அத்தியாயம் -13
பாரதிக்கு தலைகால் புரியவில்லை.
நிஜமாகவே தன் காதலை ஏற்றுக் கொண்டு விட்டானா?’
தன்னை கிள்ளிப் பார்த்துக் கொண்டாள். வலித்தது..
ஆம்..! கனவல்ல நிஜம் தான் .
இத்தனை எளிதில் அவன் தனது காதலை ஏற்றுக் கொள்வான் என அவள் எதிர்பார்க்கவில்லை .
மகிழ்ச்சியில் தலை கால் புரியாமல் அசைவற்று நின்றிருந்தாள்.
அவளது அலைப்பேசிக்கு அழைப்பு வந்து விடவே நந்தினி தன் பின்னால் நின்றது தெரியாமல் செவிப்பொறியை காதில் மாட்டிக் கொண்டு பேசியபடியே வாகனத்தை எடுத்துக்கொண்டு சென்றாள்.
அருண்மொழியின் வார்த்தைகளை நந்தனியால் ஜீரணிக்கவே முடியவில்லை.
அவளது கால் வேறோடி நின்றிருந்தது.
இரண்டு வருடங்களாக தன்னைச் சுற்றி சுற்றி வந்து காதலை உணர்த்திக் கொண்டே இருந்தவன் திடீரென பாரதியை காதலிக்கின்றேன் என்று கூறியதை அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை .
கோபத்தில் கண்கள் சிவந்து ஏனோ கலங்கியது.
‘இவ்வளவு தானா அவனுடைய காதல்?. தன்னை காதலிப்பதாக கூறி விட்டு தற்போது அவனைக் காதலிப்பதாக அவன் வாயாலேயே ஒத்துக் கொண்டு விட்டானே..!கொஞ்சம் கூட பொறுமையில்லையா?’ என நினைத்தவளுக்கு அவள் அருண்மொழியை உதாசீனம் செய்து கொண்டிருப்பது மறந்து தான் போனது போலும்.
தான் செய்து கொண்டிருக்கும் தவறை ஒத்துக் கொள்ள மனமில்லை அவளுக்கு.
அவனது அதீத காதல் அவளுக்கு ஒரு வித போதையை கொடுத்தது. தனது அழகில் கர்வமும் வந்தது. எவ்வளவு அவனை கோபப்படுத்தினாலும் கௌரவம் பார்க்காது அவளையே பின் தொடர்ந்து வருவது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.
அவனது காதல் எவ்வளவு தூரம் உண்மையானது என்பதை பரிசோதிக்க விரும்பினாள்.
ஆனால் அவனோ திடுதிப்பென்று பாரதியை விரும்புவதாக கூறியது அவளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.
ஏதேதோ நினைத்து குழம்பியவள்,
அருண்மொழி விளையாட்டுக்குத் தான் கூறியிருப்பான் என்ற முடிவிற்கு வந்தாள். எனவே இதனை பெரிது படுத்தாமல் இருப்பதே நல்லது என விட்டுவிட்டாள்.
மறுபுறம் கனவில் அருண்மொழியுடன் வலம் வர ஆரம்பித்து விட்டாள் பாரதி.
பாரதியின் காதலை ஒத்துக் கொண்டவுடன் நந்தினியின் முகம் போன போக்கை அவனும் பார்த்துக் கொண்டே தானே இருந்தான். அவனுக்கு ஏதோ புரிவது போல இருந்தது.
எனவே அவன் நந்தனியின் பொறாமையை தூண்டி விட்டு அவளது வாயாலேயே காதலை ஒத்துக் கொள்ள வைக்க வேண்டும் என்ற எண்ணம் வலுவானது.
பாரதியிடம் பின்னால் சொல்லிக் கொள்ளலாம் என்று அலட்சியமாக இருந்தான்.
“சிம்ம விலாஸ்” என தங்கத்தகடுகளிலான பெயர்ப்பலகை வெய்யோளின் கதிரொளிப்பட்டு அரண்மனையின் வாயிலில் முன்பு ஒளிர்ந்து கொண்டிருந்தது .
தனது அறையிலிருந்த பொருட்களை எல்லாம் தூர வீசி கொண்டிருந்தான் மாறவர்மன்.
சுதர்சன ராஜசிம்மரின் ஒரே மகன்.
“ டேய்…! டேய்..! என்ன டா? ஏன் இப்படி பண்ணுற? எதுக்கு எல்லா பொருளையும் தூக்கி வீசிட்டு இருக்க?” என அவனை தடுக்க முயற்சித்தார் சுதர்சன்.
நாக்கை மடக்கிக் கொண்டு, “ ஏய்…! போயிடு…கிட்ட வந்த…கொன்னுடுவேன்…” என ஆக்ரோஷமாக கத்திக் கொண்டிருந்தான் அவன்.
ஆஜானுபாகுவான ராஜ தோற்றத்தில் இருக்கும் அவனை நெருங்கவே பயந்து நின்றனர் சுதர்சனரும் விஜயராணியும்.
அவ்வபோது மகனது திடீர் ஆவேசத்தில் பயந்து நடுங்கிக் கொண்டிருப்பார்கள் இருவரும் .
யாருக்கும் அவன் எப்போது எப்படி நடந்து கொள்வான் என்று தெரியாது.
அறை முழுவதும் பொருட்கள் உடைந்து சிதறியிருந்தது.
கூரிய கண்ணாடி துண்டுகளை எடுத்து பெற்றோரின் மீது வீசப்போனவனின் கைகளை பிடித்துக் கொண்டார் வீர ராஜசிம்மர்.
“என்னப்பா என்ன வேணும் உனக்கு? ஏன் இப்படி நடந்துக்குற?” என அமைதியான குரலில் வினவினார் வீர ராஜசிம்மர்.
அவரது குரலில் இருந்த அமைதி அவனை சற்று சாந்தப்படுத்தியது.
“எனக்கு தேவி வேணும்…” என்றவனின் வழிகளில் இருந்து நீர் வழிந்தது.
குழந்தை போல சுருண்டு படுத்துக் கொண்டான்.
கண்களை இறுக மூடி திறந்தார் வீரராஜசிம்மர்.திரும்பி தனது மகனையும் மருமகளையும் பார்வையினாலேயே சுட்டெரித்தார்.
சில வருடங்களுக்கு முன்பு வரை நன்றாகத் தான் இருந்தான் மாறவர்மன்.
ராஜவம்சத்தின் முதல் வாரிசான அவனுக்கு எப்பொழுதுமே பதவி ஆசை இருந்ததேயில்லை.
சாதாரண வாழ்க்கையை விரும்புவான். அவனும் அவனது தமையனும்( தனஞ்செயரின் மகன்) மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்.
இருவருக்கும் இரண்டாண்டுகள் மட்டுமே வயது வித்தியாசம்.
ஒருமுறை தொழில் நிமித்தமாக கொல்கத்தா சென்றிருந்த போது தேவி என்ற தமிழ்நாட்டுப் பெண்ணை மனப்பூர்வமாக காதலித்து திருமணம் செய்து கொண்டான்.
இவன் திருமணம் செய்து கொண்ட விஷயம் தமையனுக்கு மட்டுமே தெரிவித்திருந்தான்.
வெளியூரிலிருந்த அவனது தமையனும் தேவியை பார்த்திருக்கவில்லை..
மகன் திருமணம் செய்து கொண்ட செய்தி சுதர்சன ராஜசிம்மருக்கும் விஜயராணிக்கும் தெரிய வந்தது. பல கோடிகளுக்கு அதிபதியான தங்களுடைய மகன் ஏழை வீட்டு பெண்ணை மணந்து கொள்வதா?என கடுங்கோபத்தில் இருந்தனர்.
அவர்களை மேலும் கோபப்படுத்துவது போல மாறவர்மன் அவளை கையோடு தங்களுடைய இருப்பிடத்திற்கு அழைத்து வந்து விட்டான்.
ஆறு மாதங்கள் வரை தேவியுடன் மகிழ்ச்சியாக இருந்தான்.
திடீரென மர்மமான முறையில் தேவி கடலில் விழுந்து இறந்து விட்டாள்.
அவளுக்கு தாய் தந்தை என யாரும் இல்லாததால் அங்கேயே அவளுக்கு இறுதி காரியங்களை முடித்து விட்டனர்.
தேவியின் மீது அதீத காதலை வைத்திருந்தவனுக்கு அவளது திடீர் இறப்பு தாங்க முடியாமல் போயிற்று.
மன அழுத்தம் அதிகமாகியது. அதிகம் குடித்தான். அவளது நினைவு அவனை வாட்டி எடுக்கவே தற்கொலைக்கு இருமுறை முயன்றான்.
மிகவும் பிரயத்தனப்பட்டு இரு முறையும் அவனை காப்பாற்றி விட்டார்கள்.
பித்து பிடித்தவன் போல அமர்ந்திருந்திருந்தவனின் மனநிலை நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டே வந்தது.
மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றும் அவனை குடிப்பழக்கத்திலிருந்தும் மன அழுத்தத்திலிருந்தும் வெளிக்கொணர முடியவில்லை .
இடையில் அவனது தமையனின் இறப்புச் செய்தி கேட்டதில் அவனது மனநில இன்னும் மோசமடைந்து அவனை கட்டுப்படுத்தவே முடியாத அளவிற்கு சென்று விட்டது.
மீறி மருத்துவர் யாரேனும் அவனது உடல்நிலையை பரிசோதிக்க வந்து விட்டால் தலையில் கட்டோடு போகும் அளவிற்கு ஆக்ரோஷமாக மாறியிருந்தான்.
தேவியின் இறப்பு இன்று வரை மர்மமானதாகவே இருந்தது.
அதற்கு நேர்மாறாக தனது வெளிநாட்டு பெண் தோழிகளுடன் குடித்து விட்டு கும்மாளமிட்டுக் கொண்டிருந்தான் இளமாறன்.
“ ஏன்டா இப்படி பண்ணி மானத்தை வாங்குற? சொத்து கையில் வரணும்னா நீ கொஞ்சமாவது பொறுப்பா நடக்கணும் இளா “ என தலைபாடாக அடித்துக் கொண்டிருந்தார்கள் விஜயராணியும் சுதர்சன ராஜசிம்மரும்.,
அவனோ அவற்றையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் உல்லாசப் ப்ரியனாக வாழ்ந்து வந்தான்.
மந்தாகினியோ எப்படியாவது தனது மகன் ராஜ வம்சத்தின் பொறுப்புகளை நிர்வாகிக்க வேண்டும் என்று பேராசை கொண்டிருந்தார்.
அப்போது தான் முழுமையாக அனைத்து சொத்துக்களையும் அனுபவிக்க முடியும். ஒவ்வொரு முறையும் செலவிற்கு தந்தையின் கையை எதிர்பார்த்து நிற்கத் தேவையில்லை. இஷ்டம் போல் கோடிக்கணக்கான மதிப்பிலான சொத்துகளை ஆளாலாம் என மனக்கோட்டை கட்டிக் கொண்டிருந்தார்.
தனஞ்ஜெயரும் ஆதிரையும் எதிலும் பட்டுக் கொள்ளாமல் அமைதியாக தங்களுடைய மகனின் வருடத் திதியை எதிர்பார்த்து அமர்ந்திருந்தனர்.
அவர்களுக்கு தங்களுடைய மகனைத் தவிர சொத்துக்களோ…அதிகாரமோ பெரிதாக தோன்றவில்லை.
அரண்மனையின் அனைத்து கணக்கு வழக்குகள் மற்றும், அவர்களுக்கு சொந்தமான நிறுவனங்களின் வரவு செலவு கணக்குகள் ஆகியவற்றை மேற்பார்வை பார்த்து திறம்பட நிர்வாகித்து அனைத்து விபரங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பவள் சுகன்யா.
அரண்மனையிலேயே தங்கி இருந்து வீர ராஜசிம்மருக்கு மட்டுமே உண்மையாக இருக்கும் விசுவாசி.
அரக்கு நிறப்புடவையை நேர்த்தியாக உடுத்தி கொண்டையிட்டு ஒருவித நிமிர்வோடு வலம் வருபவள்.
யாருக்கும் அஞ்ச மாட்டாள்.
தவறென்றால் நொடியும் தாமதிக்காமல் முகத்திற்கு நேராக கூறி விடுவாள். ஆளுமையோடு புத்திசாலியாகவும் இருப்பதால் அனைவரும் அவளிடம் இருந்து சற்று தள்ளியே இருப்பார்கள்.
மந்தாகினி கூட அவள் எதிரே வந்தால் அடுத்த அறைக்குள் நுழைந்து விடுவார்.
ஏனெனில் அவர் செய்யும்
தகிடுதத்ததை நோண்டி எடுத்து அனைவரின் முன்னிலையிலும் மானத்தை வாங்கிவிடுவாள் என்கிற அச்சமே முக்கிய காரணம்.
சுகன்யா அவரை கண்டு கொள்ளாதது போல இருந்தாலும் ராஜசிம்மருக்குத் தெரியாமல் அவர் செய்யும் திருட்டு வேலைகளை கவனித்துக் கொண்டு தான் இருப்பாள்.
எவ்வளவு தூரம் சொல்கிறார் என்பதை அவரை முன்னே விட்டு பின்னே பிடிக்க காத்திருக்கின்றாள்.
தனது ஐபேடில் ஏதோ பார்த்துக் கொண்டே வந்தவள் மீது வேண்டுமென்றே வந்து இடிப்பது போல வந்து நின்றான் இளமாறன்.
சட்டென்று நகர்ந்தவள் அவனை முறைக்கத் தவறவில்லை.
“ ஹாய்…பேபி..! என்னை நீ கண்டுக்கவே மாட்டேங்குற. எவ்வளவு நாள் உன் பின்னாடியே நாய் மாதிரி சுத்தி சுத்தி வர்றேன். கொஞ்சம் கூட என்னைத் திரும்பி பார்க்க மாட்டேங்குற. எல்லா கேர்ள்ஸூம் எனக்காக நீ நான்னு போட்டி போட்டுட்டு என் கூட டேட் பண்ணுறாங்க. ஆனா…நீ மட்டும் தான் விலகி ஓடுற…வொய்…பேபி? என்னை பிடிக்கலையா? “ என்றபடி அவளை வழி மறித்து நின்றான் இளமாறன்.
அவனை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு, “ நாய் வேணா என் பின்னாடி வரட்டும் . அதுக்காக நான் நாய் பின்னாடி போக முடியுமா? நகருங்க..” என அவனது கையை வெடுக்கென்று தட்டி விட்டுவிட்டு வேகமாக சென்றாள்.
அவள் தன்னை ‘நாய்’ என்றதும் அவமானத்தில் முகம் சிவந்து போனது அவனுக்கு.
‘இருடி…ஒரு நாள் நீ தனியா மாட்டாமலா போயிடுவ?’ என மனதினுள் கருவிக் கொண்டான்.