஷயம்!" என கேட்டான்.
"அதெல்லாம் ஒன்னுமில்ல அத்தான்" என்றாள் மழுப்பலாக, "இல்லையே யார் முகத்துலயும் ஃபங்சன் மோட்டே இல்லையே வாட் ஹாப்பன்?" என வினவ, அனைவரும் அமைதியாக இருக்க, பார்வதி தான்.
"உள்ளே வா அப்புறம் பேசிக்கலாம்" என்று அறைக்குள் அழைத்து போனவர் மொத்த விவரத்தை சொல்ல கொதித்து போனான்.
***
விழாவில் குடும்பம் மொத்தமும் மகிழ்ந்திருக்க, அதனை மொத்தமாக துடைத்தெடுக்க ஜோடியாக விழாவில் கலந்து கொள்ள உள்ளே வந்தனர் பிருத்வி ஆரியங்கா ஜோடி.
பிருத்வி தன் இணையுடன் ஜோடியாக வருவதை கண்ட வித்யூ திகைப்பூண்டை மிதித்தது போல நின்றிருந்தான். அவன் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியை கண்டு நக்கலாக சிரித்தான் பிருத்வி.