• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

தகிக்காதே குளிர் நிலவே - 1

Vishakini

Moderator
Staff member




அத்தியாயம் -1

"ஹய்…! ஹேஹேய்….! இந்தா இங்க பூசு…! இங்க பூசு…!
ஏய்‌…!காந்த கண்ணழகி…! உனக்கு நான் மினிஸ்ட்ரில இடம் பாத்து வச்சிருக்கேன்…
இந்தா இங்க பூசு…இந்தா ரைட்ல
பூசு…ச ராஇந்தா லெஃப்ட்ல பூசு….ஹே ஹேய்…” என நக்கல் ம பழம்ன்னன் கவுண்டமணியின் குரல் முடிந்ததும், “டண்டட்க்கு டண்ட்டக்கு…” என இசை தொடங்கியது.

இது அவனது நண்பன் அமுதனின் அழைப்புக்கான பிரத்யேக ரிங்டோன்.

இப்போது அந்த இசையில் அறையே அலற முரட்டுக் கரம் ஒன்று நீண்டு‌ அலைப்பேசியின் சத்தத்தை நிறுத்தியது.
மீண்டும் அலைப்பேசி ஒலிக்கவே கண்களை‌ மூடியபடியே எடுத்து காதில் வைத்தான் அருண்மொழி.

“ டேய்..! எருமை இன்னும் தூங்கிட்டு இருக்கியா..? சொன்ன நேரத்துக்கு வந்துடாதே…மணியை‌ பாத்தியா..? நாலே முக்கால். ஐஞ்சு மணிக்கு ஃபர்ஸ்ட் ஷோ. தலைவர் படத்தை ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பாக்கணும்னு சொல்லிட்டு இன்னமும் தூங்கிட்டு இருக்க..? இப்ப வரப்போறியா…? இல்லையா..?” என‌க் கடுகாய் பொரிந்தான் அவனது உயிர் நண்பன் அமுதன்.‌

“ டேய்….! இருடா.. இன்னும் பத்து நிமிஷத்துல அங்கயிருப்பேன். நான்‌ இல்லாம நீ பர்ஸ்ட் ஷோ பாத்துடுவியா…? பேஸ்புக் லைவ் ஸ்ட்ரீமிங் போடணும். அதை என் ‌டார்லிங்கும் பாக்கணும் டா .‌அப்ப ‌தான் கெத்து…” என்றதும் எதிர்ப்புறம் இருந்தவன் பதறி விட்டான்.

“அடேய்…! நான்‌ உனக்கு என்னடா பாவம் பண்ணினேன் ? உன் கூட கூடவே வேலை பாக்குறதுக்கு என்னைய வச்சி செய்யற டா நீ. உனக்கு ஆனாலும் தைரியம் டா. கம்பெனி எம்.டியவே கரெக்ட் ‌பண்ணுற பாத்தியா…! மரியாதையா கிளம்பி வா. லைவ் ஸ்ட்ரீமிங்யெல்லாம் வேணாம். நாளைக்கு போய் யாரு திட்டு வாங்குவா…? “என படபடத்தான் அமுதன்.

“டேய் ரொம்ப பண்ணாதே…! எட்டு மணிக்கு போகப் போற ஆஃபிஸூக்கு எட்டரை மணிக்கு போகப் போறோம். அவ்வளவு தான். சிம்பிள். ரொம்ப புலம்பாதே…இன்னும் ‌பத்தே நிமிஷம். வந்துடுவேன். மஜா பண்ணுறோம். தலைவருக்கு விசில் பறக்க விடுறோம்…” என்றவன் படுக்கையிலிருந்து துள்ளியெழுந்து அவசரமாக பல் தேய்த்து , முகத்தை கழுவி விட்டு தனது ராயல் என்ஃபீல்டு பைக்கை எடுத்துக் கொண்டு அந்த திரையரங்கத்திற்கு பறந்தான் அருண்மொழி .


அருண்மொழி இருபத்தெட்டு வயதாகிறது. ஏ.பி.எம் சொல்யூஷன்ஸ் என்ற மென்பொருள் மற்றும் தொழில்நுட்ப அலுவலகத்தில் டீம் லீடராக இருப்பவன்.

அவனிருக்கும் இடத்தில் கலகலப்பிற்கு பஞ்சமிருக்காது.

தன்னையும் தன்னைச் சுற்றி இருப்பவர்களையும் கலகலப்பாக வைத்துக் கொள்வான். பெரிதாக எந்த விஷயத்தையும் மூளைக்கு எடுத்துச் செல்ல மாட்டான்.

சுருக்கமாக சொன்னால் தன்னை எந்த ஒரு விஷயமும் பாதிக்காதவாறு பார்த்துக் கொண்டான்.

இதனை தான் ஆங்கிலத்தில் , "emotionally not connected” என்பார்கள்.

வாழ்க்கையை ரசித்து வாழ்வான். அதே சமயம் வாழ்க்கையை அதன் ‌போக்கில் வாழவும் கற்றுக் கொண்டான். எதிர்பார்ப்பில்லாத அன்பினை அனைவரிடமும் காட்டினான்.

அதனாலேயே அவனைச் சுற்றி எப்பொழுதும் ஒரு பட்டாளம் இருந்து கொண்டே இருக்கும்.

ஆண் பெண் வித்தியாசமின்றி அனைவரிடமும் ஒரே மாதிரி பழகுவான்.

அவனது இந்த குணமே அவனது ஒரே பலவீனம் ஆகும். எல்லாவற்றையும் விளையாட்டாக எடுத்துக் கொள்வது தான்.

எல்லா சமயங்களிலும் அவனது இந்த விளையாட்டுத்தனம் ஒரே மாதிரி இருக்கப்போவதில்லை என்பதை அவனது தாத்தா அடிக்கடி கூறிக்கொண்டே இருப்பார்.

அதைக் கேட்டு சிரித்துக் கொண்டே சென்று விடுவான்.

இவ்வளவு வயதானலும் இன்னமும் விடலைப் பையன் போல அலுவலகத்திற்கு நேரத்தோடு செல்லாமல் தனது அபிமான சினிமா நட்சத்திரத்தின் திரைப்படத்தைக் காண முதல் நாள் முதல் காட்சிக்கு செல்லத் தான் இவ்வளவு அலப்பறை.

ராயல் என்ஃபீல்டு அவனது இரண்டாவது காதலி.

சிறு வயது முதலே ராயல் என்ஃபீல்டு பைக்கின் மீது அவனுக்கு அலாதியான ப்ரியம்.

எனவே இங்கு வேலைக்கு சேர்ந்த நாள் முதல் சிறுகச் சிறுக சேமித்து வைத்து தனக்கென மிகவும் ஆசைப்பட்டு வாங்கியது தான் ராயல் என்ஃபீல்டு பைக்.

அப்படியானல் அவனது முதல் காதலி…?

பிரம்மாண்டமான அவ்வீட்டில் உள்ள தனதறையில் சுகமாக துயில் கொண்டிருந்தாள் நந்தினி தேவி.

இளவரசிகளின் படுக்கையறை போல் பிரம்மாண்டமாக இருந்தது அவளது அறை. உயர் ரக தேக்கு மரக்கட்டிலில் நான்கு‌ புறமும் மெல்லிய துணியால் அலங்கரிக்கபட்டிருந்தது.

மெல்லிய வெளிச்சம் அறையெங்கும் பரவத் தொடங்கியிருந்தது.

உறக்கத்திலும் கம்பீரம் குறையாமல் சீரான சுவாசத்தில் உறங்கிக் கொண்டிருந்தாள் பெண்ணவள்.

ஐந்தரை மணிக்கு அலாரம் ஒலிக்கவே அதனை அணைத்து விட்டு எழுந்தமர்ந்தாள்‌.

நீண்ட‌ நயனங்களில் வந்து விழுந்த முடிக்கற்றைகளை எடுத்து கொண்டை போட்டுக் கொண்டு சோம்பல் முறித்தாள்.

அறை‌‌ முழுவதும் அவள் விருது வாங்கிய புகைப்படங்கள். சிறு வயது முதல் தற்போது வரை வாங்கிய விருதுகள் மற்றும் ‌பாராட்டுகள் புகைப்படங்களாக அவளது அறையை அலங்கரித்துக் கொண்டிருந்தது.

எதிலுமே நேர்த்தியையும் நேர்மையையும் எதிர்பார்ப்பவள்.

சிறு தவறையும் பொறுத்துக் கொள்ள மாட்டாள்.

தவறு நேர்ந்து விட்டால் வயது வித்தியாசம் பாராமல் திட்டிவிடுவாள்.

தன்னில் தவறு இருப்பினும் திருத்திக் கொள்வாளே தவிர ஒத்துக் கொள்ள மாட்டாள்.

மற்றவரைப் பொறுத்தவரையில் அவள்‌ சுட்டெரிக்கும் சூரியன் என்றால் நம்‌ நாயகனுக்கோ பூஜ்ய டிகிரியில் உறையும் நயாகரா நீர்வீழ்ச்சி அவள்.

அவளது நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது.

பணிக்குச் சேர்ந்த சில மாதங்களிலேயே அவளை காதலிக்க ஆரம்பித்து விட்டான்.

நிறுவனத்தின் ‌மேலதிகாரி என்ற பயம் துளியும் அவனிடம் இருந்ததில்லை.

அதே சமயம் அனாவசியமாக அவளிடம் வழிவது, காதலிக்குமாறு தொந்தரவு செய்வது என எதுவும் அவனிடத்தில் இல்லை. ‘ நீ என்னை காதலித்தாலும்‌ சரி ‌காதலிக்கவிட்டாலும்‌ சரி காலம் முழுவதும் உன்னை நான் காதலித்துக் கொண்டே இருப்பேன்…’ என்கின்ற மனப்பாங்கு.

இது அலுவலகமே அறிந்த ரகசியம்.

நந்தினியின் மீது எப்போது எப்படி காதலில் விழுந்தான் என்று தெரியாது.

அவனைப்‌ பொறுத்த வரையில் நிஜ உலகின் தேவதை அவள்.

ஐந்தரை மணிக்கு எழுந்தவள் காலைக்கடன்களை முடித்து விட்டு யோகாசனம், தியானம் ஆகியவற்றை செய்து முடித்தாள்.

சத்து மாவு கஞ்சியை அருந்தியவள் மணியை பார்த்தாள்.

ஆறே முக்கால் ஆனது.
அவளது தந்தை ராஜேந்திரன் எழுந்து வந்தார்.

“ குட்‌ மார்னிங் டா…!” என்றபடி அவளருகே வந்தமர்ந்தார்.

“ குட்‌மார்னிங் ‌டேட்…! போய் ‌‌முதல்ல பிரஷ் பண்ணிட்டு வாங்க.” என்றபடி நாளிதழை‌ புரட்ட ஆரமபித்தாள்.

"ஓகேங்க மேடம்..இதோ போறேன்..” என்றவர் பல் தேய்தது விட்டு மீண்டும் மகளிடமே ‌வந்தமரந்தார்.

நாளிதழிலில் இருந்து பார்வையை அகற்றாமலேயே , "என்ன விஷயம் சொல்லுங்க டாட்…?” என்றாள் சுவாரசியமின்றி.

ஒரு‌பெருமூச்சுடன்‌, “ பெருசா‌ ஒண்ணுமில்ல டா. இன்னைக்கு லண்டன்ல இருந்து கிளையண்ட் வர்றாங்கல்ல…எல்லா பிரசண்ட்டேஷனும் ரெடி தானே..? டிலே ஆகிடக்கூடாது டா. பக்காவா இருக்கணும். அப்பதான் அடுத்த ப்ராஜெக்ட் நமக்கு கிடைக்கும்.” என்றார் .

நாளிதழை மடித்து வைத்தவள் , “டோண்ட் வொர்ரி டாட்…எல்லாமே பக்காவா இருக்கும். இந்த புராஜெக்ட் நமக்கு தான்.” என்றாள் அருண்மொழி குழுவின் மீதிருந்த நம்பிக்கையில் .

அவளது நம்பிக்கைக்கு பாத்திரமானவனோ காகிதத்தையெல்லாம் கிழித்தெரிந்து விசிலடித்து கொண்டிருந்தான் அந்த திரையரங்கத்தில்.

சட்டையை கழற்றி தலைமேல் சுற்றிக் கொண்டிருந்தவனது காணொளி அவனது முகப்புத்தகத்தில் பதிவேற்றப்பட்டது.

தனது அலைப்பேசியை எடுத்து அவனுக்கு அழைப்பு விடுத்தாள்..
அவனுக்கு அழைப்பு சென்று கொண்டிருந்தே ஒழிய ஏற்கப்படவில்லை.

பெருமூச்சுடன் அலைப்பேசியை கீழே வைத்தவள் . மீண்டும் ஏதோ ஒன்றை பார்ப்பதற்க்காக அலைப்பேசியை எடுத்தவள் அதனை‌ பார்த்து விட்டு தனது முகப்புத்தகத்திற்கு சென்றாள்.
அதில் அவனது முகப்புத்தக கணக்கிலிருந்து அவளையும் டேக் செய்திருந்தான்.

அவன் சட்டையை கழற்றி சுற்றிக் கொண்டிருக்கும் காணொளி ஓடிக்கொண்டிருந்தது. கீழே ஹஷ்டேக்கில் , “மத்தெதல்லாம் வேஸ்டு…நீ தான் பெஸ்டு…” என கொட்டை எழுத்தில் எழுதப்பபட்டிருந்தது.

அதைப் பார்த்தவளது விழிகள் கோபத்தில் ஜொலித்தது.

அவனது தலைமையின் கீழ் பணிபுரியும் அனைவரும் அங்கு தான் ஆடிப் பாடிக் கொண்டிருந்தனர்.

“ பொறுக்கி…” என முணுமுணுத்து அவளது உதடுகள்.

அதே கோபத்துடனே அலுவலகத்திற்கு கிளம்பினாள்.
ஷிப்ட் முறையில் இயங்கும் அவளது அலுவலகம் .‌ காலை ஏழு மணி முதல் மாலை நான்கு மணி வரையிலும் , மாலை ஐந்து மணி முதல் நள்ளிரவு இரண்டு மணி வரையிலுமாக பணி நேரம் இருந்தது.

அள்ளிங்ன்று காலை எட்டரை மணியளவில் வெளிநாட்டு வாடிக்கையாளரிடம் முக்கிய சந்திப்பு இருந்தது. ஒவ்வொரு குழுவினரும் தனித்தனியாக தயாரித்து வைத்துள்ள மாடியூல்களை5 (தொகுதிகளையும் ) வெளிநாட்டவரிடம் விவரித்துக் கூற வேண்டும்.

அருண்மொழி மற்றும் அவனது குழுவினரும் அதில் அடக்கம்.

மிதமான ஒப்பனையில் இளம் ரோஜா நிறத்திலான பருத்தி புடவையில் தயாராகி அலுவலகத்திற்கு சென்றாள்.

அனைவருக்கும் குறித்த நேரத்திற்கு முன்பே வந்து விட்டனர்.

சரியாக எட்டு முப்பது மணியளவில் கலந்தாய்வு மற்றும் விவாதம் ஆரம்பித்து விட்டது.

ஒவ்வொரு குழுவினரும் தாங்களது மாடியூல்களை(தொகுதிகளையும்) விவரித்துக் கூற ஆரம்பித்தனர்.

அரை மணி நேரம் கால தாமதமாகவே வியர்க்க விறுவிறுக்க அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தனர் அருண்மொழி மற்றும் அவனது குழுவினர்.
 
Top Bottom